உண்மை காதல் -11
அத்தியாயம்-11
மகிழ்மதி இப்பொழுது அடி எடுத்து வைக்க தொடங்கிவிட்டு இருந்தாள்.. ஏதாவது கிடைத்தால் போதும், பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்து விடுவாள்..
அதிலும் மழலை மொழியில் அவள் மிழற்றும் ஒவ்வொன்றும், மிதிலாவின் செவியை இன்னிசையாய் தீண்டி, அவளை உருக வைக்கும்…
குழந்தை வளர வளர அவளில் தோன்றும் ஒவ்வொரு மாற்றத்திலும், மிதிலா தன்னை தொலைக்க ஆரம்பித்து இருந்தாள்..
கையில் சின்னஞ்சிறு பஞ்சு பொதியாய், ஜனனம் எடுத்த கணமே அவளை ஏந்திய தினம் தொட்டு, அவளின் ஒவ்வொரு அசைவுகளும் மிதிலாவிற்கு அத்துப்படி..
எப்படி தூக்குவது, எப்படி குளிக்க வைப்பது, ஏன் எப்படி என்ன உணவுகள் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்று எதுவுமே தெரியாது புரியாது தத்தளித்து, எப்படியோ கற்றுக்கொண்டாள்..
குமரி வடிவில் இருந்த குழந்தை தானே அவளும்..
எத்தனையோ இரவுகள், குழந்தையை தூங்க வைக்க தெரியாது, ஒரு நிமிடம் கூட அமராது, தோளிலேயே அவளை சுமந்துக்கொண்டு நடந்தே தூங்க வைத்து இருக்கின்றாள்..
இருந்தும், ஒரு நொடிப்பொழுதுக்கூட அவள் குழந்தையை சுமையாய் கருதியது இல்லை...
கடவுள் தனக்கு கொடுத்த பொக்கிஷமாகவே மகிழ்மதியை போற்றி, தனக்கு என்று இருக்கும் ஒரே ரத்தப்பந்தத்தை பாதுகாத்தாள்..
நாட்கள் மேலும் சில கடக்க.. ஹரி மிதிலாவின் உறவிலோ, எந்த முன்னேற்றமும் இல்லை..
கிணற்றில் போட்ட கல்லாக அசையாமல் அப்படியே, அடுத்த நிலைக்கு செல்லாது இருந்தது..
அப்பொழுது, ஒரு வெள்ளி மாலை, சனி விடுமுறை என்பதால், அன்னப்பூரணியை காணச் சென்று இருந்தாள் மிதிலா.
அங்கு, ஹரிக்கு பிடிக்கும் என்று அன்னப்பூரணி இவளை இடியாப்பம் செய்ய சொல்ல.. அவளும் செய்துக்கொண்டு இருந்தாள்..
குழந்தை ஹாலில் கீழே உட்கார்ந்து ஹஸ்கியுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தாள்..
அன்னபூரணி அங்கிருந்த டைனிங் டேபிளில் உட்கார்ந்து.. காய் வெட்டியப்படி குழந்தையை கவனித்துக் கொண்டு இருந்தார்..
மருத்துவமனையில் இருந்து, அப்பொழுது தான் ஹரி வீடு வந்து சேர்ந்தான்..
வந்தவன் மேலே சென்று, குளித்துவிட்டு வந்து, மகிழ்மதியுடன் கீழே உட்கார்ந்து கொண்டு விளையாட தொடங்க….
மிதிலாவும் வேலையை முடித்துவிட்டு.. ஹாலிற்குள் நுழைய..
அப்பொழுது, அன்னபூரணி ஹரியிடம், "என்ன கண்ணா, இன்னும் எவ்ளோ நாள் தான் என்னை ஏமாத்த போற, உன்னை நம்பி தான், நான் சந்தோஷமா ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன், இப்ப உடம்பும் எனக்கு சரி ஆகிடுச்சு, இன்னும் எத்தனை வருஷம் காத்து இருக்கனும்.. எப்ப தான் உன்னோட கல்யாணத்தை நான் பார்க்கிறது, என்னை ஏமாத்தறியா கண்ணா, ரொம்ப கஷ்டமா இருக்கு, எதுக்கு இந்த உயிர் இருக்குனே தெரியலை ", என்றார் விரக்தியாக…
அவருக்கும், பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று இருக்கும் தானே..!
அன்னபூரணியின் பேச்சு, கிட்சன் வாயிலில் நின்று இருந்த மிதிலாவிற்கு, நெஞ்சை கனக்க செய்தது..
ஹரியோ, "ஏன் மாம், நான் தான் ப்ராமிஸ் பண்ணேன் இல்ல, நம்ப மாட்டீங்களா என்னை, எதுக்கு இந்த மாதிரி பெரிய பேச்செல்லாம் பேசறீங்க.. இப்பதானே ஹாஸ்பிடல்ல இருந்து வேலை முடிச்சு வந்தேன், ஏன் இப்படி பேசி மூட் அவுட் பண்றீங்க, எனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சே இப்படி பேசறீங்க இல்ல மாம்.. இட்ஸ் ஓகே", என்றவன் குழந்தையுடன் எழுந்து, தோட்டத்திற்கு சென்று விட்டான்…
மிதிலாவோ என்ன செய்வது என்று தெரியாது, சிறிது நேரம் கிட்சனிலேயே இருந்துவிட்டு, வெளி வந்தவள்…
அன்னபூரணியிடம் மணியாகிவிட்டதாக கூறிவிட்டு.. குழந்தையை அப்படியே தூக்கிக்கொண்டு செல்வதாக விடைபெற்றுக் கொண்டாள்..
அன்னபூரணியும், அவரின் மனநிலை ஒரு நிலையாக இல்லாததால்.. மிதிலாவிடம் எதுவும் மறுப்பு சொல்லவில்லை..
தன் அறைக்கு அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்…
மிதிலாவிற்கு தன்னால் அன்னபூரணியும், ஹரியும் வேதனை படுவதை தாங்க முடியவில்லை…
ஹரி எங்கே என்று பார்த்துவிட்டு.. ட்ரீ ஹவுஸில் இருந்து குழந்தையின் சத்தம் வருவதை பார்த்து.. அங்கே சென்றாள்…
மிதிலாவிற்கு, அவளின் காதல், எதிர்பாராது கிடைத்த பொக்கிஷமான இடம்…
ஹரியுடனான நினைவுகளை சுமந்துகொண்டு.. மெதுவாக மிதிலா மேலேறினாள்..
சம்பங்கி பூவின் மணம் இன்றும் அவள் நாசியை நிறைத்து.. மனதை குளிரூட்டியது..
மிதிலாவை பார்த்த ஹரி,
"ஹே வா பேபி.. டின்னர் வேலை ஓவரா, மாம் என்ன பண்றாங்க..", என்றான் சாதாரணமாக..
குழந்தை மீன் தொட்டியின் அருகில் கீழே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தது..
மிதிலா, "எல்லாம் ரெடி டாக்டர்.. சாரி, நான் அப்ப தான் ஹாலுக்கு வந்தேன்.. நீங்க இரண்டு பேரும் பேசினதை கேட்டுட்டேன்.. பாவம் ஆன்ட்டி, நீங்க ரொம்ப பேசிடீங்க..", என்றாள்..
ஹரி, " ஓ.. நான் ஒன்னும் நினைக்கலை.. புரியுது டா.. கொஞ்சம் வொர்க் ப்ரஷர்.. மாம் அன்டர்ஸ்டாண்ட் பண்ணிப்பாங்க என்னை", என்றான்..
மிதிலா, "ஆன்ட்டி மேல ஒரு தப்பும் இல்லை டாக்டர்.. அவங்க எதிர்பார்ப்பும் தப்பில்லை…", என்று நிறுத்தியவள்.. ஒரு மூச்சை ஆழ எடுத்து….
"அதனால வந்து.. வந்து.. நம்ம விஷயத்தை அவங்க கிட்ட சொல்லிடுங்க டாக்டர்.. எனக்கு மணியாகிடுச்சு நான் கிளம்பறேன்.. பாய்..", என்றவள்.. ஹரியின் முகத்தை பார்க்காமலே.. அவனை தாண்டி.. குழந்தையை தூக்கச் சென்றாள்..
உடனே ஹரி.. "ஹேய்.. உண்மையாவா..", என்று மிதிலாவின் கையை பற்றி செல்லவிடமால் இழுத்தான்..
இழுத்த வேகத்தில் பெட்டில் அமர்ந்து இருந்த ஹரியின் மடி மீது வந்து மிதிலா விழுந்து இருந்தாள்..
"அச்சோ", என்று நெளிந்தவளின் பின்புறக் கழுத்தில், தன் தாடையை வைத்து அழுத்தியவன்.. அவள் காதில்.. "இப்ப சொல்லு என்ன சொன்னனு", என்றுக் கேட்க…
மிதிலா, "ஹையோ விடுங்க டாக்டர், பிளீஸ்.. கூசுது ", என்று அவனின் மடியில் இருந்து எழ போராட..
ஹரி, "விடுறேன்.. ஃபர்ஸ்ட் நான் கேக்குறதுக்கு.. பதில் சொல்லு.. உனக்கு.. உண்மையிலேயே இப்ப மேரேஜ்கு ஓகேவா.. இல்ல மாம்காக சொல்றீங்களா மேடம்", என....
ஹரியின் நெருக்கத்திலும்.. அவனின் தாடை தன் கழுத்தில் கொடுக்கும் அழுத்தத்திலுமே.. தடுமாறிக் கொண்டு இருந்தவள்..
இப்பொழுதோ, அவளின் செவி மடலை தீண்டிக்கொண்டு இருக்கும் ஹரியின் நுனி மூக்கின் ஸ்பரிசத்திலும்.. அவனின் மூச்சு காற்றின் வெப்பத்திலும்.. காதோரம் கேட்கும் அவனின் மெல்லிய குரலிலும்.. உறைந்துப்போனாள்..
தன் இரு கைகளையும், ஹரியின் தொடை மீது வைத்து அழுத்தி, அவனை பற்றியவள்..
கண்களை இறுக்க மூடியப்படியே.... பின்னோக்கி ஹரியின் மீதே முழுவதுமாக சரிந்தாள்..
பெண்மையின் மென் உணர்வுகளின், பிரவாகத்தில், அவளின் இளம் முகம் மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் என்று மாறி மாறி ஜொலித்துக் கொண்டு இருந்தது..
மிதிலாவின் முகத்தை குனிந்து பார்த்த ஹரி, மகிழ்மதியை ஒருபார்வை பார்த்துவிட்டு…
நொடியில் தன்னவளை ஆக்டோபஸ் போல், சுற்றிவளைத்து வாரி தனக்குள் அடக்கிக்கொண்டான்..
அதில் மிதிலாவின் தேகம் அதிரத்தொடங்க.. மேலும் அவளை அதிரச்செய்யும் வகையில், ஹரியின் இதழ்கள் மிதிலாவின் இதழுடன் இணைந்தது…
மிதிலாவின் உதடுகளை சிறைசெய்ய தொடங்கிய ஹரியோ, அவளின் பஞ்சு போன்ற உதடுகளின் மென்மையில் மயங்கி, இறுதியில் அங்கு அவன் சிறைப்பட்டு போனான்…
அவளின் கன்னக்குழிக்கும் அவ்வப்பொழுது ஹரியின் உதடுகள் சேவை செய்தது..
வினாடிகள் இன்பமாய் சொர்க்கமாய் நகர…
ஹரியின் கரம் தன்னவளின் வயிற்றின் மீது அழுத்தமாக பதிந்தது..
ஹரியின் தொடர் அதிரடி தாக்குதலில்.. எவ்வித எதிர்வினையும் ஆற்றும் சக்தியின்றி.. உடல் தளர்ந்து.. ஹரியினுள் முற்றிலும் அடங்கினாள் மிதிலா….
அவள் உடல் முழுவதும், ஹரியின் தீண்டலில், ஜிவ்வென்று எங்கோ பறந்துக்கொண்டு இருந்தது…
அன்றும் சரி, இன்றும் சரி அவளை பெண்ணாய் உணர செய்பவன் ஹரி ஒருவனே.. அதுவும் மயிலிறகால் வருடுவது போல்….
தன் மீது மிதிலாவின் பாரம் கூடக்கூட, ஹரிக்கு அவளின் சரணடைந்த நிலை தெரிந்தது..
அதில் ஹரியின் கண்கள் கர்வம் கொண்டு வைரமாய் ஜொலித்தது..
அவனுக்கான பெண், அவனின் கையில், அவனின் தொடுகையில், மயங்கி கிடந்தாள்..
அடுத்தடுத்த ஹரியின் செயல்கள் அனைத்துமே, இன்று கணவனின் செயலாகவே இருந்தது…
மீண்டும் அவள் இதழில் மூழ்கியப்படி…
மெல்ல அவளின் frock மீது, அணிந்திருந்த கோர்ட் பட்டனை ஒவ்வொன்றாக விடுவித்து முடித்தவன்..
அடுத்து அதை மெல்ல கழட்ட முயற்சிக்க..
சட்டென்று மிதிலாவின் மனதில் ஆழமாக இருக்கும்.. பெண் உணர்வுகள்.. விழித்துக்கொண்டது..
நொடியில் மயக்கம் தெளிந்தவள்.. ஹரியின் கைகளை இறுக்கப்பிடித்து…
பயத்துடன் "அச்சோ பிளீஸ்.. கழட்ட வேணாம்", என்றாள்…
அதில் இத்தனை நேரமும் ஏதோ ஒரு போதையில் மிதந்தவன் போல் இருந்த ஹரி.. தன் நிலை உணர்ந்து பதறி..
பட்டென்று மிதிலாவை தன் மடிமீது இருந்து இறக்கி, அருகில் உட்கார வைத்தான்..
மிதிலாவின் முகத்தை பார்த்த ஹரி, தன் சிகையை அழுந்த கோதியப்படி..
அவள் கைப்பற்றி, "சாரிடா பேபி..", என்றுக்கூற..
ஹரி மன்னிப்பு கேட்டதும் மிதிலா, "அச்சோ பரவாயில்லை டாக்டர்.. நான் அன்னைக்கே சொன்னேன் இல்ல.. ஸ்லீவ்லெஸ் frock போட்டா.. நான் கண்டிப்பா கோட் போட்டு இருப்பேன்னு.. எனக்கு இது தான் comfortable-ஆ இருக்கும்.. ஈரமா இருக்குன்னு தானே கழட்டனீங்க.. எனக்கு பெருசா ஒன்னும் தெரியலை.. குக் பண்ணும் போது கொஞ்சம் கரை ஆகிடுச்சு.. அதான் தண்ணி போட்டு துடைச்சேன்.. காஞ்சிடும் ", என்றுக்கூற….
ஹரிக்கு, ஒரு நிமிடம் மிதிலா என்ன சொல்கின்றாள் என்றே புரியவில்லை..
சில வினாடிகளுக்கு பிறகே புரிந்தது..
அவள் சொன்ன விளக்கத்தில்.. அவன் முகம் தான் இஞ்சி தின்ன குரங்கு போல் ஆகி விட்டது…
‘என்ன இது இவளுக்கு விவரம் ஏதாச்சும் இருக்கா இல்லையா.. எப்படி குழந்தை பெத்தா.. ஒன்னும் புரியலையே’ என்று நினைத்தான் மனதில்…
பிறகு அவள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் தன் எண்ணம் புரியவில்லை போல்.. ‘அந்தளவிற்கு வெகுளியா இருக்கா’ என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்..
அவனுடைய மொத்த உணர்வுகளையுமே, மிதிலா தன் ஒற்றை விளக்கத்தில், வடிய வைத்து விட்டு இருந்தாள்…
தன் தலையை குலுக்கிக்கொண்ட ஹரி, நேரம் ஆவதை உணர்ந்து, "ஓகே பேபி… வா மாம்கிட்ட நம்ம விஷயம் சொல்லிட்டு மேரேஜ் பத்தி பேசலாம்", என்று அழைக்க..
உடனே மிதிலா, " இல்லை டாக்டர்.. பிளீஸ் நீங்க தனியாவே பேசுங்க.. எனக்கு பயமா இருக்கு.. நான் ஆன்ட்டிகிட்ட குழந்தையைத் தூக்கிட்டு வீட்டுக்கு போறேன்னு வேற சொல்லிட்டு வந்தேன்.. நான் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. ப்ளீஸ் டாக்டர் நீங்க போயிட்டு பேசுங்க.. பேசிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க.. நாங்க கிளம்புறோம்.. பாப்பா கார்லயே தூங்கிட்டா பிரச்சினை.. ப்ளீஸ்..", என்று கெஞ்ச...
அவளின் பயம் புரிந்த ஹரி,
"சரிடா ஒன்னும் பிரச்சனை இல்லை.. நானே பேசறேன்.. தேவையில்லாமல் பயப்படாத..", என்றப்படி எழுந்தவன்..
மிதிலாவையும் கைப்பற்றி எழுப்பிவிட்டு.. குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான்..
மிதிலா வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்…
அவளின் மனம் அன்னபூரணி என்ன சொல்வாரோ.. ஆதித்யன் அண்ணாவிடம் எப்படி இதைப்பற்றி பேசுவது… ‘தப்பா நினைச்சுப்பாங்களா..’ என்று யோசித்தப்படியே கிடந்தது…
ஹரி அன்னபூரணியின் அறைக் கதவை, லேசாக தட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான்…
அவர் அமைதியாக கட்டிலில் படுத்து இருந்தார்..
அவரை நெருங்கிய ஹரி, அவர் அருகில் அமர்ந்து, "மாம் என் மேல கோபமா.. சாரி மாம்.. நீங்க என்னோட நல்லதுக்காக தான் பேசனீங்க.. நான் தான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்..", என்றான்..
உடனே எழுந்து அமர்ந்த அன்னப்பூரணி "ஐயோ இல்லைக் கண்ணா.. உன்மேல போயிட்டு எனக்கு கோபம் வருமா.. வருத்தம் தான் கண்ணா.. உன் மனசை புரிஞ்சுக்க முடியலை.. ஒருவேளை உங்க அப்பா இருந்து இருந்தா, கேட்டு சரிபண்ணி இருப்பார்." என்றார்..
அதில் ஹரி, "சாரி மாம்.. மேரேஜ் பத்தி தான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்", என்றுக்கூற…
அன்னபூரணியின் முகம் ஸ்விட்ச் போட்டது போல் பளிச்சென்று மாறியது…
"சொல்லு கண்ணா", என்றார் ஆர்வமாக…
ஹரி பொறுமையாக முதல் நாள் மிதிலாவை ட்ரீ ஹவுஸில் சந்தித்தது முதல்.. இன்று ட்ரீ ஹவுஸில் பேசியது வரை.. ஒரு அன்னையிடம் எந்த அளவிற்கு சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லிவிட்டான்..
மிதிலாவின் மறுப்பு.. பயம்.. குற்ற உணர்வு .. என்று அனைத்தையுமே சேர்த்து சொல்லிவிட்டான்..
ஹரி சொல்ல சொல்ல, அன்னபூரணியின் முகத்தில் பல வகையான உணர்வுகள் வந்து போனது..
முதலில், எங்கோ ஒரு மூலையில், சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மைதான்..
ஆனால் ஹரியின் ஆசை அதை தகர்த்தது..
மறுகணமே மிதிலாவின் நற்குணங்களும், ஹரியின் வயதும், அவனின் விருப்பமும், சந்தோஷமும் அவர் கண்முன் வர, மனதை தயார் படுத்திக்கொண்டார்..
மிதிலாவின் குணத்திற்கு அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவர் பல நாள் கடவுளிடம் கோரிக்கை வைத்து இருக்க.. அதை கடவுள் அவர் மகன் மூலமே நிறைவேற்ற நினைக்க… இதுதான் தேவனின் முடிவு போல என்று நினைத்தவர்…
"அம்மாக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணா.. நாளைக்கே மிதிலா கிட்ட நான் பேசறேன்.. ஐயரை பார்த்து நாள் குறிக்கனும்..", என்று அடுத்தடுத்து பேச ஆரம்பித்து விட்டார்…
மறுநாள் மதியம் மிதிலாவை குழந்தையுடன் தங்கள் வீட்டிற்கு வரச்செய்து.. அவளுடன் பேசிவிட்டு.. மாலை அனைவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்று, அர்ச்சனை செய்துவிட்டு, ஐயரிடம் திருமண நாளையும் குறித்துக் கொண்டு வரலாம், என்று முடிவு செய்து, மிதிலாவிடமும் அன்னப்பூரணி கூறச்சொல்லி ஹரியிடம் கூறிவிட்டார்…
அன்று இரவு ஹரி, மிதிலாவிற்கு ஃபோன் செய்து அன்னபூரணியின் சம்மதத்தை கூற…
அவ்வளவு நேரமும், அடிவயிற்றில் நெருப்பை கட்டியப்படி இருந்த, மிதிலாவிற்கு அப்பொழுது தான் நிம்மதி ஆனது…
இருவருக்குமே, அன்றைய இரவும், விடியலும் நிம்மதியாக கடந்தது..
காலை ஹரி, எழுந்து வந்ததும், அன்னபூரணி அவனை தயாராகி சென்று, மிதிலாவிற்கு பட்டுப்புடவை மற்றும் கோவிலிற்கு செல்ல வேண்டிய சிறப்பு பொருட்களையும் வாங்கிக் கொண்டு வரச்சொன்னார்.
ஹரியும் விடுமுறை தினம் என்பதால் சரியென்று கிளம்பினான்..
சியாட்டிலில் இருந்த RMKV-க்குள் சென்ற ஹரி, கடையில் இருந்த அனைத்து புடவைகளையும் பார்த்து முடித்தவன், அதிலிருந்து அவனுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டு, அங்கேயே மிதிலாவிற்கு தேவையான ரெடிமேட் பிளவுஸ் போன்றவற்றையும் அன்னபூரணி சொன்ன அளவில் எடுத்து கொண்டவன்..
அடுத்து மகிழ்மதிக்கும், அதே நிறத்தில், மென் பட்டில் அழகான கவுன் ஒன்றை பார்த்து வாங்கியவன்…
சாஃப்ட் சில்க் பிரிவிற்கு சென்று அன்னபூரணிக்கும் பிடித்த வகையில் புடவை வாங்கியவன், மேலும் அவர் தினமும் வீட்டில் கட்டும் புடவை வகையிலும், ஒரு ஐந்து எடுத்தவன்.. பணம் செலுத்தி வாங்கி கொண்டு.. திருப்தியாக வீடு திரும்பினான்..
மதியம் 3 மணி அளவில், மிதிலா ஹரியின் வீட்டிற்கு வந்து டோர் பெல்லை அழுத்தினாள்…
மிதிலாவிற்கு என்றும் இல்லாத அளவிற்கு பதட்டம், அன்று வந்து சேர்ந்து கொண்டது..
அன்னபூரணிக்கு, தங்களின் காதல் விஷயம் தெரியும் என்பதே, அவளுக்கு மிகவும் பதட்டமாக இருந்தது..
பெற்றோர் யாரும் அற்று, அவளின் கல்யாண விஷயத்தை, அவளே நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய சூழலை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்..
ஹரி தான், வந்து கதவை திறந்தான்.. அன்னபூரணி ஹாலில் உட்கார்ந்து இருந்தார்..
ஹரி கதவை திறந்ததும், மிதிலாவின் முகத்தை பார்த்த ஹரி.. "ஹே என்ன பேபி, மதியம் வர சொன்னா.. நீ இவ்வளோ லேட்டா வந்து இருக்க.. லஞ்சுக்கு இங்கே வந்து இருக்கலாம் இல்ல டா.. முகம் ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கு..", என அவள் கழுத்தை தொட்டு பார்க்க…
மிதிலா, "இல்ல டாக்டர் கொஞ்சம் வீட்ல இருந்த வேலையை இன்னைக்கு முடிச்சேன்… வரும் போது ட்ராஃபிக் வேற.. அதான் டாக்டர்.. வேறெதுவும் இல்லை", என்றாள்..
ஹரி, "ஒகே ஓக்கே பேபி, நீ உள்ள வா ஃபர்ஸ்ட்", என்றவன் மகிழ்மதியை தூக்கிக்கொண்டு, மிதிலாவின் கைப்பற்றி ஹாலுக்கு அழைத்து வந்து அன்னபூரணியின் முன்பு நிறுத்தினான்…
மிதிலாவிற்கு, அன்னபூரணியின் முன்பு ஹரியின் நெருக்கமும், பேபி என்ற அழைப்பும்.. இன்னும் பதட்டத்தை கூட்டியது..
அன்னபூரணியிடம் எப்பொழுதும் சகஜமாக பேசும் மிதிலா அன்று வாயே திறக்கவில்லை..
அன்னபூரணி தான் மிதிலாவின் கையை பற்றி அருகில் உட்கார வைத்துக் கொண்டு.., "போ மிதுமா உன்கிட்ட நான் இனி பேச மாட்டேன்.. நீ ஏன் என்கிட்ட சொல்ல வேண்டாம் சொன்ன... என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு பயமாவா இருக்கு.. முன்னாடியே நீ சொல்லி இருந்தா.. ஆபரேஷனுக்கு முன்னாடியே ஹரிக்கு கல்யாணத்த பண்ணிட்டு இருப்பனே டா.. அப்பவே நீயும் இங்க வந்துட்டு இருக்கலாம் இல்ல.. இவ்வளவு நாள், நாம பிரிஞ்சு இருக்க வேண்டியதே இல்லை.. பரவால்ல அட்லீஸ்ட் இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்து, ரெண்டு பேரும் என்கிட்ட பேசுனீங்களே, அதுவே போதும்.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.. எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடனும், அப்பதான் எனக்கு நிம்மதி" என்றுவிட்டு..
ஹரியை, சென்று மிதிலாவிற்கும் குழந்தைக்கும் சாப்பிட ஏதாவது எடுத்து வரச் சொன்னார்…
அன்னபூரணியின் பேச்சில், மிதிலாவும்.. ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி விட்டாள்…
மாலை ஐந்து மணியளவில்,
மிதிலா, அன்னபூரணியின் உதவியுடன் அவர் அறையில் புடவை கட்டித் தயாரானாள்..
ஹரி, குழந்தையை தான் தயார் செய்வதாக கூறிவிட்டு, அவன் அறைக்கு தூக்கி சென்று விட்டான்..
மிதிலாவிற்கு, ஏனோ மனம் சங்கடமாகவே இருந்தது.. அன்னபூரணி மற்றும் ஹரியின் அன்பு புரிந்தாலும், சட்டென்று அவளால் புதிய சூழலில் ஒன்ற முடியவில்லை..
அதிலும் பல முக்கிய விஷயங்களை அவள் மறைத்து இருக்கின்றாள்…
என்றுமே, அவள் அதை எதையுமே சொல்லும் நிலையிலும் இல்லையே..
அதை நினைத்தாலே, அவளின் இதயம் வெடித்து விடும் அளவிற்கு துடித்தது…
ஆதித்யன் அண்ணாவிடம் சீக்கிரம் பேச வேண்டும்.. கடவுளே எப்படி சொல்வது.. எனக்கு மட்டும் ஏன் இப்படி.. என்று நினைத்து கொண்டாள்…
அன்னபூரணி அவரின் சில நகைகளை மிதிலாவிற்கு.. அவள் மறுக்க மறுக்க போட்டு விட்டார்..
பிறகு அன்னபூரணி , அவர் தயாராகி விட்டு வருவதாக சொல்லி மிதிலாவை ஹாலிற்கு அனுப்பி விட…
ஹாலில் ஹரி குழந்தையுடன் உட்கார்ந்து இருந்தான்..
குழந்தையின் பட்டு கவுனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மிதிலா, தன் புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு..
ஹரியை நோக்கி விரைவாக நடந்தாள்…
மிதிலாவின் கொலுசொலியில் திரும்பிய ஹரி, மூச்சு விடவே மறந்து போனான்…
தாமரை நிற பட்டு புடவையில், ஒரு இளம் தாமரை பூவே, தன்னை நோக்கி வருவது போல் இருந்தது ஹரிக்கு…
அதிலும் மிதிலாவின் பால் வண்ண நிறத்திற்கு, புடவையின் நிறம் அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது..
காதில் பெரிய கம்மல், கழுத்தில் நெக்லஸ், கைகளில் வளையல்கள் என்று முற்றிலும் வித்தியாசமாக அன்று ஹரியை மயக்கினாள்..
எப்பொழுதும், எந்தவொரு ஒப்பனையும் இன்றி, வேலை செய்த களைப்பு முகத்தில் பரவி இருக்கும், தோற்றத்தில் இருக்கும் மிதிலாவிடமே, அவன் மயங்கி கிடந்தான்..
இன்றோ சொல்லவுமா வேண்டும்…
"ஓ காட்.. மை கிளாசிக் பியூட்டி, டுடே யு ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ் பேப், யு ஆர் கில்லிங் மீ", என்று அவன் வாய் முணுமுணுத்தது...
மிதிலாவோ ஹரியை சற்றும் கவனிக்காமல், "வாவ் பாப்பாவுக்கு ட்ரஸ் சூப்பரா இருக்கு டாக்டர்.. எங்க வாங்கனீங்க… அச்சோ அம்முக்குட்டி அம்மா கிட்ட வந்து முத்தம் வாங்கிக்கோங்க", என்றவள்…
ஹரியை நெருங்கி குனிந்து குழந்தையை தூக்கினாள்..
குழந்தையும் மிதிலாவிடம் சிரித்தப்படி தாவ..…
அப்பொழுது ஹரியின் பொறுமையை சோதிக்கும் வகையில் மிதிலாவின் இடைப் பிரேதேசம்… பளிச்சென்று அவன் கண்முன்னே மின்னியது…
ஏற்கனவே ஒருமுறை அவன் உணர்ந்த அதன் மென்மை, இத்தனை நாட்கள் கடந்தும் மறக்காது, அவனின் ஞாபகத்தில் வந்து, உடலை தகிக்க செய்தது…
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, மிதிலாவை ஏறிட்டு பார்த்தான்…
அவளோ குழந்தையை தூக்கி, முத்தம் வைத்து கொஞ்சிக்கொண்டே.. பக்கமாக நகர்ந்தாள்…
அதில் ஹரி, "கொஞ்சமாச்சும் இந்த கிரேசி என்னை பார்க்கிறாளா பாரேன்… கடவுளே இவளை வச்சிட்டு", என்று பொறும…
மறுவிநாடி, புடவையின் முன் கொசுவத்ததில், கவனம் இன்றி கால் வைத்த மிதிலா, அடுத்த அடியில் தட்டி முன்பக்கம் குழந்தையுடன் சரியத் தொடங்க..
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஹரி, சட்டென்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது…
மிதிலாவின் இடுப்பை பிடித்து, அவள் கீழே விழாமல் நிறுத்தி இருந்தான்…
கண்ணா லட்டு தின்ன ஆசையா மொமண்ட்…
"நல்ல வேளை… பாப்பாவோட விழுந்து இருப்பேன்", என்று மிதிலா சுதாரித்து விலக முற்பட…
ஹரியின் கை அவளின் இடுப்பில், இன்னும் அழுந்தி பதிந்து அவளை நகர விடாது தடுத்தது...
மிதிலா அதிர்ந்து திரும்பி ஹரியின் முகத்தை பார்க்க…
அவளை பார்த்து குறும்புடன் கண் அடித்தவன்…
தன்னுடைய சேட்டையை தொடங்கிவிட..
"அய்யோ டாக்டர் கூசுது.. பிளீஸ்.. அய்யயோ ", என்று துள்ளி நெளிந்தவள்..
அவன் கையை எடுக்க முயன்று… எடுக்க முடியாமல்.. துள்ளி அவன் மடி மீதே விழுந்தாள் குழந்தையுடன்..
அந்நொடி சரியாக அன்னபூரணி, "என்ன கண்ணா இங்க சத்தம்.. மிதுமா என்ன ஆச்சு", என்று கேட்டுக்கொண்டே.. ஹாலிற்கு வர..
சட்டென்று ஹரி, மிதிலாவை தூக்கி சோபாவில்.. அருகில் அமர வைத்து கொண்டவன்.
அன்னப்பூரணியிடம், "சும்மா பேபி கூட ஃபன் பண்ணிகிட்டு இருந்தோம் மாம்..", என்றவன், குனிந்து மிதிலாவின் காதில் "எந்த பேபினு சொல்லலையே..", என்று கிசுகிசுக்க…
மிதிலா, "போங்க… ஏன் இப்படி பண்றீங்க… எனக்கு ஜுரம் வர மாதிரி இருக்கு…", என்று சினுங்க…
ஹரியும் அவளை போலவே சினுங்கியப்படி… "எனக்கும் தான்.. கையெல்லாம் திடீர்னு குளிருல ஷிவர் ஆச்சு… அதான் கொஞ்சம் சூடாகலாம்னு பிடிச்சேன்…", என்றான்..
கிருஷ்ணரின் பெயரை வைத்துக்கொண்டு இருப்பவன், எப்படி சும்மாகவே இருப்பான்..
மிதிலா, அவனை பார்த்து முறைத்து, "இருங்க ஒருநாள் ஃபுல்லா உங்களை கிச்சுகிச்சு பண்ணி கதற விடறேன்"… என்றாள்…
அதில் ஹரி, "இட்ரெஸ்டிங்… வெயிட்டிங் பேபி", என்று கண்ணடிக்க..
அன்னபூரணி மிதிலாவை அழைக்க…
அவள் எழுந்து சென்று விட்டாள்…
அடுத்த சில நிமிடங்களில், அனைவரும் ஒன்றாக, ஒரே காரில், கோவிலிற்கு புறப்பட்டனர்..
அர்ச்சனை முடித்துவிட்டு ஐயரிடமும் கல்யாண நாளை பார்த்து குறித்தனர்.
ஐயர் ஜாதகம் கேட்க, அன்னபூரணி, இது காதல் திருமணம்.. இனி ஜாதகம் பார்க்க தேவையில்லை, என்று மறுத்துவிட்டார்..
ஐயர், 5 வாரம் கழித்து வரும் முகூர்த்த தேதி ஒன்றை, குறித்து கொடுத்தார்..
பிறகு அங்கேயே அதே ஐயரை முன்பதிவு செய்துவிட்டு..
கல்யாணத்திற்கு என்னென்ன தேவை என்றும்.. எங்கே எல்லாம் ஆர்டர் கொடுக்கலாம் என்றும்.. கோவிலில் இருந்த மேனேஜரிடமே கலந்தாலோசித்து விட்டு.. இந்து முறைப்படி திருமணம் செய்யும் காண்ட்ராக்டரையும் பிடித்து அனைத்தையும் பேசி விட்டனர்…
திருமண வேலையே சுலபமாக முடிந்து விட்டு இருந்தது…
திருமணத்திற்கு மணமகனும் மணமகளும் சென்றால் போதும்..
உறவினர்கள் யாரும் இங்கு இல்லாததால், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும், அழைப்பு விடுக்க வேண்டும்.
வேலை முடிந்து அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்…
மிதிலாவின் மனதிலோ பல்வேறு சிந்தனைகள், முகமே சுருங்கிவிட்டு இருந்தது..
வரும் வழியிலேயே குழந்தை தூங்கி விட்டு இருந்தாள்...
ஹரி, குழந்தையை அன்னபூரணியின் அறையில் படுக்க வைத்துவிட்டு அன்னபூரணியிடம், "மாம் நீங்கள் பேபி கூட இருங்க, நான் மிதிலா கூட கொஞ்சம் நேரம் கார்டன்ல உட்கார்ந்து பேசிட்டு வரேன்", என்றுவிட்டு மிதிலாவை தோளுடன் அணைத்து நடத்திக்கொண்டு தோட்டத்திற்கு வந்து விட்டான்..
முதலில் உட்கார்ந்த ஹரி, மிதிலாவை இழுத்து தன் மடியில் அமர வைத்துக்கொண்டு, மிதிலாவின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பி,
"ஏன்டா பேபி ரொம்ப ஒரு மாதிரியா இருக்க.. நேரம் ஆக ஆக உன் முகமே ஒருமாதிரி இருக்கே.. ஹானஸ்ட்டா என்னன்னு சொல்லு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.. ஏன் உனக்கு கல்யாணம் பண்ண பிடிக்கலையா.. பயமா இருக்கா.. வேற என்ன உன் மனசுல இருக்கு சொல்லுமா.. கவுன்சிலிங் போகலாம்", என்றுக்கேட்க…
ஹரி, திருமணம் என்றதும், ஒருவேளை மிதிலா தன் முதல் திருமண வாழ்க்கையை பற்றி நினைத்து வேதனை படுகின்றாளோ.. இல்லை எவ்வாறு தன்னுடன் மீண்டும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று மனதில் சஞ்சலம் கொள்கின்றாளோ என்று நினைத்தான்…
ஆனால், அவளின் சஞ்சலங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டவை ஆகிற்றே..
ஹரி சொன்ன எதையும் தன் காதிலேயே வாங்காத மிதிலா, தன் எண்ணத்துடன் போராடி தோற்று..
ஹரியின் கழுத்தை சுற்றி தன் கைகளால் வளைத்து பிடித்தவள்.. அவன் நெஞ்சில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..
தாய் மடி கொஞ்சும் சேயாய்…
அதில் ஹரி தான் இன்பமாய் அதிர்ந்து போனான்..
அவனின் கேள்விக்கு, அவளின் பதிலாய், இந்த நெருக்கத்தை எடுத்துக்கொண்டான்..
அவளின் செய்கை ஒவ்வொன்றும் ஹரியை விஷப் பரிட்சைக்கு தள்ளியது.. புடவையில் வேறு கொள்ளை அழகாக இருந்தாள்.
எப்படியோ சமாளித்தவன்,
"சொல்லுடா பேபி.. உனக்கு அப்ப வேற என்ன வருத்தம்...", என்று கேட்க..
மிதிலா, "அதுவந்து கல்யாணம்னு சொன்னதுல இருந்து ஒரு மாதிரி இருக்கு டாக்டர்… மனசெல்லாம்.. அதிலேயும் என்னை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாதே…. நான் எதுவும் சொல்லலையே ", என்று சிறு குரலில் அவள் பேச....
அவளை தடுத்த ஹரி,
"ஏன்டா உன்னை பத்தி என்ன தெரியனும் எனக்கு... அன்னைக்கே தான் சொல்லிட்டனே உன்னோட பாஸ்ட் எதுவா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை..
என்னோட பிரசன்ட் அன்ட் ஃபியூட்டசர் நீ தான்.. அதே மாதிரி கண்டிப்பா உனக்கும் நான் தான் இனி இருப்பேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. சோ எதை பத்தியும் நீ கவலைப்படாதே..
எப்பவும் போல தான் இருக்க போறோம்.. நீ ரிலாக்ஸ்டா.. ஃபிரியா இரு..
இனி நீயும் பாப்பாவும் இங்கேயே என்கூட இருப்பீங்க.. நீயும் என்னை மிஸ் பண்ண மாட்ட.. இப்போதைக்கு நமக்கு அது போதும்.
மாம் தான் உனக்கு பிரெண்ட் ஆச்சே குட்டிமா.. அப்புறம் என்ன டா கஷ்டம் உனக்கு… ஜாலி தான்னே", என்று சமாதானம் செய்ய....
மிதிலா, "எல்லாம் புரியுது டாக்டர்.. ஆன உள்ளுக்குள்ளே கொஞ்சம் திக் திக்னு இருக்கு.. நீங்க எப்பவும் என்னைவிட்டு போக மாட்டீங்க தானே.. அதே மாதிரி தான் மகிழ்மதி என்னோட பொண்ணு.. அவளை நான் எப்பவும் எந்த காரணத்துக்கும் பிரிய மாட்டேன்.. ", என்றாள்….
அதில் ஹரியின் புருவங்கள் சுருங்கியது…
"ஏன் இப்படி நினைக்கிற.. கல்யாணம் பண்ணின பிறகு குழந்தையை ஹோம்ல விட சொல்லுவேன்னு நினைக்கறியா.. இல்லை உன்னை யூஸ் பண்ணிட்டு த்ரோ பண்ணிடுவேன்னு நினைக்கறியா.. இல்லை உன்னை எதாவது செக்கெண்ட் மேரேஜ்னு குத்தி பேசுவேன்னு நினைக்கறியா.. என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா.. உனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்க பயம்னா சொல்லு.. ஸ்டாப் பண்ணிடலாம்… நான் மாம் கிட்ட பேசறேன்..", என்றான்…
மிதிலா, "ஹையோ.. நீங்க வேற.. நான் எப்ப அப்படி சொன்னேன்.. என்னை விட உங்களை நான் அதிகமா நம்பறேன்.. உங்களுக்கு தான் நான் எதுலையும் மேட்ச் இல்லை.. அதைவிட திடீர்னு மேரேஜ்னதும் ஒரு மாதிரி இருக்கு.. நான் ஒன்னு நினைச்சு ஃபில் பண்ணா நீங்க ஒன்னு சொல்லி.. என்னை இன்னும் டென்ஷன் பண்றீங்க.. நானே பாவம்", என்று முகத்தை அப்பாவியாக வைத்தப்படி மிதிலா சினுங்க..…
ஹரியின் பார்வை அவளின் சுருங்கிய கண்களிலும்.. குவிந்த இதழ்களில் படிந்தது..
நொடியில் அவளின் சிறுபிள்ளை தனமான பாவனையில், காந்தமாய் இழுக்கப்பட்டவன்…
"சாரி பேபி.. சரி விடு அந்த பேச்சை விட்டுடலாம்.. சொல்லு உனக்கு இந்த சேரி பிடிச்சு இருக்கா… நான் தான் செலெக்ட் பண்ணேன்", என்று கேட்டான், அவளை மனநிலையை மாற்ற…
மிதிலா, "எஸ்.. எனக்கு எல்லா பிங்க் கலர் ஷேட்சும் ரொம்ப பிடிக்கும்… ரொம்ப அழகா இருக்கு டாக்டர்… தேங்க் யூ சோ மச்.. என்ன ஒரு கஷ்டம்னா, சேரி கட்டிட்டு, பாப்பாவ ஒருபக்கம் தூக்கிட்டும்.. ஒருபக்கம் சேரிய மேனேஜ் பண்றதும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு..", என்றவள்…
ஞாபகம் வந்தவளாய்.. பட்டென தன் இடைப்பக்கம் இருந்த புடவையின் ஓரத்தை சரிசெய்து மேல் பக்கம் இழுத்து விட தொடங்க…
ஹரியின் கரங்கள், மிதிலாவின் கரத்தின் மீது அழுத்தமாக பதிந்தது…
"எனக்கும் தான் ஒரே கஷ்டமா இருக்கு.. மேடம் இன்னைக்கு சேரில ரொம்ப செக்ஸியா இருந்து என்னை டார்ச்சர் பண்றீங்க.. அதுலையும் இந்த ஹிப் தான்.. ஈவ்னிங்ல இருந்து என்னை ரொம்ப படுத்துது", என்றவனின் கரங்கள்.. அவள் கரத்தை அழுத்தமாக பற்றி விலக்கியது…
அவன் கண்கள் நிலவொளியில் பளிங்காய் மின்னும் பெண்ணவளின் மென்னிடையில் பதிந்து கிறங்கியது..
அதில் ஹரியின் பிரௌன் நிற கண்கள் சூரியனாய் தகிக்க…
பெண்ணவள், நாணம் கொண்டு, தவிக்க..
ஆணவனின் விரல்கள் மெல்ல, பெண்ணின் மெல்லிடையில் ஊர்வலம் செல்ல….
அடிவயிற்றில் தோன்றும் உணர்வுகளால், துடித்து போனால் பெண்ணவள்…
ஹரியின் கரத்தின் மீது, அழுத்தமாய் தன் கரம் வைத்து தடுத்த மிதிலா "ஹையோ.. கூசுது.. வேண்டாம் டாக்டர்.. பிளீஸ் பிளீஸ் கையை எடுங்க..…", என்று உள்ளே சென்ற குரலில் சினுங்க..
ஹரியால் கையை நகர்த்த முடியவில்லை..
"ஹோ பேபி.. பிளீஸ்டி கையை எடு.. எப்ப பார்த்தாலும் கூசுது சொன்னா எப்படி.. இட் ஜஸ்ட் டெம்டிங் மீ டு மச் ஹனி" என்றான், தன்னுடைய உணர்வுகளை தாங்க முடியாமல்…
அவன் கரமோ பெண்ணவளின் இடையின் மென்மையில் கரைந்துக் கொண்டு இருந்தது…
மிதிலா மாட்டேன் என்னும் விதமாக தலையசைக்க…
மறுவிநாடி அவளின் இதழ்கள் ஹரியின் இதழ்களுக்குள் சிறையானது…
முதல் முறை இன்று அசைவ முத்த பாடம் ஹரி அவளுக்கு எடுத்தான்..
அதில் மிதிலாவின் தேகம் மொத்தமும் குழைய.. ஹரியின் கரத்தின் மீது அவள் கரம் கொடுத்த அழுத்தமும் காணாமல் போக…
ஆணவனின் கரம் அவனின் விருப்படி பெண்களின் இடையில் தன் பயணத்தை மெல்ல அவளுக்கே தெரியாது தொடங்கியது…
நிமிடங்கள் கடக்க…
மிக ஆழமாய் ஹரி, அவளின் அதரங்களை கொய்யத் துவங்கினான்..
மாலை முதல் அவன் உணர்வுகள் கூடிக்கொண்டே இருந்தது..
அதை முழுமையாக இப்பொழுது மிதிலாவின் உதட்டில் இறக்கிவிட்டான்..
மிதிலாவால் பேசவும் முடியவில்லை.. ஒரு இன்ச் கூட அசையவும் முடியவில்லை…
அம்முயற்சியில் தோல்வியுற்றவள்..
மெல்ல ஹரியின் கைகளுக்குள்ளே அடங்கிப்போயி இருந்தாள்.
அது இன்னும் ஹரிக்கு சாதகமாய் அமைய..
மென்மையை கையில் எடுத்து.. மயிலிறகாய் பாவையவளை வருட…
மிதிலா இப்பிரபஞ்சத்திலேயே இல்லை..
தன்னவன் கற்றுக்கொடுக்கும் புது மொழியில்.. சொர்க்கத்திற்கே சென்று விட்டாள்..
மிதிலாவின் மென் இதழ்கள், ஹரி எவ்வளவு மென்மையாய் கையாண்டும், குளிர் பிரதேசங்களில் வாழும் பலனாக, லேசாய் உதிரத்தை கசிய விட…
அதை உணர்ந்த ஹரி.. பட்டென்று தன் இதழ்களை விலக்கிக்கொண்டான்..
மிதிலாவோ தன் கண்களை இறுக மூடியப்படி, ஹரியின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு.. மாய லோகத்தில் தன்னை மறந்து சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள்..
ஹரி பிரிந்ததை கூட அவள் உணரவில்லை…
அதில் மேலும் தன்னை தொலைக்க தொடங்கிய ஹரிக்கோ…
இனியும் இங்கு தனியாக இருந்தால் ஆபத்து என்று புரிந்தது…
மெல்ல மிதிலாவின் கன்னத்தில் தட்டிய ஹரி, "ஹோய் பேபி.. என்ன தூங்கிட்டயா..", என்றான்…
அதில் அலறி அடித்துக் கொண்டு எழுந்த மிதிலா, திருதிருவென்று தனக்கு என்ன நடந்தது என்று முழிக்க….
அவளை தன் மடியில் இருந்து தூக்கி தரையில் நிறுத்தியவன், "வாடா உள்ளே போகலாம்.. லேட் ஆகிடுச்சு.", என்று அவளை தன் கை வளைவில் வைத்துக்கொண்டு நடக்க….
மிதிலா ஏதோ கீ கொடுத்த பொம்மைப்போல் அவனுடனே சென்றாள்…
ஹாலிற்குள் வந்ததும்.. குழந்தையின் குரல் கேட்டது..
"பேபி எழுந்துட்டா போல ", என்றப்படியே, ஹரி திரும்பி மிதிலாவை வெளிச்சத்தில் பார்த்தான்..
அவள் முகமே, செக்க சிவந்து, முற்றிலும் மாறிவிட்டு இருந்தது..
ஹரி, 'ரொம்ப படுத்திட்டேன் போல.. மாம் பார்த்தா என்ன நினைப்பாங்க கடவுளே…', என்று நினைத்தவன்….
"பேபி நீ கெஸ்ட் ரூம் போயிட்டு, கொஞ்சம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாடா.. நான் மாம் ரூம்ல இருக்கேன்", என்று அனுப்பியவன்..
அன்னபூரணியின் அறைக்குள் சென்றான்…
உள்ளே சென்ற மிதிலா சிறிது நேரத்தில் நிதானித்து..
நீரை வாரியடித்து, முகம் கழுவினாள்..
இன்னுமே, அவளின் தேகம் எங்கும் இன்ப அலைகள் பரவி.. அவளை நடுங்க செய்தது…
"அச்சோ..", என்று முடிந்தளவு, தன்னை சரிசெய்யத் தொடங்கினாள்..…
இடைப்பகுதியை முற்றிலும் மறைத்தப்படி புடவையையும் சரிசெய்துவிட்டு.. அன்னபூரணியின் அறைக்குள் சென்றாள்…
மறுநொடியே மிதிலாவை நிமிர்ந்து பார்த்த ஹரியின் கண்கள், அவளை ஸ்கேன் செய்ய தொடங்கியது.. சங்கோஜத்துடன்..
மிதிலாவோ வெட்கத்தில் தலையை நிமிர்த்தவே இல்லை…
இருவரின் முகமும் சிவந்து பளபளத்தது…
இதனை கவனித்த அன்னபூரணிக்கு விஷயம் புரிந்தது..
அவர், "வாடா மிது.. இந்த சின்ன குட்டி.. என்ன ஆட்டம் போடுறா பாரு", என்று அழைத்து.. அவளை அருகில் உட்கார வைத்து கொள்ள..
மிதிலாவால் என்ன முயன்றும் சகஜமாக பேச முடியவில்லை…
அவர் கேட்ட எதற்கும் அவள் பதில் கூறவில்லை..
மீறி கூறினாலும் சம்பந்தம் இல்லாத பதிலாக அது இருந்தது..
அதில், திகைத்த அன்னபூரணி…
இன்னும் முன்னாடியே, இவங்களுக்கு கல்யாண நாள், பார்த்து இருக்கனும் போலயே என்று நினைத்தார்.
மிதிலாவோ, ஹரியின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாது, குழந்தையை காரணம் காட்டி, வீட்டிற்கு கிளம்பி ஓடிவிட்டாள்…
ஹரியோ, மானத்தை வாங்கிட்டா என்று நினைத்துக்கொண்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக