உண்மை காதல் -24
அத்தியாயம் -24
அதேநேரம் அங்கு ருத்ரன் கூறிய அனைத்தையும் கேட்ட ஹரிக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது..
ருத்ரன் மீது அவனுக்கு இருந்த, சிறு மன வருத்தமும் காணாமல் போயிவிட்டது..
ஹரி ருத்ரனிடம், மிதிலாவை முதன்முதலில் திருச்சியில் பார்த்த தினத்திலிருந்து.. இப்பொழுது தங்களுக்கு திருமணம் நடந்தது, அவள் பற்றிய உண்மையை அறிந்துக்கொண்டது என அனைத்து நிகழ்வுகளையும், ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்ளும் அளவில், ருத்ரனிடம் பகிர்ந்து கொண்டான்..
கேட்ட ருத்ரனுக்கோ மிகுந்த ஆச்சரியம், ஹரியின் மீதான மிதிலாவின் காதலில்..
ருத்ரனை பொருத்தவரை மிதிலா மிகவும் வெகுளியான, அன்பான, சுட்டியான, ஸ்கூல் படிக்கும் பெண்.. அவன் இறுதியாக அவளை பார்த்த அன்றுக் கூட அவளை அவன் பள்ளி சீருடையில் தான் பார்த்து இருந்தான்.
மிதிலா தன் 15 வயதில் பார்த்த ஹரியின் மீது வைத்த காதலும், அது அவளுக்கு கை கூடிய விதமும், அவள் செய்த பெரும் பாக்யமே…
எத்தனை பேருக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கிறது..
அதிலும் மிதிலா எதுவும் சொல்லாமலேயே.. அவளை பார்த்த நொடியிலேயே.. ஹரிக்கு மிதிலாவின் மீது தோன்றிய அளவற்ற காதல் கூட ஆச்சரியம் தானே…
அந்த நேசத்தை ஹரி அழகாக கொண்டு சென்று திருமணத்தில் முடித்தது.. எவ்வளவு பெரிய விஷயம்…
இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை..
அதைவிட.. ஹரி எவ்வாறு மிதிலா போன்ற ஒரு பெண்ணை குழந்தையுடன்.. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி திருமணம் செய்து கொண்டான்..
பின்பும் மிதிலாவின் பின்புலம் அறிந்து.. அவளை கோவிக்காமல்.. அவளுக்காக எத்தனை விஷயங்களை ஹரி செய்து கொண்டு இருக்கின்றான்..
ஹரியின் அனைத்து பக்கமும், ருத்ரனை அவன் புறம் சாய்த்தது..
பார்க்கும் அனைவருக்குமே, ஹரிக்கும் மிதிலாவிற்கும், உள்ள வயது வித்தியாசம் நிச்சயம் தெரியும்.
ஆனால் அவர்கள் இருவருக்குள் இருக்கும்.. காதலும்.. அன்னியோன்யமும்.. பழகும் விதமும்.. பார்ப்பவர்களுக்கு ஐந்து நிமிடத்திலேயே அவர்கள் இருவர்தான்.. ஒருவருக்கொருவர் ஏற்ற.. சிறந்த மனமொத்த ஜோடி என்று தோன்ற வைத்து விடும்..
சிறிது நேரம் முன்பு கூட ருத்ரன் தான், தன் கண் முன்பே கண்டானே.. மிதிலாக்காக ஹரி செய்தவைகளையும்.. மிதிலா ஹரியிடம் பழகும் விதத்தையும்..
ஹரி, முன்பே ஒரு சிறந்த மருத்துவனாக ருத்ரன் சாஹித்யா இதயத்தில் இடம் பிடித்து இருந்தான்.. இப்பொழுது சொல்லவே வேண்டாம்...
ஹரி, போன்ற அழகான.. எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத.. நன்கு படித்த.. எந்த குறையும் இல்லாத.. வசதிகள் உடைய ஆண்மகனிற்கு…. எத்தனை வரன்கள் வந்து இருக்கும்...
அதுவும் சுதந்திரமான அமெரிக்க கலாச்சார முறையில் வளர்ந்தவனுக்கு.. எத்தனையோ பெண்கள் ப்ரோப்போஸ் செய்து இருப்பார்கள்.. டேட்டிங் அழைத்து இருப்பார்கள்..
இருந்தும் ஹரி ஒழுக்கமாக இருந்ததும்… மிதிலாவை காதல் கொண்டு கரம் பிடித்ததும்.. ருத்ரனை ஏதோ ஒரு வகையில் பாதித்தது..
இதே அமெரிக்காவில் தானே அவன் ஒழுக்கம் தவறினான்… அவனின் காதல் கை கூடாது போனதற்கு காரணமும் அது தானே..
அப்பொழுது ஹரி, வழியிலேயே ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு.. ருத்ரனை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு சென்று.. சில பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து மீண்டும் காரை கிளப்பினான்..
அடுத்து ஹரியும், ருத்ரனும் திருச்சியில் இனி செய்ய வேண்டிய சில பணிகள் குறித்தும்.. அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை பற்றியும் கலந்து ஆலோசித்தனர்..
ஹரி, ஆதிகேசவன் பற்றி டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொன்ன அனைத்து தகவல்களையும்.. ருத்ரனுடன் பகிர்ந்து கொண்டான்..
அந்த அரசு விடுதியில், படிக்கும் மாணவிகள் பற்றிய தகவல், ருத்ரனுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. ஹரி சொல்லச்சொல்ல மிகவும் வேதனையாகவும்.. இந்த மாதிரியான பிறவி தான் தன் தந்தை என்றும், அவனுக்கு ஒரே அவமானமாகவும் இருந்தது..
அவன் மனமோ குன்றிப் போனது..
ஹரி, அம்மாணவிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் ருத்ரனிடம் கூறினான்.
அடுத்து மிதிலாவுடைய, விசா விஷயம் மற்றும் பிரித்திவ் பற்றியும் பேசினர்..
ருத்ரன், அனைத்தையும் விரைவில் சீர்செய்கிறேன் என… ஹரி, ருத்ரனை மறுநாளே இந்தியாவிற்கு சென்று அனைத்தையும் விரைந்து பார்க்குமாறு கூறினான்.
ருத்ரன் சாஹித்யாவை பற்றி யோசிக்க…
உடனே ஹரி, "இங்க எங்க வீட்டில் சாஹித்யா இருக்கட்டும் ருத்ரன்.. நான் பார்த்துக்கறேன் டோன்ட் வொர்ரி.. வீட்ல அம்மா, மிதிலா, ஹெல்ப்பர் எல்லாருமே இருக்காங்க..", என..
சரியென்று என்றுவிட்ட ருத்ரனுக்கு, அப்பொழுதுதான் நியாபகம் வந்தது..
ஆதிகேசவன், சாஹித்யாவிற்கு ஒரு வருடத்திற்கு மேலாக கருத்தடை மருந்தை கொடுத்தை பற்றி ஹரியிடம் கூறினான்..
ஹரிக்கு " ச்சீ" என்று ஆகிவிட்டது.
இவனெல்லாம் என்ன மனிதன்.. யாருக்குமே உண்மையாக இல்லாமல்.. பூமிக்கு பாரமாக.. அசிங்கமான ஒரு கொடும் பிறவியாக.. வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றான்....
அக்கணமே ஹரி தன் மனதில், ஆதி கேசவனுக்கு எவ்வாறு முடிவு தர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.
ஆனால் அதை நிச்சயமாக ருத்ரன் பார்க்க வேண்டாம் என்று நினைத்தான்.
என்னதான் இருந்தாலும்.. ருத்ரனுக்கு ஆதிகேசவன் தந்தை அல்லவா.. கடந்த இரண்டு வருடமாக தானே ருத்ரனுக்கு ஆதிகேசவன் மேல் வருத்தம்.. அதற்கு முன்புவரை ருத்ரன் ஆதிகேசவன் மீது பாசத்தை தான் வைத்து இருந்தான்.. நிச்சயம் இன்று அந்த பாசம் இல்லை என்றாலும்.. அவன் மனதை ஆதிகேசவனின் முடிவு பாதிப்பு அடைய செய்யும் என்று ஹரி யோசித்தான்..
தன் முடிவைப் பற்றிக்கூட ருத்ரனிடம் ஹரி கூறவில்லை..
கார், வெணாட்ச்சி ஸ்டீஃபன் பாஸ்(Wenatchee Steven Pass) என்ற மலைகள் சுற்றி இருக்கும்.. காட்டு பகுதிக்குள் சென்று கொண்டு இருந்தது..
ஆதிகேசவன் சுத்தமாக தன் சுயநினைவுகளை இழந்து, மயக்கத்தில் காரின் பின்னாடி ட்ரங்கில், இருந்தான்.
அந்த இடத்தை அடைவதற்கு சற்று முன் இருந்த ஒரு இடத்தில்.. ஹரி, கண்டெயினர் போன்ற, ஆர்வி(RV) வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதை தன் காரின் பின்புறம் இணைத்துக் கொண்டு சென்றான்..
ஹரியும் ருத்ரனும், தாங்கள் செல்ல வேண்டிய பகுதியை வந்து அடைந்தனர்.
கடும் குளிர் காலம் என்பதால், அப்பகுதி விரைவிலேயே இருட்ட தொடங்கிவிட்டு இருந்தது..
அக்காட்டிற்குள் கோடைகாலத்தில்.. எப்பொழுதும் மக்கள் ஆங்காங்கே.. சொந்த ஆர்வி வண்டி எடுத்து வந்து கேம்பிங் போட்டு அதில் தங்குவார்கள்..
ஆனால் குளிர்காலத்தில் யாரும் வர மாட்டார்கள்..
குளிர் காலத்தில், அவரவர்கள் சொந்த ரிஸ்க் எடுத்துதான் அப்பகுதிகளுக்கு செல்வதாக இருந்தால் செல்ல வேண்டும். ஏனென்றால் பனி சரிவுகளும்.. அதிக காற்று வீச்சும்.. பனிமழையும்.. அம்மாதம் அதிகமாக அப்பகுதியில் இருக்கும்.
எனவே எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு.. மிகப்பெரிய பெரிய மரங்கள்.. பாறைகள்.. வண்டியிலோ.. அல்லது ஆட்களின் மீதோ விழுந்து.. உயிர் சேதத்தை ஏற்படுத்தும்..
அப்பகுதி ஹரிக்கு நன்கு பரிச்சயமானது. மாதம் குறைந்தது இரண்டு முறையாவது வந்துவிடுவான்.
ஹரி மறைவான ஒரு பகுதியில் தன் காரை நிறுத்திவிட்டு.. அந்த ஆர்வி பெட்டியையும் தனியாக பிரித்து பார்க் செய்துவிட்டு.. காரில் இருந்த ஆதிகேசவனை அதற்குள், ருத்ரனுடன் சேர்ந்து தூக்கி சென்றான்..
ஆதிகேசவன் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தான்.
ருத்ரனுக்கு மனதே சரியில்லை.
ஹரி, தான் வாங்கி வந்து இருந்த சில மருந்துகளை எடுத்து.. குளுக்கோஸுடன் சேர்த்து.. ஆதிகேசவனுக்கு கையில் IV மூலம் போட்டுவிட்டு.. அவன் உடலில் இருக்கும் பெரிய காயங்களுக்கு.. செப்டிக் ஆகாமல் இருக்க மருந்து போட்டுவிட்டு.. அங்கேயே காத்து இருந்தான்.
இரண்டு மணி நேரம் கடந்த பிறகு…
ஐ வி முடிந்ததும் ஆதிகேசவன் சிறிது மயக்கம் தெளிந்து முழித்தான்...
உடனே அவனின், கை, கால், வாய் என அனைத்தையும் அடைத்து கட்டிப்போட்டனர்.
முழுதாய் தெளிந்த ஆதிகேசவன், சுற்றி பார்த்தப் படி, தான் இருக்கும் நிலையை உணர்ந்து.. அதிலிருந்து வெளிவர எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஒன்றும் அவனால் செய்யமுடியவில்லை.
உடலெங்கும் வலி வலி…
ஆதிக்கேசவனால் சுத்தமாக தாங்க முடியவில்லை..
மெல்ல அவன் முனங்க தொடங்க…
ஹரி ருத்ரனை அழைத்துக்கொண்டு, அந்த வண்டியை பூட்டிவிட்டு, அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டான்..
ஆதிகேசவனால் கத்தி கதறி அழ கூட முடியாத நிலை.. ருத்ரன் தான் அவன் வாயை வேறு உடைத்து இருந்தானே…
ஹரி, ஏற்றிய ஊக்க மருந்தால் ஆதிக்கேசவனுக்கு பொட்டு தூக்கமோ.. மயக்கமோ கூட வரவில்லை..
இதுவரை வலி என்பதையே அறியாத ஆதிகேசவன்..
எப்பொழுதும் ராஜபோக வாழ்வு வாழ்ந்த ஆதிகேசவன்..
திருச்சியையே ஆட்டிப்படைத்த ஆதிக்கேசவன்..
இன்று யாரும் இல்லாத காட்டில்.. கட்டப்பட்டு.. உடலில் காயங்களுடன்.. நகர முடியாமல்.. முனங்கிக்கொண்டு கிடந்தான்..
அதிலும் ஹரி அவன் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் அனைத்திலும் காயத்தை கொடுத்து.. கொதி நீரில் வேறு போட்டுவிட்டு இருக்க.. உடல் எங்கும் அவனுக்கு எரிந்தது..
இயற்கை அழைப்பிற்கு கூட செல்ல முடியாமல்.. அப்படியே அதிலேயே நாற்றம் எடுத்து, இரவு முழுக்க அதிலேயே கிடந்தான்..
********************************
இரவு பத்து மணிக்கு மேல்,
ஹோட்டலை சென்று அடைந்த ஹரியும் ருத்ரனும், சாஹித்யாவையும்.. மிதிலாவையும் அழைத்துக்கொண்டு.. ஹரியின் வீட்டிற்கு ஒன்றாக சென்றனர்.
அங்கு ஆதித்யனும், கயல்விழியும் தங்களின் ஒரு மாதம் கூட நிரம்பாத குழந்தையுடன் வந்து காத்து இருந்தனர்..
ஹரி மூலம், மிதிலாவை கடத்தியதை அறிந்ததும், பதறிப்போய் கிடைத்த ஃபிளைட்டில் ஏறி ஓடி வந்து இருந்தனர்..
அன்னபூரணியிடம் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம் என மறைத்து விட்டனர்.
ருத்ரனை, ஆதித்யனின் நண்பன் என்று அன்னப்பூரணியிடம் அறிமுகம் செய்துவிட்டு.. சாஹித்யாவிற்கு தன்னிடம் குழந்தைப்பேறுக்காக இந்தியாவில் இருந்து சிகிச்சைக்கு வந்துள்ளதாகவும்.. ஹரி கூறிவிட்டான்..
இரவு மிகவும் தாமதமாகி விட்டு இருந்ததால், மகிழ்மதி அன்னபூரணியின் அறையில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
வீட்டிற்கு சென்று விட்டீர்களா?? விட்டீர்களா?? என பாவம் மித்ரா குழந்தையை பார்க்க.. ஆயிரம் முறை அழைத்துவிட்டு இருந்தாள்..
சாஹித்யா ஹரியிடம் குழந்தை எங்கே என…
ஹரி, இருவரையும் அழைத்துச்சென்று மகிழ்மதியை காட்டினான்..
ருத்ரனின் கண்களுக்கும், சாஹித்யாவின் கண்களுக்கும்.. அப்படியே மித்ராவை.. உரித்து வைத்த போல்.. தெரிந்தாள் மகிழ்மதி…
அழகாக.. புசுபுசுவென தூங்கும்.. அந்த தேவதையின் உடலை.. ருத்ரனின் கண்கள் மயிலிறகாய் வருடியது.
எத்தனை நாள் மித்ராவிற்காக, வருத்தப்பட்டு இருப்பார்கள்...
உடனே ருத்ரன் வீடியோ கால் செய்து.. மித்ராவிற்கு மகிழ்மதியை சத்தம் எழுப்பாமல் காண்பித்தான்..
தன்னவனின் காதலுக்கு சாட்சியாய், அவளின் உதிரத்தில் ஜனித்து இருந்த, அழகு மகளின் வதனத்தை.. மித்ரா தன் கண்களால் பார்த்து மனம் முழுக்க நிரப்பினாள்..
ஒருவருட குழந்தையாக முழு வளர்ச்சி அடைந்துவிட்டு இருந்த தன் மகளை பார்க்கும் பாக்கியம், இப்பொழுதாவது தனக்கு கிட்டியதே என இறைவனுக்கு நன்றி உரைத்தாள்..
அவள் கண்களோ விடாது இன்ப நீரை கொட்டியது..
தன் மகளை தொட்டு தூக்கி.. முத்தமிட்டு.. அணைத்து கொள்ள வேண்டும் போல் மித்ராவிற்கு இருந்தது.. முயன்று தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள்..
ஹரிக்கோ அக்கணம் இந்நிகழ்வுகளை காணும் போது.. ஏதோ உருவமில்லா உணர்வு.. மனதில் தோன்றி நெஞ்சை அடைத்தது..
தன் மனம் நினைப்பது தவறு என்று அவனின் மூளைக்கு தெரிந்தாலும், அது அதன் அலைகளை நிறுத்தவில்லை.
விஷ்ணு துளசியும் மகிழ்மதியை பார்த்தனர்..
பிறகு அனைவரும் வெளிவர..
அன்னபூரணியை படுத்துக்கொள்ள அனுப்பிவைத்த ஹரி, கீழே இருந்த விருந்தினர் அறையில் கயல் மற்றும் அவர்களின் குழந்தையை தூங்க அனுப்பிவிட்டு..
மீதம் இருந்தவர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசினர்.
நேரம் நல்லிரவைத் தொட.. ஹரியும் ருத்ரனும் மீண்டும் வீட்டில் இருந்து கிளம்பி விட்டனர்..
