உண்மை காதல் -15
அத்தியாயம்-15
இன்று காலை, அதிசயமாக முதலில் மிதிலா கண்விழித்து விட்டு இருந்தாள்..
தன் முகத்தின் நேராக இருந்த ஹரியின் முகத்தை பார்த்தவள்…
எழ முற்பட்டு, அது முடியாது போக…
என்னவென்று பார்த்தவளுக்கு, பிறகு தான், இரவு முழுவதும், ஹரியின் மீது தான் தூங்கி இருக்கின்றோம் என்பதே புரிந்தது…
ஹரி, அந்தளவிற்கு, மிக இறுக்கமாக மிதிலாவை தன் கைசிறையில் வைத்து இருந்தான்…
அதில் மிதிலாவின் நெஞ்சம் சிறிது குழைய, பொறுமையாக, எந்தவித இடையூறும் இன்றி, தன்னவனின் அழகை நெருக்கமாக கண்டு ரசிக்க ஆரம்பித்தாள்..
அவனை பார்த்து முடித்தவள், தான் குடிக்கொண்டு இருக்கும் அவனின் நெஞ்சில், பட்டென்று குனிந்து முத்தமிட்டவள்..
அவனின் முகத்தின் அருகே, முன்னேறி சென்று, அவன் கன்னத்தில் மெல்ல முத்தம் ஒன்றை வைக்க…
மறுவினாடி அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை..
ஹரியின் உதடுகள், மிதிலாவின் உதடுகளை, அதிரடியாக சிறையெடுத்து, தனக்குள் விழுங்கி இருந்தது…
அவன் கரங்களோ, அவளின் மேனி எங்கும் தங்கு தடையின்றி, தன் பயணித்தை, தொடங்கி இருந்நது…
ஹரி, மிதிலா அவன் நெஞ்சில், தன் இதழ்களை பதிக்கும் பொழுதே முழித்துவிட்டு இருந்தான்..
அமைதியாக மிதிலாவுடனான நெருக்கத்தை அனுபவித்து கொண்டு இருந்தான், கண்களை மூடிக்கொண்டு…
அதிலும் மிதிலாவின் முத்தம் ஹரிக்கு அவ்வளவு தித்திப்பாக இருந்தது…
மிதிலாவே தன்னை நெருங்குவது சொற்ப முறையே என்பதால், ஆழ அனுபவித்தான், மிதிலாவின் இயற்கையான அந்நெருக்கத்தை...
பிறகே தன் உணர்வுகளை அடக்க முடியாமல்.. அவளை அடக்க கிளம்பி விட்டு இருந்தான்…
மிதிலாவோ, வெட்கம் தாளாது, ஹரியிடம் இருந்து நெலிந்து… பிரிந்து…. அவனை தள்ளிவிட்டு.. பெட்டில் இருந்து துள்ளி இறங்கினாள்….
ஹரி, "ஹே கல்ப்ரிட்… ஒழுங்கா இங்க கிட்ட வா",என்று எழுந்து எட்டி மிதிலாவின் கையை பிடிக்க முற்பட…
மிதிலா, "முடிஞ்சா பிடிங்க", என்றுவிட்டு பாத்ரூமிற்குள் ஓடி கதவை அடைக்க…
அவளை தொடர்ந்து சென்ற ஹரி, கதவை தட்டி… "பேபி ஒழுங்கா டோர ஓபன் பண்ணு…", என்று கத்த…
இவர்களின் அக்கப்போரில் குழந்தை எழுந்து கொண்டது….
ஹரி, "இப்ப தப்பிச்சுட்ட… மாட்டும் போது வச்சுக்கறேன்.. உன்னை", என்று விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே சென்றான்…
மிதிலா அவசர அவசரமாக குளித்துவிட்டு, ஹரி மேலே வருவதற்குள், தயாராகி கீழே ஓடினாள்…
அன்று மிதிலாவிற்கு வீட்டிலேயே தாலியை பிரித்து கோர்த்து விடலாம் என்று முடிவு செய்தனர்..
அதன்படி யாரும் வீட்டில் சுமங்கலி பெண்கள் இல்லாததால்.. ஹரியையே மிதிலாவின் தாலியை கோர்க்க சொல்ல.... அன்னபூரணி கூறக்கூற ஹரி பொறுமையாக, புது மஞ்சள் கயிற்றில், மாங்கல்யத்துடன் சேர்த்து இருபுறமும், லக்ஷ்மி காசுகள், முத்து, பவளம், என நிறைய உருக்களை கோர்த்தவன், தங்க சரடுடன் சேர்த்து, அவள் கழுத்தில், அணுவித்து.. அவள் மார்பில் தவழவிட்டவன்… அவள் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுக்க..
மிதிலா தன் தலையை மேலும் குனிந்துக்கொண்டாள்…
ஹரி அவள் காதோரம் மெல்ல, யாருக்கும் கேட்காத வகையில், "நான் தூங்கும் போது தான் என்னை கொஞ்சுவயா", என கிசுக்கிசுக்க…
அத்துடன் மிதிலா, தனியே ஹரியிடம் சிக்கவே இல்லை,
தனியாக பிடிக்கலாம் என்று பார்த்தால் அவளோ அன்னபூரணியை விட்டு நகரவே இல்லை.. ஹரியின் எண்ணம் அறிந்து....
எவ்வளவு நேரம் தான் அவளும் ஓடி ஒளிந்துக்கொள்ள முடியும்….
ஹரி அவன் நண்பர்கள் அனைவருக்கும்.. தனியாக அன்று இரவு வெட்டிங் டிரீட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தான்…
திரும்ப நடு இரவு ஆகும் என்பதாலும்.. அதிக குளுரினாலும்…. அன்னபூரணி குழந்தையுடன் வீட்டிலேயே இருப்பதாக சொல்லிவிட…
ஹரியும் மிதிலாவும் மட்டுமே பார்டீக்கு செல்வதாக இருந்தது..
அன்று மாலை, மிதிலா அன்னபூரணியின் அறையிலேயே குளித்துவிட்டு பார்ட்டிக்கு செல்ல ரெடி ஆனாள்..
ஹரி முன்பே, பார்ட்டிக்கு செல்ல, மிதிலாவிற்கு உடைவாங்கி வைத்து விட்டு இருந்தான்..
அதை அணிந்துக்கொண்டு மிதிலா வர, மகிழ்மதியை பார்த்துக்கொள்வதற்காக அவர்களுடன் தங்கி இருக்கும் ஜூடி, மிதிலாவிற்கு அழகாக அமெரிக்க நாட்டு முறையில் தலை அலங்காரமும்.. முக அலங்காரமும் செய்து விட்டார்…
ஆறு மணி அளவில் ரெடியான ஹரி, மிதிலாவின் உடைக்கேற்ப அவன் வாங்கிய மோதிரத்தை எடுத்துக்கொண்டு, அன்னபூரணியின் அறைக்கு வந்தான்..
வந்தவன், அங்கு மகிழ்மதியுடன் சேர்ந்து நின்று, ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருந்த மிதிலாவை பார்த்து, அப்படியே நின்று விட்டான்…
மிதிலா, தரை வரை புரளும் வகை பார்ட்டி வியர் அணிந்து இருந்தாள்…
உடல் முழுவதும் கருநீல நிறத்தில் இருந்த கவுனில்... மேலே ஒரு பக்க தோளில் மட்டும் சிகப்பு நிறத்தில் பெரிய சூரியகாந்தி பூ போன்ற டிசைனில் அட்டாச் செய்து இருந்தனர்.. அதே பூவை போலவே உடையின் முடிவில்… காலைச் சுற்றி சிகப்பு நிற பூக்களை வைத்து தைத்து இருந்தனர்…..
மிதிலாவின் பேபி பிங்க் நிற சருமத்திற்கு ஏற்ற வகையில்.. அவ்வுடை அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது...
காதில் பிளாட்டினத்தில்… ஒரே ஒரு பெரிய வைரக்கல் வைத்த தோடும்…
கழுத்தை ஒட்டி.. பிளாட்டினத்திலேயே… பெரிய டைமண்ட் நெக்லஸ் ஒன்றை மட்டுமே தாலி சரடுடன் அணிந்து இருந்தாள்..
அதேப்போல் ஒரு கையில் ஆன்ட்டிக் ப்ரேஸ்லட்டும்.. மற்றொரு கையில் ஹரி கொடுத்த வாட்ச்சும் கட்டி இருந்தாள்...
முகத்தில் உடையின் நிறத்துக்கு ஏற்ப கருநீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் ஜூடி மெல்லிய அலங்காரம் செய்து விட்டு இருந்தார்…
காதிலும் கழுத்திலும் இருந்த வைர கற்கள் மிதிலாவின் முகத்திலும்.. கன்னத்திலும் பட்டு ஜொலித்தது…
மொத்தத்தில் நவநாகரீக பேரழகியாக ஜொலித்து ஹரியை மயக்கினாள்..
அன்னப்பூரணி, " ஹரி கண்ணா வா வா ரெடியாகிட்டயா", என அவனை பார்த்து அழைக்க…
பட்டென அவனை திரும்பி பார்த்த, மிதிலாவின் கண்களிலும் பல மின்னல்கள்…
தன்னவனின் ஆண்மைமிக்க வசீகரிக்கும் அழகில்…
ஹரி மிதிலா அணிந்திருந்த.. அதே கரு நீல நிற உடையின் நிறத்திலேயே ஃபுல் கோட் சூட்.. பார்மலாக அணிந்து இருந்தான்.. உள்ளே வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கழுத்தில் சிகப்பு நிற போ(Bow) உடன்… முகத்தை முழுவதும் ஷேவ் செய்து.. தலையை அழகாக ஜெல் வைத்து வாரி இருந்தான்..
மிதிலாவின் அருகில் ஹரிக்கோ, மகிழ்ச்சியில் வயது குறைந்துக்கொண்டே போனது.
5 வருடத்திற்கு முன்பே ஹரியின் தோற்றத்திலும்.. கவனிப்பிலும்.. மயங்கிய மிதிலாவிற்கு..
இன்று ஹரியே தன் கணவனாகவும்.. தன் உரிமையாகவும் இருக்கும்பட்சத்தில் சொல்லவே தேவையில்லை…
இருவரின் பார்வையையும் பார்த்த, அன்னபூரணியும் ஜூடியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து ரகசிய சமிக்ஞைகளை பரிமாறிக் கொண்டப்பின்….
அன்னபூரணி, "ஹரி கண்ணா மணி ஆகிடுச்சு பாரு.. மிதிலா எங்க போய்ட போறா.. பொறுமையா கார்ல பக்கத்துல வச்சுகிட்டு.. பாத்துகிட்டே போ", என்றார் கிண்டலாக..
அதில் நிதானம் அடைந்த ஹரி, "மாம் நீங்க வேற!! நான் ஜஸ்ட், புது டிரஸ் கரெக்டா இருக்கான்னு பார்த்தேன்.. .." என்றப்படி தன் தலையை கோதி முகச்சிவப்பை கட்டுப்படுத்தியவன் ..
மிதிலாவை நெருங்கி, "கிளம்பலாம் பேபி", என்றவன்…
"மாம் பாத்துக்கோங்க.. சீக்கிரம் டின்னர் சாப்பிட்டு படுங்க.. என்கிட்ட சாவி இருக்கு.. " என்றவன்…
மிதிலாவின் கரத்தில் இருந்த மகிழ்மதியை வாங்கி, "குட்டிமா…. கிரானிக்கூட இருங்க… டாட் அண்ட் மாம் வெளியே போயிட்டு வரோம்… பாய் செல்லம் ", என்றவன் அன்னபூரணியிடம் கொடுத்து விட்டு, மிதிலாவின் கையை பற்றிக்கொண்டு வெளி வந்தான்…
அறையை விட்டு வெளியே வந்ததும்..
ஹரி, மிதிலாவின் இடையில் தன் கையைப் போட்டு அணைத்துப்பிடித்து..
"செமையா இருக்க பேபி.. ரொம்பவும் அழகா, அப்படியே லிட்டில் ஏன்ஜல் மாதிரி இருக்க.. பார்ட்டிக்கு போகவே எனக்கு மூடு இல்லை.. பேசாம கேன்சல் பண்ணிடுவோமா", என்றான் கிறக்கமாக..
மிதிலா, "அச்சோ வேண்டாம் வேண்டாம்… உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க இல்ல.. வாங்க சீக்கிரம் போகலாம்", என்றாள்..
ஹரி, "எஸ் எஸ்!! நோ ஆப்ஷன்.. லெட்ஸ் கோ.. " என்று சோகமாக கிளம்பினான்..
மிக அருகில்தான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்..
ஹரியும் மிதிலாவும் பார்ட்டிக்கு சென்று.. நன்றாக அனைவருடனும் பேசி அரட்டை அடித்து, என்று என்ஜாய் செய்துவிட்டு.. சில கேம்களும் விளையாடிவிட்டு.. இரவு உணவை முடித்துக்கொண்டு.. பதினோரு மணி அளவில் அங்கிருந்து கிளம்பி விட்டனர்..
மிதிலாவிற்கு ஹரியின் நண்பர்கள் அனைவரையும் மிகவும் பிடித்து இருந்தது.. நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய பள்ளிப் பருவ நண்பர்களுடன் இருந்தது போல் இருந்தது… அனைவருமே வயது வித்தியாசம் பார்க்காமல் அவ்வளவு ஜாலியாகவும், கலகலப்பாகவும் மிதிலாவுடன் பழகினார்..
இதமான மன நிலையுடன் ஹரியும் மிதிலாவும் வீட்டிற்கு திரும்பினார்..
இருவருமே எதுவுமே பேசிக் கொள்ளாமல்.. அமைதியாகவே வந்தனர்.
சிலநேரம் மவுனம் அழகானது என்பதுபோல்.
ஹரியின் தொடைமீது இருந்த இருவரின் இணைந்த கைகளுமே அங்கு மவுன கவிதையானது...
ஹரி வீட்டிற்கு வந்து இறங்கி மிதிலாவிற்கு இறங்க உதவி செய்து அழைத்து வந்தான்..
இருவரும் சேர்ந்து, தங்கள் தோட்டத்தில் கால் பதித்த நொடி, சியாட்டில் முழுவதும் வெண்பனி மழை பொழிய (snow fall) ஆரம்பித்தது..
மிதிலா தன் வாழ்க்கையில் முதன் முதலில் பனியை காண்கிறாள்..
அவள் உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது..
சிறு குழந்தை போல் கண்களில் ஆசையுடன் நிமிர்ந்து வானத்தை பார்த்தாள்..
சடுதியில் அவள் முகம் முழுக்க, வெண்பனி..
"அச்சோ டாக்டர்.. ரொம்ப சூப்பரா இருக்கு.. ஐயோ சில்லுன்னு இருக்கே.. மேலே விழும்போது..", என்றவள் துள்ளிக்குதித்து தன் கைகளில் பனியை பிடித்தாள்..
ஹரிக்கோ பனிமழையெல்லாம் எல்லாம் சாதாரண விஷயம்.. பிறந்ததில் இருந்தே பார்க்கின்றான்..
மிதிலாவின் செய்கை தான் அவனுக்கு இப்பொழுது ஆச்சரியமாக இருந்தது…
" பேபி உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா, அப்போ வா கார்டன்ல உட்கார்ந்து ஸ்நோ ஃபால்ல பார்க்கலாம்" என்றவன் அவளின் மகிழ்ச்சிக்காக, பனியில் வழுக்கி விழாதப்படி, கவனமாக நடத்தி சென்றான்…
மிதிலாவிற்கோ இந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே முடியவில்லை…
கைகளில் பனியை பிடித்துப்பிடித்து வைத்து பார்த்து கொண்டு நின்று இருந்தாள்…
தோட்டம் முழுவதும் பல நிறங்களில், பல வண்ண விளக்குகள்.. அதுவும் பல வடிவங்களில் செடிகளின் மீதும்.. பொருட்களின் மீதும் படர்ந்து மிலிர்ந்து, அந்த இரவு பொழுதை ரம்மியமாக்கிக்கொண்டு இருந்தது…
ஹரி, நின்ற நிலையிலேயே இருக்கும், மிதிலாவின் கையை பற்றி இழுத்து, தன் மடியின் மீது உட்கார வைத்தான்…
இரவு நேர மேனகையாய், உலகிலேயே என்னை தவிர அழகி வேறு இல்லை என்று எண்ணும் அளவிற்கு, பனியில் சிவந்து ஜொலித்து, ஹரியை காந்தமாய் இழுத்து தன்னுள் அடக்கினாள் மிதிலா.
மொத்தமாய் கிறங்கியவன், "என்ன என்னோட பேபி இவ்ளோ ஹாப்பியா.. நிஜமான குட்டி பேபியா மாறிட்டீங்க.. எப்பதான் நீங்க வளர்ந்து இந்த டாக்டரை கவனிப்பீங்க..", என்றான் தன் குரலில் மையல் பெருகி வழிய…
மிதிலாவோ இருளில் தன் கணவனின் கண்கள் மோகத்தில் மின்னுவதை அறியாமல் , "போங்க டாக்டர்.. நான் எல்லாம் ஸ்நோவ லைஃப்ல பார்பேன்னு.. இதுவரை நினைச்சது கூட இல்ல தெரியுமா டாக்டர்..", என்றாள் பிரமிப்புடன்..
ஹரி, " ஓ இஸ் இட்… இனி three மன்த்ஸ் ஸ்நோ தான்.. என்ஜாய் பண்ணு… நெக்ஸ்ட் வீக் நாம ஹனிமூன் போகும் பொழுது இன்னும் நிறைய, நேச்சரோட கிஃப்ட்டட் பிளேசஸ்லாம் நீ பார்ப்ப பேபி.." என்றவன்…
அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து, "பட் இப்ப இந்த வெதற்கு.. நீ ஸ்நோவ விட, என்னை தான் பேபி பாக்கணும்.. அதுதான் நமக்கு கரெக்டா சூட் ஆகும்.... என்ன கரெக்ட் தானே" என்று தன் ஹஸ்கி வாய்ஸில் மிதிலாவின் காதில், தன் மூக்கு நுனி உரச ஹரி கிசுகிசுக்க…
அதில் மிதிலாவின் தேகம்… கூசி சிலிர்க்க… அவள் மெல்ல நெலிந்தப்படி எழ முற்பட…
அவளின் வயிற்றை பின்புறம் இருந்து பற்றி அழுத்தியது ஹரியின் உள்ளங்கை…
அதில் மிதிலாவின் அடிவயிற்றில், அமில பந்துகள் உருளத் தொடங்கியது…
அதை மேலும் அதிகரிக்கும் வகையில்…
அவளின் வெற்று முதுகில், பார்க்கும் இடமெல்லாம், ஹரி தன் தகிக்கும் உதடுகளால் முத்தமிட தொடங்கிட…
பனிப்பொழிவினால் ஜில்லிட்டிருந்த மிதிலாவின் மேனிக்குள்.. ஹரியின் சூடான முத்தங்கள் வேகமாக வேரூன்றி இறங்கி பாய்ந்தது..
"இந்த டிரஸ்ல அவ்ளோ அழகா.. க்யூட்டா லிட்டில் குயின் மாதிரி இருக்க ஹனி நீ.. நான் தான் உனக்கு மேட்சா இருப்பேன்னானு எனக்கு தெரியலை.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா பேபி.. ", என்று ஒவ்வொரு முத்தத்திற்கும் இடையில் பேச..
ஹரியின், தொடர் முத்தத்தில் வெண்ணைப் போல் குழைந்து கரைந்து கொண்டு இருந்த மிதிலா… திரும்பி அவன் தாடையை பற்றி, "எனக்கு உங்களை மட்டும் தான் டாக்டர் பிடிக்கும்.. நீங்க மட்டும் தான் என்னோட உலகம்.. இப்ப என்னோட அப்பா, அம்மா, அக்கா எல்லாமே நீங்கதான்.. ", என்றவள் மறுகணம் ஹரியை தன்னுடன் சேர்த்து இறுக்க அணைத்தாள்…
மிதிலாவின் இறுகிய அணைப்பில், ஹரிக்கே எலும்பு நொருங்கும் போல் இருந்தது… ஒரே இன்ப வலி அவன் தேசமெங்கும்….
மிதிலாவிற்கும், அவளின் வயதிற்கு ஏற்ற காதல் ஹார்மோன்கள், இயற்கையாக சுரக்க ஆரம்பிக்க…
இரு உடல்களும், ஓருடலாய் மாற பின்னி பிணைந்தது.
ஹரிக்கு இதற்குமேல் வேறென்ன வேண்டும்..
நீதான் என் அனைத்தும் என்று தன் மனைவி தன்னிடம் சரணடைய…
தன் மீதே கர்வம் கொண்டான்..
"தேங்க்ஸ் டா பேபி.. தேங்க் யூ குட்டிமா.. லவ் யூ ஹனி..” என்று வித விதமாக அவளை போட்டு கொஞ்சியவன், “உன்னை பார்த்த பிறகு தான்.. என்னோட வாழ்க்கையே, எனக்கு நிறைவு ஆன மாதிரி இருக்கு பேபி.. நான் எப்பவும் உன்னுடையவன் மட்டும் தான் பேபி" என்றவன்… மறுகணம் மிதிலாவை தன் கைகளில் ஏந்தியபடி எழுந்தான்..
மிதிலா, ஹரியின் கழுத்தை கட்டிக்கொண்டு, முகத்தில் விழும் பனிகளை, கண்ணை மூடி, அனுபவித்தப்படி அப்படியே இருக்க..
அவளின், மனம் இவ்வுலகை விட்டு, பயணித்து, வேறொரு மாயலோகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தது.
இரு, தூய நேசம் கொண்ட உயிர்களின், முதல் சங்கமத்திற்கு, வான்மகள் அவள், தன் அன்பை, வெண்பனியாய் இருவர் மீதும் தூவி, அவர்கள் கூடலுக்கு தொடக்கப்புள்ளி வைத்துவிட..
அதனை ஓவியமாக மாற்ற, ஹரி, வீட்டினுள் போகாமல், தோட்டத்தை சுற்றி வந்து, ட்ரீ ஹவுசின் முன்பு, மிதிலாவை கீழே இறக்கினான்..
மிதிலா கேள்வியாக ஹரியின் முகம் பார்க்க.. "எனக்கு இந்த இடம் ரொம்ப ஸ்பெஷல் பேபி… உன்னையும் இங்கதான் பார்த்தேன்.. சோ இங்கதான்.. " என்று சொல்லவந்த வார்த்தையை சொல்லமுடியாமல் விழுங்கிவிட்டு.. தலைமுடியை அழுந்த கோதிக்கொண்டே..
"நாம இங்க தான், இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணப்போறோம்.. மேலே ஏறு பேபி சீக்கிரம்.. ஐ காண்ட்..", என்றான் கரகரப்பான குரலில்...
அவனின் குரலில், மிதிலா மேலே ஏறி, உள்ளே வந்த அடுத்த நொடியே..
ஆவேசமாக அவளை பின்புறம் இருந்து அணைத்து தூக்கிய ஹரி.. நடந்து சென்று.. கீழே இருந்த பெட்டில் அவளை தன் மடியில் ஏந்தியபடி அமர்ந்தான்…
அந்நேரத்தில் மிதிலா, "டாக்டர்", என்று ஏதோ சொல்ல வர..
உடனே ஹரி, "ப்ளீஸ் பேபி.. சாரி.. ஐ அம் நாட் இன் த மூட் டு டாக்… (I'm not in the mood to talk)... ", என்றவன்…
மறுநொடி மிதிலாவின் இதழுடன் தன் இதழை பொருத்தி,மேற்கொண்டு அவள் பேச முடியாதவாறு, தனக்குள் அவளை அடக்கினான்..
இத்தனை நாள் ஹரியிடம் இருந்த பொறுமை இன்று சுத்தமாக இல்லை…
மிதிலாவின் உதட்டில் ஆழப்புதைந்து… தன் ஹனியின் ஹனியை பருகியப்படியே.. அவளை பொறுமையாக படுக்கையில் படுக்க வைத்து… உதட்டில் நடத்திய ஊர்வலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கி நகர்த்தி சென்றான்..
மிதிலாவின் இதயமும் தேகமும் தடதடக்க, அவள் கண்கள் இறுகமூடிக்கொண்டது…
ஒரு வினாடி அவளை பிரிந்த ஹரி, தன்னுடைய கோட்டை அவசர அவசரமாக அவிழ்த்து வீசிவிட்டு... மிதிலாவை படுக்கையில் திருப்பி படுக்கவைத்து.. விட்ட இதழ் யுத்தத்தை அவள் முதுகில் இருந்து தொடர்ந்து… மெல்ல அவளின் ஆடைகளுக்கும், அணிகலன்களுக்கும் விடை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட…
ஹரியின் கரங்கள் தடைகளை களைய தொடங்கியதும், கூச்சம் தாளாது, அதிர்ந்த மிதிலாவிடம் இருந்து பலமான எதிர்ப்பு வந்தது…
வசீகரனான ஹரியோ, மீண்டும் மீண்டும் மிதிலாவின் காதில் பேசி பேசியே.. அவளை வசிகரித்து, வருடி, மயக்கி, அவளை தயாராக்கி.. நொடியும் தாமதிக்காது முன்னேறினான்…
அப்பொழுது அவனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பொருள், தட்டுப்பட..
ஹரி உடனே, ஞாபகம் வந்தவனாக, அதிலிருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்து திறந்தவன்…
மிதிலாவின் இடது கையை பற்றி.. அழகான பெரிய ஹார்ட்டின் வடிவ வைர மோதிரத்தை, அவளின் மோதிர விரலைப் பற்றி போட்டுவிட்டவன்…
எதையும் உணராது, கண்ணை மூடிக்கொண்டு, இதழ்கள் நடுங்க, சிணுங்கிக்கொண்டு இருந்தவளின், நெற்றியில் "பர்ஃபெக்ட்", என்று முத்தமிட்ட ஹரி, தான் விட்ட பணியை, முன்பை விட அதிவேகமாக தொடர்ந்தான்..
நிமிடங்கள் பல கடந்துவிட்டு இருக்க..
மிதிலாவிடம் இருந்து எதிர்ப்புகள் சுத்தமாக அடங்கி… அவளும் ஹரியுடன் இணைய தயாராகி.. மோன நிலைக்கு சென்ற மறுகணம்…
ஹரி, மிதிலாவிற்கு தன்னையே ஆடையாக மாற்றி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறினான்…
அதிர்ந்த மிதிலா, வெட்கத்தில், வேறு வழியில்லாமல், ஹரியினுள்ளே பதுங்கிவிட...
அந்நொடியில் இருந்தே, ஹரிக்கு, மிதிலா புரியா புதிராக தோன்றினாள்…
சில வினாடிகளிலேயே ஹரியின் வேகம் குறைந்தது…
அவனின் மருத்துவ மூளை வெளி வந்தது…
அறிந்த உண்மையில் பதறி விலகியவன்...
இருந்த வெளிச்சத்திலேயே மிதிலாவின் அடி வயிற்றில் குழந்தை பிறந்ததற்கான, அறுவை சிகிச்சை செய்ததற்கான தடம் எதுவும் உள்ளதா.. என்று பரிசோதித்தான்.
எதுவும் இல்லை…
ஹரிக்கு அக்கணம் அளவுகடந்த கோபம் வந்தது…
கோபத்திலும்… உணர்வுகளின் தாக்கத்திலும்… அவன் தேகமே நடுங்கியது…
ஹரியின் ஒவ்வொரு செயலும் மிதிலாவிற்கோ உணர்வுகளை தாறுமாறாக தூண்டிவிட்டு இருக்க..
ஒரு வினாடி கூட, ஹரியை பிரிய அவள் தயாராக இல்லை…
அவளே ஹரியை இழுத்து அணைத்தாள்….தனக்கு ஆடையாக..
அதில் ஹரியின் உடல் இறும்பாக இறுகியது…
ஹரிக்கு உணர்வுகள் மொத்தமாக வடிந்து விட்டு இருந்தது..
ஏனென்றே தெரியாமல் கண்களில் இருந்து நீர் இறங்கியது…
நெஞ்சில் சுமந்தவள் பரிசளித்த துரோகத்தினாலோ என்னவோ..
ஏதும் புரியா சம்பித்த நிலை அவனுக்கு..
எவ்வளவு பெரிய பொய் கூறிவிட்டாள்..
அருகில் தெரிந்த மிதிலாவின் முகத்தை பார்த்தான்…
அவளோ ஹரி தூண்டிவிட்ட, புது புது உணர்வுகளால், மிகவும் தள்ளாட்டம் ஆன நிலையில் கண்களை மூடிக்கொண்டு, அவனை அணைத்தப்படி, முகம் முழுக்க பளிங்காய் மின்ன கிடந்தாள்…
ஹரிக்கோ அவள் முகம் காட்டும் பாவனைகள் மிக ஆச்சரியமாக இருந்தது…
மிதிலாவின் முகத்தில் சிறு தப்பு செய்ததற்கான அறிகுறியோ… பொய் சொன்னதற்கான எந்த சாயலோ இல்லை..
கண்டுபிடித்து இருப்பான் என்ற பயமோ, குற்ற உணர்வோ கூட இல்லை..
அவனின் மீதான காதல் மயக்கம் மட்டுமே, அவள் முகத்தில் விரவி கிடந்தது…
அப்படி என்றால், தாம்பத்தியத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாதவள் மிதிலா.. என்பது ஹரிக்கு புரிந்தது…
முதல் சந்திப்பில் இருந்து தன் மனதில் ஓட்டி பார்த்த ஹரிக்கு, இன்றுவரை மிதிலா அவனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காது.. அவனுக்கு இணையான காதலை மட்டுமே கொடுத்தாக அவனுக்கு தோன்றியது…
அவனே அவனிடம் அவளுக்காக வாதாடினான்..
அன்றுக்கூட ஒருநாள் மகிழ்மதியை என்னிடம் இருந்து பிரித்து விட மாட்டீர்கள் தானே என்று தவிப்புடன் கேட்டாளே…
அப்படியானால், ஏதோ ஒரு நிலையில், மகிழ்மதியின் தாயாக மிதிலா மாறி இருக்கின்றாள்.. என்பது அவனுக்கு புரிந்தது…
அந்நொடி மிதிலா, ஹரியிடமான மயக்கத்தில் மேலும் அவனையே ஒட்டி அணைத்தாள் உணர்வுகளின் பிடியில்..
அவள் வாயோ, "அம்மூ… எனக்கு ஒருமாதிரி இருக்கு…", என்று அவன் காதில் கூடல் மொழி பேசி… ஒன்றும் புரியாது தவிக்க…
அனைத்தும் புரிந்த ஹரியால், எவ்வாறு மிதிலாவை வேதனை கொள்ள செய்ய முடியும்..
மிதிலாவின் மார்பில் தவழ்ந்த மாங்கல்யம், ஹரியின் மார்பில் அதன் இருப்பை உணர்த்த…
மீண்டும் ஹரியின் காதல் கொண்ட மனம் மெல்ல மேல் வந்தது…
தன்னவள் மீதுள்ள முழு நம்பிக்கையிலும்… உணர்வுகளின் பிடியில் தன்னால் தவிப்பவளின் நிலையிலும்…
ஹரி தன் மனதை கட்டுப் படுத்திக்கொண்டு…
மிதிலா உடனான காதலை மட்டுமே நினைத்து எப்படியோ முன்னேறினான்…
நிமிடங்கள் சில கடக்க…
மிதிலாவுடன், ஓர் உடலாக ஹரி சங்கமித்து இருந்தான்…
இருவரின் விழியோரமும் நீர் கசிந்தது..
எங்கோ ஒரு மூலையில் ஹரியின் மனம் மகிழ்ச்சியில் முக்குளித்தது.. தன்னவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தினாலோ என்னவோ…
அதன்பிறகு, மேலும் தன்னவளை அவன் கொண்டாட…
மிதிலாவின் கொலுசொலியும்.. மெட்டி ஒலியும், அவ்விடத்தை மொத்தமாக நிரப்ப தொடங்கியது..
பருவம் எய்திய தினத்தில் இருந்து, ஹரியையே மனதில் சுமந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், மிதிலாவின் தூய நேசம், இன்று ஹரியின் நேசத்தை வென்று, தன் சிரசில் சூடி இருந்தது…
மிதிலா மகிழ்மதிக்கு, விதியின் உட்சக்கட்ட கோரதாண்டவத்தின் பலனாய் அணைத்துமாகிய கன்னித்தாய்..
அவளின் மனதையும், உடலையும், அவளுடைய விருப்பத்துடன், தீண்டியன் இவ்வுலகில் ஒருவனே, அவன் அவளின் கணவன் ஹரிகிருஷ்ணா.
முதல் கூடல் கொடுத்த அதீத களைப்பில், மிதிலா ஹரியின் நெஞ்சின் மீதே படுத்து அயர்ந்துவிட்டாள்…
புதுவித இன்பத்தில் மிதிலா…
ஆனால் நெஞ்சு முழுக்க பாரத்துடன் ஹரி…
ஹரியின் மனதில், 'யார் மிதிலா, யார் மகிழ்மதி, அதைவிட யார் மகிழ்மதியின் பெற்றோர், மிதிலாவின் பெற்றோர்கள் என்ன ஆனார்கள்… ஏன் தன்னிடம் பொய் சொல்ல வேண்டும்.. இதுவரை ஏன் உண்மையை சொல்லவில்லை.. குழந்தை மிதிலாவை போல் தானே இருக்கின்றாள்.. இருபத்தி ஆறு வயதில்.. இந்தளவிற்கா விவரம் இல்லாது இருப்பார்கள்', என்று பல கேள்விகள் ஹரியின் மண்டையைப் பிளந்தது…
ஆனால் ஹரி, ஒரு நிமிடம் கூட.. மிதிலா அவன் மீது கொண்டுள்ள நேசம்.. பொய்யானதாக இருக்குமோ என்று எண்ணவில்லை..
ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது… அதையும் ஏதோ ஒரு காரணித்திற்காகவே மறைத்து இருக்கின்றாள் என்று, நினைத்தான்.
அவளை கேட்க வேறு, அவன் அவளிற்கு செய்து கொடுத்த, சத்தியம் அவனை தடுத்தது.
எப்பொழுதும், அவளுடைய கடந்தகால வாழ்க்கையைப்பற்றி, அவளிடம் கேட்க மாட்டேன் என்று இருந்தானே.
சரி அவளே சொல்லும் பொழுது சொல்லட்டடும். என்று ஹரி, தன் கையில் இருந்த கடிகாரத்தில், மணியை பார்த்தான்..
மணி காலை நான்கு..
மெல்ல, தன் மீதிருந்த மிதிலாவை, அருகில் படுக்க வைத்து, போர்த்திவிட்டு, ஆடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து வீட்டிற்குள் நுழைந்தான்..
ஹரியால் அவன் இதயத்தில் ஏற்படும் அழுத்தத்தை தாங்கவே முடியவில்லை…
நேராக கிட்சன் சென்று, பாலை ஓவனில் சூடு வைத்து எடுத்து அருந்திவிட்டு.. இப்படியே இருந்தால் நிச்சயம் இதயம் வெடித்து விடும் என்று… மருத்துவனாக ஒரு மாத்திரையை எடுத்துபோட்டான்…
சிறிது நிதானம் அடைந்த ஹரி, அறைக்கு சென்று குளித்துவிட்டு.. மீண்டும் ட்ரீ ஹவுஸிற்கு செல்லலாம் என்று கிளம்பினான்…
அப்பொழுது ஞாபகம் வந்தவனாக.. மிதிலாவிற்கும் வேறு உடைகள் எடுத்துக் கொண்டு செல்லலாம்.. காலை எப்படியும் மாம் எழுந்து கொள்வார்கள் என்று யோசித்து.. மிதிலாவின் அலமாரியை திறந்து அவளுக்கான உடையை தேடினான்…
அப்பொழுது, ஹரி தன் கண்ணில் பட்ட, மெல்லிய மஞ்சள் நிற காட்டன் கவுனை வெளியே இழுத்தான்.. அது போட்டுக்கொள்ள, உறுத்தாமல் வசதியாக இருக்கும் என்று…
அப்பொழுது துணியினுலிருந்து பல பொருட்கள் கீழே சிதறியது…
கீழே குனிந்து அதை எடுக்க பார்த்தவனின் இதயம் அந்நாளின் அடுத்தகட்ட அதிர்ச்சியை தாங்கியது…
திறந்து இருந்த கிரீட்டிங் கார்டில், ஹரி தன் கையால், “கெட் வெல் சூன் ஜிகிலி" என்று எழுதி, அதன் கீழே, "டாக்டர் ஹரி கிருஷ்ணா" என்று தன் கையெழுத்தை போட்டு வைத்து இருந்தான்.
அதை கையில் எடுத்து பார்த்த ஹரியின் கைகள் நடுங்கியது…
கிரீட்டிங் கார்ட் முழுவதும்,
டாக்டர் லவ் டாக்டர்
டாக்டர் லவ் ஜிகிலி
ஹரி லவ் மிதிலா
என்று, பலவாறு மிதிலாவாள் எழுதப்பட்டு இருந்தது…
அடுத்து ஹரி மிதிலாவிற்கு தந்த செயினும் கீழே இருந்தது…
அதை கையில் எடுத்து பார்த்த ஹரி, உடனே அதனை உறுதிப்படுத்த, அறையில் இருந்த மேக்னிஃபையரை எடுத்துவந்து, செயினை பார்த்தான்.. அதே Together Forever ♾️ செயின்..
துணியிலும் பின்புறம் டாஃகில்(tag) திருச்சி பொட்டிக்கின் பெயர் இருந்தது…
ஒவ்வொன்றாக சரிபார்த்த ஹரிக்கு, அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மட்டுமே..
தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கின்றது.
அனைத்தையும் வைத்துவிட்டு மீண்டும் மிதிலாவின் செல்ஃபை ஹரி ஆராய்ந்தான்…
மிதிலாவின் ஒரிஜினல் சர்டிஃபிகேட் அனைத்தும் கிடைத்தது பாஸ்போர்ட்டுடன்..
ஹரி பார்த்தவுடனேயே இரண்டிலும் இருந்த டேட்டாக்கள் மாற்றப்பட்டு இருப்பதை கண்டறிந்தான்..
மிதிலாவின் காலேஜ் சர்டிஃபிகேட்டில் அவளின் பழைய புகைப்படம் இருந்தது…
அன்று ஹரி பார்த்த மிதிலாவின் சாயல், லேசாக, ஹரிக்கு இன்றைய மிதிலாவிடம் இருப்பது இப்பொழுது தான் தெரிந்தது..
அப்படியே தொப்பென்று தரையில் உட்கார்ந்து விட்டான்…
அன்று தான் பார்த்த, Chubby-ஆன, சிறு ஸ்கூல் போகும் பெண்ணா மிதிலா…!
அன்று முதல் என்னை மனதில் நினைத்துக்கொண்டு இருக்கின்றாளா..?!
என்னை அடையாளம் தெரிந்து கொண்டும்.. ஏன் உண்மையை சொல்லவில்லை..!
அதனால்தான் முதல் சந்திப்பில் அவ்வாறு பார்த்தாளா.
எனக்காக தான் வந்தாளா..? அதைவிட அவளின் வயது..!
God..!
பல கேள்விகள் ஹரியின் மனதில்…
யார் தனக்கான உண்மையை சொல்வார்கள் என்று யோசித்த ஹரிக்கு… உடனே நினைவுக்கு வந்தது ஆதித்யனே..
உடனே ஹரி ஆதிக்கு அழைத்து விட்டான்..
இவ்வளவு அதிகாலை நேரத்தில், ஹரியிடம் இருந்து ஃபோன் என்றவுடன், பதறி ஆதித்யன் அழைப்பை ஏற்றான்..
ஹரி ஆதித்யன் அழைப்பை எடுத்ததும், ஆதி யார் மிதிலா.. மகிழ்மதியின் அம்மா அப்பா யார்… போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கிறாள்.. மாட்டினால் என்ன ஆகும் என்று தெரியும் தானே, என்று வரிசையாக கேள்வி எழுப்பினான்…
ஆதித்யனுக்கு பயம் பிடித்துக்கொண்டது..
"டாக்டர் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. மிதிலா மேல எந்த தப்பும் இல்லை.. அவள் குற்றவாளி இல்லை.. அவள் பாதிக்கப்பட்ட பெண்", என்றான்..
உடனே ஹரி, "கண்டிப்பா எனக்கு என் பேபி மேல் நம்பிக்கையிருக்கு… ரெயின் வாட்டர் மாதிரி பியூரானவ, என்னோட பேபி.. ஆனா அவ வாழ்க்கையில் என்ன நடந்துச்சு.. நான் தெரிஞ்சுக்கணும்..", என்றான் கட்டளையாக..
மறுவினாடி ஆதித்யன், மிதிலாவின் வாழ்வில் நடந்த அனைத்தையும்.. ஆரம்பம் முதல் முடிவு வரை.. ஒன்றுவிடாது.. ஹரியிடம் உரைத்தான்...
அனைத்தையும் கேட்கக் கேட்க.. ஹரியின் இதயம் துடித்துடித்து போனது.
தன்னவள் மணமேடையேறவில்லை,
மாங்கல்யம் ஏற்கவில்லை,
பள்ளியறை நுழையவில்லை,
பிள்ளை சுமக்கவில்லை,
தாலியை இழக்கவில்லை,
ஆனால் கையில் குழந்தையுடன், கைம்பெண்ணாக மாறி, கதியின்றி காட்சிப்படுத்த பட்டுவிட்டாளே..!
அன்று அவன் பார்த்த மிதிலாவின் பெற்றோர்களும்.. அக்காவும்.. நிழலாக அவன் கண்ணில் தோன்றினர்..
அவர்களின் வாழ்க்கை பாதை மாறியதை, ஹரியால் தாங்கவே முடியவில்லை…
அதுவும் மகிழ்மதி இப்பூலகில் ஜனித்த நாளே..! தான் பெறாத மகளுக்காக, நெஞ்சம் நொருங்கிப்போனான்.
தன்னவள் உயிருக்கு பயந்து.. ஊர் ஊராக பதுங்கி.. இச்சிறு வயதில் தவித்து, தப்பித்து வந்து இருக்கின்றாள்…
நெஞ்சம் பொறுக்கவில்லை..
ஹரி, ஆதித்யனிடம் மேலும் சிலவற்றை கேட்டான்…
அதில் ஆதித்யனுக்கே சிலது தெரியவில்லை..
“சரி, இனி நான் பார்த்துக்கறேன் ஆதி”, என்றவன், மேலும், “மிதிலாக்கு எனக்கு இந்த உண்மைலாம் தெரியும்னு சொல்ல வேண்டாம்.. அவளுக்கே என்னைக்கு சொல்லனும் தோனுதோ சொல்லட்டும்.. அவ சொன்னாலும் சரி, சொல்லலைனாலும் சரி, மகிழ்மதி என்னைக்குமே என் பொண்ணு தான்.. இந்த உலகத்தில் என் உயிர் இருக்கும் கடைசி வினாடி வரை அதை நான் மறக்கவும் மாட்டேன்..”, என்றுவிட்டு ஹரி ஃபோனை வைத்துவிட்டான்.
பிறகு, அனைத்தையும் உள்ளே பழையப்படி அடுக்கி வைத்த ஹரி, மீண்டும் ட்ரீ ஹவுஸிற்கு வந்து மிதிலாவின் அருகில் படுத்தான்…
அவன் மனமோ தன்னவளை எவ்வாறு இவ்வேதனையில் இருந்து காப்பது… என்று யோசித்துக்கொண்டே இருந்தது…
ஆதித்யன் சொன்னவைகளே, அவனின் கண்களின் முன்பு ஓடிக்கொண்டு இருந்தது.
மென்மையே உருவான ஹரி, தன்னவளுக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஆதிகேசவனை, வஞ்சிக்க துணிவானா..?
________________________
அங்கு இந்தியாவில்
ருத்ரன் மற்றும் சாஹித்யா.. சென்னையில் உள்ள யூஎஸ்ஏ எம்பஸ்ஸியில்…
அமெரிக்காவிற்கு மருத்துவம் பார்க்க செல்ல, சிறப்பு விசா எடுக்க, இன்டர்வியூக்காக வந்து காத்திருந்தனர்..
கருத்துகள்
கருத்துரையிடுக