உண்மை காதல் -3

அத்தியாயம் -3


ஹரியின் சித்தப்பா வீட்டில், அமோக வரவேற்பு இருவருக்கும். 


அனைவரும் பயணம் குறித்த விசாரிப்புகளை நடத்தினர்.


ஹரி அவர்களை, ஒரு சில முறைகள் மட்டுமே பார்த்து இருக்கின்றான். 


சித்தப்பா மற்றும் அத்தை பிள்ளைகளிடம் சிறிது‌ நேரம் அமர்ந்து உரையாடியவன்..


பிறகு சென்று நன்றாக வெதுவெதுப்பான நீரில், பயண அலுப்பு போக குளித்துவிட்டு வந்து, அனைவருடனும் பேசியப்படி, காலை உணவை திருப்தியாக உண்டான்..


பெரியவர்கள் மற்றும் இவர்களை தவிர, வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரும், கல்லூரிக்கும், அலுவலகத்திற்கு சென்று விட..


அன்னபூரணிக்கு நீண்ட நேரம் கால்களை தொங்கவிட்டப்படி பயணித்ததில், கால்கள் இரண்டும் நன்றாக வீங்கி விட்டது.


ஹரி தன் அம்மாவின் காலில் வீக்கத்திற்கு மருந்து தடவிவிட்டு, பாத்ரூமில் ஹீட்டரில் சுடுநீர் பிடித்து வந்து, அதில் லேவண்டர் மற்றும் வேறு சில மூலிகை எண்ணெய்களை விட்டு,  அவர் கால்களை அந்நீரில் சிறிது நேரம் வைத்திருக்க செய்து.. வலி நிவாரணி மாத்திரைகளை பார்த்து கொடுத்து, அவரை ஓய்வெடுக்கச் செய்தவன்.. அவர் தூங்கியப்பின் தான் தூங்க சென்றான்.


அவன் சித்தி, அத்தைகளுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆச்சரியம்.


இங்கு தான் சொம்பில் தண்ணி கொஞ்சம் எடுத்து தர சொன்னால் கூட, பிள்ளைகள் உடம்பு வளைந்து எடுத்துவந்து கொடுப்பதில்லையே.. அப்படியே கொடுத்தாலும் அதைப்பற்றி நான்கு தினங்களுக்கு வேறு பெருமை பேசுவார்களே..


இதில் எங்கிருந்து காலெல்லாம் பிடித்து விடுவது.


அன்று மாலை, மீண்டும் அனைவரும் வந்ததும், ஒன்றாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர்.


அன்னபூரணிக்கு பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது.


ஹரிக்கு தான் சிறிது போர் அடிக்க துவங்கியது அனைவரும் தொடர்ந்து பேச பேச.


மறுநாள், நாள் நன்றாக இருப்பதால், நாளைக்கே ரெஜிஸ்ட்ரேஷன் வைத்துக் கொள்ளலாம் என்றார் ஹரியின் சித்தப்பா.


சொத்துக்களை இரண்டாகப் பிரித்து, அவரின் பங்குகளை அவரது மகன்களின் மீது register செய்வதாகவும், பாதி பங்கை ஹரியின் மீது பதிவு செய்துவிடுவதாகவும் கூறினார்.


அன்னபூரணி, "பெண் பிள்ளைகளுக்கு, எதுவும் சொத்து கொடுக்கலையா மாமா??", என்று விசாரிக்க.


அதற்கு அவர், "இல்லைமா நம்ம வழக்கப்படி ஆண் வாரிசுக்கு தான சொத்துக்கள் தருவோம், பெண்களுக்கு கல்யாணத்தின் பொழுது நகைகளைப் போட்டு அனுப்புவோமே அவ்வளவு தான்", என்றார்.


இது என்ன முறை என்று மேலும் தெரிந்துக்கொண்ட ஹரி, "அங்கிள் நான் ஒன்னு சொல்லவா தப்பா எடுத்துக்காதீங்க", என்றான்.


அவர், "சொல்லுப்பா ஹரி.. எதுனாலும் மாத்திக்கலாம்.. ஒன்னும் பிரச்சனை இல்லை..", என்றார். 


அவர் ஹரிக்கு பாகப்பிரிவினையில் ஏதோ பிடிக்கவில்லை என்று தான் நினைத்தார்.


ஹரி, "என் பெயரில், எந்த சொத்தும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் அங்கிள், நீங்க எனக்குன்னு பிரிச்ச பங்கை, பாப்பாங்க பேரில் சமமா பிரிச்சு நாளை ரிஜிஸ்டர் செய்துடுங்க… அதற்கான பார்மாலிட்டிஸ்கு ஏற்பாடு செய்யுங்க ", என்றான் உறுதியாக.


உடனே அவர் பதறி, "தம்பி ஏன் இப்படி சொல்றீங்க, அன்னபூரணி சொல்லுமா நீயும்", என்றார்.


அன்னபூரணி, "இல்லை மாமா.. ஹரி சொல்றதுதான் சரி.. எனக்கும் அதுதான் சரின்னு படுது.. எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே அமெரிக்காவில் சொத்து இருக்கு, ஹரி அப்பா சம்பாதித்ததே நிறைய இருக்கு, ஹரியும் இப்போ நல்லாவே சம்பாதிக்கிறான்.. சேர்த்தும் வைக்கிறான்… எங்களுக்கு அதுவே போதும் மாமா, நீங்க பாப்பாங்க பேர்லயே எழுதுங்க", என்று விட்டார்.


சிலபல கோடிகள் போகும் சொத்தை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். அதுவும் ஒன்று விட்ட சித்தப்பா மற்று அத்தை பிள்ளைகளுக்கு. யாருக்கு மனம் வரும்.


சொத்து எவ்வளவு வந்தாலும், திருப்தி அடையாமல், மேலும் மேலும் வேண்டும் என்று தானே, உலகில் முக்கால்வாசிப்பேர் நினைப்பர்.


ஹரியின் சித்தப்பாவும் சொத்து வந்தால் போதும் என்று நினைக்காமல், ஹரிக்கு கொடுக்கவே சமாதானம் செய்தார்.


ஆனால் ஹரி திட்டவட்டமாக மறுத்து விட்டான்.


மறுநாள் ஹரியின் விருப்பப்படி பரபரப்பாக ரெஜிஸ்டர் வேலைகள் நடந்து முடிந்தது.


பெண் பிள்ளைகளுக்கு, ஓரிரு முறை மட்டுமே பார்த்து பேசிய ஹரியின் இந்த குணம்.. மிகவும் பிடித்து போனது..


சொந்த அப்பாவோ அல்லது சகோதரர்களோ கூட தங்களுக்கு சொத்துக்களை கொடுப்பதை பற்றி யோசிக்கவில்லை, ஆனால் ஹரி யோசித்து உள்ளான் என்று.


நாளை திருமணம் ஆகி போகும் இடத்தில், அவர்களை மட்டுமே சார்ந்து வாழாமல், தங்களுக்கும் சொத்து உள்ளது என்று தன்னம்பிக்கையுடன் வாழலாம் என்று எண்ணினர்.


ஹரி, எப்பொழுதுமே யாரின் புறத்தோற்றத்தை பார்த்தோ, அல்லது பாரப்பட்சம் பார்த்தோ யாருடனும் பழக மாட்டான். மருத்துவர்களுக்கு தேவையான முக்கிய குணமும் அதுதானே..!! 


எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், ஞாயப்படி மனிதநேயத்துடன் சமமாக நடந்துக்கொள்வான்.


ஹரியும் அன்னபூரணியும் இந்தியா வந்த வேலை, ஒரே நாளில் இனிதே முடிவடைந்து விட்டது.


************


இப்பொழுது மிதிலா, 11-ஆம் வகுப்பின் இறுதி கட்டத்தில் இருந்தாள். 


அடுத்த வருடம் முழுவதும் நீட் தேர்விற்கு, தயார் செய்ய வேண்டும் என்று, மிதிலா, தினமும் மாலை நேரத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களுக்கான டியூஷனிற்கு, பள்ளியில் இருந்தே நேராக சென்று விடுவாள். 


அன்று மாலை மிதிலா, எப்பொழுதும் போல், பள்ளி முடிந்தவுடன், ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வந்து, டியூஷன் செல்ல கிளம்பினாள்.. 


அன்று பார்த்து விஷ்ணு அவளுக்கு பாக்கெட் மணி கொடுத்து இருக்க, தோழிகளை அழைத்துக்கொண்டு செல்லும் வழியில் உள்ள, ரோட்டுக் கடைக்கு சென்றவள், வாழைக்காய் பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜியை வாங்கி, காரச் சட்னியுடன் வைத்து, நன்றாக ஒரு கட்டு கட்டிவிட்டு, ஜாலியாக சைக்கிளில் டியூஷன் செல்ல ஆரம்பித்தாள்.


அவள் மட்டுமே பன்னிரெண்டாம் வகுப்பு டியூஷனிற்கு செல்கின்றாள்.. எனவே அவள் தோழிகள் பிரிந்து அவரவர் வீட்டு பக்கம் சென்றுவிட்டனர்.


அங்கு அன்னப்பூரணி, அன்று மாலை, இங்குள்ள அவரின் சில தோழிகளை காண, ஒரு ஸ்மால் கெட் டு கெதர் போல் செல்ல முடிவெடுத்திருக்க.. 


ஹரிக்கு அவருடன் செல்ல விருப்பம் இல்லை.. கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும் போல் இருந்தது.. ஒற்றை பிள்ளையாக பிறந்து வளர்ந்திருந்தவனுக்கு, வீட்டில் எந்நேரமும் கும்பலாக இருப்பது, ஒருமாதிரி மூச்சை அடைத்தது... 


எப்பொழுதும் தனக்கான தனிமையை விரும்பும் ஹரிக்கு, இங்கு வந்ததிலிருந்து அது கிடைக்காமலேயே போனது..


அதனால் ஹரி, மாலை கடைக்கு செல்வதாக கூறி, உடன் வருகின்றேன் என்பவர்களை, தவிர்த்துவிட்டு நடந்தே சென்று பொறுமையாக வரலாம் என்று கிளம்பினான்… 


மிதிலாவிற்கு டியூஷன் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே, ஒரு மாதிரியாக வயிற்றில் சங்கடமான மாற்றங்கள் நிகழ.. அவளால் உட்காரவே முடியவில்லை. 


சிறிது பொறுத்து பார்த்துவிட்டு.. டியூஷன் சாரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி… பர்மிஷன் கேட்டுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.. 


அவள் நன்றாக படிக்கும் பெண் என்பதால், டியூஷன் ஆசிரியரும் எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.


ஹரி, ஷாப்பிங் சென்று விட்டு, காலார ஏர்போர்ட்ஸ்ல்(airpods) மெலோடி வகை பாட்டு கேட்டுக்கொண்டு, 7 மணி அளவில் சென்ற வழியே திரும்பி, அத்தெருவில் நடந்து வந்து கொண்டு இருந்தான்.


அப்பொழுது கொஞ்சம் இருட்டான பகுதியில், ஒரு பெண் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே உட்கார்ந்து கொண்டு இருப்பது நிழலாக ஹரிக்கு தெரிந்தது, அருகில் செல்ல செல்ல விசும்பல் சத்தம் வேறு அப்பெண்ணிடம் இருந்து ஹரிக்கு கேட்க. 


அந்த சத்தத்தில், ஹரி ஏதோ ஆபத்து போல் என்று நினைத்து.. உடனே பாக்கெட்டில் உள்ள பெப்பர் ஸ்பிரேயை(pepper spray) எடுத்து லாக்கை ரிலீஸ் செய்து எடுத்துக்கொண்டு.. அப்பெண்ணின் அருகில் சென்றான்.


அருகில் சென்றவுடன் தான் .. அது பள்ளி மாணவி போல் உள்ளது என்றும், நெருங்க நெருங்க சிறுபெண் என்றும் தெரிந்து கொண்டான்.. 


உடனே பதறி !! கீழே எங்கேயாவது விழுந்து விட்டாளோ?? என்று விசாரிக்க விரைந்து அருகே சென்றான்.


ஹரி மிதிலாவை நெருங்கி, "Hey girl !! what happened? Why are you crying? Are you hurt somewhere?? You need any help??", என்று மென்மையாக கேட்க.


அவனது ஆங்கில உச்சரிப்பின் வித்தியாசத்தில், சத்தம் வந்த உடனே மிதிலா பதறி யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்..!!


அவளுக்கு இருந்த வலியில், அவன் பேசிய அமெரிக்க ஆங்கிலம் வேறு, ஒன்றும் பட்டென்று புரியவில்லை.


ஹரி மிதிலாவின் முக பாவனைகளை வைத்து தமிழிலேயே, "கீழே விழுந்துட்டையா கேர்ள்?? எங்கையாவது அடிபட்டுடுச்சா.??, ஏன் அழற..??", என்றான்.


உடனே மிதிலா இல்லை என்பது போல் தலையை அசைத்தாள். 


அவள் எதுவும் சொல்லவில்லை என்றாலும், எதோ பிரச்சனை என்று புரிந்துக்கொண்டு, ஹரி மீண்டும் மிதிலாவிடம், "ஐ யம் டாக்டர் ஹரிகிருஷ்ணா", என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "உன்னோட நேம் என்ன கேர்ள்.. உன்னோட முகமே சரி இல்லையே.. என்ன ஆச்சு உனக்கு??", என்றான் மென்மையாக.... 


அதற்கும் மிதிலாவிடமிருந்து மௌனமே பதிலாக வந்தது.


ஹரி, மிதிலா தன்னை நம்பவில்லை.. தன்னிடம் அவளைப்பற்றி பகிர விரும்பவில்லை என்று புரிந்துகொண்டு.. மேலும் அவளைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்து… வேறு வழியில்லாமல் ரோட்டிலேயே அவளுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டான்..


சிறு பெண்ணை தனியாக இந்நிலையில் விட்டு செல்ல அவனிற்கு மனமில்லை. அதிலும் அவள் முகம் வேறு வெளுத்துப் போய் இருந்தது...


இதற்கிடையில் மிதிலாவிற்கு சட்டென்று அடிவயிற்றில் ஏற்பட்ட மின்னல் போன்ற ஒரு அதீத வலி.. சட சடவென்று அவளின் உடலின் இடுப்புக்கு கீழே உள்ள பாகங்கள் அனைத்திலும் பாய்ந்துச்செல்ல..


அவளால் அவ்வலியை சுத்தமாக தாங்க முடியவில்லை, "அம்மாஆஆ" என்று முனங்கியவளின், கண்களில் இருந்து நீர் பெருகியது… வலியில் மயக்கமே வரும் போல் இருந்தது அவளிற்கு.. வயிற்றை அப்படியே அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.


அவள் முக மாற்றத்தையும்.. கண்ணீரையும் பார்த்து பதறிய ஹரி என்ன செய்வது என்று தெரியாமல்.. மிதிலாவின் கையை பற்றிக்கொண்டு, "ஏன் டா அழற.. எதுவும் சொல்லவும் மாட்ற?? போலீஸ் இல்லைன்னா.. ஆம்புலன்ஸ் ஓட எமர்ஜென்சி நம்பர் எதாச்சும் சொல்லு டா, நான் ஃபோன்ல கால் செய்கிறேன், உன் வீடு எங்க இருக்கு??, இங்க பக்கத்துல இருக்கா??, உன்னோட பேரன்ட்ஸ் நம்பர் ஆச்சு சொல்லுமா??... உடம்பு முடியலையா.. இல்லை யாராவது ஏதாவது தப்பா நடந்துகிட்டாங்களா உன்கிட்ட", என்று கேட்டப்படி, அவள் கண்களை மென்மையாக துடைத்து விட்டான்.


ஏனோ அச்சிறு பெண்ணின் வேதனையை, அவனால் எளிதாக கடக்க முடியவில்லை.. மனம் ஏதோ செய்தது.. 


மிதிலாவிற்கும், ஹரி எதுவும் தவறாக நடக்காமல்.. இதையெல்லாம் கேட்டதும் அவன் மீது சிறிது நம்பிக்கை வந்தது.


ஹரி, தன் சித்தப்பாவிற்காவது, அழைக்கலாம் என்று ஃபோனை எடுத்த போழுது..


மிதிலா ஹரியிடம், "இல்லைண்ணா எனக்கு ஒன்னும் இல்லை, நான் டியூஷன் போக முன்னாடி, பிரெண்ட்ஸ் கூட ஈவ்னிங் வெளியே கடையில் சாப்பிட்டேன்.. ஒத்துக்கல போல.. திடீர்னு வயிறு வலிக்குது… சுத்தமா முடியல அண்ணா.. அதான்", என்றாள்..


ஹரி, "ஓ அப்படியா!! அதுக்கு ஏன் டா இங்க உட்கார்ந்து இருக்க?? food poison-க்குலாம்‌ இவ்வளவு பெயினா இருக்காதே?? அப்பன்டிக்ஸ்(appendix) ப்ராப்ளம் ஏதாச்சும் இருக்கா தெரியல.. இம்மீடியட்டா ஹாஸ்பிடல் போகனும்??", என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே.


மிதிலா பயந்து, "அய்யோ அப்படியா அண்ணா தெரியலையே.. எனக்கு விட்டுவிட்டு ரொம்ப வயிறு வலிக்குது .. பாத்ரூம் வேற போகனும் போல இருக்கு.. இதுவரை இப்படி ஆனதே இல்லை", என்றாள் சங்கடமாகவும்.. அழுகையாகவும்....


ஹரி அவளிடம், எங்கு? எப்படி வலிக்கின்றது? என்று கேட்டுவிட்டு, அவள் சொன்னதை வைத்து சந்தேகத்துடன், "உனக்கு இப்ப பீரியட்ஸ் டைமா??", என்றான்.


மிதிலா சட்டென்று விளங்காமல் முழித்தாள்.


ஹரி மறுபடியும், "மந்திலி 3 டு 5 டேஸ் பிளீடிங் ஆகும் இல்ல.. மென்ஸ்றுவல் சைக்கிள், அந்த டைம்மா உனக்கு இப்ப", என்றான் விளக்கமாக, தமிழில் எப்படி சொல்லுவார்கள் என்ற யோசனையுடன்.


மிதிலாவிற்கு அப்பொழுதுதான் புரிந்தது, ஹரி எதைப்பற்றி கேட்கின்றான் என்று. புரிந்ததும், மிகவும் வெட்கம் ஆகிவிட்டது அவளிற்கு..


அவள் மனதில், 'என்ன இவர் இவ்வளவு ஓபனா, அந்த டீடைல்ஸ் எல்லா சொல்லி கேட்கறார்.. அய்யயோ.. ' என்று இருந்தது.


அவள் முக சிவப்பையும், அவள் முகத்தில் தோன்றிய சங்கடமான பாவனையும் வைத்து, ஹரி அவளின் நிலையை புரிந்துகொண்டு..


மென்மையாக மிதிலாவின் கையைப் பற்றி உள்ளங்கையில் சிறிது அழுத்தத்தை கொடுத்து கொண்டே.. இதமான குரலில், "டோன்ட் வொரி, நான் கைனகாலஜி டாக்டர் தான், என்கிட்ட என்னன்னு சொல்லாம்.. எனக்கு என்னமோ உனக்கு ஃபுட் பாய்சன்னு தோனலை??.. அதனால் தான் வலிக்குதா ", என்றான்….


அவன் மறுபடியும் வேறு கேட்டு.. இவ்வளவு விளக்கம் சொன்னதற்கு பிறகு, வேறு வழியில்லாமல் மிதிலா தலையை குனிந்துக்கொண்டு…


"இல்லை நான் இன்னும் ஏஜ் அட்டெண்ட் பண்ணல… அர்ஜெண்டா பாத்ரூம் போகணும்னு தான், சார் கிட்ட கேட்டுட்டு உடனே வீட்டுக்கு கிளம்பினேன். வரப்ப ரொம்ப வயிறு விட்டு விட்டு வலியா இருந்துச்சு.. சைக்கிள் ஓட்டவும் முடியல, காலெல்லாம் ஒரே வலி, நிக்கக்கூட முடியலை, அதான் நான் கீழ உக்காந்துட்டு இருந்தேன்.. எப்படியும் லேட் ஆனா அப்பா என்னை தேடி இந்த வழியில் தான் வருவாங்கன்னு", என்றாள்.


ஹரி, "ஓ அப்படியா.. ஏன் டியூஷன்லேயே பாத்ரூம் போக வேண்டிதானே?? அதுக்கு ஏன் வீட்டுக்கு போகணும்??", என்றான் புரியாமல். 


மிதிலா, "இல்லண்ணா எங்க டியூஷனில் ஸ்டுடென்ட்ஸூக்கு ரெஸ்ட் ரூம் இல்லை.. அதான் வீட்டுக்கு கிளம்பினேன்", என்றாள்.


ஹரிக்கு இதைக் கேட்டதும்.. மிகவும் வருத்தம் ஆகி விட்டது.. என்ன ஊர் இது.. பாவம் பெண்பிள்ளைகள் அவசரம் என்றால் எங்கு செல்வார்கள்.. ஆண்களும் தான் எங்கு செல்வார்கள்.. இதனால் எவ்வளவு வியாதிகள் சின்ன வயதிலேயே வரும்...


ஹரி மிதிலாவிடம், "சரிவா உன்னை நான் உன்னோட வீட்டுக்கு கூப்பிட்டு போயி விடறேன்.. இவ்ளோ நேரம் ஏன் வலியில் இருக்கணும்.. உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லு..??, Cab புக் செய்றேன் நான்.. வீட்டுக்கும் இன்ஃபார்ம் பண்ணிடலாம்", என்றான் வரிசையாக சிந்தித்து.


அவனுக்கு அவளின் உடல் நிலை வைத்து பார்க்கும் பொழுது, இது ஃபுட் பாயிசனாக இருக்கும் என்று கொஞ்சமும் தோன்றவில்லை…


மிதிலா, "இல்லண்ணா நீங்க ஃபோன் மட்டும் தாங்க?? வீட்டுக்கு அப்பாக்கு கால் பண்ணி சொல்றேன்.. வந்துடுவாங்க சீக்கிரமே.. எங்க வீட்ல கார் இருக்கு??" என்றாள் . 


அவளால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. எங்கிருந்து ஹரியுடன் செல்வது.. சின்னப்பெண் என்பதால் உடனே அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என்றும், புதியவன் உடன் செல்லவும் மிகவும் தயங்கினாள்.


பிறகு மிதிலா, ஹரியின் ஃபோனிலிருந்து விஷ்ணுவிற்கு அழைத்து.. உடம்பு முடியவில்லை என்றும், ஹரியுடன் இருப்பதை பற்றியும்.. இருக்கும் இடத்தையும் சொல்லி, உடனே வர சொன்னாள் .


விஷ்ணு பதறி, மிதிலாவை ஹரியிடம்.. ஃபோனை கொடுக்க சொன்னார்.


கொடுத்ததும் விஷ்ணு ஹரியிடம், அவனைப்பற்றி விசாரித்துவிட்டு, "தம்பி நான் உடனே அங்கே வரேன் பா.. இப்பதான் கடையிலிருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கேன், இரண்டு நிமிஷத்துல வீட்டுக்கு போயிடுவேன்.. கார் எடுத்துட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரேன் பா, நீங்க அதுவரைக்கும் கொஞ்சம் என் பொண்ணுக்கு துணையா இருங்க ", என்று கேட்டுக்கொண்டார்.


