உண்மை காதல் -18

அத்தியாயம் -18


பிரித்திவ்வும், விஷ்ணுவும், காலேஜில் சந்தித்து பேசிக்கொண்ட, நாளுக்கு பிறகு, ஃபோனில், அடுத்து என்ன என்பதை தினமும் பேசிக் கொண்டு இருந்தனர்..


ஆதிகேசவனின் ஆட்களும், கல்யாண வேலையாக, விஷ்ணுவின் வீட்டிற்கு, வந்து போய்க்கொண்டு இருந்தனர்..


மிதிலாவுக்கு பொதுத்தேர்வுகளும் ஆரம்பித்து நடந்துக்கொண்டு இருந்தது.


மிதிலா, ஏற்கனவே அனைத்து பாடங்களையும் நன்றாக படித்து இருந்ததால்..  அவளுக்கு எந்த தேர்வும் கஷ்டமாக இருக்கவில்லை.. மனம் சரியில்லை என்றாலும் கை அது பாட்டிற்கு..  படித்ததை எழுதிவிட்டு..  வந்தது..


இன்னும் சில நாட்களிலே, ருத்ரன் மித்ரா திருமணமனத்திற்கு இருந்தது.


இதற்கிடையில் விஷ்ணுவுக்கும் துளசிக்கும் மனதில் பல புதிய யோசனைகள் வேறு ஓடிக்கொண்டு இருந்தது..


மிதிலாவின் கடைசி தேர்வும் வந்துவிட்டது.


அந்நாளுக்கு முன்தினம், அவர்களின் வீடே பரபரப்பாக இருந்தது.. 


மித்ராவிற்கு பல பயப்பந்துகள் வயிற்றில் உருண்டுக்கொண்டு இருந்தது.


இரவு தூங்கும் முன்பு மிதிலாவை, கட்டி அணைத்து முத்தம் இட்ட மித்ரா, "நல்ல மார்க் எடுத்து.. நல்ல காலேஜ்ல, என் குட்டி தங்கம் டாக்டருக்கு படிக்கணும்..",  என்று வாழ்த்தினாள்..


தன் தாயின் மடியிலும்..  தன் தந்தையின் மடியிலும்.. மாற்றி மாற்றி படுத்து, தன் பிரிவின் துயரை, அவ்விரவு முழுக்க போக்கிக் கொண்டு இருந்தாள்..


அவளும் சிறு பெண்தானே..


பெற்றவர்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.. தங்களின் கைக்குள்ளே வைத்து வளர்த்த மூத்த மகளாகிட்டே..


மறுநாள் காலை துளசி, மகளுக்கு அழகாக தலை வாரி, பூச்சூட்டி, தன் கையாலேயே அவளுக்கு பிடித்த உணவை சமைத்து ஊட்டி விட்டு..  பூஜை அறையில் கடவுளை  ஒன்றாக வணங்கிவிட்டு..  விஷ்ணுவுடன் தினமும் காலேஜ் செல்வது போலவே.. அவளை அனுப்பிவைத்தார்..


விஷ்ணுவும் மித்ராவை இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்..


அங்கு காலேஜிற்கு, சிறிது நேரத்திலேயே, பிரித்திவ்வின் கார், காலேஜிற்குள் நுழைந்துவிட்டது..


அவன் அக்காலேஜில் இருந்து, வேலையை விட்டு சென்று, ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டு இருந்தது.


அன்று தான் மீண்டும் வந்து இருந்தான்‌.


மேனேஜ்மென்ட்டில்..  வேலை செய்ததற்கான எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்டில்..  தப்பு இருப்பதாக சொல்லி..  வேறு வாங்கிக் கொண்டு.. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசிவிட்டு, பொறுமையாக  கிளம்பியவன்…. தன் காரை காலேஜில் கடைசியில் பஸ்கள் நிற்கும் இடத்தில், கேமிரா எதுவும் இல்லாத இடத்தில், மறைவாக நிறுத்திவிட்டு..  மித்ராவிற்கு மெசேஜ் அனுப்பினான்..


உடனே மித்ரா, காலை பிரேக் டைமில் சொந்தக்காரர் வந்திருப்பதாகவும்..  அவரை பார்த்துவிட்டு வருவதாகவும்..  ஃப்ரண்ட்ஸிடம் கூறிவிட்டு..  பிரித்திவ் சொன்ன இடத்திற்கு யாரும் பார்க்காத வண்ணம் விடுவிடுவென்று வந்து சேர்ந்துவிட்டாள்..


பிரித்திவ், வந்த மித்ராவை, யாரும் பார்க்காத வண்ணம், காரில் பின்புறம் கீழே படுக்க வைத்து..  


அவள்மீது காரின் சீட்டின் நிறத்திலேயே, இருந்த ஒரு துணியை போர்த்தி விட்டு.. காரை கிளப்பினான்..


கார் பிரித்திவ் தங்கியிருந்த வீட்டை நோக்கி பறந்தது..


அதேநேரம், விஷ்ணுவும் துளசியும், அவர்கள் வீட்டின் தோட்டத்தில், யார் கவனத்தையும் கவராதவாறு இருக்கும், சிறு மர கதவின் மூலம், பின்புற ரோட்டிற்கு வெளிவந்து…  ஆறுமுகத்தின் ஆட்டோவில் ஏறி பிரித்திவ்வின் வீட்டை நோக்கி பயணித்தனர்…  


பழையகால முறையில் கட்டிய வீடுகள் அனைத்திலும் தோட்டத்தில் ஒரு மர கதவு இது போல் இருக்கும். வேலையாட்கள் வந்து செல்ல… 


பின்புறம் வீடுகள் வந்த பிறகு..  இப்பொழுதெல்லாம் விஷ்ணு வீட்டில் யாரும் அதை உபயோகிப்பது இல்லை....  


தோட்டத்தில் நிறைய வாழை மரங்கள் வேறு, அந்த தோட்ட கதவின் முன்பு வைத்து இருப்பர்.. 


எனவே சட்டென்று அந்த கதவு யாரின் கவனத்திற்கும் தெரியாது..


குமுதம் யாருக்கும் சந்தேகம் வராத வகையில்..  விஷ்ணுவின் வீட்டில் வெளிப்புறம் வேலை செய்து கொண்டு இருந்தார்..


துளசி சுயநலம் இல்லாமல் மனம் வந்து, அக்குடும்பத்திற்கு செய்த தர்மம்‌..  இன்று அவர்களுக்கு துணையாக இருந்தது.. ஆறுமுகத்தின் மூலமும் குமுதத்தின் மூலமும்..


சொந்தப்பந்தங்கள், யாரும் உடன் வராத பொழுதும்..  குமுதம் குடும்பத்தினர், தங்கள் உயிரை பணயம், வைத்து உதவ முன்வந்து இருந்தனர்…


வீட்டை அடைந்ததும், யாரும் கவனிக்காத வகையில் பிரித்திவ், மித்ராவை, தன் வீட்டினுள் அழைத்துச் சென்றான்...


வீட்டை இன்றுடன் காலி செய்வதால், எடுத்துச்செல்லும் பேக் மட்டுமே வீட்டில் இருந்தது..  மற்றவற்றை காலிசெய்து விட்டு இருந்தான்..


ப்ரித்திவ், பதட்டத்தில் அழும் மித்ராவை,  சமாதானப்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுக்கும்போதே விஷ்ணு, துளசி மற்றும் ஆறுமுகம் வந்துவிட்டனர்..


அவர்களின் முகத்திலுமே பதட்டமே, ஆறுமுகம் தான், "சீக்கிரம் சார் நாம கிளம்பனும், அவனுங்க மோப்பம் பிடிச்சுட்டா.. அவ்வளவுதான்..", என்று துரிதப்படுத்தினார்..


துளசி மிகவும் பதட்டமாக இருப்பதை பார்த்து, ப்ரித்திவ், "நீங்க பயப்படாதீங்க ஆண்ட்டி..  நீங்க எப்படி சங்கமித்ராவ பார்த்தப்பீங்களோ.. அதே மாதிரி நான் பாதுகாப்பா..  என்னால முடிஞ்ச அளவுக்கு பார்த்துக்கறேன். கவலைப்படாதீங்க..", என்றான் ஆறுதலாக.


உடனே துளசியின் கண்கள், விஷ்ணுவின் கண்களை அர்த்தத்துடன் சந்தித்து மீண்டது..


துளசி, "நீங்க சொன்னது..  ரொம்ப சந்தோஷம் தம்பி", என்றார் நெகிழ்ச்சியுடன்..


ஆறுமுகம், ஐயா மணி ஆகுது.. சீக்கிரம் என்று துரிதப்படுத்த..


விஷ்ணு, "தம்பி நாங்க ஒன்னு.. யோசிச்சி முடிவு பண்ணியிருக்கோம்.. என்னன்னு சொல்றேன்..  உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க.. ஒன்னும் கட்டாயம் இல்லை..", என்றார்.


பிரித்திவ், "என்ன அங்கிள்.. மணி ஆகுது.. தயங்காம சீக்கிரம் சொல்லுங்க", என்றான்.


ஆறுமுகம், தன் பாக்கெட்டில் இருந்த, ஒரு சின்ன பர்சை எடுத்து, விஷ்ணுவிடம் கொடுத்தார்..  விஷ்ணு அதை வாங்கி அதிலிருந்த ஒரு டப்பாவை திறந்து, அதிருந்த பொருளை வெளியே எடுக்க..


ஒருசேர, பிரித்திவ் மற்றும் மித்ரா இருவரின் கண்களும், அதிர்ச்சியில் விரிந்தது…


பிரித்திவ் பதட்டமாக, "என்ன அங்கிள், எதுக்கு இது", என்றான்…


விஷ்ணு, "உங்களை விட என் பொண்ணுக்கு வேற நல்ல வாழ்க்கை துணை எங்கே தேடினாலும் கிடைக்காது தம்பி..  அதைவிட வயசு பிள்ளைய, வேற ஆம்பள கூட அனுப்புறதுக்கு பதிலா, புருஷன் கூட தான் போறான்னு இருந்தா, எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்..  எந்த சூழ்நிலையா  இருந்தாலும் கணவன் மனைவியா எதிர்கொள்கிறது வேறப்பா..", என்றார்…


பிரித்திவ் அமைதியாக நிற்பதை பார்த்து, "உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம் தம்பி", என்றார் விஷ்ணு.


பிரித்திவ், "ஐயோ அப்படி இல்ல அங்கிள்.. என்ன பத்தி உங்களுக்கு பர்ஸ்னலா.. எதுவும் தெரியாது..  என்கிட்ட படிப்பை தவிர வேற எதுவும் பெருசா இப்போதைக்கு இல்ல..", என்றவன், "எனக்கு அம்மா அப்பா கூட இல்லை", என்று அவனை குறித்து கூற ஆரம்பிக்க....


விஷ்ணு உடனே பிரித்திவ்வின் கையை பற்றி, "நாங்க தான் தம்பி உங்களுக்கு இனி அம்மா அப்பா..  நீங்க எங்களுக்கு மகன் மாதிரிதான்..  எவ்ளோ பெரிய உதவிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்றீங்க.. உங்களைப் பத்தி எங்களுக்கு எல்லாம் தெரியும்.. நீங்க வேற எதுவும் சொல்ல வேண்டாம்.. உங்களுக்கு விருப்பம் இருந்தா.. இந்த தாலிய கட்டுங்க", என்றார் உறுதியுடன்..


பிரித்திவ், மித்ராவை கேள்வியாக பார்த்தான்..  


அவளின் அதிர்ந்த முகமே, அவளுக்கும் விஷயம் தெரியாது என்பதை கூறியது.


அனைவரின் முன்பும் நேரடியாகவே பிரித்திவ், "சங்கமித்ரா உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?  சூழ்நிலையை காரணமா வச்சு நீ எதுவும் முடிவெடுக்க வேண்டாம்.. எப்பவும் உனக்கு நான் பாதுகாப்பா இருப்பேன்..  அதுக்கு கல்யாணம் தான் ஆகணும்னு இல்லை.. உன்னோட முடிவ சீக்கிரம் சொல்லு", என்றான்..


மித்ரா தாய் தந்தையின் முகம் பார்த்து விட்டு..  தனக்கு அவர்கள் எப்பொழுதும் நல்லதையே செய்வர் என்ற நம்பிக்கையோடு.. பிரித்திவ்விடம், "எனக்கு சம்மதம் சார்..  எங்க அப்பா என் நல்லதுக்கு தான் சொல்வாங்க.. " என்றுவிட்டு சிறிது தயங்கி, "எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு சார்", என்றுவிட்டாள்…


மறுநிமிடம் பிரித்திவ், விஷ்ணுவின் கையில் இருந்து, மாங்கல்ய கயிற்றை வாங்கி, மித்ராவின் கழுத்தில் போட்டு, அவள் கண்களை பார்த்துக்கொண்டே, மூன்று முடிச்சு இட்டு, அவளின் சரிபாதி ஆகிப்போனான்..


திருமணத்திற்கு நாள் குறிக்கவில்லை..  நேரம் பார்க்கவில்லை.. பொருத்தம் பார்க்கவில்லை.. ஆனால் பெற்றவர்களின் முழு ஆசியும் அவர்களுக்கு இருந்தது…


அதைவிட இருமனமும் விருப்பம் கொண்டே இணைந்து இருந்தது.


விஷ்ணு துளசியின் மனம் நிறைந்து போனது..  


விஷ்ணு சில நகைகள் மற்றும் கொஞ்சம் பணம் அடங்கிய பையை பிரித்திவ்விடம் கொடுத்தார்.. 


உடனே பிரித்திவ் "என்கிட்ட இப்போதைக்கு பணம் இருக்கு அங்கிள், இல்லைனா கண்டிப்பா உங்ககிட்ட கேட்கிறேன்..  வேற யார்கிட்ட கேட்க போறேன்..", என்று புன்னகை முகமாகவே திருப்பி கொடுத்துவிட்டான்..


ஆறுமுகம், "ஐயா மணி ரொம்ப ஆகிடுச்சு..  கிளம்பலாம்..", என்று மீண்டும் ஞாபகப்படுத்த..


பிரித்திவ், "ஆமா அங்கிள் ரொம்ப டிலே ஆகுது.. கிளம்புங்க.. ஒரு பத்து நாளைக்கு, நீங்க எனக்கு, எந்த ஃபோனும் பண்ண வேண்டாம்.. ஃபோனை எங்கேயாச்சும் மறைச்சு வைங்க.. சூழ்நிலை சரியானதும்..  விடியக்காலை போல எனக்கு மெசேஜ் பண்ணுங்க.. பேசலாம் இப்ப கிளம்புங்க அங்கிள்..", என்றான்.


மித்ராவின் கண்ணில் இருந்து, பெற்றவர்களை பிரிய போகும் அக்கணத்தை எண்ணி, நீர் ஆறாக பெருக ஆரம்பித்தது.. 


துளசியையும் விஷ்ணுவும் மித்ராவை அணைத்து நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு.. "கொஞ்ச காலம் தாண்டா..  எல்லாம் நல்லதுக்குன்னு நினை..  தம்பி சொல்ற படி நடந்துக்கோ..  பார்த்து சூதனமா இரு.. உடம்ப பார்த்துக்கோ..  எங்களை பத்தி கவலை படாதே..  உனக்கு சொல்ல தேவையில்லை..  எப்பவுமே நீ பொறுப்பா தான் இருப்ப.. கவலைப்படாதே..  கடவுள் எப்பவும் நம்ம கூட தான் இருப்பார்..  ஏதோ நமக்கு இது சோதனை காலம்..  சீக்கிரம் கடந்துடலாம்..  நாங்க கிளம்புறோம் குட்டிமா..", என்றுவிட்டு ஒன்றாக விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்..


மித்ரா கடைசியாக, "மிதிலாவ பத்திரமா பாத்துக்கோங்கப்பா.. நீட் எக்ஸாம்க்கு அவளை நல்லா பிரிப்பர் செய்ய வையுங்க..", என்று சொல்லி விடை கொடுத்தாள்..


விஷ்ணு துளசி வெளியே சென்றதும், மித்ரா கட்டுப்படுத்த முடியாமல்.. வாயை பொத்திக் கொண்டு, மீண்டும் அழ ஆரம்பித்தாள், பெற்றவர்களின் பிரிவை எண்ணி..


உடனே ப்ரித்திவ், அவளின் முகத்தை, தன் கரத்தில் ஏந்தி, "டேய் பிளீஸ்மா அழாத..  கண்ட்ரோல்.. எல்லாம் உன்னோட நல்லதுக்கு தானே..  கொஞ்ச நாள்தான் வந்துருவாங்க.. இங்க பாருமா", என அவள் முகத்தை நிமிர்த்தியவன், தன் கர்சீப்பை எடுத்து மித்ராவின் முகத்தை துடைத்து விட்டான்..


துடைக்க துடைக்க நீர் வந்து கொண்டே தான் இருந்தது.. முகம் முழுக்க அவளுக்கு சிவந்து வீங்கியேவிட்டு இருந்தது…


இன்னும் அவள் விசும்ப, பிரித்திவ், "சரிமா சரிமா", என்று நீரை எடுத்து சிறிது சிறிதாக, மித்ராவிற்கு புகட்டி விட்டவன்..  மீண்டும் அவளின் விசும்பல் அழுகையாக மாற ஆரம்பித்ததும், காற்று கூட புக முடியாத அளவுக்கு மித்ராவை, தன் மார்புடன் சேர்த்து, அணைத்துக் கொண்டான் ஆறுதலாக..


இதை தான் விஷ்ணு துளசி எதிர்பார்த்தனர்.. கணவனாக பிரித்திவ் மித்ராவை பாதுகாக்க வேண்டும் என்று.


மித்ராவிற்கும் பிரித்திவ்வின் அணைப்பு  வலியை கொடுக்காமல்.. பாதுகாப்பு உணர்வையே கொடுத்தது..


பிரித்திவ்வின் நெஞ்சில் சாய்ந்து தன் துயரத்தை மென்று விழுங்கினாள்..


நிமிடம் சில கடக்க…


பிரித்திவ், நேரம் ஆவதை உணர்ந்து, மித்ராவை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான்.


கார் எங்கும் நிற்காமல் வேகம் எடுத்தது..  


கிட்டத்தட்ட 1500 கிலோ மீட்டர் தொலைவு கடக்க வேண்டும்..


மித்ரா அமைதியாக, சாலையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தாள்.


அவள் முகம் நிர்மலமாக இருந்தாலும் அவளின் வெறித்த பார்வைக்கு பின் இருக்கும்.. மனப்போராட்டத்தை ப்ரித்திவ்வால் உணர்ந்து கொள்ள முடிந்தது..  


சிறிது நேரத்தில் அசதியிலும், காரின் வேகத்திலும், ஏசியின் குளுமையிலும் அப்படியே தூங்கிவிட்டாள்.. 


அவள்‌ நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகின்றதே.


சீராக மூச்சுவிட்டப்படி தூங்கும், தன் புது மனைவியை பிரித்திவ் பார்த்தான்..


இளம் ஆகாய வண்ணத்தில்.. ஆங்காங்கே வெள்ளை முத்துக்கள் வைத்து வடிவமைக்கப்பட்டிருந்த சுடிதாரில்..  பிரம்மன் வடித்த சிற்பம் போல் அழகாக..  ஆகாயத்தில் இருக்கும் மேக பெண்ணைப் போல் சயனத்திருந்தாள்.. 


சங்கமித்ரா


இன்று ப்ரித்திவ்வின் சங்கமித்ரா.. 


பிரித்திவ்வின் பார்வை,  அவள் தேகத்தில், ஒவ்வொரு இடமாக உரிமையுடன் பயணித்தது..…  


சந்தன நிறத்தில், மெல்லிய உடல்வாகைக்கொண்ட பெண்ணவள், ஒரு கையில் கைகடிகாரமும்..  மறுகையில் தங்க குண்டுகள் வரிசையாக கோர்க்கப்பட்ட போல் இருந்த.. மெல்லிய தங்க பிரேஸ்லெட்டும் அணிந்து இருந்தாள்..


கழுத்தை ஒட்டி ஹார்டின் டாலர் உடன் கூடிய மெல்லிய செயினும்..  அதே ஹார்டின் வடிவத்தில் சிறிய ஸ்டர்ட் காதிலும் அணிந்து இருந்தாள் சிம்பிளாக..


நீண்ட அடர் கருங்கூந்தலை ஒரு பக்கம் தோளின் வழியே முன்பு போட்டிருந்தாள்..  பின்னல் மடியை தாண்டி, மல்லிகை சரத்துடன்.. கால் முட்டி வரை நீண்டு இருந்தது.. 


அவளின் பெண்மையின் நளினத்தை தூக்கி காட்ட அதுவே போதுமானதாக இருந்தது..


தூங்கும் அவள் முகமோ, விளக்கி வைத்த, வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு போல் பளப்பளத்தது..


மித்ராவின் நெற்றி, வெறுமையாக இருந்ததை பார்த்த, பிரித்திவ், குனிந்து தன் சட்டையை பார்த்தான்..  


மித்ராவின் நெற்றியில் இருந்த பொட்டு.. குங்குமம், அவள் கண்ணில் இருந்த மை என்று.. அனைத்தும் அவன் நெஞ்சு பகுதியில் அப்பி இருந்தது…


இனம் புரியா உணர்வு பிரித்திவ்வினுள்..


தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே, மீண்டும் மித்ராவின் முகத்தை பார்த்தான்..


அப்பொழுது மித்ராவின் மார்பு பகுதியில், ஷாலின் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஈரம் காயாத புது மஞ்சள் கயிற்றில்.. மின்னிக் கொண்டிருந்த பொன் தாலி..

பிரித்திவ்விற்கு வேறு ஒரு உணர்வை கொடுத்தது..  


ஆம் இனி அவனின் சொந்தம் அவள்.. அவளின் சொந்தம் அவன்.


அதுவும் அவனின் முதல் சொந்தம்.


பிரித்திவ்வின் தொண்டையை அவ்வுணர்வு சட்டென்று அடைத்தது.. 


ஒற்றை மஞ்சள் கயிறே மித்ராவிற்கு மணப்பெண்ணிற்குரிய அழகை சேர்த்து விட்டு இருந்தது..


மெதுவாக மித்ராவின் கையை எடுத்து, தன் மடிமீது வைத்துக் கொண்டே, காரை செலுத்தினான் பிரித்திவ்…


*********************************


அங்கு ருத்ரனோ, எவ்வளவு முயன்றும், தன்னால் திருமணத்தை நிறுத்த முடியவில்லையே.. அனைத்தும் தன் கைமீறி நடந்து கொண்டு இருக்கிறதே..  என்று தன் இயலாமையினால் கெஸ்ட் ஹவுஸே கதி என்று கிடந்தான்..  


மித்ரா தன்னை நிராகரித்தது, ஆதிகேசவன் தன்னுடைய வார்த்தையை கேட்காதது, என்று விரக்தியில் முழுநேரமும் குடித்தான்.  


இங்கோ பிரித்திவ், அவனால் முடியாததை முடித்து, மித்ராவை தூக்கி சென்றுவிட்டு இருந்தான். 


பிரித்திவ், 3 மணி அளவில், சேலத்தில் ஒரு ஹோட்டலின் முன்பு, காரை  நிறுத்திவிட்டு மித்ராவை எழுப்பினான்.


பிரித்திவ், எழுப்பியதும் எழுந்த மித்ராவிற்கு, தூக்கத்தில் ஒன்றும் புரியவில்லை.. சிறிது நிதானம் வந்த உடனே.. சுற்றிலும் மருட்சியுடன் பார்த்தாள்..


பிரித்திவ் ஆதரவாக அவள் கைப்பற்றி, உள்ளங்கையின் மத்தியில் சிறிது அழுத்தம் கொடுத்து,  "ஒன்னும் ஆபத்து இல்லை சங்கமித்ரா..  பயப்படாத.. நீ பாதுகாப்பா தான் இருக்க.. ரொம்ப டைம் ஆகிடுச்சு .. மதியம் லஞ்ச் சாப்பிட்டுட்டு..  கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு கிளம்பலாம்..", என்றான்..


மித்ரா, "இல்ல சார் எனக்கு பயமா இருக்கு..  நீங்க போயிட்டு சாப்பிட்டு வாங்க..  நான் காரிலேயே இருக்கேன்..", என்றாள். 


ப்ரித்திவ், "ஹே நாம திருச்சி விட்டு வந்து ரொம்ப நேரம் ஆச்சு..  இங்க யாரும் உன்னை கண்டுபிடிக்க மாட்டாங்க வா..‌ இது சேலம்.. ரெஸ்ட் ரூம் வேற நீ போகனும் இல்ல.. ரொம்ப டைம் ஆகிடுச்சு", என்று சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்.


ஹோட்டலின் உள்ளே நுழையும் பொழுது வாசலில்… பெருமாள் மற்றும் தாயாரின் படம் பெரிய அளவில் நடுவில் வைத்து இருந்தனர்..


அதனை கடக்கும் பொழுது, சட்டென்று பிரித்திவ் மித்ராவின் கையை பற்றி தடுத்து, நிறுத்தினான்..


கேள்வியாக நோக்கிய மித்ராவிடம், அங்கிருந்த குங்குமத்தை தன் விரலில் எடுத்த பிரித்திவ்..  அவளின் முன்பு காண்பித்து.. "வைக்கலாமா நான்", என்றான், அவளின் அனுமதியை கேட்டு.


பிரித்திவ்வின் எண்ணம் அறிந்த மித்ராவினுள், முதல்முறை ஒரு கோடி பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறந்தது..


சுடும் வெயிலில் நின்று இருந்தவள் மீது, திடீரென்று தென்றல் வீசினால் எப்படி இருக்கும்.


சிறு வெட்கத்துடன் கண்களை தாழ்த்தியவள்..  'சரி' என்று சம்மதமாய் தலை அசைத்தாள்..


அவளின் மாற்றத்தை உணர்ந்த பிரித்திவ், மித்ராவின் தாடையைப் பற்றி நிமிர்த்தி, அவளை தன் முகம் காண செய்து, அவளின்  நெற்றியிலும், வகிட்டிலும், குங்குமத்தை அழுத்தமாக  வைத்துவிட்டான்..


பிரித்திவ்வின் நெருக்கத்திலும், விரலின் அழுத்தத்திலும், மித்ராவின் இமைகள் தானாக மூடிக்கொண்டது..


நெகிழ்ச்சியான தருணம் இருவருக்குமே…


சிறு புன்னகையுடன் பிரித்திவ், "என்ன திரும்ப தூங்கறியா", என்றப்படி சரிந்து இருந்த மித்ராவின் ஷாலை ஒழுங்காக, அவளின் தோளில் அட்ஜஸ்ட் செய்தவன், அவள் தோளை சுற்றி தன் கையை போட்டு, உரிமையுடன் உள்ளே அழைத்துச் சென்றான்..


சிறு பூனை குட்டியாக அவனுடன் நடந்த மித்ராவோ, பிரித்திவ்வின் புது அவதாரத்தில், பல உணர்வுகளால் தாக்கப்பட்டாள்..


உள்ளே தனி அறைக்குள் சென்று அமர்ந்ததும் பிரித்திவ், மித்ராவிடம் கேட்டு  இருவருக்குமே ஸ்பெஷல் சாப்பாடு ஆர்டர் செய்தான்..


சர்வர் வந்து வாழையிலை போட்டு, கல்யாண சாப்பாடு போல், அனைத்தையும் பரிமாறிவிட்டு செல்ல..


முதலில் தன் இலையில் இருந்த, குலோப் ஜாமுனை எடுத்த பிரித்திவ், மித்ராவிற்கு ஊட்டி விட்டான்..


பிரித்திவ்வின் ஒவ்வொரு செய்கையும், மித்ராவின் இதயத்தை பாகாய் அவன்பால் உருக்கியது..


அதில், அவளின் கண்கள் லேசாய் கலங்க ஆரம்பிக்க.. ப்ரித்திவ், "உனக்கு இப்ப எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு தெரியுது சங்கமித்ரா..  இருந்தாலும் இந்த நாள் நம்ம வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது..  எனக்குன்னு இருக்க ஒரு உரிமையான உறவு, இந்த உலகத்தில் நீ மட்டும் தான்.. எப்பவும் உன்னை சந்தோசமா வச்சிப்பேன் சரியா, பயப்படாத, அழாத.. ஸ்வீட் சாப்பிடு", என்றான்..


அவனின் உணர்வுகளை பட்டென்று சிறந்த மாணவியாய் படித்த மித்ரா, "ரொம்ப தேங்க்ஸ் சார்..  நானும் உங்களை சந்தோஷமா எப்பவும் வச்சுப்பேன்..  உங்களுக்கு உடம்பு முடியாத அன்னைக்கு,.. உங்களை சந்தோசமா பார்த்துக்கணும்னு நினைச்சேன்..  இன்னைக்கு அது எதிர்பாராதவிதமா நடந்துடுச்சு.. நான் நினைச்சு கூட பார்க்கலை", என்றவள் மெல்லிய புன்னகையுடன்,  தன்னுடைய இலையில் இருந்த குலோப் ஜாமூனை எடுத்து, பிரித்திவ்விற்கு ஊட்டி விட..


அதை ப்ரித்திவ் எப்படி உணர்ந்தான் என்று வார்த்தைகளில் உணர்த்த முடியாது..


அக்கணம் முதல், அவனின் எல்லாமுமாய், அவள் மந்திரம் போட்டது போல், மாறிப்போனாள்.


"லைஃப்ல பர்ஸ்ட் டைம் நினைவு தெரிஞ்சு எனக்கு நீதான் ஊட்டி விட்டு இருக்க..  ஸ்கூல் டேஸ்ல மத்த பசங்களுக்கு, அவங்க பேரன்ட்ஸ் லன்ச் பிரேக்ல ஊட்டி விடுறத பார்க்கும்போது..  நமக்கு எப்ப நம்ம அம்மா வந்து ஊட்டிவிடுவாங்கன்னு நினைப்பேன்..  சில நேரத்துல மத்தியானம் சாப்பிடாமல் கூட இருந்திருக்கேன்..  நாளாக நாளாக நமக்கு அதெல்லாம் நடக்காதுன்னு..  மனச தேத்திக்கிட்டேன்..  எதிர்பாராத விதமா என்னோட ஆசை, இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கி நிறைவேறியிருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்", என்றான்.


பிரித்திவ்வின் உரிமையான நெருக்கம், மித்ராவை,  சிறகில்லாமலே பறக்க வைத்தது.


அதில் உருகிய மித்ராவோ, "இனி டெய்லி உங்களுக்கு நானே ஊட்டி விடுறேன்", என்றவள், தன் சாப்பாட்டை பிசைந்து, எடுத்து அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்..


பிரித்திவ், தேடி அலைந்த தாய் பாசமும், தாய் மடியும், மித்ரா வாரி வாரி வழங்கானாள்..


இருவரும் அவர்களின் உணர்வுகளை, எந்த வித தயக்கமும் இன்றி பரிமாறிக் கொள்ள, ஆரம்பித்தனர் விரைவாக.. இயல்பான தம்பதிகள் போல்..


மித்ரா எதிர்ப்பார்த்த எளிமையான வாழ்வும் இதுதான்.


காமம் இல்லாத, நேச பிணைப்பு அவர்கள் இருவருக்குள் ஆழமாய் தோன்றியது..


மீண்டும் மும்பை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்..


*********************************


அதேநேரம் அங்கு திருச்சியில், மாலை எப்பொழுதும்போல், விஷ்ணு மித்ராவை அழைக்க, காலேஜ்க்கு வந்து, காத்துக்கொண்டு இருப்பது போல் இருந்து, பார்த்துவிட்டு.. மித்ரா இன்னும் வரவில்லை என்று, செக்யூரிட்டியை  விசாரித்துவிட்டு..  அடுத்து மித்ரா எங்கே என்பது போல் காலேஜ் முழுக்க தேட தொடங்கினர்… 


அவள் இல்லாது போக, மித்ரா மிஸ்ஸிங் என்று, மேனேஜ்மென்ட் முடிவுக்கு வந்தனர்..


உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு,  மித்ராவின் ஆசிரியர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து விசாரிக்கத் தொடங்கினர்..


ஆதிகேசவனுக்கும், அவன் ஆட்களின் மூலம், உடனடியாக தகவல் சென்றது..


எதையும் அறியாத மிதிலா, பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி தேர்வை முடித்துவிட்டு.. பள்ளியின் கடைசி நாள் என்பதால்.. நண்பர்களுடன் சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு வந்து இருத்தாள்..


ஆதிகேசவன், நேரே தன் ஆட்களுடன் கல்லூரிக்கே வந்துவிட்டு இருந்தான்.


வந்த கோபத்திற்கு, ஆதிகேசவனால், அனைவரின் முன்பும், விஷ்ணுவை வேறு, ஒன்றும் செய்ய முடியவில்லை.


விஷ்ணுவும் மகளை காணோம் என்பது போலவே கதறிக் கொண்டு இருந்தார். 


ஏற்கனவே அவர் பயத்தில் இருந்ததால், அவர் முகத்தில் இருந்தும் ஒன்றும் தவறாக கண்டுபிடிக்க முடியவில்லை.


ருத்ரனுக்கும் தகவல் சென்று, அவனும் வந்து விட்டு இருந்தான்..


மித்ரா, திருமணத்திற்கு பயந்து ஓடிப் போய் விட்டதாகவே அனைவரும் நம்பினர். 


இதில் ருத்ரன் தான் மிகவும் பயந்துவிட்டான்.


தன்னால் தான் எங்கோ சென்றுவிட்டாள்..  ஏதாவது தவறாக செய்து கொண்டாளோ என்று வேறு தெரியாமல் பரிதவித்தான்.

அன்றே 'உங்களை திருமணம் செய்ய சொன்னாள் செத்து விடுவேன்' என்று வேறு சொன்னாளே..


அவனின் காதல் கொண்ட மனம்.. குற்ற உணர்விலும்.. பயத்திலும் அடித்துக்கொண்டது..


ருத்ரன், விஷ்ணுவை தனியாக அழைத்துச் சென்று கூட விசாரித்துப் பார்த்து விட்டான்..


கொஞ்ச நேரத்திலேயே, இருந்த மொத்த ஆட்களையும் இறக்கி, திருச்சியில் ஒரு இடம் விடாமல், மித்ராவை தேட ஆரம்பித்தனர்.. 


அதேநேரம் பிரித்திவ்வின் கார், தமிழ் நாட்டின் எல்லையை கடந்து..  கர்நாடகாவில் நுழைந்து இருந்தது..


மித்ராவை காணவில்லை என்ற விஷயம் அறிந்த மிதிலா வேறு அழுது கரைந்தாள்..  தன்னால்தான், தன் அக்கா மித்ரா காணாமல் போய்விட்டாள் என்று, அவளும், குற்ற உணர்ச்சியில் மனவேதனை அடைந்தாள்.. 


இரவு முழுவதும், ஒரு இடம் விடாமல், திருச்சியில் தேடிப்பார்த்தும் விசாரித்து விட்டனர். 


எந்த தடயமும் இல்லாமல் மித்ரா எவ்வாறு மாயமாக மறைந்தாள். நேரம் ஆக ஆக ஆதிகேசவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பெருகியது. என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் ஓடிப் போய் இருப்பாள் என்று.


அவனின் மொத்த கோபமும் விஷ்ணுவின் குடும்பத்தின் மேல் திரும்பியது..

 

மறுநாள் காலை விடிந்ததும், மூன்றாம் முறையாக ஆதிகேசவனின் கால் விஷ்ணுவின் வீட்டில் படிந்தது..


ஆதிகேசவனின் முகத்தை பார்த்ததும்.. விஷ்ணு துளசி மிதிலாவின் முகத்தில் மரண பயம் வந்து ஒட்டிக்கொண்டது. 


அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தான் பார்க்கவே. 


அவனுடன் கிட்டத்தட்ட 50 அடியாட்கள் வேறு வந்து இருந்தனர்..


நேரே வேகமாக கூடத்திற்குள் வந்தவன்..  அங்கு நின்று இருந்த துளசியின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்து ஆட்டிக்கொண்டே.. 


"என்னடி பொண்ண வளத்து வச்சிருக்க.. எங்க போனா உன் மவ.. சொல்லு", என்று கத்த....


ஓடிவந்த விஷ்ணுவும், மிதிலாவும், ஆதிகேசவனின் கையை பற்றி… "ஐயோ விடுங்க..  எங்களுக்கு ஒன்னும் தெரியாது.. சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம்..", என்று விஷ்ணுவும்… "ப்ளீஸ் எங்க அம்மாவை விடுங்க அங்கிள்.. வலிக்கும்", என்று மிதிலாவும் கதறினர்.


துளசியின், தலையில் இருந்த, தன் கையை எடுக்காமலேயே, ஆதிகேசவன் விஷ்ணுவை எட்டி ஒரு உதை உதைக்க..


தூரம் சென்று விழுந்து இருந்தார்.


அக்கணம் துளசியோ, வலியிலும், பயத்திலும் மயங்கிவிட.. 


ஆதிகேசவன், அவரையும் பிடித்து, சுவற்று பக்கம் ஆக்ரோஷமாக தள்ளிவிட்டான்..


ஓடிச்சென்ற மிதிலா, அழுதுக்கொண்டே, துளசியை தூக்கி தன் மடியில் வைத்து.. "ஐயோ அப்பா, அம்மாவை பாருங்கப்பா", என்று கதறினாள்..


விஷ்ணுவால் எழுந்திருக்கவே முடியவில்லை, கீழே விழுந்ததில்.. இடுப்பில் அவ்வளவு வலி மனிதருக்கு..


எப்படியோ நகர்ந்தப்படியே, துளசியின் அருகில் வந்தார்..


ஆதிகேசவன் அதற்குள் ஆட்களை நோக்கி, "என்னடா ஏதும் ஆதாரம் கிடைச்சதா.. சீக்கிரம் தேடுங்க..", என்றான்.


வீட்டையே, ஒரு புரட்டு புரட்டி போட்டனர், சில நிமிடங்களிலேயே..


நல்ல வேலை விஷ்ணு, பிரித்திவ் கொடுத்த ஃபோனை, நான்கைந்து கவர்களுக்குள் போட்டு, தோட்டத்தில் புதைத்து வைத்து இருந்தார்..


எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் ஆதிகேசவன், அழுதுகொண்டு இருந்த மிதிலாவின் கைப்பற்றி தூக்கி.. ஆட்களிடம், "இதுகளை எங்கேயும் போக விடாதீங்க..  நல்லா தேடுங்க.. ஃபோன் கால் எல்லாம் எடுத்து செக் பண்ணி பாருங்க..  அக்கம் பக்கமும் விசாரிங்க..", என்று விட்டு,


மிதிலாவை தரதரவென்று இழுத்துக் கொண்டே, வெளியே சென்றான் விடுவிடுவென்று.. 


விஷ்ணுவின் கதறல் காற்றில் கரைந்தது..


ஆதிகேசவன் மிதிலாவின் மீது கை வைப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை..


மிதிலாவை காரினுள் தள்ளிவிட்டு காரை கிளப்பி.. மறந்துவிட்டான்…


விஷ்ணுவிற்கு ஒன்றும் புரியவில்லை..


கண்ணை மூடி திறப்பதற்குள் மிதிலாவை ஆதிகேசவன் இழுத்து சென்றுவிட்டு இருந்தான்..


'என்னவோ செய்ய போய், இறுதியில் தன் சின்ன மகள், இக்கட்டில் மாட்டி கொண்டாளே, என்ன செய்கின்றானோ பாவி..  ஐயோ, இப்பொழுது தான் வயதுக்கே வந்து இருந்த சிறுபெண்ணாகிற்றே', என்று பெற்றவர் மனம் கதறியது.


துளசி வேறு இன்னும் மயக்கத்தில் தான் இருந்தார். யாரை முதலில் பார்ப்பது.. என்று விஷ்ணுவிற்கு தெரியவில்லை..


அதிலும் இடுப்புக்கு கீழே உள்ள எலும்புகளும், நரம்புகளும் அப்படி வலித்தது அவருக்கு.. ஆதிகேசவன் உதைத்து தள்ளி இருந்ததில்…


பரிதவித்து போனார்…


சட்டென்று யோசனை வந்தவராக, அங்கு இருந்தவன் ஒருவனிடம்..  விஷ்ணு 'ஒரே ஒரு ஃபோன் பண்ணிக்கறேன்' என்று எப்படியோ கெஞ்சி தன் ஃபோனை வாங்கி, ருத்ரனிற்கு அழைத்தார்..


ருத்ரன் உடனே ஃபோனை எடுத்து விட்டான்.. 


எடுத்ததும் விஷ்ணு, "தம்பி உங்க அப்பா, எங்களை அடிச்சு போட்டு..  என் சின்ன பொண்ணு மிதிலாவ..  கோவமா இழுத்துட்டு போயிடாங்க பா..  ப்ளீஸ்பா சின்ன பொண்ணு அவ, என்ன ஆச்சோ தெரியல விட்டுட சொல்லுங்க.. அவளுக்கு எதுவும் தெரியாது..  வாழவேண்டிய பொண்ணு..  என்னை என்ன வேணா பண்ணுங்க..  என் குழந்தையை ஒன்னும் பண்ணிடாதீங்க..  தாங்க மாட்டா....   எங்களையும் பிடிச்சு வச்சிருக்காங்க.. வெளிய போக முடியல", என்று இங்கு நடந்ததை சொல்லி அழ...


அதிர்ந்த ருத்ரன், "ஐயோ அங்கிள் சாரி.. எனக்கு இது எதுவும் தெரியாது..  நான் சமிய தான் தேடிட்டு இருக்கேன்..  நான் பார்க்கிறேன் உடனே..  பயப்படாதீங்க..  மிதிலாவ நான் கூட்டிட்டு வரேன்..", என்றவன் உடனே ஆதிகேசவனுக்கு அழைத்தான்..


அந்த சில நிமிடங்களிலேயே ஆதிகேசவன், தனது கொடுரமான, ஒரு பக்கத்தை, மிதிலாவிடம் காண்பித்து விட்டு இருந்தான்.


அதில் தன் மார்பை பிடித்தப்படி, வலியிலும், பயத்திலும், அச்சிறுப் பெண்ணோ துடித்துக்கொண்டு இருந்தாள்.


அவள் வாழ்நாளில் இதுவரை கேட்டீறாத கொடுஞ்சொற்கள், அனைத்தும் அவள் மீது வீசப்பட்டது..


சாக்கடையில் என்ன சந்தன மணமா வீசும்…


அவளின் மார்பின் மீது இருந்து, தன் செருப்பு காலை விலக்கிய ஆதிக்கேசவன்…


ஒலி எழுப்பும் தன் ஃபோனை எடுத்து, "வீட்டுக்கு வா ருத்ரா", என்றுவிட்டு, வேறு எதுவும் பேசாது, உடனே வைத்துவிட்டான்..


ஃபோனில் பின்புறம் இருந்து, கேட்ட மிதிலாவின் அழுகை சத்தம் ருத்ரனை பதற வைத்தது..  


திரும்பி பதறி ஆதிகேசவனுக்கு அழைத்தான்..  அவனோ எடுக்கவில்லை..


மறுவினாடி புயல்வேகத்தில் தன் காரை கிளப்பிய ருத்ரன்.. மின்னலாய் விரைந்து வீட்டை அடைந்தான்..


அவனை விட மின்னல் வேகத்தில், ஆதிகேசவனின் கார் டிரைவர், காரை செலுத்தி, அச்சிறு பெண்ணை காப்பாற்ற, வீட்டை அடைந்துவிட்டு இருந்தான்.. 


அவனாலேயே, சிறு மொட்டை போன்ற வயதில் இருந்த, மிதிலாவிற்கு இழைக்கப்பட்ட வன்கொடுமையை, தாள இயலவில்லை…


காரில் இருந்து இறங்கி உள்ளே ஓடிவந்த ருத்ரனின் கண்கள், மிதிலாவை தேடி  அலைந்தது..


மிதிலாவோ, மாதவியின் பின்புறம் மறைந்து நின்றப்படி, அழுது கொண்டு இருந்தாள்..


ஆதிகேசவன் கத்திக்கொண்டு இருந்தான்..


மிதிலா, நேற்று போட்டு இருந்த அதே ஸ்கூல் யூனிஃபார்மில்..  தலைமுடிகள் ஆங்காங்கே பற்றி இழுத்ததில் வெளியே வந்து..  முகம், கழுத்து, கை, கால் என்று வெளியே தெரியும் பகுதி முழுவதும், செவ்வரி கோடுகள் நிறைந்து தடித்து வீங்கி என்று வலியிலும், பயத்திலும் கிடுகிடுவென்று நடுங்கிக்கொண்டு நின்று இருந்தாள்..


"வாயமூடு.. சத்தம் வெளிய வந்துச்சு..", என்று ஆதிகேசவன் கத்த.. 


தன் வாயை இறுக, தன் இரு கைகளாலும் மிதிலா பொத்திக்கொண்டாள்..


பயத்தில் அழ முடியாது, அவள் உடல் மட்டும் தூக்கிப்போட்டப்படி இருந்தது..


அந்நேரம் தான் ருத்ரன் உள்ளே நுழைந்து இருந்தான்..


மிதிலாவை பார்த்துவிட்ட ருத்ரன், விரைந்து அவளருகில் ஓடியவன்.. அவளின் நிலையை விநாடியில் பார்த்து பதறி விட்டான்..


"மிதுமா பயப்படாத டா.. ரொம்ப சாரிடா.. அழாதடா வா..  உடனே டாக்டர் கிட்ட போகலாம்.. ரொம்ப வலிக்குதாமா", என்று அவளின் கன்னத்தை அவன் தொட.. அவளோ அதில் மேலும் வலிக்க.. கத்தி அழக்கூட முடியாது துடித்துப் போனாள்..


அதற்குள் ஆதிகேசவன், "எங்கடா போற..  அந்த பொண்ண விடு முதல்ல..  அவ இனி என் கண்ணு முன்னாடி தான் இருப்பா.. அவ அக்கா கிடைக்கிற வரைக்கும்..", என்றவன் மிதிலாவின் கையை அழுந்தப்பற்றி இழுக்க.. 


"பிளீஸ் பிளீஸ் அங்கிள்.. அடிக்காதீங்க ரொம்ப வலிக்குது", என்று அவள் கெஞ்ச.. அதிர்ந்த ருத்ரன் பட்டென மிதிலாவை ஆதிகேசவனிடம் இருந்து பிரித்து, அஞ்சி நடுங்குபவளை தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டவன்..


"டாட் என்ன பண்ணி வச்சிருக்கீங்க..   நீங்க என்ன மனுஷனா, இல்லை மிருகமா..  இப்படி அவ முகம் முழுக்க வீங்கி இருக்கு..  சின்ன பொண்ண போய்.. என்னை போக விடுங்க முதல்ல... எனக்கு வர கோபத்துக்கு வந்து உங்களை பேசிக்கறேன்.. இவளை அடிச்சு அடைச்சு வச்சி இருந்தா மட்டும் அவங்க அக்கா வந்துடுவாளா.. முட்டாள் தனமா", என்று கர்ஜித்தான்..


ஆதி கேசவனும் மிக மிஞ்சிய கோபத்தில், "நான் மனுசனா தெரியாது டா.. ஆனா நீ மொத ஆம்பளையாடா..  ஒரு பொண்ணு நீ வேணாம்னு ஓடிப் போய் இருக்கு.. அத விட்டுட்டு இப்ப எதுக்கு, என்கிட்ட ரொம்ப சலம்பற..", என்றான் குத்தலாக..


ஆதிகேசவனின் செயலும், வார்த்தையும் ருத்ரனிற்கு கட்டுக்கடங்காத கோபத்தை கொடுத்தது. தந்தை என்ற மரியாதை காற்றில் பறந்தது..


மறுநிமிடம் மிதிலாவை விலக்கியவன்.. வேகமாக ஆதிகேசவனை நெருங்கி, "என்ன பேசுற நீ..  என்னையா ஆம்பளையான்னு கேட்ட", என்றப்படி, அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.. 


அக்கணம், அவ்வீட்டில் குண்டு ஊசி விழுந்தால் கூட, கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது. 


மிதிலாவின் தேம்பல் சத்தம் தவிர வேறு எதுவும் அங்கு கேட்கவில்லை. 


ஆதிகேசவனின் மீது கைவைத்த முதல் ஆள் ருத்ரன்.. 


அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சி, ருத்ரனின் செயலில். 


ஆட்கள் அனைவரும், ஆதிகேசவனுக்கு பாதுக்காப்பாய் கூடிவிட்டனர்.


ஆதிகேசவனிற்கு அவமானம் தாங்கவில்லை. 


சுற்றி தன் கண்களை ஒருமுறை சுழல விட்டவன்..


மறுகணம், ருத்ரனின் கையை, அவன் எதிர்பாராத விதமாக,  பிடித்து, பின்புறம் முறுக்கி.. கீழே தள்ளிவிட்டவன்.. 


ஆட்களை பார்த்து "என்னடா பாத்துகிட்டு இருக்கீங்க.. இதுக்கு தான் காசு கொடுக்கிறேனா..  இவனை‌ இழுத்து பிடிங்கடா.. அந்த ஆண்டவனே என் பக்கம் வர பயப்படனும்..‌ எமன் டா நான் எல்லாருக்கும்", என்றவன்.... 


"எல்லாத்துக்கும் காரணம் நீதான்", என்று மிதிலாவையும் இழுத்து கீழே தள்ளி.. அவளை உதைக்க‌ காலை தூக்கினான்..


ருத்ரன், "ஐயோ நிறுத்துங்க டேட்.. நான் தானே உங்களை அடிச்சேன்.. அதுக்கு ஏன் அவளை இப்படி கொடுமை பண்றீங்க.. உங்களுக்கு என்னதான் வேணும்..  தயவுசெய்து அவளை ஒன்னும் பண்ணாதீங்க ப்ளீஸ்.. மித்ரா தான் போயிட்டாளே.. அதுக்கு இவ என்ன பண்ணுவா.. அடிச்சா வந்துடுமா.. அவங்களும் தானே மித்ராவ காணாம தவிக்கிறாங்க..", என்றவன்.. ஆட்களின் பிடியில் இருந்து வெளிவர துடிக்க.. அவனால் அசையக்கூட முடியவில்லை..


ருத்ரன், "என்னை விட சொல்லுங்க முதல்ல..  நீங்க பண்றது எதுவுமே சரியில்லை.. அவளுக்கு ஏற்கனவே இழுப்பு வந்து இருக்கு.. நான் அவளை முதல்ல ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போறேன்.. ஏதாவது ஆகிட போது.. நீங்க கல்யாணம் நின்னத முதல்ல எல்லாருக்கும் சொல்லுங்க", என்று கத்த..


அக்கணம் ஆதிகேசவனின் மூளையில் மின்னலென யோசனை…


"கல்யாணம் நின்னுடுச்சா.. அது நடந்தே தீரும்.. அதுவும் குறிச்ச நேரத்துல கண்டிப்பா நடக்கும்..  அக்கா போனா என்ன, அதான் தங்கச்சி இவ இருக்காளே..  இவ ஜாதகமும் உனக்கு பொருத்தமா இருக்குன்னு அன்னைக்கே ஜோசியர் சொன்னார்.. எனக்கும் இந்த பொண்ணு தான் புடிச்சிருக்கு.. அந்த திமிர் பிடிச்ச ஓடுகாலி சனியன் கிடைக்கும் போது அவளுக்கு இருக்கு..", என்றான்..


அதில் ருத்ரனோ மொத்தமாய் அதிர்ந்து போனான்.. 


"டாட் என்ன பேசறீங்க நீங்க..  ரொம்ப தப்பு.. அவளைப் போய் எப்படி எனக்கு..  சின்ன பொண்ணு டாட் அவ.. என்ன ஆச்சு உங்களுக்கு..  பைத்தியமா நீங்க.. சமிய தானே நான் லவ் பண்ணேன்..  என்னால பாவம் அவ எங்க போய் கஷ்டப்படுறானே தெரியல… எனக்கு கல்யாணமே வேணாம்… நான் யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்",  என்றான்..


ஆதிகேசவன், "அதெல்லாம் இல்ல.. இவ கூட தான் உனக்கு கல்யாணம்..  நீ முதல்ல அமைதியா இரு..  நீ இதுவரை பண்ணதே போதும்.. வீணா எலக்சன் நேரத்துல டென்ஷன் பண்ணாத என்னை.. இவளுக்கு எல்லாம் கல்யாண வயசு தான்.. இவ ஒன்னும் செத்து போயிட மாட்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா", என....


மிதிலாவிற்கும் ஆதிகேசவன் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது..


மாதவியோ எப்பொழுதும் போல், ஆதிகேசவனின் தாண்டவத்தை, ஒன்றும் செய்ய இயலாது பார்க்க..


ருத்ரன், "ச்சீ.. போதும் இந்த கேவலாமான பேச்சு முதல்ல.. உங்களால தான் என் வாழ்க்கையே போச்சு..  எல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து இப்படி பண்றீங்க.. நான் உயிரோட இருக்கிறது தான் உங்களுக்கு பிரச்சினையா.. நானே இல்லாம போயிடறேன்.. நீங்க நிம்மதியா இருங்க..", என்று கத்த...


ஆதிகேசவன், "சும்மா இந்த பூச்சாண்டி காமிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத ருத்ரா..  ஒழுங்கா இது கழுத்துல நான் சொல்றப்ப தாலிய கட்டு..  இல்ல இதுங்க குடும்பத்தையே நான் கொன்னுடுவேன்.. எதுக்கு இதுங்க இருக்கணும்..", என்றவன்…


"டேய் அங்க இருக்க ஆளுக்கு ஃபோன் போடுடா..  மொத்தமா மண்ணெண்ணெய ஊத்தி கொளுத்துங்கடா அந்த வீட்டை.. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து", என்றான் ஈவு இரக்கம் இன்றி.. விஷ்ணு துளிசியை எரிக்கக்கூறி.


அதில், ருத்ரனே ஆடிப் போய்விட்டான்.


அனைத்தையும் பார்த்தப் படி நின்று இருந்த மிதிலாவோ, "ஐயோ எங்க அம்மா அப்பாவ ஒன்னும் பண்ணிடாதீங்க அங்கிள்..  ருதுமா தயவுசெஞ்சு என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க.. எங்க அம்மா அப்பாவ விட்டுங்க.. ப்ளீஸ் கொளுத்த வேண்டாம்னு சொல்லுங்க.. ரொம்ப வலிக்கும்.. எனக்கு பயமா இருக்கு.. அங்கிள் வேணாம்னு சொல்லுங்க..", என்று பைத்தியம் பிடித்தவள் போல், பயந்து, ஒன்றும் புரியாது கதறினாள்..


உடனே ஆதிகேசவன் ஃபோனில் "இப்ப ஒன்னும் பண்ணாதீங்க டா..  வெயிட் பண்ணுங்க.. நான் ஃபோன் போடுறேன்..", என்று விட்டு, ருத்ரனை பதிலுக்காக பார்க்க...


ருத்ரன் ஆட்களின் பிடியில் இருந்து வர முயற்சித்துக் கொண்டே, "டாட் ப்ளீஸ் டாட்..  மிது எனக்கு பொண்ணு மாதிரி டாட்..  என்னால முடியாது டாட்.. ஏன்‌ டாட் என்னை புரிஞ்சிக்க மாட்றிங்க..  ஏற்கனவே என்னாலதான் சமிய காணோம்..  அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை..  அவ உயிரோட இருக்காளான்னே தெரியல, அதுக்குள்ள மிதிலாவா..  உங்களுக்கு என்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே.. கண்டிப்பா பண்ணிக்கிறேன்.. ப்ளீஸ் டாட் வேற பொண்ணு பாருங்க.. மிதிலாவ என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல..  அப்படி நடந்துச்சுன்னா நான் தான் சாகனும்", என்றான் வேதனையுடன்..


ஆதிகேசவன், "அதெல்லாம் முடியாது", என்று கத்தும் போதே.. 


ஒரு ஆள், அவனிடம் ஓடிவந்து, ஆதிகேசவனின் காதில் மெல்ல, "ஐயா இந்த பொண்ணு மைனர், வெளிய தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்.. அது ஸ்கூல் போற பொண்ணுன்னு எல்லாருக்கும் வேற தெரியும் ஐயா… ருத்ரன் ஐயா தான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்களே..  அப்படியே வேற பார்த்து பண்ணிடலாம்.. எதிர் கட்சி காரன் பார்த்தா அவ்ளோ தான்..", என்றான் பணிவாக.


ஆதிகேசவன், "ஐயோ இது வேறயா....  நல்ல வேலை சொன்ன..", என்று நினைத்துக்கொண்டே..


ஜோசியரை வீட்டுக்கு வரவழைத்து, அவசர அவசரமாக, இருந்த அனைத்து பெண்கள் ஜாதகத்தையும் பார்க்க ஆரம்பித்தனர்..


ருத்ரன், மிதிலாவை மாதவியின் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு..  டாக்டருக்கு அழைத்து விவரம் சொல்லி, தங்களின் வீட்டிற்கு மருந்துடன், உடனே வர சொன்னான்..


அடுத்து விஷ்ணுவிற்கும் ஃபோன் செய்து, “மிதிலா பத்திரமாக இருக்கிறா..  நான் கூப்பிட்டு வரேன் அங்கிள்..” என்று விட்டு வைத்தான்..


அவரும் மிதிலாவிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு வைத்தார்..


ருத்ரனிற்கு பொருத்தமாக, சாஹித்யாவின் ஜாதகம் அமைய.. உடனே அவர்களுக்கு ஆதிகேசவன் தொடர்பு கொண்டான். 


சாஹித்தியாவின் அப்பாவிற்கும், அண்ணனிற்கும் மிகுந்த மகிழ்ச்சி. உடனே சம்மதித்து விட்டனர். 


அவர்களின் பிஸ்னஸுக்கு ஆதிகேசவனின் அரசியல் செல்வாக்கு நல்லது, என்று முடிவு செய்து, இந்த சம்பந்தத்தை வரவேற்றனர்.

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