உண்மை காதல் -23
அத்தியாயம்-23
சில நிமிட பயணத்திற்கு பிறகு..
ஹோட்டல் பேஸ்மென்ட் பார்க்கிங்கில், காரை நிறுத்திய உடன், அங்கிருந்த லிஃப்டின் மூலம் ஆதிகேசவன் பேஸ்மெண்ட்டில் இருந்து நேராக, மிதிலாவை தனது அறைக்கு, யாரும் காணாதவாறு தூக்கி சென்று, அவளை தொப்பென்று கட்டிலில் வீசினான்..
அதேநேரம் அங்கு ஹரி, ஸ்கேனிங் ரூமில் இருந்து பணிகளை முடித்துக்கொண்டு, தனது அறைக்கு வந்தவன், மதிய உணவிற்கு செல்ல, தன் ஃபோனை, கையில் எடுத்து இருந்தான்.
ஆதிகேசவனுக்கு துணையாக வந்தவன்… ஹோட்டலின் பார்க்கிங்கிலேயே கழன்றுக் கொண்டு இருந்தான்.
மெத்தையில் வீசிய நொடியே, அந்த அதிர்வில் மயக்கம் தெளிந்து மிதிலா எழுந்து விட்டாள்..
சுற்றி ஒருப்பார்வை பார்த்தவள், சட்டென்று புரண்டு சென்று, கட்டிலில் இருந்து இறங்கி ஓடப்பார்க்க..
அவளின் கால் பூமியில் படும் முன்பு, அதை ஆதிகேசவன் இறுக்க பற்றி.. தன் பலம் முழுக்க கொடுத்து உடையும் படி அழுத்தி, தூக்கி மீண்டும் கட்டிலின் மீது வீசினான்..
அவ்வலியில் மிதிலாவிற்கு உலகமே இருண்டு போகும் போல் ஆனது..
அதேநேரம் அஹ்ஹோட்டலை வந்தடைந்த ருத்ரன், கீழே ரிசப்ஷனில் சாஹித்யா உடன் உட்கார்ந்து.. டிராவல் பிளான்களை சரி செய்து.. ரிசப்ஷனிலேயே ரூம் புக்கிங்கை எக்ஸ்டெண்ட் செய்வதற்கான.. ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தான்.
தன் நீண்ட நாள் தேடல்…
இங்கு அவன் அப்பாவிடம் சிக்கித் தவிப்பதை… ருத்ரன் அறியாது போனான்.
ஆதிகேசவனின் உடல் முழுக்க கோபம், தாறுமாறாக ஏறிக்கொண்டே சென்றது...
மிதிலாவின் கழுத்தை அழுந்த, வலிக்க பற்றியவன், "ஒழுங்கா மூடிட்டு இருடி.. உனக்கான முடிவு ஸ்பெஷலா இருக்கு.. அன்னைக்கு கார்ல வாங்கனயே பத்தலையா??.. மறந்துட்டயா என்ன.. உங்க அப்பன் ஆத்தா மாதிரி பொட்டுனு உன்ன அனுப்ப மாட்டேன் டி செல்லம்.. நல்லா மல்கோவா மாதிரி முன்னாடி இருந்த.. இப்ப சுத்தமா ஆளே மாறிட்ட.. ஆனா இப்ப இன்னுமே அட்டகாசமா இருக்க..", என்றான் துச்சாதனனின் பார்வையுடன். அவளின் உடல் முழுக்க பார்வையை மேயவிட்டு…
கழுத்தில் இருந்த அவனின் கரத்தை விலக்க போராடித் தோற்ற மிதிலா.. ஆதிகேசவனின் பார்வை சென்ற இடத்தையும், அவனின் முக பாவத்தையும் பார்த்து பதறி, தன் தேகம் நடுங்க…
மாராப்பை இழுத்து விட்டவள்…
தன்னை குறுக்கிக் கொண்டு.. "ப்ளீஸ் அங்கிள்.. என்னை விட்டுடுங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இப்படிலாம் பேசாதீங்க..", என்று வலியில், விடுப்பட முயன்ற வாறே.. அழுது கெஞ்சத் தொடங்கினாள்..
அதிலும், அன்று காரில் என்று ஆதிகேசவன் சொன்னது மிதிலாவை பயங்கரமாய் கலவரப் படுத்தியது.. இதுவரை அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயம்.. அவளின் உடலை அவன் அத்து மீறி தொட முயற்சித்து, முடியாது அவளை நோகச்செய்த கருப்பு பக்கம் அது..
அறை முழுக்க முழுக்க சவுண்ட் புருஃப் என்பதால், மிதிலாவின் கதறல் ஒரு துளிக் கூட அறையை தாண்டவில்லை...
ஆதிகேசவனோ அட்டகாசமாக கேவலமாக சிரித்தப்படி, "தங்கத்துக்கு.. வேற எப்படி பேசுனா புடிக்கும் சொல்லு.. அப்படியே பேசுறேன்.. உன் புருஷன் எப்படி பேசுவான் சொல்லு..", என்றான் வன்மமாக. உடல் முழுக்க சாக்கடை பாயும் பிறவியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.. பெண் என்றாலே அவளின் அங்கங்கள் எப்படி இருக்கும் என்று நினைக்கும் வரிசையில் நிற்பவன் தானே இவன்.
மிதிலாவின் கண்களில் இருந்து, கண்ணீர் ஆறாக பெருகியது.. தன் நிலையை எண்ணி.. அன்றே பெற்றோர் உடனே செத்து மடிந்து இருக்கலாம் என்று அவள் மனம் உள்ளே அழுது கரைந்தது...
துக்கம் தொண்டையை அடைத்தது..
கழுத்தை அழுந்த பற்றி இருப்பதில், பயங்கரமாய் இறுமத்தொடங்கிய மிதிலாவை, ஆதிகேசவன் மீண்டும் பெட்டில் ஆவேசமாக தள்ளி.. "கவலைப்படாத உன்னை ஒன்னும் இன்னைக்கு பெருசா பண்ண மாட்டேன் தங்கம்.. ஒரு பத்து நிமிஷம் இரு.. வந்து உனக்கு சொர்க்கத்தை காட்டறேன்", என்றவன்.. நகர..
நொடியில் மிதிலா, சுதாரித்து, மறுபுறம் இறங்கி தப்பிக்க, கதவை நோக்கி ஓட..
அவளின் புடவை முந்தானையை பற்றி எக்கி ஒரே அடியில் இழுத்த ஆதிக்கேசவன், "அடிங்.. என்கிட்டயேவா....", என்றப்படி, அருகில் ஸ்விட்ச் போர்ட்டில் பிளக்கில் இருந்த ஒயரை பிடுங்கி எடுத்து.. மிதிலாவை பெட்டில் தள்ளி, அவளின் காலை இரண்டையும், சேர்த்து இறுக்க பற்றி கட்டினான்..
மிதிலா எழுந்து தன் காலை இழுத்தப்படி, அவனை கட்ட விடாமல் தடுக்க..
அதில் மேலும் கோபம் அடைந்த ஆதிக்கேசவன், தன் பலம் முழுக்க திரட்டி, ஓங்கி ஒரு அரை மீண்டும் மிதிலாவின் கன்னத்தில் இறக்க.. அவளின் வாயில் இருந்த பற்கள் குத்தி உதட்டின் வழியே உதிரம் வழிந்தது.. காதில் இருந்த ஜிமிக்கி நசுங்கி, காதை புண்ணாக்கி இருந்தது.. கன்னம் ஊதா நிறத்திற்கு நொடியில் மாறிப்போனது..
தலை சுற்றியது, பூப்போன்ற சிறுப்பெண்ணவளுக்கு…
மறுகணம், அவளின் புடவை முந்தானையை ஆதிகேசவன் பற்றி இழுத்துவிட…
அவளின் இதயமே நின்றுவிடும் நிலைக்கு சென்றுவிட்டது..
தன் உடலில் மீதம் இருந்த பலத்தை திரட்டி பதறி, அவள் புடவையை இழுக்க..
ஆதிகேசவனின் கண்கள் காம வெறியில் மின்னியது..
