உண்மை காதல் -17

அத்தியாயம் -17


ருத்ரன், முதலில் ப்ரின்சிப்பால் அறையில் இருந்து வெளியே வர, அவனின் பின்னே வந்த மித்ராவிடம், "நாம உங்க காலேஜ் கேன்டீன்ல போயிட்டு பேசலாமா..?  இல்ல பக்கத்துல எதுவும் ஸ்பாட்  இருக்கா.. அங்க போயிட்டு பேசலாமா சமி", என்றான் மென்மையாக.. 


சங்கமித்ரா, அவனுக்கு ‘சமி’ ஆகிவிட்டு இருந்தாள்.


அதில் மித்ரா கோபமாக, "இல்ல, உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை..  நீங்க யாருன்னு எனக்கு தெரியாது..  என் அப்பா கிட்ட பேசுங்க எதுனாலும்.. நான் போறேன்", என்று, முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு திரும்பினாள்…


அதில், சட்டென்று ருத்ரன் மித்ராவின் கையை பற்றி அவளை போக விடாமல் தடுத்தான்..  மித்ரா உடனடியாக தன் கையை  உருவ முயல ருத்ரனின் பிடி இறுகிக் கொண்டே சென்றது..


மித்ரா வலியிலும், பயத்திலும், கலங்கிய கண்களுடன் ருத்ரனை ஏறிட்டு பார்த்தாள்.. பிறகே தன் செயலின் வீரியம் புரிந்து கைகளை விலக்கிக் கொண்டவன், "சாரி‌‌ சாரி சமி..  கண்டிப்பா பேசியே ஆகணும்..  ஒரு Half-hour தான் வா", என்று அவளின் மறு கையை பற்றி அழைத்து கொண்டு நடந்தான்..  மித்ரா “ப்ளீஸ் நானே வரேன்.. கை விடுங்க..” என்று, தன் கையை உருவிக் கொண்டு.. வேறு வழியின்றி அவனுடன் நடந்தாள். ருத்ரனிடம் தன் மனதை தெளிவாக சொல்லிவிட வேண்டும், என்றும் முடிவெடுத்து இருந்தாள்.


கேன்டீன் முன்பு இருந்த மரத்தின் அடியில்..  போட்டிருந்த பெஞ்சின் மீது சென்று அமர்ந்த ருத்ரன், மித்ராவையும் அமர சொன்னான்…


மித்ரா,  “இல்லை இல்லை வேண்டாம்..  நான் நிற்கிறேன்..  நீங்க என்ன சொல்லணும் சொல்லுங்க..", என்று எவ்வளவு கூறியும், உட்கார மறுத்துவிட்டாள்.. அவனின் நிழலை கூட அவள் தொட தயாராக இல்லை.


அதில், 'தன் கையை தொட மறுக்கின்றாள்.. தன் பக்கத்தில் அமர மறுக்கின்றாள்.. ஏன்..?' என்று அதற்குள்ளே, காதல்கொண்ட ருத்ரனின் மனம், ஊமையாய் உள்ளே பதறத் தொடங்கிவிட்டது.. 


வாழ்க்கையில் முதல்முறை அவனை ஒருத்தி நிராகரிக்கின்றாள்.


மனதின் அழுத்தத்தை அடக்கிக்கொண்டு ருத்ரன், "நேத்து டாட் கிட்ட பேசினேன்..  எனக்கு அவரு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண விஷயம் தெரியாது..  உன் அப்பா சொன்ன பிறகு தான் தெரியும்.. ",  என்றுவிட்டு  நேற்று நடந்ததை சொல்லிவிட்டு.. "ஏன் உனக்கு இப்ப கல்யாணத்துல சம்மதம் இல்லையா..?", என்றான்..


மித்ரா, "இல்லை கண்டிப்பா இல்லை.. எனக்கு உங்களை பாத்தாலே பயமா இருக்கு.. அன்னைக்கு எங்க கார்ல எங்களை மிரட்டி கூட வந்தீங்க.. அப்பவே எனக்கு மனசுக்கு சரியா படலை.. திரும்ப மண்டபத்தில்,

என்னோட தங்கச்சி அன்னைக்கு தெரியாம உங்கள கூப்பிட்டுட்டா..  இல்லன்னா எங்களுக்கு இந்த பிரச்சினையையே வந்து இருக்காது.. 

அதை விட உங்க அப்பா அன்னைக்கு முதல் தடவை எங்க வீட்டுக்கு வந்து",

என்று அழுதுகொண்டே தகாத வார்த்தையால் துளசியை பேசியதையும்.. அவரை மிரட்டியதையும் சொல்லி அழுதாள்…


மேலும், "அதோட, ஏன் என்னோட தங்கச்சிய போயிட்டு தனியா பார்த்து, பேசனீங்க.  அவளுக்கு என்ன தெரியும்..  அன்னைக்கு எவ்வளோ அடி, உங்களால் அவளுக்கு விழுந்துச்சு தெரியுமா..

சரி அதோட தான் போயிட்டீங்கன்னு பார்த்தா.. உங்க அப்பா  திருப்பியும் அன்னைக்கு எல்லாரையும் கூட்டிட்டு  வீட்டுக்கு வந்து..  எங்க அம்மாவையும்  அப்பாவையும் அசிங்கமா பேசுறாங்க.. ஸ்கூலுக்கு போற பொண்ண போயிட்டு, இந்த குட்டி நல்லா இருக்கு.. என் பையனுக்கு இது தான் சரியான இருக்குன்னுலாம் பேசறாங்க.. என்கிட்ட நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தி வை, என் பையனுக்கு…”, என்று நிறுத்தியவள், மேலும் சொல்ல முடியாது, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தவள்..


"ப்ளீஸ் என்னை விட்டுடுங்க" என்றாள்..


ருத்ரனிற்கு மித்ரா சொன்ன அனைத்தையும் கேட்டு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது..  


அதைவிட அவளுடைய அழுகை வேதனையாக இருந்தது..


எழுந்துவிட்டவன், மித்ராவின் கண்ணைத் துடைக்க முற்பட்டான்..  


அதில், மித்ரா சட்டென்று, முகத்தில் பதட்டத்துடனும், பெரும் பயமுடனும், ருத்ரன் தொடாத வண்ணம் பின்னே சென்றாள்..


மித்ராவின் ஒவ்வொரு சொல்லும் சரி.. செயலும் சரி.. ருத்ரனை உயிருடன் குழி தோண்டி புதைக்க தொடங்கியது…


எந்த ஆண்மகனுக்கு தான், தான் விரும்பும் பெண், தன்னை பார்த்து, பயப்படுவதும், தீண்ட தகாதவனை போல், நடத்துவதும் பிடிக்கும்.


அதற்குள் ப்ரித்திவ், கிளாஸ் முடித்து விட்டு, பிரின்ஸ்பால் ரூமிற்கு சென்ற, மித்ராவை தேடி பதட்டத்துடன் ஓடி வந்தான்..  


