உண்மை காதல் -13
அத்தியாயம்-13
இடம்: Bainbridge Island Washington. அமெரிக்கா.
பீட்சை ஒட்டிய ஓபன் ஹாலில் திருமணத்திற்கு புக் செய்து இருந்தனர்.
தரை முழுவதும் பச்சை பசேலென புல்வெளி அழகாக படர்ந்து இருந்தது..
அதில் இந்து முறைப்படி, மண மேடை அமைத்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர்.
அதில் முக்கால்வாசி, ஹரியின் விருப்பப்படி, சிகப்பு ரோஜாக்களே இடம் பிடித்து இருந்தது..
ஓபன் ஹாலின் நுழை வாயிலில் ஹார்டின் டிசைனில்,
"ஹரிகிருஷ்ணா சேதுமாதவன் வெட்ஸ் மிதிலா விஷ்ணுவரதன்",
என்று அழகாக மலர்களால் எழுதி வைத்து இருந்தனர்..
மணமேடைக்கு பின்னால் முழுவதும் பீச் வியூ தான்..
காலைப் பொழுதில், கடற்கரையில் இருப்பதே தனி சுகம்.. இதில் கல்யாணம் என்பது கேட்கவே தேவையில்லை, அவ்வளவு ரம்மியமாக இருந்தது..
வந்திருந்த அனைவருமே, வெளிநாட்டவர் உட்பட, நம் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை மற்றும் புடவை அணிந்து கொண்டு இருந்தனர்..
ஹரியின் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், சேதுமாதவனுடன் பணி புரிந்தவர்கள் மற்றும் அவரின் இதர நண்பர்கள்.. மிதிலாவுடன் இங்கு பணிப்புரியும் நண்பர்கள்.. அன்னபூரணியின் நண்பர்கள்.. என்று திருமண விழா, நம் ஊரைப்போலவே, நிறைய மக்களுடன் கலைக் கட்டியது..
வெந்நிற பட்டு வேஷ்டி சட்டையில், கம்பீரமாகவும் அதே நேரம் தேகம் முழுக்க வசீகரம் பொங்கி பெருக.. மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தான், ஹரி.
அவனின் கண்கள் மட்டும், நடைபாதையின் ஆரம்பத்திலேயே நிலைத்து இருந்தது..
தன்னவள் வருகிறாளா வருகிறாளா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்..
சில வினாடிகளில்,
ஹரியின் கண்கள் அதன் அலைப்புறுதலை நிறுத்தி ஒர் இடத்தில் மையம் கொண்டது..
மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும்
கூடப் பிடித்துப் போனது
புதையல் ஆனது
விருப்பம் பாதி
தயக்கம் பாதி
கடலில் ஒரு கால்
கரையில் ஒரு கால்
இதுவரை இது போலே
இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காகத் திருமணம்
வரை நினைத்ததில்லை
என்றப்பாடல் பின்புறம் மெல்ல மேள தாளங்களுடன் சேர்ந்து இசைக்க..
அழகிய அடர் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டு புடவையில்.. தங்க நிற ஜரிகை கோடுகள் போட்டு.. கீழே நன்றாக பெரிய சிகப்பு நிற பார்டர் வைத்து வடிவமைத்த புடவையில்..
அழகு சந்தன நிற சிலையாக..
சர்வ அலங்காரங்களுடன், கையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏந்தி நடந்து வந்துக்கொண்டு இருந்தாள் மிதிலா..
தலையில் சவுரி முடி வைத்து அழகாக பின்னலிட்டு.. விதவிதமான மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர்..
காதில் பெரிய டெம்பிள் டிசைனில் குடை போன்ற ஜிமிக்கியும், நெற்றியில் பெரிய சிகப்பு நிற பொட்டும், கழுத்தில் கையில் இடுப்பில் என்று முழுவதும் தங்கத்தாலும் வைரத்தாலும்.. அலங்கரிக்கப்பட்டு இருந்த மிதிலாவை பார்த்தவர் அனைவரையும் மெய் மறந்து இருந்தனர்.. அவளின் தெய்வீகமான அழகில்…
மிதிலாவின் கழுத்தில் இருந்த.. நெருக்கமாக கோர்க்கப்பட்ட குண்டுமல்லி மாலை, அதன் சுகந்தமான மணத்தை அவ்விடம் முழுவதும் பரப்பியது..
கயல்விழி மற்றும் இன்னும் சில பெண்கள் மிதிலாவை அழைத்துக்கொண்டு வந்து ஹரியின் அருகில் அமர வைக்க..
ஹரியோ, அக்கணம் ஐயர் சொல்லும் மந்திரங்களை கவனித்து, உச்சரிக்க மறந்து விட்டு இருந்தான்..
ஏன் நடந்து கொண்டிருக்கும் கல்யாணத்தையே மறந்து விட்டு இருந்தான்…
மிதிலாவை நெருங்கி அமர்ந்தவன், "ஓ மை காட்.. பேபி யூ ஆர் லுக்கிங் வெரி வெரி கார்ஜியஸ்.. லவ் யு பேபி.. ரொம்ப அழகா இருக்க.. ஒரு hug கொடு", என…
மிதிலாவிற்கோ ஏற்கனவே பல பய பந்துகள் திருமணம் குறித்து அடிவயிற்றில் உருண்டுக்கொண்டு இருந்தது..
இதில் எங்கே ஹரி அனைவரின் முன்பும் கட்டி பிடித்து விடுவானோ என்று வேறு அவள் மனதினுள் அலறத் தொடங்க…
மேலும் அவளை நெருங்கி அமர்ந்தவன், "என்னை நிமிர்ந்து பாரு பேபி.. என்னோட காஸ்டியூம் எப்படி இருக்குன்னு சொல்லு பேபி.. " என்று அவளை போட்டு நச்சரிக்க…
ஐயர், "அம்பி நாழி ஆறது கொஞ்சம் சீக்கிரம் மந்திரம் சொல்லுங்கோ...", என்றவர், அவன் சற்றும் திரும்பாது இருக்கா…
"அம்பி.. அம்பி.. இங்க கொஞ்சம் பாருங்கோ", என்று கத்த...
ஹரியோ, அப்பொழுதும் அவர் சொல்லும் எதையும் சுத்தமாக கவனிக்க வில்லை..
மிதிலாவின் காதே தஞ்சம் என்று.. அங்கேயே பேசிக்கொண்டு இருந்தான்.
வேறுவழியின்றி மிதிலா, "ஐயோ டாக்டர்.. ஐயரை கொஞ்சம் பாருங்க.. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க.. ப்ளீஸ்..", என்றாள் குனிந்துகொண்டே..
ஹரி, "பேபி அதைவிடு.. நீ ஃபர்ஸ்ட் என்னை பாரு", என...
வேறு வழி இல்லாமல் மிதிலா நிமிர்ந்து ஹரியை பார்த்தாள்..
ஹரியின் கண்களில் இருந்த அளவற்ற காதலையும், தன் மீதான மையலையும் கண்ட அந்நொடி.. மிதிலாவின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது..
ஹரியும், ஹரியின் காதலும் மட்டுமே மிதிலாவின் நெஞ்சில் அக்கணம்…
இருவருமே ஒருவித மோன நிலைக்கு சென்றனர்..
மிதிலாவின் அலங்கரிக்கப்பட்ட அழகிய பெரிய கரு விழிகள் முழுவதும் ஹரியும்.. ,
ஹரியின் வசீகரமான ப்ரவுன் நிற கண்களில் முழுவதும் மிதிலாவும் மட்டுமே நிறைந்து இருந்தனர்..
மிக அருகில், கோவில் சிற்பம் போன்று செதுக்கப்பட்ட உடல் வளைவுகளுடன்.. அதனை அழகாக காட்டும் புடவையில் இருந்த.. தன்னவளின் தெய்வீக அழகில் சொக்கி போனான் ஹரி..
இருவருமே சுற்றம் மறக்க…
மறுகணம், மிதிலாவின் முகத்தை தன் இரு கரங்களில் ஏந்திய ஹரி..
"அச்சோ அம்முகுட்டி.. கொல்றடா…", என்றவன்…
அவளின் இரு கன்னத்திலும் தெரிந்த குழியில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு… பிறகே பூஜையை தொடர..
இருவரின் ஜோடிப் பொருத்தத்திலும்.. அன்னியோன்யமான செய்கையிலும், அனைவருக்கும் மகிழ்ச்சியே.. ஐயரை தவிர..
ஐயர், "ஏன்டா அம்பி பூஜை செய்யும் போது இதெல்லாம் பண்ணலாமா", என்றார்.
அதற்கு ஹரியோ, "அப்ப கடவுள்லாம் ரொமான்ஸ் பண்ண மாட்டாங்களா அங்கிள்.. அப்புறம் எப்படி அவங்களுக்கு பேபி எல்லாம் வந்துச்சு.. நான் ஹேப்பியா இருந்தா அவருக்கு பிடிக்காதா…", என்றான் இடக்காக…
ஐயர், “அம்பி டாக்டருன்றதை மறந்துட்டேன்..” என்றுவிட்டு அத்தோடு வாயை மூடிக்கொண்டார்.. விட்டால் அடுத்து ஏதாவது கேட்பான் என்று…
மகிழ்மதிக்கும்.. மிதிலா அணிந்து இருந்த அதே புடவை மாடல் துணியிலேயே.. பட்டு பாவாடை சட்டை அணிவித்து இருந்தனர்..
ஹரி குழந்தையை ஆதித்தியனிடமிருந்து கொடுக்கச் சொல்லி கேட்க...
ஆதித்யன், "இல்லை ஹரி இருக்கட்டும்.. விளக்கு எல்லாம் இருக்கு.. நானே பாப்பாவ வச்சிக்கிறேன்", என்று விட்டான்.
முதல் வரிசையில் அன்னபூரணி உட்கார்ந்து இருந்தார்.
சிறிது நேரத்தில்….
ஐயர் "கெட்டி மேளம் கெட்டி மேளம் " என்று குரல் கொடுத்தார்.. மேளம் கொட்ட…
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! "
என்று ஐயர் மந்திரம் ஓத….
அக்கணம், மிதிலாவின் கழுத்தில், ஹரி பொன்தாலி கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றை, அவள் கழுத்தை சுற்றி போட்டு மூன்று முடிச்சு இட்டான்..
மிதிலாவின் கைகள் தாலியை இறுக்கமாக பற்றி இருந்தது..
அனைவரும் எழுந்து நின்று அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்..
தாலி கட்டியதும் ஐயர், ஹரியை மிதிலாவிற்கு நெற்றி வகுட்டிலும், தாலியிலும், குங்குமத்தை கொடுத்து வைக்க சொன்னார்.. ஹரி வைத்ததும்..
அடுத்து பூவை கொடுத்தார், ஹரி மிதிலாவின் தலையில் கணவனாக பூ வைத்து விட்டான்..
எங்கோ திருச்சியில் பிறந்து வளர்ந்த மிதிலா, அவள் மீது வீசி சென்ற புயலில், அமெரிக்க மண்ணில் வந்து வீழ்ந்து, தத்தளித்து கரைசேர்ந்து, ஐந்து வருடங்களாக தன் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருந்த தன் மாயோனின் கரத்தையும், இன்று பிடித்து விட்டு இருந்தாள்…
அடுத்து மணமக்கள் இருவரும் ஒன்றாக அருந்ததி பார்த்துவிட்டு வர..
அடுத்து மெட்டிப் போடும் சடங்கு..
அம்மி மீது இருந்த மிதிலாவின் பாதத்தை பற்றிய ஹரி.. பெரிய சலங்கை வைத்த மெட்டியை .. அவள் விரல்களுக்கு வலிக்காமல் மெல்ல அணிவித்துவிட்டான்...
அடுத்து ஹரியின் அங்கவஸ்திரத்துடன்.. மிதிலாவின் சேலையின் முந்தானை நுனியை முடிச்சிட்டு.. ஐயர் அக்னியை மூன்று முறை வலம் வரச் சொல்ல...
சுற்றி வரும் பொழுது மிதிலாவின் முந்தானையை பார்த்த அனைவரின் கண்களும் அதன் தோற்றத்தில் பிரமித்து விரிந்தது..!
மிதிலாவின் முந்தானை முழுவதும் ஹரியின் முகமே…!
அந்தளவிற்கு மிகவும் தத்ரூபமாக, அவளின் முந்தானையில் அவன் முகம் நெய்யப்பட்டு இருந்தது….!
அனைத்து சடங்கும் முடிய, மணமக்கள் மணமேடையில் இருந்து இறங்கி வந்து, முதலில் அன்னபூரணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. நிறைந்த மனதுடன் அன்னபூரணி ஆசீர்வாதம் செய்ய..
பிறகு அனைவரும் வந்து வாழ்த்திவிட்டு.. பரிசுப் பொருட்களை கொடுத்து விட்டு.. உணவு உண்ண சென்றனர்…
இறுதியாக ஆதித்தியனும் கயலும் வந்தனர்.
கயல் மிதிலாவிற்கு, தங்கத்தில் பெரிய காசு மாலையும்.. குழந்தைக்கு அதேபோல் சின்ன காசு மாலை ஒன்றையும் போட்டுவிட..
ஆதித்யன், ஹரியின் வலது கரத்தில், தங்க பிரேஸ்லெட் ஒன்றை போட்டு விட்டான்..
ஹரி, "என்ன பேபி எல்லாரும் கிஃப்ட் கொடுத்துட்டாங்க.. நீ எப்ப தரப்போற கிஃப்ட் எனக்கு மேரேஜ்கு..", என்றான், கண்ணை சிமிட்டி குறும்பாக..
மிதிலா, "நீங்க என்ன கிஃப்ட் டாக்டர் எனக்கு தந்தீங்க.. என்கிட்ட மட்டும் கேட்கிறீங்க.. எனக்கும் தானே மேரேஜ்", என்றாள் சிரிப்புடன்.
ஹரி, "தாலி கட்டும் முன்னாடியே 2 கிஃப்ட் கொடுத்தேனே..”, என்று அவளின் கன்னத்தை தட்டியவன், “இப்ப இன்னொரு கிஃப்ட் வேணும்னு வேற நீயே கேட்கிற.. உன்னோட லிப்ஸும் என்னை ரொம்ப டெம்ட் பண்ணிட்டு தான் இருக்கு… என்ன சொல்ற.. கிஃப்ட் கொடுக்கவா", என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே, ஹரியின் நண்பர்கள் அங்கு கேக்குடன் வந்து விட்டனர்..
பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி.. ஷாம்பியன் பாட்டில் ஓபன் செய்து. என்று நண்பர்களுடன், அந்நாட்டு முறைப்படி மகிழ்ச்சியாக அத்தருணத்தை கொண்டாடினர்.
முற்றிலும் புதிய ஹரியை இன்று மிதிலா கண்டாள்.. கல்லூரி மாணவன் போல் அவன் போட்ட ஆட்டங்கள் அத்தனை.
பிறகு ஹரி ஆதித்யனிடம் சொல்லிவிட்டு, மிதிலாவின் கைப்பற்றி, "வா பேபி என்கூட..", என்று பீச் ரோட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கே, ஒரு சில கோடிகளை விழுங்கிவிட்டு, புதிய மாடல் சிவப்பு நிற டெஸ்லா கார்(Tesla car) முழு அலங்காரத்துடன் காத்து இருந்தது..
ஹரி அதன் சாவியினை மிதிலாவின் கையில் கொடுத்து, "உனக்குதான் பேபி பிடிச்சு இருக்கா", என்று கேட்க.
மிதிலா, "எனக்கா வாங்கனீங்க டாக்டர்... ரொம்ப சூப்பரா இருக்கு... ஆனா என்கிட்ட தான் கார் இருக்கே.. எதுக்கு இன்னொன்னு வாங்கனீங்க.. நிறைய செலவு", என்றாள்.
ஹரி, "அதெல்லாம் ஒன்னும் இல்லை பேபி.. இது ரொம்ப சேஃப்.. high-end மாடல் ஆக்சிடென்ட் ஹிஸ்டரியே இல்ல.. இனி இதையே நீ யூஸ் பண்ணு டா.." என்றுவிட்டு.. மிதிலாவை காரில் டிரைவர் சீட்டில் உட்கார வைத்தவன்.. சுற்றி வந்து அவள் அருகில் உட்கார்ந்து கொண்டான்..
இருவரும் ஒரு ride, புதிய காரில், பீச்சில் ஒரு 5 நிமிடம் சென்று திரும்பினர்..
காரின் தரம் ஓட்டும் பொழுது மிதிலாவிற்கு தெரிந்தது.
காரை அவள் பார்க் செய்துவிட்டு, இறங்கப்போக.. ஹரி மிதிலாவின் கையை பற்றி, “அதுக்குள்ளே என்ன அவசரம்..”, என்று தடுத்து.. ட்ராக்கருடன்(tracker) கூடிய வெந்நிற ஆப்பிள் வாட்ச் ஒன்றை அவள் கரத்தில் கட்டி விட்டு, "இனி எப்பவும் இது உன் கையில தான் இருக்கணும் பேபி.." என்றுவிட்டு, அந்த வாட்ச் உடனான, புது ஐ ஃபோனையும், அவளிடம் கொடுத்தான்..
மிதிலாவிற்கு மனதில் வருத்தம் ஆகியது.. நாம் எதுவுமே ஹரிக்கு கொடுக்கவில்லையே என்று.. அவள் முக வாட்டத்தைப் பார்த்து.. ஹரி "ஏன்டா பேபி.. வாட்ச் பிடிக்கலையா உனக்கு.. வேற என்ன கலர் வேணும் சொல்லு மாத்திக்கலாம்..", என்றான்..
மிதிலா, "இல்லை நான் உங்களுக்கு கிஃப்ட் ஒண்ணுமே வாங்கலையே.. கிஃப்ட் எல்லாம் வாங்கி கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியாது.. நீங்க சும்மா கேட்கறீங்கன்னு இல்ல நினைச்சேன்..", என்றாள் வருத்தமாக.
அதற்கு ஹரி, "அதனால என்ன பேபி, உனக்கு பிடிச்சது அப்புறம் எனக்கு வாங்கி கொடு..” என்றவன்.. சிறு இடைவெளிவிட்டு, “ஆனா.. நீ மனசு வச்சா.. இப்ப கூட தான் எனக்கு கிஃப்ட் கொடுக்க முடியும்..”, என்றான்.
மிதிலா, "இப்பவா.. இப்ப என்கிட்ட ஒன்னுமே இல்லையே டாக்டர்", என்றாள் புரியாமல்..
ஹரி அவளின் மூக்கை மெல்ல பிடித்து ஆட்டி, "சுத்த மக்குப் பேபி நீ.. ஒரு லிப்-லாக் அன்னைக்கு கொடுத்தல கிச்சன்ல.. அதே மாதிரி கொடு.. நான் ரொம்ப ஹேப்பி ஆகிடுவேன் இன்னைக்கு…", என்று ஆசையாக, தன் உதட்டை காட்ட..
மிதிலா வெட்கத்தில், "போங்க டாக்டர் எப்ப பார்த்தாலும் அதையே சொல்லிட்டு.. நான் வீட்டுக்கு போனதும் உங்களுக்கு பிடிச்ச கிஃப்ட் வாங்கி தரேன்", என்றாள்... .
ஹரி, "எனக்கு நான் கேட்டது தான் வேணும்.. உனக்கு என் மேல லவ் இல்லனா விடு பேபி.. வேண்டாம்..", என்றான் பொய்கோபத்துடன்..
மிதிலாவோ பயத்தில், "ஐயோ எதுக்கு இப்ப இப்படி என் கிட்ட சண்டை போடுறீங்க டாக்டர்.. எப்படி இப்ப தரது.. வீட்டுக்கு போயிட்டு தரேன்..", என்றாள் சிறு குரலில்....
ஹரியோ விடாது, "கொடுக்கனும்னு முடிவு பண்ணிட்ட இல்ல.. எனக்கு இப்பவே வேணும்.." என்றவன் மறுநிமிடம் மிதிலாவை தூக்கி தன் மடியில் அமர வைத்து இருந்தான்..…
மிதிலாவிடம் இருந்து வரும்.. புது பட்டு.. பூ.. சந்தனம்.. மஞ்சள் வாசனை.. என்று அனைத்தும் சேர்ந்து ஹரியை மொத்தமாக மயக்கி தள்ள..
ஹரி மிதிலாவை நெருங்கி, "கொடு ஹனி.. சீக்கிரம்", என்றான் அவளின் முகம் அருகே தன் முகத்தை வைத்து..
மிதிலா நெலிந்தப்படி, "நீங்க மொதல்ல கண்ணை மூடுங்க".. என்றுவிட்டு வேறு வழியில்லாமல் ஹரியின் சட்டையை இறுக்க பற்றி.. அவளும் தன் கண்களை மூடிக்கொண்டு அவனை நெருங்கினாள்..
அவளின் செய்கையில் ஹரி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகி விட்டான்..
மிதிலா, மெல்ல ஹரியின் உதடுகளை அடைந்து, அதில் மென்மையாக முத்தமிட்டு விட்டவள்.. மெல்ல தன் பற்களால் அதனை கடித்தாள்..
வெறும் முத்தம் தான் தருவாள் என்று ஹரி நினைத்தாள்… அவளோ சின்சியர் மாணவியாக மாறி, அன்று செய்த அனைத்தையும் செய்ய….
அவ்வளவுதான் ஹரி தன் கட்டு பாட்டை முற்றிலும் இழந்தான்..
முத்த யுத்தத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான்…
வினாடிகள் சில கடக்க…
மிதிலா ஹரியின் மார்பில் மொத்தமாக பலமிழந்து சரிந்தாள்…
உணர்ச்சி மிகுதியில் ஹரி மிதிலாவின் இடுப்பை அழுந்த பற்றி இருந்ததில், மிதிலா கட்டியிருந்த ஒட்டியானம் ஹரியின் செய்கையில் நொறுங்க தொடங்க..
மிதிலா, " ஆ டாக்டர் வலிக்குது", என்று கத்தியபடி ஹரியை விலக்கினாள்..
அதில், "காட்.. சாரிடா பேபி" என்ற ஹரி.. ஒட்டியாணத்தை கழட்டி… வலித்த இடத்திற்கு தன் விரல் கொண்டு மருந்திட்டு.. மீண்டும் கட்டி விட்டவன்…
அவளின் கலைந்த அலங்காரத்தையும் பொறுப்பாக சரிசெய்து,
வெட்டிங் ஹாலிற்கு அழைத்து வந்தான்....
இன்று இரவு அவனின் இளம் மனைவி, அவனை போட்டு பாடாய் படுத்த போவதை அறியாது….
அங்கு, அன்னபூரணி தன் பொறுப்பில் மகிழ்மதியை, ரிசார்ட்டில் உள்ள ஓய்வு அறையில் வைத்துக்கொள்ள….
ஹரியும் மிதிலாவும், ஹரியின் நண்பர்களுடன் அமர்ந்து, கல்யாண உணவை உண்டு முடிக்க…
ஹரியின் நண்பர்கள் பார்ட்டியில் சந்திக்கலாம் என்று விட்டு விடைபெற்றனர்..
சிறிது நேரத்தில், நல்ல நேரத்தில் ஹரியையும், மிதிலாவையும் அழைத்துக்கொண்டு ஒன்றாக கோவிலிற்கு கிளம்பினர்..
Contract-ல் திருமண வேலையை முழுக்க விட்டு இருந்ததால், இவர்களுக்கு அங்கு பார்க்க வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை..
காரில் கிளம்பும் பொழுதுதான் மிதிலா நுழைவாயிலில் இருந்த பெயர் பலகையையே பார்த்தாள்..
அதில் பொறிக்கப்பட்டு இருந்த "மிதிலா விஷ்ணுவரதன்", என்ற பெயரை பார்த்த நொடி..
தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்..
‘தன்னால்தான் அவர்கள் அனைவரும்’ என்று நினைக்கும் போதே.. மிதிலாவிற்கு நெஞ்சு அடைத்தது..
உணர்வுகளை அடக்கிக் கொண்டு அமைதியாக கார் சீட்டில் பின்புறம் சாய்ந்துக்கொண்டாள்..
அவளின் மூடிய விழிகளுக்குள், அவள் பார்த்திருந்த பல அசம்பாவிதங்கள், காட்சிகளாக விரிய, அவளின் காதுகளில் அக்கோரமான சப்தங்களும், கதறலும், ஓடிவந்து நிறைந்தது..
இனி அவளால் என்ன செய்ய முடியும்.. அனைத்தும் முடிந்து விட்டதே..
கண்மூடி திறப்பதற்குள் அவளின் வாழ்க்கையின் பாதை எப்படி எப்படியோ மாறி, இறுதியில் ஹரியுடன் சேர்ந்து விட்டு இருந்தது..
அவள் தூங்குவதாக நினைத்த ஹரி, அவளை தன் தோளின் மீது சாய்த்துக்கொள்ள,
நிச்சயம் இனி ஹரியினால், தன் வாழ்க்கையும், மகிழ்மதியின் வாழ்க்கையும் நன்றாக அமையும் என்ற எண்ணம் அவள் மனம் முழுக்க பரவ.. அவளின் மனம் சற்று சாந்தம் ஆனது..
கோவிலை அடைந்து, மாலையும் கழுத்துமாக உள்ளே சென்று, அர்ச்சனை செய்துவிட்டு.. வீட்டிற்கு வந்தவர்கள்.. வீட்டிலும் விளக்கு ஏற்றி.. பால் பழம் உண்டு என்று அனைத்து சடங்குகளையும் மாலைக்குள் முடித்தனர்..
அனைவருக்குமே மிகுந்த களைப்பாக இருந்தது..
ஹரி மற்றும் ஆதித்யன் குழந்தையுடன் ஹாலில் அமர்ந்து இருந்தனர்..
அன்னபூரணி படுத்துவிட்டார்..
கெஸ்ட் ரூமில் கயல்விழி, மிதிலாவிற்கு அலங்காரங்களை களைய உதவி செய்து கொண்டு இருந்தாள்..
அப்பொழுது கயல்விழி மிதிலாவிடம், ஹரியிடம் அனைத்து உண்மைகளையும் இன்றாவது, அறைக்குள் சென்றதும் சொல்லிவிடு, இல்லை பெரிய பிரச்சனை ஆகும் மிதிலா, அது உங்களின் உறவிற்கு நல்லதிற்கு இல்லை என்று அவளை வலியுறுத்த..
மிதிலா, "டாக்டர் கேட்டா, நான் கண்டிப்பாக சொல்றேன்கா.. இதுவரைக்கும் நான் அவர்கிட்ட எந்த பொய்யும் சொன்னதில்லை..", என்றாள்..
கயல்விழிக்கோ உள்ளுக்குள் பயமாக இருந்தது.. ஹரி இதை எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்று.. மிதிலா சொல்லவில்லை என்றாலும்.. கண்டிப்பாக ஹரி கண்டுபிடித்து விடுவான்.. அதனால் தான் மிதிலாவை முன்பே கயல்விழி சொல்ல சொன்னாள்..
அவளோ கயல்விழி சொல்ல வரும் விஷயத்தை புரிந்துக்கொள்ளாது பேசிக்கொண்டு இருந்தாள்..
ஹாலில் இருந்த ஆதித்தியனும் அதே எண்ணத்தில் ஹரியிடம், "மிதிலா ரொம்ப சின்ன பொண்ணு டாக்டர்.. அவளை கண்டிப்பாக நீங்க நல்லா பார்த்துப்பீங்க தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்.. அவ வாழ்க்கையில் அவளோட வயசுக்கு மீறிய இழப்புகளை அவ பார்த்துட்டா.. அதே மாதிரி சுமைகளையும் சுமக்கறா..
உங்களுக்குள் ஏதாவது சண்டை, இல்ல ஏதாச்சும் அவளை பத்தி உங்களுக்கு தெரியனும்னா எனக்கு உடனே ஃபோன் பண்ணுங்க… என்கிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு", என்றான்..
ஹரி, "நீங்க பயப்படவே வேண்டாம்.. நான் பேபிய நல்லா பார்த்துக்கிறேன்.. அவ கொஞ்சம் மெச்சூரிட்டி இல்லாமல்.. அதே சமயம் ரொம்ப பயந்த பொண்ணா இருக்கா.. கண்டிப்பா பழக பழக சரி ஆகிடுவா.. டோன்ட் வொர்ரி.. தென் நீங்க எப்படி மிதிலா ஓட ஃபர்ஸ்ட்…" என்று நிறுத்தியவன்... "ஐ மீ மகிழ்மதி ஓட பயாலஜிக்கல் ஃபாதர் ஓட ஃபிரண்ட் ", என்றான் கேள்வியாக....
ஆதித்யன், "நானும் பிரித்திவ்வும் மும்பை ஐஐடியில் ஒன்னா யூஜி படிச்சோம்.. அடுத்து பிரித்திவ் அங்கேயே பிஜி பிஹெச்டி முடிச்சுட்டு.. டீச்சிங் லைனுக்கு போயிட்டான் காலேஜ்க்கு.. பட் எனக்கு ஐடி-ல தான் இன்ட்ரஸ்ட்.. சோ முடிச்சதும் ஜாயின் பண்ணிட்டேன்… பிரித்திவ் ரொம்ப ரொம்ப இன்டெலிஜென்ட்.. எந்த ஆதாரமும் இல்லாமல் அவனேதான் வாழ்க்கையில சொந்தமா முன்னேறினான் கஷ்டப்பட்டு.. அவனுக்குன்னு யாரும் இல்லாமல் இருந்தான்.. கொஞ்சமும் எதிர்பாராத விதமா அவனுக்குனு அழகான ஒரு வாழ்க்கை கிடைச்சது.. ஆனால் அது வந்த வேகத்தில் எப்படியோ போயிடுச்சு.. கூட அவனையும் சேர்த்து கூட்டிட்டு போயிடுச்சு", என்றான் நண்பனின் இழப்பில் வருத்தமாக…
அதன் பிறகு ஆதித்யன் எதுவும் பேசவில்லை…
ஹரியும் அவன் மனநிலையை புரிந்துக்கொண்டு எதுவும் பேசவில்லை…
நண்பனுக்கே இந்தளவிற்கு வருத்தம் என்றால், மனைவியாக மிதிலாவிற்கு எப்படி இருக்கும் என்று அவன் மனம் அடித்துக்கொண்டது…
பிறகு அனைவரும் ஒன்றாக இரவு உணவை முடித்தனர்..
ஹரி, சென்ற வாரம் மிதிலாவை அழைத்து வந்திருந்த உடனேவே, குழந்தையை வீட்டிலேயே தங்கி பார்த்துக்கொள்ள, ஒரு நல்ல கேர் டேக்கரை குழந்தைக்கென்று பார்த்து அப்பாயிண்ட் செய்து இருந்தான்.
அவர் வந்து, குழந்தையை தூங்க வைக்க, அன்னபூரணியின் அறைக்கு தூக்கி சென்றார்…
கயல்விழி, மிதிலாவை கீழே இருந்த அறையில் குளிக்க செய்து.. அழகான வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் ரோஜாப்பூக்கள் வைத்து தைத்து இருந்த லைட் வெயிட் நெட்டட் (Net type saree) சேலையை கட்டிவிட தொடங்கினாள்.
மிதிலாவிற்கோ அந்த புடவை சுத்தமாக பிடிக்கவில்லை.. பிளவுஸில் பின்னாடி பெரிய அளவில் துணியிலேயே கட்டுமாறு ஒரு நாட் மட்டுமே வைத்து இருந்தனர்..
மிதிலா, "அக்கா இது என்ன இப்படி இருக்கு.. எனக்கு பிடிக்கலை.. இது எனக்கு வேண்டாம். நைட் தூங்க தானே போறோம்.. வேற டிரஸ் போட்டுக்கறேன்", என்று அழுசாட்டியம் செய்ய ஆரம்பித்தாள்...
கயல்விழி, "உன் மாமியார் தான் மிதிலா இந்த புடவையை ராத்ரிக்கு கட்ட சொல்லி தந்தாங்க.. இது என்ன நம்ம ஊரா கடைக்கு போயிட்டு துணிக்கொடுத்து தைக்க.. எல்லாமே ரெடிமேட் தானே.. பாவம் அவங்களே இப்ப தான் பார்த்தாங்க.. இப்போ போயிட்டா மாத்த முடியும்.. அதுவும் இல்லாம, அவங்க பக்கம், கல்யாணம் ஆனா ராத்திரிக்கு, வெள்ளையும் சிவப்பும் கலந்த புடவையை கட்றது தான், வழக்கம் போல.. புடவை உனக்கு ரொம்பவும் நல்லா எடுப்பா தான் இருக்கு.. இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா..", என்று விதவிதமாக சமாதானப்படுத்தி, ஒருவழியாக மிதிலாவை தயார்படுத்தி ஹாலிற்கு அழைத்து வந்தாள்..
அங்கு யாரும் இல்லை..
குழந்தை அன்னபூரணியின் அறையில் தூங்கிவிட்டு இருந்தாள்..
ஆதித்யனும் அவர்களுக்கு கொடுத்த அறைக்குள் சென்று விட்டு இருந்தான்..
கயல்விழி மிதிலாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று.. அவளின் தலை நிறைய அங்கு இருந்த பூவை எடுத்து வைத்துவிட்டு..
"எப்பவும் சந்தோசமா வாழனும் டா.. எதுவா இருந்தாலும் டாக்டர்கிட்ட பயப்படாம சொல்லு.. எதுக்கும் பயப்படாத.. எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த ஸ்டேஜ் வரும்.. கண்டிப்பா கடந்து தான் ஆகணும்..", என்று விட்டு..
பூஜை அறையிலேயே இருந்த வெள்ளி சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து.. "இதில் பால் இருக்கு.. ரெண்டு பேரும் கொஞ்சம் ஆச்சும் குடிங்கடா.. காலையில் தலைக்கு குளிச்சிட்டு சீக்கிரம் வெளியே வந்துடு..." என்றுவிட்டு மாடிக்கு அனுப்பி விட்டாள்..
மாடி முழுவதும் மிதிலாவின் உடையின் நிறத்திலேயே Fairy tale theme-ல் அலங்கரித்து இருந்தனர்..
முழுவதும் வெள்ளை நிற பூக்களும் சிகப்பு நிற பூக்களும் மட்டுமே படிக்கட்டில் இருந்து அறைவரை..
இதெல்லாம் எப்ப பண்ணாங்க.. என்று நினைத்தப்படி, மிதிலா மெல்ல தன் புடவையை தூக்கி பிடித்தப்படி படி ஏறி முடித்து, அறையை அடைந்தவள்.. கதவை ஒருமுறை தட்டிவிட்டு திறந்தாள்..
மிதிலா கதவை தட்டியதும், மருத்துவமனைக்கு ஃபோனில் பேசிக்கொண்டு இருந்த ஹரி, யார் என்று பார்க்க எழுந்து வந்தான்.
மிதிலாவை பார்த்ததும், ஃபோனில் பிறகு பேசுவதாக கூறி நிறுத்தியவன், "ஹே பேபி.. ஏன் டோர் நாக் பண்ணிட்டு வர.. இனி இது உன்னோட ரூமும் தான்.. உள்ளே வா", என்றான்..
உள்ளே வந்த மிதிலாவோ, அறை முழுக்க தன் கண்களை ஒருமுறை சுழல விட்டு, அப்படியே வாயடைத்து நின்று விட்டாள்..
அதன் அலங்காரத்தில் அவள் கண்கள் மின்னியது..
வெந்நிற படுக்க முழுவதும், சிகப்பு நிற ரோஜா மலர்களின் இதழ்களால் ஹார்டின் வரைந்து இருந்தனர்..
மேலும் பெட்டை சுற்றி, வெள்ளை நிற நெட்டினால் மேலிருந்து கீழ் வரை, முக்கோண அமைப்பில் மூடி இருந்தனர்..
சுவற்றில் வேறு, டாக்டர் loves மிது பேபி என்று பூக்களால் அழகாக டிசைன் செய்து, அதன் மீது சிறு சிறு நியான் லைட்டை செட் செய்து ஒளிர விட்டு இருந்தனர்…
ஹரி இன்னும் காலையில் அணிந்து இருந்த பட்டு வேஷ்டி சட்டையில் தான் இருந்தான்.
மிதிலாவின் கண்களை பார்த்தவன், "என்ன பேபி.. அப்படி பார்க்கிற.. பிடிச்சு இருக்கா..", என்றப்படி அவளை நெருங்கியவன்….
மிதிலாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி, நைட் லேம்ப் டேபிளின் மீது வைத்துவிட்டு.. அவளை தன் தோளுடன் சேர்த்து அணைத்துச்சென்று பெட்டில் உட்கார வைத்தான்..
அரை முழுவதும் ஆங்காங்கே வாசனை மெழுகுவர்த்திகள், விதவிதமாக மிளிர்ந்து கொண்டு இருந்தது..
பர்ஃபெக்ட் ரொமான்டிக் வெட்டிங் நைட்..
மிதிலா ஏதோ கண்காட்சிக்கு வந்தவள் போல் சுற்றி சுற்றி அனைத்தையும் ரசனையுடன் பார்க்க…
ஹரிக்கு, எடுத்ததும், அவளிடம் என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை..
மிதிலாவின் முகம் பார்த்தான்…
இரவிற்கான அறையின் அலங்காரமும், இருவருக்குமான தனிமையும், மிதிலாவின் அழகும், அவனின் மனதை மெல்ல மீட்ட..
மிதிலாவின் பார்வை தன் மீது இல்லாததையும், அவளின் அமைதியையும், வெக்கம் என்று நினைத்தவன்..
அவளின் தடையை பற்றி தன் புறம் திரும்பினான்…
மிதிலா தன் அஞ்சனம் தீட்டப்பட்ட பெரிய விழியால் அவனை பார்க்க.. அது ஹரியை அவள் உள்ளே இழுத்தது..
" பேபி யூ ஆர் லுக்கிங்.. சோ ஹாட் அண்ட் செக்ஸி.. எஸ்பெஷல்லி இந்த புடவையில்.. அப்படியே மயக்கற", என்றவன்..
அவளை நெருங்கி, அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை மெல்ல உருவி வெளியே எடுத்தான்..
அதில் மிதிலாவிற்குள் பல பட்டாசுகள் சத்தமில்லாமல் வெடிக்க தொடங்கின..
ஹரியின் கை அவளின் கழுத்தில் பட்டு, அவளை கூச செய்தது..
காலின் கட்டை விரலை நிலத்தில் அழுந்த ஊன்றி... தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்..
மெல்ல தாலிக்கயிற்றை வருடிய ஹரியின் கை, அவள் தோளிலிருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கி அவளின் வெற்று இடையில் தங்க..
அதில் தேகம் அதிர மிதிலா பதற..
மறுகணம் மேலும் அவளின் இடையை வளைத்து பிடித்து, அவளை அப்படியே தூக்கி, தன் மடி மீது அமர வைத்து இருந்தான் ஹரி..
மிதிலா ஏற்கனவே ஹரியின் தொடுகையிலும்.. வருடலிலும் தன்னிலை இழந்து இருந்தாள்..
இதில் இப்பொழுது இத்தனை நெருக்கம் வேறு..
அவளின் அமைதி, அவனை மேலும் முன்னேறிச்செல்ல கூற..
ஹரி மெல்ல அவள் புடவையை இடுப்பில் இருந்து சிறிது விலக்கி, அவளுடைய வயிற்றில் தன் கைகளை தாராளமாக படரவிட்டு..
அவள் கழுத்தில் தன் முகத்தை ஆழமாக புதைத்து, புது மஞ்சள் கயிற்றின் வாசத்தை தன்னவளின் வாசத்துடன் சேர்த்து ஆழ உள்ளிழுக்க..
மிதிலாவின் தேகமோ, தோன்றும் புது புது பெயர் தெரியாத உணர்வுகளினால், உலைகலனாக கொதிக்க தொடங்க…. அவள் வாயோ தன் பேசும் சக்தியை முற்றிலும் இழந்தது..
மூளையிடும் கட்டளைகளை, அவள் தேகமும் செய்ய மறுத்தது…
மிதிலாவின் தொடர் அமைதி கொடுத்த தைரியத்தில், ஹரியின் கை மெல்ல மெல்ல கணவனின் உரிமையுடன், அவள் தேகத்தில் முன்னேற தொடங்கிவிட..
நிமிடம் சில கடக்க…
பதறிய மிதிலா, பயந்து போய், ஹரியின் கையை இறுகப் பற்றி.. தன்னில் இருந்து விலக்கி..
அவன் முகத்தையும், தன் கழுத்தில் இருந்து, அழுத்தமாக பற்றி நிமிர்த்த...
மோகம் அறுப்பட்ட ஹரி, என்ன என்று மிதிலாவின் முகம் பார்க்க.. அவள் முகமோ அதிபயங்கரமாய் வெளிரிவிட்டு இருந்தது…
பள்ளியறைப் பாடத்தை சுத்தமாக அறியாத.. ஏன் கல்லூரிக்கே கூட முழுதாக செல்லாத.. ஏதோ படத்தில் பார்த்த சில நெருக்கமான முத்தக்காட்சிகளும், அணைப்புகளுமே முதலிரவு என்று இதுவரைக்குமே நினைத்த மிதிலாவிற்குள்…
ஹரியின் நெருக்கமான தொடுகைகளும், அவ்வுணர்வுகளின் தாக்கமும் அவளுக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டு இருந்தது..
சிறு மொட்டான மிதிலாவை, ஹரி தன் வருடலால் மெல்ல மலர செய்ய.. அவளோ பூகம்பம் வந்தது போல் மாறி போனாள்..
கருத்துகள்
கருத்துரையிடுக