உண்மை காதல் -22

அத்தியாயம் -22


அதிகாலை மணி ஐந்து, எப்பொழுதும் போல் ஹரி தான் முதலில் துயில் கலைந்து எழுந்தான்.. எழுந்ததும் முதலில் தன்னவள் முகத்தில் தான் முழித்தான்.


தன் நெஞ்சை மஞ்சம் ஆக்கி துயில் கொண்டு இருக்கும், தன் உயிரின் சிகையின் மீது குனிந்து முத்தம் வைத்துவிட்டு..  அவளை தூக்கி தன் கை வளைவிற்குள் கொண்டுவந்தான்...


அதில் மிதிலாவின் தூக்கம் தடைப்பட.. அவள் தூக்கக்கலக்கத்திலேயே  மறுபுறம் திரும்பி.. ஹரிக்கு முதுகு காட்டியபடி படுத்தாள். 


அதில் ஹரி, அவளின் பின்புறம் இருந்து, அவளின் இடுப்பை சுற்றி கை போட்டு, அவளை நெருங்கி படுத்து.. அவள் முதுகில் தன் முகத்தை ஆழ புதைத்து.. மேலும் சிறிது நேரம் தூங்க முற்பட…


அப்பொழுது மிதிலாவின், வெற்று வயிற்றை அழுந்த பற்றி இருந்த, ஹரியின் கைகள் சில மாற்றத்தை உணரத்தொடங்கியது.  


அதில் ஹரியின் புருவத்தில் சில முடிச்சுகள் விழ, மேலும் மிதிலாவின் அடி வயிற்றை, ஹரி தடவி பரிசோதிக்க..


ஹரியின் தொடர் இம்சையினால் கண்விழித்த மிதிலா..  திரும்பி அவன் நெஞ்சில் அடித்து..  "ஹம்ம்.. சும்மா இருங்க அம்மு..  காலைலயிலேயே.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க..  எனக்கு தூக்கமா இருக்கு.. சீக்கிரம் போயிட்டு காபி எடுத்துட்டு வாங்க", என்றவள்..  அவன் மீதே, தன் கையையும் காலையும் தூக்கிபோட்டு, அவனை விடாது அணைத்து படுத்து தூக்கத்தை தொடர…


ஹரி புன்னகையுடன் மிதிலாவின் காதில் முத்தமிட்டு, "உனக்கு எப்ப பேபி லாஸ்ட்டா பீரியட்ஸ் வந்துச்சு", என…


மிதிலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டு இருந்தாள்..


ஹரி தானே யோசித்துப் பார்த்தான்..  திருமணத்திற்கு பிறகு மிதிலாவிற்கு பீரியட்ஸ்ஸே வரவில்லை என்பதை நினைவில் கொண்டு.. மனதில் கணக்கிட்டு பார்த்தான். 


ஹரி மிதிலாவின் வயதை மனதில் கொண்டு.. குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று முடிவு செய்திருக்க.. அவன் முடிவு செய்வதற்கு முன்பே..   'ஆல்ரெடி உனக்கு ரொம்ப வயசாயிடுச்சி போ ப்பா..'  என, ஹரியின் குழந்தை.. மிதிலாவின் வயிற்றில் வேரூன்றி வளர தொடங்கி இருந்தான்.


சிறிது நேரம் சென்ற பிறகு மிதிலாவே எழ.. ஹரி மீண்டும் அக்கேள்வியையே அவளிடம் கேட்க..


மிதிலாவோ, 'காலங்காத்தல கேட்கிற கேள்வியை பாரேன்.. இவருக்கு என்னை எப்ப பார்த்தாலும்..  இதே கேள்வியை தான் கேட்கத் தோணும் போல..  முதல் தடவை திருச்சியில் பார்த்தபோதும் இதுதான்..  இப்பவும் இதுதான்..', என முணுமுணுத்தவள்.. யோசித்து.. எங்கோ பார்த்தப்படியே ஹரியிடம் தேதியை சொல்ல..


ஹரி, மிதிலாவின் முணுமுணுப்பை மனதில் ரசித்துக் கொண்டே..  அவள் சொன்ன தேதியை இணைத்து பார்த்தான்.


இன்னும் பரிசோதனை செய்து கொள்ள நாட்கள் இருந்தது.


சரியென சில நாட்கள் போகட்டும்.. பிறகு டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் செய்யலாம்..  என முடிவெடுத்த ஹரி…


காலையிலேயே பன்னீர் ரோஜா போல் சிவந்து அமர்ந்து இருந்த தன் மனைவியை, தூக்கி தன் மீது படுக்க வைத்தப்படி, அவள் இதழில் புதைய… 


நிமிடங்கள் சில கடக்க…


அவனுக்கு இணையான காதலுடன் மிதிலாவின் இதழும் அவனில் புதைந்து, தேன் அருந்த தொடங்கியது.. 


மருத்துவன் கற்றுக்கொடுத்த பாடத்தை ஒழுங்காய் படித்தவள்.. அவனை மிஞ்சிய மாணவியாய் மாறிப்போனாள்.. அதில் மருத்துவனுக்கோ காலையிலேயே விருந்து தான்..


கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதலே, அடிவயிற்றில் இருக்கும் தசைகள், சிறிது இறுக்கமாக மாற தொடங்கி விடும். கர்ப்பப்பையின் வெளிப்புற சுவர் குழந்தை உருவாக ஆரம்பித்ததும்..  குழந்தையை தாங்க நன்கு பலமாகவும் தடிப்பாகவும் மாறுவதால் அவ்வாறு தோன்றும்.. அதுவும் மிதிலா மிகவும் மெல்லிய உடல்வாகுடன்  இருப்பதால்.. எளிதில் அந்த வித்தியாசத்தை ஹரியால் உணர முடிந்தது.


**********************************

அங்கு இந்தியாவில்…


ஹரி, மத்திய அரசிற்கு ஆதிகேசவன் பற்றி சேகரித்து அனுப்பிய தகவல்கள் அனைத்தும் கானல் நீராக மறைந்து போனது.. 