அங்கு அவள், காணவில்லை, என்றதும் பியூனிடம், எங்கே மித்ரா  என்று விசாரித்துவிட்டு, கேண்டீன் பக்கம் சென்றவன்.. இவர்களை பார்த்தப்படியே கேண்டினுள் சென்று நின்று கொண்டான்.. 


ஏதோ பேசுகின்றார்கள் என்று மட்டும்தான் பிரித்திவிற்கு தெரிந்தது..  அதை விட பியூன் சொந்தக்காரர் என்று வேறு சொல்லி இருக்க.. அருகில் சென்று அவனால் விசாரிக்க முடியவில்லை.


ருத்ரன், "டாட் உங்க வீட்ல பேசுனதுக்கும்..  உங்களுக்குக் நிறைய கஷ்டம் கொடுத்தற்கும்..  நான் கண்டிப்பா அங்கிள் ஆன்ட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் சமி..  டாட்-யையும் கேட்க சொல்றேன்.. திரும்ப இப்படி கண்டிப்பா நான் நடக்க விடாமல் பார்த்துக்கறேன் சரியா”, என்றவன்..


“நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம்..  உன்னோட ஆசை என்னவோ அதை சொல்லு.. நான் கண்டிப்பா அதை நிறைவேற்றி வைக்கிறேன்..”, என்றவனை அவள் அதிர்ச்சியுடன் ஏறிட்டு பார்க்க..


“டாட் கிட்ட நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் சமி, இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்னு.. அவர் கேட்கவே மாட்றாரு.. 

உன்னை பத்தி நான் ஏற்கனவே விசாரிச்ச வரைக்கும், உனக்கும்,  யார் மேலேயும் விருப்பம் இல்லை..  அப்படி இருக்கும்போது, உன்னை விரும்பும் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே", என்றான்…


மித்ரா, "ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க..  என்னால யோசிச்சி கூட பாக்க முடியல.. உங்கள கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி..", என்றாள் பட்டென்று.


ருத்ரனிற்கு அவமானம் தாங்கவில்லை, "ஏன் அப்படி என்ன..  என் மேல வெறுப்பு உனக்கு.. உங்க கார்ல வந்ததுக்கா..  நான்தான் அதுக்கு சாரி கேட்கிறேன் சொல்றேன்.. நீ ஏன் அதுக்கு போயிட்டு  இப்படி ரியாக்ட் பண்ற.. சின்ன பொண்ணு மாதிரி", என்றான்..


அதில் அவனை ஒரு பார்வை பார்த்த மித்ரா, "உங்க வாழ்க்கையில வர முதல் பொண்ணு நான் தானா..", என்றாள்.. அழுத்தமாக.


ருத்ரன், "கண்டிப்பா.. அதில் என்ன சந்தேகம் உனக்கு.. எனக்கு உன்னை தான் முதல் முதல்லா புடிச்சிருக்கு சமி.. அதுவும் பார்த்த அந்த முதல் செகண்ட்ல இருந்து.. என் மனசுல நீ மட்டும் தான் இருக்க..  இதுவரைக்கும் அந்த மாதிரியான உணர்வு எனக்கு வந்ததே இல்ல..  இதுல உனக்கு சந்தேகமே வேணாம்", என்றான், வேதனையுடன், தன்னுடைய காதலை மித்ராவிடம் பகிர்ந்துகொள்ளும் சூழலை எண்ணி…


மித்ராவோ கோபமாக, "பொய்.. பொய் சொல்றீங்க..  உங்க அப்பா உங்களை பத்தி எல்லாமே சொல்லிட்டாங்க.. என் பையனுக்கு டெய்லி ஒரு புது மாடல் பொண்ணு வேணும்..  அதைவிட நான் உங்களுக்கு சீக்கிரம் சலிச்சுடுவேணாம்.. அதனால் என் தங்கச்சியும் உங்களுக்கு, தேவைப்படும்னு சொன்னாங்க.. அப்பேற்பட்ட நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம்.. ",  என்றாள் அருவருப்புடன்...


“வாட்…” என்று அதிர்ந்து ருத்ரனுக்கு.. மித்ராவின் அருவருப்பான முகம் அவனை அடியுடன் சாய்த்தது..


"காட்.. சமி..  அதெல்லாம் நான் ஏதோ adulthood starting-ல பண்ணது..  ஃபாரின்ல பிரண்ட்ஸ் கூட சேர்ந்து..  அந்த ஏஜ்ல இதெல்லாம் தான் என்ஜாய்மென்ட் நினைச்சுட்டேன்... தப்பு தான்.. பட் அவங்க மேல எல்லாம் எனக்கு எந்த லவ் தாட்ஸும் வந்தது இல்ல..  இன்ஃபேக்ட் எனக்கு அவங்க முகம் எல்லாம் கூட ஞாபகம் இல்ல..

உன்ன பார்த்த அப்புறம் நான் யார்கிட்டேயும் பிசிகல் ரெலேஷன்ஷிப் வச்சிகலை..  இனியும் மாட்டேன் டா..  ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோ.. நீ நினைக்கிற மாதிரி இல்ல", என்றான் குற்ற உணர்வுடன், காதலியாகவே இருந்தாலும், இதற்கு மேல், மித்ராவிடம் அவனால், தன் அந்தரங்கத்தை பேசவும் வேறு முடியவில்லை…


மித்ரா, "எனக்கு நீங்க வேணாம்..  எனக்கு ராமன் மாதிரி தான் வேண்டும் புருஷன்.. உங்களை மாதிரியில்லை"

என்றுவிட்டு, சட்டென்று ருத்ரனே எதிர் பார்க்க முடியாதவண்ணம்  அழுதுகொண்டே அவன் காலில் விழுந்து விட்டாள்.. 


"ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..  எனக்கு உங்க கூட கல்யாணம் வேண்டாம்..  கண்டிப்பா நான் செத்துடுவேன் அப்படி மட்டும் நடந்துச்சுன்னா..  எங்க குடும்பத்தை விட்டுடுங்க..", என்றாள் அவனின் காலின் அடியில்…


மித்ராவின் செய்கையால் அந்த நிமிடமே ருத்ரன் மடிந்துவிட்டான்.. பட்டென்று தரையிலேயே உட்கார்ந்து விட்டான் கால்கள் வலுவிழந்து..  


அவன் உடலெல்லாம் பதறியது..  


வாழ்க்கையில் முதல் முறை சந்திக்கும் ஏமாற்றம்.. தோல்வி.. அவமானம்.. நிராகரிப்பு..


மித்ரா, ஏதோ இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்றும்.. புதியவன் என்று மறுக்கின்றாள்.. எங்களை பார்த்து பயப்படுகின்றாள்.... என்றே நினைத்தான்..  


இந்த மாதிரியான எண்ணங்கள் மித்ராவின் மனதில் இருக்கும் என்று எண்ணவில்லை… 


ருத்ரனின் காதல் கோட்டை ஆதிகேசவனால் ஆட்டம் கண்டு, தரையோடு தாரையாக சரிந்து நாசமாகியது.. 


ருத்ரன் மித்ராவின் கண்களை நிராசையுடன் பார்த்து,  "உன்னோட விருப்பம் இல்லாமல், எதுவும் இனி நடக்காது கண்டிப்பா..  அதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்.."  என்று விட்டு, எழுந்து, தளர்ந்த நடையுடன், அவளை திரும்பி பார்க்காமல் காரை நோக்கி சென்றான்…


காதல் செய்த பெண்ணாகவே இருந்தாலும், அவளிடம் ருத்ரன் எதையும் யாசித்து பெறவோ, மிரட்டி பெறவோ விரும்பவில்லை…


தானாக பழத்தை கனிய விடுவதற்கும், அதை அடித்து கனிய வைப்பதற்கும், வித்யாசம் உண்டல்லவா..!


ருத்ரன் நினைத்து இருந்தால், மித்ரா நேருக்கு நேர், அவனை பார்த்து, பேசிய பேச்சுக்கு, என்ன‌ வேண்டுமானாலும், செய்து இருக்க முடியும். 


ஆனால் ருத்ரனின் குணம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது ஆகிற்றே..!


ருத்ரன் சென்றபிறகும், மித்ராவிற்கு, ருத்ரனின் வார்த்தைகளில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை..  அன்றும் அப்படி தான் சொன்னான்..  ஆனால் அவனின் தந்தை திருமணம் வரை வந்து விட்டார் என்று..


மித்ராவின் மனதில் பிரித்திவ் வந்து நுழைந்ததை மித்ராவே அறியவில்லை.. ருத்ரனை இந்த அளவிற்கு அவள் மறுப்பதற்கும்..  ருத்ரனின் காதலை புரிந்து கொள்ளாததற்கும் அதுவும் ஒரு காரணம்..  


அவளையும் அறியாமல், அவன் பிரித்திவ்வுடன், ருத்ரன்னை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தாள்.


நடுத்தர மக்களின் கனவு எப்பொழுதும், பணக்கார கணவன் வேண்டும் என்பதை விட..  தன்னை நேசிக்கும், தன்னை மட்டுமே நேசிக்கும், ஒழுக்கமான கணவனே  வேண்டும் என்ற மனநிலைதான் அதிகம்..  அதுவேதான் மித்ராவிற்கும் இருந்தது.. அதில் தவறு எதுவும் இல்லையே…


காலத்தில் சொல்லப்படாத ருத்ரனின் காதலுக்கு, இன்று அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது..


சரியான வழி நடத்தல் இல்லாததும்.. அதிக பணமும்.. அரசியல் செல்வாக்கும்..  தான் என்ற அகம்பாவமும்..  ஒழுக்கம் எது என்பதை அறியாமலும் வாழ்ந்த ருத்ரனுக்கு..  மித்ராவின் மறுப்பு மிகப்பெரிய இடி.. 


மித்ரா, ருத்ரன் சென்றதும் எழுந்து அழுகையுடன் கிளாஸ் ரூம் பக்கம் விடுவிடுவென நடந்தாள்..


பிரித்திவ், மித்ரா, ருத்ரனின் காலில் விழுந்ததை பார்த்ததுமே பதறி கேண்டீனில் இருந்து வெளியே ஓடி வந்தான்..


மித்ராவை, கத்தி அழைக்க முடியாது என்பதால் பிரித்திவ்வும் வேகமாக மித்ராவை பின்தொடர்ந்தான்..


பிரித்திவ், மித்ராவை சிறிது நெருங்கியதும்..  சுற்றி  ஒருமுறை யாரும் உள்ளார்களா.. தங்களை கவனிக்கிறார்களா.. என்று பார்த்துவிட்டு.. 


"சங்கமித்ரா நில்லு..  சங்கமித்ரா இங்க பாரு..  கொஞ்சம் நில்லு மா", என்று அழைத்தான் ப்ரித்திவ்..


பிரித்திவ் குரல் கேட்டதும் மித்ரா நின்று..  கண்ணை ஷாலில் அழுந்த துடைத்துக் கொண்டு.. திரும்பி பார்த்தாள்..


பிரித்திவ் யாரும் பார்க்காத வண்ணம் இருந்த ஒரு இடத்தை பார்த்துவிட்டு..  "வா சங்கமித்ரா.. அங்க போய் பேசலாம்..", என்று அழைத்துவிட்டு  நடந்தான்..


அவ்விடத்திற்கு சென்றதும் பிரித்திவ், "என்ன ஆச்சு..  யாரு அது..  என்ன பிரச்சனை உனக்கு..  ஏதாச்சும் பிளாக்மெயில் பண்றாங்களா சொல்லு..", என்றான்..


மித்ரா மீண்டும் அழுதுகொண்டே இருந்தாள் எதுவும் சொல்லாமல்..


மித்ராவின் அமைதியில் பொறுமை இழந்த பிரித்திவ்,

"ஏதாச்சும் லவ் மேட்டரா..  என்ன ஆச்சு சொல்லு..  உங்க வீட்டுக்கு போன் பண்ணவா.. ஏதாச்சும் பெரிய பிரச்சனையில்ல மாட்டிக்கிட்டயா ", என்றான் சீற்றத்துடன்..


பிரித்திவ்வின் கேள்வியில்… அரண்டுப்போன மித்ரா அழுதுகொண்டே, "இல்ல சார்..  என் மேல தப்பு எதுவும் இல்ல.. நான் அவங்கள லவ் எதுவும் பண்ணல..  நீங்க எங்க அப்பா கிட்ட வேணா கேட்டுக்கோங்க..", என்றுவிட்டு..


ருத்ரனை அன்று காரில், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்த பொழுது சந்தித்தது முதல்.. மீண்டும் மண்டபத்தில் சந்தித்தது..  


ஆதிகேசவன் வந்தது.. மிதிலாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.. 


நேற்று காலை ஆதிகேசவன் வந்து திருமணம் குறித்து பேசியது..  அவனின் அத்துமீறிய வார்த்தைகள்..  


ருத்ரனின் பெண்கள் பழக்கம்..


இன்று ருத்ரன் வந்தது.. தங்களை ஆதிகேசவன் கண்காணிப்பது..  விஷ்ணு தன்னை கல்லூரிக்கு அழைத்து வந்து கூப்பிட்டு செல்வது..   என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் வேதனையுடன் பிரித்திவ்விடம் சொல்லிவிட்டாள்..


