உண்மை காதல் -14
அத்தியாயம் -14
மிதிலாவின் முக மாற்றத்தில், தன்னில் தோன்றும் உணர்வுகளை முயன்று அடக்க பார்த்தான் ஹரி.
இரண்டாவது திருமணத்தை எதிர்க்கொள்ளும் பெண்ணாக, தன்னவளின் நிலை, மனரீதியாக அவனுக்கு புரிந்தாலும்.. அந்நிமிடம் ஒரு திடகாத்திரமான ஆணாக, முதல் முறை தன்னில் தோன்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த அவனுக்கே கடினமாக இருந்தது.. இருந்தும் அனைத்தையும் குழி தோண்டி புதைத்தான்.
மிதிலாவோ திருமணம் என்றால் இப்படியெல்லாமா நடக்கும் என்று பயந்து போனாள்.
அவள் கண்களில் இருந்து நீர் வேறு விழ தயாராகி விட…
ஹரி, "ஏன்டா செல்லமா முகம் ஒரு மாதிரி இருக்கு.. நான் உன்னோட டாக்டர் தானடா.. பிடிக்கலையா.. பரவாயில்லை விடு.. ஒன்னும் இல்லைடா குட்டிமா.. எதுவும் நினைக்காதே..", என்றவன், அவளை ஆறுதலாக மெல்ல அணைத்துக்கொள்ள, அவளும் அவனுள் அடங்கிப்போனாள்.
ஹரிக்கு நிச்சயம், மிதிலாவுடனான தன் தனிப்பட்ட வாழ்க்கை, சமநிலை அடைய நாட்கள் ஆகும் என்று முன்பே தெரியும் தான்.. இருந்தும் இன்றைய அவளின் பிரத்யேகமான அலங்காரங்களில், மயங்கி இருந்தவன், மிதிலாவின் ஒத்துழைப்பும் கிடைக்க, முன்னேறி, இறுதியில் ஏமாந்துப்போனான்..
அதற்குள் மிதிலாவின் கண்களில் இருந்து சூடான நீர் வழிந்து, ஹரியின் நெஞ்சை நனைத்தது....
அதில் மேலும் வருந்திய ஹரி, "பேபி ஒன்னும் இல்லடா.. இனி நான் எதுவும் உன்னை பண்ண மாட்டேன்.. சரியா சாரி பேபி.. உன்னோட பர்மிஷன் கேட்கலை.. நீ அமைதியா இருந்தனால உனக்கு ஓக்கேன்னு நினைச்சுட்டேன்… ஹோப் யூ நோ மை கண்டிஷன்.. ரொம்ப சாரிடா.. நார்மல் ஆகு.. ப்ளீஸ் ஹனி, என்ன பண்ணுது", என்றான், அவள் கண்களை துடைத்துவிட்டு சங்கடத்துடன்…
மிதிலாவோ, "எனக்கு ஒரு மாதிரி நடுக்கமா இருக்கு டாக்டர்.. மயக்கம் வேற வர மாதிரியிருக்கு.. வயிறு எல்லாம் உள்ளே ரொம்ப சூடா இருக்கு.. காய்ச்சல் வரப்போகுது போல எனக்கு..", என்றாள், ஏதோ உண்மையான மருத்துவமனையில், மருத்துவர் முன்பு அமர்ந்திருப்பது போல்..
ஹரியும், "ஒன்னும் இல்லை பேபி.. ஏர்லி மார்னிங் எழுந்ததா இருக்கும்டா.. இன்னைக்கு ரொம்ப அலைச்சல் இல்ல.. ரொம்ப சோர்வா வேற ஆகிட்டோம்.. அதான்", என்றுவிட்டு..
அருகில் இருந்த பாலை எடுத்து, "இதை கொஞ்சம் குடிமா, ஓகேவா ஃபீல் பண்ணுவ", என்று மிதிலாவின் வாயில் வைத்தான்..
மிதிலா சிறிது குடித்துவிட்டு போதும் என்றுவிட... மீதியை அவளிடம் பேசி பேசியே டையர்ட் ஆகிவிட்டு இருந்த ஹரி, குடித்துவிட்டு, காலி சொம்பை டேபுளில் வைத்தான்..
பிறகு, "பேபி நான் போயிட்டு நைட் டிரஸ் மாத்திட்டு வரேன்.. இந்த டிரஸ் எனக்கு அன்கம்ஃபர்டபிலா இருக்கு.. ", என்றவன், மடியில் இருந்த மிதிலாவை, மனமே இன்றி தூக்கி மீண்டும் பெட்டில் உட்கார வைத்துவிட்டு… பட்டென எழுந்து, பாத்ரூமிற்குள் சென்றவன்.. குளித்துமுடித்து.. சிறிது நிதானம் அடைந்து, பிறகே வெளியே வந்தான்…
இங்கு மிதிலாவோ, ஹரி எவ்வாறு விட்டுச் சென்றானோ அதே நிலையில் தான் இன்னமும் இருந்தாள்.. அசையவே இல்லை..
அவளை பார்த்த ஹரி, "பேபி நீயும் போயிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.. டயர்டா இருக்குன்னு சொன்ன இல்ல.. சீக்கிரம் தூங்கலாம் வா.. உனக்கு நான் கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சி இருக்கேன் பாரு.. அதில் நைட் ட்ரஸூம் இருக்கு.. இந்த செல்ஃப்ல தான் வச்சு இருக்கேன்.. வா வந்து பாரு.. உனக்கு பிடிச்சது எடுத்துட்டு போ.." என்றான்….
மிதிலா எங்கே ஹரி சொன்னதை கவனித்தாள்..
அவன் அழைத்த கணம் அவன் புறம் திரும்பியவள், வெறும் துண்டுடன் அவளுக்கு மிக அருகில் வந்து நின்று பேசிக்கொண்டு இருக்கும் ஹரியின் தோற்றத்தில் பதறிப்போனவள்.. குனிந்த தலையை கூச்சத்தில் நிமிர்த்தவேயில்லை..
கண் முன் இருந்த அவன் தோற்றத்தில் அவளுக்கு காதே கேட்கவில்லை..
ஹரியோ, அவளின் மனதை அறியாது, ஒரு கையால் தன் தலையை துவட்டியபடி, மறு கையால் மிதிலாவை பற்றி எழுப்பி….
"பேபி போ சீக்கிரம்", என....
அவன் மீதிறிருந்து சிதறிய நீர் திவலைகளின் பலனாக, சிலிர்த்து போனவளின் மேனி, அறையில் இருந்த ரோஜா இதழ்களை தாண்டி, சிவந்துவிட்டது..
அவளின் முகத்தை பார்த்த ஹரி, "பேபி நீ இப்படியே போகாம நின்னனா.. நான் அப்புறம் வெட்டிங் நைட் செலிப்ரேட் பண்ற மூடுக்கு போய்டுவேன்... அப்ப வந்து எனக்கு வாந்தி வருது.. பாத்ரூம் வருதுனு சொன்னா எனக்கு தெரியாது.. ஒழுங்கா ஓடிப் போயிடு… நானே ரொம்ப ட்ரைப்பண்ணி கண்ட்ரோல்ல இருக்கேன்...", என்று அவளை வார்ட் ரோப் பக்கம் நகர்த்திவிட..
அவன் சொன்னதில் பதறிய மிதிலா, வேகவேகமாக கப்போர்டில் இருந்த பிங்க் நிற நைட் ட்ரஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினாள்..
ஹரி, தன் உடையை மாற்றிவிடலாம் என்று செல்ஃப் பக்கம் போக…
பாத்ரூமிற்குள் இருந்த மிதிலா, "டாக்டர் டாக்டர்",என்று கத்தினாள்..
அதில் என்னமோ ஏதோ என்று பதறிய ஹரி, "என்னடா என்ன ஆச்சு.. என்ன வேணும்", என்றான்.. கதவுக்கு அருகில் வந்து..
உள்ளிருந்த மிதிலா, "கயல் அக்காவ இங்க கொஞ்சம் வர சொல்றீங்களா டாக்டர்", என்றாள் திடீரென்று...
அதில் ஹரி, "என்ன ஆச்சுடா.. அவங்க தூங்கீட்டு இருப்பாங்க இல்ல இப்ப.. அவங்க பாவம் பிரக்னண்ட் வேற.. எப்படி இப்போ போயிட்டு எழுப்புறது.. உனக்கு என்ன வேண்டும் சொல்லு..", என்று கேட்டான், உறுதியாக..
மிதிலா சிறிது தயங்கி, "அது வந்து டாக்டர்.. இந்த பிளவுஸ்ஸ என்னால அவிழ்க்க முடியலை.. பின்னாடி நாட் மட்டும்தான் வச்சு இருக்காங்க.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் என்னால ஓபன் பண்ணவே முடியலை.. ரொம்ப டைட் செய்துட்டேன் வேற.. சேரி வேற அவிழ்த்துட்டேன்.. திருப்பி எனக்கு கட்டவும் தெரியல.. ப்ளீஸ் போயிட்டு அக்காவை கூட்டிட்டு வாங்களேன்.. என்னால சரியா மூச்சே விட முடியலை", என்றாள்.
ஹரி, "ஓ காட்.. இதுக்கு எதுக்கு பேபி அப்படி கத்தன.. நீ டோர் ஓபன் பண்ணு பேபி. நான் நாட்டை ஓப்பன் பண்ணி விடுறேன்.. இதுக்கு எதுக்கு அவங்க..", என்றான்.
மிதிலா, "ஐயோ நீங்களா.. வேண்டாம் நீங்க அக்காவ கூப்பிடுங்க.. அவங்க வருவாங்க.. அவங்க தான் இந்த டிரஸ கொடுத்தாங்க..", என்று அடம் பிடிக்க....
ஹரியின் பொறுமையோ சுத்தமாக பறந்துப்போனது…
தனது இம்சை அரசியாள்..
"பேபி சொல்றதை புரிஞ்சுக்கோ.. அவங்களுக்கு இது டெலிவரி டைம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அதைவிட எப்படி நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போயிட்டு அவங்களை கூப்பிட்டுக்கிட்டு வர முடியும்.. லேடிஸ் வேற.. இது உனக்கும் எனக்குமான பிரைவேட் ப்ளேஸ்.. சோ கண்டிப்பா கூப்பிட முடியாது.. ஒழுங்கா நீ இப்ப டோர் ஓபன் பண்ணு.. இல்லன்னா.. நான் ஓபன் பண்ணுவேன் பார்த்துக்கோ.. சீக்கிரம் வா.. டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு தூங்கலாம்..", என்றான் கண்டிப்புடன்…
மிதிலா, வேறு வழியின்றி, அவசர அவசரமாக, புடவையை எடுத்து, மேலே சுற்றிக்கொண்டு வந்து கதவை திறந்தாள்..
உள்ளே ஹரி வந்ததும், பட்டென்று மிதிலா திரும்பி நின்றுக்கொள்ள…
ஹரி அவள் முதுகில் இருந்த புடவையை விலக்கி, பிளவுசில் போட்டு இருந்த முடிச்சை அவிழ்க்க முயன்றான்..
அவனே அப்பொழுது தான் அந்த டிசைனை பார்த்து இருந்தான்..
“எந்த ஸ்டூபிட் அது, இப்படி டிசைன் பண்ணது..”, என்றவன், இழுத்து இழுத்து பார்க்க.. ஒன்றும் முடியவில்லை..
மிதிலா தான் அவிழ்க்கின்றேன் என்றப்பெயரில், படுமுடிச்சி போட்டு இருந்தாளே..
ஹரி, "காட்.. இது என்ன பேபி இப்படி டைட்டா இருக்கு " என்றப்படி, எப்படி எப்படியோ அவிழ்க்க பார்த்தான்..
இறுதியாக தன் பல்லை வைத்து கடித்து இழுத்து பார்க்க..
மிதிலாவின் அடிவயிற்றில் பல ரயில்வண்டிகள் ஓடத்தொடங்கியது…
"ஹையோ டாக்டர்.. பிளீஸ் ரொம்ப கூசுது.." என்று அவள் நெளிய…
கடக்கும் ஒவ்வொரு நிமிடமும், ஹரியின் இத்தனை வருட பிரம்மச்சாரிய வாழ்க்கையை சோதித்துவிட்டே கடந்தது..
இதற்கு மேல் இதே நெருக்கம் நீடித்தால் அவ்வளவு தான் என்று நினைத்தவன்..
முடிவாக அங்கு அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து, முடிச்சு இருந்த இடத்தில் இருந்த துணியை நறுக்கிவிட்டான்..
அதை உணர்ந்த மிதிலா.. பதறி, "அச்சோ", என்று தன் மார்புடன் சேலையை அழுந்தப் பற்றிக்கொண்டு, சட்டென அவன்புறம் திரும்பி நின்று கொண்டாள்…
அவளின் முன்னெச்சரிக்கை செய்கையில் ஹரிக்கு சிரிப்பு வந்து இருந்தது, “ரொம்ப விவரம் ஆகிட்ட பேபி” என்றான்.
கூச்சம் தாளாத மிதிலாவோ, "ப்ளீஸ்.. நீங்க சீக்கிரம் வெளிய போங்க.. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்", என்றாள் தலையை குனிந்தப்படி....