இனி மிதிலா எந்த கவலையும் இல்லாது இருக்க வேண்டும், அதிலும் கர்ப்பம் வேறு தரித்திருக்க வாய்ப்பு உள்ளது என நினைத்த ஹரி, இந்தியாவிற்கு அழைத்து, இன்னும் ஏன் எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை.. என விசாரிக்க..


அங்கு நேரடியாக சென்று, ஸ்பை மூலம் விசாரித்து பார்த்த அந்த டிடெக்டிவ் சொன்னதை கேட்ட ஹரியால்,  இந்திய அரசியலமைப்பின் நிலையை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..


அத்தனை பணம்..  அவனின் சொந்த உழைப்பு..  கணக்குப் பார்க்காமல் ஹரி செலவழித்து இருந்தான்.


ஹரி, அனுப்பிய அனைத்து தகவல்களும் ஒன்று விடாது ஆதிகேசவனுக்கு அனுப்பப்பட்டு..  இனி ஜாக்கிரதையாக, எதிலும் மாட்டாது குற்றம் செய்யும் படி மட்டுமே, அவனை எச்சரிக்கை செய்து இருந்தனர்.


மக்களுக்காக தானே அரசாங்கம்.. என ஹரி நினைக்க.. இந்திய அரசாங்கமும், ஊழலும் அவனை பார்த்து சிரித்தது.


கட்சித் தலைவரும் ஆதிகேசவனை அழைத்து, "இனி கவனமா இரு ஆதிகேசவா.. உன்னால மத்த அமைச்சருக்கு என்னால் பதில் சொல்ல முடியலை.. திரும்ப எதிலாவது மாட்ன உன்ன கட்சியை விட்டு விலக்கிறத தவிர வேற வழியில்லை", என தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்து இருந்தார். அந்த சிக்கலினால் தான் ருத்ரனை ஆதிகேசவன் கண்காணிக்கவில்லை.


ஆதித்யனுக்கு அழைத்து ஹரி, அனைத்து தகவல்களையும் கூறி மிகவும் வருத்தப்பட்டான். மிதிலாவை திருச்சிக்கு அழைத்துச் சென்று எல்லா தகவல்களையும் சீக்கிரம் மாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தான்..  ஆனால் அனைத்தும் மீண்டும் தொடக்கப் புள்ளியிலேயே வந்து நின்றது.. முடிவு காண வழி இல்லாமல்.


ஆதித்யன், "ஹரி நீங்க நினைக்கிற போல எதுவுமே இந்தியால சட்டப்படி செய்ய முடியாது.. அவனை நேருக்கு நேரா எதிர்த்து சண்டைப் போட்டோ, இல்லை ஆள் வச்சோ ஏதாவது செஞ்சா தான் உண்டு.. ஆனா அவனை எதிர்க்க யாரும் வர மாட்டாங்க.. இப்போ மட்டும் இத்தனையும் பண்ணது நீங்க தான்னோ, இல்லை நீங்க அனுப்பின டிடெக்டிவ் மாட்டினாலோ கூட பெரிய ஆபத்து நமக்கு தான்.. எதார்த்தம் வேற.. இதெல்லாம் விட்டுட்டு மிதிலாக்கூட நிம்மதியா வாழப்பாருங்க..", என்றுவிட்டு வைத்துவிட்டான்.


ஹரியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. மிதிலாவை எப்படியாவது டாக்டர் ஆக்கியே காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தான்.


அதே நேரம் ருத்ரனும், சாஹித்யாவும் வந்த விமானம் அமெரிக்காவில் சியாட்டில் ஏர்போர்ட்டில், தரையிறங்கி இருந்தது..


ருத்ரனும் சாஹித்யாவும், தங்களின் வாழ்க்கையையே கிட்டத்தட்ட திருமணமாகி பல மாதங்களுக்கு பின்பு தான் தொடங்கி இருந்தனர்.


சாஹித்யாவின் பொறுமை தான் ருத்ரனை அவள் புறம் இழுத்து கட்டிப்போட்டு இருந்தது..


சாஹித்யாவிற்கோ ருத்ரனின் நேர்மையும், பொய்யாய் கூட அவளை அவன் நாடாதும், அவளுக்கு அவன் கொடுத்த மரியாதையும், அவனின் குணமும் என அனைத்துமே பிடித்துப்போனது.


சாஹித்யா, தன் மனம் திறந்து ருத்ரனிடம் அவளின் ஆசையென கூறியது. அவளுக்கே அவளுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்பது தான்.


குழந்தையுடன் சேர்ந்து சிறுவயதில் இருந்தே அவள் இழந்ததை அனுபவிக்க வேண்டும்..  என்று சில எதிர்பார்ப்புகள் அவளுக்குள் இருக்க.. கிட்டத்தட்ட ஒருவருடம் மேல் கடந்தும், ஆதிகேசவனால் அவளின் ஆசை நிறைவேறவில்லை..


ருத்ரனோ தன் ஆசை மனைவியின் ஆசையை நிறைவேற்ற, இதோ அமெரிக்கா வரை வந்துவிட்டான்.


ஏர்போர்ட்டிலேயே ஒரு காரை வாடகைக்கு எடுத்த ருத்ரன்..  சியாட்டில் டவுன்டவுனில் உள்ள மேரியாட்(Marriott) என்ற செவன் ஸ்டார் ஹோட்டலில் வந்து சேர்ந்தான்.


அடுத்த நாள், காலை 10 மணிக்கு தான், ஹரியுடன் அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட்.


அங்கு ஹரிக்கோ மிகுந்த ஆத்திரம் ஆதிகேசவனை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று… 


எப்படி எப்படியோ யோசித்தவன் இறுதியில், அன்று இரவே ஆதிகேசவனின் அராஜகத்தை குறித்து மக்களிடம் நேரடியாக..  அனைத்து தகவலையும் எடுத்துச் செல்லும் பணியில் துணிந்து இறங்கி விட்டான். 