தன் மகனின் வயதை விட, பல வருடங்கள், சிறு பெண்ணை போய், இச்சைக்கொண்டு, அவனின் கரங்கள் தொடப்போக…
அதைப்பார்த்து பதறிய மிதிலா, பட்டென அவனின் கரம் தன்னை தீண்டாத வகையில், தன் மானத்தை காக்க, திரும்பி குப்புற படுத்தவள், தன் உடலை குறுக்கியப்படி அழுது கதறினாள்..
மனதில் ஹரியிடம், "ப்ளீஸ் அம்மூ.. எப்படியாவது வந்து என்னை காப்பாத்துங்க.. ரொம்ப பயமா இருக்கு.. ரொம்ப வலிக்குது.." என்று மன்றாடினாள்.
உலகில் எத்தனையோ தாயையும் சேயையும்.. காப்பாற்றி.. பலரின் மகிழ்ச்சிக்கு காரணமான ஹரியின், மனைவியும்.. மகவும் இன்று காப்பாற்றக் கதியின்றி கிடந்தனர்..
மிதிலாவின் கைகளை, பின்புறம் இருந்து மடக்கிய ஆதிக்கேசவன்.. அவள் வலியில் கத்தக்கத்த, உருவி எடுத்த முந்தானையால் சேர்த்து கட்டி முடித்தான்..
மிதிலாவோ தன் கைகளும், கால்களும் பிணைக்கப்பட்ட நிலையில் எவ்வாறு தப்பிப்பது.. இனி தன் வாழ்க்கை அவ்வளவு தான்.. முடியப் போகிறது என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்..
அங்கிருந்த பிரிட்ஜை திறந்த ஆதிக்கேசவன், அதில் இருந்த மதுபானப் பாட்டில் ஒன்றை எடுத்து, கடகடவென்று தன் தொண்டையில் சரித்தான்..
அது தந்த சுகப்போதையில், மற்றொரு பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு, ஆதிக்கேசவன் மிதிலாவை நெருங்க..
அப்பொழுது அவர்கள் இருந்த அறையின் கதவு ஒருமுறை தட்டப்பட்டுவிட்டு.. பட்டென்று திறக்கப்பட்டது..
ஆதிகேசவன் சுதாரித்து.. யாரென பார்க்க கதவை நோக்கி ஒரு அடி வைக்க..
மறுகணம் ஆதிகேசவன், கீழே தரையில் விழுந்து.. எரிச்சல் தாங்க முடியாமல்.. தன் முகத்தை மூடிக்கொண்டு.... பெருங்குரல் எடுத்து கதறத் தொடங்கினான்..
அவனின் உடல் முழுக்க மின்னல் வேகத்தில் திகுதிகுவென்று தீப்பற்றியது போல் எரிய தொடங்கியது போல் ஆனது.. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
அதில் அப்படியே படுக்கையில் இருந்து புரண்டு திரும்பிய மிதிலா..
ஒரு கையில் சைலன்ஸர் கன்னுடனும்.. மறு கையில் பெப்பர் ஸ்ப்ரே உடனும் நின்று இருந்தவனை பார்த்து.
"அம்மூ" என்று வலியில் முனகினாள்..
கொண்டவனின் துணை போதாதா இனி அவளுக்கு..
ஹரி, மிதிலாவின் உடல் முழுவதையும் வேக வேகமாக கண்களால் ஆராய்ந்து கொண்டே.. "ஆர் யூ ஒகே பேபி", என்றான் பதட்டதுடன்..
மிதிலாவின் கண்களோ மளமளவென நீரை பொழிய தொடங்கியது.. அவள் உடலில் ஒரு இடம் விடாது அல்லவா வலி உள்ளது..
"ப்ளீஸ் பேபி ரிலாக்ஸ்.. டோன்ட் க்ரை டா ப்ளீஸ்.. ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்.. யு ஆர் கம்லீட்லி சேஃப் நவ்.. சரியா.. கொஞ்சம் பொருத்துக்கோ.. நீ அழுதன்னா, அடுத்து என்னன்னு என்னால யோசிக்க முடியாது டா.. ப்ளீஸ் எனக்காக இப்ப அமைதியா இரு..", என்ற ஹரி, தன் ஷூ கால் ஒன்றை ஆதிகேசவனின் கழுத்தில் வைத்து.. நன்றாக அழுத்திக்கொண்டே.. அவன் சட்டையில் ஏதேனும் ஆயுதம் உள்ளதா என்று ஆராய்ந்து விட்டு..
ஆதிகேசவனின் வாயில் தன் துப்பாக்கியை சொருகி.. கையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேவை மீண்டும் ஆதிகேசவனின் முகத்தில் அடித்த ஹரி,
"ஹவ் டேர் யு ஃப**ங் இடியட்..", என்று கெட்ட வார்த்தைகளால் அவனை திட்டத் தொடங்க..
அவ்வறையின் கதவு மீண்டும் வேகமாக திறக்கப்பட்டது..
அந்த சத்தத்தை கேட்டவுடன் ஹரி நொடிப்பொழுதில்.. பாய்ந்து சென்று.. உள்ளே வந்தவனின் நெற்றிப் பொட்டில் கன்னை அழுத்தமாக வைத்தான்..
தன் இருக்கையை மேலே தூக்கிய ருத்ரன் "டாக்டர்.. வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்.. வொய் மீ", என்றான் நெற்றியில் இருந்த துப்பாக்கியின் அழுத்தத்தில்.. அதிர்ச்சியாக..
ருத்ரனின் குரலை கேட்டதும்.. ஆதிகேசவன்.. "டேய் ருத்ரா.. இதுலாம் உன் வேலை தானேடா.. இவளை நீதான்ன காப்பாத்தி இங்க வச்சிருக்க, இவன் யாருடா, என் மேல ஆசிட் வீசிட்டான் டா.. இவனை ஏவி விட்டு வேடிக்கை பாக்கறயா நன்றி கெட்ட நாயே", என கத்தினான் எரிச்சல் தாங்காமல்..
ருத்ரனிடம் இருந்து விலகிய ஹரி, மிகுந்த எரிச்சலுடன், மீண்டும் பெப்பர் ஸ்ப்ரேவை திறந்து, ஆதிக்கேசவனின் உடல் முழுக்க தாறுமாறாக அடித்து.. " யூ ** ***.. ஷட் யுவர் **** மவுத்" என்று கத்தினான்..
ருத்ரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை..
ஆதிக்கேசவன் எதற்கு அமெரிக்கா வந்தான்..
ஹரி எதற்கு ஆதிகேசவனை போட்டு அடிக்கிறான்..
இங்கு என்ன நடக்கின்றது..
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவனுக்கு..
தன் வேதனையை சற்றும் கண்டுகொள்ளாமல், அப்படியே நின்று கொண்டே இருக்கும் ருத்ரனின் மீது, ஆதிகேசவனுக்கு பயங்கர கோபம் வந்தது..
அறை முழுக்க தன் கண்களை சுழலவிட்ட ருத்ரன், அப்பொழுதுதான் கட்டிலில் ஒரு பெண் குப்புற படுத்து இருப்பதை பார்த்தான்...
"டாக்டர், இங்க என்ன நடக்குது.. அந்த பொண்ணு யாரு.. உங்களுக்கும் என் அப்பாக்கும் என்ன சம்மந்தம்..", என..
ஹரி நக்கலாக, "ஹ்ம்ம்.. அவ உங்க அப்பா கிட்நாப் பண்ண பொண்ணு", என்றப்படியே, ரூம் கதவை லாக் செய்தவன்..
அதிர்ந்து நின்ற ருத்ரனிடம் "வெயிட்", என்று விட்டு மிதிலாவை நெருங்கினான்..
மிதிலாவோ ருத்ரன் வந்த நொடி, முந்தானையற்று கிடந்த தன் நிலையில், பதறி.. மீண்டும் திரும்பி படுத்துவிட்டு இருந்தாள்..
மென்மையாக மிதிலாவை பற்றி தூக்கிய ஹரி.. மறுநொடி அவளை தன்னுடன் சேர்த்து இறுக்க அணைத்துக் கொண்டான்..
ஹரியின் இதய துடிப்பும்.. மிதிலாவின் இதய துடிப்பும் இணைந்து ஒலித்தது..