ஹரி கண்டிப்பாக துணை இருப்பதாக உறுதி அளித்ததும் விஷ்ணு ஹரியிடம், "அங்க பக்கத்துல ஒரு பொட்டிக்(boutique) இருக்கும்.. அங்க வெயிட் பண்ணுங்க தம்பி, நீங்க ரெண்டு பேரும்… இப்போ நீங்க இருக்க இடம் கொஞ்சம் பாதுகாப்பு இல்ல தம்பி.. குடிகார பசங்க நடமாட்டம் கொஞ்சம் அங்க இருக்கும்", என்றார்.


ஹரி, "சரி அங்கிள், நீங்க பயப்படாதீங்க, நான் அங்க கூப்பிட்டு போய் கூடவே இருக்கேன்.. எதுக்கும் நீங்க வீட்ல லேடிஸ் இருந்தா கண்டிப்பா கூப்பிட்டு வாங்க", என...


விஷ்ணு, " ஏன் தம்பி, வேற எதாச்சும் பிரச்சினையா??, சொல்லுங்க நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப பயமா இருக்கு எனக்கு??", என்றார் பதறி.. 


ஹரி மிதிலாவிடம் இருந்து சிறிது விலகி வந்து குரலை தாழ்த்தி, "இல்லை அங்கிள்.. ஒன்னும் பயப்படுவதற்கு இல்ல, உங்க பொண்ணு சொல்ற சிம்டம்ஸ் எல்லாம் வச்சு பார்த்தா?? ஏஜ் அட்டெண்ட் பண்ணி இருப்பா போல தோணுது!!.. வேற ஒன்னும் இல்லை நீங்க பயப்படாதீங்க… நான் கைனோ டாக்டர் தான்", என்றான் ஆறுதலாக.


ஹரி சொன்னதை கேட்டதும்.. ஒரு தந்தையாக விஷ்ணுவிற்கு மனம் மிகவும் கஷ்டமாகிவிட்டது.. இந்நிலையில் தன் சின்ன மகள் தனியாக இருக்கின்றாளே என்று அவள் நிலையை எண்ணி..


மீண்டும் ஹரியிடம், "தயவு செஞ்சு கூடவே இருங்க தம்பி.. எங்கேயும் போயிடாதீங்க.. நான் என் வைஃப்ப கூப்பிட்டு உடனே வரேன்", என்றார்.


ஹரி, அவரிடம் சரி என்றுவிட்டு.. ஃபோனை வைத்துவிட்டு… மிதிலாவிடம், "பக்கத்தில் இருக்கிற பொட்டிக்கில்.. உன் அப்பா நம்மளை வெயிட் பண்ண சொன்னார்.. வா அங்க போகலாம்.. இங்கே சேஃவ்(safe) இல்லையாம்… அங்கே ரெஸ்ட் ரூம் இருந்தாலும் நீ போகலாம் ", என்றான் மென்மையாக.


சரி என்று எழுந்த மிதிலாவால் எழவே முடியவில்லை… தொடை இரண்டும் வலியில் கனத்தது.. 


அவள் முகத்தில் வலியின் சாயலைப் பார்த்து ஹரி மெதுவாக மிதிலாவின் கையை பற்றி தூக்கி நிறுத்தினான். 


அடுத்து சைக்கிளையும் எடுத்து நிறுத்திவிட்டு, அவள் ஸ்கூல் பையையும் எடுத்துக் கொண்டான். 


நிச்சயம் ரோடு உள்ள நிலையில் சைக்கிளில் பின்னாடி கூட அவளால் உட்கார்ந்து வர முடியாது என்று புரிந்துக்கெண்டவன்.. 


சைக்கிளை ஒரு கையால் தள்ளிக்கொண்டும், மிதிலாவை ஒரு கையால் தோளுடன் சேர்த்து அணைத்து பற்றிக் கொண்டும்… பொட்டிக் நோக்கி நடந்தான்.


மிதிலாவிற்கு, ஹரியின் மென்மையான அணைப்பும் சரி, பேச்சும் சரி, முழு பாதுகாப்பு உணர்வை தான் அந்நிமிடம் கொடுத்தது…


தந்தைக்கு பின் அவளை அரவணைக்கும் முதல் ஆண் மகன் ஹரி.. 


இப்பொழுது அவளிற்கு அவனை பார்த்து எந்த பயமும் இல்லை.. 


ஹரியை பொருத்தவரை, இந்த உதவி எல்லாம்.. ஒன்றுமே இல்லை... ஒரு நல்ல மனிதனாகவும்.. ஒரு மருத்துவராகவும் மட்டுமே.. அவன் மிதிலாவிடம் நடந்து கொண்டான். இதைவிட அதிக பணிவிடைகளை அவன் எத்தனையோ பெண்களுக்கு பிரசவ அறையில் செய்து இருக்கின்றான்..


அவன் பார்த்து வளர்ந்த கலாச்சார முறைகளிலும் இதெல்லாம்.. ஒன்றுமே இல்லை...


நடக்கும் பொழுது.. அவளுக்கு வலி தெரியாமல் இருக்க.. கொஞ்சம் பேச்சு கொடுத்துக் கொண்டே ஹரி வந்தான்.


அவளும் அவன் கேட்டதற்கு ஏதோ பதில் தந்த வண்ணம் நடந்து வந்தாள்..


தெரு விளக்கின் வெளிச்சத்தில்… 


நாலரை அடியில், புசுபுசுவென்று பிங்க் நிறத்தில், ஒரு டால் போல் இருந்தவளை… ஹரி அப்பொழுதுதான் முழுதாக பார்த்தான்..


பள்ளி சீருடையான வெள்ளை நிற சட்டையும், கீழே இளம் நீல நிறத்தில்.. கொஞ்சம் முட்டிக்கு மேல் உள்ள ஸ்கர்ட்டிலும், அழகாக நீலநிற ரிப்பன் வைத்து.. இரட்டை சடைப்பின்னி..


நெற்றியில் மிகவும் சின்ன அளவில் சிகப்பு நிறத்தில் ஸ்டிக்கர் பொட்டு வைத்து என்று.. நன்றாக கொழுக்மொழுக்கென அள்ளி கொஞ்ச வேண்டும் போன்ற அழகில் இருந்தவளை, குழந்தையின் அழகை ரசிக்கும் பார்வையாகவே ஹரியின் கண்களும் ரசித்தது..


மிதிலாவின் உடை கூட, ஆங்காங்கே கீழே உட்கார்ந்து இருந்ததால் ஏற்பட்ட மண் கரையுடன் கசங்கி இருந்தும் கூட.. உடல் முழுவதும் டீன் ஏஜின் தேஜசும், ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்பட்ட கூடுதல் முகப்பொலிவும் என அவளை அவ்வளவு வலியிலும் க்யூட்டாக ஹரியின் கண்களுக்கு காட்டியது.


அப்பொழுது ஹரி, "ஏன் கேர்ல், உன் பேரை கடைசி வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லை???" என்று மிதிலாவிடம் கேட்டுவிட்டு…


மீண்டும் அவனே‌, " நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. உன்னை நான் இனி ஜிகிலினு கூப்பிடுறேன்", என்றான்.


மிதிலாவிற்கு அப்பெயர் ‌காரணம் ஒன்றும் புரியவில்லை... குழப்பமாக ஹரியை ஏறிட்டு பார்த்தாள்..


ஹரி, "நீ பார்க்க ரொம்ப க்யூட்டா.. சாஃப்டா பப்ளியா இருக்க.. உன்னை பார்த்தாலே ஜிகிலி கேக் மாதிரி இருக்கு எனக்கு.. சோ எனக்கு நீ இனி ஜிகிலி", என்றான் புன்னகையுடன்.


மிதிலாவிற்கு அப்பொழுது பார்த்து ஒரு வலி வர, மொத்தமாக சோர்ந்துப்போனால்,.


நடக்க நடக்க உடலில் வேறு ஏற்படும், வெளியில் சொல்ல இயலாத, புதுப்புது மாற்றங்களில், ஹரி சொன்னதை அவள் கேட்டிருந்தாலும், அது அந்த அளவிற்கு அவளின் மூளையை அப்போதைக்கு எட்டவில்லை.. எட்டியதையும் அவள் தீர ஆராயவில்லை.


தான் பெயரை சொல்லாததால் தவறாக நினைத்துக் கொண்டாறோ, என்று நினைத்தப்படி…


அவள், அவனை "டாக்டர்…", என்று மெல்ல அழைக்க… 


பொட்டிக்கே வந்துவிட்டு இருந்தது. 


ஹரி, "டூ மினிட்ஸ் டா", என்று சைக்கிளை நிறுத்த நகர்ந்துவிட்டான்..


அங்கு இருந்த படியில் மிதிலாவால் ஏறவே முடியவில்லை…


கைப்பிடியைப் பிடித்தப்படி அவள் அப்படியே கால் நடுங்க நிற்க…


சைக்கிளை வெளியே பார்க்(park) செய்துவிட்டு, ஓடிவந்த ஹரி மிதிலாவை கடைக்குள் பொறுமையாக அழைத்து சென்று, ரிசப்ஷனிஸ்டிடம் விசாரித்துவிட்டு, மிதிலாவை லேடிஸ் ரெஸ்ட் ரூம் பக்கம் அழைத்து சென்றான்.


ஹரி, மிதிலா உள்ளே செல்லும் பொழுது.. அவள் உடையின் பின்புறம் ஸ்கர்டில் அதிகமாக உதிரம் ஊறி, கரையாகி இருப்பதை பார்த்து, அவளின் நிலையை உணர்ந்து கொண்டான்.


உடனே ஹரி, மிதிலாவின் கையை பற்றி நிறுத்தினான் செல்லவிடாமல்… 


மிதிலா என்ன‌ என்பது போல் ஹரியை பார்த்தாள்.. 


அவளின் வெளுத்துப் போய் இருந்த முகத்தை பார்த்து ஹரி மென்மையாக "நீ ஏஜ் அட்டெண்ட் பண்ணி இருக்க.. நான் அப்பவே Recognize பண்ணேன்.. அதான் உன்கிட்ட கேட்டேன்.. இப்ப உனக்கு பிரியட்ஸ் டைம்மான்னு.. இட்ஸ் ஓகே.. டோன்ட் வொர்ரி.... ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணு.. உன் டிரஸ்ல கொஞ்சம் ப்லீடிங் ஆகி இருக்கு.. நான் உனக்கு டிரஸ் அண்ட் பர்ஸ்னல் திங்ஸ் எல்லாம் இங்கேயே வாங்கிட்டு வரேன்… நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு உள்ளேயே வெயிட் பண்ணு, ஃபர்ஸ்ட் டைம் கொஞ்சம் வியர்டா தான் இருக்கும், பட் பயப்பட வேண்டாம். உன்னோட மாம் அண்ட் டாட் சீக்கிரம் வந்துடுவாங்க...", என்றான், பொறுமையாக முதல் தடவை சிறுப்பெண் தன் உடல் மாற்றத்தை பார்த்து பயந்து விடக்கூடாது என்று.. 


மிதிலா மாதிரியான எத்தனையோ சிறுவயது பெண்களுக்கு, ஹரி இதைக் குறித்து கவுன்ஸ்லிங் வழங்கி உள்ளான்.‌ எனவே அவளை சமாளிப்பது ஒன்றும் அவனுக்கு பெரிதாக இல்லை..


மிதிலாவிற்கு தான், ஹரி சொன்னதை கேட்டதும், கண்கள் குளம் கட்ட ஆரம்பித்து இருந்தது.


அவளின் அழகான இளம் ரோஜா நிற முகம்.. அடர் சிகப்பு நிறமாக சில வினாடிகளில் மாறிவிட்டது.


அதைப் பார்த்த ஹரி பதறி, அவளை தன் தோளுடன் லேசாக அணைத்து, "ஹே ஏன் கேர்ல்!! இதுக்கு போயிட்டு அழற..!!, இது எல்லா கேர்ள்ஸ்கும் உடம்பில் நடக்கிற பொதுவான மாற்றம்தானே.. இதுக்கெல்லாம் எதுக்கு நீ ஃபீல் feel பண்ற?? முதல்ல கொஞ்சம் உடம்பு முடியாமல் தான் இருக்கும், பிறகு போகப்போக சரியாகிடும் கவலைப்படாத.. உனக்கு நான் பெயின் குறைய மெடிசன்ஸ் கூட எழுதி தரேன்.... இன்னும் கொஞ்ச நேரம் தான் கேர்ல்.. உன் பேரன்சும் வந்துட்டு இருக்காங்க இல்ல.. ரெஸ்ட் ரூம் போயிட்டு வா.. நான் போயிட்டு உடனே உனக்கு தேவையான எல்லாம் வாங்கிட்டு வரேன்.. ஃபர்ஸ்ட் டைம் கொஞ்சம் அண்ட்கம்பார்டபிலா தான் இருக்கும்.. போக போக சரி ஆகிடும்.. ட்ரஸ்ட் மை வோர்ட்ஸ்.. ப்ளீஸ் டோன்ட் க்ரை…", என்று அவள் கண்களை தன் கரங்களால் அழுந்த துடைத்து விட்டவன்.. குனிந்து அவள் நெற்றியில் தன்னுடைய உதடுகளை அழுந்த வாஞ்சையாக பதிக்க..


மிதிலாவிற்கு உள்ளுக்குள் தூக்கிவாரி போட்டது… 


இன்னும் ஹரியின் இளம் சூடான மென்மையான அதரங்கள், அவள் நெற்றியில் படிந்து இருப்பது போலவே பிரம்மை.


முதன் முதலில் தந்தையைத் தவிர, வேறொரு ஆணிடம் மிதிலா அனுபவித்த நெருக்கமும்.. வாங்கிய முதல் முத்தமும்.. அவளை சில நிமிடங்கள் நிலை குலையச்செய்தது… 


தன் தற்போதைய நிலையையே மறந்து விட்டாள்.. ‌ 


உடலில் ஏதேதோ பெயர் சொல்ல முடியாத மாற்றங்கள்…


இம்முறை அவள் முகம் கலக்கத்தை தவிர்த்து.. வெட்கத்தில் சிவக்கத்தொடங்கியது..


அவளின் நிலை அறியாமல் ஹரியோ, "கோ கேர்ல்.. கோ கோ குயிக்" என்று அவளை ரெஸ்ட் ரூமிற்குள் நகர்த்தி விட்டான்.


ரெஸ்ட் ரூமிற்குள் வந்து கதவை அடைத்த மிதிலா ஹரிச்சொன்னதை உறுதிப் படுத்திக்கொண்டாள்.


ஓரளவிற்கு இதைப்பற்றிய விவரங்களை, துளசி இவளுக்கு வயது அதிகமாவதால் சிறிது விளக்கமாகவுமே சொல்லிக்கொடுத்து இருந்தார்.


மித்ராவையும் பார்த்து, அவள் முன்பே தெரிந்து வைத்திருந்தாள். 


ஹரி ரிசப்ஷன் பெண்ணிடம் சென்று, "இப்ப என் கூட வந்த பொண்ண

பார்த்திங்க இல்ல??" என்று விசாரித்தான்.


அவள் பார்த்தேன் என்று சொன்னதும்.. ஹரி அப்பெண்ணிடம், "டீன் கேர்ல்ஸ் செக்ஷன்ல, அவளுக்கு போட பியூர் காட்டன்ல, அவ சைஸ்ல டிரஸ் எடுத்து காமிங்க?? ", என்றான்..


ஹரியின் மென்மையான அணுகு முறையில் கவரப்பட்ட, அந்த ரிசப்ஷன் பெண், அவன் கேட்ட அனைத்து உதவிகளையும் செய்ய..


ஹரி, மிதிலாவிற்கு அழகாக லைட் வெயிட்டில், இளம் மஞ்சள் நிறத்தில், இலகுவான ஃப்ராக் வகை உடை ஒன்றை தேர்ந்தெடுத்து, பில்லிங் கவுண்டருக்கு அனுப்பியவன்.


அடுத்து கடையிலேயே பெண்களுக்கான பர்சனல் ஹைஜீன்(personal hygiene) பொருட்கள் இருக்கும் இடத்திற்கு சென்று நாப்கினையும் எடுத்து, பில்லில் ஏற்றக்கூறி வாங்கிக்கொண்டு, ரெஸ்ட் ரூம் நோக்கி விரைந்து சென்றான்.


ஹரி கதவின் வெளியே நின்று கொண்டு, "ஹே ஜிகிலி இருக்கயா கதவை ஓப்பன் பண்ணு", என்று குரல் கொடுக்க..


மிதிலா, கதவைத் திறந்து பார்த்ததும், ஹரி அவளிடம் எதுவும் கேட்காமல், கவரை மட்டும் அவள் புறம் நீட்டி.. "உனக்கு தேவையான எல்லா திங்ஸ்சும் இதிலிருக்கு.. டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..", என்றான்...


மிதிலாவோ, ஹரியிடம் பேசவும், அவன் முகத்தை பார்க்கவும் சங்கடப்பட்டுக்கொண்டு, தன் ஸ்கர்ட்டை இருக்கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, தலை குனிந்தே நின்று இருந்தாள்…. 


அவள் இதயம் படப்படவென்று அடித்துக்கொண்டே இருந்தது..


இன்னும் அவள் பயந்து அழுகிறாளோ என்று நினைத்த ஹரி… அவளை நெருங்கி.. மீண்டும் அவள் தோளை சுற்றி தன் கைகளை படரவிட்டு.. தன்னுடன் சேர்த்து அணைத்து.. "ஏன் கேர்ல். பயந்துட்டியா.. இட்ஸ் நாட் அ பிக் திங்க் டு வொர்ரி…" என்றுக்கூற.. 


புதிதாய் பிறந்த குழந்தைப்போல், பட்டாம் பூச்சிகளாய் படப்படக்கும், தன் இமைகளை விரித்து அவள் அவனை நிமிர்ந்து ஒருப்பார்வை பார்க்க..


தன் மார்பு அளவிற்கும் கீழே இருந்தவளை நோக்கி குனிந்த ஹரி, "‌சில் கேர்ள்", என்று மீண்டும் அவளின் நெற்றியில் தன் இதழ்களை பதித்து.. தன் மார்புடனே சேர்த்து அணைத்துக்கொள்ள.


அக்கணம், தன்னிலை மீண்ட பெண்ணவள் பதறி… ஹரியிடம் இருந்து விலகி… அவன் கையில் இருந்த கவரை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடி விட்டாள்.


அக்கணத்தை அவளால் கடக்கவே முடியவில்லை.. 


மிதிலாவிற்கு இதற்கு எப்படி ரியாக்ட்… செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை….


அவளால் ஹரியை தப்பாகவும் நினைக்க முடியவில்லை.. 


ஹரியின் செயல் ஒவ்வொன்றிலும், முழு அன்பையும், பாதுகாப்பான உணர்வினையும், மட்டுமே மிதிலா முன்பு உணர்ந்தாள்...


ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. இந்த முத்தத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே அவளிற்கு தெரியவில்லை…. 


இன்னும் ‌அவளின் நெற்றி, அவனின் இளஞ்சூடான இதழ் ஸ்பரிசத்தையும், முத்தத்தையும், மறக்காமல் இருப்பதே அவளின் உணர்வுகள் மாற்றத்தை கூறியது..


ஏற்கனவே எண்ணிலடங்கா ஹார்மோன் மாற்றங்கள் அவள் பருவத்தை மாற்ற தொடங்கியிருக்க..


சரியாக அந்நேரம் பார்த்து, அந்த சின்னஞ்சிறு மொட்டின் மனதை.. ஹரி தன் தொடர் முத்தங்களால்.. பூக்க செய்துவிட்டான்.


அக்காலத்தில் அதனால் தான் முறைமாமனை வைத்து சடங்கு சுத்துவார்களோ என்னவோ..?!


விஷ்ணுவின் செல்ல மகளின் மனதில் ஹரி, தன்னை அறியாமல் கல் எறிந்து விட்டான்.... 


ஹரிக்கு இது ஒருவகை அன்பின் வெளிப்பாடே.. அவன் வளர்ந்த சூழல் அவ்வாறு… தன் வயதில் பாதி இருக்கும் மிதிலாவை அவன் குழந்தையாகவே பார்த்தான்.. 


ஆனால் மிதிலாவிற்கு????


*****************


மிதிலா உள்ளே சென்றதும், ஹரி கடை முழுவதையும் பார்த்தான்.. 


அது பெண்களுக்கான பிரத்தியோகமான பொட்டிக், பெண்களுக்கு தேவையான அனைத்தும் A to Z அங்கு இருந்தது.


அங்கேயே ஹரி சுற்றி பார்த்து மிதிலாவிற்கு, தற்சமயம் மூட் ஸ்விங்ஸ்(mood swings) இருக்கும் என்று யோசித்து, கொஞ்சம் டார்க் சாக்லேட், Get well soon greeting card மற்றும் அதன் பக்கத்திலேயே இருந்த க்யூட்டான சாஃப்ட் டாய் ஒன்று என்று வாங்கி கொண்டு, முன்பே வாங்கின பொருட்களுக்கும் சேர்த்து பில் போட ரிசப்ஷன் நோக்கி சென்றான்.


அவர்கள் ஊரில், சிறுப்பிள்ளைகளை மருத்துவ மனைக்கு உடல் முடியாது அழைத்து வந்தால், அங்கு அவர்களை சகஜமாக்க சாக்லேட்கள், பொம்மைகள், கலர் ஸ்கெட்ச்கள், ஸ்டிக்கர்கள் என்று தருவார்கள்.


அதையே தான் அவன் இங்கும் செய்தான்.


அவன் அவளை குழந்தையென கருத, அவளோ அவனால் குமரியாகிவிட்டாள்..


தன்னிலை மீண்ட மிதிலா, கவரில் இருந்தவற்றை வெளியே எடுத்து, தன் உடையை மாற்றத் தொடங்கினாள்…


அங்கு ஹரி, பில் பணம் கட்ட, தன் கிரெடிட் கார்டை எடுக்க, வேலெட்டை(wallet) திறக்கும் பொழுது தான், அதில் இருந்த, அவன் துபாயில் வாங்கிய செயினை(chain) பார்த்தான்.


பில் போட்டு முடித்ததும் ஹரி, "இந்த செயினை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய போகிறோம், பேசாமல் இதை இந்த பெண்ணிற்கு கிஃப்டாக கொடுத்துவிடலாம்..", என்று யோசித்து.. அந்த கவரில் செயினையும் எடுத்து போட்டு வைத்தான்.


அந்நேரம் கடைக்குள் விஷ்ணு, மித்ரா மற்றும் துளசி நுழைந்தனர். 


அக்கடை பெரும் பணக்கார பெண்கள் மட்டுமே வரக்கூடிய .. கொஞ்சம் விலை மதிப்பு அதிகம் உள்ள பொருட்களை மட்டுமே விற்கும் கடை.. அதனால் கடையில் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை.


உள்ளே வந்ததும், விஷ்ணு ஹரிக்கு ஃபோன் செய்து.. "நாங்கள் கடைக்கு உள்ளே வந்து விட்டோம் தம்பி.. நீங்க எங்க இருக்கீங்க ??", என்று பதற்றத்துடன் விசாரித்தார் மிதிலாவை காணாமல்.


ஹரி, "நான் உங்களை பார்த்து விட்டேன் அங்கிள், ரிசப்ஷன் சைடு இருக்கேன்.. பாருங்க", என்று அவரை நோக்கி கையை ஆட்டினான்.


விஷ்ணு குடும்பத்துடன் அவனிடம் விரைந்து வந்து.. அடையாளம் கண்டுகொண்டு, " பாப்பா எங்கே தம்பி?? " என்று விசாரித்தார். 


ஹரியிடம் அவரும் மிதிலாவின் பெயரை சொல்லவில்லை..


ஹரி, "ரெஸ்ட் ரூமில் அங்கிள்.. டோன்ட் பேனிக், ஷி ஈஸ் பர்ஃபெக்ட்லி ஃபைன்", என்றுவிட்டு.. ரெஸ்ட் ரூம் இருக்கும் பகுதியை சுட்டிக்காட்டினான்..


உடனேயே துளசி மற்றும் மித்ரா அங்கு சென்றுவிட்டனர்.


விஷ்ணு ஹரியிடம், "ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. நீங்க பண்ண உதவி ரொம்ப பெருசு", என்று பேச்சை தொடங்கியவர்… "நீங்க எங்க இருக்கீங்க தம்பி??, இதே ஊரா??,  கண்டிப்பா வீட்டுக்கு வாங்க", என்றார்.


ஹரியை பார்த்த உடனேயே, விஷ்ணுவின் மனதிற்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனின் மென்மையான குரலும், தோற்றமும், பேசும் விதமும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பழகும் தன்மையும், மிகவும் கண்ணியமான ஆண் மகனாக அவனை விஷ்ணுவிற்கு காட்டியது. 


மேலும் அவன் நேர்த்தியான உடைகளும், தோற்றப்பொலிவுகளுமே அவன் நல்ல நிலையில் இருப்பதை கூறியது.


ஹரி தன்னை, விஷ்ணுவிடம் முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டு… அவன் அமெரிக்காவில் வசிப்பதை பற்றியும் உறவினர் வீட்டிற்கு வந்ததைப் பற்றியும் கூறினான்.


இடையில் ஹரியின் தொலைபேசிக்கு அன்னபூரணியிடம் இருந்து பலமுறை அழைப்பு வந்து கொண்டே இருந்தது…


எடுத்து பேசிவிட்டு வைத்த ஹரி, விஷ்ணுவிடம், "அங்கிள் நான் ஷாப்பிங் போக தான் வெளியே வந்தேன், ரொம்ப நேரம் ஆகிடுச்சு வந்து, வீட்டில் அம்மா வெளியே போயி இருந்தாங்க. இப்ப வந்துட்டாங்க, நான் கிளம்பனும்", என்றான்..


விஷ்ணு, "பாருங்க தம்பி நான் பாட்டும் பேசிட்டே இருந்துட்டேன்.. மன்னிடுச்சுங்க.. எங்களால உங்களுக்கு ரொம்ப தாமதம் ஆகிடுச்சு.. நீங்க இப்ப கிளம்புங்க தம்பி.. ஆனா கண்டிப்பா வீட்டுக்கு ஒரு நாள் உங்க அம்மாவோட, ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி கூப்பிட்டு வாங்க.. உங்களை நாங்க கண்டிப்பா எதிர்பார்ப்போம்.. உங்க உதவியை எப்பவும் மறக்க மாட்டேன், இந்த காலத்தில யாரும் ஆதாயம் இல்லாமல் இவ்வளவு உதவியை செய்ய மாட்டாங்க, உங்களை உங்க அம்மா, அப்பா ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க.. எப்பவும் சந்தோஷமா.. ஆரோக்கியமா இருங்க", என்றார் உள்ளம் நெகிழ…


ஹரி, "தேங்க் யூ சோ மச் ஃபார் யுவர் பிளசிங்ஸ் அங்கிள்", என்றப்படி அவருடனே வெளியே வந்தான் கிளம்ப..


விடைபெறும் முன் தான் ஹரிக்கு அந்த விஷயம் ஞாபகம் வந்தது, உடனே பக்கத்தில் மெடிக்கல் ஷாப் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டு விசாரித்து, விஷ்ணுவுடன் அங்கு சென்றான்.. 


அங்கு வலி நிவாரணி மாத்திரை மற்றும் சில சத்து மாத்திரைகளையும், அவனுடைய இன்டர்நேஷனல் டாக்டர் ஐடி கார்டை காண்பித்து, மெடிக்கல் ஷாப்பில் வாங்கி விஷ்ணுவிடம் கொடுத்து…


"இதை கண்டிப்பாக உங்க‌ பொண்ணுக்கு குடுங்க அங்கிள்.. கொஞ்சம் வலி குறையும், சில அடிப்படை சத்துக்களும் ஏறும்", என்றான்...


ஹரி அவனிற்கு தான் ஏதோ மருந்து வாங்குகிறான் என்று நினைத்து இருந்த விஷ்ணு. அது மிதிலாவிற்கு என்று தெரிந்த உடனே, "ரொம்ப நன்றி தம்பி", என்றப்படி..


அதற்கான பணத்தை அவர், பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க முயல, "இட்ஸ் ஓகே அங்கிள்", என்று ஹரி மறுத்துவிட்டான்.


அடுத்து அவன் பொட்டிக்கில் வாங்கிய.. சாக்லேட் மற்றும் சாஃப் டாய்ஸ் அடங்கிய கவரையும் விஷ்ணுவிடம் நீட்டி, "இது நான் உங்க பொண்ணுக்கு, பொட்டிக்கில் வாங்கிய சின்ன கிஃப்ட் அங்கிள், அவளிடம் கொடுத்திடுங்க.." என்று சொல்லி கொடுத்தான். 


அதனுள் வைத்த செயினை குறித்து அவன் எதுவும் அவரிடம் சொல்லவில்லை.. அப்போதைக்கு ஹரியும் அதை மறந்துவிட்டு இருந்தான்.. 


விஷ்ணு, "நீங்க செய்த உதவியே அதிகம் தம்பி எதற்கு இவ்வளவு", என்று அவருடைய மறுப்பை தெரிவித்தார். 


ஹரி "பரவாயில்லை அங்கிள்" என்று சொல்லி சமாதானம் செய்து கொடுத்துவிட்டு.. 


"வெளியே ரொம்ப ஆயில் ஐட்டம்ஸ் வாங்கி சாப்பிடறதை, அவளை அவாய்ட் பண்ண சொல்லுங்க அங்கிள்.. அது எப்பவும் நல்லது இல்லை", என்றுவிட்டு விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான். 


விஷ்ணு வாங்கிய பொருட்களுடன் மீண்டும் பொட்டிக்குள் நுழைந்தார்.


ரெஸ்ட் ரூம் சென்ற பெண்கள் இருவரும், மிதிலாவை பார்த்து, அவளின் உடல்நிலையை விசாரித்து விட்டு, அவளுக்கு தற்சமயம் தேவையான உதவிகளையும் செய்தனர். ஹரி வாங்கி தந்து இருந்ததை பார்த்து இருவராலும் ‌மெச்சாமல்‌ இருக்க முடியவில்லை..


மிதிலா தயார் ஆனதும் மூவரும் வெளியில் வந்தனர்.


அவர்கள் வெளியே வந்ததும் விஷ்ணு ஓடிச்சென்று மிதிலாவை அணைத்துக்கொண்டவர், "ரொம்ப பயந்துட்டியா குட்டிமா ", என்றப்படி அவர் நெற்றியில் முத்தமிட்டு, "இப்போ வலி பரவாயில்லையா மிது" என்று விசாரிக்க.


விஷ்ணுவின், அணைப்பும் பேச்சும் மிதிலாவிற்கு ஹரியையே நினைவுபடுத்தியது.. 


மிதிலாவின் இதயத்தை ஹரி தன்னுடனே தனக்கே தெரியாமல் எடுத்து சென்று விட்டிருக்க.. பாவம் அவள் என்ன செய்வாள்.


மித்ரா காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர சென்றாள்..


அச்சமயம் பக்கத்தில் உள்ள கடையில் மிதிலாவிற்கு… விஷ்ணு ஒரு ஃபிரஸ் ஜூஸ் பாக்கெட்டை பார்சல் வாங்கிக் கொண்டு வர, அனைவரும் வீட்டிற்கு காரில் கிளம்பினார்.


மிதிலாவின் சைக்கிளை விஷ்ணு பொட்டிக்கில் நாளை எடுத்துக் கொள்வதாக சொல்லி அங்கேயே விட்டுவிட்டு வந்தார். இந்த சைக்கிள் மேட்டர் இப்போ ரொம்ப முக்கியமானு நீங்க கேட்கலாம் மக்களே??? ஏன்னு தெரியல மத்த ஸ்டோரீஸ் நான் படிக்கும் போது.. எனக்கு அந்த கார் என்ன ஆச்சு?? பைக் என்ன ஆச்சு?? அதை பத்தி ஒன்னும் சொல்லலியேன்னு தோனிட்டே இருக்கும். அதான் நான் சொல்லிட்டேன்.. மன்னிச்சு..


இங்கு காரில் செல்லும் பொழுதே, விஷ்ணு மிதிலாவிடம் ஜூஸை குடிக்க கொடுத்து, அவளை குடித்தச்செய்து.. ஹரி கொடுத்த வலி நிவாரணி மாத்திரையையும் எடுத்து கொடுத்தார்.


ஏதோ ஞாபகத்தில் இருந்த மிதிலாவிற்கு அப்பொழுது தான் ஹரியை காணத நியாபகம் வந்து, விஷ்ணுவிடம் அவன் எங்கே என்று விசாரித்தாள். 


ஹரி மணியானதால் சென்று விட்டதாக கூறியவர், "அவர் தான் உனக்கு மருந்து வாங்கி கொடுத்தார் குட்டிமா.. கூட இந்த கிஃப்ட் கவரும்..", என்று விஷ்ணு அவளிடம் கூறி தர…


மிதிலாவிற்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது, இவ்வளவு உதவி செய்த ஹரிக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே நான்.. என்று.


அனைவரும் வீட்டிற்கு வந்து சேர..


துளசி மிதிலாவிற்கு, ஹாலில் ஒரு மூலையில் தனியாக ஒரு பாயைப் போட்டு, அதன் மீது மெத்தென்று இருக்க காட்டன் புடவை மற்றும் போர்வை போட்டு உட்கார வைக்க..


அதற்குள் விஷ்ணு, இரவு உணவை தயார் செய்யும் பணியில் இறங்கினார்.


பிறகு அனைவரும் ஒன்றாக மிதிலாவுடன் அமர்ந்து இரவு உணவை முடித்துக்கொள்ள..


விஷ்ணுவும், துளசியும் அமர்ந்து காலண்டரை பார்த்து, நல்ல நாள் பார்த்து, நல்ல நேரத்தையும் குறித்துக்கொண்டு, மிகவும் நெருங்கிய சொந்தங்களுக்கு ஃபோன் மூலம் தகவல் சொல்லி, மிதிலாவிற்கு தலைக்கு தண்ணீர் ஊற்ற அழைக்கும் பணியில் இறங்கினர்.


மித்ரா மிதிலாவுடன் அமர்ந்து, பேசிக்கொண்டு இருந்தாள்..


மிதிலா சிறிது நேரத்திலேயே, அதீத உடல் ‌அயர்ச்சியிலும், மாத்திரை போட்டதினாலும் தூங்கிவிட்டாள்...


இரண்டு நாள் கழித்து, வீட்டில் எளிமையாக மிதிலாவிற்கு, தலைக்கு தண்ணீர் ஊற்றி வீட்டிற்குள் அழைத்துக்கொண்டனர்.. 


விஷ்ணு, அவரின் நகை சேமிப்பு திட்டத்தில் இருந்து, அவரின் கடையிலேயே இரு மகள்களுக்கும் ஆளுக்கு 25 பவுன் அளவில், ஆரம், வளையல், கம்மல், மோதிரம் மற்றும் நெக்லஸ் என்று செட்டாக நகை வாங்கி வந்து இருந்தார். பின்னொரு நாளில் தன் மகளுக்கு இந்நகையே உதவியாக இருக்கும் என்று முன்பே தெரிந்து வாங்கினாரோ என்னவோ..


மறுநாள் மாலை, நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வீடு முழுக்க நிறைந்திருக்க..


ஹாலில் நடுக்கூடத்தில் இருந்த மர ஊஞ்சலை சுற்றி அழகாக மலர்களால் அலங்காரம் செய்து, கீழே இருபக்கமும் பெரிய வெள்ளி குத்து விளக்கையும் ஏற்றி வைத்து, அலங்காரம் செய்து இருந்தனர்..


நடுவில் அழகாக வரிசையாக வரிசை தட்டுகளும் அடுக்கப்பட்டு இருந்தது…


பார்க்கவே மிகவும் அழகான நந்தவனம் போல் இருந்தது கூடம்..


மிதிலாவை, மித்ரா மற்றும் அவள் அத்தை அறையிலிருந்து அலங்காரம் செய்து, ஹாலுக்கு அழைத்து வந்தனர்..


உடல் முழுவதும் அடர் பச்சை நிறத்திலும், வாடா மல்லி நிறத்தில் பெரிய ஜரிகையிலான பார்டர் கொண்ட பட்டு புடவையில்.. 


விஷ்ணு புதிதாக வாங்கி வந்திருந்த தங்க நகைகளை அழகாக பூட்டி, 


நீண்ட கூந்தலை அழகாக பின்னி, பல வண்ண மலர்களை சூடி..


கழுத்தில் தாமரை மலரினால் தொடுத்த மாலையுடன், மிதிலா மித்ராவின் கையை பற்றிக்கொண்டு மெதுவாக நடந்து வந்தாள்..


பார்க்க அழகாக குட்டி அம்மன் சிலைப்போல் தெய்வீகமாக, தனி தேஜஸுடன் மிதிலா மிளிர்ந்துக்கொண்டு இருந்தாள். 


அனைவரையும் வணங்க செய்துவிட்டு ஊஞ்சலில் அவளை அமர வைத்து, நலங்கு வைக்க ஆரம்பிக்க. 


விஷ்ணு மற்றும் துளசிக்கு கண்கள் அவர்களை மீறி லேசாக கலங்கியது.. மகள்கள் இருவரும் வளர்ந்துவிட்டனர் என்று தோன்றியது.. 


சடங்கு முடிய, உறவினர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.


விருந்திற்கு, விஷ்ணு வெளியில் கேட்டரிங் சர்வீஸில் ஆர்டர் கொடுத்திருந்திருக்க.. அவர்களே உணவை எடுத்துவந்து பரிமாறிவிட்டு, பொருட்களையும் எடுத்துக்கொண்டு சென்று விட..


பெரிதாக எந்த வேலையும் இல்லை.


இருந்த கொஞ்சம் பணிக்கும், குமுதம் துளசிக்கு உதவி செய்தார்.


அவர் கணவர் ஆறுமுகம், விஷ்ணுவிற்கு வெளியில் சென்றுவர வேண்டிய வேலைகளுக்கு அனைத்திற்கும், கைக்கொடுத்திருக்க..


மிதிலாவின் பூப்புனித நீராட்டு விழா, எந்த சிரமமும் இருக்காது, நல்லப்படியாக இனிதே முடிவுற்று இருந்தது.


****

ருத்ரனின் தேடலையும் முடித்து வைக்க விதி முடிவு செய்து விட்டு இருந்தது.


****

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