மித்ரா, சொல்ல சொல்ல கேட்ட பிரித்திவிற்கும் மிகுந்த அதிர்ச்சி.. என்னமோ பிரச்சனை என்று நினைத்தால்..  இது என்ன இவ்வாறு கிணறு வெட்ட போய், பூதம் கிளம்பிய கதையாக..  இவ்வளவு அநியாயமா என்று ஆகிவிட்டது..


மித்ராவின் அழுகை வேறு மிக அதிகமாக இருந்தது..  ஷாலில் முகம் புதைத்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்..


பிரித்திவ், "உங்க வீட்டில என்ன சொல்றாங்க மா", என்றான்..


மித்ரா, "வீட்டிலயும் யாருக்கும் விருப்பம் இல்ல சார்..  அப்பா எப்படியாச்சும் நிறுத்த தான் பாக்குறாங்க..  ஆனால் முடியுமானு தான் எனக்கு தெரியல..", என்றுவிட்டு ஆதிகேசவனின் அரசியல் பின்புலத்தை பற்றி கூறினாள் அழுகையுடன்..


பிரித்திவ்வின் மனதில் சில கணக்குகளும்..  யோசனைகளும் விடுவிடுவென்று வந்தன..


பிரித்திவ், "சரி சங்கமித்ரா..  நீ கிளாஸ்ல இரு..  யார்கிட்டயும் இந்த பிரச்சனை பத்தி கிளாஸ்ரூம்ல பேசாத..  ஈவினிங் உங்க அப்பா வந்ததும் நான் அவர் கிட்ட பேசுறேன்..  நீ பயப்படாத..  கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்..  தைரியமா இரு..  ஈவினிங் நான் கடைசில இருக்க சர்வர்(Server) ரூம்ல இருக்கேன்.. உங்க அப்பாவ அங்க கூப்பிட்டு வா யாருக்கும் தெரியாமல்..  உன்னோட தைரியத்தையும், நம்பிக்கையையும் இழக்காத, கண்டிப்பா இதுக்கு ஒரு வழி இருக்கும், யோசிக்கலாம்..", என்றான் ஆறுதலாக..


சரி என்று விட்டு, மித்ரா கிளாஸ் ரூமிற்கு சென்றாள்..  மனம் முழுக்க தப்பிக்கும் மார்க்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு..


யார் என்றே தெரியாத பிரித்திவ்விடம், தன் மனக்குமுறலை மித்ரா பகிர்கின்றாள்.. 


யாரோ ஒரு மாணவிக்காக, பிரித்திவிராஜ் பதறுகின்றான்.. 


இங்கு ருத்ரன், மித்ராவை விட்டு..  பிரிந்து நடந்து சென்று காரில் அமர்ந்தவனுக்கு.. உலகமே நின்றுவிட்டு இருந்தது.


அதிலும் மித்ரா அவன் காலில் விழுந்ததை அவனால் இன்னமுமே ஜீரணிக்க முடியவில்லை..


அந்த அளவிற்கா தான் தரம் தாழ்ந்து விட்டேன்..  


ஏன் என் கண்ணில் அவள் பட்டாள்.. ஏன் என் காதல் மித்ராவின் கண்களுக்கு தெரியவில்லை..  


ருத்ரனால் அவனின் மனப் போராட்டத்தை தாங்கமுடியவில்லை..  


சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.. 


டிரைவர் வீட்டிற்கு செல்லவா என, சரி என்று தலை அசைத்தான்…


ருத்ரனின் மூடிய கண்களுக்குள் முழுவதும் மித்ராவே நிறைந்து இருந்தாள்..


அன்று அழகிய மஞ்சள் மற்றும் பிங்க் நிற லெஹெங்காவில்.. டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவளின்,  தலை முடிகள் ஆங்காங்கே கலைந்து முகம் முழுவதும் பரவி இருக்க..  இயற்கை எழில்கள் மிஞ்சும் முகத்துடன், தன்னை கேள்வியாகவும், ஆராய்ச்சியாகவும் பார்த்த, அந்த கண்களை நேருக்கு நேர் சந்தித்த அந்தக் கணமே ருத்ரன் விழுந்து விட்டு இருந்தான்.. 


அழகாக அஞ்சனம் தீட்டப்பட்ட பெரிய விழிகளுக்குள்..  கருந்திராட்சை போன்று பளிச்சென்று இருந்த கண்ணின் மணிகள்..  ருத்ரனை நோக்கி வீசிய வெட்டும்பார்வை..  ருத்ரனை கோபம் கொள்ள வைப்பதற்கு மாறாக.. சிலிர்க்க செய்து இருந்தது.


இன்றும் ருத்ரனின் உடல் சிலிர்த்தது அந்த தருணத்தை எண்ணி.. 


மித்ராவை தவிர, வேறு எந்த பெண்ணும் அவனிடம் ஏற்படுத்தாத உணர்வுகள் இது.. சாகும் வரை அவனால் மறக்க முடியாதவை.


ஆனால் அதே கண்கள், இன்று தன்னால் கலங்கி சிவந்ததை ருத்ரனால் எவ்வாறு தாங்க முடியும்…


முதல் சந்திப்பில் மித்ரா, காரை லாவகமாக செலுத்தியதும்.. 

அலட்சியமாக தன்னை நோக்கி போக வேண்டிய அட்ரஸை  கேட்டதும்..


உன்னைப் பார்த்து நான் மயங்க மாட்டேன் என்ற கர்வமான அவள் உடல் மொழியும்… உதட்டு சுழிப்பும்.. மேலும் மேலும் ருத்ரனை கவர்ந்து இழுத்து இருந்தது..


அவள் அசையும் பொழுதெல்லாம் காதில் நடனமாடிய ஜிமிக்கியும்..  


அழகிய நீண்ட கருங்கூந்தலில்  சூடியிருந்த மலர்களும்..  அதன் சுகந்த நறுமணமும்.. 


மின்னல் கீற்றை போல், எப்பொழுதாவது தெரியும், மெல்லிய வெண்ணிற இடையும்.. பார்க்கும் போதே தெரியும் அதன் மென்மையும்.... என்று காரின் பின்புறம் அன்று உட்கார்ந்து இருந்த ருத்ரனின் மையலை அதிகப்படுத்தி.. தன்னுடைய பெண்மையினால், அவனை தன்புறம் இழுத்து, கட்டிப் போட்டு இருந்தாள், மித்ரா தன்னை அறியாமல்..


அன்று மித்ராவை தவறவிட்டு விட்டு, ருத்ரன் பட்ட அவஸ்தையை வார்த்தையால் வரிக்க இயலாது.. 


அவர்களின் குடும்பத்தில், மிதிலாவின் பெயரைத் தவிர ருத்ரனிற்கு வேறொன்றும் தெரியாது..


அந்த ரோட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ருத்ரன் தனி குழுவை நியமித்து ஆராய்ந்து கொண்டு, இருந்தவன்.. மித்ராவை மீண்டும் கண்டுபிடிக்கும் வரையுமே, அவளுக்கான தேடுதல் வேட்டைகளை நடத்திக் கொண்டுதான் இருந்தான்..  


நிச்சயம் மித்ராவை, அன்று மண்டபத்தில் காணவில்லை என்றாலும், கூடிய விரைவில் ருத்ரன் கண்டுபிடித்து இருப்பான்..


அன்று மிதிலா, தன்னுடைய அக்காவை, சங்கமித்ரா என்று அறிமுகப்படுத்திய நொடி.. 


ருத்ரன் தன் மனதில் ‘சங்கமித்ரா ருத்ரன்’ என்று உடனே பெயர் பொருத்தம் பார்த்து.. அவளுக்கு ‘சமி’ என்ற பெயரையும் மனதுக்குள் சுருக்கமாக செல்லமாக சூட்டிக்கொண்டான்..


மித்ரா, ருத்ரனை அன்றும் வெட்டும் பார்வையுடன் கண்டுகொள்ளாமல்.. மிதிலாவை இழுத்துச்சென்ற போன போது கூட..  ருத்ரனுக்கு அவளை பிடித்து தான் இருந்தது.. 


அனைவரும் தன்னிடம் மயங்க..  தன்னிடம் சிறு துளியும் மயங்காத சிறு புள்ளிமானின் மேல்தான் வேங்கைக்கு மையல் பெருகிக்கொண்டே இருந்தது..


இயற்கையின் விதியும் அது தானே..


அன்று இரவே சங்கமித்ராவின் முழு ஜாதகமும் ருத்ரனின் கையில்..


அன்று முதல், ஒரு தினம் கூட விடாமல், மித்ராவை பார்த்து விடுவான்.. 


தன்னுடைய காதலை மித்ராவிடம் நேரடியாக சொல்வதற்கு முன்பு.. மிதிலாவிடம் பேசி மித்ராவை பற்றி சிறிது தெரிந்து கொண்டு..  அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் அறிந்து கொண்டு..  தன்னவளை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று நினைத்து தான் ருத்ரன் மிதிலாவை.. சந்தித்தான்..


மிதிலாவின் கள்ளமில்லா குணமும்..  சிறு குழந்தையின் மனம் கொண்டு, தன்னிடம் பழகும் அவளிடம், எவ்வாறு காதலைப் பற்றி பேசுவது என்று தயங்கியே..  அன்று ருத்ரன் மிதிலாவிடம் ஒன்றும் சொல்லவில்லை..


ருத்ரன் விசாரித்தவரை மித்ராவிற்கு காதல் எதுவும் இல்லை..  நல்ல குடும்பப்பாங்கான பெண்..  அறிவான புத்திசாலியான பொறுப்பான பெண்.. நல்ல குடும்பம்.. என்ற தகவல்கள் தான் வந்து சேர்ந்திருந்தது..


ருத்ரன் நிச்சயம் தனக்குத்தான் மித்ரா என்று நினைத்துக் கொண்டு இருந்தான்..


ஆனால் அதற்கு பின்பு நடந்தவை அனைத்தும், அவனின் கற்பனைகளுக்கு அப்பார்ப்பட்டவை..


திருமணத்திற்கு மித்ரா மறுப்பாள் என்று ருத்ரன் நினைக்கவே இல்லை..


அதிலும் மித்ரா, அவனை பிடிக்கவில்லை என்று சொன்ன காரணத்தை, இனி என்ன செய்யமுடியும்..


ருத்தரனால், இனி அவ்வாறான செயல்களை  நான் பண்ணமாட்டேன் மன்னித்துவிடு..  என்று சொல்ல முடியுமே தவிர..  நடந்துமுடிந்த செயல்களை எவ்வாறு மீட்க முடியும்..


அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிட்டது.


சரி மித்ரா மனம் மாறும் வரை காத்திருப்போம் என்று ருத்ரன் எண்ணுகையிலேயே..  மித்ரா அவன் காலில் விழுந்து கதற ஆரம்பித்துவிட..


தன்னுடைய முதல் காதலுக்கு அவனே முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.


உண்மை காதல், எப்பொழுதும் தன் இணையின் கண்ணீருக்கு காரணமாக இருக்காது என்பதற்கு சான்றாக..  ருத்ரன் தன்னவளுக்காக விலகிவிட்டான்..  ஆம் மித்ராவின் வாழ்க்கையில் இருந்து, இனி விலகிவிட்டான்.


தெரிந்தோ, தெரியாமலோ, ருத்ரன் தடம்மாறி செய்த ஒழுக்கமற்ற தவறுகள், இன்று அவனை காதலில் தோல்வி அடைய செய்துவிட்டு இருந்தது..


பணத்தினால் வாங்க முடியாதது உலகத்தில் இருந்து கொண்டு தானே இருக்கிறது.


செய்த முன் வினை பாவ செயல்களின் எச்சங்கள்.. அவனை பின்தொடர்ந்து இன்று அடியோடு சாய்த்துவிட்டது..


வீட்டிற்குள் கார்  நுழைந்ததும்..  இறங்கி ஜடமாக நடந்துவரும் மகனின் உணர்வுகள் துளைத்த தோற்றத்தை பார்த்த, மாதவியின் தாயுள்ளம் பதறியது..


மாதவி விரைந்து வந்து, "ருத்ரா, என்ன ஆச்சு..  ஏன் ஒரு மாதிரி இருக்க.. உடம்புக்கு ஏதாவது செய்யுதா..  யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா சாமி", என்றார் ருத்ரனை ஆராய்ந்து கொண்டே..


மறுவினாடி மாதவியை அணைத்துக்கொண்ட ருத்ரன்.

"அம்மா நான்..  நான் தோத்துட்டேன்மா..  என்னால தாங்க முடியலமா.. உடம்பெல்லாம் என்னமோ பண்ணுதுமா..  ஏன்மா நான் தப்பான பாதையில் போகும்போது என்னை நீங்க தடுக்கல..  ஏன்மா வாழ்க்கையில ஏமாற்றம்னா என்னனு தெரியாம என்னை வளர்த்துட்டிங்க..  வலிக்குதுமா..  வலிக்குது..  என்னால தாங்க முடியல மா..  செத்து போயிடலாம் போல இருக்குமா.. ஒழுக்கம் தவறியதால் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாமா சமி..  ஏன்மா என்னை ஒழுக்கம் தவற விட்டீங்க..  நீங்க ஏன் இதெல்லாம் தப்புன்னு எனக்கு சொல்லல, என்னால சமி இல்லாம வாழ முடியும்ன்னு நினைக்கவே முடியல மா" என்று கதறிவிட்டான்.. தாயின் அணைப்பில்.


ருத்ரனிற்கு நினைவு தெரிந்த பின், அவன் கண்ணிலிருந்து வரும் முதல் கண்ணீர் இது.. 


பெற்ற வயிறு பதறியது, மகனின் விரக்தியான பேச்சில்..


மாதவியும் அழுகையுடன் "ஏன் சாமி இப்படி சொல்ற..  நான் இல்லையா உனக்கு..  எனக்குனு நீதான சாமி  இருக்க..  உனக்கு அம்மா முக்கியம் இல்லையா..  ஏன்பா இப்படிலாம் பேசுற..  நான் அந்த பொண்ணு கிட்ட பேசுறேன் பா.. கண்டிப்பா உன்னை அவளுக்கு பிடிக்கும்.. உன்னை விட நல்லவங்க யாரு சாமி இருக்கா.. நான் உன்னை திருத்த பார்க்கிறதுக்குள் உன் அப்பா",.. என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள், ஆதிகேசவனின் கர்ஜனை அந்த வீட்டு முழுக்கவும் எதிரொலிக்க ஆரம்பித்தது..


"ருத்ரா நீ எதுக்கும் அழ கூடாது..  ஆம்பளை கண்ணுல இருந்து, அதுவும் என் மவன் கண்ணுல இருந்து தண்ணியா.. கூடவே கூடாது.. அந்த பொண்ணு உனக்கு தான்.. என்ன திமிரு இருந்தா என் பையன பார்த்து அப்படி சொல்லி இருப்பா..  எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்துச்சு.. அந்த அன்னாடகாட்சிகளுக்கு இருக்கு", என்று கோபமாக கர்ஜித்தான்.. மித்ராவின் மேல் ஆதிகேசவனுக்கு பயங்கர

கொலைவெறி வந்தது.. 


என் பையனையே அழ வச்சுட்டாளா..?


நேரடியாக போயி, அவ்வளவு தூரம் பேசியும், வேணாம் சொல்லி இருக்கானா.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கனும்..


ருத்ரன், "நோ டாட்.. எனக்கு இனி அவ வேண்டாம்..  பிடிக்காத பொண்ணு கூட கண்டிப்பா என்னால வாழ முடியாது..  ப்ளீஸ் ட்ராப் திஸ் புரோபோசல்..  எனக்கு மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு..  ஆனாலும் சமியோட பாயின்ட் ஆஃஅ வியூவும் கரெக்ட் தான்", என்றான்..


ஆதிகேசவன், "என்ன விளையாடுறயா.. அதெல்லாம் முடியாது.. நான் முதல் பத்திரிக்கையை சிஎம்-க்கு கொடுத்திட்டேன்..  உனக்கு கண்டிப்பா அந்த பொண்ணு கூட குறிச்ச நேரத்துல கல்யாணம் நடக்கும்..  எலக்சன் முன்னாடி கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும்..  அதுதான் நமக்கு நல்லதுன்னு ஜோசியர் சொல்லிட்டார்..” என்றான்.


ருத்ரன் மீண்டும் மறுத்து பேச, “நான் சொல்லறத கேளு, இல்லன்னா அந்தக் குடும்பத்துல இருக்க 4 உயிரும், திருச்சி முழுக்க சிதறி இருக்கும்.. என்ன பத்தி உனக்கு தெரியும் ருத்ரன்..  இந்த மாதிரி பொருத்தம் அமையாது புரிஞ்சுக்கோ.. இனி கல்யாணம் வேணாம் அது இதுன்னு..  அவ ஏமாத்திட்டா.. அந்த மாதிரிலாம் எதுவும் உளராத.. உனக்குத்தான் அந்த பொண்ணு.. ", என்றுவிட்டு, ஆதி கேசவன் சென்றுவிட..


அங்கு அதேநேரம், தனியாக சர்வர் ரூமிற்குள் வந்து கதவை அடைத்த பிரித்திவ், தன் நண்பன் மிதுன் ஜார்ஜ்கும்..  ஆதித்யாவிற்கும் அழைத்து.. மித்ராவின் பிரச்சினையையும் அதன் தீவிரத்தையும் விவரித்தான்..


மித்ரா தன்னை கவனித்ததையும் சொல்லி..  "நல்ல பொண்ணுடா, எப்படியாச்சும் இதில் இருந்து காப்பாத்தனும்", என்றான் இறுதியில்..


பிரித்திவ்வின் மனம்புரிந்து, மூவரும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்..


அன்று மாலை, அவளை அழைத்து செல்ல வந்த, விஷ்ணுவிடம் மித்ரா, "பிரித்திவ் சார் உங்களை பார்க்க வர சொன்னார் ப்பா", என்று உள்ளே அழைத்து வந்தாள்.. 


விஷ்ணு “இப்போ ஏம்மா..”, என்று விசாரிக்க, நடந்து வரும் வழியிலேயே மித்ரா, பிரித்திவ்வின் படிப்பு முதல்..  அவன் யாரும் இல்லாமல் முன்னுக்கு வந்தது..  தான் அன்று உணவு கொடுத்தது..  அதை மறுத்து அவன் பிடித்து திட்டியது.. இன்று ருத்ரனை பார்த்தது..  பிறகு அதைப்பற்றி பிரித்திவ்விடம் பேசியது..  என்று அனைத்தையும், தன் தந்தையிடம் மறைக்காது சொல்லியே, அழைத்து வந்தாள்..


விஷ்ணு சர்வர் ரூமினுள் நுழைந்ததும், "குட் ஈவ்னிங் சார்..  வாங்க உட்காருங்க..", என்று சேரை காண்பித்தான் ப்ரித்திவ்..


விஷ்ணு உட்கார்ந்ததும், "நான்தான் பிரித்திவ்ராஜ், சங்கமித்ராவோட கிளாஸ் கோ-ஆர்டினேட்டர்", என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்..


விஷ்ணு, "வணக்கம் சார்.. மித்ரா எல்லாமே சொல்லி தான் கூட்டிட்டு வந்தாப்ல,  நீங்க என்னை தனியா பார்க்கணும், பேசணும்னு, சொன்னீங்களாமே", என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்..


அதன் பிறகு ப்ரித்திவ்வும் நேரடியாக, "என்ன முடிவு எடுத்து இருக்கீங்க", என்றான்.. நேரத்தை வீணாக்காது..


விஷ்ணு, "தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் பேசிட்டேன் சார்..  சொந்தக்காரங்க கிட்டயும் பேசினேன்.. சிலரை வச்சு கொஞ்சம் பெரிய ஆளுங்க கிட்டயும் பேசினேன்.. எல்லாருமே ஆதிகேசவன  பார்த்து பயப்படுறாங்க.. என்ன செய்றதுன்னு தெரியல.. சட்டமும் அவன் பக்கம், எல்லாரும் பொண்ண கட்டிக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு சொல்றாங்க.. ஆனா எங்க யாருக்குமே விருப்பம் இல்ல.. அந்த மனுஷனை பார்த்தாலே பயமா இருக்கு.. எதுக்கும் துணிஞ்சவங்க, பாவ புண்ணியம் அறியாதவன், கோவில்ல இருக்க சிலை மாதிரி சார் என்னோட பொண்ணு..  அதை போயிட்டு எப்படி சார் அந்த சாக்கடையில வைக்கிறது.. கடவுள் தான் என் பொண்ண காப்பாத்தனும்..", என்றார் வேதனையுடன்..


பிரித்திவ், தன் நண்பர்களுடன் இப்பிரச்சனையை பற்றி பேசி யோசித்த முடிவுகளை.. விஷ்ணுவின் முன்பு வைத்தான்...


பிரித்திவ், சொன்ன முடிவுகள் நடைமுறைக்கு சாத்தியமே…  


இருந்தும் எவ்வாறு இதை செய்ய முடியும்..  இதனால் என்ன ஆபத்துக்களை, எல்லாம், எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.. என்று விஷ்ணு யோசித்தார்..


அக்கம் பக்கத்தில் கூட, தங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று இப்பொழுதெல்லாம்..

விஷ்ணு குடும்பத்தை பார்த்தாலே ஓடி விடுகின்றனர்..  


இந்நிலையில் பிரித்திவ் சொன்ன ஆலோசனை தவிர வேறு எதுவும் விஷ்ணுவிற்கு தெரியாது..  எனவே மேலும் விஷ்ணு சிறிது பிரித்திவ்விடம் விசாரித்துவிட்டு..  "நாளைக்கு முடிவை சொல்றேன் சார்.. ரொம்ப நன்றி", என்றுவிட்டு மித்ராவுடன் புறப்பட்டார்..


வீட்டிற்கு வந்த விஷ்ணு, துளசியை தனியாக அழைத்து சென்று பேசிவிட்டு, மீண்டும் மித்ராவை மாடிக்கு அழைத்துச் சென்று தனியாக பேசினார்..


எவ்வாறு வயது பெண்ணை, முன் பின் தெரியாத ஆடவனுடன் அனுப்புவது..  என்பதே விஷ்ணு துளசியின் பெரிய கவலை..  ஆனால் இதை தவிர வேறு ஒரு வழியும் தெரியவில்லை..


பிரித்திவ், மித்ராவை பாதுகாப்பாக யாருக்கும் தெரியாமல் மும்பைக்கு அழைத்துச் சென்று..  கொஞ்ச நாட்கள் தன் நண்பன் மிதுன் ஜார்ஜ் வீட்டில் மித்ராவை பாதுகாப்பாக வைத்து இருந்துவிட்டு..  பிறகு மும்பை கல்லூரியிலேயே புதிதாக 12th  சர்டிபிகேட் வைத்து காலேஜ் சேர்த்து விடுகின்றேன்.. என்று சொல்லியிருந்தான்..


அதுமட்டுமில்லாமல் மிதுனிற்கு திருமணம் ஆகிவிட்டது.. அவன் மனைவியுடன் மித்ரா பாதுகாப்பாக இருப்பாள்.. 


கவலை வேண்டாம், யாரும் கண்டறிய வாய்ப்பே இல்லை என்று இருந்தான்.


விஷ்ணு தங்களை ஆட்கள் தொடர்ந்து கண்காணிப்பது குறித்து கூற…


பிரித்திவ், நாங்கள் கிளம்பிய பிறகு..  மித்ரா காலேஜில் இருந்தே, கல்யாணம் பிடிக்காமல் எங்கேயோ போய் விட்டாள், என்பது போல் ஜோடித்து விடலாம்..  நான் மேலும் யோசித்து யோசனை கூறுகிறேன்..  உங்களுக்கும் அவள் எங்கே போய்விட்டாள் என்பது தெரியாது போல் சோகமாக இருப்பதாக காண்பித்து கொள்ளுங்கள்.. நிச்சயம் யாருக்கும் சந்தேகம் வராது.. மும்பையில் இருப்பாள் என்பதை நிச்சயம் ஒருவராலும் யூகிக்க முடியாது.

தப்பித்து விடலாம் என்றான்…


விஷ்ணு ஆதிகேசவன் குறித்து பயப்பட..


பிரித்திவ், ஆதிகேசவனிற்கு   இருக்கும் எலெக்ஷன் வேலையில், உங்களை எதுவும் செய்யாமல் விட்டு விடுவான்..  அது அவனுக்கு பிரச்சனை ஆகும் வேறு என்று எதுவும் செய்ய மாட்டான் என்றவன்.. தந்தையாக அவர் மனம் அறிந்து…


நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், நானும் அங்குதான் வேலை செய்ய  போகின்றேன், பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் இங்கு ஓரளவுக்கு அனைத்தும் சரியானதும் மும்பை வந்து செட்டிலாகி விடுங்கள் என்று ஆலோசனை கூறி இருந்தான்.


விஷ்ணு, மித்ராவிடம், ப்ரித்திவ் கிளாஸில் எப்பொழுதும் எவ்வாறு நடந்து கொள்வான் என்பது போன்றவற்றை தீர விசாரித்தார்..  


மித்ராவின் மனதில், தனக்காக, பிரித்திவ்  ரிஸ்க் எடுத்து, உதவ முன்வந்தது, மிகவும் இதமாக இருந்தது..  


மிதிலாவிடம் யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துக் கொண்டனர்.. 


மிதிலா எப்பொழுதும் போல், விவரம் இன்றி தெரியாமல் யாரிடமாவது உளறி விட்டால், மேலும் பிரச்சனை, என்று அவளிடம் யாரும் இவ்விஷயம் குறித்து மூச்சே விடவில்லை.


மறுநாள் மாலை விஷ்ணு கல்லூரியில் அதே அறையில் பிரித்திவ்வை சந்தித்து, "நீங்க சொன்ன முடிவுக்கு.. சம்மதம் சார் எங்களுக்கு..  மித்து ஓட அம்மா கிட்டயும் பேசிட்டேன்....  உங்களை நம்பித்தான் அனுப்புறேன் பாப்பாவ..  எனக்கும் வேற வழியும் இல்லை..  உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை இல்ல", என்றார்..


பிரித்திவ், "கண்டிப்பா இல்லை சார்..  நீங்க பயப்பட வேண்டாம்..  நான் யோசித்து தான் இதுல இறங்கினேன்.. கண்டிப்பா சங்கமித்ரா இனி என்னோட பாதுகாப்பில் பத்திரமா இருப்பா.. நீங்க பயப்பட வேண்டாம்", என்று விட்டு, அவனின் அனைத்து சர்டிபிகேட்டுகள் மற்றும் ஆதாரங்களை விஷ்ணுவிடம் காண்பித்தான்.. 


விஷ்ணுவிற்கு ப்ரித்திவ்வின் மேல் முழு நம்பிக்கை வந்தது...


மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை பற்றி கலந்தாலோசிக்க தொடங்கினர்...


பிரித்திவ், அடுத்த நாளே காலேஜில் ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்து விடுவதாக கூறினான்..  இல்லை என்றால் சந்தேகம் வரும் என்று..


அடுத்து மிதிலாவின் தேர்வு சமயத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து..  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி நாளை தேர்வு செய்தனர், பிரித்திவ் உடன் மித்ரா கிளம்புவதற்கு..


விஷ்ணு குடும்பம் மற்றும் ப்ரித்திவ்வை பொருத்தவரை..  ஆதிகேசவன் மற்றும் ருத்ரன் இருவருமே அராஜகம் செய்பவர்களாகவும்.. பெண்கள் விஷயத்தில் மோசமானவர்கள் ஆகவும் மட்டுமே தெரிந்தனர்..  


அவர்களிடம் இருந்து, மித்ரா தப்பித்தால் போதும், என்ற மன நிலையிலேயே, அடுத்தடுத்த திட்டத்தை வகுத்தனர்..


அனைத்தும் பேசி முடிய, விஷ்ணுவும் மித்ராவும் விடைபெற்றுக் கொண்டனர்…


அடுத்த நாள் பிரித்திவ்  மித்ராவை லேப்பிற்கு அழைத்து..  புது ஃபோன் ஒன்றை அவளிடம் கொடுத்து, "உன் வீட்ல இதை கொடுத்துடுமா..  எனக்கு மட்டும் பேச யூஸ் பண்ண சொல்லு..  புது‌ சிம் இருக்கு..  நானே எப்பவும் ரீச்சார்ஜ் பண்றேன்..  எக்காரணம் கொண்டும் வெளியே தெரிய வேண்டாம்.. மறைச்சு வைக்க சொல்லு அப்பாகிட்ட", என்றப்படி கொடுத்தவன்.. 


"உனக்கு என்கூட, மும்பை வர.. ஓகேவா சங்கமித்ரா..  ஏன் இன்னும் உன் முகம் ரொம்ப டல்லாவே இருக்கு..  எதுனாலும் சொல்லு..", என்றான்..


மித்ரா, "எனக்கு உங்க கூட வர சம்மதம் தான் சார்..  ஆனா மனசு ஒரு மாதிரி இருக்கு..  இதுவரைக்கும் நான் எங்க அம்மா, அப்பா, மிதிலாவவிட்டு ஒரு நாள் கூட இருந்தது இல்லை..  திருச்சி தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது.. நடக்கிறது எல்லாம் ரொம்ப கெட்ட கனவு மாதிரி இருக்கு..  எப்ப இந்த கனவில் இருந்து எழுவேன்னு இருக்கு", என்றாள் வருத்தத்துடன்..


பிரித்திவ், "கவலைப்படாத லைஃப்ல நிறைய மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்..  நீ உன் அம்மா அப்பா விட்டு இருந்ததில்லை..  நான் அம்மா அப்பா கூடவே இருந்தது கிடையாது.. உனக்கு திருச்சி சொந்த ஊரு.. எனக்கு அப்படி ஒரு ஊரே இல்ல.. நான்லாம் வாழலையா..  கஷ்டம்தான்.. ஆனால் முடியும்..  அதுமட்டுமில்லாம நான் தான் உன் கூட இருக்க போறேனே..  நீ ஏன் ஃபீல் பண்ற..  நான் கண்டிப்பா உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன்.." என்றவன் மேலும்.. " உன் லைஃப்ல எதிர்பாராத விதமான சூழ்நிலை திடீர்னு வந்துடுச்சு.. உனக்கு ஏத்துக்க கஷ்டமாதான் இருக்கும்..  நான் அதை தப்பு சொல்லல.. ஆனா நீ இப்படி இருந்தா, உன் அம்மா அப்பா தான் இன்னும் பயப்படுவாங்க..  ஏற்கனவே உங்க அப்பா ரொம்ப உடைஞ்சு போய் இருக்காரு..  அவரு முன்னாடி கொஞ்சம் போல்ட்டா இருக்க மாதிரி காமி..  கொஞ்ச நாள் தானே ", என்றான்.. 


பிரித்திவ்வின் தனிமை வாழ்க்கையை, அவன் வாய்மொழியாகவே கேட்கும் பொழுது மீண்டும் மித்ராவின் அடி மனதை அவன் பாதித்தான்.. 


அதைத்தொடர்ந்து அவன் கூறியதை கேட்டவள், "சாரி சார்.. நான் இப்படி யோசிக்கவே இல்ல..  கண்டிப்பா இனி பார்த்து நடந்துக்கிறேன்..  இனி உங்களுக்கு யாரும் இல்லைனு சொல்லாதீங்க சார்.. எங்க அப்பா அம்மா  இனி உங்களுக்கும் அப்பா அம்மாதான்..", என்றாள்..


அவளின் பேச்சை கேட்ட பிரித்திவ், அமைதியாக புன்னகைத்தான்..  


ஆமோதிப்பதாகவும் சொல்லவில்லை..  நிராகரிப்பதாகவும் சொல்லவில்லை.. அவன் புன்னகை…


பிரித்திவ், "சரி சங்கமித்ரா, நீ கிளாசுக்கு போ..  இன்னையோட எனக்கு காலேஜ் லாஸ்ட் டே..  என்னைப்பத்தி கிளாஸ்ல சாதாரணமா கூட நீ எதுவும் பேசி விடாதே..  நாம நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்..  நான் எல்லாம் ஃபோன்ல சொல்றேன்..  நீ கிளம்பு..", என....


மித்ரா, "ஓகே சார்..  ரொம்ப தேங்க்ஸ்..", என்று விட்டு ஏதோ கேட்க வந்து கேட்காமலே திரும்பினாள்..


அதைப்பார்த்த பிரித்திவ், "சங்கமித்ரா உனக்கு என் கிட்ட வேற ஏதாச்சும் கேட்கணுமா..  கேட்டுட்டு போ..", என்றான்..


மித்ரா தயங்கி தயங்கி, "அன்னைக்கு எல்லா டீச்சர்ஸ்கும் இப்படி தான் உடம்பு முடியலைனா சாப்பாடு கொடுப்பியான்னு கேட்டிங்கல..  அதே மாதிரி நீங்களும் எல்லா ஸ்டூடண்ட்ஸ்கும் இப்படி தான் ரிஸ்க் எடுத்து உதவி செய்வீங்களா", என்றாள்..


அதில் அதிர்ந்த பிரித்திவ், "வாட்.. OMG… நீ எதை, எது கூட லிங்க் பண்ற..  கண்டிப்பா எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவனான்னு தெரியாது..  ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணறனும் தெரியலை.... I think..  you are my special ", என்றான் சாதாரணமாக..


மித்ராவிற்கு, பிரித்திவ்வின் இப்படத்தில், மனதை ஏதோ செய்தது, "நான் கிளம்பறேன் சார்", என்று அங்கு நிற்க முடியாமல் வெளி வந்துவிட்டாள்.




கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