ஹரியின் கண்களில் இருந்து இறங்கிய இரண்டு சொட்டு சூடான நீர், மிதிலாவின் தோள்களை நனைத்தது..
கடந்த 20நிமிடங்கள் ஹரி பட்டப்பாடு எவ்வளவு.. செத்து செத்து பிழைத்து இருந்தானே.. தன் மனைவியின் நிலை அறிய முடியாமல்..
மிதிலாவின் உடலை தன் கைகளால் மெல்ல வருடி.. தன்னவளை முழுவதுமாக உணர்ந்து.. அவளை நிமிர்த்தி.. நெற்றியில் அழுந்த தன் உதடுகளை பதித்தவனின் கரங்கள் முடிவில் மிதிலாவின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.. தன் குழந்தை பத்திரமாக உள்ளதா என்ற கலக்கத்துடன்..
இவ்வளவு நேரமும் யார் இந்த பெண் என்று புரியாது நின்று இருந்த ருத்ரன்.. மிதிலாவின் முகத்தை நிமிர்த்தி, ஹரி முத்தம் வைக்கும்பொழுது தான் தெளிவாக, அவள் முகத்தை பார்த்து இருந்தான்..
பார்த்தவன் ஹை வோல்டேஜ் கரண்ட் ஒயரை மிதித்தது போல் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.
எப்படி பேசவேண்டும் என்றே ருத்ரன் மறந்துவிட்டு இருந்தான்..
மிதிலாவை தன் மார்புடனே வைத்துக்கொண்டு, பின்புறம் அவள் கைகளில் இருந்த கட்டை அவிழ்த்த ஹரியின் கண்கள், அப்பொழுது தான் மிதிலாவின் கன்னத்திலும்.. உதட்டிலும்.. கையில் மணிக்கட்டிலும், கழுத்திலும் இருந்த தடங்களை கண்டது..
அதில் ஹரியின் ரத்த அழுத்தம் சரசரவென அதிகரித்தது..
அப்பொழுதுதான் நிகழ் உலகிற்கு அதிர்ச்சியில் இருந்து திரும்பிய ருத்ரன் "மிதிலா.. மிதிலா தானே", என..
ஹரியின் கையில் இருந்த முந்தானையை பற்றி இழுத்து, தன் மீது போர்த்திக்கொண்ட மிதிலா…
ருத்ரனை நோக்கி, "ஆம்" என்றவாறு மெல்ல தன் தலையை அசைத்தவளுக்கு, கழுத்தில் நல்ல வலி.. அதில் தன் உதட்டை பிதுக்கினாள் அழுகையுடன்.....
அப்பொழுது ஆதிகேசவன் ஆக்ரோஷமாக கத்தியப்படியே, கட்டில் புறம் தட்டு தடுமாறி வர தொடங்க…
அதைப்பார்த்த மிதிலாவின் உடல் கிடுகிடுவென நடுங்க தொடங்கியது..
ருத்ரன், இதுநாள் வரை அடங்கி இருந்ததற்கு ஒரே காரணம், மிதிலா..
இன்று அவளே கிடைத்தப் பிறகு வேறென்ன வேண்டும்.. அதைவிட அமெரிக்கா வரை வந்து, மீண்டும் அவளை ஆதிகேசவன் கடத்தி உள்ளானா…
நேற்றிலிருந்து ஆதிக்கேசவன் மீது பயங்கர கோபத்தில் இருந்த ருத்ரன்.. இன்று இன்னும் அதிகமாக வெறி ஆகிப்போனான்..
திரும்பியவன், மறுகணம்.. "வாய மூடு.. மூடுன்னு சொல்றேன் இல்ல.." என்றப்படி, ஆதிகேசவனை பிடித்து கீழே தள்ளி, வெறிபிடித்தவனாய் அவன் வாயில் மிதித்து மிதித்தே… மொத்த பற்களையும் உடைத்து எடுத்தான்…
அதில் மேலும் ஆதிக்கேசவன் கத்த..
பயந்த மிதிலா, ஹரியை அணைத்துக்கொண்டு.. "இங்க வேணாம் அம்மூ.. நாம போயிடலாம் ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு போயிடலாம் போயிடலாம்.. ", என கெஞ்ச தொடங்கினாள்..
அவளை பொறுத்தவரை ஆதிகேசவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.. அதைவிட அவன் ஹரியை ஏதாவது செய்து விடுவானோ என்று வேறு பயந்தாள்..
அவளின் 17 வயதில் ஆரம்பித்தது இப்பயம்… தன் மொத்த குடும்பத்தையும் காவு வாங்கிய எமனை.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமோ.. எதிர்க்க முடியும் என்று எண்ணும் அளவிற்கான மனமுதிர்ச்சியோ, அவளுக்கு இல்லை..
மிதிலாவின் உதட்டோரம் கசிந்து இருந்த இரத்தத்தை மெல்ல துடைத்தெடுத்த ஹரிக்கு.. அவளின் பால் வண்ண கன்னம் வரிவரியாக வீங்கி இருப்பதை காணவே முடியாது போனது… பூப்போல் பெண்களை பூஜிப்பவனின், மனைவியையோ ஒருவன் அடித்து நோக செய்துவிட்டானே..
அந்நொடி அவனுள் ஆதிக்கேசவன், ஏழை பெண்களை தனக்கு ஏற்ப போதைப்பொருட்கள் கொடுத்து உபயோகப்பதும். உடன் மித்ரா, வயிற்றில் மகிழ்மதியை வைத்து அனுபவித்ததும் ஞாபகம் வந்தது..
"ஒரு நிமிஷம் டா.. பயப்படாத.. இதோ வந்துடறேன்..", என அவளை விலக்கிவிட்டு எழுந்து சென்ற ஹரி..
ருத்ரனை பிடித்து தடுத்து, "இவனை நான் பார்க்கிறேன், நீங்க மிதிலாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க", என…
ருத்ரன், "டாக்டர் நீங்க.. மிதிலாவ உங்களுக்கு எப்படி தெரியும்" என ஆரம்பிக்க..
ஹரி, "மிதிலா கிட்ட கேளுங்க ருத்ரன் சொல்லுவா… இவனுக்கு சில தனி கவனிப்பு இருக்கு… நீங்க அடிச்சா உடனே செத்துடுவான் போல..", என்றவன்.. தரதரவென ஆதிகேசவனை அந்த அறைக்கு உள்பக்கம் இருந்த உடைமாற்றும் அறைக்கு இழுத்துச்சென்று.. அங்கிருந்த பாத்ரூமினுள் இழுத்துச்சென்று அடைத்தான்..
ஏற்கனவே ருத்ரன் அடித்ததில் பாதி உயிராய் இருந்த ஆதிகேசவனின்.. உடல் முழுக்க ஹரியால் கவனிக்கப்பட்டது..
அதில் அவன் உடல் முழுக்க ரத்தம் கசிந்த வண்ணமும்.. காயங்கள் கன்றியும் என மாறிப்போனது..
தேக்கு மரம் போல் உறுதியாக இருந்தவன்.. ஹரியின் ஆண்மை பலத்தின் முன்பு பலமிழந்து மயங்கி சரிந்தான்..
விட்டுவிடுவானா ஹரி, அருகில் இருந்த பாத் டப் முழுக்க கொதி நீர் குழாயை திறந்துவிட்டு நிரப்ப தொடங்கினான்..
அடுத்த சில நிமிடங்களில், அக்கொதி நீரில் ஆதிகேசவனை தூக்கி ஹரி வீசினான்..
உடல் எங்கும் பரவிய சூட்டில் ஆதிகேசவனின் மயக்கம் பட்டென்று கலைந்தது..
அவனின் உடலில் உங்க அங்கங்கள் அனைத்தும் எரிந்தது..
புழுவாய் துடித்தவன்.. எப்படியோ வெளியே வந்து விழுந்து.. மீண்டும் மயக்க மடைந்தான்..
அங்கிருந்த பாத்ரோப் மற்றும் டவலை எடுத்து, அவனின் கையையும் காலையும் கட்டிப்போட்ட ஹரி… கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தான்….