மீண்டும் கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கிக்கொண்டு, ஆதிக்கேசவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்தவர்கள்..
ஆதிக்கேசவனின் அறையில் இருந்த அவனின் பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து விட்டு… அறையையும் சுத்தம் செய்து… கை ரேகைகளை அழித்து.. என்று ஒரு இடம் விடாது அறையை சுத்தப்படுத்தி.. பொருட்களை எடுத்துக்கொண்டு ருத்ரனின் அறைக்கு வந்து சேர்ந்தனர்..
இரவே விஷ்ணுவும் துளசியும், ஹரியிடம் பேச வேண்டும் என்றனர்.. இப்பொழுது தான் நேரம் கிடைக்க, ஹரி அவர்களிடம் ருத்ரனுடன் சேர்ந்து பேசினான்..
முன்பே திருச்சியில் சந்தித்தது பற்றியும் கூறினான்..
அன்றே விஷ்ணுவிற்கும்.. துளசிக்கும்.. ஹரியை அவ்வளவு பிடித்து இருந்தது..
அவர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி..
தற்போதைக்கு, பிரித்திவ்வும் குணமாகிவிட்டால் போதும் என்று நினைத்தனர்..
அடுத்து ஹரி அவர்களிடம், மிதிலாவை திருச்சியில் பார்த்தது பற்றி தனக்கு இப்போது தெரியும் என்பதை நீங்கள் காட்டிக்கொள்ள வேண்டாம்… எனக் கேட்டுக்கொண்டவன்.. அவளிடம் நானே கூறுவேன் என்றுவிட்டு வைத்தான்..
மிதிலாவும், தங்களிடம் ஹரியை முன்பே திருச்சியில் சந்தித்தது பற்றி கூறவில்லை என்பதை அவர்களும் அப்பொழுதுதான் உணர்ந்து புன்னகைத்துக் கொண்டனர்....
ருத்ரன் குறும்பாக ஹரியை பார்க்க, ஹரி, "என்ன ருத்ரன்", என..
ருத்ரன், "நத்திங் டாக்டர்.. எப்படி லவ், ரொமான்ஸ்லாம் பண்ணனும்னு நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன் ", என…
அசடு வழிவதை தவிர ஹரிக்கு வேறு வழி இல்லாது போனது..
இருவரும் அவ்விரவை தூங்காது கழித்தனர்..
விடிந்ததும் ருத்ரன், ஆதிகேசவனின் பொருட்களுடன், இந்தியாவிற்கு கிளம்பி விட்டான்..
ஹரி, ஆதிகேசவனை பார்க்க மலைக்கு கிளம்பிவிட்டான்.
ஹரி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. கதவை திறந்து சென்று பார்க்கும் பொழுது, ஆதிகேசவன், மிகவும் மோசமான நிலையில் இருந்தான்…
அவன் வாயில் இருந்த அடைப்பை நீக்க, ஆதிகேசவன், வலியில் கதறக்கூட வலு இல்லாது.. உடல் முடியாமல் அணத்தத் தொடங்கினான்..
ஹரிக்கு.. ஆதிகேசவனின் இந்நிலை.. சிறிதும் மனதிற்கு எந்த வகையிலும் அவன் மீது இறக்கத்தை அக்கணம் கொடுக்கவில்லை..
இன்னும் இன்னும், அவனை கதற வைக்க வேண்டும் என்றே நினைத்தான்..
மீண்டும் வெளிவந்தவன், அவன் வாங்கி வந்திருந்த பொருட்களை காரில் இருந்து எடுத்து வந்தான்..
அதிலிருந்த மருந்து பாட்டில் ஒன்றை திறந்தவன், இன்ஜக்ஷனில் அதை ஏற்றி,
ஆதிகேசவனின், உடலில் செலுத்தினான்.. அவை ஆதிகேசவன் உடனே இறந்துவிடாமல் இருக்க ஏற்றப்பட்ட மருந்துகள்.
மித்ராவிற்கு ஆதிகேசவன் இழைத்த கொடுமைகள்..
திருச்சி மக்களுக்கு ஆதிகேசவன் இழைத்த கொடுமைகள்.. கல்லூரி மாணவிகளுக்கு.. போதை மருந்து கொடுத்து.. பல ஆண்களை கொண்டு அப்பெண்களை சீரழித்தது.. சொந்த மகனை அழிக்க நினைத்தது.. மாதவிக்கு செய்தது...
சாஹித்யாவிற்கு கருத்தடை மருந்துகளை கொடுத்தது..
பிரித்திவ்வின் இன்றைய நிலை,..
என்று அனைத்தும் ஹரியை, முற்றிலும் வேறொரு அவதாரத்தை எடுக்க வைத்திருந்தது.
இரணியன்னை அழிக்க அன்று பகவான் விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை, இன்று நவீன கலியுக ஹரிகிருஷ்ணா எடுத்து விட்டு இருந்தான்.
அவனிடம் ஒருவார்த்தை கூட பேச ஹரிக்கு இஷ்டம் இல்லை..
அதிலும் தமிழக கவர்மெண்ட் மீதுள்ள நம்பிக்கையையும் முற்றிலும் இழந்து இருந்தான்...
அதைவிட அவன் மனைவி மிதிலாவை ஆதிகேசவன் கடத்தி சென்று.. அடித்து.. அவளை கீழ்த்தரமாக பேசி.. கெடுக்க முயன்றதை எல்லாம் அவனால் தாங்கவே முடியவில்லை.. எவ்வளவு பதற்றம் நேற்று அவனுக்கு ஆதிகேசவனால்..
சிறிது நேரத்தில், ஹரி ஏற்றிய மருந்துகளின் பயனாய் ஆதிகேசவனுக்கு பலம் வந்து சேர்ந்தது..
அதன் பலனாய், அவன் ஹரியை திட்ட தொடங்க..
அதில் மேலும் ஆத்திரம் அடைந்த ஹரி, ஆதிகேசவனை எட்டி ஒரு மிதி மிதிக்க.. வண்டியினுள்ளே கீழே உருண்டு சென்றான்..
அவன் வாயிலேயே தன் ஷூக்கால்லை வைத்து அழுத்திய ஹரி, தன் கண்கள் பளப்பளக்க.. ஆதிகேசவனின் உடலில் போதை மருந்து ஊசியையும், உடன் மற்றொரு மருந்தையும் செலுத்திவிட்டு, புன்னகையுடன் அங்கேயே அருகில் உட்கார்ந்து கொள்ள..
ஹரியை திட்டியப்படி கிடந்த ஆதிகேசவன், கொஞ்ச நேரத்திலேயே உடல் முழுவதும் போதை ஏறி.. தன்னை மறந்து தன் வலிகளை மறந்து மகிழ்ச்சியாக பிதற்ற தொடங்கினான்…
அவன் உடலே லேசாகி பறப்பது போல் இருந்தது, அத்தனை வலிகளிலும்..
அப்படியே சொக்கும் விழிகளுடன் கோரமாக இருந்த ஆதிக்கேசவனின் உடல், சிறிது சிறிதாக வேறொரு உணர்வை உணர ஆரம்பித்தது..
அக்கல்லூரி பெண்களுக்கு, என்ன வகையான இச்சையை தூண்டும் போதை மருந்தை கொடுத்தானோ.. அதே வகை போதை மருந்தை தான், ஹரி இன்று ஆதிகேசவனின் உடலில் அதிக வீரியத்துடன் செலுத்தி இருந்தான்.
ஆதிகேசவனின் உடல் தனக்கு ஒரு பெண், அதுவும் இப்பொழுதே வேண்டும் என்ற சுக உணர்வில் துடிக்க தொடங்கியது..
அதே நிலையில், தெரு நாயைப்போல், துடித்துக்கொண்டு இருந்தவனின் உடலில், இருந்த போதை, ஒரு மணி நேரத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத்தொடங்க..
மகாபாரதத்தில், குருஷேத்திர யுத்ததில், இருந்த வாசுதேவ கிருஷ்ணனின் புன்னகையை ஒத்தப் புன்னகை ஒன்று அக்கணம் ஹரியின் முகத்தில் தோன்றியது.
போதை முற்றிலும் இறங்கிய பின் தான், ஆதிகேசவன் தன் உடல் முழுக்க, பரவியிருந்த அரிப்பை உணர்ந்தான்..
அவன் உடலில் இருந்த சுகவேதனை போய், அவனுக்கான மரணவேதனை ஆரம்பித்தது.
கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் சொரியக் கூட அவனால் முடியவில்லை..
அவனுக்கு மண்டையே பிளப்பது போல் ஆகியது..
அரிப்பு தாங்காமல் துடிதுடித்து கதற ஆரம்பித்தான்..
ஹரிக்கு காதே செவிடாகிவிடும் போல் இருந்தது அவனின் சத்தத்தில், ஆதிகேசவனின் வாயை மீண்டும் அடைத்துவிட்டு, ஹரி வெளியே சென்று நின்றுக்கொண்டான்....
உள்ளே இருந்த ஆதிகேசவன் அங்கும் இங்கும் கீழே விழுந்து.. உருண்டு.. கைகளை அசைக்க முடியாமல், நேரமாக நேரமாக உடலில் அதிகமாகும் அரிப்பை தாங்கமுடியாது கிடந்தான்..
வாட்சை பார்த்துக்கொண்டு நின்று இருந்த ஹரி, சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து, கீழே கிடந்த ஆதிகேசவனின் ஒரு கையை மட்டும் விடுவித்தான்..
அவிழ்த்து விட்ட அடுத்த நொடியே, ஆதிகேசவன் தன் உடல் முழுக்க, சொரி நாயைப் போல், பரப்பரவென சொரிய ஆரம்பித்தான்..
விளைவு ஆதிகேசவனுக்கு உடல் முழுக்க அவன் கையாலேயே காயமாகி.. ரத்தம் கசிய தொடங்கியது..
இருந்தும் அரிப்பு தாங்காமல் தன் கையாலேயே தன் உடலை சொரிந்து சொரிந்து மேலும் மேலும் புண்ணாக்கினான்...
“இந்த உடல் தேவைக்கு தானே மற்ற பெண்களின் வாழ்க்கையையும்.. அவர்களின் குடும்பத்தையும் அழித்தாய்.. அனுபவி..” என்ற ஹரி, மீண்டும் அவனை கட்டிப்போட்டு விட்டு, அவ்விடத்தில் இருந்தே கிளம்பிவிட்டான்..
அன்னப்பூரணிக்கு அழைத்து ஹரி, ஹாஸ்பிடலில் அதிக பணி, ஓவர் டைம் டியூட்டி என்றுவிட்டு..
ஆதிக்கேசவனை வைத்திருந்த இடத்திற்கு அருகிலேயே, இருந்த ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கி கொண்டான்.
அடுத்த இரண்டு தினங்களும், ஆதிகேசவனை ஹரி இதே முறையில் வதைக்க.. ஆதிகேசவன், தனது உடல் கழிவுகளிலேயே.. உடல்முழுக்க சொரியுடன்.. வலியில், மூழ்கி, நாற்றம் எடுத்து அசிங்கமாய், அவன் மனதை போன்றே கிடந்தான்..
மூன்றாம் நாள், சாகக் கிடந்த
ஆதிகேசவனுக்கு சில மருந்துகளை மீண்டும் ஹரி ஏற்றி.. அவன் உடலை வாழ தயார் படுத்தினான்..
நான்காம் நாள், காலை ஹரி எதிர்ப்பார்த்த மாதிரி ஆதிகேசவனின் உடல் தயாராகி இருந்தது.
உடனே ஆதிகேசவனை தூக்கி நிற்க செய்த ஹரி, அவனின் கைகளை மேலே இருந்த கம்பிகளின் மூலம் கட்டிப்போட்டுவிட்டு..
அவன் உடலில், இன்று கொண்டுவந்து இருந்த சில உபகரணங்களை, எடுத்து இணைக்க ஆரம்பித்தான்..
ஹரி என்ன செய்கின்றான் என்று ஒன்றும் புரியாமல்.. ஆதிகேசவன் பீதியில் உறைந்து இருந்தான்..
ஹரி, அந்த மெஷினின் வொயரினை பேட்ரியில் பொருத்தி, ஆன் செய்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் ஆதிகேசவன் தன் உயிர் போய் விடாதா என்று ஏங்கி.. தன்னை விட்டுவிடு அல்லது கொன்றுவிடு என ஹரியிடம் கெஞ்சி, கதற ஆரம்பித்தான்…
செயற்கையாக, பிரசவ வலியை கொடுக்கும் உபகரணங்களை தான், ஹரி ஆதிகேசவனின் வயிற்றிலும், தொடையிலும் ஹரி பொருத்தி இருந்தான்..
பிரசவ வலி எவ்வாறு இருக்கும் என்பதை காட்டவே, இதனை வடிவமைத்து இருந்தனர்..
சராசரியாக சில வினாடிகள் தொடங்கி, அதிகப்பட்சமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல், அந்த கருவியை யாரின் உடலிலும், பொருத்த மாட்டார்கள்…
அந்த அளவிற்கு உடலில் வலியை கொடுக்கும்..
ஹரியோ, 5 மணி நேரத்திற்கு மேல், ஆதிகேசவன் உடலில் அக்கருவிகளை பொருத்தி இருந்தான்…
அன்று மித்ரா யாரும் இல்லாமல், ஆதிகேசவனால் அனுபவித்த பிரசவ வலிக்காக.. இன்று அதைப்போன்ற ஆயிரம் மடங்கு வலியை.. ஆதிகேசவனின் உடலுக்கு அதே உறுப்புகளில் ஹரி காட்டிவிட்டான்..
ஆதிகேசவனின் இடுப்பு எலும்புகள், தொடையெலும்புகள், இன்னும் பல உறுப்புகள் என்று அனைத்தும் வேதனையில், பிரசவிக்கும் பெண்ணுக்கு வலிப்பது போலவே துடித்தது.
கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கு பிறகு.. ஆதிகேசவன் தன் சுய நினைவை இழந்து மயங்கி சரிந்து விட்டான்..
அதன் பிறகு கிளம்பிய ஹரிக்கு, வரும் வழி நெடுக்க மனதிற்கு, ஏதோ போல் இருந்தது..
ஆதிகேசவனின் தொடர் கதறல்களை கேட்டதால்..
ஹரி, என்னதான் அவனை துன்புறுத்த வேண்டும் என்று நினைத்தாலும்.. ஏதோ ஹரியின் மனதையே அன்று பிசைந்துவிட்டது..
பல உயிர்களை காக்கும் திறன் கொண்ட, ஒரு மருத்துவன் அவன் ஆயிற்றே.
எப்பொழுதும் வலியில் துடிக்கும் மக்களின் வலியை போக்கவே அவன் போராடுவான், முதல்முறை தன் மனிதத்தை இழந்து, பெரும் வலியை ஒருவனுக்கு கொடுத்து விட்டு இருந்தான்.
அவ்விரவு அப்படியே கடக்க, மறுநாள் ஹரி சென்று பார்க்கும் பொழுது.. எதிர்பாராத விதமாக ஆதிகேசவனின் உயிர், அவன் உடலைவிட்டு பிரிந்துவிட்டு இருந்தது..
கதவை அடைத்துவிட்டு வெளிவந்தவன், உடனே ருத்ரனுக்கு தான் அழைத்தான்..
ருத்ரனோ சிறு வருத்தமும் இன்றி, ஹரியிடம், ஆதிகேசவனின் உடலை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆலோசித்தான்..
காட்டில் எறிந்தால் நிச்சயம் மிருகங்கள் உண்டுவிடும்.. இருந்தாலும் யாராவது எதிர்காலத்தில் காட்டில் டிரக்கிங் செல்பவர்கள். எலும்பு துண்டுகளை பார்த்து எடுத்துச்சென்று ஆராய்ச்சி செய்தால்.. மாட்டி விடக்கூடும் என்று யோசித்து.. அம்முடிவை கைவிட்டனர்..
ஆதிகேசவனின் உடல் முழுக்க வேறு அரிப்பினால் சிதைந்து இருந்தது.. உடனே அவனை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம்.. இல்லையென்றால் உடல் கெட்டு அது ஒருபக்கம் நோய் கிருமிகளை பரப்பி விடும்..
பிறகு ஹரி யோசித்து.. வாஷிங்டனிற்கு பக்கத்து மாநிலமான ஆரிகனில்(Oregon State) உள்ள கிரேட்டர் லேக்(Crater Lake) என்ற பகுதியில் ஆதிகேசவனை அப்புறப்படுத்தி விடுகிறேன்.. என தன் மனதில் இருந்த திட்டங்களை ருத்ரனிடம் கூற.. அதுதான் சரியென்று விட்டு அவனும் வைத்துவிட்டான்..
மீண்டும் அக்காட்டில் இருந்து வெளிவந்த ஹரி, சில பொருட்களை கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வந்தவன்..
ஆதிகேசவன் மீது எந்த கைரேகையும் இல்லாதவாறு மருந்துகளை உபயோகித்து… சுத்தப்படுத்திவிட்டு.. அவனை காற்றுப்புகாத வகையிலான ஒரு பையில் அடைத்து.. அதிலும் எலும்புகள் எல்லாம் கரையும் வகையிலான மருந்துகளை ஊற்றி, பையை அடைத்து மூடிவிட்டான்..
எந்த தடயமும் விடாது மிக மிக கவனமாகவும், பொறுமையாகவும் சூழ்நிலையை ஹரி கையாண்டான்..
கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை தான் அவனுக்கு..
போலிஸிடம் மாட்டினால் அவ்வளவு தான்..
அவ்வண்டியையும், சுத்தப்படுத்தி அப்பொருட்களையும் காற்றுப்புகாத பையில் அடைத்து எடுத்து வைத்தான்..