அவள் முகத்தை தன் ஒற்றை விரல்க்கொண்டு நிமிர்த்தியவன் "ரொம்பவும் ஓவரா பண்ற பேபி நீ.. இவ்வளவு நேரமும் நான் பார்த்துட்டு தானே இருந்தேன்", என்றவன்… "சரி.. சீக்கிரம் வா பேபி", என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்…
உள்ளிருந்த மிதிலாவோ, ‘ஐயோ கடவுளே… என் மொத்த மானமும் இப்படி போச்சே..’ என்று புலம்பியப்படி,
சில நிமிடங்களில், உடைமாற்றிக்கொண்டு, மெல்ல கதவை திறந்து பூனைபோல் வெளியே எட்டிப் பார்த்தாள்..
ஹரி விளக்குகளை அணைத்துவிட்டு, பெட்டில் படுத்துவிட்டு இருந்தான்...
மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளி மட்டுமே அறையில் இருந்தது…
கதவு திறந்தப்பின்பும் மிதிலா வராது இருக்க, ஹரி, "பேபி சீக்கிரம் வா.. எவ்ளோ நேரம்தான் அங்கேயே இருப்ப..", என்றான்..
அதில் மிதிலா, மெல்ல நடந்து வந்து பெட்டில் ஒருபக்கம் படுத்துக்கொண்டாள்..
மறுவினாடி, மின்னல் வேகத்தில், ஹரி இருவருக்குமே சேர்த்து, ஒன்றாக, கீழே இருந்த பிளாங்கெட்டை இழுத்து போர்த்தியவன்…..
மிதிலாவை நெருங்கி, அவள் இடுப்பை சுற்றி கை போட்டு, அவளின் முதுகில் தன் முகத்தை புதைத்தான்..
அதிர்ந்த மிதிலாவோ, தன் இடையில் இருந்த ஹரியின் கையை இறுக பற்றிக்கொண்டு, தன் கால் முட்டியை வயிற்றுடன் சேர்த்து குறுக்கினாள்..
அதில் மேலும் அவளுடன் நெருக்கமாகிவிட்டு இருந்தவனுக்கு, அவனின் நரம்புகள் அனைத்திலும் இன்ப அமிலம் பாய்ந்துச்செல்ல…
மிதிலாவின் ஆலிலை வயிற்றை அழுந்தப்பற்றியவன், அவள் காதில், "பேபி நீ ஸ்கூல் டேஸ்ல ஸ்போர்ட்ஸ் எதாச்சும் விளையாடுவியா, இல்ல ஸ்விம்மிங் ஏதாச்சும் பண்ணுவியா ", என்றான் சம்மந்தமே இன்றி....
மிதிலா, "ஸ்விம்மிங் பிடிக்கும் டாக்டர்..", என்றாள், சிறு குரலில்.
ஹரி, "ஓ கூல்.. ரொம்ப நல்லது.. அதான் உனக்கு post pregnancy stretch marks எதுவுமே இல்லை போல..”, என்றவன், “இனியும் நாம எல்லா வீக் எண்டும்.. ஒன்னா ஸ்விம் பண்ண போகலாம்.. அது ரொம்ப குட்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்", என்றுக்கூற…
மிதிலாவிற்கோ, ஹரி சொன்னது எதுவும் புரியவே இல்லை.. ஏதோ நீச்சல் உடலுக்கு நல்லது என்கிறான் போல என்று நினைத்துக்கொண்டாள்..
இவை அனைத்தையும் விட ஹரியின் அணைப்பு.. அவளை எங்கோ அழைத்து சென்றது..
ஹரியின் உடல் வெப்பம் முழுவதும் மிதிலாவின் உடலுக்கு கடத்தப்பட்டது கொண்டு இருந்தது ....
ஹரியின் ஆண்மை நிறைந்த, கரத்தின் வலிமையும், பின்னங் கழுத்தில் உணரும் அவனின் தொடர் மூச்சுக் காற்றும், அவளை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல…
மேற்கொண்டு பேச முடியாமல் தன் கண்களை மூடிக்கொண்ட மிதிலா, "குட் நைட் டாக்டர்", என்றாள்…
ஹரியும், "குட் நைட் டா பேபி" என்றவன், மிதிலாவின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு, அவளை அணைத்துக் கொண்டே தூங்க தொடங்க...
சிறிது நேரத்தில், அவனின் அருகாமைக்கு பழக்கப்பட்ட மிதிலாவும் தூங்கத்தொடங்கினாள்..
அதேநேரம், அங்கு திருச்சியில்…
ஆதிகேசவன் தன் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்கார பெண்மணியிடம் விசாரித்துக் கொண்டு இருந்தான்…
"என்ன ஒழுங்கா நான் கொடுத்த மாதிரியே தினமும் கலந்து கொடுக்கறியா.. இல்லையா", என்று அதட்ட..
அவர், "ஐயா நீங்க சொன்ன மாதிரி தினமுமே.. சத்து மாவு கூட சேர்த்து.. மாத்திரையை கலந்து கொடுத்துட்டு தான் இருக்கேன் ஐயா", என்றார் நடுங்கியப்படி…
ஆதிகேசவன், "ஹம்ம்.. ஒழுங்கா நான் சொன்னதை செய்யணும்.. ஏதாச்சு மீறி நடந்துச்சுன்னா.. உன் பொண்ணு உனக்கு இல்லை.." என்று மிரட்ட....
அவர், “ஐயோ ஐயா.. அப்படி எதுவும் செய்துடாதிங்க..”, என்று பட்டென்று ஆதிகேசவனின் காலில் விழுந்துவிட..
எதிர்ச்சையாக தோட்டம் பக்கம் வந்த மாதவிக்கு, இவை அனைத்தும் காதில் விழுந்து விட, அவருக்கு மாரடைப்பு வந்தது போல் ஆகிவிட்டது..
அதே நேரம், அதே வீட்டில், ருத்ரனின் அறையில்…
அவன் மடியில் வந்து அமர்ந்த, அவனின் காதல் மனைவி, "ருத் நமக்கு எப்ப தான் குழந்தை பிறக்கும்.. ஃபர்ஸ்ட் நீங்க வேண்டாம்னு இருந்தீங்க.. இப்ப பாருங்க நமக்கு வேண்டும்னு நினைக்கும்போது கடவுள் கொடுக்க மாட்றாரு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு", என்றாள்.
அதற்கு ருத்ரன், "ஏன் சாஹி இப்படி சொல்ற.. அதுக்குள்ளே ஏன் இவ்ளோ அவசர படுற, கண்டிப்பா நமக்கு குழந்தை பிறக்கும்.. நாம ஃபாரின்ல இருக்க டாக்டரை கூட பார்க்கலாம்.. நமக்கு என்ன வயசா ஆகிடுச்சு.. ஃபிரியா விடு", என்று அவளை சமாதானம் செய்யதவன், அவளை வெளியே அழைத்துச்சென்றுவிட..
மாதவி, கிட்டசனில் இருந்த மருந்து டப்பாவை எடுத்து ஆராய்ந்துக்கொண்டு இருந்தார்.
_______________________
அங்கு அமெரிக்காவில், பொழுது விடிய தொடங்கியதுமே, பழக்க தோஷத்தில், ஹரிக்கு தூக்கம் கலையத் தொடங்கி, தன்னைச் சுற்றி நடப்பதை உணரத் தொடங்கினான்..
அப்பொழுது அவனுக்கு, கழுத்தில் பயங்கர வலி, இருப்பது போல், தூக்கத்திலேயே தோன்ற..
‘என்னடா இது..’ என்று திரும்ப முயற்சித்தான், முடியவில்லை, வலி வேறு அதிகமாக இருந்தது..
கண் திறந்து பார்த்தால், ஒன்றும் புரியவில்லை ஹரிக்கு, மெல்லிய வெளிச்சத்தில்..
மிதிலாவின் இரு பாதமே கண் முன்பு இருந்தது..
அது பாதம் தான் என்று புரியவே ஹரிக்கு சிறிது நேரம் பிடித்தது…
மிதிலா தான், தூக்கத்தில் வட்டம் அடித்து.. ஹரியின் கழுத்தில் தனது இரண்டு கால்களையும் நன்றாக போட்டு, தூங்கிக்கொண்டு இருந்தாள்..
நல்லவேளை ஹரி திரும்பி படுத்து இருந்ததால் அவன் முகம் தப்பி இருந்தது…
‘அடிப்பாவி..’ என்று, மெல்ல அவள் கால்களை விலக்கி விட்டு.. கழுத்தை தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான், ஹரி..
மிதிலா தன் தலையை, கால் வைக்கும் இடத்தில் வைத்து, படுக்கையில், கிராஸாக படுத்து இருந்தாள்..
இதை பார்த்த ஹரி, "காட் என்ன இது.. எப்படி இப்படி ஒரு பொசிஷனுக்கு மாறி தூங்கினா இவ.. இதுல தினமும் குழந்தைக் கூட வேற தூங்குற..”, என்று நினைத்தவன், கழுத்தை தேய்த்தப்படி, “எப்படி நான் இவ கூட தினமும் படுத்து தூங்க போறேனே.. கிரேஸி..", என்று நினைத்துக்கொண்டே எழுந்து, பாத்ரூம் சென்று விட்டு வந்தவன்…
மிதிலாவை மெல்ல தூக்கி, அவளை நேராக, தலையணையின் மீது தலை வைத்து படுக்க வைத்துவிட்டு.. பிளான்க்கெட்டை ஒழுங்காக அவளுக்கு போர்த்திவிட்டு..
அவளுடன் மீண்டும் சிறிது நேரம் படுக்கலாம் என்று படுத்த ஹரி.. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான்..
மிதிலா, நேற்றைய கலைப்பில் நன்றாக அடித்துப் போட்டதுபோல் தூங்கி கொண்டு இருந்தாள்…
மீண்டும், காலை 8 மணி அளவில், தூக்கம் கலைந்து எழுந்த ஹரி, மூச்சடைத்து போனான்.
மிதிலாவின் ஸ்பரிசத்தை, தன் உடல் முழுக்க உணர்ந்துக்கொண்டு இருந்தான்… அவன் மீது தான் கங்காரு குட்டி போல் படுத்துக்கொண்டு இருந்தாள்..
மனம் முழுவதும் மெல்லிய இன்ப உணர்வுகள் பாய, இருக்கைகளாலும் மென்மையாக மிதிலாவை அணைத்துக் கொண்டு.. தன் கண்களை திறந்தான் ஹரி..
மெல்லிய சூரிய வெளிச்சத்தில்.. தன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு இருந்த மிதிலாவின் முகத்தை தான் முதலில் ஹரி பார்த்தான்..
மிதிலாவின் கை, ஹரி உடைய இரவு உடையின் கழுத்து பகுதியை, இறுக்கமாக இழுத்து பிடித்து கொண்டு இருந்தது..
கால், ஹரியின் வெற்று கால்களின் மீது முழுவதும் படர்ந்து இருந்தது..
அந்நிமிடத்தின் இன்ப சுமை, ஹரியின் நெஞ்சில் கூடிக்கொண்டே இருந்தது..
மெல்ல மிதிலாவை தன் முகத்தின் அருகே இழுத்தவன்…
ஒருக்கையால் அவளின் முகத்தில் படர்ந்து இருந்த முடிகளை ஒதுக்கிவிட்டு… முதலில் அவள் நெற்றியில் தன் உதடுகள் அழுந்த முத்தமிட்டான்… . அடுத்து அவன் உதடுகள் சென்றது அவளின் கன்னக்குழியிடம் தான்..
“குட் மார்னிங் பேபி டால்..”, என்று, மெல்ல அவளின் கன்னக்குழியில், மூழ்கி வெளிவந்தவன்…
அடுத்து அவன் மூளை ‘டேய் வேண்டாம், வேண்டாம்..’ என்று எவ்வளவு தடுத்தாலும்..
அவன் மனமோ, ‘நோ எனக்கு வேண்டும்’ என்று அதனை கண்டுக்கொள்ளாமல்..
காலை நேரத்தில் பூத்துக்குலுங்கும், அழகான ரோஜாவை ஒத்த, மிதிலாவின் செப்பு உதடுகளுடன், தன்னுடைய ஆண்மை நிறைந்த திண்மையான ஸ்ட்ராபெரி உதடுகளை மெல்ல பொருத்தியவன்…
அந்த உணர்வுகள் கொடுத்த சுகத்தில்.. மேலும் மேலும், மிதிலாவின் உதடுகளில் தன்னை மறந்து புதைய ஆரம்பித்தான்…
அதில் ஹரியின் ஷேவ் செய்யப்பட்ட பின், வளர்ந்திருந்த சிறு சிறு மீசை முடிகள்… முள்ளென மிதிலாவின் உதட்டை அழுத்த… அவளின் தூக்கம் கலைய தொடங்கியது….
மிதிலா தூக்கத்தில் நெளிவதை உணர்ந்த ஹரி.. பட்டென்று தன் உதடுகளை பிரித்து எடுத்துக்கொண்டு..
தன் கைகளையும் விலக்கி தலைக்கு மேல் வைத்துக்கொண்டான்..