இங்கு ருத்ரன் மிதிலாவிடம்.... தொடர்ந்து தன் கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டு இருந்தான்…
மிதிலாவோ, ருத்ரன் சொன்ன தகவலை கேட்ட கணமே, இன்பத்தில் மாய லோகத்திற்கு சென்று விட்டாள்..
அவளின் உடல் வலி அனைத்தும் கூட இன்பத்தில் மரத்துப்போனது.. ஒன்றும் உரைக்கவில்லை..
ருத்ரனிற்கோ பல சந்தேகங்கள்.. மிதிலா வாயை திறந்தால் தானே..
அவளின் காலின் கட்டை அவிழ்த்து விட்டுக்கொண்டே ருத்ரன்… " மிதுமா சொல்லுடா.. உனக்கும் டாக்டர் ஹரி கிருஷ்ணாவுக்கும், எப்படி பழக்கம்.. எப்படி இங்க வந்த டா, சமியோட பேபி எங்க… ", என்று நூறாவது முறையாக, கேட்டுக்கொண்டு இருந்தான்…
மிதிலாவின் கழுத்தில் இருந்த தாலியை இன்னும் ருத்ரன் கவனித்து இருக்க கவனிக்கவில்லை…
"ஷி ஈஸ் மை கேர்ள்.. மிதிலா ஹரிகிருஷ்ணா", என்றான் வெளிவந்த ஹரி அழுத்தமாக...
பின்புறம் இருந்து வந்த குரல் சொன்ன செய்தியில் அதிர்ந்த ருத்ரன், திரும்பி, "வாட்… மிதிலாக்கு கல்யாணம் ஆகிடுச்சா… ஓ மை காட்.. எப்படி… சமியோட பேபி எங்க இப்போ… ," என அவன் மீண்டும் ஆரம்பிக்கும் போதே அவனுடைய ஃபோன் ஒலிக்கத் தொடங்கியது..
சாஹித்யா தான் ஃபோனில்..
சென்ற ருத்ரனை நீண்ட நேரமாக காணாமல் அழைத்து இருந்தாள்..
அதைப்பார்த்த ருத்ரன் "ஒன் மினிட்", என்றவன்..
வெளியில் ரூம் நம்பரை பார்த்து, சாஹித்யாவிடம் சொலலி வரச் சொல்லிவிட்டு வைத்தான்..
உள்ளே ஹரியின் அணைப்பில் இருந்த மிதிலா, ருத்ரன் உள்ளே வந்ததும்..
அவனிடம் "நீங்க சொன்னது உண்மையா.. " என்று தன் வாயை முதல்முறை ருத்ரனிடம் திறந்தாள்…
மிதிலா கேட்ட கேள்விக்கு ருத்ரன் அளித்த பதில், ஹரியையும் அதிர்ச்சியடைய செய்தது..
அவனுக்கும் அதில் பெரும் மகிழ்ச்சி தான்..
2 நிமிடத்தில் சாஹித்யா அவர்கள் இருந்த அறைக்கு வந்து விட்டாள்…
மிதிலாவை ருத்ரன், அவளுக்கு அறிமுகம் செய்ய, சாஹித்யா ஒருபுறம் அதிர்ச்சி அடைய என.. ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு அதிர்ச்சி ஆகிக் கொண்டே இருந்தனர்.
ஒரு வழியாய் அனைவரும் தங்களின் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து..
அடுத்து என்ன?, என ஒன்றாக பேசி, அடுத்த ஒரு மணி நேரத்தில், முடிவு எடுத்து.…
மிதிலாவை சாஹித்யாவுடன், ருத்ரன் இருந்த அறையில் விட்டுவிட்டு.. ருத்ரனும் ஹரியும், ஆதிகேசவனை அள்ளிக்கொண்டு கிளம்பினர்..
போகும் முன்பு ஹரி சாஹித்யாவின் காதில், மிதிலா அறியாது ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பினான்..
அதில் சாஹித்யாவின் கண்கள் லேசாய் குறும்பில் துடித்தது..
ஆதிகேசவனின் இறுதி யாத்திரை பயணம் அமோகமாய் ஹரியின் காரில், தொடங்கியது..
மதியம் மருத்துவமனையில், ஸ்கேனிங் ரூமில் இருந்து வெளியே வந்த ஹரி, அவன் அறைக்குள் உள்ளே வந்ததும்.. அவன் மொபைல் ரிங் ஆகிக்கொண்டே இருந்ததை பார்த்து அதை எடுத்து பார்த்தான்..
அது, மிதிலா தன் கையில் கட்டி இருந்த Apple watch-லிருந்து வந்த எமர்ஜன்ஸி கால் தான்...
திருமணத்தன்று மிதிலாவின் கையில் ஹரி பரிசாக கட்டிவிட்டு இருந்த அந்த ஸ்மார்ட் வாட்ச்.. தொடர்ந்து மிதிலாவின் இதயத்துடிப்பை.. எப்பொழுதும் ரெக்கார்ட் செய்து கொண்டே இருக்கும்..
நார்மல் லெவலை விட BP-அளவுக்கு மீறினாலும் சரி(High BP).. குறைந்தாலும் சரி(Low BP)..
உடனே அவளின் உடல் நிலைக்கு அல்லது அவளுக்கு ஏதோ ஒரு ஆபத்து என்று புரிந்து கொண்டு.. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த எண்களுக்கு.. ஆட்டோமேட்டிக்காக எமர்ஜென்சி மெசேஜை மற்றும் கால்லை அனுப்பிக்கொண்டே இருக்கும்..
அதைப்பார்த்ததும் தான் ஹரி பதறி, மிதிலாவின் மொபைலுக்கு ஃபோன் செய்துகொண்டே.. வெளியே ஓடி வந்தான்.
மிதிலா எடுக்கவில்லை என்றதும்.. வீட்டில் தானே இருக்கின்றாள்.. என்று அன்னபூரணிக்கு அழைத்தான்.
மனதில் மிதிலாவுக்கு ஒருவேளை கருக்கலைந்து விட்டதா, அதனால் தான் இரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதோ, என்று நினைத்தான்.
அழைப்பை ஏற்ற அன்னபூரணி, மிதிலா ஹாஸ்பிட்டலுக்கு வந்துள்ளதாக கூற.. சரியென்று ஹரி, பட்டென அவரின் கால்-லை கட் செய்துவிட்டு..
மிதிலா இருக்கும் இடத்தை அவன் ஃபோனில் லோட் செய்து கொண்டே.. பார்க்கிங்கிற்கு ஓடிவந்தான்..
அப்பொழுது ஹரியின் கண்ணில், வெளியே நடைபாதையில் இருந்த, லஞ்ச்பேக், ஃபோன் மற்றும் கார் கீ விழ.. ஓடிச்சென்று பார்த்தவன், அது மிதிலாவுடையது என்று அறிந்து, அதிர்ச்சிக்கொள்ள..
அதற்குள், அவன் ஃபோனிலும் மிதிலா இருக்கும் லொகேஷன் லோட் ஆகிவிட்டு, சத்தம் எழுப்பியது..
அது, அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் ஹோட்டலின் அட்ரஸை காட்டியது.
ஏன் மிதிலா அங்கு சென்றிருக்க வேண்டும்.. ஒருவேளை ருத்ரன் அழைத்துச்சென்று இருப்பானோ.. இருந்தாலும்.. எதற்காக பொருள்கள் அனைத்தையும் கீழே தவற விட்டிருக்க வேண்டும்.. ஏதோ ஆபத்து என்று அவன் மனம் விரைவாக சிந்திக்கத் தொடங்கியது.
ஞாபகம் வந்தவனாக திரும்பி ஹாஸ்பிட்டலுக்குள் ஓடிச்சென்று, ரிஷப்ஷனில் இருந்த கம்ப்யூட்டரின் மானிட்டரை திருப்பி.. அதிலிருந்த நடைப்பாதையின் சிசிடிவி ஃபுடேஜை பேக்வேர்ட்(Backward) செய்து விரைவாக பார்த்தான்.
அதில் தெளிவாக ஆதிகேசவன் வந்தது.. ஏதோ பேசியது.. மிதிலா மயங்கி விழுந்ததும்.. அவளை அவன் தூக்கி சென்றது.. என்று அனைத்துமே அதில் பதிவாகி இருந்தது.
அதில் ஹரியின் இதயம் படபடவென அடித்து கொண்டது.. இப்படி நடக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை.. ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று விரைந்து.. ஹரி கிளம்பி இருந்தான்.. இதோ அவன் மனைவியையும் காப்பாற்றிவிட்டு இருந்தான்.
மருத்துவ உடையில், ஹோட்டலிற்குள் ஓடிவரும் ஹரியை.. தங்களின் ரூமிற்கு செல்வதற்கான லிஃப்டின் முன்பு நின்று இருந்த.. ருத்ரனும் சாஹித்யாவும் பார்த்துவிட்டு இருந்தனர்.
ஹரி பதட்டமாக ஓடுவதை பார்த்து.. யாருக்கோ ஏதோ உடலுக்கு ஆபத்து என்று யோசித்து.. உதவி செய்ய ருத்ரனும் ஹரியை பின்தொடர்ந்து ஓடிவந்து இருந்தான்
ருத்ரனாலேயே ஹரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை.. ஹரி மின்னல் வேகத்தில், நான்கைந்து படிகளை, ஒரே நேரத்தில் கடந்து ஓடி முன்னேறி இருந்தான்.
முடிந்தளவு விரைவாக ருத்ரனும் ஹரியை பின்தொடர்ந்து வந்துப்பார்க்க.. இதோ மிதிலாவை பார்த்துவிட்டு இருந்தான்.
சாஹித்யா, ஹரி சொல்லிவிட்டு சென்றதால்.. முதலில் நல்ல ஆரோக்கியமான உணவை ஃபோனில் ஆர்டர் செய்துவிட்டு..
அறையில் இருந்த முதல் உதவி பெட்டியில் இருந்த மருந்தை பொறுமையாக மிதிலாவின் கன்னம், கழுத்து, கை, கால், காது என்று தடவிவிட்டு.. அவளின் கன்னத்திற்கு ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள்..
மிதிலாவோ சிறு பிள்ளைகள் கீழே விழுந்து வாரி.. அன்னை முகம் கண்டதும் அனைத்தையும் மறந்து.. வேறு விளையாட தொடங்குமே.. அதுப்போலே அத்தனை வலியிலும் சிரித்துக்கொண்டே இருந்தாள்..
அறைக்கு உணவு வந்துவிட.. சாஹித்யா மிதிலாவை உண்ண வைத்து, அவளை படுத்து ஓய்வெடுக்க சொல்ல..
மிதிலாவோ, சாஹித்யாவை நச்சரிக்கத் தொடங்கியனாள்..
வேறுவழியின்றி சாஹித்தியா, திருச்சியில் நடந்தவற்றை, மேம்போக்காக அவள் மனதை அதிகம் பாதிக்காத வகையில், கூற ஆரம்பித்தாள்..
ஹரி, மிதிலா மாசமாக உள்ளதாக, அவளிடம் கிளம்பும் முன்பு, கூறி இருந்தான்.
அதே நேரம் அங்கு, காரில் சென்று கொண்டிருந்த ருத்ரனும், ஹரியிடம் நடந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்..
அன்று திருச்சியில்
மிதிலாவும், குமுதமும் தெருவில் கேட் திறந்து.. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும்.. குழந்தையுடன் தோட்டத்தின் வழியே ஓடி தப்பிச்சென்றனரே.. அப்பொழுது வந்து இருந்தது ருத்ரன் தான்.
ஆதிகேசவனின் ஆட்கள் இல்லை..
ஆதிகேசவன், மித்ரா காணாமல் போன மறுதினம்.. விஷ்ணுவின் வீட்டிற்கு வந்து.. மிதிலாவை அவன் வீட்டிற்கு இழுத்து சென்ற பொழுது.. விஷ்ணு ஒரு அடி ஆளிடம் கேட்டு.. ஃபோன் வாங்கி ருத்ரனுக்கு அழைத்து விஷயத்தை கூறினாரே.. அதே அடி ஆள் தான்.. அன்று விஷ்ணு குடும்பத்தின் நிலையையும், மித்ராவின் நிலையையும்.. கண்கொண்டு பார்க்க முடியாமல் ருத்ரனிற்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டு இருந்தான்.
ருத்ரன் தன் கெஸ்ட் ஹவுஸில் இருந்ததால் மித்ராவின் வீட்டை.. அவனால் விரைந்து அடைய முடியவில்லை..
அதைவிட ருத்ரன் எது சொன்னாலும் ஆதிகேசவன் நிச்சயம் இன்னும் அதிகமாக தான் செய்வான்..
எனவே யோசித்து தான், டிவியில் இருந்து ஆட்களும்.. போலீஸும் வருகின்றார்கள்.. என்று அவனை சொல்லச் சொன்னான்..
மறுவினாடியே, அவன் எதிர்ப்பார்த்தப்போல், ஆதிகேசவன் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டான்.
ஆனால் ருத்ரன் அவர்களின் வீட்டை அடைவதற்குள், குழந்தையே பிறந்து.. அனைத்தும் முடிந்துவிட்டு இருந்தது..
ருத்ரன் உடன் சாஹித்யாவும், மேலும் அவனின் இரண்டு ஆட்களும் என்று, அந்நான்கு பேரும் விஷ்ணு வீட்டினுள் ஓடி வந்தனர்..
முதலில் அவர்கள் கண்ணில் பட்டது கூடத்தில் கீழே கிடந்த மித்ராவும்.. அவளின் மீது இருந்த பிரித்திவ்வும் தான்..
ருத்ரன் விரைந்து நெருங்கினான்.. மித்ரா இருந்த நிலையை பார்க்க மிகுந்த மனத்தைரியம் வேண்டும் யாராக இருந்தாலும்..
அவள் மீது காதல் கொண்டிருந்த ருத்ரனின் மனமோ, அவளை சுற்றி படர்ந்திருந்த, குருதியை பார்த்ததும்.. வேதனையில் அழுந்த பிசையப்பட்டது.. அவனின் இதயத்திலிருந்து குருதி கசியத்தொடங்கியது….
அந்த திடகாத்திரமான ஆண்மகனின் உடல் முழுவதும் அக்கணம் தன் பலத்தை இழந்தது..
உடலில் இருந்த பலம், அவனின் மென் இதயத்திற்கு இல்லையே…
மண்டியிட்டான், தன் மொத்த உடலும் பதற..
மறுகணம் அவனை மீறி, அவளை வாரி தன் நெஞ்சுடன் அணைத்தவன், அவளின் வலி தாங்காது, "சமி.. சமி..", என கதறி அழ ஆரம்பித்து விட்டான்..
பெண்ணவளின் பிரசவ வேதனையையும்.. மாற்றத்தையும் கண்டு.. அருவருப்புடன் தள்ளிவிட்ட ஆதிகேசவனின் புத்திரனோ… அவளின் அக்குருதியின் மீதே விழுந்து கதறினான்..
என்றும் எந்நிலையிலும் ஒருவரின் உண்மை நேசம் சாகாது தானே…
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. நொடியில் மித்ராவின் மீது தோன்றிய ருத்ரனின் நேசம்.. எதற்காக இல்லாமல் போக வேண்டும்..
மித்ரா எங்கோ தன்னை பிடிக்காமல்.. ஓடி… மறைந்து.. தன்னால் வேதனையில் வாழ்கின்றாள் என்று அனுதினமும் ருத்ரன் வேதனையில் வாடினான்.....
அதிலும் 21 வயதில்… கல்லூரி படிப்பை கூட முடிக்காத வயது பெண் காணவில்லை… யாராவது அவளை ஏதாவது செய்து இருந்தால்.. என்ற பல எண்ணங்கள் தோன்றி தோன்றி.. ருத்ரனுக்கு தினமும் நரகத்தை அந்த ஒருவருடம் முழுக்க காட்டி இருந்தது..
ஆனால் மித்ரா திருமணம் செய்துக்கொண்டு.. அதுவும் வயிற்றில் பிள்ளையுடன் வாழ்ந்து இருப்பாள்.. என்பதை ருத்ரன் நினைத்தும் பார்த்ததில்லை..
கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் கூட, ருத்ரன் குற்ற உணர்வில், தன் மனைவியுடன் வாழக்கூட ஆரம்பித்து இருக்கவில்லை.
இப்பொழுதோ, மீண்டும் தன்னால் அவளுக்கு ஏற்பட்ட இந்த கொடுமை… பூமியில் பிறந்த எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடுமை..
சாஹித்யாவும் மித்ராவின் நிலையையும்.. மற்றவர்களின் தோற்றத்தையும் பார்த்து சிலையாகி விட்டாள்..
ருத்ரனுடன் வந்திருந்த இரண்டு ஆட்களும்.. விஷ்ணுவையும் துளசியையும் பரிசோதித்து பார்த்து விட்டு.. "ஐயா இவங்க ரெண்டு பேருக்கும் உயிர் இருக்குதுங்க ஐயா.. பெரிய சேதம் இருக்கிற மாதிரி தெரியல.. இந்த அம்மாவுக்கு நெற்றியில் இருந்து கொஞ்சம் அதிகமா.. ரத்தம் போயிருக்கும் போல.. சீக்கிரம் வாங்க கிளம்பலாம் ஹாஸ்பிடலுக்கு..", என..
அப்பொழுதும் ருத்ரன் தன்னை மறந்த ஜட நிலையில் தான் இருந்தான்... அவன் மூளை உறைந்துவிட்டு இருந்தது...
உடனே சுதாரித்த சாஹித்யா குனிந்து.. மித்ரா மற்றும் பிரித்திவ்வின் மூக்கில் தன் விரலை வைத்து பார்த்துவிட்டு.. விரைந்து அவர்களின் மணிக்கட்டையும் பிடித்து பார்த்தாள்..
சுவாசமும், நாடித்துடிப்பும் இருந்தது..
ருத்ரனின்.. மனநிலையை புரிந்து கொண்டு.. சாஹித்யா தன்னை நிதானப்படுத்திக்கொண்டு.. சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்..
விரைந்து விஷ்ணு, துளசி மற்றும் பிரித்திவ்வை ஆட்கள் மூலம் காரில் ஏற்றினாள்..
அடுத்து ருத்ரனை பிடித்து உலுக்கி.. நகர்த்திவிட்டு.. மித்ராவை ஆட்களை தூக்க சொன்னாள்..
மித்ராவை ஆட்கள் தூக்கும் போது தன் நினைவுக்கு திரும்பிய ருத்ரன்.. அவர்களை தடுத்துவிட்டு.. மித்ராவை அவனே தன் கரங்களில் ஏந்திய படி.. காரில் ஏறி.. தன் மடியிலேயே அவளை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்..
அதேநேரம்.. ஆதிகேசவன் மீண்டும் மிதிலாவின் வீட்டை கொளுத்த அனுப்பிய ஆட்கள், அங்கு வந்து சேர்ந்தனர்..
ருத்ரனின் காரைப் பார்த்ததும் அதில் இருந்த ஆட்கள் ருத்ரனிடம் ஓடி வந்தனர்..
ருத்ரனின் காரில் இருந்த அனைவரையும் பார்த்துவிட்டு.. வந்த ஆட்கள்.. ஆதிகேசவன் அனைவரையும் போட்டு கொளுத்த சொன்னதை கூற.
ருத்ரன், தன் ஆள் ஒருவனை அவர்களுடன் விட்டு விட்டு.. அடுத்து செய்ய வேண்டியதை விரைவாக சொல்லி.. மற்றவரையும் மிரட்டிவிட்டு புறப்பட்டு விட்டான்..
காரில் செல்லும் பொழுது தான் மிதிலா மற்றும் மித்ராவின் குழந்தையை காணவில்லை என்பதையே உணர்ந்தனர்.. மீண்டும் ருத்ரன் தன் ஆளிற்கு ஃபோன் செய்து வீடு முழுக்க மிதிலாவை தேடச் சொன்னான்..
அந்த ஆளோ, வீடு முழுக்க அலசி ஆராய்ந்து விட்டு..
ருத்ரனிற்கு ஃபோன் செய்து.. யாரும் வீட்டில் இல்லை என்றும்.. தோட்டத்தில் உள்ள ஒரு சிறு கதவு திறந்துள்ளதாகவும்.. கூறினான்..
ருத்ரன் நன்றாக மீண்டும் வீடு முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு.. ஆதிகேசவன் சொன்னதை செய்ய சொல்லிவிட்டு வைத்தான்..
சாஹித்யாவின் நெருங்கிய தோழி ஒருத்தியின்.. மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியுள்ள மருத்துவமனையில்.. திருச்சியிலேயே அனைவரையும் அனுமதித்தனர்..
துளசிக்கு நெற்றியில் மட்டும் அடிப்பட்டு ரத்தம் போய் இருந்தது.. மற்றபடி அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து.. வலி தாங்காமல் தான் மயங்கி இருந்தார்..
அடுத்து விஷ்ணுவிற்கு சில இடங்களில் உடலில் எலும்பு முறிவுகள் இருந்தது.. அனைத்திற்கும் விரைவாக மருத்துவம் பார்த்தனர்..
மித்ராவிற்கு சுகப்பிரசவம் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து இருந்தது.. ஆனால் சுகாதாரம் அற்ற நிலையில் பிரசவம் பார்த்ததால்.. அவளுக்கு கர்ப்பப்பை மற்றும் சில உறுப்புகளில் நோய்த்தொற்று(infection) ஆகியிருந்தது..
அதனைத்தொடர்ந்து அவளுக்கு.. பிரசவ ஜன்னியும் ஆரம்பித்து இருந்தது.. அதற்கும் தகுந்த சிகிச்சைகள் அனைத்தும் ஆரம்பித்தனர்..
அடுத்து பிரித்திவ்.. அவசரப்பிரிவில் அவனை பார்த்துவிட்டு.. விரைந்து அவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர்..
ஆதிக்கேசவன்.. பிரித்திவ்வை பின் மண்டையில் பலமாக அடித்து இருந்ததால்.. அங்குள்ள சில ரத்த நாளங்கள் பிரித்திவ்விற்கு சேதமடைந்து.. அதிலிருந்து ரத்தம் கசிய தொடங்கி இருந்தது....
நேரம் ஆக ஆக கசிந்த ரத்தங்கள் உறைந்து கட்டிகளாக மாறி.. அந்த ரத்த நாளங்கள் வழியாக பயணித்து.. வெவ்வேறு உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக்குழாய்களை அக்கட்டிகள் அடைக்கத்தொடங்கிவிட்டு வேறு இருந்தது..
இருந்ததிலேயே அவனின் நிலை தான் மோசமான நிலை.
மறுதினம் காலையிலேயே, விஷ்ணு, துளசி மற்றும் மித்ரா கண்விழித்து விட்டனர்…
ஆனால் பிரித்திவ் கண்விழிக்கவில்லை..
எவ்வளவு முயன்றும்.. சில ரத்தக்கட்டிகள் அபாயகரமான இடங்களுக்கு சென்று விட்டதால்…அவற்றை அகற்ற முடியாமல் போனது..
பிரித்திவ்விற்கு நினைவு திரும்பவில்லை… கோமா ஸ்டேஜிற்கு சென்றுவிட்டு இருந்தான்..
இதனால், குமுதம் வந்ததும்.. பிரித்திவ் மித்ராவிற்கு பிரசவம் பார்த்ததும்.. குழந்தை பிறந்ததும்… மிதுன் ஜார்ஜ் பேசியதும்… மிதிலா மற்றும் குழந்தையை குமுதம் அழைத்துச்சென்றதும்.. பிரித்திவ் தவிர யாருக்கும், தெரியாது போனது..
ருத்ரன் தனது ஆட்களை அனுப்பி, திருச்சி முழுக்க மிதிலாவை தேடச்சொன்னான்..
மறுநாள் காலை நியூஸில் மீண்டும் மிதிலாவின் மீது ஆதிகேசவன் சுமத்திய பழியை பார்த்து, ஆத்திரம் அடைந்த ருத்ரன்… வீட்டிற்கு விரைந்து சென்று ஆதிக்கேசவனை போட்டு புரட்டி எடுத்து விட்டான்…
பிறகே ஆதிகேசவன் மிதிலாவை வைத்தே, ருத்ரனை தடுத்து நிறுத்தி இருந்தான்..