தனியாளாக எப்படியோ ஆதிகேசவனை தூக்கி சென்று தன் காரின் டிக்கியில் போட்டவன்.. உடன் எடுத்து வைத்திருந்த பொருட்களையும் போட்டு பூட்டினான்..
ஆரிகன் மாநிலத்தில், பல உயரமான பனி மலைகளுக்கு நடுவில் இருக்கும் சிறு ஏரி தான் கிரேட்டர் லேக்..
வருடம் முழுவதும் அப்பகுதியில் குறைந்தது 80 அடிக்கு பனி நிரம்பி இருக்கும்..
மைனஸ் டிகிரி வெப்பநிலையில்.. நடுவில் இருக்கும் அந்த ஏரியும்.. அந்த நீரும்.. இயற்கையின் அற்புதம்..
உயரமான பனி மலைகளுக்கு நடுவில், அந்த ஏரி இருப்பதால்.. யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்.. செல்ல வழியும் இல்லை..
மலையின் மேல் பனிகளுக்கு நடுவில், சுற்றுலா பயணிகள் பயணிக்க சிறு சாலை இருக்கும்.. அதன் மீது இருந்து தான் அந்த ஏரியை அனைவரும் காண்பார்கள்..
அப்பகுதிக்கு தான் ஹரி ஆதிகேசவனின் இறந்த உடலை எடுத்து சென்றான்..
அப்பகுதியை நன்கு சுற்றி வந்தவன், எந்த இடம் சரியாக இருக்கும், என பார்த்து, முடிவு செய்து, அங்கேயே இரவு முழுக்க தக்க சமயம் வரும் வரை காத்து இருந்தான்..
அதிகாலை நேரத்தில், ஆள் அரவமற்ற பகுதியில், இருட்டில், காரை நிறுத்தியவன், எப்படியோ அப்பனி சரிவில் உயிரை கையில் பிடித்தப்படி நடந்து சென்று, ஆதிக்கேசவன் இருந்த பையை தூக்கி உள்ளே ஏரியில் வீசிவிட்டான்..
எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும், இனி ஆதிகேசவனின் உடலை யாரும், கண்டறிய முடியாது..
அப்பகுதியில் இருக்கும் அந்த ஏரியைக் குறித்து ஆராய்ச்சி நடத்தவே கவர்மெண்ட் தடை விதித்து இருந்தது..
ஹரியினால், முடிந்தது ஆதிகேசவனின் சகாப்தம்..
சிட்டியினுள் வந்து சேர்ந்தவனின் கார், சியாட்டில் நோக்கி வேகம் எடுத்தது..
********************************
நேராக காரை விற்கும், கடைக்கு சென்ற ஹரி, ஆதிகேசவனை சுமந்த தன்னுடைய காரை, வேண்டாம் என்று கொடுத்துவிட்டு, டேக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..
நேராக, தங்களின் அறையினுள் இருந்த குளியலறைக்குள் விரைந்து சென்றவன், அணிந்திருந்த உடைகளை கலைந்து, குப்பை தொட்டியில் போட்டுவிட்டு.. நீண்ட நேரம் ஷவருக்கு அடியில் நின்று தன்னை சுத்தம் செய்துகொண்டான்..
என்ன முயன்றும் ஏதோ ஒரு உருவமில்லா பந்து அவனின் அடிவயிற்றில் உருண்டுக்கொண்டே இருந்தது..
சட்டத்தை தன் கையில் எடுத்து, ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என அவனின் ஆழ்மனது உறுத்தியது..
வெளிவந்தவன் நேராக பூஜை அறைக்கு சென்று, தன் தந்தையின் படத்தின் முன்பு, சிறிது நேரம் நின்று, தன் மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டு வெளிவர…
மகிழ்மதி ஓடிவந்து, "டா டா(da da)" என்று மழலையாக அவனை அழைத்தப் படி.. இத்தனை நாள் பார்க்காத ஏக்கத்தை காட்ட தெரியாது.. அவனின் கால்லை இறுக பற்றிக் கொண்டாள்..
“மை லிட்டில் பிரின்ஸஸ்” என்று அப்படியே குனிந்து குழந்தையை தூக்கிய ஹரி, அவளை தன் நெஞ்சுடன் சேர்த்து இறுக அனைத்து, ஆயிரம் முத்தம் அவளுக்கு வைத்தப்படி, அவளுடன் மாடிக்கு வந்தவனின் உலகம், அதன்பிறகு அவளானாள்..
அவனுக்காகவே காத்து இருந்த மிதிலாவும் அவனுக்கான காபியுடன் வந்து அவனுடன் சேர்ந்துக்கொண்டாள்...
********************************
அதன்பிறகு ஹரி, பிரித்திவ்வின் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. தான் படித்த மருத்துவ கல்லூரியான, Harvard medical University in Boston, சென்றான். அவனின் அனுபவமிக்க ஆசிரியர்களுடன் கேஸை கலந்தாலோசிக்க..
தொடர்ந்து ஐந்து தினங்களாக போஸ்டனில் தான் ஹரி தங்கி இருந்தான்..
இங்கு வந்த முதல் தினமே ஹரிக்கு மிதிலாவை பிரிந்து வந்தது ஒரு மாதிரி இருந்தது.. அதிலும் அவளும் ஃபோனில் அவனை மகிழ்ச்சியில் கொஞ்சிக் கொண்டே இருக்க.. இந்த குறுகிய கால பிரிவே அவனை வதைத்தது..
இருந்தும் வந்த வேலையை ஒழுங்காக முடிக்க வேண்டும் என பொறுத்துக் கொண்டான்.
அப்பொழுது ருத்ரன், ஹரிக்கு அழைத்து பேச..
அவனிடம் பேசி முடித்த ஹரி இறுதியில், சற்று தயங்கியபடி, "எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும் டியூட்(dude)", என்றான்..
ருத்ரன், "கேளுங்க டியூட்.. உங்களுக்கு இல்லாததா", என்றான்..
இருவருக்கும் இடையில், அதற்குள்ளே, நல்ல நட்பு உண்டாகி இருந்தது.
ஹரி, மிதிலாவின் பள்ளிக்கால புகைப்படம் ஒன்றை.. அவளது தோழிகள் யாரிடமாவது இருந்து வாங்கி அனுப்ப முடியுமா என…
சிரித்து விட்ட, ருத்ரன், "டேய் ஹரி.. அந்நியாயம் பண்றடா நீ", என்று அவனை கலாய்த்தவன்…
உடனே தன் ஆட்களின் மூலம் மிதிலாவின் பள்ளி புகைப்படம் பலதை வாங்கி வந்து.. ஹரிக்கு ஸ்கேன் செய்து அனுப்பி வைத்துவிட்டான்..
மேலும் இரண்டு நாட்கள் தங்கிய ஹரி, வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மருத்துவர்களை பார்த்து பேசி, இறுதியாக அனைவரையும் ஒன்று திரட்டி, கலந்தாலோசித்து, அடுத்து என்ன விதமான சிகிச்சை பிரித்திவ்விற்கு செய்யலாம்.. என்று பல அடுத்தடுத்த முடிவுகளை கேட்டுக்கொண்டு.. திருப்தியுடன் கிளம்பினான்..
இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்தும் இருந்தான்.
தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஹரி, உடனே ருத்ரனிற்கும்.. மித்ராவிற்கும் அழைத்து.. அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டான்..
மித்ராவிற்கு, ஹரியின் வார்த்தைகளை கேட்ட பிறகு.. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இதமாக இருந்தது..
நம்பிக்கையுடன்.. தன் எதிர்காலம் பிரித்திவ்வுடன்.. நன்றாக இருக்கும்.. என்று அந்நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்..
*****************************
அன்று இரவு மணி 10, ஹரி, போஸ்டனில்(Boston).. சியாட்டில்(Seattle) செல்லும்.. விமானத்தில் உட்கார்ந்து இருந்தான்…
அடுத்த பத்து நிமிடத்தில், வானில் சீராக பறக்க ஆரம்பித்தது விமானம்.
இரவு நேரம் என்பதால், விமானத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது.
அக்கணம் ஹரியின் மனதை, இறுதியாக, மிதிலா அவனிடம், இங்கு கிளம்பி வருவதற்கு முன்பு கூறியவைகளே ஆக்கிரமித்தது.
ஆதிகேசவன், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் இறந்து விட்டதாகவும், அவன் உடலை ஏரியில் வீசிவிட்டு வீடு திரும்பியதாகவும், அன்று இரவு, ட்ரீ ஹவுஸில் வைத்து, ஹரி மிதிலாவிடம் சொன்னதும்..
"அந்த அங்கிள்.. உண்மையாவே இறந்துட்டாங்களா டாக்டர். கண்டிப்பா திருப்பி வர மாட்டாரு இல்ல.. ", என்று திரும்பத்திரும்ப கேட்டுக்கேட்டு.. நிம்மதி அடைந்துக்கொண்டே இருந்தாள்.
ஆனால் மிதிலாவிற்கு.. மாறான மனநிலையில்.. அன்று ஹரி இருந்தான்..