மூடிய இரு இமைகளுக்குள் மிதிலாவின் கண்மணிகள் அசைய வேறு தொடங்க.... தன் கண்களை பட்டென்று ஹரி மூடிக்கொண்டான் …
மிதிலா எழுந்ததும், அவள் இருக்கும் நிலையை பார்த்து, என்ன செய்வால் என்று பார்க்க.. அவன் ஆர்வமாய் காத்து இருக்க…
அவளோ, தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்தவள் ஒன்றும் புரியாமல்.. மீண்டும் ஹரியின் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்க தொடங்கினாள்…
மிதிலா மீண்டும் கட்டிப் பிடித்ததுமோ.. ஹரி தன் கண்களை லேசாக திறந்து பார்க்க.. மிதிலா மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… அதை அவளின் சீரான மூச்சில் உணர்ந்தவன்…
ஒரு பெருமூச்சை வெளியிட்டப்படி, மிதிலாவின் புறம் திரும்பி, அவளை கட்டி அணைத்தப்படி படுக்கலாம் என்று திரும்ப ஹரி முற்பட…
அதில் மீண்டும் மிதிலாவின் தூக்கம் தடைப்பட, அவன் அசைவில், எரிச்சல் உற்றவள், தன்னுடைய காலை தூக்கி ஹரியின் அடிவயிற்றில் தொப்பென்று போட்டு, அவனை கட்டிப்பிடிக்க..
"அவுச்… oh my gosh.. ஸ்ஸ்ஸ்…", என்று ஹரியின் முனங்கல் சத்தம் அவ்விடத்தை நிறைத்தது.…
ஹரிக்கு வலியில் ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்தது…
சட்டென்று மிதிலாவின் கால்களை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தான்…
காலையில் இருந்து, அவன் செய்த கள்ள வேலைகள், அனைத்திற்கும் சேர்த்து, மிதிலா முற்றுப்புள்ளி வைத்து விட்டு இருந்தாள்.
அவன் கோபமாக திரும்பி பார்த்தால்..
மிதிலாவோ, குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள்…
நடந்த எதுவும் எனக்கு தெரியாது.. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல்.. இருந்தவளை பார்த்து..
ஹரி "காட்.. ஷி ஈஸ் வெரி டேஜ்ஜூரஸ்.. அண்ட் கிரேஸி, தூங்கி எழுந்திரு பேபி முதல்ல... இன்னைக்கு உன்னை என்ன பண்றேனு பாரு…", என்று மிதிலாவை பார்த்து முறைத்து விட்டு… எழுந்த ஹரி, ரூமில் இருந்த அலங்காரங்களை அனைத்தையும் கலைந்து.. பெருமூச்சோடு அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டு…. குளிக்க பாத்ரூம் சென்றான்...
குளித்துமுடித்து வந்த ஹரி, காலையில் வாங்கிய மிதியே இன்றைக்கு போதும் என்று முடிவு செய்து… மிதிலாவை தொந்தரவு செய்யாமல்… கீழே சென்றான்..
கீழே ஹாலில் குழந்தையுடன்….. ஆதித்யாவும்.. ஜூடியும்(Judy) விளையாடிக் கொண்டு இருந்தனர்..
ஜூடியை தான் மகழ்மதியை வீட்டோடு தங்கி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்து இருந்தனர்… கிட்டத்தட்ட நாப்பது வயது இருக்கும் அவருக்கு.. பதினைந்து வருடங்களுக்கு மேலாக அவர் இப்பணியில் தான் இருக்கின்றார்.
ஹரி கீழே இறங்கி வருவதை பார்த்ததும்.. ஆதித்யா… "குட்மார்னிங் ஹரி…".. என்றான் புன்னகை முகமாக..
ஹரி, "தேங்க் யு ஆதி… ஹாப்பி மார்னிங்… எல்லாரும் எழுந்துட்டீங்களா அதுக்குள்ளே… சாரி.. நான் தான் தூங்கிட்டேன்…", என்றுவிட்டு.. ஜூடிக்கும் விஷ் செய்தான்…
ஆதித்யன், "புது மாப்பிள்ளை சீக்கிரம் எழுந்தா தான் தப்பு ஹரி… நீங்க இன்னும் கூட தூங்கலாம் தப்பில்லை ", என்றான் சிரித்துக்கொண்டே..
அதில் ஹரி, "ஹே மேன்… நீங்க வேற…", என்றவன், மனக்கண்ணில் மிதிலாவிடம் மிதி வாங்கியதே வந்து போனது… ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருந்தா… என் கதையையே முடிச்சுட்டு இருப்பா, அந்த டெவில்’ என்று நினைத்து சிரித்துக் கொண்டான்..
ஆதித்யனிடம் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, ஹரி கிட்சன் சென்றான்..
அன்னபூரணியும், கயல்விழியும் காலை உணவை தயாரித்து கொண்டு இருந்தனர்..
ஹரி, "மாம், மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் வெளியே ஆர்டர் கொடுத்து இருக்கலாம் இல்ல… ஏன் நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டுட்டு.. நீங்க போய் ஹால்ல உட்காருங்க மாம்.. நீயும் கொஞ்சம் போயிட்டு ரெஸ்ட் எடுமா கயல்.. மீதி வேலையை நான் முடிக்கறேன்..", என்றுக்கூற...
அன்னபூரணி, "சிம்பிளா தான் கண்ணா செஞ்சோம்.. வேலை முடிஞ்சிடுச்சு.. நீ உனக்கும் மிதிலாக்கும் காபி எடுத்துட்டுப்போ ஹரி.. குடிச்சிட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் ரெடியாகி, டிபன் சாப்பிட வாங்க.. எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்.." என்றார்.
கயலும், ‘நேத்து நைட், என்ன நடந்துச்சுன்னு தெரியலையே.. டாக்டர் முகம் சாதாரணமா தான் தெரியுது..’ என்ற எண்ணத்தில், "ஆமாம் அண்ணா மிதிலாவ கொஞ்சம் சீக்கிரம் கீழே வரச்சொல்லுங்க.. எங்களுக்கு காலையில 11க்கு ஃபிளைட்", என்றாள்…
ஹரி, "சரிமா", என்றுவிட்டு.. குழந்தையை தூக்கிக்கொண்டு, மிதிலாவுக்கும்.. தனக்கும் காபியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான்…
அறையில் காபியை ஒருபக்கம் டேபிளில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு..
குழந்தையுடன் கட்டிலில் ஹரி அமர…
மறுவினாடியே, குழந்தை காலையில் இருந்து தாயை காணாத ஏக்கத்தில், மிதிலாவிடம் பாய்ந்து சென்றது…
கடந்த ஒரு வாரமாகவே, மகிழ்மதி மிகவும் சேட்டையாகி போனாள்.... அவள் கால்கள் தரையில் படுவதே இல்லை.. ஒரே ஓட்டம்தான் வீடு முழுவதும்….
அதிலும் ஹரியுடன் சேர்ந்து அங்குயிங்கு என்று வெளியில் சென்றுவர, இன்னும் துருதுருவென ஆகிப்போனாள்…
மிதிலாவை பிடித்து உலுக்க ஆரம்பித்த மகிழ்மதி.. மறுநிமிடம் அவள் மீது ஏறி குதிக்க ஆரம்பிக்க.. மிதிலா அலறியடித்தப்படி உடனே "அச்சோ மகிம்மா.. ஸ்லோவா டா.. அம்மா பாவம்ல", என்றப்படி,
எழுப்பி விட்டாள்..
ஹரி, "இனி, சீக்கிரமா இவளை எழுப்ப.. பாப்பாவ தூக்கிட்டு வந்தா போதும் போல.. நைஸ் ஐடியா.." என்று நினைத்தவன்..
"குட் மார்னிங் பேபி.. நல்ல தூக்கமா டா ", என்றப்படியே காபியை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.. முன்னொரு நாள் அவள் காபிக்கு செய்த அழும்பின் நினைவில் சிரித்துக்கொண்டே..…
மிதிலா, "தேங்க் யு டாக்டர்.. குட் மார்னிங்.. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல… எப்பவும் அலாரம் வச்சி இருப்பேன் ஃபோன்ல.. நேத்து எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. மகிக்குட்டி வேற எப்ப எழுந்தா தெரியல.. என்னை நீங்க எழுந்த அப்பவே எழுப்பி இருக்கலாம் இல்ல… பாப்பா ஏதாச்சும் சாப்பிட்டாளா... நீங்க எப்ப எழுந்தீங்க.. எனக்கு இப்பதான் படுத்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சி.. கயல் அக்கா வேற சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வேற வர சொன்னாங்க.", என்றுவிட்டு… மணியை பார்த்தவளுக்கு.. இதயமே நின்றுவிட்டது… மணி ஒன்பதா…. என்று அதிர்ந்து ஒரே மூச்சில் காபியை குடித்து முடித்தவள்…
"2 mins.. குளிச்சிட்டு வந்துடறேன் டாக்டர் ".. என்றுவிட்டு குதித்து இறங்கியவள், துணிகளை அள்ளிக்கொண்டு குளியல் அறையை நோக்கி ஓடினாள்…
ஹரி, "ஹே பேபி… பொறுமையா போ.. இப்போ என்ன அவசரம் உனக்கு…காபி இனி ஸ்லோவா குடி".. என்பதற்குள் கதவையே அடைத்துவிட்டாள்..
"க்யுட் கிரேஸி… " என்றவன், காஃபியை குடித்துவிட்டு…
குழந்தையை தூக்கிக்கொண்டு.. "பேபி நான் கீழே இருக்கேன்.. நீ ரெடி ஆகிட்டு வா… பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட.." என்றுவிட்டு கிளம்பினான்...
பிறகு மிதிலா தயாராகி கீழே வந்ததும்…
ஹரியையும் மிதிலாவையும் ஒன்றாக பூஜை அறைக்கு சென்று.. விளக்கு ஏற்றி கடவுளை வணங்கிவிட்டு வரச்சொல்ல.. இருவரும் முடித்துவிட்டு வர…
அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை பேசிக்கொண்டே முடித்தனர்..
இன்னும் சில நிமிடங்களில் கயல்விழியும், ஆதித்யாவும் கிளம்பி விடுவார்கள்..
கயல்விழி மிதிலா உடன் அறையில் பேசிக்கொண்டு இருந்தாள்..
"ஏன் மிதிலா, நீ அண்ணாகிட்ட இன்னும் சொல்லலை, ஆதித்யாவ வேண்டும்னா சொல்ல சொல்றேன்.. நானே சொல்றேன் நானே சொல்றேன்னு நீ கடைசி வரை சொல்லவே இல்லை.. இதுக்கு மேலையும் சொல்லாம இருந்தா ரொம்ப தப்பு டா.. நீ நினைக்கிற போல இது சின்ன விஷயம் இல்லை.. பின்னாடி உனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்.. முக்கியமா அண்ணாவோட கேரக்டர், நாங்க பார்த்த வரைக்கும் அப்படித்தான் இருக்கு.. ரொம்ப கேரிங்கா.. லவ் ஆ.. உரிமையா.. எல்லாமே உனக்கும் குழந்தைக்கும் பண்றாங்க.. சோ நீ இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறைக்கிறேனு தெரிஞ்சா அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. ஈவன் என்ன முடிவு எடுப்பாங்கனே தெரியாது.. நேத்து ரூம்ல என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா சொல்லு.. ஏன் உங்களுக்குள்ளே எதுவும் நடக்கலைய", என்று அவள் கேட்க…
மிதிலா ,ரூமில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டாள்..
கயல்விழிக்கே ஹரியின் நிலைமையை நினைத்து உண்மையில் மிகவும் பாவமாக இருந்தது…
மறுபுறம், ஹரியை நினைத்து, பிரம்மிப்பாகவும் இருந்தது.. ஒரு மனிதன் எவ்வாறு காதலுக்காக இவ்வளவு பொறுமையாக அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றான் என்று..
என்ன செய்வது, மிதிலாவிற்கும், அந்தளவிற்கு வயதும், பக்குவமும் இல்லையே..
நேற்றே அவளிடம் சிலவிஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தாள் தான்.. பிறகு எங்கே பயந்துக்கொள்ள போகிறாள்.. என்று விட்டு விட்டாள்.. அதைவிட ஹரியே ஒரு மருத்துவன் என்னும் பொழுது அவன் பார்த்துக்கொள்வான் என்று அவள் நினைக்க அது எவ்வளவு தப்பாகி போனது…
வேறுவழியின்றி கயல்விழி, மிதிலாவின் கையை பற்றிக்கொண்டு, "மிதுமா நான் ஒன்னு சொல்றேன்.. நீ கண்டிப்பா இத கேட்டு நட டா சரியா.. ஃபர்ஸ்ட் கல்யாணம் அப்படினறது நீ நினைக்கிற மாதிரி இல்லை.. நீங்க இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணவே இல்ல.. ஜஸ்ட் என்டர் ஆகி இருக்கீங்க.. இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு.. இப்போ உங்களுக்குள்ளே நடந்தது எல்லாம் ஜஸ்ட் லவ்வர்ஸ்குள்ளே நடக்கிறது தான்.. எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.. சோ நீ இனி கொஞ்சம் டாக்டர் என்ன சொன்னாலும் கேட்டுக்கோ அண்ட் நடந்துக்கோ.. எஸ்பெஷல்லி நேத்து நீ சொன்ன வரைக்கும் வச்சு பார்த்தா டாக்டர் ரொம்ப பாவம் டா.." என்றுவிட்டு,
சில அறிவுரைகளையும், அவள் பயப்படாத மாதிரி கூறி..
"ஃபர்ஸ்ட் நீ அவரை எதுக்கும் தடுக்காமல் அமைதியா இரு.. உனக்கு போக போக புரியும்.. நீ இந்த மாதிரி பண்றது அவருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் புரிஞ்சுக்கோ மிதிலா.. எல்லாரும் இதெல்லாம் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்.. எல்லா ஹஸ்பெண்ட் அண்ட் ஃவைஃப்குள்ளே இந்த மாதிரியெல்லாம் நடக்கும்.. புரியுதா", என்று முடிந்தவரை மிதிலாவிற்கு புரியும் படி சொல்ல..
மிதிலாவிற்கோ அடிவயிற்றில் யாரோ புளியை கரைப்பது போன்று இருந்தது…
இருபத்தி நான்கு மணி நேரமும் கட்டிப்பிடித்துக் கொண்டு, முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்க சொன்னாள்.. நிம்மதியாக செய்வாள்… அவளின் மூளையை பொருத்தவரை அது தான் காதல்.. இப்படி தான் பதிவாகி இருந்தது…
கயல்விழி செல்ல சொல்ல, அவளுக்கு என்ன சொல்கிறார்கள் இவர்கள் என்று ஜன்னி வரும் போல் ஆனது…
சிறிது நேரத்தில், கயலும் ஆதித்யாவும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்..
ஆதித்யா, ஹரியை தன்னுடைய வீட்டிற்கு மிதிலா உடன் விருந்துக்கு வரச்சொல்ல..
ஹரி குழந்தை பிறந்த உடன் வருவதாக சொல்லி, அவர்களுக்கு விடை கொடுத்தான்..
அவ்வளவுதான் ஹரியின் வீடு பழைய நிலைமைக்கு திரும்பி விட்டது…
மதியம்,
அன்னபூரணியும், மிதிலாவும் கிட்சனில் வேலையாக இருக்க...
குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது..
அமெரிக்காவில் எப்பொழுதும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை நிறைய பண்டிகை தினங்கள் வரும்..
Halloween, Black Friday, Christmas, New year
என வரிசையாக வர,
தொடர்ந்து விடுமுறையும், கொண்டாட்டமும் தான்....
அனைவரும் தங்கள் வீட்டினுள்ளும் தோட்டத்திலும் முழுக்க, நிறைய அழகு பொருட்கள் மற்றும் லைட்டிங்களால் விதவிதமாக.. ஒவ்வொரு ஆண்டும் அலங்கரிப்பர்…
அப்பொழுதுதான் வெப்பநிலையும் முற்றிலும் மாறி, குளிர்காலமும் வேகவேகமாக தொடங்கும்..
பனிப்பொழிவுகளும் அதிகமாக இருக்கும்..
அதற்காக ஹரி, ஜூடியுடன் சேர்ந்து பேசிக்கொண்டே..
தோட்டம், ஸ்விம்மிங் ஃபூல், ட்ரீ ஹவுஸ்.. காம்பவுண்ட் வால்… வீட்டின் மேலே என்று அனைத்தையும் அலங்கரிக்க தொடங்கினான்…
இரவில் பார்க்கும் போது அவ்வளவு இரம்யமாக இருக்கும்..
ட்ரீ ஹவுஸிற்கு வேறு… இம்முறை ஹரி நிறைய விளக்குகள் புதிதாக வாங்கி வைத்து இருந்தான்….
அவன் உடன் தூங்கி எழுந்து வந்த மகிழ்மதியும் சேர்ந்துக்கொள்ள நேரம் போனதே தெரியவில்லை…
மிதிலாவோ ஹரியின் கண்முன் மறந்தும் வரவில்லை…
கயல்விழி சொன்னதை கேட்டதில் இருந்து, பயந்து போனவள், அவன் வரும் பொழுதெல்லாம் எங்காவது சென்று மறைந்து விடுவாள்..
மாலைவரை ஹரிக்கு அவ்வேலையே சரியாக இருந்தது…
இரவு உணவு முடிந்தபிறகு ஹரி தங்களின் அறைக்கு சென்றுவிட…
மிதிலா, எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தை கடத்தியப்பிறகே,
அன்று இரவு குழந்தையுடன்… தூங்க வந்து சேர்ந்தாள்…
அதைப்பார்த்த ஹரியால் எதுவும் சொல்ல முடியவில்லை…
அதைவிட எவ்வாறு ஒரு தாயிடம் இருந்து, குழந்தையை பிரிப்பது…
குழந்தையை பெட்டில் விளையாட விட்டு… சிறிது நேரம் இருவரும் பொதுவான கதைப் பேசிக்கொண்டு இருந்தனர்…
குழந்தையோ விரைவாக, களைப்பில், ஹரிக்கு உதவியாக, தூங்கி விட்டது…
நடுவில் குழந்தையை படுக்க வைத்த மிதிலா, அவளும் உடனே படுத்து பயத்தில் கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள்..
வெவ்வேறு சிந்தனைகளால் இருவருக்குமே சுத்தமாக தூக்கம் வரவில்லை..
மிதிலாவின் செய்கைகளை கவனித்துவிட்ட ஹரி, மிதிலாவுக்கு தன்னுடைய தோழியின் மூலம் கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று நினைத்தான்..
முதலில் மிதிலாவிடம், அவளின் வயதிற்கு ஏற்ற மகிழ்ச்சியோ.. சிந்தனையோ.. மன முதிர்ச்சியோ.. என எதுவும் ஹரிக்கு திருப்தியாக காணப்படவில்லை..
அதைவிட தங்களின் வாழ்வை குறித்த தெளிவு அவளுக்கு வேண்டும்.. என்று நினைத்தான்..
சிறிது நேரத்தில் மிதிலாவிற்கு தூக்கம் கண்ணைக் கட்டியது..
அவளோ இருந்தும் கஷ்டப்பட்டு முழித்துக்கொண்டே இருந்தாள்..
எழுந்து எழுந்து நீரை எடுத்து குடித்துக் கொண்டும்.. சிறிது நேரம் கழித்து பாத்ரூம் சென்று வந்து கொண்டும் என்றும் அறையை உருட்டிக் கொண்டு இருந்தாள்..
இதை கவனித்துக்கொண்டிருந்த ஹரி, திரும்பத்திரும்ப அவள் இவ்வாறு செய்யவும், 'சம்திங் ஃபிஷி' என்று எழுந்து வந்தான் மிதிலாவிடம்…
"பேபி வாட் ஹேப்பென்ட்… ஏன் சும்மா சும்மா வாட்டர் குடிக்கிற… நெக்ஸ்ட் பாத்ரூம் போற… உனக்கு என்ன ஆச்சு", என்று மெல்ல கேட்க..
மிதிலா திருதிருவென ஹரியை பார்த்து முழித்தாள்…
பொறுமையிழந்த ஹரி, "ஆர் யூ மேட்.. டெல் மீ வாட் ஹேப்பெண்ட்", என்று மெல்ல கத்த..
மிதிலாவிற்கோ, ஹரி லூசா என்று கேட்டதும் கோபம் வந்துவிட்டது... "நான் ஒன்னும் லூசு இல்ல.. நீங்க தான் லூசு.. நீங்க ஏன் தூங்காம இருக்கீங்க முதல்ல", என்றாள் கோபமாக..
அவளுடைய கோபத்தை பார்த்த ஹரி, மேலும் தன் பொறுமையை இழந்து, "இன்ட்ரஸ்டிங்… வெரி இன்ட்ரஸ்டிங், நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்றியா பேபி.. ஃபர்ஸ்ட் நான் கேட்டதுக்கு ஆன்சர் பண்ணு", என்றான் அவளை நெருங்கி அவள் காதில் அழுத்தமாக….
ஹரியுடைய திடீர் நெருக்கத்தில்… மிதிலாவிற்கோ மூச்சடைத்தது…
சட்டென்று எழுந்து அமர்ந்துக் கொண்டாள்… படப்படப்புடன்...
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய செய்கைகள் அனைத்துமே ஹரிக்கு வித்தியாசமாக இருந்தது..
அதுவும் நள்ளிரவு நேரத்தில்...
சற்று தள்ளி அமர்ந்த மிதிலா,
"அது நான் சின்ன வயசுல இருந்து டாக்டர், எப்பவும் தூங்கும் போது மத்தவங்க மேல கால் போடறேன்னு சொல்லுவாங்க…
அதனால எப்பவும் எனக்கு தூக்கம் வரும் போது, நான் பாப்பாவ அப்படியே பெட்ல படுக்க வச்சுட்டு, கொஞ்சம் தள்ளி பக்கத்துல கீழே படுத்துப்பேன்…
அதான் இப்போ பக்கத்தில் படுக்க கொஞ்சம் பயமா இருக்கு.. நான் கீழே படுத்துக்கலாம்னு தான் நினைச்சேன்.. ஆனா அவ கீழே விழுந்துட்டா என்ன பண்றது..
நேத்து நைட் கூட நான் ஒழுங்கா தான் தூங்கி இருக்கேன்… இன்னைக்கு காலையில எழுந்து பார்க்கும் போதும்.. நைட்டு படுத்த மாதிரியே தான் இருந்தேன்.. இப்போ அந்த பழக்கம் எல்லாம் இல்லை.. பட் இருந்தாலும் பயமா இருக்கு", என்றாள்…
அவள் சொல்லும் கதையை பொறுமையாக காதுக்கொடுத்து கேட்ட ஹரிக்கு, அவள் கடைசியில் சொன்னதை கேட்டு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்தது…
சட்டென்று திரும்பி நின்று முகத்தை மூடி சிரிப்பை கட்டுப்படுத்தினான்.. எங்கே குழந்தை எழுந்து விட போகின்றாள் என..
மிதிலா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்க்க…
எதுவும் சொல்லாமல் சென்ற ஹரி, சுவற்றின் பக்கம் இரண்டு தலைகாணியை எடுத்து வைத்துவிட்டு குழந்தையைத் தூக்கி அவன் இடத்தில் படுக்க வைத்துவிட்டு… மறுபக்கமும் தலைகாணி வைத்துவிட்டு..
நடுப்புறம் வந்தவன்…
மிதிலாவின் பக்கத்தில் ஒட்டி படுத்தான்.. இடம் பற்றாக்குறையால்…
மிதிலா, திருதிருவென்று முழித்தப்படி இன்னும் அமர்ந்து இருக்க…
அவளை இழுத்து படுக்க வைத்த ஹரி, "நாளைக்கு நம்ம ரூம்லயும்.. பேபிக்கு செப்பரேட்டா சின்ன கட்டில்(Baby cot) செட் பண்ணிடலாம்… சரியா.. இப்ப தூங்கு", என்றான் காதில் கிசு கிசுப்பாக…
மிதிலா அவனையே எங்கே முதலிரவு கொண்டாடி விடுவானோ என்ற பயத்தில், தன் முட்டை கண்ணை விரித்தப்படி பார்க்க…
ஹரி, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா", என்றப்படி, மிதிலாவின் மீது தன் ஒரு கையையும், காலையும் தூக்கி போட்டு.. அவளுடன் நெருங்கி படுத்தவன்… "இப்படி தான் நீ நேத்து நைட்டு ஃபுல்லா என் கூட தூங்கின",… என்றப்படி அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான்…
அதில் அதிர்ச்சியிலும்… கூச்சத்திலும்.. மிதிலாவின் உடல் நாணி சிவந்தது…
மிதிலா "அச்சோ டாக்டர், உண்மையாவா சொல்றீங்க.. ஐயையோ", என்று ஹரியின் முகத்தை பற்றி நிமிர்த்த...
ஹரி, "யெஸ் பேபி.. பிராமிஸ்… நான் கூட இப்படி" என்று அவள் முகத்தில் ஒரு இடம் விடாமல் அழுந்த முத்தமிட்டப்படி. "நிறைய கிஸ் பண்ணேன்", என்று செயல்முறை விளக்கம் தர...
மிதிலாவோ, ஹரியின் அதீத நெருக்கத்திலும், தொடர் முத்தத்திலும் சோர்ந்து, ஹரியையே பற்றுக்கோலாக பற்றி, அவனுள் புதைந்து, "பிளீஸ் டாக்டர்", என்று முனக..
இருவரின் இதய துடிப்புமே அதிகரித்து… அவ்விடத்தை நிறைத்தது..
ஹரி மேலும் மெல்ல மிதிலாவினுள் புதைய…
கயல் சொன்னதை வைத்து சிலவற்றை புரிந்துக்கொண்டு இருந்த மிதிலா, தன்னை மீறி ஹரியின் கரங்களுக்குள், இன்பமாய் சரண் அடைந்தாள்…
நேற்றும் இன்றும் மிதிலாவின் உடல் மொழியில் இருந்த வித்தியாசங்கள் ஹரிக்கு புரிய… மருத்துவன் மகிழ்ச்சியானான்…
தன்னுடன் அவள் வாழ தயாராகி விட்டது தெரிந்தது….
இருந்தும் குழந்தையை அருகில் வைத்து கொண்டு என்ன செய்வது.. அதுவும் ஒரே படுக்கையில் என்று பொறுத்தவன்….
மிதிலாவை தூக்கி தன் நெஞ்சின் மீது படுக்கவைத்து… அணைத்து கொண்டவன்..
அவளின் அருகாமை தந்த மயக்கத்திலேயே, தூங்க ஆரம்பித்தான்…
கருத்துகள்
கருத்துரையிடுக