ருத்ரனும் ஒரு வேலை மிதிலா ஆதிக்கேசவனிடம் மாட்டி இருந்தாலோ.. அல்லது இனி மாட்டினாலோ என்னச் செய்வது என்றே அமைதியானான்..
நினைவு திரும்பிய மித்ராவின் வேதனையை சொல்லில் வடிக்க இயலாது… பத்து மாதம் சுமந்த குழந்தையின் நிலை அறியாது… தாலி கட்டிய தன் அன்பு கணவன் நினைவுகள் வராமல் இருக்கும் நிலை.. என அவளை வேருடன் சாய்த்தது..
தன் பாரம் இறங்கிய வயிற்றை பிடித்துக்கொண்டு, பால் ஊறிய மார்புடன், கதறி கதறி அழுதாள்..
மிதிலா எங்கே என மித்ராவிற்கு தெரியும் என்றே ருத்ரன் நினைத்தான்.. அவள் மயங்கிய நிலையில் பிரசவித்து இருப்பாள் என்று அறியவில்லை..
விஷ்ணு துளசியின் நிலையும் அது தான்..
அதைவிட பரண் மேல் இருந்த மிதிலா ஒருவேலை பயத்தில் கீழே இறங்காது.. அங்கேயே இருந்து எரிந்து விட்டு இருந்து இருந்தால், என அவர்கள் பதற..
ருத்ரன் தான் கண்டிப்பாக இல்லை, அவ்விடத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது.. எந்த எலும்பு துண்டுகளும் இல்லை என சமாதானம் செய்தான்.
வெளி உலக அறிவு சுத்தமாக இல்லாத மிதிலா எங்கே சென்றாள்.. பிறந்த குழந்தை எங்கே… குழந்தை உயிருடன் உள்ளதா.. என்ன ஆனது.. தங்களுக்கு உதவி செய்த பிரித்திவ்வின் இன்றைய நிலை.. மித்ராவின் இழப்பு..
என அவர்களின் உலகமே இருளில் மூழ்கியது..
இவர்களுக்கே இப்படி என்றால்… பச்சை பிள்ளையுடன்.. பெற்றோர், சகோதரி அனைவரையும் கண்முன்னே பறிகொடுத்த மிதிலா, எந்தளவு மன வேதனை அடைந்து இருப்பாள்..
ஹரி மட்டும் இன்று மிதிலாவின் வாழ்வில் வராமல் இருந்து இருந்தால்.. இன்னும் அதிக மன அழுத்தத்தில் இருந்து இருப்பாள்..
மறுநாள் செய்தியைப்பார்த்து.. மிதுன்.. மிதிலா.. குமுதம் அனைவரும் விஷ்ணு குடும்பம் தீக்கு இரையாகிவிட்டனர்.. ஆதிகேசவனால் என்றே நினைத்தனர்..
ருத்ரன் ஆதிகேசவனுக்கு எதுவும் தெரியாமல் எப்படியோ பார்த்துக்கொண்டான்..
ஆட்களின் மூலம், சுடுகாட்டில் இருந்த மனித எலும்புகளை அவ்வெரிந்த வீட்டில் அங்காங்கே வைத்தவன்..
தடயவியல் நிபுணர்கள் அனைவரையும், பணத்தால் அடித்து சரி கட்டினான். நம்மூரில் பணம், பதவி படைத்தவர்களால் முடியாது ஏதும் உண்டா என்ன..
மிதிலா மற்றும் குழந்தையை, மும்பை ரெயில்வே ஸ்டேஷனில் மிதுன் ஜார்ஜிடம் ஒப்படைத்த, ஆறுமுகம் மற்றும் குமுதம், அதே இரயிலில் திருச்சிக்கு திரும்பி.. விஷ்ணு வீட்டின் நிலையையும், மிதிலா மீது சுமத்தப்பட்ட பழியிலும் பயந்து போய் திருச்சியை விட்டே, தங்களின் மூன்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்..
ருத்ரன், கேரளாவில் கொச்சினில் உள்ள.. மிகப்பெரிய 'லேக் ஷோர்' என்ற மருத்துவமனைக்கு.. பிரித்திவ்வையும், மிதிலா குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் பாதுகாப்பாக மாற்றினான்..
கடந்த ஒரு வருடமாக விஷ்ணு குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் தான் உள்ளனர். அங்கேயே குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தங்கும் வகையிலான ரூமை(சூட் வகை) ருத்ரன் புக் செய்து இருந்தான்.
அந்த மருத்துவமனை மிகவும் வசதி வாய்ந்தவர்கள் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனை.. பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இடம்.. யாராலும் யாரைப் பற்றிய தகவல்களையும் அறியவும் முடியாது.. யாரையும் நெருங்கவும் முடியாது..
சுற்றிலும் துப்பாக்கியுடன் நிறைய செக்யூரிட்டிகள் அலைந்து கொண்டே இருப்பார்கள்..
கோடிக்கணக்கில் காசை ருத்ரன் தொடர்ந்து செலவழித்து.. விஷ்ணுவின் குடும்பத்தை பாதுகாப்பாக அங்கு வைத்து இன்றுவரை பார்த்துக் கொண்டு இருக்கிறான்..
இதனால் பணப்பற்றாக்குறை அவனுக்கு நிறைய வந்தது.. அவர்களுக்காகவே இரும்பு தொழிற்சாலையில் இன்னும் அதிகமாக உழைக்க தொடங்கினான்..
அனைத்தையும் புரிந்துக்கொண்டு ருத்ரனிற்கு ஆதரவாக சாஹித்யா இருந்தாள்.. அவளிடம் இருந்த அனைத்தையும் ருத்ரனுக்கு கொடுத்து.. தன் உழைப்பையும் முழுக்க போட்டாள்.
செலவை பற்றி ருத்ரன் கொஞ்சமும் யோசிக்க வில்லை.. பிரித்திவ் மீண்டு வந்து மித்ராவுடன் வாழ்ந்தால் போதும் அவனுக்கு..
பிரித்திவ்விற்கு கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது… நல்ல திடகாத்திரமான இளம்வயது ஆண்மகன் என்பதால்.. அவன் உடல் நல்ல ஒத்துழைப்பை சிகிச்சைக்கு கொடுத்துக்கொண்டு வருகிறது..
நாளுக்கு நாள் குறைந்தது கடுகளவு மாற்றமாவது அவனில் வந்துக்கொண்டு தான் இருந்தது..
மித்ராவின், மனதில் ருத்ரனை பற்றிய அபிப்பிராயம் முற்றிலும் இந்த ஒரு வருடத்தில் மாறி இருந்தது..
மிதுன் ஜார்ஜ், ஆதித்யன், குமுதம், ஆறுமுகம், பெயர் தெரியாத அடியாள்.. போன்ற சில நல்ல உள்ளங்களால் மட்டுமே இன்று விஷ்ணு குடும்பம் உயிருடன் உள்ளது..
சாஹித்யா அனைத்து விஷயத்தையும் கூறி முடித்ததும்..
தன் பெற்றோர்கள் தன்னை காணாது எப்படி தவித்துவிட்டு இருப்பர் என வேதனையடைந்த மிதிலா, உடனே தன் பெற்றோருடன் பேச வேண்டும் என..
கேரளாவிற்கு ஃபோன் போட்ட சாஹித்யா, மிதிலாவிடம் ஃபோனை கொடுத்துவிட்டாள்..
ரிங் சென்றுக்கொண்டு இருந்தது..
மிதிலாவின் மனம்.. உடல் என அனைத்தும் படப்படப்பாக இருந்தது…
ஃபோனை அழுந்தப் பற்றிக் கொண்டாள்..
சில பல ரிங்கிற்கு பின், அந்தப்பக்கம் ஃபோன் ஆன் செய்யப்பட்டது..
"ஹலோ.. சொல்லுங்க அக்கா.. டாக்டர் என்ன சொன்னாங்க.. என்னக்கா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க", என்றாள் மித்ரா தூக்கக் கலக்கத்தில்..
இனி கேட்கவே மாட்டோம் என்று நினைத்த, மித்ராவின் குரலை கேட்டதும்.. மிதிலாவிற்கு நெஞ்செல்லாம் ஏதோ செய்ய தொடங்கியது..
அந்நொடி அவளுக்கு எந்த வார்த்தையும் வெளிவரவில்லை.. தொண்டை அடைத்துக்கொண்டது..
சாஹித்யா மிதிலாவை ஆதரவாக அணைத்து.. பேசுமாறு செய்கை செய்தாள்..
அதற்குள் அந்தப்பக்கம் இருந்த மித்ரா, "சாஹி அக்கா என்ன ஆச்சு.. ஏன் பேச மாட்றீங்க", என…
மிதிலா மெல்ல "மித்து".. என்றாள்..
அந்த அழைப்பில், குரலில் மித்ராவின் தூக்கம் எங்கோ பறந்து சென்றது..
"மிது.. ஹலோ.. ஹலோ.. சாஹி அக்கா.. மிது குரல் கேட்டது போல இருக்கே.. எதாச்சும் பேசுங்க பிளீஸ்", என்றாள் பதற்றத்துடன்..
மிதிலா, " மித்து நான் தான்", என்றாள் அழுகையுடன்..
சாஹித்யா, பட்டென்று ஃபோனை வாங்கி விடியோ கால் செய்தாள்..
மித்ராவும் பல உணர்வுகளின் பிடியில் இருந்தாள்..
விடியோ காலில் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தனர்.. அழுகையுடன்…
கெட்ட கனவு அவர்களுக்கு கலைந்தது போல் ஆனது.
"மிது குட்டி… எங்கடி போன.. அமெரிக்காலயா இருக்க.. எப்படி இருக்க டீ.. சாஹி அக்காவ எப்படி பாத்த", என்றாள் அழுகையுடன்..
மிதிலாவின் முகம் முழுக்க புன்னகையுடனும்.. ஆனந்த கண்ணீருடனும்.. "நல்லா இருக்கேன் மித்து.. அப்பா அம்மா எங்கடி", என்றாள் ஆர்வமாக..
மித்ராவோ மனம் முழுக்க திக் திக் உணர்வுடன், "மிது.. என்னோட.... என்னோட.." என்று திக்கி திணறியவள்..
எப்படியோ முயன்று, "என் குழந்தை உன்கிட்ட தான்னே இருக்கு.. இருக்குதானே".. என்றாள் அழுகையுடன்..
"ஆமா மித்து.. பயப்படாத.. அன்னைக்கு மாமா தான் என்னை தூக்கிட்டு சீக்கிரம் போக சொன்னாங்க", என்றாள்..
மித்ரா, தன் குழந்தை உயிருடன் உள்ளதா.. எப்படி இருக்கின்றது.. எங்கே இருக்கின்றது.. உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதா.. என்று தெரியாமல் எத்தனை எத்தனை வேதனையை மனதில் சுமந்து கொண்டு வாழ்ந்தாள்..
தன் குழந்தை உள்ளது என்று தெரிந்ததும்.. அவளுக்கு மார்பில் பால் சுரப்பது போல் இருந்தது..
பெருமூச்சு ஒன்றை நிம்மதியாக வெளியேற்றிய மித்ரா, "என்ன குழந்தை டி மிது", என்றாள் அழுகையுடன்.. தனக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கூட தெரியாமல்…
மிதிலா, "பொண் குழந்தை மித்து.. மாமா ஆசைப்பட்ட மாதிரியே பிரின்சஸ்.. உனக்கு பிடிச்ச போல குழந்தையை மகிழ்மதின்னு கூப்பிட்டு மாமா தான் வெல்கம் பண்ணாங்க.." என அன்று நடந்தவைகளை கூறிவிட்டு, "எங்க மித்து அம்மா.. அப்பா.. மாமாலாம்.. பிளீஸ் அவங்களையும் காட்டு", என்றாள்..
மித்ரா, அறைக்குள் சென்று லைட்டை ஆன் செய்துவிட்டு.. விஷ்ணுவையும்.. துளசியையும் நெருங்கினாள்.. பிரித்திவ்வின் நினைவுகளுடன்…
விஷ்ணு துளசியை எழுப்பியவள், ஃபோனில் மிதிலாவை காண்பித்ததும்.. துளசிக்கும், விஷ்ணுவுக்கும் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி.. அவர்களும் அழுது கதறிவிட்டனர்.. மிதிலாவை பார்த்ததும்..
தங்கள் மகள்.. பாதுகாப்போடும், ஆரோக்கியத்தோடும் இருக்கின்றாள்.. தங்களின் வேண்டுதல் பலித்து விட்டது என்ற எண்ணமே அப்பெற்றோர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது..
சிலபல நல விசாரிப்புகளுக்கு பிறகு தான்.. துளசி மிதிலாவிடம் காணப்படும் மாற்றங்களை கவனித்தார்..
மிதிலா புடவையில் இருப்பது.. விஷ்ணு, துளசி, மித்ரா அனைவருக்குமே அப்போதுதான் உறைத்தது.
அவளின் கன்னம் வேறு கன்றி வீங்கி இருந்தது..
அனைவரும் விசாரிக்க தொடங்கியதும்.. மிதிலாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. தப்பு செய்து மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் திருத்திருத்தாள்..
அதிலும் மிதிலாவின் கழுத்தில் வெளிப்புறம் தொங்கிய நீண்ட கனமான தாலி சரடு, விஷ்ணுவையும் துளசியையும் அதிர்ச்சி அடைய செய்தது..
தங்களின் மகளுக்கு.. திருமணம் ஆகிவிட்டதா.. எப்படி நடந்தது.. யாருடன் நடந்தது.. என்று மிதிலாவை.. கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினார்..
பயந்துப் போன மிதிலா, சாஹித்யாவிடம் ஃபோனை கொடுத்து.. "பிளீஸ் அக்கா.. நீங்க சொல்லுங்க அக்கா".. என்றுவிட்டு.. அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று உட்கார்ந்து கொண்டாள்.. பயத்தில் நடுங்கியப்படி..
திருமணத்தையும், தன் காதலையும், எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ, என மிதிலாவிற்கு படபடப்பாக இருந்தது....
சாஹித்யா, புன்னகையுடன்.. மிதிலாவின் கையைப் பற்றி, அவளை ஆறுதல் படுத்திய வண்ணம்..
மிதிலா, மிதுன் ஜார்ஜ் மூலம் அமெரிக்கா வந்தது.. இங்கு ஆதித்யன் அவளுக்கு வீடு எடுத்து கொடுத்து வேலைக்கு அமர்த்தியது.. பிறகு அவள் பணம் பற்றா குறையினால் பணிக்கு சென்றது.. ஹரியை சந்தித்தது.. அவர்களுக்கு காதல் திருமணம் நடந்தது.. என அனைத்தையும் கூறியவள்.. உடன் ஹரியை பற்றியும் கூறி முடித்தாள்..
மிதிலா ஏற்கனவே திருச்சியில் ஹரியை பார்த்ததைப் பற்றி, கயல்விழி மற்றும் ஆதித்யன் தவிர வேறு யாரிடமும் இதுவரை கூறவில்லை..
விஷ்ணு துளசியால்.. தங்களின் சின்ன மகளுக்கு. அதற்குள் திருமணம் நடந்து விட்டது.. என்பதை நம்பவே முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அதையே விசாரித்துக் கொண்டே இருந்தனர்.
சாஹித்யா மனதில், ஹரி செல்லும் முன்பு, அவள் காதில் 'மிதிலா தற்பொழுது பிரக்னன்டாக உள்ளதாகவும், இன்னும் அவளுக்கு தெரியாது.. கவனமாக பார்த்துக்கொள், அவள் மிகவும் சிறுபெண்', என்றெல்லாம் சொன்னதை, நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்.. அந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னும் அதிர்ச்சி ஆகிவிடுவர்.. ஹரியே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள்..
அவர்கள் அனைவரும் குழந்தையை பார்க்கவும், ஹரியை காணவும், அவனிடம் பேசவும் என ஆவலாக காத்து இருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக