இடுகைகள்

📌My New & Completed Novels List

My Complete Novel List: Ongoing and Finished

படம்
📚 Ongoing Stories  1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! Free Site Link 📚 Completed Stories  1. உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே! இலவச சைட் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க்(YouTube Audio Format) பிரதிலிபி லிங்க்(Ebook) 2. மகிழ்மதியின் அரசன்! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க்(YouTube Audio Format) 3. அழகான இராட்சசியே! அடிக்கரும்பாய் இனிக்கிறியே! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க் (YouTube Audio Format) புத்தகமாக வாங்கி படிக்க (Call/WhatsApp to பிரியா நிலையம்: +91 94444 62284 ) 4. ஆண் மனதை அழிக்க வந்த சாபம்! அமேசான் லிங்க் (Ebook) ஆடியோ நாவல் லிங்க் (YouTube Audio Format) புத்தகமாக வாங்கி படிக்க (Call/WhatsApp to பிரியா நிலையம்: +91 94444 62284 ) 💌 To Contact Me swathinovels@gmail.com   🌐To Follow Me Facebook   WhatsApp YouTube   Instagram   Telegram  

☄️45.5 அந்திப்போர் 🪻🫰🎶

அவள் மடியில் லேப்டாப்பை வைத்திருந்த ஈத்தன், அவளின் ஒரு தோள்பட்டையில், தன் நாடியை பதித்து… “இந்த ஃபைல்ஸ் பாரு கேர்ள்… இது நீ இங்க வரதுக்கு முன்னாடி நம்ம குடும்பத்துக்கு என்னோட சம்பளம் மூலம் வந்த வருமானம்…” என்று தொழில்கள் மூலம் இல்லாது… அவன் குரல் மூலம் மட்டும் அவனுக்கு வந்த வருமானங்களை காட்டியவன்… அவள் வந்த பிறகு அவனுக்கு வர ஆரம்பித்ததையும் எடுத்துக்காட்ட… ‘ஏன் இப்பொழுது போய் இதையெல்லாம் காட்டுகிறார்’ என்று நினைத்த குறிஞ்சி… இருந்தும் அவன் காட்டுவதை எல்லாம் பார்க்க… ஏற்கனவே பல கோடிகளில் இருந்த அவன் மாத வருமானம்… மேலும் 20 சதவீதம் அளவிற்கு மெல்ல உயர்ந்து வந்திருப்பதை, அவளால் தெளிவாக காண முடிந்தது… “இங்க நீ எதுவும் செய்யாமல் எல்லாம் இல்லை கேர்ள்… இங்க உன்னோட பிரசென்ஸோட வேல்யூவே ரொம்ப அதிகம்…” என்று அந்த கூடுதலான வருமானத்தை மட்டும் ஈத்தன் பிரித்தெடுத்து, தனியாக போட்டு காட்டவும்… அதுமட்டுமே எங்கோ சென்று நின்றது… திரும்பி அவன் முகத்தை குறிஞ்சி பார்க்கவும்… “எஸ் கேர்ள்… இது நீ இங்க வந்து நம்ம பேபியை பார்த்துக்கும் பொறுப்பை என்னோட பகிர்ந்துகிட்டதில், எனக்கு கூடுதலாக கிடைச்ச நேர்த்தில்...

☄️45.4 அந்திப்போர் 🪻🫰🎶

குறிஞ்சியை அமைதியாக ஒரு பார்வை பார்த்த ஈத்தன், ‘வர தாமதம் ஆகும்’ என்று குறுந்தகவல் ஒன்றை மட்டும் சக்திக்கு அனுப்பிவிட்டு, தன் கைப்பேசியை பழையப்படி பாக்கெட்டில் வைத்தவன். குறிஞ்சியின் கையை பிடித்து, ஊஞ்சல் மாட்டியிருந்த இடத்திற்கு அழைத்துச்சென்று, அவளை தன் மடியில் வைத்தப்படி ஊஞ்சலில் அமரவும். தான் விட்ட பிழையை இன்னும் உணராத குறிஞ்சி, “அச்சோ கிளம்ப சொல்லிட்டு… என்னங்க இது…” என்றப்படியே, உடனே அவன் மடியில் இருந்து நெளிந்து, நழுவி எழுந்து நின்று விட்டாள். ஈத்தன் தடுக்கவில்லை. மாறாக, ‘காலையில் நன்றாக தானே இருந்தாள். இந்த சின்ன இடைவெளியில், என்னிடம் மறைக்கும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்’ என்ற யோசனையுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவும். ஈத்தனின் தீவிரமான முகபாவனையில், “என்னாச்சுங்க?” என்றாள் சந்தேகமான குறிஞ்சி உடனே. அதற்கு, “என்னாச்சுன்னு நீ தான் கேர்ள் சொல்லனும்?” என்றிருந்தான் ஈத்தனும் நேரடியாக. அதில், ஏற்கனவே ஒருமாதிரி திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வில் இருந்த குறிஞ்சிக்கு திக்கென்று ஆனாது. இருந்தும், “ஆ… என்ன சொல்லனும்? ஒன்னுமில்லையேங்க…” என்று சமாளிக்க… அவள் முகமோ பதட்டத்தை அ...

☄️45.3 அந்திப்போர் 🪻🫰🎶

சிறிது ஆசுவாசமானப்பிறகு தான், சுற்றியிருந்தவற்றையே கவனிக்க ஆரம்பித்தாள். முன்னொரு காலத்தில் அவளுக்கு உடைவாங்க வேண்டும் என்று, அவ்வளவு தயக்கமும், கூச்சமும் போட்டிப்போட, தன் பிடறியை கோதிய வண்ணம், அவள் முன்பு நின்றிருந்த ஈத்தன். இன்று, சிறு கூச்சமுமின்றி அவளுக்கான அனைத்தையும் உரிமையாக வாங்கி அடுக்கியிருந்தான். அவளின் நிறத்திற்கு ஏற்ற நிறங்களை கண்டறிந்து, அந்த நிறங்களில் மட்டும் விதவிதமான துணி ரகங்கள் மற்றும் டிசைன்களில்… அவள் அதிகம் அணியும் புடவையும், சுடிதார்களும்… ஒருபக்க சுவர் முழுவதுமிருந்த, அலமாரிகளில் அணிவகுத்திருக்க…  மற்றொரு பக்கத்தில் அவளுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து ஈத்தன் வாங்கிய மாடர்ன் உடைகளும்… இரவு உடைகளும் அணிவகுத்திருந்தன... அதுமட்டுமின்றி, அந்தந்த உடைகளுக்கு ஏற்ற வகையில், தலையில் குத்தும் ஹேர்பின்னில் ஆரம்பித்து காலில் போடும் செருப்பு வரை அனைத்தும், அந்தந்த உடைகளுக்கு கீழேயே எளிதாக எடுத்து உபயோகிக்கும் வகையில் வைத்திருந்தனர்… ஈஷாவின் அறையில் உள்ளது போலவே, இவளுக்கென்று தனியாக பெரிய கண்ணாடியுடன் கூடிய ட்ரஸிங் டேபிள், உடைமாற்றும் தடுப்பு, நவீன குளியலறை க...

☄️45.2 அந்திப்போர் 🪻🫰🎶

ஈஷாவின் பிறந்தநாளை திகட்ட திகட்ட கொண்டாடிவிட்டு, ஒருமாதத்திற்கு பிறகு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழையும் பொழுதே, வரவேற்பறையில் சக்தியும், மற்ற மேனேஜர்களும் காத்திருப்பதை பார்த்த குறிஞ்சி… வரவேற்பாய் சிறு தலையசைப்பை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, ‘அறைக்கு செல்கிறேன்’ என்று ஈத்தனிடம் கண்களால் கூறியவள், ஈஷாவுடன் உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். ஈஷாவிற்கும், அன்றைக்கான ஹோம் ஸ்கூலிங் ஆசிரியர் வந்து காத்திருக்க… “ட்ரஸ் மாத்திட்டு கிளாஸ் போறேன் அம்மா” என்றாள் ஈஷா. காலை உணவை முடித்துக்கொண்டு தான் வந்து இருந்ததால், “சரி பாப்பா” என்று அவளுடன் பேசியப்படியே படியேறிய குறிஞ்சி, தங்களின் படுக்கை அறையை திறக்க… முற்றிலும் மாறிவிட்டு இருந்தது அந்த அறை! சுவற்றின் நிறம் முதல் வேறாக இருக்க, ‘இது நம் அறைதானா!’ என்று குழம்பி நின்றிவிட்ட குறிஞ்சியின் கையை பிடித்து, “வாவ் அம்மா! என்னோட ஃபேவரைட் கலர்” என்று குதித்த ஈஷா, “இங்க பாருங்க, நான் கொடைக்கானல்ல எடுத்த ஃபோட்டோஸ்!” என்று துள்ளியப்படியே அவளை உள்ளே இழுத்து சென்றாள். இளம் லாவண்டர் நிறத்தில் மாறிவிட்டிருந்த அறையில் இருந்த, படுக்கை விரிப்புகள், க...

☄️45.1 அந்திப்போர் 🪻🫰🎶

அத்தியாயம் -45 நாட்கள் எப்படி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு வேகமாக சென்றுக்கொண்டு இருந்தது. இத்தனை மாதங்களும் பெரிய வீடும், எண்ணற்ற உதவியாட்களும், ஈத்தனின் வேலை பளுவும்… ஈத்தன், குறிஞ்சிக்குள் வர வேண்டிய அன்யோன்யத்தை தூரத்திலேயே பிடித்து வைத்திருந்திருக்க… இந்த கெஸ்ட் ஹவுஸ் வீடோ, முன்பு போலவே, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தூரம் துரத்தி, இருவரையும் நெருக்க ஆரம்பித்து இருந்தது! காலையிலேயே குளித்து முடித்து, ஆகாய நீல நிறத்தில், வெண்ணிற எம்பராயிடிங் வேலை செய்த அம்பர்லா கட் சுடிதார் அணிந்து, வான் மேகமாக ஹவுஸில் இருந்து இறங்கி வந்த குறிஞ்சி,  கடலில் இருந்து, நன்கு எழும்பி மேலே வந்துவிட்ட சூரியனின் மஞ்சள் அழகை நின்று ரசித்து பார்த்துவிட்டு… அப்படியே, சிறு சிறு பனி துளிகளை சுமந்தவண்ணம், அங்கு மலர்ந்திருந்த சிகப்பு ரோஜா ஒன்றை இரண்டு இலைகளுடன் சேர்த்து பறித்தவள்… அதை, தன் காதோரம் கூந்தலில் வைத்துக்கொண்டு தோட்டத்தினுள் நடந்தாள்... முன்தினம் இரவு போட்ட தூரல்கள், தென்னை கீற்றுகளின் அசைவுகளினால், குறிஞ்சி மீது பன்னீராக தெளிக்கப்பட… அதற்கேற்ப அவள் காதில் Airpods வழியாக,  அதிகாலை மழை த...

சங்கீதம்-44

அத்தியாயம் -44 பூமியினை மெல்ல இருள் அணைத்து, அந்நாளைய இரவினை அறிவித்துவிட்டிருக்க! ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் முழுவதும் மெல்லிய இசையாலும், செயற்கை விளக்குகளாலும், பல்வேறு சுகந்தமான நறுமணங்களினாலும் நிறைந்து சொர்க்கமாக மாறிவிட்டு இருந்தது. சீராக வெட்டப்பட்ட பச்சை புல்வெளியில், இளம் ரோஜா, ஊதா, பீச், நீலம், வெள்ளை போன்ற – பல இள வண்ண மலர்கள் கொண்டு மிகப்பெரிய ஆர்ச் வடிவ நுழைவு வாயில்,  “Aurora Bloom Gate” என்ற நியான் விளக்குகளால் ஆன பெயர் பலகையை தாங்கிக்கொண்டு, நீளமாக அமைக்கப்பட்டு இருக்க… அதனை பார்த்து, “ஓ மை காட்! பேபிஇஇஇ, லவ் யூ சோ மச்! அம்மாஆஆ லவ் யூ சோ மச்!” என்று குதித்த ஈஷா,  வானை முட்டும் மகிழ்ச்சியுடன் தன் வெண்ணிற பார்ட்டி கவுனை, இரண்டு பக்கமும் லேசாக பற்றியப்படி, தேவதையாக அந்த நுழைவுவாயிலினுள் நுழைந்து நடந்துச்செல்ல… அவள் உடைக்கு ஏற்ப, வெண்ணிற ஷிஃபான் பார்ட்டி வியர் புடவையில் தயாராகியிருந்த குறிஞ்சியும், வெண்ணிற ஃபார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட்டில் இருந்த ஈத்தனும் மென் புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தனர். ஈஷா பிறந்தது முதல், இப்பொழுது வரை எடுத்த புகைப்படங்களில்...

சங்கீத வானில் ஓர் அந்திப்போர் (அத்தியாயம் -43)

அத்தியாயம் -43 ஈத்தனின் வீட்டில் இருந்து கிளம்பிய கார், ஒருசில நிமிடங்களிலேயே அவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த சிறிய தேவாலயத்தின் முன்பு சென்று நின்றது. முன் பக்க சீட்டில் இருந்து இறங்கிய ஈத்தன், ஏற்கனவே அங்கு வந்துவிட்ட அவனுடைய பாதுகாவலர்களிடம், ஏற்பாடுகள் குறித்து பேசி, பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து, குறிஞ்சி பக்க கார் கதவை திறக்க… உடனே இறங்கப்பார்த்தாள் குறிஞ்சி. அதில், “ஒன் செக்” என்று அவளை இறங்கவிடாது நிறுத்திய ஈத்தன், “உனக்கு கம்ஃபர்ட்னா மட்டும் சர்ச் உள்ளே வா கேர்ள். இல்லை நீ கார்லயே இருக்கலாம்”, என்றவன், “உன்கூட செக்யூரிட்டீஸ் இருப்பாங்க. ஜஸ்ட் டென் மினிட்ஸ். நானும், பேபியும் போயிட்டு வந்துடறோம். பிரச்சனை கிடையாது கேர்ள்” என்றான், அவள் மீது தப்பி தவறிக்கூட தான் பின்பற்றுவதை திணித்துவிட கூடாது என்று வெகு கவனமாக. அதை உணர்ந்து பெருமிதம் கொண்டவள், “சர்ச் போறது, எனக்கு காலேஜ் அப்ப இருந்தே பழக்கம் தான்ங்க. கடவுள் எங்க இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் எனக்கு ஒன்னுதான், நான் கும்பிடுவேன்” என்று தன் எண்ணத்தை கூறிய குறிஞ்சி, “நானும் வரேன்”, என்றாள் அவன் நீல விழி...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates