உண்மை காதல் -12
அத்தியாயம்-12
திருமண நாள் குறிக்கப்பட்டுவிட்டதால்,
ஒருபுறம் மணமக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, மறுபுறம் பத்திரிகை அடித்து வந்துவிடவும், அனைவருக்கும் அழைப்பு விடுப்பது, என்று நாட்கள் பறந்து செல்ல.. இன்னும் 10 தினங்களில் திருமணம் என்னும் நிலை வந்துவிட்டு இருந்தது..
இப்பொழுதெல்லாம், வார இறுதி நாட்கள், கண்டிப்பாக, மிதிலாவிற்கு ஹரியின் வீட்டில் தான்..
அன்னபூரணியின் உடல்நிலையும், நாளுக்கு நாள், நல்ல முன்னேற்றம் தான்.
இருந்தும், மிதிலா, அவள் வரும் சமயங்களில், அனைத்தையும் முடித்து கொடுத்து விடுவாள்.
ஹரி தான், ‘இரு இரு, அப்புறம் போகலம், கொஞ்சம் நேரம் பேபி’ என்று இரவு வரை, அவளை ஒவ்வொரு நாளும் பிடித்து வைத்துக்கொள்வான். அவள், என்ன செய்வது என்று தெரியாது, எதையாவது இழுத்துப் போட்டு, செய்துக்கொண்டு இருப்பாள்.
நாட்கள் செல்லச்செல்ல, எதற்கெடுத்தாலும் அவள் வேண்டும் அவனுக்கு. ஏதாவது ஒரு சாக்கை இழுத்து பிடித்து, அவளை தினமுமே வர வைத்துவிடுவான்.
அவள் என்ன சொன்னாலும், அதற்கு ஏற்றப்போல் பேசி, அவளை வரேன் என்று கூற வைத்துவிடுவான்.
அவனின் பேச்சு திறமைக்கு முன், மிதிலா எம்மாத்திரம்.
பலன், ஹரியால் மிதிலாவிற்கு, அந்த மாதம் இறுதியில், பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டு இருந்தது..
என்ன செய்வது, எவ்வாறு அடைப்பது என்ற பயம் அவள் மனதை கவ்வ.. தவித்துப்போனாள்.
ஹரியிடம் கேட்க ஒரு நொடி ஆகாது, ஆனால் மிதிலாவாள் ஹரியிடம் கேட்கவே முடியவில்லை..
என்ன முயன்றும், கேட்க வாயே வரவில்லை அவளுக்கு..
தன்னைக் குறித்து என்ன நினைப்பார்களோ, தன்னிடம் ஒன்றும் இல்லை, என்று பரிதாபப்படுவார்களோ, என்றெல்லாம் நினைத்து அஞ்சினாள்..
பலன், அந்த ஒருவாரமாகவே மிதிலாவின் முகமே சரியில்லை..
ஹரி அதை கவனித்து கேட்டபோது எல்லாம்.. பெற்றோர் நினைவு என்று சமாளித்து விடுவாள்..
அன்று சனிக்கிழமை, ஹரி விடுமுறையில் வீட்டில் இருக்க, மருத்துவமனையில் இருந்து வந்த, ஒரு முக்கிய அழைப்பை எடுத்து பேசிவிட்டு, தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
வந்தவன் பார்த்தது, குழந்தை தனியாக, படியில் ஏற முயற்சி செய்துக்கொண்டு இருப்பதை தான்,
அதில் பதறியவன், அவளிடம் பதமாக பேச்சுக் கொடுத்தப்படியே, இறங்கி, பத்திரமாக தூக்கிச்சென்று, அன்னபூரணியிடம் சொல்லி ஒப்படைத்துவிட்டு, 'எங்கே போனா இவ.. பாப்பாவ விட்டுட்டு..', என்று தேடி கொண்டு வெளியே வந்தான்..
மிதிலா அவர்களின் வீட்டில், தோட்டத்தில் திரும்பி நின்று, ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தாள். "இல்லைண்ணா, போனவாரம் கொஞ்சம் உடம்பு முடியலை, அதனால் தான் கடைக்கு வேலைக்கு போகலை, சம்பளம் பிடிச்சிட்டாங்க, என்ன பண்ணன்னு தெரியலண்ணா, அதான் உங்களுக்கு ஃபோன் போட்டேன், இன்னைக்கு தான் லாஸ்ட் நாள்ண்ணா, அபார்ட்மெண்டுக்கு ரென்ட் பே பண்ண, இருந்ததை பாப்பாக்கு ஃபீஸ் கட்டிட்டேன்,
லோனும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும்னு சொல்லிட்டாங்க.. சாரிண்ணா", என்று சங்கடமாக பேசிக்கொண்டு இருக்க..
அந்தப்புறம் இருந்து ஆதித்தியன், "என்னடா மிதிலா, உடம்புக்கு என்ன ஆச்சு.. ஏன்டா முன்னாடியே என்கிட்ட சொல்லலை", என்று அவளை திட்டிவிட்டு..
"இப்பவே பணம் அனுப்புறேன் மிதிலா.. இன்னைக்கு சாட்டர்டே சீக்கிரம் பேங்க் கிளோஸ் பண்ணிடுவாங்க..
நான் உடனே டிரான்ஸ்பர் பண்றேன்.. நீ போய் எடுத்துக்கோ.. அப்புறம் வந்து கால் பண்ணுமா எனக்கு.. இனி எதுனாலும், உடனே சொல்லிடுடா.. உனக்கு நாங்க இருக்கோம், எப்போவும்.. உனக்கு உண்மையாவே நான் அண்ணன் தான்டா, சும்மா பேருக்கு இல்ல.. உன் மனசுல அதை முதலில் பதிய வைமா " என்றுவிட்டு, வருத்தமாக அவன் ஃபோனை வைத்துவிட..
மிதிலா, ஹரி அங்கு வந்ததையோ, திரும்பி சென்று விட்டதையோ, கவனிக்கவில்லை..
அவள் ஃபோனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவன், உடனே உள்ளே வந்துவிட்டு இருந்தான்.
அவள் பேசியதில், கொஞ்சம் மட்டும் அவன் காதில் விழுந்திருக்க, ‘எப்ப இந்த பேபிக்கு உடம்பு சரியில்லாம போச்சு..
நல்லா தானே இருந்தா.. ஏன் என்கிட்ட சொல்லல..
யார் அந்த அண்ணா’, என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க..
உள்ளே வந்த மிதிலா, "கொஞ்சம் அவசரமான வேலை, நான் கிளம்பறேன் டாக்டர்", என்றுவிட்டு..
விடுவிடுவென்று, அன்னபூரணியின் அறைக்குச் சென்று, அவரிடமும் சொல்லிவிட்டு குழந்தையுடன் புறப்பட்டு ஓடி விட்டாள்…
மிதிலாவின், அபார்ட்மெண்டில், வாடகை பணம், எப்பொழுதும் செக்காக தான் கொடுக்க வேண்டும்.. அதனால் தான் பேங்க் மூடுவதற்கு முன்பு ஓடிவிட்டாள்.
அப்பொழுது வெளிவந்த அன்னபூரணி, ஹரியிடம்,
"பாவம் இந்த பொண்ணுக்கு ரெஸ்டே இல்லை கண்ணா.. இப்ப தான் வேலை எல்லாம் முடிச்சா.. கொஞ்சம் உட்காருனா, அதுக்குள்ளே பேங்குக்கு கிளம்பிட்டா..
குழந்தையும் வேற தூக்கிட்டு போயிட்டா.." என்றவர், ஞாபகம் வந்தவராக..
"ஹரி கண்ணா.. நான் ஹாஸ்பிடல் போகும் முன்னே, உன்கிட்ட வீட்டு செலவுக்கு யூஸ் பண்ற கார்டு கொடுத்து, வீட்டு செலவுக்கு வேண்டிய பணத்தை cashஆ எடுத்து வரச் சொல்லி இருந்தேனே.. அதை பத்தியே மறந்திட்டேன் பாரு.. நீ அந்த கார்ட் தானே, வீட்டு செலவுக்கு யூஸ் பண்ற..?", என்று விசாரிக்க..
ஹரி, "இல்லை மாம், இப்ப எல்லாமே மிதிலா தான், அவ கடையிலேயே இருந்து வாங்கிட்டு வந்துடறாளே, சோ நான் உங்க கார்ட் யூஸ் பண்ணவே இல்லை", என்றான்.. சாதாரணமாக…
அதில் அதிர்ந்த அன்னபூரணி, "என்ன கண்ணா சொல்ற.. அப்ப மிதிலாக்கு நீ எதுவும் பணம் கொடுக்கலையா இதுவரை", என்றார் கேள்வியாக.
ஹரி, "இல்லை மாம்.. ஏன்..?", என்றான்.
அன்னபூரணி, "அய்யோ கண்ணா.. என்ன நீ”, என்று அவனை கடிந்தவர், “அவ கிட்ட பணம் இல்லாம தானப்பா நம்ம கிட்ட வீட்டு வேலை செய்ய வந்தா.. பாவம் கைக் குழந்தை வச்சிகிட்டு காசு இல்லாம என்ன கஷ்டப் பட்டாளோ தெரியலை.. போ ஹரி.. வாரா வாரம் எல்லா வீக் எண்டும் முழுக்க, அவ எக்ஸ்ட்ரா வேலை பார்த்தா தான்.. அந்த மாசமே ஓட்ட முடியும்ன்னு என்கிட்ட ஆரம்பத்துல சொல்லி இருக்கா பா.. அவளுக்கு கொடுக்க தான் உன்னை கேஷ் எடுத்துட்டு வர சொல்லி இருந்தேன்", என்றார் வேதனையுடன்…
அதைக்கேட்ட ஹரிக்கு, இதயமே நின்றுவிடும் போல் ஆனது…
அன்னபூரணி, "முதல்ல மிதிலா கிட்ட போய் பேசிட்டு வா ஹரி… கிட்டத்தட்ட பாக்க போனா ரெண்டு மாசமா, அவ பணத்துக்கு என்ன பண்ணா தெரியல கண்ணா.. குழந்தை முகமே அதான் ஒரு வாரமா சரியில்ல போல.. நான் கவனிச்சு கேட்டதுக்கு, கொஞ்சம் தலைவலியா இருக்கு ஆன்ட்டினு சொல்லிட்டா.. கடவுளே கடைசில எப்படி பணம் கேட்கிறதுன்னு தெரியாமல் தான் முழிச்சிட்டு இருந்து இருக்கா.. இது தெரியாம நாம இருந்துட்டோம் பாவம்.. அவ கஷ்ட காசுல்ல வேற சாப்பிட்டோமே…", என்றார் வேதனையாக…
கேட்க கேட்க ஹரிக்கு தான் எவ்வாறு உணர்கிறோம் என்றே தெரியவில்லை…
தன்னவளை தான் ஒழுங்காக கவனிக்கவில்லையே.. என்று வேதனையானவன்..
உடனே, மிதிலாவிற்கு மெசேஜ் செய்தான்.. அவளுடைய வீட்டு அட்ரசை அனுப்ப சொல்லி..
மிதிலாவும், லோகேஷன் ஷேர் செய்து விட்டு.. ‘ஏன்??..’ என்று கேட்டிருந்தாள்..
ஹரி, ஒரு முக்கியமான விஷயம், நேரில் சந்திக்கலாம் பேபி என்று மட்டும் மெஸேஜ் அனுப்பியவன்…
அன்னபூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்…
மிதிலா பேங்கில் இருந்து, அவள் அப்பார்ட்மெண்ட் வந்து அடையும் முன்பே, அங்கு சென்று விட்டு இருந்த ஹரி..
"ஐயம் வெய்டிங் ஃபார் யு ", என்று.. அவள் வீட்டின் முன்பு நின்று கொண்டு.. வீட்டின் எண் தெரியும் படி.. ஒரு செல்ஃபி எடுத்து மிதிலாவிற்கு அனுப்பிவிட்டு காத்து இருந்தான்..
இதுவே முதல் முறை மிதிலாவின் இல்லத்திற்கு ஹரி வந்து இருப்பது..
சிறிது நேரத்தில், குழந்தையை தூக்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்த மிதிலா..
"வாங்க டாக்டர் உள்ளே வாங்க.. ", என்றப்படி வீட்டை திறந்து உள்ளே அழைத்துச் சென்றாள்..
ஒரு ஹால் மட்டுமே இருக்கும் வீட்டில், எங்கே ஹரியை உட்கார வைப்பது என்று மிதிலா.. யோசிக்கும் போதே..
ஹரி, குழந்தையை மிதிலாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு.. போய்.. கீழே போட்டிருந்த பெட்டில் உட்கார்ந்துக் கொண்டான்..
மிதிலா, ஹரிக்கு தண்ணீர் கொடுத்து விட்டு.. "ஒரு பத்து நிமிஷம் டாக்டர்.. நான் கிழே லீசிங் ஆஃபீஸ் போய்ட்டு.. இந்த செக் மட்டும் கொடுத்துட்டு.. வந்துடறேன்.. உங்களுக்கு ஓக்கே தானே", என்று கேட்க..
ஹரி, "பொறுமையா போயிட்டு வா பேபி.. நோ பிராப்ளம்.. நான் மகி கூட இருக்கறேன்", என்று விட.
மிதிலா சென்றுவிட்டாள்..
மறுகணமே எழுந்த ஹரி, வீட்டைச் சுற்றி பார்த்தான்..
அவன் பத்தடி வைத்தால் வீடு முடிந்து விடும்…
ஹரி வீட்டின், கார் ஷெட் கூட, இதைவிட பெரிதாக இருக்கும்…
அதை பார்த்தவன், 'தன்னவள் எந்த விதமான சுகமும் இல்லாமல் வாழ்கின்றாள்.. அது தெரியாமல் அவளுடன் தினமும்.. ச்சே..
என்ன ஹரி இப்படி சொதப்பிட்ட…', என்று வருத்தத்துடன், கிட்சனுள் சென்றான்..
கிட்சனிலும் ஒன்றும் பெரிதாக இல்லை..
ஒவ்வொரு ஷெல்பாக திறந்து பார்த்தான்…
பிரெட்..
பால்..
இட்லி மாவு..
அரிசி..
எலுமிச்சை பழம்..
குழந்தைக்கான சீரியல்..
இவை மட்டும் தான் வீட்டிலேயே இருந்தது..
ஒரு மளிகை சாமான் கூட சமையல் செய்ய இல்லை…
மீண்டும் ஹாலை சுற்றி பார்க்க, ஹாலில் ஒரு மூலையில், சின்ன பெட் மற்றும் பிளான்கெட்..
மற்றொரு மூலையில் ஒரு சின்ன துணி பேக் இருந்தது..
ஆங்காங்கே ஒரு சில விளையாட்டு சாமான்கள்..
அவ்வளவு தான் அந்த வீட்டில் இருந்த பொருட்கள்..
ஹரிக்கு கண்களில் இருந்து அவனை மீறி இரு சொட்டு நீரே இறங்கிவிட்டு இருந்தது..
எதையும் தான் கவனிக்கவில்லையே என்று…
பிறந்த நொடி முதல் பணப்பிரச்சனை சிறிதும் இன்றி, ஏகபோக வாழ்க்கையை சுகமாக வாழ்ந்தவனுக்கு, மிதிலாவின் இந்த வாழ்க்கை முறை, நெஞ்சையே வாள் கொண்டு வெட்டுவது போல் இருந்தது…
சென்ற மிதிலா திரும்பி வந்து விட்டாள்…
அவள் முகமே இப்பொழுது தான் தெளிந்து இருந்தது…
"உங்களுக்கு காபி போடவா டாக்டர்", என்றப்படியே, அடுப்பில் பாத்திரத்தை எடுத்து வைத்த மிதிலா…
ஹரியிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அவனை திரும்பி பார்த்தவள், அவன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து.. "ஐயோ என்ன டாக்டர்.. என்ன ஆச்சு....", என்றவள், அவனின் சிறு வேதனையையும், தாங்கிக் கொள்ள முடியாது, ஓடி வந்து அவனை கட்டிக்கொள்ள..
ஹரியோ, அவளின் அணைப்பில் வெளிப்பட்ட காதலில், இன்னமும் பலகீனம் ஆகிப்போனான்..
"சாரி பேபி சாரி டா.. ஐயம் எக்ஸ்ட்டீம்லி சாரி டா.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் " என....
மிதிலா, "நீங்க என்ன பண்ணீங்க.. ஏன் டாக்டர் அழறீங்க. பிளீஸ் ஒழுங்கா என்னன்னு சொல்லுங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு", என்றாள் ஒன்றும் புரியாமல் அவளும் அழகையுடன்....
பிறகே தன்னால் மிதிலாவும்.. பயப்படுகிறாள் என்று உணர்ந்த ஹரி…
"ஒன்னும் இல்லை டா.. நீ காஃபி போடு, பிறகு பேசலாம்.. நான் உட்கார்ந்து இருக்கேன்..", என்றுவிட்டு சென்று பெட்டில் உட்கார்ந்து கொண்டான்..
ஹரிக்கு தன்னை நிதானப்படுத்த சிறிது நேரம் தேவைப்பட்டது..
மிதிலா, "என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லுங்க டாக்டர்" என்றாள்.. அங்கேயே நின்றப்படி..
ஹரி, "சொல்றேன் டா.. நீ காஃபி போட்டு எடுத்துட்டு வா.. எனக்கு தலை வலிக்குது.. ப்ளீஸ்", என்றான்..
மிதிலா வேறுவழியின்றி அவசரம் அவசரமாக போட்டு கொண்டு போய் ஹரியிடம் கொடுக்க..
ஹரி மிதிலாவை இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்..
மகிழ்மதி.. துருதுருவென்று..
வீட்டைச் சுற்றி, வலம் வந்துக்கொண்டு இருந்தாள்..
சில நிமிட மௌனத்திற்கு பிறகு.. ஹரி, "பேபி நான் இப்ப உன்கிட்ட ஒரு சில கொஸ்டின்ஸ் கேட்பேன்.. நீ அதுக்கு உண்மையான பதில் சொல்லணும் சொல்லுவியா", என்றான்..
மிதிலாவிற்கோ உள்ளுக்குள் பல பய பந்துகள் உருவாகி மேலே எழும்பியது... அரண்டு போய் ஹரியை பார்த்தாள்..
ஹரி மீண்டும், "சொல்லு பேபி", என்றான்..
மிதிலா, " கேளுங்க டாக்டர்", என்றாள் படப்படப்புடன்..
ஹரி, "ஓகே வெல்.. நீ நேத்து காலைல என்ன சாப்பிட்ட..", என்றான்..
மிதிலா எதற்கு இந்த கேள்வி என்று புரியாது, "காபியும் பிரெட்டும் சாப்பிட்டேன் டாக்டர்.. ஏன் இப்ப இதை கேட்கறீங்க", என்றாள்..
ஹரி, “கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு மிதிலா”, என்றவன், “மதியம் என்ன சாப்பிட்ட..?" என்றான் அடுத்து..
மிதிலா ,"லெமன் ரைஸ் சாப்பிட்டேன்.. என்ன ஆச்சு டாக்டர் உங்களுக்கு.. ஏன் ஒருமாதிரி பேசறீங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. உங்களுக்கு என்ன தெரியனும்", என்றாள்..
அவளின் பயமே வேறு. தன்னை பற்றி எதுவும் தெரிந்துவிட்டதோ என்று, திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென்று இருந்தாள்.
ஹரி, " சொல்றேன்.. நைட் என்ன சாப்பிட்ட", என்று மீண்டும் உணவு குறித்தே கேட்க..
மிதிலா, "பிரெட்டும் பாலும் சாப்பிட்டேன்", என்றாள்.. பொறுமையற்ற குரலில்..
ஹரி வருத்தமாக, "ஓகே அப்போ அதுக்கு முன்னாடி நாள் என்ன சாப்பிட்டா..", என்று கேட்க...
மிதிலா, தன் தலையை குனிந்து கொண்டாள் எதுவும் சொல்லவில்லை..
இப்பொழுது அவளுக்கு அவன் எங்கு வருகிறான் என்று புரிந்துவிட்டது..
ஹரி மீண்டும், "என்ன பேபி சாப்பிட்ட கேட்கிறேன்ல சொல்லு", என்றான் சிறிது கடினமாக..
மிதிலா, "நேத்து சாப்பிட்டதே தான் டாக்டர், முதல் நாளும் சாப்பிட்டேன்..", என்றாள்..
சொல்லும் பொழுதே அவள் கண்களிலிருந்து நீர் வடிய ஆரம்பித்து விட்டது… ஹரியின் கடினமான குரலிலும்.. தன் ஏழ்மை நிலையிலும்…
எது நடக்க கூடாது என்று நினைத்தாலோ அதுவே நடந்துவிட்டது.
ஹரி, தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு, "ஓகே ஆதித்யா அண்ணா யாரு", என்றான் அடுத்த கேள்வியாக…
மிதிலா, "ஆதித்யா அண்ணா வந்து.. மாமாவோட ஃபிரண்ட் டாக்டர்", என்றாள்..
ஹரி, "ஓ.. யாரு பேபி அந்த மாமா".. என்று கேட்டான்…
மிதிலா, "மகிழ்மதியோட அப்பா… அவரோட ஃபிரெண்ட் தான் ஆதித்யா அண்ணா.. அவங்க தான் எனக்கு இங்க வேலைப் பார்த்து.. வீடு எல்லாம் பார்த்து கொடுத்தாங்க டாக்டர்.. ", என்றாள்..
ஹரி, "ஓ, அவங்களுக்கு நம்ம மேரேஜ் விஷயம் தெரியுமா பேபி.." என்றான் அடுத்து...
மிதிலா, "இல்லை டாக்டர் இன்னைக்கு நைட்டு தான் சொல்லனும்.. வீக்டேஸ்ல எப்பவும் தொந்தரவு செய்ய மாட்டேன்..", என்றாள்..
"ஓ சரி..” என்ற ஹரி, “கடைசியா, இதை மட்டும் சொல்லு. ஆதித்யா என்னை விட இப்ப உனக்கு ரொம்ப முக்கியமானவரா", என்றான்...
மிதிலா, "ஐயோ ஏன் டாக்டர் இப்படி எல்லாம் கேட்கிறீங்க.. அவங்க எனக்கு ரொம்ப ரொம்ப உதவி செஞ்சு இருக்காங்க.. அவங்க ரொம்ப முக்கியமானவங்க தான்.. ஆனா உங்களை விட கண்டிப்பா இல்லை.. ஏன் இந்த உலகத்தில் உங்களை விட பெருசுன்னு எதுவுமே எனக்கு கிடையாது டாக்டர்.. நீங்க தான் எனக்கு எல்லாமே.. எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நீங்க ஏன் இன்னைக்கு இப்படி எல்லாம் கேட்கிறீங்கனே எனக்கு தெரியல.. எனக்கு என்னமோ போல ரொம்ப பயமா இருக்கு.. என்னை விட்டு போக போறிங்களா", என்றவள் எங்கு ஹரி தன்னை பிடிக்கவில்லை என்று கூறிவிடுவானோ என்ற புது பயத்தில்,
முகத்தை மூடிக்கொண்டு அழ தொடங்கி விட்டாள்..
மிதிலாவின் அழுகையோ ஹரிக்குள் பெரும் பிரளையத்தையே ஏற்படுத்தியது..
அவளுடைய அழுகை எந்த அளவிற்கு வருத்தமாக இருக்கிறதோ.. அதைவிட அவளுடைய செய்கைகள் அவனுக்கு வருத்தம் அளித்து இருந்தது..
"உன்னை விட்டு போயிடுவேன்னு வேற நினைச்சு இருக்கயா..? இந்த ஜென்மத்தில் அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது..”, என்று, அவளின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்..
“ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை, என்கிட்ட உன் கஷ்டத்தை சொல்லி இருக்கலாம் இல்ல பேபி.. அந்த அளவுக்கு நான் உரிமை இல்லாதவனா உனக்கு அப்ப.. இன்னும் உனக்கு நான் மூனாவது மனுஷனா தான தெரிஞ்சு இருக்கேன்..
ஒழுங்கா சாப்பிடாம.. அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம.. 10 நாளா பயந்துட்டு இருந்து இருக்கிற.. இருந்தும் என்கிட்ட ஒருவார்த்தை பணம் இல்லைன்னு சொல்லலை.. ஏன் பேபி இப்படி பண்ண.. எப்படி வலிக்குது தெரியுமா.. ஏன் இப்படி தனியா கஷ்டத்தை அனுபவிச்ச.. நான் யாரு பேபி உனக்கு.. சொல்லு.. தலையே வெடிக்கற மாதிரி இருக்கு எனக்கு..", என்றான் தலையை பிடித்து கொண்டு..
மிதிலாவோ, “ஐயோ டாக்டர்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை..”, என்றவள், ஹரியின் தொடர் கேள்விகளில் இன்னும் அழ தொடங்கிவிட்டாள்..
“என்ன நான் நினைக்கிற மாதிரி இல்லை.. லவ்னா வெறும் ரொமான்ஸ் பண்றதுன்னு மட்டும் நினைச்சு இருக்கயா.. இல்லை நான் அது மட்டும் தான் பண்ணுவேன்னு நினைச்சு இருக்கயா.. எனக்கு அப்படி தான் தோனுது” என்றுவிட்டான்.. இறுதியில் மனதில் இருப்பதை..
மறுகணம் ஹரியை இறுக கட்டிக்கொண்டாள், மிதிலா, ஒன்றும் புரியாது..
அவன் எதிர் பார்க்கும் அளவிளான சிந்தனையோ, மனமுதிர்ச்சியோ அவளிடம் இல்லையே..
பாவம் சிறு பூ அவள் எப்படி இதனை சமாளிப்பது என்று தெரியாது.. அல்லாடி போனாள்..
அவள் மிகவும் சிறுப்பெண் என்று அவனிடம் யார் சென்று கூறுவது..?
"சாரி டாக்டர் சாரி.. உண்மையா நான் உங்களை வேற மாதிரி நினைக்கவே இல்ல.. எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நீங்க உரிமையா தான் என்கிட்ட எல்லாமே வாங்கிட்டு வர சொன்னிங்க.. அதே மாதிரி ஆண்டிக்கும், என்னோட வீடு மாதிரி நினைச்சு தான் உதவி செஞ்சேன்.. அதுக்குப் போயிட்டு எப்படி காசு கேக்கிறது.. அதோட என்னை நீங்க பாவமா பார்த்தீங்கன்னா, அது எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.. இப்பவே எனக்கு அப்படித்தான் இருக்கு.. ஆதித்யன் அண்ணாக்கு கூட இதுவரை நான் வீட்டு வேலைக்கு போறது பத்தி தெரியாது.. அவங்க கிட்ட கூட பணம் கேட்க கூடாதுன்னு தான் நான் வேலைக்கு வந்தேன்.. இப்போ கூட கேட்கவே ரொம்ப அவமானமா தான் இருந்துச்சு.. வேற வழியில்லாமல் தான் கேட்டேன்..
எப்பவுமே நீங்க என்னை பார்த்து இரக்கமோ, வருத்தமோ படக்கூடாது தான் நினைச்சேன்.. ஆனா இப்ப எல்லாமே நடந்துடுச்சு.. நான் நினைச்சது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்.. உண்மையாவே நீங்க தான் எனக்கு எல்லாமே.." என்றாள் அழுகையுடனே...
ஹரியோ, மிதிலா பேசப்பேச, அவளுடைய பக்க மன நிலையை புரிந்துகொண்டு, மீண்டும் கவலை ஆனான்.. தான் சரியாக மிதிலாவை புரிந்து கொள்ளாது மேலும் அவளை வருத்திவிட்டோமே என்று…
உடனே ஹரி, "ஓகே பேபி லீவ் இட்.. இனி இது மாதிரி நீ எப்பவும் நினைக்க வேண்டாம் சரியா.. ரொம்ப சாரிடா உன்னோட பக்கம் எனக்கு தெரியலை.. சட்டுன்னு ரொம்ப வருத்தம் ஆகிடுச்சு.. நாம மட்டும் தான் அவகிட்ட உரிமையா நடந்துக்கறோம்... ஆனா அவ நம்ம கிட்ட இடைவெளி விட்டு இருக்கான்னு.. சாரி டா பேபி.. எப்பவும் இனி நாம ரெண்டு பேரும் ஒண்ணு தான்.. என்னோடது எல்லாமே உன்னோடது தான்.." என்று விட்டு,
தன்னுடைய பர்சில் இருந்து அவனுடைய பர்சனல் விசா கார்ட் ஒன்றை எடுத்து மிதிலாவின் கையில் கொடுத்து..
"இனி நீ இந்த கார்டு யூஸ் பண்ணி தான் எதுனாலும், வாங்கணும் பேபி.. மகிக்குட்டிக்கும் செலவு இதுல தான் பண்ணனும் சரியா டா.. நீ சம்பளம் வாங்கினாலும் சரி அத அப்படியே வச்சுக்கோ.. ஆனா இதுல இருந்து தான் இனி கண்டிப்பா செலவு செய்யணும்.. அதே மாதிரி ஆதித்யன் கிட்ட இருந்து எவ்வளவு காசு வாங்கனையோ, அதை இன்னைக்கே திருப்பி கொடுத்துடு.. நம்ம கல்யாண விஷயமும் சொல்லிடு.. ", என்றான்..
மிதிலாவின் தலை சம்மதமாய் அசைந்தது..
ஹரி, "நாளைக்கு வந்து உன்னை அங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. நீ எல்லாத்தையும் இன்னைக்கே எடுத்து வச்சுடு.. நாளையிலிருந்து நீ கண்டிப்பா அங்க நம்ம வீட்ல தான் இனி இருக்கணும் சரியா.. பேபிக்கும் அங்கேயே ஸ்கூல் நான் பார்த்துடுறேன்.. இல்லனா வீட்டுலயே யாராச்சு nanny மாதிரி வச்சு பார்த்துக்கலாம்.. குழந்தை மாம் கூட இருக்கட்டும் இனி ," என்றான்…
மிதிலா, "வந்து டாக்டர் இன்னும் பத்து நாள் தானே.. ஆன்ட்டி கிட்ட நீங்க கேட்டீங்களா.. நான் ஒழுங்கா சாப்பிட்டுட்டு இங்கையே இருக்கேன்", என்று மறுக்க..
ஹரி, "மாம் தான் என்னை அனுப்பினதே.. பத்து நாள்ல ஒன்னும் மாறப்போறது இல்லை மிது.. இன்னைக்கு எப்படி இருக்கிறனோ அதே மாதிரி தான் நான் பத்து நாளைக்கு அப்புறமும் இருப்பேன்.. நாளைக்கு நீ நம்ம வீட்டில அவ்வளவுதான்.. இனி எதுவும் பேச வேண்டாம்.. பேபிய தூக்கிட்டு வா.. நாம மூணு பேரும் வெளியே போய்ட்டு.. நைட் டின்னர் எல்லாம் முடிச்சுட்டு வரலாம்.." என்றவன் எழுந்துக்கொள்ள..
மிதிலாவால் ஒன்றும் கூறமுடியவில்லை.
பிறகு, மூவரும் கீழே கார் பார்க்கிங்கிற்கு இறங்கி வந்தனர்..
குழந்தையின் கார் சீட்டை எடுத்து, ஹரியின் காரில் மிதிலா பொருத்தும் பொழுதுதான்.. ஹரி மிதிலாவின் காரையே ஒழுங்காக பார்த்தான்..
இதை எப்படி இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று வேதனை உற்றான்.. அவ்வளவு பழைய மாடல் கார் வைத்திருந்தாள்..
அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்காவிற்கு சென்று, அங்கு நேரத்தை நன்கு செலவு செய்துவிட்டு, ஹோட்டலில் டின்னர் முடித்துக்கொண்டு, மிதிலாவை காலை தயாராக இருக்க கூறிவிட்டு கிளம்பினான்.
அன்று இரவு மிதிலா கயல்விழிக்கு போன் செய்து, ஹரியை இந்தியாவில் சந்தித்தது முதல்.. அமெரிக்காவில் சந்தித்தது வரை அனைத்தையும் கூறிவிட்டு.. மெல்ல திருமண விஷயத்தையும் கூறினாள்…
முதலில் ஏன் பணம் தேவை என்று சொல்லவில்லை.. எதற்கு வீட்டு வேலைக்கு சென்றாய் என்று அவளை திட்டியவர்கள்…
எங்காவது சென்று மாட்டிக்கொள்ள போகின்றாள் என்று பயந்து…
முதலில் ஹரியின் பயோடேட்டாவை, கயல்விழி அனுப்பச் சொன்னாள்.. ஹரியை பற்றி விசாரித்து பார்க்க..
மிதிலா ஹரியை குறித்து தெரிந்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ள…
கயல்விழிக்கு அப்பொழுது தான் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது.
ஏனென்றால், கயல்விழிக்கு சியாட்டிலில் இருக்கும் பொழுது, பிரசவம் உறுதியான தினம் தொடங்கி, பார்த்த மருத்துவர் ஹரி தான்..
உடனே மிதிலாவிடம் மீண்டும் கேட்டு உறுதி செய்துக்கொண்டவள்.. ஆதித்தியனிடமும் விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள..
அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே…
ஆதித்யா மிதிலாவிடம், "ஹரி ரொம்ப ஃபேமஸ் கைனகாலஜிஸ்ட் டா சியாட்டில்ல… ரொம்ப ரொம்ப நல்லவரும்.. எல்லாருக்குமே அவரை தெரியும்.. உனக்காகவே கடவுள் அவரை அனுப்பி இருக்காரு போல.. இனியாவது நீ வாழ்க்கைல சந்தோஷமா இருக்கணும்.. நாங்க அடுத்த வாரமே லீவு எடுத்துட்டு வரோம்..", என்றான்…
அடுத்து கயல்விழி, ஹரியிடம், நடந்த அனைத்தையும் மிதிலாவை சொல்ல சொல்லி சொன்னாள்..
இது மறைக்க கூடிய விஷயம் இல்லையே.. எப்படியும் ஹரிக்கு தெரிய தானே போகிறது.. இதனால் புது பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பெண்ணாய் கயல்விழிக்கு…
விஷயத்தின் வீரியத்தை இன்னும் சரிவர உணராத மிதிலாவோ, "சொல்றேன் க்கா", என்றுவிட்டு ஃபோனை வைத்தவள்.. மறந்தும் அவனிடம் எதுவும் கூற நினைக்கவில்லை.
இன்று இந்த சிறு விஷயத்திற்கே, அப்படி கோபப்படும் ஹரி, நாளை நான் இதைச் சொல்ல போய்.. இன்னும் கோபப்பட்டால் என்ன செய்வது.. பொறுமையாக வேறொரு நாள் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டாள்..
ஹரி சொன்னபடியே, மறுநாள் வந்து, மிதிலாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்..
இதோ இடையிலிருந்த பத்து நாட்கள் பறந்து சென்று விட்டது…
திருமணத்திற்கு முன் தினம் மாலை பொழுது….
ஹரியின் வீட்டில் தோட்டத்தில்…
திருமண நலங்கிற்கு..
அலங்காரம் செய்யப்பட்ட மலர் மேடையில்..
ஆலீவ் கிரீன் மற்றும் பிங்க் நிறத்தில் அழகாக டிசைன் செய்த லெகங்காவில்.. தாழம் பூ மாலை அணிந்து. ஹரியின் அருகில் உட்கார வைக்கப்பட்டு இருந்தாள் மிதிலா..
உடல் முழுவதும், அவள் உடைக்கு ஏற்ப, ரூபி மற்றும் எமெரால்டால் செய்யப்பட்ட நகைகளை, அவளுக்கு அன்னபூரணி போட்டுவிட்டு இருக்க..
ஹரி, ஆலீவ் கிரீன் மற்றும் சந்தன நிற காம்பினேஷனில் ஷர்வானி அணிந்து கலக்கலாக இருந்தான்..
இருவரின் முகமுமே கல்யாண கலையிலும்.. மகிழ்ச்சியிலும் பளபளத்தது..
திருமணத்திற்கு என்று வந்துவிட்ட கயல்விழி, தன் நிறைமாத வயிற்றை பற்றிக்கொண்டு, மெல்ல குனிந்து, மிதிலாவிற்கு கன்னத்தில் சந்தனம் முதலில் பூசி… நலங்கை ஆரம்பித்து வைத்தாள்.
குழந்தை ஆதித்தியனிடம் இருந்தது..
நலங்கு முடிய.. வந்திருந்த அனைவருக்கும்.. அங்கேயே விருந்து ஆரம்பம் ஆக..
மறுபுறம் ஹரிக்கும் மிதிலாவிற்கும்.. போட்டோ ஷூட் நடைப்பெற்றது..
ஹரி, மிதிலாவுடன் சேர்ந்து ட்ரீ ஹவுஸில் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டவன்…
குழந்தையை தூக்கி வந்து, அவளுடனும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்து கொண்டான்…
அன்றைய இறுதி புகைப்படமாக, swimming pool அருகில், இதழ் அணைப்புடன் ஃபோட்டோ எடுத்து முடிக்க.. மிதிலா அத்துடன் அறைக்குள் சென்று பதுங்கி விட்டாள்.
ஹரி, அவளை போட்டு, ஒரு வழி செய்து விட்டு, இருந்தான்..
அவள் பதினைந்து வயதில் கண்ட கனவு, நாளை நிறைவேற போகிறது…
நினைத்தாலே வானத்தில் பறப்பது போல் இருந்தது அவளிற்கு..
அப்பொழுது அறைக்குள் வந்த கயல்விழி, ஹரியிடம் இன்று இரவாவது, உண்மையை கூறிவிடு என்று அவளை வற்புறுத்த..
வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தவளுக்கு.. தொப்பென்று கீழே விழுந்தது போல் இருந்தது..
********************************
அதே நேரம், அங்கு திருச்சியில், ஆதிகேசவன் வெறி பிடித்த வேங்கையாக.. கர்ஜித்து கொண்டு இருந்தான்…
அவனின் பதவி பறிப்போய்விட்டு இருந்தது...
வந்த கோபத்திற்கு, அவன், மாதவியை போட்டு அடித்து துவைக்க..
சத்தம் கேட்டு ஓடிவந்த ருத்ரன், ஆதிகேசவனை தடுக்க..
அவனை பார்த்து ஆதிகேசவன், "ஆம்பளையாடா நீயெல்லாம்.. போ போய் உன் பொண்டாட்டி புடவையை கட்டிக்கோ..
ஒரு பொம்பளைய அடக்க தெரியல..
சரின்னு நான் பார்த்து வச்சதுக்கும்.. சொன்ன நேரத்தில வயித்த ரொப்ப, துப்பு இல்ல.. தெண்டம்.. பொம்பளையா டா நீ.." , என்று கத்த..
மறுகணமே, தன் மனைவி முன்பே, தன்னை தரம் இல்லாமல் பேசும், ஆதிகேசவனை நெருங்கிய ருத்ரன்..
அவன் சற்றும் எதிர்பாராத வகையில், தன் காலை ஓங்கியன், ஆதிகேசவனின் நெஞ்சில் தன் பலம் முழுக்க திரட்டி, ஒரு மிதி மிதிக்க..
ஆதிகேசவன், நாலடி தள்ளி சென்று, மேஜையில் இடித்து, கீழே விழுந்து இருந்தான்.
********************************
கருத்துகள்
கருத்துரையிடுக