*****************************


மறுநாள் ருத்ரனும் சாஹித்யாவும், கிளம்பி..  ஹரியின் மருத்துவமனையை வந்து அடைந்தனர்.


ஒவ்வொருவராக பார்த்து அனுப்பிய ஹரி, அடுத்ததாக உள்ளே வந்த ருத்ரனை பார்த்ததும் அதிர்ச்சியாகி போனான்.. 


நொடியில் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட ஹரி, தன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை..


ஆதிகேசவன் குறித்த தகவல்களை சேகரிக்கும் போதே, ஹரிக்கு, ருத்ரன் மற்றும் சாஹித்தியா பற்றிய தகவல்களும், புகைப்படமும் வந்து இருந்தது.


ஹரி மருத்துவனாக, சாஹித்யாவிடமும் ருத்ரனிடமும் சில கேள்விகளை கேட்டுவிட்டு... 

இருவருக்குமான பரிசோதனைகளை பரிந்துரை செய்து, முடிவுகளுடன் வரும்படி அனுப்பினான்.


ருத்ரனின் நீண்ட நாள் தேடல், ஹரியிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படுவது, ருத்ரனாலும் அந்நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை.


வெளிவந்த ருத்ரன், நேராக லேபிற்கு சாஹித்யாவுடன் சென்று, ஹரி செய்ய சொன்ன பரிசோதனைகள் அனைத்தையும் அன்றே செய்யச்சொல்லி முடித்துவிட்டனர்.


அடுத்தநாள் மதியத்திற்கு மேல், அனைத்து முடிவுகளும் வந்துவிடும் என்று கூறி.. மறுநாளுக்கான ஹரியுடனான  அப்பாயின்மெண்ட் நேரத்தையும், ஹாஸ்பிடலில் குறித்துக் கொடுத்து அனுப்பினர்.


முதலில் பதறிய ஹரி, ருத்ரன் எதர்ச்சியாக தான், இங்கு வந்து உள்ளான் என்பதை அறிந்து சிறிது ஆசுவாசமாகி விட்டான்.


இருந்தும் ருத்ரனின் கண்ணில் மிதிலா படுவதை ஹரி விரும்பவில்லை.


உடனே வீட்டிற்கு அழைத்து ஹரி, மிதிலாவை எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும்..  எங்காவது வெளியே செல்வதாக இருந்தாலும்..  தன்னிடம் நிச்சயம் சொல்லிவிட்டு செல்ல, கூறிவிட்டு வைத்தான்..


அந்நாள் எப்பொழுதும் போல் நகர்ந்துவிட…


மறுநாள் மதியம் ஹரியை,  

ருத்ரனும் சாஹித்யாவும், ரிப்போர்ட்டுடன் வந்து பார்த்தனர்.


சாஹித்யாவின் ரிப்போர்ட்களையும், ருத்ரனின் ரிப்போர்ட்களையும்..  பார்த்த ஹரி, அவர்களுடன் அதை பற்றி பேசினான். 


ஒரு சிறு குறையும் இருவர் உடலிலும் இல்லை..  நல்ல ஆரோக்கியமான நிலையிலேயே இருவரும் இருந்தனர். 


ஹரி, "எல்லாமே நார்மலா தான் இருக்கு சாஹித்யா உங்களுக்கு.. ஈவன் ரொம்ப நல்லாவே இருக்கு.. சேம் ருத்ரனுக்கும் கவுண்ட்ஸ் அண்ட் ஹெல்த் பர்ஃபெக்ட்.. எதுக்கும் யுட்ரஸ்ஸ மட்டும் ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்.. சம் டைம்ஸ் சின்ன கட்டி இல்லை ஏதாவது அடைப்பு மாதிரிக்கூட இருக்கும்.. ஒன்ஸ் பார்த்துட்டா‌… அடுத்து என்னன்னு பேசலாம்.." என்ற ஹரி, சாஹித்யாவை ஸ்கேனிங் அறைக்கு அழைத்துச்சென்று பார்த்தான்.


ருத்ரனும் சாஹித்யாவுடன் தான் உள்ளே இருந்தான்.


ஹரிக்கு அனைத்துமே திருப்தியாக இருந்தது.


கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்ட ஹரி, பொறுமையாக சாஹித்யாவின் கர்பப்பையின் அமைப்பை ஆராய்ந்து பார்த்து குறிப்பு எடுத்துக்கொண்டு.. அங்கு நின்று இருந்த ருத்ரனையும் அருகில் அழைத்து, பெரிய திரையில் உள்ள சாஹித்யாவின் கர்ப்பப்பையின் உள் அமைப்பை காட்டி பேசத்தொடங்கினான்.


தற்சமயம் சாஹித்யா ஓவுலேஷன் பீரியட்டில், அதாவது, கரு உண்டாக தேவையான, கருமுட்டை வெளிவரும் நேரத்தில் இருப்பதாகவும்….  


இன்னும் 24-லிருந்து.. 48 மணி நேரத்திற்குள்.. எப்பொழுது வேண்டுமானாலும் அவளின் கருமுட்டை வெளியேறும்… 


வெளிவந்தப்பின் குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை வீரியத்துடன் அந்த கருமுட்டை இருக்கும் என்று கூறியவன்.. 


ருத்ரனிடம் அந்த நேரத்தில் எந்த வித மன அழுத்தமும், இருவருக்கும் இல்லாமல், சேர்க்கை நடந்தால்.. சாஹித்யா கருவுற அதிக வாய்ப்புகள் உள்ளது என்று விளக்கி.. மேலும் சில அறிவுரைகளை கூறி.. ஐந்து தினங்களுக்கு பிறகு வருமாறு அவர்களை அனுப்பிவிட்டான்.


ஆதிகேசவன் முதலில் இருந்தே சாஹித்யாவிற்கு.. அதிக பக்க விளைவுகள் இல்லாத.. தரமான கருத்தடை மருந்தையே கொடுத்துக்கொண்டு இருந்தான். 


அன்று ஆதிகேசவன் பணிப்பெண்ணிடம் அம்மருந்தை பற்றி பேசி..  மிரட்டியதை  பார்த்த மாதவி.. 


நிச்சயம் ஆதிகேசவனை எதிர்த்து எதுவும் சாதிக்க முடியாது என்பதை.. தன் இத்தனை வருட வாழ்கையில் அறிந்தவர் என்பதால்.. துணிந்து தன் மகனுக்காக, அவரும் வெளியில் சொல்லாது காரியத்தில் இறங்கி விட்டு இருந்தார்.


பணிப்பெண்ணை தொடர்ந்து கண்காணித்து அவள் மருந்து வைத்திருக்கும் இடத்தை அறிந்தவர்..  அதே போன்ற வடிவில் இருக்கும்..  வேறொரு ஃபோலிக் ஆசிட்(Folic acid) சத்து மாத்திரைகயை வாங்கி, அப்பெட்டியில் மாற்றி நிறைத்து வைத்து விட்டார்..  கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாகவே சாஹித்தியவிற்கு, நல்ல ஊட்டமான உணவுகளும்.. உடன் அந்த சத்து மருந்தும் தான் கொடுக்கப்பட்டது. 


அதனால் தான் இன்று அவளின் கருப்பை ஆரோக்கியமான கருமுட்டையை உருவாக்கி இருந்தது..


ஹோட்டலிற்கு திரும்பிய ருத்ரனுக்கும் சாஹித்யாவிற்கும்.. மனதிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது.. 


ஹரி கூறியதில், ஒன்றைக்கூட விடாது, அந்த ஐந்து நாட்களும் அப்படியே பின்பற்றிவிட்டு,

மீண்டும் ஹரியை பார்க்க, இருவரும்  மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்தனர்..  


மருத்துவத்தில் ஹரியை அடித்துக்கொள்ள முடியுமா என்ன? பத்து வருடங்களுக்கு மேல் அவனுக்கு அனுபவம் உள்ளதே..


செக்கப்பின் முடிவுகள் அனைத்தும் சுபமே..


சாஹித்யாவோ வானில் சிறகில்லாமல் பறக்கத் தொடங்கினாள். ருத்ரனிற்கும் சாஹித்யாவின் மகிழ்ச்சி நிறைவை கொடுத்தது..


அவமானத்திலும், வாழ்கையின் மீது உச்சகட்ட வெறுப்பிலும் தனக்குள்ளே இறுகி போய் இருந்த ருத்ரனை, தன் அன்பால் வெளிக்கொண்டு வந்து, அவனை காதல் செய்து, அவனின் அனைத்துமாய் விளங்குபவள். ருத்ரனின் தேவதைப்பெண் ஆயிற்றே சாஹித்யா..


ஹரி, இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி, மேலும் சில பரிசோதனைகளை, குழந்தையின் நலனுக்காக, எடுத்துக்கொண்டு வரக்கூறி எழுதி, அனுப்பினான்.


*********************************


அதேநேரம் அங்கு இந்தியாவில்,


அன்று மாலை, ஆதிகேசவன் குறித்த பல தகவல்கள், சோஷியல் மீடியாவில், பெயர் தெரியாத நபரால் ஆதாரங்களுடன் பகிரப்பட்டு விட..


அதைத்தொடர்ந்து மேலிடத்தில் இருந்து, ஆதிகேசவனிற்கு பல குடைச்சல்கள், வந்த வண்ணம் இருந்தது.‌ 


அதை பார்த்த மக்கள் ஒருபுறம், அனைவரும் ஆதிகேசவனை உடனே கைது செய்யக்கூறி, கொந்தளிக்க ஆரம்பித்தனர்.


மாலை நேரத்திற்கு மேல் இது நடந்து இருந்ததால்..   இதனை வீட்டில் இருந்த மாதவியோ, அங்கு அமெரிக்காவில் இருக்கும் ருத்ரனோ அறியவில்லை.


ஹரியை பார்த்துவிட்டு, மருத்துவ மனையில் இருந்து ஹோட்டலிற்கு திரும்பிய ருத்ரன், உடனே இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர மாதவிக்கு கால் செய்தான்.. 


அப்பொழுது இந்தியாவில் நடு இரவே ஆகி விட்டு இருந்தது. 


சாஹித்ய கருத்தரித்த விஷயத்தை கேட்டதும்,

மாதவிக்கு மிகுந்த மகிழ்ச்சி.. 


உடனே படுக்கையறையில் இருந்து வெளிவந்தவர், விரைந்து பூஜை அறைக்கு சென்று, முதல் வேலையாக காணிக்கையை இறைவன் முன்பு வைத்து.. வணங்கிய பிறகே ருத்ரனிடம் பேசினார்..  


சாஹித்யாவின் உடல்நலம் குறித்து விசாரித்தவர், ருத்ரனிடம் அன்று ஆதிகேசவன் வேலைக்கார பெண்ணிடம் பேசியதையும், சாஹித்தியவிற்கு அவன் செய்ததைப்பற்றியும் கூறிவிட்டு.. ஆதிகேசவனிடம் குழந்தை உண்டான விஷயத்தை தப்பி தவறிக்கூட, பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள் என்று விட்டு வைக்க...


அக்கணம் தன் தந்தையின் மீது இன்னும் இன்னும் ருத்ரனிற்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது..


அறைக்குள் வந்த ருத்ரன், சாஹித்யா மகிழ்ச்சியுடன் ஃபோனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து. உடனே தன்னுடைய மனநிலை அவளை பாதிக்கும் என்று  தனக்குள்ளேயே மாதவி கூறியதை புதைத்துக்கொண்டு,

அவள் அருகில் சென்று அமர்ந்தவன், "யாருகிட்ட சாஹி.. இப்ப போயிட்டு பேசற", என…


சாஹித்யா, "சமி கிட்ட தான் ருத் பேசறேன்.. இந்தாங்க நீங்களும் பேசுங்க", என கொடுக்க…


ஃபோனை வாங்கிய ருத்ரன் அவளிடம் வாஞ்சையாக, "ஏன்டா சமிமா இன்னும் நீங்க தூங்கலையா .. அங்கிள் ஆன்ட்டி தூங்கறாங்களா", என்றவன்..  மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு முடிவில்.. "இங்க நல்ல Neurologist  அன்ட் Neurosurgeon-னை விசாரிச்சுட்டு வறேன்மா.. தைரியமா இரு சரியா.. இப்ப போய்ட்டு தூங்கு..  அப்புறம் பேசலாம்.. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு" என்றவன், ஃபோனை அணைக்க.


ருத்ரனின் முகத்திலும்.. குரலிலும் இருந்த வாஞ்சை தன்மையை.. எப்பொழுதும் போல் இன்றும் சாஹித்யா ரசித்தாள்..


அவள் முகத்தை பார்த்த ருத்ரன் புன்னகையுடன், "ஓய் என்ன.. என்னை சைட் அடிக்கறீயா…", என…


மறுவினாடி அவன் மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை வளைத்தவள்.. ருத்ரனின் மூக்கு நுனியை, தன் மூக்கு நுனியால் உரசி, "எஸ்… ஏன் நான் பார்க்கக் கூடாதா??", என… 


தன் தலையை லேசாக சாய்த்த ருத்ரன், "இதை நீ கேட்கனுமா என்ன.. ஐயம் ஆல்வேஸ் யுவர்ஸ்", என்றவன் அப்படியே அருகில் இருந்த அவளின் செர்ரி பழ உதடுகளை, தனக்குள் இழுத்து, இன்ப யுத்தம் ஒன்றை நடத்தி, சில வினாடிகளில் சாஹித்யாவை தன் வசமாக்கி விட்டே, அவளை விடுவித்தான்.. 


அவன் நெஞ்சில் நீள் மூச்சுக்களை எடுத்தப் படி சாஹித்யா சாய…


அவளின் தலைமுடியை கோதிவிட்டவனுக்கு, அப்பொழுது தான் மாதவியிடம் பேசியது ஞாபகம் வந்தது..


உடனே, "சாஹி பேபி.. இப்போதைக்கு பேபி ஃபார்ம் ஆன விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதே சரியா… டேஸ் போகட்டும்.. நான் சொல்றேன் அப்ப சொல்லலாம்", என… 


அவளும் "ஷோர் ருத்", என்றுவிட்டாள்.. எப்படியும் அவள் அம்மாவிடம் விஷயத்தை கூறினால், அதற்குள்ளே எதற்கு உனக்கு குழந்தை.. சுத்த பைத்தியக்கார தனம் என்பார்.. அப்பா இது என்ன மிகவும் முக்கியமான விஷயமா.. ஃபோன் போட்டு நேரத்தை வீணாக்கி விட்டாய் என்பார்… எதற்கு வீணாக அவர்களிடம் கூறி, இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துக்க வேண்டும்.


இப்படியாக ருத்ரன், தன் குழந்தையை ஆதிகேசவன் கண்ணில் இருந்தும், ஹரி மிதிலாவை ருத்ரனின் கண்ணில் இருந்தும், மறைக்க பார்க்க..


விதியோ இவை இரண்டையும் உடனே செய்ய, ஆதிகேசவனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துவிட்டு இருந்தது.


திருச்சியில், மாதவி, பூஜை அறையில் இருந்தப்படி, ருத்ரனுடன்  ஃபோனில் பேசியதை, இரவு தாமதமாக வீட்டிற்கு வந்திருந்த, ஒரு சாத்தான் முழுவதுமாக கேட்டுவிட்டு இருந்தது..


ஏற்கனவே ஆக்ரோஷமாக இருந்தவனுக்கு, இதை கேட்கவும் இன்னும் ஆக்ரோஷம் கூடிவிட்டது.


அன்று மாலை ஹரி மூலம், சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் அனைத்தையும், இரவு பத்து மணி அளவிலேயே, ஆதிகேசவன் தன் செல்வாக்கை உபயோகித்து சைபர் கிரைம் மூலம் அழித்து விட்டு தான் வீடு திரும்பினான். 


ருத்ரன் அவனுக்கு எதிராக செயல்படுவதையும், இன்று ஆதிகேசவன் அறிந்துக்கொண்டு இருந்தான்.


அந்த கோபத்துடன், ருத்ரனை ஒரு வழி செய்ய, வீட்டிற்கு வந்த, ஆதிகேசவன்.. மாதவி பேசியது மூலம் சாஹித்யா குழந்தை உண்டானதை அறிந்து மேலும் கொதித்து போனான்.


குழந்தை உண்டான நேரம் தான் தன்னை மேலும் ஆட்டுவிக்கிறது என்று நம்பியவன்..


வந்தவழியே வீட்டை விட்டு அமைதியாக, சத்தம் காட்டாது வெளியேறி விட்டான். 


பேசி முடித்த மாதவி, ஃபோனை வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை கடவுளுக்கு நன்றி உரைத்து விட்டு, பூஜை அறையில் இருந்து வெளிவரும் பொழுது.. அவர் காலில் ஏதோ ஒரு பொருள் விழுந்தது..  


'என்ன" என, அவர் குனிந்து பார்க்கும் பொழுது…


மாதவியின் கழுத்தில் இருந்த..  தாலி சரடில் இருந்த மஞ்சள் கயிறு அறுந்து..  அதில் இருந்த மாங்கல்யம் மற்றும் பிற பொருட்கள் என அனைத்தும் கீழே விழுந்து உருண்டோடியது..


உடனே அருகில் இருந்த 

விளக்கை போட்ட மாதவி, எவ்வளவு தேடியும் மாங்கல்யம் மட்டும் கிடைக்கவேயில்லை..


வீட்டில் இருந்து வெளிவந்த ஆதிகேசவனின் கார் நேராக திருச்சி ஏர்போர்டிற்கு சென்றது..


அச்சமயம் அமெரிக்காவிற்கு செல்ல நேரடி விமானம் எதுவும் இல்லை..  இருந்தும் கனெக்டிங் ஃப்ளைட்டில்..  தன்னிடம் இருந்த டூரிஸ்ட் விசா மூலம் 

அமெரிக்காவிற்கு கிளம்பிவிட்ட ஆதிகேசவன்... 


அடுத்த 30மணி நேரத்தில், 


அமெரிக்காவில், சியாட்டல் மண்ணில் தன் காலை பதித்துவிட்டு இருந்தான்.


அவன் ஏர்போர்ட்டில் இருந்து வெளிவர.. அவன் கையில், ருத்ரன் தங்கி இருக்கும் ஹோட்டல் மற்றும் சென்ற மருத்துவமனை குறித்த அனைத்து தகவல்களும் வந்து சேர்ந்துவிட்டது..

________________________


அன்று விடியற்காலையிலேயே, ஹரிக்கு மருத்துவ மனையில் இருந்து, ஒரு பிரசவ கேஸிற்கு, அவசரம் என்று அழைப்பு வர, அடுத்த ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்று விட்டான். 


காலை எப்பொழுதும், எழும் நேரத்திற்கு எழுந்த மிதிலாவை, வரவேற்றது வெற்று கட்டில்..


ஹரி எங்கே என பார்க்க.. மாலை தான் வீட்டிற்கு வருவேன், என ஹரி மெஸேஜ் அனுப்பி இருந்தான்..


சரியென குளித்து முடித்து தயாராகி கீழே வந்தாள்..


அன்று வரலட்சுமி விரதம்..


அன்னப்பூரணி வீட்டில்.. மிதிலாவை முறையாக வழி நடத்தி பூஜைகளை.. அவள் கையாலேயே செய்ய வைத்தார்.


திருமணம் ஆன பெண், வரலட்சுமி விரதம் அன்று விரதம் இருந்து..  மனமார வரலஷ்மிக்கு பூஜை செய்தால்..  கணவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.


ஒவ்வொரு வருடமும் துளசி செய்யும் பொழுது.. மிதிலா பார்த்து உள்ளாள்..


எனவே அவளும் ஹரிக்காக விரதம் இருந்து, வேண்டிக்கொண்டாள்.


அன்னப்பூரணி மிதிலாவை "ஜூஸ் ஆச்சும் குடிடா".. என வற்புறுத்த, மிதிலா, "இருக்கட்டும் ஆன்ட்டி, பூஜை முடியட்டும்", என பிடிவாதமாக மறுத்துவிட்டாள்..


**********************************


அங்கு மருத்துவமனையில், ரிப்போர்ட் வந்துவிட்டதாக கூற, அதை வாங்க, ருத்ரனும் சாஹித்யாவும், ஹோட்டலில் இருந்து கிளம்பி, மருத்துவ மனைக்கு வந்து சேர...


அதே ஹோட்டலில் முன் தினம் இரவே, வந்து தங்கிவிட்டு இருந்த ஆதிக்கேசவனின் காரும், ருத்ரனின் காரை பின் தொடர்ந்து வந்து, மருத்துவமனையின் பார்க்கிங்கில் நின்றது..


பெற்ற ஒரே மகனும்.. மருமகளும் சந்தோஷமாக மருத்துவ மனைக்குள் செல்வதை.. வெறுப்புடனும்.. ஆக்ரோஷத்துடனும்.. ஆதிகேசவனின் விழிகள் நோக்கியது..


இங்கு வீட்டை தயார்படுத்தி, பலகார சமையல் முடித்து, பூஜை அறை வேலைகள், அலங்காரங்கள் என்று அனைத்தையும் முடித்து, பூஜை முடிக்க மதியம் ஆகிவிட்டது..


மிதிலா முற்றிலும் சோர்ந்து போனால்…


அன்னப்பூரணி, "வாடாமா இப்போவாச்சும் சாப்பிட உட்காரு.. பூஜை நல்ல படியா முடிஞ்சுடுச்சு.. எவ்ளோ வேலை..", என்றார்…


மிதிலா அனைத்தையும் எடுத்து வந்து டைனிங் டேபிளில் அடுக்கிவிட்டு, "ஆன்ட்டி நீங்களும் ஜூடியும் சாப்பிடுங்க.. நான் அவர் கூட சாப்பிடறேன்.. காலைல கூட அவரு வெளியே தானே சாப்பிட்டு இருப்பாரு.. சாமி சாப்பாடு சாப்பிடட்டும்.. பாப்பா தூங்கி எழறதுக்குள்ளே வந்துடறேன்..", என..


அன்னபூரணி, "சின்ன பிள்ளையாட்டம் ரொம்ப பிடிவாதம் மிதுமா நீ.. பாரு ஹரி திட்டப் போறான்.. சரி போயிட்டு பொறுமையாவே வா.. சின்னக்குட்டிய நாங்க பார்த்துக்கறோம்", என்றவர்.. ஹரி மீதான மிதிலாவின் பாசத்தில் மகிழ்ந்து, அனுப்பி வைத்தார்.


அடுத்த அரைமணி நேரத்தில் மிதிலாவின் காரும், ஹரி பணிப்புரியும் மருத்துவமையின் நுழைவாயிலை அடைந்து இருந்தது..


*********************************


உள்ளே மருத்துவமனையில்,


ருத்ரன் மற்றும் சாஹித்யா ஹரியை சென்று சந்தித்தனர்.


ஹரி, ரிப்போர்ட்களை பார்த்துவிட்டு அனைத்தும் தற்போது சரியான அளவில்தான் உள்ளது.. எதிலும் பிரச்சனை இல்லை.. என்றுவிட்டு, என்னென்ன உணவுகள் எந்த அளவில், இனி சாஹித்யா எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரிண்ட் அவுட்டை கொடுத்து..  கடைபிடிக்க வேண்டிய சில அறிவுரைகளையும் கூறிவிட்டு.. "தட்ஸ் இட்..  எனி மோர் கொஸ்டின்ஸ்", என்றான்.


சாஹித்யா ஆங்கிலத்தில், "டாக்டர்.. நாங்க இந்த வீக், இந்தியா போறோம்.. இப்ப டிராவல் பண்றது சேஃபா", என்றாள்.


ஹரி யோசித்துவிட்டு, 'முதல் மூன்று மாதங்களுக்கு..  லாங் டிராவல் அதுவும் ஃபிளைட்டில் அவ்வளவு சேஃப் என்று சொல்லமுடியாது..',  என்றவன்...  


மேலும் ‘உங்களுக்கு தற்சமயம் உடலில் பிரச்சினை எதுவும் இல்லை தான்.. பட் முன்பு என்ன பிரச்சனை இருந்தது என்று தெரியவில்லை..  சோ பதிமூன்றாவது வாரம் ஸ்கேன் பார்த்துவிட்டு..  லாங்க் ட்ராவல் சென்றால் நல்லது..’, என்றான்.


"ஓகே டாக்டர்.. அப்ப அதுவரை நாங்க இங்கேயே இருக்கோம்", என்ற சாஹித்யா, ருத்ரனுடன் வெளியேவந்து… பேமெண்ட் மற்றும் அடுத்த அப்பாயிண்மென்ட் குறித்து ரிசப்ஷனில் பேச..

 

மிதிலா தன் காரை, பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கி, உணவு பேக்கை எடுத்துக்கொண்டு..  ஹாஸ்பிட்டலினுள் செல்லும்  நடை பாதையில் நடக்கத் தொடங்கினாள்.


அதே பார்க்கிங்கில், தான் வந்திருந்த காரில் அமர்ந்திருந்த ஆதிகேசவன், ருத்ரனை பழிவாங்க, பேசாமல் அவன் மனைவியை ஏதாவது செய்து விடலாமா, என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.


அவனுடன், அவனின் உதவிக்கு என்று வந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த நபர்..  ஒரு இல்லீகள் கிரிமினல்..  


எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டிற்கு தகுந்த வரான கிரிமினல்ஸ் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்... ஆதிகேசவன் போன்றோருக்கு அவர்களை கண்டறிந்து உபயோகப் படுத்திக்கொள்வது சுலபமே.. 


உள்ளே, ருத்ரனும் சாஹித்யாவும் இன்னுமே ரிஷப்ஷனில் பேசிக்கொண்டு இருக்க,  ஹரி அடுத்த பேஷண்டட்டை பார்க்க ஆரம்பித்து, அவரை ஸ்கேன் செய்ய ஸ்கேனிங் ரூமிற்கு அழைத்து சென்றான்.


இங்கு ஆதிகேசவனின் கவனம் அவன் காதில், திடீரென்று கேட்ட கொலுசொலியால் கலைந்தது.. 


'இங்க போயிட்டு, எங்க இருந்து கொலுசு சத்தம் வருது' என்று அவன் தன் தலையை வலப்புறம் திருப்ப..


மிதிலா வந்துக்கொண்டு இருந்தாள்.


'யார் இது, நம்ம ஊரு பொண்ணு மாதிரி புடவையில', என்று உற்று நோக்கிய ஆதிகேசவனின் புருவங்களில், மிதிலா நெருங்க நெருங்க சுருக்கங்கள் விழ தொடங்கியது..


மெல்லிய மஞ்சள் நிற பட்டு புடவையில்..  முகம் முழுக்க காதல் கரை புரண்டோட..  தெய்வீகமான அழகுடன்..  தாய்மையின் ஆரம்ப நிலையில் வரும் ஹார்மோன் மாற்றத்தினாலும் உண்டான தனி சோபையுடனும்.. என்று இருபத்தி இரண்டு வயதிற்கான அதீத தேஜசுடன்.. அழகு ரதியாக நடந்து வருபளை, அடையாளம் கண்டுக்கொண்ட, ஆதிகேசவனின் விழிகள் பெரும் சீற்றத்துடனும், ஆக்ரோஷத்துடனும், வெறியுடனும் மிதிலாவை பார்த்தது.


சட்டென்று கதவை திறந்து ஆதிகேசவன் காரில் இருந்து இறங்கினான்.


ஹரியை மனதினுள் கொஞ்சிக் கொண்டே, நடந்து வந்து கொண்டிருந்த மிதிலாவிற்கு..‌ சுற்றி நடக்கும் எதுவும் மனதில் பதியவில்லை..


ஆதிகேசவனின் உடல் முழுக்க தகிக்க..  ஒருவித அழுத்தத்துடன் மிதிலாவை நோக்கி..  சுற்றி பார்வையை வைத்துக்கொண்டே..  நெருங்கினான்.


ஒருக்கையில் உணவு பையும், ஒருக்கையில் புடவையின் முன் கொசுவமும் என்று பிடித்துக்கொண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டே, குனிந்தப்படி வந்துக்கொண்டு இருந்தவளின் மீது, ஆதிகேசவனின் நிழல்  பட்டதும்..  சட்டென்று மிதிலா சற்று ஓரமாக நகர்ந்துக்கொண்டு, புன்னகையுடன் எதிரில் யார் என்று நிமிர்ந்து பார்க்க.


பார்த்தவளின் இதயமோ, வெளிவந்து விடும் அளவுக்கு பயந்து துடிக்கத் தொடங்கியது.


ஆதிகேசவனின் கண்கள், நொடியில் அவள் நெற்றி வகிட்டில் சூடியிருந்த குங்குமத்தையும்..  கழுத்தில் அணிந்திருந்த கெட்டியான தாலி கொடியையும்..  உற்று நோக்கிவிட்டு.  மீண்டும் அவள் கண்களை நோக்கியது.


மிதிலாவின் உடல்..  கிடுகிடுவென நடுங்க..  


அவள் கையில் இருந்த உணவு பை..  கார் சாவி.. ஃபோன் என்று அனைத்தும் ஒவ்வொன்றாக கைகளிலிருந்து கீழே விழுந்தது.


மூளை ஓடு ஓடு என்று எச்சரிக்கை செய்தாலும்..   பயத்தில்.. மூளையின் சொல்லை..  அறிய முடியாத அளவு, உடல் உறைந்து நின்று இருந்தாள்.


ஆதிகேசவனின், கோரத்தாண்டவம்களும்..  அடிகளும்.. பெற்றோரின் இழப்பும் என அனைத்தும்.. மிதிலாவின் கண் முன்பு விரிந்து அவளின் பயத்தை அதிகரித்தது..


உடல் ஜில்லிட்டு நடுங்கியது..  


அதற்கு மாறாக அவள் நெற்றியில் இருந்து வியர்வை தபதபவென்று வெளியேறி கீழே இறங்கியது.. 


"அப்புறம் என்னம்மா சின்ன பொண்ணு..  ரொம்ப சந்தோஷம்மா..  வளமா..  இருக்க போல..  திருச்சியிலிருந்து அமெரிக்கா வந்துட்ட.. ஹ்ம்ம்..  எப்படி வந்த.. ", என்று ஆதிகேசவன் கர்ஜிக்க..... அவன் மனதில் இதுவும் ருத்ரனின் வேலையோ என்ற எண்ணங்கள் ஓடியது.


ஆதிகேசவனின் கர்ஜனையில்..  மிதிலா சிலையாகியேப் போனாள். 


ஹரி சொல்லிக்கொடுத்த, தற்காப்பு முன்னெச்சரிக்கைகள் அனைத்தும், ஆதிகேசவன் முன்பு மறந்துவிட்டு இருந்தது.


அவளின் அமைதியில், மேலும் கோபமான ஆதிகேசவன், "ஏய்..  என்னடி..  யாருகிட்ட உங்க ஆட்டம் எல்லாம்..  ஆதிகேசவன் டி நான்..  உன் குடும்பத்தை உருத்தெரியாமல் அழிச்சவன்..  என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டல்ல..", என்று மிதிலாவை நெருங்கி..  


அவள் கையை அழுத்தி பற்றி, "வாய‌ தொற.. யாருடி உனக்கு தாலி கட்டுனது..  எல்லாம் ருத்ரன் ஏற்பாடா.. விட மாட்டேன் டி.. உன் அக்கா என் கண்ணுல மண்ணை தூவிட்டு வயித்த தள்ளிக்கிட்டு வந்து மாட்டி..  ஜோடியா சாம்பலானா.. அடுத்து இப்ப நீ.. சொல்லு.. யாரு உன் புருஷன்.. உன்கூட சேர்த்து அனுப்பி வைக்கிறேன்", என்றான் வெறியுடன்.


ஆதிகேசவனின் வெறியுடன் கூடிய வார்த்தைகளினால் மிதிலாவின் உடல் நடுங்கி பலம் இழக்க தொடங்கியது.


அவளின் மனம் அன்று தான் பார்த்த மித்ரா பிரித்திவ்வின் நிலையுடன், இன்று ஹரியையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்தது..


ஆதி கேசவனுக்கு, எங்கே..  எந்த நாட்டில் தான் உள்ளோம்..  என்ன செய்கின்றோம்..  என்பது அனைத்தும் கோபத்தில் மறந்துவிட்டது.


இதைப்பார்த்த காரில் இருந்த, ஆதிகேசவனின் ஆள்….  'யாராவது பார்த்தால் தனக்கும் பிரச்சனை.. ' என இறங்கி இவர்களிடம் ஓடி வந்தான்.


அதற்குள் சுதாரித்துக்கொண்ட மிதிலா, ஆதிகேசவனின் பிடியை தளர்த்த முயற்சித்தப்படி, அவனிடம் இருந்து ஓடப்பார்க்க..


மிதிலாவின் தலைமுடியை அழுத்தி பிடித்து நிறுத்தியவன்..  அவளின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை வெளியே எடுத்து..  "அறுத்து எரியறேன் பாரு".. என சீற…


அவன் கையில் இருந்த தாலிக்கொடியை பற்றியப்படி மிதிலா, "ஐயோ அங்கிள்… என்னை விட்டுங்க.. பிளீஸ்..", என்றப்படி.. அவன் கையை கடிக்கப்பார்க்க..


மறுநொடி, மிதிலாவின் கன்னத்தில் ஆதிக்கேசவனின் கை இடியென இறங்கியது….


அவ்வினாடி மிதிலாவின் கன்னம் காது என திகுதிகுவென எரிந்து.. வலிப்பரவியது..


அவளின் கண்களும் இருளத்தொடங்கியது..


காலையில் இருந்து உணவு உண்ணாத களைப்பிலும், அடித்த வேகத்திலும்..  பயத்திலும்.. பலமிழந்த மிதிலா.. மயங்கி சரிய தொடங்கினாள்..


ஹரியோ, தன்னவளின் நிலை அறியாமல். இன்னும் ஸ்கேனிங் ரூமில் தான் இருந்தான்..  


ஹரியின் ஃபோன், அவன் அறையில், ஓயாமல் அடித்தப்படி இருந்தது..


ஆதிகேசவனுடன் வந்தவன் அவனிடம் ஆங்கிலத்தில், "வாட் த ஃப** .. என்ன பண்ற நீ பப்ளிக்ல..  இது கொஞ்சம் கூட சேஃப் இல்லை, போலீஸ் ஸ்மெல் பண்ணா அவ்ளோ தான்", என்று கண்டமேனிக்கு  இரைந்தான்.


எதையும் கண்டுக்கொள்ளாத ஆதிகேசவன், சட்டென்று மிதிலாவை தூக்கித் தன் தோளில் போட்டப்படி, "சீக்கிரம் போகனும் காரை ஸ்டார்ட் பண்ணு..  எனக்கு இவ வேணும்..", என்று காரை நோக்கி நடந்தான்.


எந்த வித தடங்களும்.. எதிர்ப்பும்.. இல்லாமல்.. கார் அழகாக மிதிலாவுடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறியது.


அதைத்தொடர்ந்து, ருத்ரன் மற்றும் சாஹித்யா, எல்லாம் முடித்துவிட்டு.. மகிழ்ச்சியுடன் வெளியே வந்து..  தங்களின் காரில் ஏறி ஹோட்டல் நோக்கி பயணித்தனர்.


********************************





கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