ருத்ரனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய ஹரிக்கு.. ருத்ரன் ஆறுதல் சொல்ல வேண்டி இருந்தது..
ஒரு உயிரை துடிதுடிக்க வைத்து.. சட்டத்திற்கு புறம்பாக.. கொன்று.. மறைத்தது.. ஹரியின் மனதை ஏதோ செய்துக்கொண்டோ இருந்தது..
அவன் மனதை அறியாத மிதிலா "இந்த மூனு வருஷமும் எனக்கு ரொம்ப பயத்தோடயே போச்சு டாக்டர்.. அதுலையும் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அந்த அங்கிள்ள திரும்ப பார்த்துட்டு.. கடவுளே ரொம்ப பயந்துட்டேன்.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.. ", என்றவள், ஹரியை கட்டிக்கொண்டாள்..
மிதிலாவை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்த ஹரி, "நான் உன் மேல.. ரொம்ப கோவமா இருக்கேன் பேபி.. கொஞ்சம் வாய மூடி.. அமைதியா தூங்கு..", என்றான் கடுகடுவென..
அதில், "நான் என்ன பண்ணேன் உங்களை.. என் மேல என்ன கோபம்.. சும்மா நடிக்காதீங்க..", என்றவள்.. ஹரியின் மீதே ஏறி படுத்துக்கொண்டாள்..
'என்னையா தள்ளி விடுகிற.. இப்ப என்ன பண்ணுவ..' என்பதுபோல் இருந்தது மிதிலாவின் செயல்..
ஹரி, மிதிலாவின் நெருக்கத்தில் கொஞ்சம் மனம் இறங்கினான்....
"உன்னை வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாதுன்னு தானே பேபி சொல்லி இருந்தேன்..
ஏன் என் பேச்சை கேட்காமல் அன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு வந்த..
அட்லீஸ்ட் என்கிட்ட சொல்லிட்டாச்சு வந்து இருக்கலாம் இல்ல.. எப்பவாவது நான் உன்னை வெளியே போக கூடாதுன்னு சொல்லி இருக்கேனா.. இல்ல உன்னை கண்ட்ரோல் பண்ணி இருக்கேனா பேபி..
அப்படிப்பட்ட நான் உன்னை வெளியே போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன்னா.. ஏதோ ஒரு வேலீட் ரீசன் இருக்கும்னு ஏன் உனக்கு தோனலை பேபி.. ", என்றான் அழுத்தமாக..
மிதிலா, அமைதியாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.. ஹரியின் மீது இருந்து இறங்கி.. அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்துக் கொண்டாள்..
ஹரி, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு.. மிதிலாவை தன் புறம்… அவள் திமிர திமிர விடாமல்.. அழுத்திப்பிடித்து இழுத்து.. தன் நெஞ்சின் மீது மீண்டும் தூக்கி போட்டுக்கொண்டு… அவள் முகத்தை நிமிர்த்தி..
"உன் நல்லதுக்காக தாண்டா பேபி கேட்கிறேன்.. அதனால தானே இவ்வளவு ப்ராப்ளம்.. கொஞ்சம் யோசிச்சு பாருடா.... ஐ நோ யு ஆர் சோ யங்.. பட் நாட் டூ யங் ரைட்", என்றவன்..
மேலும், "உனக்கு இப்ப மேரேஜ் ஆகிடுச்சு.. உனக்குன்னு இப்ப ஒரு ஃபேமிலி இருக்கு பேபி.. உன்னோட ஹஸ்பண்டையும் குழந்தையும் பாத்துக்குற ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு இப்ப லைஃப்ல இருக்கு.. எனக்கு புரியுது.. அன்னைக்கு நீ எனக்காக தான்.. ஆசையா சாப்பாடு எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்தன்னு.. பட் பாரு என்ன ஆச்சுன்னு", என்று பொறுமையாக அவளுக்கு எடுத்துக்கூற..
மிதிலா முதல் முறை ஹரி கடிந்ததில், தன் வாயையே திறக்கவில்லை..
ஹரி மீண்டும், "ஏதாச்சும் சொல்லுடா பேபி.. ஏன் அமைதியாவே இருக்க.. ஏன் உன்னை கேள்வி கேக்கற உரிமை எனக்கு இல்லையா பேபி..", என்றான், அவளின் முகவாட்டத்தை தாங்க முடியாமல்....
மறுகணமே மிதிலா அமைதியாக ஹரியின் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு.. "சாரி அம்மூ.. இனி நீங்க சொல்றத கண்டிப்பா கேட்கறேன்.. நானும் இனி எல்லாத்தையும் யோசிச்சு செய்றேன்..", என்று சரணடைந்தாள்..
ஹரி குனிந்து.. மிதிலாவின் தலையில் முத்தமிட்டு.. "தட்ஸ் மை கேர்ள்.. குட்", என்றவன். "ஓகே அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல ஆதிகேசவன்ன பார்த்ததுல இருந்து நடந்ததை ஒவ்வொன்னா சொல்லு பேபி..", என..
மிதிலா, காரிலிருந்து இறங்கியதிலிருந்து.. ஆதிகேசவனை பார்த்தது.. பேசியது.. அவன் மிரட்டியது.. மயங்கியது, என அனைத்தையும் ஒன்று விடாது சொல்லிவிட...
ஹரி, "ஓகே பேபி.. அவனை பார்த்ததும்.. நீ ஏன் தப்பிக்க எதுவுமே பண்ணல.. அவனை பார்த்ததும் ஓடி இருக்கலாம் இல்ல பேபி", என வினவ...
மிதிலா, "எனக்கு சட்டனா பார்த்ததும்.. என்ன பண்றதுன்னு தெரியல.. ரொம்ப பயந்துட்டேன்.. அவங்க தலை முடியை புடிச்சுக்கிட்டு திட்ட ஆரம்பிச்சதும்.. எனக்கு உடம்பெல்லாம் வெலவெலன்னு வந்து.. மயக்கம் வந்துடுச்சு..", என்றாள்.. இன்றும் உடல் நடுங்க...
ஹரி, அவளின் முதுகை நீவியப்படி, "நீ கொஞ்சம் கூட உன் மூளைய யூஸ் பண்றதே இல்ல பேபி.. ஃபர்ஸ்ட் அவனை பார்த்ததுமே..
ஒன்னு திரும்பி, உன்னோட கார் பக்கம் ஓடிப்போய்.. காரில் ஏறி உட்கார்ந்து.. லாக் போட்டு காரை ஸ்டார்ட் பண்ணி ஓடி இருக்கலாம்"...
"இல்ல.. ஹாஸ்பிடலுக்கு உள்ள வாச்சும் ஓடி வந்து இருக்கலாம்.. ஓகே அது எதுவும் உன்னால பண்ண முடியலைன்னா கூட",..
"உன்னோட கார் கீ செயின்ல.. நான்தான் சின்னதா பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்.. அட்டாச் பண்ணி கொடுத்தேன் இல்ல.. அதையாச்சும் எடுத்து அவன் மூஞ்சில அடிச்சு இருக்கலாம்.. ஆனா நீ.. இது எதுவுமே பண்ணாம வாங்க அங்கிள்.. உங்களுக்காகத்தான் நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. கடத்திட்டு போங்கன்னு.. மயக்கம் போட்டு விழுந்து வச்சு இருக்க..”, என்றான் சிறிது கடுமையுடன்..
அதில் பயந்த மிதிலா, "நான் என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு தான் இருந்தேன்.. சாப்பிடாததுனால மயக்கம் வந்துடுச்சு.. நான் என்ன பண்ண முடியும் அதுக்கு.. ", என...
ஹரி, "ஒருவேளை சாப்பிடலைன்னா ஒன்னும்.. உன்ன மாதிரியான ஹெல்த்தியான சின்ன வயசுல இருக்கிறவங்களுக்கு.. மயக்கம் வராது.. நான் கூட தான் அன்னைக்கி நைட் வரையுமே சாப்பிடல.. எனக்கு என்ன மயக்கமா வந்துச்சு.. டோன்ட் டெல் மீ எ சில்லி ரீசன் பேபி.. நீயே உன்னை ரொம்ப நர்வஸ் பண்ணி.. நாம சாப்பிட வேற இல்லை.. பயமா வேற இருக்கு.. அடுத்து இவன் கண்டிப்பா நம்மள விட மாட்டான்னு முடிவுக்கு வந்து... அந்த சிட்டுவேஷன ஹேண்டில் பண்ண தைரியம் இல்லாமல்.. மயக்கம் போட்டு விழுந்துட்ட.. நிம்மதியா இருக்கும்னு..", என்று திட்டியவன்..
“அடுத்து ஹோட்டல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு..", என…
மிதிலா, ஆதிகேசவன் தன்னை கட்டிலில் தூக்கி போட்ட உடன்.. தான் எழுந்ததை சொல்லிவிட்டு.. அடுத்த சில வினாடிகள் மௌனமாக இருந்துவிட்டு.. என்னை கட்டி போட்டுட்டாங்க.. அடுத்து நீங்க வந்துட்டீங்க, என்று முடித்து விட்டாள்..
