உண்மை காதல் -10
அத்தியாயம்-10
அன்னபூரணி நேற்றைவிட இன்று மிகவும் சோர்ந்து தெரிந்தார். மிதிலா கிளம்பிய பிறகு, வீட்டிலேயே இரத்த அழுத்தம் மற்றும் நாடியை பார்த்த ஹரி, இனியும் தாமதிக்க வேண்டாம் என்று மருத்துவனாக முடிவெடுத்து, உடனே தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே, தன்னுடன் பணிபுரியும் அவனின் நெருங்கிய தோழியான ஜெரோலினுக்கு கால் செய்து, அன்றைக்கான அப்பாயின்மென்டை புக் செய்து, அவரை அழைத்துச்சென்று விட்டான்.
அங்கு ஜெரோலினுடன் கலந்து பேசியவன், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் போன்றவற்றை மீண்டும் ஒருமுறை எடுத்துவிட்டு காத்திருக்க…
சிறிது நேரத்திலேயே ரிப்போர்ட்கள் வந்துவிட்டது.
இரண்டையும் சேர்த்து பார்க்க, ஹரிக்கு ரிப்போர்ட் முடிவுகள் கொஞ்சமும் திருப்திகரமாக இல்லை.
போன வாரத்தை விட, இந்த வாரம் ரிப்போர்ட் மோசமாக இருந்தது.
அன்னபூரணியின் கர்ப்பப்பை மிகவும் பலகீனமாக இருந்தது.
அதிக ரத்தப்போக்கினால் உடலில் ரத்த சோகையும் மிகவும் அதிகமாக இருந்தது.
இனியும் மருந்துகளுக்கு, அதீத ரத்தப்போக்கு கட்டுப்படும் என்று தோன்றவில்லை.
ஒரே தீர்வாக அவருக்கு புதிய ரத்தம் ஏற்றிவிட்டு, கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுவதே நல்லது என்று முடிவு எடுத்தனர்.
கத்தி வைக்காமல் சரி செய்ய பார்த்தான். ஆனால் அது முடியாத பட்சத்தில், உயிரை காப்பாற்ற அடுத்த முடிவு எடுக்க தானே வேண்டும்.
ஹரி பல பேருக்கு இதே அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றான், எனவே ஒரு மருத்துவனாக
பிரச்சனையை சரிசெய்யும் வழியை தேர்ந்தெடுத்து விட்டான்.
இதில் அன்னபூரணியின் மனநிலை தான் கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது.
அறுவை சிகிச்சை என்ற உடனே மிகவும் பயப்படத் தொடங்கிவிட்டார்.
அனைத்து ரிப்போர்ட்களையும் கலெக்ட் செய்து கொண்டு, வீட்டிற்கு அன்னபூரணியை அழைத்து வந்த ஹரி, அவரின் மனநிலையை புரிந்துகொண்டு, "பயப்படாதீங்க மாம், ஒன்னும் இல்லை, நானே கிட்ட இருந்து எல்லாம் செய்றேன், ஐம்பது வயது கடந்த பெண்களில், கிட்டத்தட்ட 30 சதவீதம் பேருக்கு, கர்பப்பை ரிமூவ் பண்றோம் மாம், சோ டோன்ட் வொர்ரி, சரியாகிடும்", என்று சமாதான படுத்தினான்.
அறுவை சிகிச்சையின் போது, நோயாளியின் மனநிலை மிகவும் முக்கியம் அல்லவா..?
அன்னபூரணிக்கோ, ஹரி என்ன சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லை, தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதை கவ்வ தொடங்கிய அடுத்த கணமே, ஹரியின் திருமணம் குறித்த எண்ணம் தான் அவருக்கு மேலெழும்பியது.
அவனுக்காக தானே அவரின் இந்த உயிர், உலகில் உள்ளது.
ஹரியின் கையை பற்றிக்கொண்டவர்,
"அம்மா கடைசியா கேட்கிறேன் கண்ணா, கல்யாணம் செய்துப்பியா, மாட்டியா, உன்னோட உண்மையான முடிவு என்ன சொல்லு ஹரி, உனக்கு கல்யாணம் பண்ணாம ஆப்ரேஷன் செய்துக்க பயமா இருக்குப்பா", என்றார்.
ஹரிக்கு மிதிலாவின் முகம், கண் முன் மின்னல் கீற்றாக வந்து போனது.
"நீங்க நினைக்கிற போல, இந்த ஆப்ரேஷனில் பயப்பட ஒன்னும் இல்லை மாம், அண்ட் கண்டிப்பா நான் மேரேஜ் பண்ணிப்பேன் மாம், உங்களுக்கு ஃபர்ஸ்ட் ஆப்ரேஷன் முடியட்டும், உடம்பு கொஞ்சம் தேறட்டும், அடுத்து உடனே என் மேரேஜ் தான்", என்றான், அவர் கையில் அழுத்தம் கொடுத்து..
உடனே அன்னபூரணி, "பொய் சொல்லாத ஹரி, நான் ஆப்ரேஷன் பண்ணிக்கனும்னு தானே சொல்ற", என்றார்.
ஹரி, "நோ மாம் உண்மையா தான் சொல்றேன், எனக்கு ஒரு பொண்ணை புடிச்சிருக்கு, கண்டிப்பா அவளை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன், உங்களுக்கும் அவளை தெரியும், நாங்க இரண்டு பேரும் கொஞ்சம் பேசி முடிவு எடுத்துட்டு சொல்றேன் மாம், கொஞ்சம் பொறுங்க", என்றான்.
அப்பொழுதும் அன்னபூரணியின் முகம் தெளிவடையவில்லை,
மீண்டும் ஹரி, "பிராமிஸ் மாம், கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன், ப்ளீஸ் நம்புங்க", என்றான்..
அன்னபூரணிக்கு, ஹரி சத்தியம் செய்த பிறகு தான், கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவன் அவ்வளவு எளிதாக சத்தியம் எல்லாம் செய்ய மாட்டான்.
அதைவிட, அவருக்கு வேறு வழியும் இல்லை..
அன்னபூரணி, அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்த மறுநொடியோ, அதற்குண்டான வேலையில், ஹரி இறங்கிவிட்டான்.
மாலை 4.30 மணி அளவில் மிதிலா, அன்னபூரணிக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்தாள்..
மிதிலாவிடம், அன்று நடந்த அனைத்தையும் அன்னபூரணி பகிர்ந்து கொண்டார்..
கேட்டதும், மிகவும் வருத்தமாக இருந்தது மிதிலாவிற்கும்..
இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில், தனக்கு அறுவை சிகிச்சை என்று வருத்தத்துடன் கூறிய அன்னப்பூரணி,
மிதிலாவை குழந்தையுடன் அவசியம் வீட்டிற்கு வரச் சொன்னார்..
அவர், ‘மனதிற்கு ஏதோ போல் உள்ளது’ என்று வேறு கூற, உடனே மிதிலா வருவதாக ஒப்புக்கொண்டாள்..
ஹரிக்குமே அன்று கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது, காலையில் இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டு இருந்தது..
மாலை மிதிலா, குழந்தையுடன் அவளின் வீட்டிற்கு சென்று, வீட்டில் மீதம் இருந்த வேலைகள், அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்த நாளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு,
ஹரியின் வீட்டிற்கு சென்றாள்..
மிதிலாவைப் பார்த்ததும் ஹரி, "ஹே வா பேபி, வா, ஏன் இவ்வளோ லேட், சாரி உனக்கு கால் பண்ண மறந்துட்டேன், கொஞ்சம் நிறைய வேலை இன்னைக்கு, தலைவலி இன்னும் இருக்கா", என்று விசாரித்துக்கொண்டே, குழந்தையை தூக்கிக்கொண்டு ஹாலிற்கு, சென்றான்,
"நான் நல்லா இருக்கேன் டாக்டர்.. ஆன்ட்டிகிட்ட ஈவ்னிங் பேசுனேன், ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததா சொன்னாங்க,", என்று
ஹரியிடமும் அவரின் உடல்நிலையை பற்றி விசாரித்தாள்..
ஹரி, மருத்துவ ரீதியாக அனைத்தையும் விளக்கமாக சொல்ல..
மிதிலாவிற்கு, அவ்வளவாக ஒன்றும், புரியவில்லை, ஏதோ பெரிய ஆப்ரேஷன் போல, பாவம் ஆன்ட்டி என்று நினைத்துக்கொண்டாள்..
"ஆன்ட்டியை இப்ப நான் போயிட்டு பார்க்கலாமா டாக்டர்" என்று ஹரியிடம் அவள் அனுமதி கேட்க..
ஹரி "ஹே, ஏன் பேபி, இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்கிற, நீ போய் பாரு, நான் மகி குட்டிக் கூட கொஞ்ச நேரம், ட்ரீ ஹவுஸ்கு போய்ட்டு வரேன்…", என்றவன்..
"வாங்க பேபி.. நாம போயிட்டு.. குட்டி குட்டி கலர் ஃபிஷ்லாம், பார்த்துட்டு, வரலாம்", என்றப்படி தோட்டத்திற்கு தூக்கி சென்றுவிட்டான்..
மிதிலா, அன்னபூரணியின் அறைக்கு சென்று அவருடன் பேசினாள்,
அப்பொழுது அன்னப்பூரணி, மிதிலாவிடம், ஹரி திருமணத்திற்கு சம்மதம் கூறியதை கூறி நடந்தவற்றை அவளுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பேச்சுக்கு பிறகு மிதிலாவால் அன்னபூரணியிடம் சகஜமாக உரையாட முடியவில்லை..
அவளுக்கு நன்றாக தெரிந்தது, ஹரி தன்னை குறித்து தான் கூறி இருக்கின்றான் என்பதும், தன் சம்மதத்திற்காக தான் காத்துக்கொண்டு இருக்கின்றான் என்றும்..
ஆனால் விஷயம் தெரிந்தால், அன்னபூரணி என்ன சொல்வாறோ என்று ஒருபுறம் பயம், அதைவிட திருமணம் என்றால் தன்னை குறித்து வேறு விசாரிப்பார்களே என்றெல்லாம் மனதில் ஓடத்தொடங்கியது..
அதில் பயந்த மிதிலா, "சரிங்க ஆன்ட்டி.. நான் போயிட்டு முடிஞ்ச அளவு, இருக்க வேலையை முடிச்சுட்டு கிளம்பறேன் ஆன்ட்டி,
பாப்பா தூங்கிட்டா பிரச்சனை, இன்னைக்கே காலைல கொஞ்சம் கடைக்கு போக லேட் ஆகிடுச்சு", என்று கூறிவிட்டு வெளியில் வந்தாள்..
இரவு உணவிற்கு இன்னும் நேரம் இருந்தது..
சரியென துணிகளை துவைக்க போட எடுத்து சென்றவள்.. திரும்பிய பொழுது ஹரியின் குரல் அன்னபூரணியின் அறையில் இருந்து கேட்டது.
சரி குழந்தை அவர்களுடன் இருக்கட்டும் என்று, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்..
அடுத்த ஒருமணி நேரத்தில் அனைத்தையும் முடித்தவள்.. அன்னபூரணியின் அறைக்கு அவருக்கான உணவுடன் சென்று, "டின்னர் ரெடி ஆன்ட்டி, சாப்பிடுங்க, எல்லா மேல் வேலையும் முடிச்சுட்டேன், நான் இப்ப கிளம்பறேன், பாப்பா தூங்கிட்டா, கார் சீட்ல உட்கார வச்சு ஓட்டுறது எனக்கு ரொம்ப கஷ்டம்", என்றாள்..
அதில் அன்னபூரணி, "சரிடாமா பார்த்து போயிட்டு வா, பத்திரம் டா, ராத்திரி நேரம் கவனமா ஓட்டு", என்று விடைக் கொடுக்க..
மிதிலா, "கண்டிப்பா ஆன்ட்டி, வரேன்.. ", சொல்லிக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்ப..
அன்னபூரணி, "உனக்கு சாப்பாடு எடுத்துட்டு போடா மிதிலா மறக்காம, என்னால நடந்து வர முடியலை, எடுக்காம போயிடாதே, ஹரி கண்ணா நீயும் போயிட்டு சாப்பிடுப்பா, மதியமே நீ சரியா சாப்பிடலை, முகமே வாடிடுச்சு" என்றார்.
சரியென்று வெளியே வந்த ஹரி, மிதிலாவிடம், "ஏன் பேபி வரும்பொழுதே, டிரஸ் எடுத்துட்டு வந்து இருக்கலாம் இல்ல,
இன்னைக்கும் இங்கேயே இரு, போகாதே, காலையில நான் சீக்கிரம் உன்னை எழுப்பி விடறேன்..", என்றான்.
பதறிய மிதிலா, உடனே ஹரியிடம் மறுத்து, "இல்ல டாக்டர் எனக்கு அதுதான் பக்கமா இருக்கும், நான் கண்டிப்பா நாளையும் வந்து, நைட் வரைக்கும் இருந்துட்டு போறேன், இங்கே இருக்குறது சரிவராது, பிளீஸ்", என்றாள் சங்கடமாக..
ஹரியும் யோசித்து "சரி டா, உன் இஷ்டம்", என்றவன், "சரி வா, சாப்பிடலாம்", என்று மிதிலாவின் கைப்பிடிக்க,
மிதிலா, "இல்லை டாக்டர் நான் வீட்டிற்கு போய் சாப்பிட்டுக்கறேன், நேரமே போயிட்டு பாப்பாவுக்கு ஊட்டிவிடனும், இல்லை சாப்பிடாமலே தூங்கிடுவா, நான் எடுத்துட்டு போகிறேன் ப்ளீஸ், ", என்றாள்.
ஹரி, "ஏற்கனவே மணி ஆகிடுச்சு பேபி, பாப்பாக்கு முதல்ல ஊட்டிவிடு நீ, நாம எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பசி தாங்குவோம், ஆனா குழந்தை தாங்காது டா, ரொம்ப சின்ன வயிறு டா அவங்களுக்கு, இனி இப்படி செய்யாத சரியா, எங்க போனாலும் குழந்தையை தான் நீ முதல்ல பார்க்கனும், குழந்தைக்கு என்ன சொல்லவா தெரியும், பசிக்குதுனு, அவளுக்கு ஊட்டி முடி முதல்ல, அப்புறம் கிளம்பு…", என்றான் முடிவாக..
மிதிலா அப்பொழுதே மனதில் குழந்தைக்கு உணவு வேண்டும் என்று நினைத்தாள் தான், ஆனால் அதிக உரிமை எடுத்து, குழந்தைக்கும் வேறு இங்கேயே சமைக்கின்றாள் என்று நினைத்து விட்டால், என்ன செய்வது என்று அவள் குழந்தைக்கு என்று எதுவும் தனியாக செய்யவில்லை..
அதனாலேயே வீட்டிற்கு சீக்கிரம் போகவும் நினைத்தாள்..
வழியில், பசியில் குழந்தை அழுதால், பால் கலந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருந்தாள்..
இப்பொழுது என்ன செய்வது என்று புரியாது, "உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் தான் சப்பாத்தி பண்ணேன் டாக்டர், பாப்பாக்கு எதுவும் செய்யலை, நான் வீட்டுக்கு போயிட்டு அஞ்சு நிமிஷத்துல செஞ்சு கொடுத்துடுவேன்,", என்றாள், மெல்ல..
அதில், அவளை பார்த்து ஒரு முறை முறைத்த ஹரி, விடுவிடுவென கிட்சன் சென்று, மினி இட்லி தட்டில் இட்லி ஊற்றி வைக்க..
மிதிலா, அவனின் முதல் கோபத்தில், திருதிருவென முழித்தப்படி, கிட்சன் வாசலில் நின்று இருந்தாள்..
ஒருபுறம், ஹரி தவறாக நினைப்பானோ என்று நினைத்தாலும், ஒருபுறம் அவளுக்கு வேலையாள் என்ற நிலையில் இருப்பதால், ஏதேனும் திட்டி விடுவார்களோ என்ற பயமும் இருந்தது உண்மை, அவள் வயதிற்கு ஏற்ற அளவிலேயே அவள் சிந்தித்து இருந்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளியில் வந்த ஹரி, வெடுக்கென குழந்தையை மிதிலாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்று, டைனிங் டேபிளின் மீது, அவளை அமர வைத்து, அவனே கதைக்கூறி, அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்..
அதைப்பார்த்த மிதிலாவிற்கோ, மேலும் மேலும் ஹரியின் மீது காதல் பெருகியது..
ஹரி தன்னுடைய ஒவ்வொரு செய்கையினாலும்.. மிதிலாவின் மனதில் ஆழமாக.. மிக மிக ஆழமாக.. வேரூன்றி மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து கொண்டே இருந்தான்…
அவனையே பார்த்தப் படி சிலையாகிவிட்ட மிதிலாவை திரும்பி பார்த்த ஹரி, "போதும் மிதிலா நீ என்னை பார்த்தது.. போ போயிட்டு உனக்கும் எடுத்துட்டு வந்து உட்கார்ந்து சாப்பிடு.. வீணா என்னை டென்ஷன் பண்ணாதே", என்றான்.. எவ்வளவு முயன்றும் அவன் குரலில் சிறிது கண்டிப்பு வெளிப்பட்டு விட்டது..
அதிலேயே பயந்த மிதிலா, மறுவார்த்தை பேசாது விடுவிடுவென உண்ண தொடங்க..
அதை பார்த்த ஹரி, "ஓ காட்.. என்ன இது.. இதுக்கே பயந்துக்கிட்டா.. இவளை பார்த்தா யாரும் 26 வயசுன்னு சொல்ல மாட்டாங்க.. ஆளும் சரி, மூளையும் சரி டீன் ஏஜ் அளவில் தான் இருக்கு.. இவளை சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கனும்..", என்று நினைக்க ஆரம்பிக்க.. அவன் மனதில், அவள் மீது இருந்த கோபம் மறைந்தே போனது..
அடுத்த பத்து நிமிடத்தில்,
மிதிலாவும், குழந்தையும் ஹரியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
நாட்கள் கடக்க, அறுவை சிகிச்சைக்கான தினமும் வந்துவிட்டு இருந்தது..
அதற்கு முன் தினம் இரவு, அன்னபூரணியின் சில நண்பர்கள், அவரை காண வருவதாக கூறி இருந்தனர்..
எனவே ஹரி, அன்னப்பூரணியுடன் கலந்து, முன் கூட்டியே, ஹாஸ்பிடல் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான்...
அப்பொழுது அன்னபூரணி, ஹரியை மாலை கோவிலுக்கு சென்றுவிட்டு வரச்சொன்னார்..
ஹரியும், "ஓகே மாம்.. உங்க ஃபிரெண்ட்ஸ் வந்த பிறகு போறேன்", என்று அவர்களுடன் விட்டு செல்ல ஒப்புக்கொண்டான்…
பிறகு ஹரி, மதியத்திற்கு பிறகு மிதிலாவிற்கு அழைத்தவன், அவளையும்.. குழந்தையும்.. கோவிலுக்கு வரச் சொன்னான்..
மிதிலா நேரடியாக வீட்டிற்கு வருகின்றேன், கோவிலுக்கு வரவில்லை என..…
ஹரி, "நோ பேபி.. பிளீஸ் நீயும் வா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு தனியா போக.... பிளஸ் ஹாஸ்பிடல் போயிட்டா, ஒரு ஒன் வீக்.. உன்னை பார்க்க முடியாது… வீட்டில வேற கெஸ்ட் இருப்பாங்க.. பிரைவசி இருக்காது பேச..", என..
வேறு வழியின்றி மிதிலா ஒப்புக்கொண்டாள்..
மாலை ஆறரை மணியளவில், ஹரி வந்து கோவிலில் காத்து இருக்க..
சில நிமிடங்களில் மிதிலா, குழந்தையுடன் கோவிலிற்கு வந்து சேர்ந்தாள்.
குழந்தையை மிதிலாவின் கையில் இருந்து வாங்கிக்கொண்ட ஹரி, மிதிலாவுடன் ஒன்றாக கோவிலுக்குள் நுழைந்தான்..
மிதிலா, கடைசியாக எப்பொழுது கோவிலுக்கு சென்றாள் என்றே அவளுக்கு நினைவில் இல்லை…
ஸ்வாமி பெயருக்கே, ஹரி அர்ச்சனை செய்ய கூறினான்..
தீபாராதனை முடிந்து, ஐயர் அர்ச்சனை பொருட்களை, எடுத்துவந்து மிதிலாவிடம் கொடுத்தார்..
மிதிலா, இயல்பு போல், அவர் கொடுத்த பூவை தலையில் வைத்துக்கொண்டு..
குங்குமத்தை ஹரிக்கும், குழந்தைக்கும் வைத்துவிட்டு.. அவளும் நெற்றியில் வைத்துக்கொண்டாள்..
பிறகு ஒரு ஐந்து நிமிடம் மட்டும்.. உட்கார்ந்துவிட்டு செல்லலாம்.. என்று குழந்தையுடன் உட்கார்ந்தனர்..
மிதிலா, "ஆன்ட்டிய ஹாஸ்பிடல வந்து நான் பார்க்க கூடாதா டாக்டர்", என்றுக்கேட்க..
ஹரி, "இல்லை டா பேபி.. ஒரு விசிட்டர் தான் கடைசி வரை அளௌவ்ட்.. பேஷண்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடும்.. சோ விட மாட்டாங்க.. ஒன் வீக்ல வந்துடுவோம்.. உனக்கு டெய்லி கால் பண்றேன்.. டோன்ட் வொர்ரி", என்றான்..
மிதிலா, "ஓ சரி.. கண்டிப்பா கால் பண்ணுங்க டாக்டர்.. ஆன்ட்டி கூடவே இருங்க.. பாவம் அவங்க கொஞ்சம் பயப்படுறாங்க ", என்றாள்..
ஹரி, "ஷோர் பேபி.. அவங்களை பார்க்காமல் எங்க போக போறேன் நான்..", என்றான்..
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு.. குழந்தையுடன்.. வீட்டிற்கு கிளம்பினர்..
மிதிலா அவள் காரிலும், ஹரி அவன் காரிலும், தனித்தனியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...
இவர்கள் வந்து சேரவும், வந்திருந்த விருந்தாளிகள் கிளம்பவும் சரியாக இருந்தது..
மிதிலா அன்னபூரணியிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தாள்..
அப்பொழுது அவர், "நீயும் கோயிலுக்கு போயிட்டு.. வந்தியா டா", என்றார்.
அதில் மிதிலாவிற்கு திக்கென்று தூக்கிவாரிப்போட்டது.. இதற்கு பொய் சொல்வதா உண்மையை சொல்லுவதா என்று அவளுக்கு தெரியவில்லை..
வேறுவழியின்றி "ஆமா ஆன்ட்டி போனேன்.. அங்க தான் டாக்டர பார்த்தேன்..", என்றாள் சங்கடமாக..
அன்னபூரணி, "நல்லது தான் மா", என்றவர்.. சிறு இடைவெளி விட்டு..
"நீ கண்டிப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க டா மிது.. இன்னைக்கு வந்த என் பிரெண்ட்ஸ் கிட்ட கூட சொல்லி வச்சிருக்கேன்.. நான் திரும்பி வந்ததும்.. நம்ம ஹரிக்கு மேரேஜ் முடிச்சுட்டு.. உனக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் முடிச்சு வைக்கிறேன் டா.. ஊர்ல இருக்கவங்களை பத்தி எதுவும் நினைக்காதே, என்ன பேசுவாங்கனு எல்லாம்.. இன்னைக்கு உனக்கு என்ன உதவி பண்ணாங்க.. சொல்லக்கூட வேண்டாம்", என்றுப் பேசிக்கொண்டே போக....
மிதிலாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. எதற்கு திடீரென்று இந்த பேச்சு என்றும் அவளுக்கு புரியவில்லை..
மீண்டும் அன்னபூரணியே "உனக்கு பூவும்.. பொட்டும்.. அவ்ளோ அழகா இருக்கு டா, என்னைக்கூட ஹரி தான் கண்டிப்பா பொட்டு வச்சிக்க சொல்லி வற்புறுத்தனான், பார்க்கவே யாரோ மாதிரி இருக்கு மாம்.. டாட்-கும் நீங்க இப்படி இருந்தா தான் பிடிக்கும்னு, ஹரிக்கும் சரி, அவங்க அப்பாக்கும் சரி, மூட நம்பிக்கை எதுவுமே சுத்தமா இல்லை.. நம்ம மனசாட்சிக்கு உண்மையா இருக்கனும் அவ்வளவு தான்னு சொல்லுவார் ", என்றுக்கூற....
மிதிலாவிற்கு, அன்னபூரணி எதை சொல்கிறார் என்று சிறிது நேரம் சென்றே புரிய, அதில் துயரம் அவளின் நெஞ்சை அடைத்தது..
வார்த்தையே வெளி வரவில்லை அவளுக்கு..
கண்களில் இருந்து அருவியாக கொட்ட நீர் தயாரானது.. முயன்று அதற்கு அணைப்போட்டவள்.. அன்னபூரணியிடம் உடனே சொல்லிக்கொண்டு கிளம்பப்பார்க்க..
அன்னப்பூரணி, அவளை இரவு உணவிற்கு பிறகு போக சொல்லி தடுத்தார்..
அன்று விருந்தாளிகள் வருவதால், அனைவருக்கும் சேர்த்து ஹரி, வெளியில் உணவிற்கு சொல்லி இருந்தான்..
மிதிலா, "கொஞ்சம் தலைவலி ஆன்ட்டி.. ரொம்பவும் டயர்டா வேற இருக்கு.. இன்னைக்கு ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தேன்.. உங்களை பார்க்க தான் வந்தேன்.. கிளம்பறேன்", என்றுவிட்டு பிடிவாதமாக கிளம்பிவிட்டாள்..
அப்பொழுது தான் ஹஸ்கியை அழைத்துக்கொண்டு உடைமாற்ற மாடிக்கு ஹரி சென்று இருந்தான்..
ஹரியிடம் சொல்ல வேண்டும் என கூட மிதிலாவிற்கு தோன்றவில்லை, காரை எடுத்தவள், வழி நெடுக்க, அழுது கரைந்தாள்..
அன்னபூரணியை, ஏமாற்றுகிறோமோ, என்ற குற்ற உணர்வு வேறு அவளை கொல்லாமல் கொன்றது..
பெற்றோர் நினைவும், அவளை வாட்டி எடுத்தது, வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு இயந்திரத்தனமாக உணவை செய்து ஊட்டியவள்.. அவளுடனே அமைதியாக படுத்துவிட்டாள்..
ஹரிக்கு ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஃபோன் வர, சிறிது நேரம் ஆனது பேசி முடிக்க..
அனைத்தையும் முடித்துவிட்டு கீழே இறங்கி வர.. மிதிலா இல்லை..
ஹரி எங்கே என்று அன்னபூரணியிடம் கேட்க, 'அவளுக்கு தலைவலியாம், போயிட்டாப்பா, பாவம் ரொம்ப சோர்ந்துட்டா" என்றவர்..
வந்திருந்த நண்பர்கள் பற்றியும், நாளை மருத்துவமனை செல்வது குறித்தும் பேச.. ஹரியால் உடனே மிதிலாவிற்கு அழைக்க முடியவில்லை…
குழந்தை தூங்கும் வரை அழுகையை அடக்கிக்கொண்டு இருந்த மிதிலா.. மகிழ்மதி தன் கண்களை மூடிய அடுத்த கணமே அழ ஆரம்பித்து விட்டாள்…
சரியாக அந்நேரம் ஹரி அவளுக்கு அழைத்துவிட்டான்..
மிதிலா முதல் தடவை எடுக்கவில்லை..
தொடர்ந்து ஹரி மெஸேஜ்ஜூம், காலும் செய்ய.. வேறு வழியின்றி, முடிந்தளவு தன் தொண்டையை சரி செய்த மிதிலா, அழைப்பை ஏற்றாள்..
உடனே ஹரி, "ஏன் டா ஃபோன் எடுக்க இவ்வளோ நேரம்.. இப்ப எப்படி இருக்க.. என்ன ஆச்சு.. ஏன் என்கிட்ட தலை வலிக்குதுன்னு சொல்லலை அப்பவே.. அதான் கோயிலுக்கு வரலைனு சொன்னையா பேபி.... சாப்பிட்டயா ஏதாச்சும்", என்றான் படப்படவென்று..
மிதிலா "இப்ப ஓகே தான் டாக்டர்.. சாப்பிட்டு படுத்துட்டேன்", என்றாள் தொண்டையை சரிசெய்தப்படியே..
இருந்தும், அவளின் குரலின் மாற்றத்தை பட்டென்று கண்டுக்கொண்ட ஹரி துடித்துவிட்டான்..
"அச்சோ, ஏன்டா மிதுமா, என்ன ஆச்சு உனக்கு.. ஏன்டா அழுத.. எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுமா..", என்று விசாரிக்க..
மிதிலாவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை…
அவளால் பேசவே முடியவில்லே..
தன் வாயைப் பொத்திக்கொண்டு.. பாத்ரூமிற்குள் வந்து கதவை அடைத்தாள்…
அவளிடம் பதில் இல்லாததில் பதறிய ஹரி, "என்னடா பேபி.. எதுவும் சொல்ல மாட்ற.. உன் அட்ரஸ் சொல்லு பேபி முதல்ல, நான் இப்பவே கிளம்பி வரேன்.. பேசுடா.. பிளீஸ் பேபி என்னன்னு சொல்லு", என்றான் வேதனையும் ஆற்றாமையும் கலந்து....
இங்கு மிதிலாவால் ஏனோ பூ, பொட்டு விஷயத்தை, மறக்கவே முடியவில்லை.
மறுபுறம் இருந்து ஹரி கத்த..
தொண்டையை சரிசெய்த மிதிலா, "ஒன்னும் இல்ல டாக்டர்.. நான் நல்லா தான் இருக்கறேன்.. தூக்கம் வருது.. பிளீஸ் நாளைக்கு பேசவா..", என…..
அவ்வளவு தான் ஹரிக்கு பயங்கர கோபம் ஆகிவிட்டது..
"என்ன பேபி விளையாடறயா நீ.. ஃபர்ஸ்ட் அட்ரெஸை அனுப்பு… இல்லைனாலும்.. என்னால உன் அட்ரஸ ட்ரேஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கறயா பேபி.. இப்பவே 911க்கு கால் பண்ணிட்டு வர்றேன்.. குரலே சொல்லுது.. இதில் நீ ஒன்னும் இல்லைன்னு சொல்ற.. அவ்வளவு தானா உனக்கு நான்", என்றான் கோபமாக..
911-( emergency helpLine number)
மிதிலா, "அச்சோ வேணாம் டாக்டர்.. ஏன் இப்படி கோபமா பேசறீங்க.. எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் அம்மா அப்பா நியாபகம்.. அதான்.. தினமும் நைட்டு எனக்கு இப்படி தான் இருக்கும்",.... என்றாள் தன்னை மீறி...
மனம் உருகிவிட்டது ஹரிக்கு..
"என்ன சொல்ற பேபி.. தினமும் இப்படி தான் அழறயா.. அதனால தான் உன்னை இங்கேயே இருக்க சொன்னேன் பேபி.., நீ தான், அது இதுன்னு என்னென்னவோ சொல்லிட்ட.. பாரு இப்ப இவ்வளவு கஷ்டம்.. ஏற்கனவே எனக்கு மாம் பத்தி கொஞ்சம் மைண்ட் பிரஷர்.. இப்ப நீயும் இப்படி பண்ணா எப்படி டா.. எனக்கு உன்னை உடனே பார்க்கனும்", என்றான் ஆற்றாமையாக..…
மிதிலா எதுவும் பதில் சொல்லவில்லை…
மீண்டும் ஹரி, அவள் சொல்லாமல் கிளம்பியதை மனதில் கொண்டு, "பேபி உண்மையை சொல்லு.. வேற எதுவும் விஷயமா.. ஏன் திடீர்னு சொல்லாம கூட கிளம்பின", என்றான் அழுத்தமாக, நூலை பிடித்து..
மிதிலா, வேறு வழியின்றி, "ஆன்ட்டியை ரொம்ப ஏமாத்துற மாதிரி இருக்கு டாக்டர், எப்படி ஆன்ட்டி உங்களுக்கு, என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்குவாங்க.. குழந்தையும் எப்படி ஏத்துக்குவாங்க, உங்களுக்காக சரின்னு சொன்னாலும்.. அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கும் இல்ல..", என்றுவிட்டு, இன்று நடந்த அனைத்தையும் கூறிவிட்டு..
"ஆன்ட்டி என் மேல ரொம்ப பாசமும்.. நம்பிக்கையும் வச்சு இருக்காங்க.. ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா என்னை என்ன நினைப்பாங்க.." என்றுவிட்டு மீண்டும் அழத் தொடங்கினாள்…
மிதிலாவின் மனமும், பயமும் தெள்ளத்தெளிவாக ஹரிக்கு புரிந்துவிட்டது..
ஹரி, "ஹே பேபி.. பிளீஸ் அழாத.. நான் உன்னை பேபின்னு சொல்றனால நீ ஒன்னும் நிஜ பேபி இல்லை.. நீ இதுக்கு அழவே தேவை இல்ல.. உனக்கு கொஞ்சம் கூட மாம் பத்தி தெரியல.. நீ வேணா பாரு நம்ம மேரேஜ் விஷயம் தெரிஞ்சதும்.. மாம் என்ன சொல்றாங்கன்னு.. ப்ளீஸ் பேபி அழாத.. எனக்கு அந்த மாதிரி ஒரு வாட்டி கூட தோனவே இல்லை டா.. நீ எனக்கே எனக்கானவள்னு தான்.. நான் உன்னை பார்த்த அப்ப இருந்து.. நினைச்சுட்டு இருக்கேன்… நீ இதெல்லாம்.. ஒரு ரீசன்னு சொல்லி அழாதடா பேபி.. எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.. அத விட உன் கூட இந்த நேரத்துல இல்லாமல் இருக்கிறது.. இன்னும் ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு.. ப்ளீஸ்டா அழாத.. நீ வேணா பாரு.. மாம் அவங்களோட முழு சம்மதத்த.. உன்கிட்ட சொல்லுவாங்க.. அப்படி சொல்லலைன்னா வேணா.. நாம மேரேஜ் பண்ணிக்க வேண்டாம் இப்ப.. கண்டிப்பா மாம் ஒத்துக்கிற வரைக்கும் வெயிட் பண்ணலாம்.. இது கூட.. உனக்காக தான்.. நான் சொல்றேன்.. மாம்க்கு பிடிக்காமல் இருக்கவே இருக்காது.. எனக்கு மாம் பத்தி நல்லா தெரியும்.. நீ உனக்கு ஓகேன்னா சொல்லு.. நான் மாம்கிட்ட இப்பவே பேசறேன்.. நாம நாளைக்கே மேரேஜ் பண்ணிக்கலாம்.. மாம்-க்கும் அதுதான் ஹாப்பி..", என்றான்….
மிதிலா, "ஹையோ இல்ல டாக்டர்.. இப்போ வேணாம் பிளீஸ்.. நான் இப்ப ஓகே ஆகிட்டேன்.. நீங்க ஆன்ட்டிய பாருங்க.. நான் நாளைக்கு ஃபோன் பண்றேன்.. இப்ப போய் தூங்கறேன்..", என்றாள்..
அவள் மனதில் ஆப்பரேசன் முன்பு இவ்விஷயத்தை கூறினால்.. அன்னபூரணிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற நினைப்பு வந்துவிட.. ஹரியிடம் உடனடியாக சமாதானமாக பேசினாள்..
ஹரிக்கோ, மிதிலா ஏன் எந்த பதிலும் கூறாமலும், இன்னும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லாமலும் இருக்கின்றாள் என்று வேதனை ஆனது..
அதே நேரம் இரண்டாவது திருமணத்தில் மனதளவில் அவள் தயாராக சிரமமாக இருக்கும் என்றும் புரிந்து தான் இருந்தது அவனுக்கு..
ஹரி, "சரி பேபி.. இனி கண்டிப்பா அழ மாட்டேன்னு சொல்லு…", என்றான்..
அங்கிருந்த நீரில் முகத்தை அடித்து கழுவிய மிதிலா, "கண்டிப்பா அழ மாட்டேன் டாக்டர்.. அம்மா அப்பா பத்தி ஞாபகம் வந்ததால் தான் ரொம்ப அழுதுட்டேன்.. கண்டிப்பா என்னை பத்தி நீங்க எதுவும் பயப்படாதீங்க ப்ளீஸ்… நீங்க ஆன்ட்டிய பத்திரமா பார்த்துட்டு.. வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க.. நாம பார்க்கலாம்", என்றாள்..
ஹரி அவள் குரலில் இப்பொழுது வெளிப்பட்ட தெளிவில், "சரிடா பேபி.. போயிட்டு படுத்து தூங்கு.. மகி பேபிய நல்லா பார்த்துக்கோ.. நீயும் நல்லா சாப்பிடு.. அடுத்த வாரம் பார்க்கலாம்.. எதுனாலும் யோசிக்காத ஃபோன் பண்ணு.. குட் நைட் டா அம்முகுட்டி.. ", என்றுவிட்டு வைத்துவிட்டான்...
அடுத்தநாள் காலை எழுந்த ஹரி, மீன்களுக்கு 10 நாள் வரை வரும் அளவிற்கு வரும் எமர்ஜென்சி ஃபுட் வாங்கி.. டைமர் செட் செய்து.. நீரில் போட்டுவிட்டு.. செடிக்கும் அதே போல் செட் செய்துவிட்டு…
ஹஸ்கியை அழைத்து சென்று டாஃக் ஹோம்மில் பணம் கட்டி பார்த்து கொள்ள சொல்லி விட்டுவிட்டு வந்தவன்….
அன்னபூரணியுடன் மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான்..
மருத்துவமனையில் ஏற்கனவே ப்ளான் செய்தபடி, அன்னபூரணிக்கு இரத்தம் ஏற்றி, அனைத்து ப்ரோசிஜர்களையும் அவனே செய்து.. வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் செய்து முடித்துவிட்டான்…
ஒருவாரம் மருத்துவமனை வாசம்…
அன்னப்பூரணியின் உடலில் தினம் தினம் நல்ல முன்னேற்றம் தான்…
இதோ ஹரி, அன்னபூரணியை, டிஸ்சார்ஜ் செய்து, வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்…
அன்னபூரணி வீட்டிற்கு வந்து இறங்கிய அடுத்த நிமிடமே, மிதிலா ஹரியின் வீட்டிற்கு வந்து விட்டாள்..
அன்று குழந்தையை பள்ளியில் விட்டிருந்த மிதிலா.. காலை மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு.. மதியம் விடுமுறை சொல்லிவிட்டு, நேரடியாக ஹரியை பார்க்க வந்துவிட்டு இருந்தாள்…
ஹரியுடன் சேர்ந்து மிதிலாவும்.. மெதுவாக அன்னபூரணியை காரிலிருந்து இறக்கி நடத்தி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்..
அன்னபூரணிக்கு வயிற்றில் போடப்பட்டிருந்த தையலினால், ஒரு அடி எடுத்து வைத்து நடப்பதே பெரும் பாடாக இருந்தது..
ஹரி, "இதோ வந்துட்டோம் மாம்.. அவ்ளோ தான்.. நடக்காமலே இருந்தாலும் பிளட் க்ளாட் ஆகிடும் மாம்..", என்று அவரை ஊக்குவிக்க…
ஹரியை எட்டி பார்த்த மிதிலாவிற்கு, அவனின் தோற்றத்தை கண்டு மிகுந்த அதிர்ச்சி…
அவன் முகம் முழுவதும் ஒருவாரமாய் ஷேவ் செய்யப்படாத தாடி, மீசை வளர்ந்து நிறைந்து இருக்க.. கசங்கிய சட்டையுடன்.. எப்பொழுதும் இருக்கும் புத்துணர்வு இல்லாமல்.. கண்கள் சிவந்து மிகவும் சோர்வாக இருந்தான்…
ஹரியின் முற்றிலும் மாறுபட்ட தோற்றம்…
மெல்ல அன்னபூரணியை அவரின் அறையில் படுக்க வைத்துவிட்டு.. அவருக்கு இலகுவாக உண்ண தேவையான உணவுகளை செய்ய ஹரியும் மிதிலாவும் கிச்சனிற்கு வந்தனர்….
உடனே மிதிலா, "ஏன் டாக்டர் இப்படி ஆகிடீங்க.. கொஞ்சம் கூட நீங்க தூங்கலையா, ஆளே ரொம்ப மாறிட்டீங்க", என்றாள் வேதனையுடன்…
ஹரி, "அதெல்லாம் ஒன்னும் இல்லடா பேபி.. ஷேவ் பண்ணா சரியாகிடும்.. மாம்க்கு நான்தான் ஆப்ரேஷன் பண்ணனும்னு முடிவு பண்ணி இருந்தேன்.. பட் லாஸ்ட் மினிட்ல.. என்னால சுத்தமா முடியல.. ஃபர்ஸ்ட் டைம் எனக்கு ஹான்ட்லாம் ரொம்ப ஷேக்காக ஆரம்பிச்சுடுச்சு, கையில் கத்தியை பிடிச்சதும்.. எப்படியோ மனசை ஒருநிலை படுத்தி, ஆப்ரேஷனை முடிச்சேன்.. இதுவரை அந்த மாதிரி நடந்ததே இல்லை…
அடுத்தடுத்து என்ன நடக்கும்னு எனக்கு நல்லா தெரிஞ்சு இருந்தாலும்.. என்னால மாம்மோட வேதனையை, பயத்தை அவங்களோட மகனா பக்கத்தில் இருந்து பார்க்கவே முடியலை....
ரொம்ப நாள் பிறகு மாம் கூட அதிக டைம் ஸ்பெண்ட் பண்ணேன்…
அவங்க ஒன் செக்கெண்ட் கூட என்னை விடல.. ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு.. டாட்-அ வேற ரொம்ப மிஸ் பண்ணி பேசுனாங்க.. ஒன் வீக்கா நான் டாக்டர்னே.. எனக்கு மறந்து போச்சு..”, என்றவன்..
மேலும், “நான் இல்லாம இனி மாம் எப்படி இருப்பாங்களோ தெரியல..
நெக்ஸ்ட் வீக்ல இருந்து.. நான் ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணிடனும்.. மாம்க்கு ஹெல்ப்கு ஒரு நர்ஸ் ஒன் மன்த்கு அப்பாயின்ட் பண்ணி இருக்கேன்..
இங்க தான் இருப்பாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க….
என்னால ரொம்ப நாள் லீவு எடுக்க முடியாது… மாம் என்ன சொல்வாங்க தெரியல.. அதான் ரொம்ப டென்ஷனா இருக்கு", என்றப்படி ஹரி சூப் செய்யும் மெஷினில் காய்களை போட ....
மறுநிமிடம் மிதிலா, ஹரியை பின்புறம் இருந்து.. அவன் இடுப்பை தன் கைகளால் சுற்றி வளைத்து… நெருங்கி.. அவன் முதுகில் தன் முகத்தை ஆழ புதைத்து.. கட்டிக்கொண்டு இருந்தாள்…
மிதிலாவின் இந்த திடீர் நெருக்கத்தில் இன்பமாக அதிர்ந்தான் ஹரி…
மிதிலாவிற்கோ ஹரி தன் கஷ்டத்தை பகிர பகிர ஒருமாதிரி ஆகிவிட்டது…
மிதிலாவின் அணைப்பு மேலும் இறுக.. ஹரியின் வேதனைகள்.. மின்னல் வேகத்தில் அழிந்து… அவன் உடல் முழுதும் உள்ள இன்ப ரேகைகளில் இரத்தம் அதிவேகமாக பாய்ந்து, சிலிர்த்தது…
முதன் முதலில் மிதிலாவிடம் இருந்து கிடைக்கும் உரிமையான நெருக்கம் அவனுக்கு..
ஹரி, ஒரு முழு நிமிடம்.. மிதிலாவின் அணைப்பை ஆழ அனுபவித்து.... உடலின் ஒவ்வொரு அணுக்களிலும், மிதிலாவின் ஸ்பரிசத்தை உணர்ந்து சேமித்தவன்… தன் முதுகில் அவளின் கண்ணீரை உணர்ந்த மறுவினாடி..
மிதிலாவின் இருக்கரங்களுடன்.. தன் கையை இணைத்துக்கொண்டே.. திரும்பியவன்..
அவள் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொண்டான்.…
"என்னோட அம்முக்குட்டிக்கு என்ன ஆச்சாம் திடீர்னு....", மெல்ல அவள் தாடையை தன்னுடைய ஒற்றை விரல் கொண்டு பற்றி நிமிர்த்தி.. தன் முகம் பார்க்க செய்தான்..
கண்கள் கலங்கி.. மூக்கு நுனி சிவந்து.. தன் உதடுகளை பிதுக்கிக்கொண்டே.. ஹரியை பார்த்த மிதிலா, "சாரி என்னால எந்த ஹெல்பும் செய்ய முடியலை.. உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்…", என…
ஹரி, "ஓய் பேபி.. நானும் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்", என்றப்படி, குனிந்து.. மிதிலாவின் மூக்கின் நுனியை.. தன் மூக்கின் நுனியால் உரசி….
அவளை அப்படியே தூக்கியவன்.. அவனின் முகத்தின் நேரே, அவனின் உயரத்திற்கு ஏற்றவாறு தூக்கி பிடித்துவிட..
மிதிலா அதிர்ந்துப்போனாள்..
அவள் சுதாரிக்கும் முன்பே, மிதிலாவின் கழுத்தில் ஆழ புதைந்துவிட்டான் ஹரி..
ஹரியின் வெப்ப மூச்சுக்காற்றில்.. மிதிலாவிற்கு குளிர் காய்ச்சல் வர ஆரம்பித்தது…
ஹரியின் உதடுகளும்.. தாடி.. மீசை முடிகளின்.. கூர்மையும்.... அவளை பதம் பார்க்க ஆரம்பித்தன..
அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளின், கழுத்து தசையை, ஹரியின் பற்கள் மென்மையாக பதம் பார்க்க ஆரம்பிக்க....
அவ்வளவு தான் மிதிலா, ஹரியின் செயலைத் தாங்க முடியாது,
ஹரியின் தலைமுடியை இறுக்கி பிடித்தாள்… இருக்கரம்கொண்டு..
உடலில் உள்ள சக்தி மொத்தமும், ஷணத்தில் மிதிலாவிற்கு வடிந்துப்போனது…
பெண்ணவளின் நிலையறியாத ஹரியோ, அப்படியே அவளை தூக்கிச்சென்று, கிட்சன் மேடையில் உட்கார வைத்தப்படி..
மெல்ல தன் தலைமுடிக்குள், சிக்கி இருந்த மிதிலாவின் கையை விலக்கி.. நிமிர்ந்து.. அவள் முகம் பார்த்தான்..
அவளோ, ஏதோ பேய் பிசாசு அடித்ததை போன்று.... அரண்டுப்போய்.. மருண்டு உட்கார்ந்திருந்தாள்..
அதைப் பார்த்த ஹரி, "அச்சோ பேபியே இப்போ தான் கொஞ்சம் என்கிட்ட நெருங்கி வந்தா.. அவசரப்பட்டு.. அவளை தடுத்து.. இப்படி ஆக்கிட்டேனே..", என்று மானசீகமாக நினைத்து நொந்து கொண்டவன்...
மிதிலாவின்.. தலைமுடியை ஒதுக்கிவிட்டு.. கண்களையும் துடைத்து.. முகத்தை மென்மையாக நீவிவிட்டான்..
எதற்கும் அவளிடம் பிரதிப்பளிப்பு இல்லை…
ஹரி மீண்டும் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டு..,
"பேபி என்ன டா எதும் பேச மாட்ற.. உன்னோட டாக்டர உனக்கு பிடிக்கலையா..", என்றவன்..
மேலும், "ஒரே அழுகாச்சி பேபி நீ…, பாரு மகிழ் குட்டி எப்பவும் சிரிச்சிட்டே இருக்கா… நீயும் தான் இருக்கியே பேட் கேர்ள்",. என…
ஓரளவிற்கு நிதானம் அடைந்துவிட்ட மிதிலா, உடனே கிழே இறங்க முற்பட்டாள்…
அவளின் முயற்சியை தடுத்த ஹரி..,"ஏன் பேபி அழுத.. உன்னை இனி அழக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல.. என் பேச்சைக் கேட்காம.. என் முன்னாடியே அழறியா நீ", என்றான் வருத்தமாக..
மிதிலா சிறு குரலில், "அச்சோ அப்படி இல்லை டாக்டர்.. அதுவந்து.. உங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லையா.. அதுமட்டுமில்லாமல்.. உங்களோட இந்த தோற்றம்.. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியா ஆகிடுச்சு பார்த்ததும்..", என்றாள், தன் நெஞ்சை நீவிக்கொண்டே..
உடனே ஹரி தண்ணீர் பாட்டிலை எடுத்து மிதிலாவிற்கு குடிக்க கொடுத்து.. அவள் குடித்ததும்
"இப்போ ஓகேவா பேபி", என்றான்..
மிதிலா, "நீங்க ஓகே ஆனதும்.. நானும் ஓகே ஆகிட்டேன் டாக்டர்", என்றாள் புன்னகையுடன்…
ஹரி, " ஓ.. அப்ப மேடம் ஓகே.. கூல்.. இப்ப நான் ஃபர்ஸ்ட் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க", என...
மிதிலா என்ன என்பது போல் பார்க்க..
ஹரி நெருங்கி மிதிலாவின் கழுத்தில் இருந்த தன் பல் தடத்தை.. தன் விரலால் வருடியப்படி, "டாக்டர் டச் பண்ணா உனக்கு பிடிக்கலையா", என்றான் அவள் காதில் ரகசியமாக..
மறுகணமே மிதிலா, தன் கழுத்தில் கோலம் போட்டு கொண்டிருந்த ஹரியின் கையை, மேலும் அசைக்க முடியாதவாறு, இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்..
உடல் முழுதும் ஹரியின் பேச்சாலும்.. செயலாலும்.. கூசி சிலிர்த்தது மிதிலாவிற்கு…
அதை உணர்ந்த ஹரியின் பார்வை வேறு, மிதிலாவின் மீது முழுவதும்.. உரிமைப்பட்டவன் பார்வையாக வலம் வரத் தொடங்கியது..
அதில் மிதிலாவின் தேகம் மொத்தமும் மருதாணியை பூசிக் கொள்ள.. மீண்டும் பேசா மடந்தை ஆகிவிட்டாள்…
ஹரி "ஏதாச்சும் சொல்லு பேபி… உனக்கு டைம் வேணுமா.. இல்ல ஓகேவானு… என்னால என்னை கண்ட்ரோலே பண்ணமுடியல.. ஏதாச்சும் சொல்லு.. இல்லனா அவ்ளோ தான் அப்புறம் நீ தான் ஃபீல் பண்ணுவ.. ", என்றவன்.. அவளின் மூக்கின் நுனியை நறுக்கென கடித்து விட.…
மிதிலாவோ சட்டென வலி தாங்க முடியாமல் "ஆஆஆஆஆஆ", என்று கத்த..…
ஹரி, "சாரி பேபி.. சாரி சாரி.. கத்தாத.. மாம்க்கு கேட்டுட போகுது..", என்று அவளின் வாயை தன் கையால் மூட முயற்சித்தான் …
மிதிலாவோ, ஹரியின் கையை தடுத்து பற்றிக்கொண்டு.. "போங்க வலிக்குது ரொம்ப", என்று சிவந்த மூக்குடன்.. மீண்டும் கத்த..
வேறுவழியின்றி ஹரி, தன்னுடைய உதடுகளால் அவளுடைய உதட்டை அழுந்த மூடி.. கைகளை இறுக்கி பிடித்து.. அவளை அடக்கப்பார்க்க..
சில நொடிகளில் ஹரி, "OMG.. அவுச்.. கிரேஸி.. இட்ஸ் பெயினிங் வெரி பேட்லி..", என்று கத்தியிருந்தான், தன் உதட்டை பிடித்தப்படி..
மிதிலாவோ தன்னுடைய மூக்கின் நுனியை இப்பொழுதும் தேய்த்துக் கொண்டே..
ஹரியை பார்த்து, "உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. எனக்கு வந்தா மட்டும் டோமேட்டோ சாஸா டாக்டர்", என…
ஹரி, "இரு உன்னை என்ன பண்றேன் பாரு.. என் லிப்ஸ கடிச்சா வைக்குற", என்று நெருங்க....
கீழே வேகமாக குதித்த மிதிலா.. ஹரி சுதாரிக்கும் முன் அவனை தள்ளிவிட்டு ஹாலிற்கு ஓடிவிட்டாள்…
ஹரியின் உதட்டிலோ லேசாக இரத்தம் கசிய.. அதை உணர்ந்தவன்..
"ஓ மை காட்... டேன்ஜ்ரஸ் கியூட்டி" என்று நினைத்துக் கொண்டே..
அங்கிருந்த ஃபிரிட்ஜில் இருந்து ஐசை எடுத்து உதட்டில் வைத்தவன், மனம் முழுவதும் லேசாக மாறி பறப்பதுபோல் இருந்தது…
நிச்சயம் தன்னுடைய வாழ்க்கை.. மிதிலாவுடன் இன்பமாக இருக்கும் என்று நம்பினான்…
எங்காவது யாருமில்லா காட்டிற்குள்.. மிதிலாவுடன் ஓடி போகலாம் போல் இருந்தது அவனிற்கு..
‘இருக்கும் இருக்கும்’ என்று நினைத்த கடவுளோ, அவனை தொந்தரவு செய்ய முடிவெடுத்தார். அதன் பலனாய் சூப் மெஷினில் இருந்து சத்தம் வர ஆரம்பித்தது…
அங்கு ஹாலில் தன்னுடைய செயல்களை நினைத்து பார்த்த மிதிலாவிற்கு.. மிகவும் வெட்கமாக இருந்தது.. "ஐயோ டாக்டர், என்னை பத்தி, என்ன நினைச்சு இருப்பாங்க", என்று தன் உதட்டை கடித்தவள்.. ‘அச்சோ’ என தன் முகத்தை மூடிக்கொண்டாள் கூச்சம் தாளாமல்..
கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்புக்கு, ஹரியால் திரும்ப ஆரம்பித்து இருந்தாள்.. பழைய குறும்புகளுடன்..
மாற்றம் ஒன்று தானே மாறாதது.
கிட்சனில் இருந்து சத்தம் வர, உடனே அங்கிருந்த, கெஸ்ட் ரூமிற்குள் இருந்த பாத்ரூமிற்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்..
அன்னபூரணி பெயின் கில்லர் போட்டதால் நல்ல உறக்கத்தில் இருந்தார்…
சூப்பை எடுத்து குடிக்கும் பதத்திற்கு ஆற்றிய ஹரி, அதை எடுத்துக்கொண்டு வந்தவன்.. அன்னபூரணியை எழுப்பி.. அவர் உட்காருவதற்கு உதவினான்…
கொஞ்சம் நிதானம் அடைந்து, முகத்தை கழுவிவிட்டு, வெளியே வந்த மிதிலா, ஹரியின் குரல் கேட்டு அன்னபூரணியின் அறைக்குள் மெல்ல நுழைந்தாள்…
அவளும், அவரை பிடித்து பொறுமையாக உட்கார வைக்க உதவினாள்…
ஹரி பாத்ரூமிற்குள் சென்று ஒரு சிறு டவலில் நீரை நனைத்து எடுத்து வந்து அன்னபூரணிக்கு முகம், கழுத்து, கை என துடைத்து விட்டு, அவர் அருகிலேயே அமர்ந்து மெல்ல சூப்பை, ஸ்பூனில் எடுத்து அவனே ஊட்டி விட…
அன்னபூரணி தானே உண்பதாக கூற.. ஹரி மறுத்துவிட்டான்..
மிதிலா அன்னபூரணியின் மறுபக்கம் உட்கார்ந்து கொண்டாள்.. அமைதியாக..
சில நிமிடங்களுக்கு பிறகே ஹரியின் முகத்தை கவனித்த அன்னபூரணி பதறி, "என்னடா கண்ணா ஆச்சு.. உதடு ஏன் இப்படி தடிப்பா இருக்கு..", என...
ஹரிக்கும் மிதிலாவிற்கும் ஒரு சேர திக்கென்று இருந்தது ..
இருவருக்குமே தங்களுடைய அந்தரங்க செயலினால் வெட்கம் பிடுங்கி தின்றது.. வெளியே சொல்ல முடியாமல்..
ஹரிக்கு என்ன சொல்வது என்று தெரியாமலும்..
மிதிலாவிற்கு ஹரி என்ன சொல்வானோ என்று பயமாகவும் இருந்தது…
சில வினாடியிலேயே சுதாரித்த ஹரி, "ஒன்னும் இல்ல மாம், சூடா சூப்ப டேஸ்ட் பண்ணிட்டேன், அதான் ஒன்னும் இல்ல, நான் ஐஸ் பேக் வச்சுட்டேன், நீங்க சாப்பிடுங்க", என்று சமாளித்து விட்டான்..
மிதிலா அவ்வளவு நேரம் இழுத்து வத்திருந்த மூச்சை வெளியேவிட..
அதைப்பார்த்த ஹரி, மெல்ல தன் உதடுகளை குவித்து புன்னகை செய்ய..
மிதிலாவிற்கு எங்கு சென்று மறைய என்று தெரியாமல் போனது…
அதன் பிறகு அவள் ஹரியின் முகத்தை மறந்தும் பார்க்கவில்லை…
அன்னபூரணி, "நீ போயிட்டு, ஷேவ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா கண்ணா.. எனக்கு மிதிலா சூப் கொடுப்பா.. போப்பா போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடு", என்று ஹரியை அனுப்பிவிட்டார்..
பிறகு மிதிலா அன்னபூரணிக்கு கொடுத்து முடித்துவிட்டு, பொருட்களைக எடுத்துக்கொண்டு கிச்சன் செல்லும்பொழுதே..
வீட்டு கதவின் மணி அடிக்க ஆரம்பித்தது..
மிதிலா சென்று லென்ஸ் வழியாக பார்த்துவிட்டு கதவை திறந்தாள்..
ஹரி சொன்ன நர்ஸ் தான் வந்து இருந்தார்..
மிதிலா அவரை வரவேற்று, ஹாலில் உட்கார வைத்துவிட்டு.. அன்னபூரணியின் அறைக்குச்சென்று நர்ஸ் வந்திருக்கும் தகவலை கூறினாள்..
அன்னபூரணி அவரை உள்ளே அழைத்து வருமாறு கூறினார்..
அவருக்கு ஏற்கனவே அந்த நர்ஸை தெரியும், ஹாஸ்பிடலில் பார்த்து இருக்கின்றார்..
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க.. சமையல் அறைக்கு சென்ற மிதிலா மதிய உணவை செய்ய ஆரம்பித்தாள்..
குளித்து முடித்து கீழே இறங்கி வந்த ஹரி, நர்ஸ் வந்துவிட்டதை பார்த்து, அவரிடம் சென்று, அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக, பேசினான்..
அன்னபூரணி மீண்டும் படுத்துவிட…
நர்ஸை அவருடன் விட்டுவிட்டு ஹரி வெளிவர…
மிதிலா, "சாப்பிடுங்க டாக்டர்.. ரொம்ப டைம் ஆகிடுச்சு.. லன்ச் ரெடி..", என..
ஹரியும் மிகுந்த பசியில் நேராக டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து விட்டான்..
உடன் மிதிலாவையும் வந்து அமர சொன்னவன்…
ஒருவாய் சாதத்தை வாயில் எடுத்து வைத்ததும் "ஸ்ஸ்ஸ் " என்று சத்தம் எழுப்பினான் உதட்டில் எரிச்சல் தாங்காமல்..
அப்பொழுது தான் உள்ளே சென்று தனக்கு தட்டை எடுத்து கொண்டு வந்த மிதிலா என்னவென்று ஓடிவந்து பார்க்க..
ஹரி, "எல்லாம் உன்னோட வேலை தான்.. ராட்சஸி.. இப்படியா நறுக்குன்னு கடிப்ப" என...
அச்சோ சாப்பிட கூட முடியலையா என்று பதறிய மிதிலா, உள்ளே சென்ற குரலில், "சாரி டாக்டர்.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன் பிளீஸ் சாரி.. நீங்க கடிக்கவும் சரி நாமாலும் கடிக்கலாம்னு தான் பண்ணிட்டேன்", என…
அவளின் வெகுளி தனத்தில் விழுந்த ஹரி, அவளை ஒரு இழுவில் அருகில் இழுத்து நிற்க வைத்து,
"ஹே பேபி.. என்ன இது.. நான் சும்மா ஃபன் பண்ணேன்… அதுக்குள்ளே மூட் அவுட் ஆகறியா நீ… நீ எப்ப வேணாலும் வந்து என்னை இப்படி கடிக்கலாம்.. ஈவன் எங்க வேணாலும் கடிக்கலாம்.. எனக்கு பிடிச்சு தான் இருக்கு. வா இப்போ ஒருகடி கடி பார்ப்போம்", என்றான் சிரித்துக்கொண்டே.. தன் உதட்டை காட்டி…
தன் இடையில் பரவி இருந்த ஹரியின் கையை பட்டென விலக்கிய மிதிலா, "அச்சோ போங்க டாக்டர்.. உங்களால தான் நான் அப்படி பண்ணேன்.. இப்போ திரும்பவும் இப்படி.. போங்க உங்ககிட்ட நான் இனி பேசவே மாட்டேன்.. நீங்க ரொம்ப பேட்..", என்றவள் கிச்சனிற்குள் தட்டுடன் ஓடி விட்டாள்…
ஹரி, "ஹேய் சரி வா, ஒன்னும் சொல்லலை இங்க வந்து சாப்பிடு பேபி", என, அவள் வரவே இல்லை…
வேறுவழியின்றி ஹரி தான் உணவு தட்டுடன் கிட்சனிற்குள் சென்று, அவளை கொஞ்சி, கெஞ்சி, சமாதானப்படுத்தி, அவளுக்கு ஊட்டி.. மீண்டும் சீண்டிவிட்டு, அவன் விரும்பிய கடியையும் வாங்கிக் கொண்டே அவளை விட்டான்..
பிறகு ஹஸ்கியை அழைத்து வர ஹரி கிளம்ப..
மிதிலாவும், குழந்தையை அழைக்க வேண்டும் என்று அன்னபூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்..
நாட்கள் நகர…
ஹரி தன் பணியில் மீண்டும் சேர்ந்துவிட்டான்…
மிதிலா இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது மாலைப் பொழுதுகளில் வந்து அன்னபூரணியை குழந்தையுடன் பார்த்துவிட்டு செல்வாள்..
ஹரிக்கு, மருத்துவமனையில் வேலைகள் மிகவும் டைட்டாக இருந்தது, ஏகப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் என்று அவனுக்கு ஓய்வே இல்லை..
சில தினங்கள் அவன் வீடு திரும்பவே இரவு பதினொன்று பன்னிரெண்டு என்று ஆகிவிடும்…
அன்னபூரணி, அவரது வேலைகளை அவரே செய்யத் தொடங்கிவிட்டு இருந்தார்.
கால் வலிக்கு கூட பிசியோதெரபிஸ்ட் வந்து தினமும் சில மசாஜ்களை செய்துவிட்டு செல்கின்றார்..
அதிலும் நல்ல முன்னேற்றம்…
ஹரியின் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்ற அன்னபூரணியின் ஆசையே அவரை விரைந்து குணமடைய செய்துக்கொண்டு இருந்தது…
கருத்துகள்
கருத்துரையிடுக