ஹரி, "நீ அங்கேயும் தப்பு பண்ணி இருக்க.. அறுபது வயசான ஆதிகேசவன்ன.. இருபது வயசுல இருக்க உன்னால.. கொஞ்சம் கூடவா டா எதிர்க்க முடியாது.. உன் காலா பிடிச்சு கட்டும்போது.. ஃபுல் போர்ஸ்ஸோட எட்டி உதச்சுட்டு.. ஸ்பீடா ஓடி வந்து.. கதவை ஓப்பன் பண்ண ட்ரை பண்ணி இருந்து இருக்கலாம் இல்ல.. டோர் ஓப்பன்ல தான் டா இருந்துச்சு.. ஏன்டா எதுவுமே நீ பண்ணல.. நான் மட்டும் வராமல் போயிருந்தால் யோசிச்சு பாரு.. ஏன் என்னை பத்தி நீ யோசிக்கல.. நீ இல்லாம எப்படி நான் இருப்பேன்.. நீ வாட்ச் அன்னைக்கு கட்டாம வந்து இருந்தா.. என்ன ஆகி இருக்கும்.. அதை விட நான் வேற டெலிவரி பாக்க போயிருந்தா.. உன்னை திரும்பி பார்த்து இருப்பேனா கூட எனக்கு தெரியல.. பிளீஸ் பேபி இனி எனக்காக கவனமா இரு", என்றான் மிக வருத்தமாக.
கடைசியில் ஹரியின் கண்களின் ஓரம் இருந்து கூட அந்நாளில் நிலையில், நீர் கசிந்து விட்டது…
ஹரியின் வேதனையையும், கடுமையையும் தாங்க முடியாத மிதிலாவோ.. அச்சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று புரியாது.. அழத்தொடங்கியவள்.. "நான் ஓடப் பார்த்தேன்.. ஆனா ஆனா அவரு என் புடவையை பிடிச்சு இழுத்து…", என்றவள்.. கணவனாகவே இருந்தாலும் எப்படி சொல்வது என்று விக்கித்து.. முகத்தை மூடி அழத் தொடங்கிவிட்டாள்..
ஏற்கனவே ஒருவித அழுத்தத்தில் இருந்த ஹரிக்கும், அன்று ஏனோ சற்று பொறுமை குறைந்து இருந்தது..
அதிலும் ஏனோ ஆதிகேசவனை பற்றி நினைத்தாலே அவனுக்கே பகிரென இருந்தது..
அப்படி பட்டவனிடம் போய் இவள் மாட்டிக்கொண்டாளே என்ற எண்ணமே அவன் மனதில் ரிங்காரமிட…
"ஷட் டப் மிதிலா.. டோன்ட் க்ரை.. இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழற.. ஸேரிய பிடிச்சு இழுத்தா என்ன.. அதை சுத்தி அவிழ்த்து போட்டுட்டு ஓட வேண்டியதுதானே.. நியுடாவா ஓட போற.. என்ன கேட்டா ஒரு சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருந்தா.. டிரஸ் இல்லாம ஓடணும்னா கூட.. அப்படியே ஓடி தப்பிக்கனும்.. இந்த மாதிரியான.. ரீசன்க்காக எல்லாம் நம்ம உயிரை.. நாம விடக்கூடாது..", என..
மிதிலாவிற்கும் பட்டென்று அக்கணம் பயங்கர கோபம் வந்துவிட்டது..
அதுவும் ஹரி துணியில்லாமல் கூட ஓடி தப்பிக்க வேண்டும் என்றதும், அவளுக்கு ஏதேதோ எண்ணங்கள்..
அவனின் அனுபவம் மிக்க, அமெரிக்க கலாச்சார பார்வையும், திருச்சியில் பிறந்து வளர்ந்த சிறு பெண்ணின் பார்வையும் எப்படி நேராகும்…
முதல் முறை இருவருக்குமான ஊடல் ஆரம்பித்தது..
படுக்கையில் இருந்து வெடுக்கென எழுந்த மிதிலா,
"நான் ஸ்டுப்பிட் தான்.. இந்த ஸ்டுப்பிட்டை உங்களுக்கு பிடிக்கலைனா.. என்கூட இனி பேசாதீங்க.. நான் எங்க வீட்டுக்கு போறேன்..", என்றவள்.. தன் உடையில் கண்களை துடைத்துக் கொண்டே, கீழே போக கிளம்பிவிட்டாள்.. ஏதோ அடுத்த தெருவில் தான் அவளின் அம்மா வீடு உள்ளதை போல்..
அதில் தான் ஹரி, சற்று தன்னிலை அடைந்து.. மிதிலாவிடம் நான் அதிகமாக எதிர்பார்க்கிறோமோ.. நான் தானே அவளுக்கு அனைத்தையும் கற்றுத்தர வேண்டும் என்று நினைத்தவன்..
பட்டென எழுந்து விரைந்து, ஒரே எட்டில் மிதிலாவை பிடித்து.. "சாரி டா பேபி.. எனக்கு வேற ஒரு டென்ஷன்.. நீயும் இப்படி பண்ணது எனக்கு கோபம் வந்துடுச்சு.. என்னையும் மகிழ்மதியும் பத்தி நீ கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல்.. தப்பிக்காமல் இருந்துட்ட.. அதுதான் எனக்கு கோபம் பேபி.. சாரிடா என் செல்லம் இல்ல.. குட்டிப் பட்டு இல்ல", என்றப்படி, அவளை பின்புறம் இருந்து இடையோடு பற்றி, தூக்கிக்கொண்டு வந்து.. தன் மடியில் வைத்தப்படி பெட்டில் உட்கார்ந்தான்..
இன்றோ ஹரி.. மிதிலாவிடம் குழந்தையைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தான்.. ஆனால் அனைத்துமே மாறி விட்டு இருந்தது....
இப்பொழுது இருக்கும் மனநிலையில் இவ்விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று ஹரி நினைக்க..
அவன் மார்பில் தன் முகத்தை அழுந்த புதைத்த மிதிலா.. முதல்முறை தன் வாயைத் திறந்தாள்..
இதுநாள் வரை யாரிடமும் சொல்லாமல் மனதிலேயே பூட்டி வைத்து.. மருகிய.. அந்த சம்பவத்தை பற்றி.. தன்னவனிடம் பகிர தொடங்கினாள்..
மூன்று வருடங்களாக மிதிலாவின் மனதில் படிந்து இருந்த அந்த மிகப்பெரிய சம்பவமும்.. அது கொடுத்த பயமும் தான்.. அவளை பயங்கரமாக உலுக்கி, உருக்கி இருந்தது..
ஆதிகேசவன், ருத்ரனுக்கு திருமணம் செய்யவென.. மிதிலாவை.. விஷ்ணுவையும், துளசியையும் பயங்கரமாக தாக்கிவிட்டு இழுத்து சென்ற அன்று, தனக்கு காரில் நடந்ததை ஹரியிடம் அழுகையுடன் சொல்லத் தொடங்கினாள்..
அன்று காரில் ஆதிகேசவன் மிதிலாவை காரினுள் சீட்டில் பிடித்து தள்ளிவிட்டு.. காரை எடுக்க சொன்னவன்.. மறுகணம் அவளை நெருங்கி அமர்ந்து.. அழுது கொண்டு இருந்தவளை பிடித்து இழுத்து.. அவள் தோளினை சுற்றி இறுக்கமாக தன் கையை சுற்றி போட்டவன்..
அவள் திமிர திமிர.. தன் பலம் மொத்தமும் கொடுத்து அவளின் தோளினை பற்றி அழுத்தியவனின் மற்றொரு கரம், அவளுடலில் எல்லை மீறி அவளை தீண்ட ஆரம்பித்தது..
அன்று மிதிலாவோ, வெறும் 17 வயது சிறுப் பெண்..
ஆதிகேசவனின் செயலில் மிகவும் அதிர்ச்சி அடைந்த மிதிலா, "ஐயோ என்ன பண்றீங்க, எனக்கு பயமா இருக்கு.. வலிக்குது", என அவனின் கையை தன் மீது இருந்து எடுக்க முயன்று தோற்று.. வேறு வழியில்லாமல்.. குனிந்து அவன் கையை கடிக்க ஆரம்பித்தாள்.. தன் பலம் கொண்ட வரை..
அதில் வலியெடுக்க.. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன்.. மிதிலாவின் தலைமுடியை பிடித்து தூக்கியவன்.. பட்டென சீட்டில் இருந்து கீழே கால்வைத்துக்கொள்ளும் இடைவெளியில் தள்ளிவிட்டு..
"யாரு மேல கை வைக்கிற நாயே".. என அவளை திட்டி.. தன் கையை தேய்த்துக்கொண்டே.. தன் கேவலமான ஆசை நிறைவேறாத கோபத்தில், ஆத்திரம் அடங்காமல்.. தன் செருப்பு காலாலேயே.. அவளின் நெஞ்சின் மீது ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.. அங்கு அவள் தொட விடாமல் தடுத்ததற்கு.
அக்கணம் மிதிலாவிற்கு வலியில் உயிரே போயிவிட்டு இருந்தது..
பூவை விட மென்மையான உடல் பாகங்களை கொண்ட பெண்ணவளின் அங்கத்திலோ வலியோ வலியோ..
தன் மார்பினை வலித்தாங்காது இருக்கையால் பற்றியவள் கதறி துடித்தாள்..
டிரைவர், மிதிலாவின் அக்கதறலை தாங்கமுடியாமல்.. புயல்போல் காரை வீட்டை நோக்கி செலுத்தினான்..
அதைக்கூட ஒருவித போதையாய், வெற்றியாய் பார்த்த ஆதிகேசவன், "நசுக்கிடுவேண்டி உன்னை.. யாருகிட்ட.. ", என்றவன் மேலும் அவளுக்கு அர்த்தம் கூட தெரியாத வார்த்தைகளை உபயோகித்து அவளை திட்டி தீர்த்தவன்..
அவளின் இரட்டை பின்னலில், ஒன்றை பற்றி, மீண்டும் மேலே இழுத்தவன்..
"உன் குடும்பத்துக்கு ரொம்ப கொழுப்பு டி.. உன் ஆத்தா காரி.. உன் அக்கா.. அடுத்து இப்ப நீ.. நான் யாருன்னு உங்களுக்கு தெரியல.. இப்ப காட்றேன்.. ", என்றவன்..
டிரைவரிடம் திடீரென, "டேய் காரை நிறுத்துடா", என்றவன்,
"உன் உடம்பில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாமல்.. உன்னை இப்போ காரைவிட்டு வெளியே தள்ளிவிட்டுட்டு போறேன்.. அப்பதான் உங்களுக்கு இருக்க கொழுப்பு அடங்கும்.. பிச்சைக்கார நாயிங்களா..", என்றவன்.. பயத்தில் அதிர்ந்து கிடந்தவளின், ஸ்கூல் யூனிபார்மில், முன்புறம் இருந்த ஷர்ட் பட்டன் மீது, தன் கையை அவிழ்க்க வைக்க…
மிதிலாவின் உலகமே உறைந்தது.
அப்பொழுதுதான் ருத்ரன், ஆதிகேசவனுக்கு அழைத்து.. மிதிலா எங்கே.. என்று விசாரித்து.. திட்டத் தொடங்கினான்..
டிரைவரும் காரை நிறுத்தாமல், அதிவேகத்தில் வீட்டிற்கு விட்டுவிட்டான்.
ஆதிகேசவன், ஃபோனில் ருத்ரனை, 'வீட்டுக்கு வா..', என்று விட்டு உடனே வைத்து விட்டான்.. அதற்குள் அன்று வீடும் வந்து விட்டு இருந்தது ..
தெய்வ செயலாக அன்று மிதிலா தப்பித்து இருந்தாள்..
அவளுக்கு அன்று நடந்துவிட்ட வன்கொடுமையை பற்றி, மிதிலா வெளியே இன்றுவரை மூச்சு விடவில்லை..
இதனை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாது, உள்ளுக்குள்ளேயே பயத்துடன் அந்த நிகழ்வினை வைத்துக்கொண்டு மருகினாள்…
அவளின் உடல் முற்றிலும் உருகி.. பொலிவிழந்ததற்கு.. முதல் காரணம் ஆதிகேசவனின் அச்செயலே..
முதலிரவு அன்றுக்கூட ஹரியின் தொடுகையில், அவன் மீது கடலளவு காதல் இருந்தாலும், மிதிலா பதறியது இதனாலேயே.
பிறகு தான் கயல்விழி மேலோட்டமாக அவளுக்கு தாம்பத்திய பாடம் எடுக்க.. அவளும் பொறுத்து அமைதியானாள்..
அமெரிக்கா வந்த பிறகுதான், திரும்ப நிச்சயம் ஆதிகேசவன் இங்கு வரமாட்டான் என, மிதிலா சிறிது அந்த நிகழ்வில் இருந்து வெளிவந்து இருந்தாள்.
ஆனால் மீண்டும் ஆதிகேசவன் வந்து அவள் முன்பு நின்று விட்டானே..
மிதிலாவோ நடந்ததை பட்டியலிட.. ஹரி அதிர்ந்து விட்டான்..
“இதனால் தான் அம்மூ, எனக்கு அந்த அங்கிள்னாலே, ரொம்ப பயமா இருக்கு.. எவ்வளோ நாள் அங்க வலிச்சுட்டே இருந்துச்சு தெரியுமா.. அம்மாக்கிட்ட கூட நான் இதை சொல்லல.. எப்படி சொல்றது தெரியாம” என்று அவள் அழ..
ஆதிகேசவன் அவளின் மார்பில், காலால் உதைத்ததை ஹரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
இளவம் பஞ்சை போன்ற மென்பாகம் ஆகிற்றே…
சாதரணமாக பெண்கள் எங்காவது இடித்துக்கொண்டாள் கூட அவர்களால் தாங்க முடியாதே..
மிதிலாவை இறுக அணைத்துக் கொண்டான்..
அக்கணம் ஆதிகேசவனை, சட்டத்திற்கு புறம்பாக கொன்ற குற்ற உணர்ச்சி ஹரிக்கு முற்றிலும் நீங்கி விட்டது..
ஏன் அவன் சீக்கிரம் செத்துவிட்டான்.. இன்னும் அவனை ஏதாவது செய்து இருந்திருக்க வேண்டும்.. என்று ஹரிக்கு வெறி கூடியது..
நிமிடங்கள் சில கடக்க..
ஹரி ஒரு மருத்துவனாகவும், கணவனாக, மிதிலாவின் நிலையை உணர்ந்து..
அவளை இன்னும் பேச வைத்து..
அவளின் மனதில் இருந்தவற்றை வெளிக்கொணர்ந்து..
அதற்கு ஏற்ற வகையில்.. அவளை மனரீதியாக சமாதானப்படுத்தி.. தேற்றி.. அவளின் மன பாரத்தை.. ஹரி அன்று இரவு முழுவதும் இறக்கினான்..
மிதிலா அன்று அனுபவித்த வலிக்கு இன்று ஹரி தன் காதலாலும், வருடலாலும் இதமாக, அவள் மேனியில் மருந்திட தொடங்கி, அவ்விடியலை அவளுக்கான இன்ப விடியலாக மாற்றி இருந்தான்..
மறுதினம் தான் ஹரி, அவசர அவசரமாக போஸ்டனிற்கு, உடனே அப்பாயின்மென்ட் கிடைத்ததால்.. பிரித்திவ்விற்காக கிளம்பிவிட்டான்.
இதோ மீண்டும் மிதிலாவை நோக்கிய அவனின் பயணம்..
இன்றாவது, மிதிலா உடன், ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என்று ஹரி முடிவு செய்திருந்தான்..
ஹரியின்.. மனம் முழுக்க.. அவனின் பேபியும்.. அவன் பேபியின் பேபியும் தான் நிறைந்து இருந்தனர்..
ஹரி, புன்னகையுடன்.. தன் இடது மார்பின் மீது.. தன் வலது கையை வைத்து அழுத்தி.. " லவ் யு பேபிஸ்.. சி யூ சூன்..", என்றுவிட்டு கண்ணை மூடினான்.
*****************************
அதே நேரம் அங்கு திருச்சியில்...
ருத்ரன், ஆதிகேசவன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும்.. திருச்சியில் இருந்ததாகவும்.. தடயங்களை ஏற்படுத்திவிட்டு..
ஐந்து தினங்களுக்கு பிறகு, ஆதிகேசவனின் கார், திருச்சிக்கு அருகில் உள்ள கொல்லிமலையில் இருந்து உருண்டு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்றும்.. உடல் பல்லத்தாக்கில் தேடப்பட்டு கொண்டு உள்ளது என்றும்.. ஆதிகேசவனின் கேசையே மொத்தமாக முடித்து விட்டான்..
ஆதிகேசவனின் இறப்பு யார் கண்ணிலும் ஒரு துளி கண்ணீரை வர வைக்கவில்லை..
மாதவியே அரக்கன் அழிந்தான் என்றுதான் சந்தோஷப்பட்டார்.. இதுதான் அவன் தன் வாழ்நாளில் சம்பாதித்தது.
ஆதிகேசவன் இந்த உலகத்தில் இல்லை என்ற செய்தி, விஷ்ணு குடும்பத்தின் மன நிம்மதியை சற்று மீட்டது..
ருத்ரன் விரைந்து, விஷ்ணு.. துளசி.. மித்ரா.. மற்றும் பிரித்திவ்விற்கு அமெரிக்க செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்..
மிதுன்ஜார்ஜ் ஆதித்யன் மூலம், விஷயம் அறிந்ததும்.. மும்பையிலிருந்து கேரளாவிற்கு விரைந்து வந்து.. தன் நண்பன் பிரித்திவ்வையும்.. மித்ராவையும்.. பார்த்துவிட்டு சென்று இருந்தான்..
*******************************
கருத்துகள்
கருத்துரையிடுக