உண்மை காதல் -7

அத்தியாயம் -7


அச்சின்னஞ்சிறு கிளியின் மனதில், முதன் முதலில், சலனத்தை ஏற்படுத்திவிட்டு, மறைந்துப்போன ஹரி.


மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்று அவன் நினைவுகள் மேலெழும் பொழுதெல்லாம், குழித்தோண்டி புதைத்திருந்தாள்.


அதன் பிறகான நிகழ்வுகள், அப்படி ஒருவனையே அவள் சிந்தையில் இருந்து நீக்கிவிட்டு இருக்க.‌.


இன்றோ அவன் மீண்டும் அவள் கண்களின் முன்.


பேசும் மொழி அனைத்தும் மறந்து போனது பாவையவளுக்கு.


தேடித் தேடி ஓய்ந்த பொருள் இன்று அவள் கண் முன்னே, ஆனால் அப்பொருளை தீண்டும் நிலையில் அவள் இல்லையே..!!


அவனை சந்தித்த பிறகு அவள் சந்தித்த நிகழ்வுகள், இழந்த உறவுகள், கொடுரமான அனுபவங்கள், என்று விதி வலிக்க வலிக்க அல்லவா அவளை விடாமல் அடித்துவிட்டு இருந்தது.


கடவுள், ஏனோ போதும் என்று மனம் வந்து, ஆறுதலாக ஹரியை மிதிலாவிற்கு காண்பித்துள்ளாரா என்னவோ தெரியவில்லை..!!


மிதிலாவிற்கு, நடப்பது கனவா நினைவா என்றே தெரியவில்லை, அவள் தன் கண்களை சிமிட்டினால் கூட ஹரி மறைந்து விடுவானோ என்று அப்படியே இருந்தாள்.


அவளை மீறி, அவள் கண்களோ, நீரை உற்பத்தி செய்த வண்ணமே இருந்தது.


அது ஆனந்த கண்ணீரா, அல்ல அவனை தேடி ஓய்ந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடா..??


அல்ல தன் அகம் தொட்ட மன்னவனை கண்டதால் பாவையவள் பட்ட வேதனையை சொல்லும் நீரா..??


தாயின் மடி சேர்ந்த மழலையாய் மிதிலாவின் உள்ளம் வெம்பியது.


மிதிலாவின் கண்களும், முகமும், அவனிடம் பேசாமல் பேசிய மொழியில், ஹரி தன்னை மீறி அவளும் மூழ்கினான்.


காதல் என்னும் மந்திரத்தின் மாயமோ..!!


அவனை நொடியில் தன் கட்டுக்குள் சிறையெடுத்துவிட்டு இருந்தது.


இருவரின் கண்களும், ஒரே நேர்கோட்டில் சங்கமித்தது.


ஒருசில நொடிகளுக்கு பிறகே, தன்னிலை மீண்ட ஹரி, தலையை ஒருகணம் உலுக்கிக்கொண்டு மிதிலாவை பார்க்க..


மிதிலாவின் முகமோ நீண்ட நேரம் மூச்சு எடுக்காததில் மாறத் தொடங்கி இருந்தது.


உடன் அவள் கண்களில் இருந்தும் நீர் கரை உடைந்த வெள்ளமாய் பெருகி இருப்புறமும் வழிந்தோட.. 


அவளை பார்த்த ஹரி, மிதிலா தன்னுடைய பாரம் தாங்காமல் தான் அழுகிறாள், என்று நினைத்து, உடனே பதறி எழ முற்பட்டான். 


ஆனால், அவனால் சுத்தமாக எழ முடியவில்லை.


"ஹேய் கிரேஸி, சாரி,  சாரி கேர்ல், டோன்ட் க்ரை", என்றவன், உடனே மிதிலாவை தன் கீழ்ப்புறம் இருந்து அணைத்தப்படி, உருட்டி தன் மேல்புறம் திருப்பினான்.


இப்பொழுது ஹரி கீழேயும், அவன் மேலே மிதிலாவும் என்று உருண்டு வந்து சேர்ந்தனர்.


அதில் சிக்கில் மேலும் அதிகமாகி இருந்தது.


மிதிலாவிற்கோ ஹரியை பார்த்த கணத்தில் இருந்து இப்பிரபஞ்சமே உறைந்துவிட்டு இருந்தது.


இதில் எதுவுமே பேசாது, வைத்த கண் வாங்காமல், அவனை பார்க்கும் மிதிலாவின் செய்கையில், ஹரி தான் குழம்பி போனான்.


அதிலும் மிதிலாவின் உணர்ச்சி நிறைந்த கண்களும், முக பாவனைகளும், ஹரியை ஏதோ செய்தது.


காந்தமாய் அவளின் புறம் முதல் முறை என்ன ஏது என்று அறியாது மீண்டும் மீண்டும் ஈர்க்கப்பட்டான்.


தன்னிடம் அவளின்‌ கண்கள் என்ன கூறுகின்றன என்ற விடையை அவளிடமே தேடத்தொடங்கினான்.


மீண்டும் இருவருக்குள்ளும் பேரமைதி.


மிதிலாவின் உண்மை காதலின் சக்தி, விழிவழி பயணித்து, ஹரியிடம், ஹார்மோன்கள் ரசவாதத்தை நிகழ்த்த ஆயத்தம் ஆகிவிட்டு இருந்தது.


வீசிய தென்றல் காற்றில், ஹரியின் முகத்தின் மீது, மிதிலாவின் கற்றை கூந்தல் விழுந்து, காற்றில் அசைய,


ஹரியின் கரம் மெல்ல உயர்ந்து, அதை ஒதுக்கி, அவளின் காதோரம் சொருகியது.


அதுவும் உணர்ச்சி முடிச்சுக்கள் நிறைந்த காதோரம், ஹரியின் விரல் தீண்டலில், சிலிர்த்துக் கொண்டது.


அதில் கனவுகளில் இருந்து மீண்ட மிதிலா பதறி, அப்பொழுது தான் சுற்றம் பார்த்தாள்.


அதில் தான் ஹரியின் மீது, படர்ந்து இருக்கும் நிலையை உணர்ந்து, 


இதயம் தடதடக்க, எப்பொழுது உருட்டினான் என்றே புரியாமல், 


உடனே அவன் மார்பில் தன் கைகளை ஊன்றி, 


அவன் மீதிருந்து வேகமாக எழ முற்பட்டு, முடியாமல் மீண்டும் ஹரியின் மீதே தொப்பென்று தடுக்கி விழுந்தாள். 


விழுந்த வேகத்தில், மிதிலாவின் உதடுகளோ, எதிர்பாராத விதமாக அழுத்தமாக, ஹரியின் உதடுகளுடன் பொருந்தி விட்டது.


அதில் இருவருமே அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விட்டனர்.


மிதிலாவின் இதயம் தாறுமாறாக துடிக்க, பயந்து போனவள், உடனே ஹரியின் உதட்டின் மீது இருந்து தன் உதட்டை பிரித்து, 


வேகவேகமாக முன்னோக்கி நகர்ந்து, மீண்டும் மிதிலா எழ முயற்சி செய்ய,


ஹரிக்கு அவளின் செய்கையில், நெஞ்சே வெடித்து சிதறும் நிலைக்கு சென்று விட்டது.


அவள் பாட்டிற்கும் அவன் உதடுகளை அழுந்த தீண்டி விட்டு, மேலும் அவன் தேகத்தின் மீது அழுந்த நகர்ந்தும், என்று மருத்துவனுக்கு பல அதிர்ச்சி வைத்தியங்களை செலவில்லாமல் செய்துக்கொண்டு இருந்தாள்.


அப்பொழுதும் துணி சுற்றி இருந்ததில் மிதிலா தடுமாற, மேலும் புற்களின் மீது ஊன்றி இருந்த அவள் கையும், வழுக்கிக்கொண்டு செல்ல.‌ மீண்டும் ஹரியின் முகத்தின் மீது விழுந்தாள்.


இம்முறை சுத்தமாக இருவரும் பலம் இழந்து, இவ்வுலகை விட்டு வேறொரு உலகத்திற்கு சென்று விட்டனர்.


மிதிலா முன்னோக்கி நகர்ந்து விழுந்து இருந்ததால், விழுந்த வேகத்தில் ஹரியின் உதடுகள், மிதிலாவின் வெண்ணிற வயிற்றில் அழுத்தமாக பதிந்து இருந்தது.


அதுவும் நகர்ந்ததில் சிறிது வெளிய‌ தெரிந்த வயிற்றில் நேரடியாக.


மருத்துவன், மொத்தமாக புதை குழிக்குள் விழுந்து சிக்கினான்.


இருவரின் அடிவயிற்றில் இருந்தும் உருவமில்லா பந்துங்கள் உருண்டோடி வந்து தொண்டையை அடைத்தது.


உடல் முழுக்க ஓடிக்கொண்டிருந்த உதிரம், சூடாகிப்போனது.


ஹரியின், ஷேவ் செய்யப்பட்டப்பின் வளர்ந்து இருந்த சிறுசிறு மீசை மற்றும் தாடி முற்கள் போன்ற ரோமங்கள், மிதிலாவின் வயிற்றில் ஆழமாக பதிந்து. மிதிலாவையும் மயக்கமுறச் செய்தது என்றால்.


ஹரியின் நிலைமையோ இன்னும் மோசம், அவன் முகமும், உதடும் உணர்ந்த, அவள் வயிற்றின் மென்மை, ஹரியை அந்நிமிடமே சாகச்சொல்லியது.


இது என்ன இத்தனை வயதில் தனக்கு வந்த சோதனை என்று உறைந்து விட்டான்.


மிதிலா, மேலிருந்து கீழே விழும் பொழுதே, அவள் கையுடன் இழுத்துவந்த சம்பங்கி கொடிகளில் இருந்து வந்த பூ வாசம், அவர்கள் இருவரின் நாசியையும் நிறைத்து, வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றது.


இருவரின் இதயமும் ஒன்றாகவே இசைத்தது.


அன்று பார்த்து அவள் ஸ்கர்ட் அணிந்து இருந்ததால், வெளியே தெரிந்த அவளின் வெற்று மூங்கில் கால்கள் உடன், ஹரியின் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருந்த, ஆண்மை மிக்க உறுதியான வெற்று கால்களும் உரசியது.


இருவரின் மூச்சுக்காற்றும், மாறி மாறி தீண்டி இருவரையும் தகிக்கச்செய்தது.


தேகம் எங்கும் மின்மினி பூச்சிகள் பறந்தது.


அதிர்ச்சியில் இருவருமே எந்தவிதமான அடுத்த செயலையும் செய்யவில்லை.


ஹரியின் கண்களோ தானாக மூடிக்கொள்ள,

மிதிலா தான் தவித்து போனாள்.


மருத்துவனோ, பெயர் தெரியாத நோயினால் 35 வயதில் பாதிக்கப்பட்டான்.


மிதிலாவாலோ மேல் நோக்கியும் நகர முடியவில்லை, கீழ் நோக்கியும் நகர முடியவில்லை, எப்படி நகர்ந்தாலும் அந்நகர்வு அவளின் பெண்மைக்கு பாதகமே இழைத்தது.


போர்வையில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தெரியவில்லை.


வார்த்தைகளுக்கு வேலையே இல்லாமல் போனது அங்கே.


பெண்களை நன்றாக அறிந்த மருத்துவனான ஹரி, தான் அறியாத பல உணர்வுகளும் உள்ளது என்பதை உணர்ந்து, அவ்வுணர்களின் இன்ப சுகத்தில் மூழ்கிவிட்டான், மீண்டுவர அவன் நினைக்கவேயில்லை..!!


மிதிலாவிற்கோ அந்த ஒரு சில நிமிடங்களிலேயே, உடல் ஜுரம் கண்டது போல் ஆகிவிட்டது.


அவளின் அடிவயிற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டது, உடல் முழுவதும் ஏதேதோ செய்தது, ஹரி அவளின் ஆலிலை வயிற்றில் விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும், அவள் மயிர் கால்கள் அனைத்தும் சிலிர்த்தது.


இருவரும் வெவ்வேறு வகையான உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது, ஹரியின் செல்லகுட்டி ஹஸ்கி dog, இருவருக்கும் அருகில் வந்து, "என்னடா நடக்குது இங்க, நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது டா" என்ற அர்த்தத்தில், லேசாக சத்தம் எழுப்பியது.


ஹஸ்கியின் மூச்சு சத்தமும், வாசனையும் தன் நாசியையும், செவியையும் தீண்ட, தன் கண்களை பட்டென்று ஹரி திறந்தான்.


உடனே ஹரி சூழ்நிலையை உணர்ந்து, பட்டென்று தன் முகத்தின் அருகே இருந்த, மிதிலாவின் வெற்று இடுப்பை இறுக்கமாக பற்றி, தூக்கிக்கொண்டு, அவளுடனேயே சேர்ந்து எழுந்து அமர்ந்தான்.


ஹரியின் கால்கள் இரண்டும் நீண்டு புல்வெளியின் மீது இருக்க, 


அவன் தொடைகளின் மீது பெண்ணவள் இருப்புறமும் தன் கால்களை போட்டு அமர்ந்த நிலையில் இருக்க, 


ஹரி ‌அவளின் வெற்று இடையை இன்னமும் அழுந்த பற்றியே இருந்தான்.


மிதிலாவிற்கு நடப்பது அனைத்தும், அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது, அவளின் அடிவயிற்றிலிருந்து பல பில்லியன் பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து மேலேறியது. 


அதிலும் இளம் சூடான ஹரியின் உள்ளங்கை, குளிரில் உறைந்து கிடந்த அவளின் இடையை அழுத்தியதில், உடல் முழுக்க சிலிர்த்து போனாள்.


ஹரியோ மிதிலாவின் முகத்தை உன்னிப்பாக பார்த்துக் ரசித்துக்கொண்டே..!!


மெதுவாக, மிக மெதுவாக, அவளின் இடையில் இருந்த தன் கரத்தை நீக்கிவிட்டு, 


அவளை தன் ஒரு கையால் பற்றி, லேசாக தன் மீது அணைத்துக் கொண்டு, மற்றொரு கையால் போர்வையை நீக்கினான்.


தன்னால் அவளிடம் ஏற்படும், அவளுடைய உணர்வுகள் அனைத்தையும் ஹரி உள்வாங்கினான்.


மிதிலாவும் ஹரியின் ப்ரௌன் நிறக் கண்கள் காட்டும் ஜாலத்தில் மயங்கி, வேறு எங்கும் தன் பார்வையை திருப்பாது, அவனையே காண,


போர்வையை முழுவதுமாக நீக்கி முடித்தவன், அதைக் கூட உணராது, இன்னும் தன் அணைப்பிலேயே கிடந்த மிதிலாவின் இடையை பற்றி லேசாக தூக்கி தனக்கு வாகாக திருப்பி, தன் கைகளில் அவளை ஏந்திக்கொண்டே எழுந்து நின்றான்.


அப்பொழுது அவன் உதட்டோரம் சிறு குறும்பு புன்னகை தோன்ற, அது அவனின் கண்களிலும் பிரதிபலிக்க,


திடுக்கிட்ட மிதிலா, அப்பொழுது தான் அவன் கையில் தான் மிதப்பதையே உணர்ந்தாள். ஆனால் இன்னும் கனவுகளில் இருந்து முழுவதுமாக மீள முடியாமலேயே இருந்தாள், அதன் தாக்கத்தில் மெதுவாக அவள் உதடுகள், "டாக்டர்" என்று அசைய,


அந்த அழைப்பு, வெறும் அழைப்பாக மட்டும் இல்லை, அவளின் 5 வருட தேடலின் முடிவாக அது இருந்தது.


அவ்வளவு உணர்ச்சி அதில் இருந்தது.


லட்சக்கணக்கான முறை டாக்டர், டாக்டர் என்று மனதில் காதல் பெருக்க சொல்லி பார்த்து இருக்கின்றாளே.. அனைத்தும் அந்த ஒற்றை உதட்டு அசைவில் வெளிப்பட்டிருக்க..


ஹரியின் மேனி முழுவதும் சிலிர்த்தது.


எத்தனையோ பேர் அவனை அவ்வாறு இத்தனை வருடங்களில் அழைத்து இருந்தாலும், இதில் உள்ள வித்தியாசம் அவனை சுழற்றியது.


என்ன உள்ளது இவளிடம் என்று, மீண்டும் மீண்டும் தேடத் தொடங்கினான்.


அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு, மிதிலாவின் உடலை முற்றிலும் மாற்றி, நல்ல வடிவாக ஆக்கிவிட்டு இருந்தது.


அதிலும் அமெரிக்காவின் சீதோஷ்ண நிலை மாறும்போது வரும் அதீத குளிர், மிதிலாவின் மேனி நிறத்தை, மீண்டும் அழகாக பன்னீர் ரோஜா நிறத்திற்கு, கொண்டு வந்து விட்டு இருந்தது.


ஜிரோ சைஸ் உடல் அமைப்பில், அழகாக, ரசனையுடன் செதுக்கப்பட்ட, அழகோவியமாக ஹரியின் கரத்தில் கிடந்தாள்.


நல்ல நச்சுக் கலக்காத உணவு, தூய்மையான காற்று, கண்களுக்கு விருந்தாக இயற்கை எழில் கொஞ்சும் இடம், என்று அனைத்தும், மிதிலா தன்னை தனியாக பராமரிக்க என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றாலும் அவளை அழகாய் வைத்து இருந்தது, 20 வயதின் பருவ தேஜஸுடன், அவள் வதனம் பூத்துக் குலுங்கியது.


அவை அனைத்தும் ஹரியின் கண்களில் நிறைந்தது.


நிகழ் உலகிற்கு சிறிது சிறிதாக திரும்பிய மிதிலாவின் கண்களில் மீண்டும் நீர் கோர்க்க ஆரம்பிக்க, அவள் உதடுகள் விம்ம, அவளின் வாய் மீண்டும் டாக்டர் என்று முனுமுனுக்க,


அவள் தன் மீது விழுந்து வைத்த சங்கடத்தில் தான் இவ்வாறு பதறுகிறாள் என்று முதலில் நினைத்த ஹரி, அவளின் உதடுகள் அழ துடித்ததில்,


உடனே பதறி, "ஹேய், வாட் ஹேப்பண்ட், ஆர் யூ ஹர்ட் சம்வேர்,‌ is it too painful", என்று கேட்டான்.


சட்டென்று சுதாரித்த மிதிலா, இல்லை என்னும் விதமாக தன் தலையை ஆட்டியப்படி, அவன் கரத்தில் இருந்து இறங்க நெளிய.


ஹரி தன் புருவத்தை, உயர்த்தி, "என்னைப் பார்த்தா உனக்கு கஞ்சம் போலவா இருக்கு, ஏன் என்னை திட்டுன", என்று குழைவாக அவளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டே, மிக மெதுவாக விருப்பமே இல்லாமல், தன் கையிலிருந்து அவளை கீழே இறக்கி, தரையில் நிறுத்தினான்.


இன்னும் ஹரியின் லேசான அணைப்பில் தான் மிதிலா இருந்தாள்.


மிதிலாவிற்கு அப்பொழுது தான் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது, அதில் திக்கென்றானது அவள் நெஞ்சம்.


எப்படி அதையெல்லாம் மறந்துப்போனாள்.


மீண்டும் முட்டாள் தனமாக நடந்துக்கொண்டாளே..!!


தற்போதைய தன் நிலையை நினைத்தவள், ஹரி தன்னை கண்டு கொண்டானா தெரியவில்லையே என்று பதறி, கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே,


வேகமாக, மிக வேகமாக, ஹரியிடம் இருந்து விலகியவள், கீழிருந்த துணிகளை நொடியில் அள்ளிக்கொண்டு, 


ஹரியிடம் "சாரி டாக்டர்", என்று அவன் முகம் பாராது கூறியவள், அவன் பதிலை கூட எதிர்பாராமல் வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.


அவள் நினைத்தது போல் அல்லாமல், ஹரிக்கு மிதிலாவை சுத்தமாகவே அடையாளம் தெரியவில்லை,


மிதிலாவை சிறிதும் அவன் இனம் காணவில்லை,


இன்றைய மிதிலா, தன் நீண்ட முடியை தோல் வரை வெட்டி இருந்தாள், 


உடலும் வேறு மிகவும் மெலிந்து இருந்தது, 20 வயதிற்கு ஏற்ப உயரமும் கூடி இருந்தாள்,


டீன் ஏஜ் முடிந்து, அவள் வயதிற்கு ஏற்ப உடலின் வனப்புகளும் மாறி இருந்தது,


குழந்தைத் முகம் மறைந்து பெரிய பெண்ணாக நன்கு வளர்ந்து இருந்தாள்,


ஹரி அன்று பார்த்த சின்ன பெண்ணிற்கும், இப்பொழுது இருந்த மிதிலாவிற்கும், வேறுபாடுகள் அதிகமாக இருந்ததால், ஹரிக்கு மிதிலாவை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.


அதுவும் ஹரி அன்று பார்த்த சப்பியான புசுபுசுவென்று இருந்த கன்னம், அடர்த்தியான நீண்ட இரட்டை பின்னலிட்ட கூந்தல், குழந்தை தன்மையுடன் இருந்த முகம், என்று அனைத்தும் மிதிலாவிடம் மறைந்து விட்டிருந்தது.


மிதிலாவிற்கு தன்னுடன் நெருக்கமாக தன்னிலை மறந்து இருந்தது கூச்சமாக இருக்கும், அதிலும் தான் அவளை கேள்வி கேட்டதும் தான், பதில் சொல்ல முடியாது, விரைவாக ஓடி விட்டாள் என்றே ஹரி நினைத்தான்.


அவளின் உண்மை நிலை அவன் அறியும் பொழுது என்ன ஆவானோ…!?


ஹரி, மேலும் அவளை சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று முடிவு செய்து, 


கீழே விழுந்து இருந்த வின்டேஜ் ரேடியோவை எடுத்துக்கொண்டு ட்ரீ ஹவுஸிற்குள் சென்றான்.


அவனுக்குமே தனக்கு என்ன ஆகின்றது என்று சுய அலசல் செய்ய வேண்டி இருந்தது.


மீன்களுக்கு உணவை போட்டுவிட்டு, செடிகளுக்கும் சிறிது தண்ணீரை ஊற்றியவன், மனம் முழுவதுமே வேறு எங்கோ மாய ஊஞ்சலில் ஆடிக்கோண்டு இருந்தது.


மிதிலா உடனான நிகழ்வுகள் ஹரியை விட்டு இன்னும் நீங்கவில்லை.


மிதிலாவின் வாசம், அந்த ட்ரீ ஹவுஸ் முழுவதும், வீசுவது போல் ஹரிக்கு தோன்றியது.


அவன் உதடுகள் உணர்ந்த, அவள் உதட்டின் மென்மையும், வயிற்றின் மென்மையும் இன்னும் அங்கேயே குடியிருந்து இம்சித்தது.


அதிலும் மிதிலாவின் இடையை பற்றிய போது அவன் கை உணர்ந்த அந்த கதகதப்பு, இன்னும் அப்படியே அவன் கைகளில் இருந்தது.


அவன் கால்கள் கூட, இன்னும் அவள் கால்களின் ஸ்பரிசத்தை மறக்கவில்லை, எவ்வளவு மென்மையாக உரசியது.


இவை அனைத்தையும் விட அவளின் பார்வையும், டாக்டர் என்ற அழைப்பும் அவனை ராஜ போதையில் ஆழ்த்தியது.


அனைத்தையும் நினைக்க நினைக்க, ஹரிக்கு, உடல் பஞ்சு போல் லேசாக மாறி பறப்பதுபோல் இருந்தது.


இதயம் இதமாய் துடித்தது.


நிச்சயம் அவளுக்கும் தனக்கும் இடையில் ஏதோ சம்திங் சம்திங் உள்ளது, என்று அவன் இதயம் அடித்து கூறியது.


"ஒரு வேலை மாம் எனக்கு மேரேஜ்கு பார்த்த பொண்ணா.. இருக்குமோ", என்று யோசித்தவன்.


"இதை மறந்துட்டனே பிளான்க்கெட்லாம் எடுத்துட்டு போனாளே.. யாரு", என்று அவளை பற்றி அங்கேயே அமர்ந்து அவன் யோசிக்க.


அங்கு ஹரியிடம் இருந்து ஓடி வந்த மிதிலா, துணிகளை மெஷினில் போட்டுவிட்டு, இரவு உணவை வீட்டிற்கு சென்று உண்பதாக அன்னபூரணியிடம் சொல்லி, பேக் செய்து வாங்கிக்கொண்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு, அவசர அவசரமாக விடை பெற்று கிளம்பி ஓடியே விட்டாள்.


எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால், நிச்சயம் அவளுக்கு தெரியாது.


ஹரியை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மிதிலாவால் சுத்தமாக மீளமுடியவில்லை.


அங்கு ஹரி சிறிது நேரம், ட்ரீ ஹவுஸில் இருந்துவிட்டு, மீண்டும் மிதிலாவை காண ஆவலாக வீட்டிற்குள் வந்தான்.


உண்மையில் மிதந்து வந்தான் என்றே சொல்ல வேண்டும்.


ஹரி உள்ளே வந்ததும், அவனிடம் அன்னபூரணி அன்றைய நாளை பற்றி விசாரித்துவிட்டு, "ஃபிரஷ் ஆகிட்டு வா கண்ணா, டின்னர் சாப்பிடலாம்", என்று உணவு எடுத்து வர கிச்சன் பக்கம் திரும்பினார்.


ஹரி வீட்டில் மிதிலா இல்லை என்பதை உணர்ந்துக்கொண்டான்.


அதைவிட, அன்னபூரணியின் கண்களை பார்த்து, அவனால் சாதாரணமாக பேச முடியுமா என்று தெரியவில்லை..


எனவே உடனே, "வெளியே சாப்டேன் மாம், ரொம்ப டயர்டாக இருக்கு, படுக்க போறேன்", என்றான்.


"என்ன கண்ணா ஆச்சு…", என்ற அன்னப்பூரணி, உடனே அவன் நெற்றியில் தன் கையை வைத்து பார்த்தார்..


ஹரிக்கு உண்மையிலேயே உடல், அதீத ஹார்மோன் மாற்றத்தால், காய்ச்சல் வந்தப் போல் தான் இருந்தது.


"லேசா உடம்பு சுடுறப்போல கூட இருக்கே ஹரி… எதுக்கும் மாத்திரை ஒன்னு போட்டுட்டே படு", என்றுக்கூற.. 


"ஓகே மாம்.. நீங்களும் படுங்க", என்ற ஹரி, மாடியேறி, அறைக்குள் வந்ததும், தன் உணர்வுகளின் போராட்டம் தாங்காமல் பொத்தென்று படுக்கையில், அப்படியே விழுந்தான்.


கண்ணை மூடினாலும் சரி, திறந்தாலும் சரி, மிதிலாவின் நினைவே ஹரிக்கு.


"இது என்ன இப்படி இருக்கு, ப்ச்…", என்று நினைத்தவன் மேலும், "அப்பவே யாருன்னு பிடிச்சு விசாரிச்சு இருக்கலாம்", என்று, விடிய விடிய தூங்காமல், அந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டு டீன் ஏஜ் பையன் போல் பெட்டில் தூங்காமல் படுத்து இருந்தான்.


இங்கு மிதிலாவோ, இயந்திரத்தனமாக குழந்தைக்கு, அன்னபூரணி கொடுத்த இட்லியை ஊட்டிவிட்டு, பால் கொடுத்து, துணி மாற்றி விட்டு,

தூங்க வைத்தவள்.


தனியாக அமர்ந்து, கேட்பாரின்றி அழுது கரைந்துக்கொண்டு இருந்தாள்.


ஹரி வாங்கிக்கொடுத்த மஞ்சள் நிற கவுனும், செயின் மற்றும் கிரீட்டிங் கார்டும்.. அவள் மடியில் கிடந்தது.


அதுவும், கிரீட்டிங் கார்டில் மிதிலா யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்திருந்த,


டாக்டர் லவ்ஸ் ஜிகிலி 


அவளை கொல்லாமல் கொன்றது.


கடைசியாக அவள், தன்னுடைய வீட்டில் இருந்து வரும் பொழுது, ஹரி வாங்கி கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்.


மகிழ்மதியின் மருத்துவ செலவிற்கு என்று அவசர அவசரமாக எடுத்துவந்த நகையுடன், விஷ்ணு பத்திரமாக வைத்திருந்த ஹரி வாங்கித்தந்த செயினும் இருந்தது.


அதேப்போல் நகையை தூக்கி அருகில் இருந்த பையில் எடுத்துப்போட்டு இருக்க.. அந்த பை அவர்கள் வீட்டின் முக்கிய சர்டிபிகேட்கள் அடங்கிய பை.. அதில் தான் மிதிலா யாருக்கும் தெரியாது, க்ரீட்டிங் கார்டை அவளின் மார்க்ஷீட்களுக்கு மத்தியில் ஒலித்து வைத்து இருந்தாள்.


அவள் அறியாமலேயே ஹரியுடைய நினைவுகள் அனைத்தும், அவள் உடனேயே இந்தியாவிலிருந்து அமெரிக்காவை நோக்கி பயணித்து இருந்தது.


அதையே அவள் இன்று தான் உணர்ந்தாள். 


ஹரியை பற்றி தான், அவள் கடந்த சில மாதங்களாக சுத்தமாகவே மறந்துவிட்டு இருந்தாளே..!!


இதோ மீண்டும் அவள் நெஞ்சில், அவன் உயிர்பெற்று வந்துவிட்டான்.


இதுதான் கடவுள் இட்ட முடிச்சு போல்.


நேரம் நல்லிரவையே கடந்துவிட்டு இருக்க, மிதிலா மகிழ்மதியை அணைவாக பற்றி படுத்துக்கொண்டு தூங்க முயற்சித்தாள்.


முயற்சியின் பலனோ பூஜ்யம்.


அவளால் மனதை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை.


தானாகவே ஹரி உடனான நிகழ்வுகள், அவள் கண்களின் முன்பு தோன்ற ஆரம்பித்தது.


அதன் தொடர்ச்சியாக ஹரியுடன் சேர்ந்து பெற்றோர்கள் நினைவும் மேலோங்கியது.


அதன் விளைவு, யாரும் தேற்றுவார் இல்லாது, குழந்தையை விட்டு விலகி வந்தவள், கிட்சன் தரையில் அமர்ந்து, ஏங்கி ஏங்கி வாயை பொத்திக் கொண்டு கதறி அழுதாள் நீண்ட நேரம்.


அழுதுகொண்டே இருந்தவள், எப்பொழுது அப்படியே அங்கே தரையில் சரிந்து படுத்து தூங்கினாள் என்று தெரியாது.


காலையில் எப்பொழுதும் எழும் நேரத்திற்கு, அவளுக்கு முழிப்பு வந்துவிட்டது.


எழும்பொழுதே, தரையின் குளிரினால் வந்திருந்த, மிகுந்த தலை பாரத்துடன் எழ முடியாமல் எழுந்தாள்.


பாத்ரூம் சென்று, வெந்நீரில் குளித்துவிட்டு வந்து, சூடாக காப்பி போட்டு குடித்தாள்.


கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது.


அதற்குள் குழந்தை எழுந்து சினுங்கத்தொடங்க..


கடமை அவளை இழுத்துக்கொண்டது.


குழந்தையை பார்த்து, ரெடி செய்து, உணவு தயாரித்து, அவளை டேகேரில் விட்டுவிட்டு, ஓடி வந்து, பணிக்கு தயாராகி சென்றாள்.


கவலைப்படக் கூட, மிதிலாவிற்கு அவளுடைய தற்போதைய வாழ்க்கை தரம், இடம் கொடுக்க வில்லை.

 

அங்கு கடையில் நிற்க முடியாத அளவிற்கு, மிதிலாவிற்கு தலைவலி மண்டையைப் பிளந்தது. காலை நேரம் வேறு சற்று கூட்டம் அதிகம்.


அங்கு ஹரியோ விடிய விடிய, சுகமாக கனவு கண்டுவிட்டு, காலை விடிந்தப்பின் தான், நன்றாக அசந்து தூங்கி கொண்டு இருந்தான்.


எப்பொழுதும் 5:30 மணிக்கு ஜாகிங் செல்ல ஹரி கீழே இறங்கி வந்து விடுவான்.


இன்றோ ஆறு மணி ஆகியும் ஹரி வரவில்லை.

 

அன்னபூரணி ஹரிக்கு மொபைலில் கால் செய்து கொண்டே இருந்தார்.


ஹரி போனையே எடுக்கவில்லை.


ஹரி இரவும் சாப்பிடவில்லை, சோர்வாக வேறு நேற்று இருந்தான், காலையிலும் கீழே வரவில்லை, ஃபோனையும் எடுக்கவில்லை என்றால், ஹரிக்கு என்னவோ என்று பதறி..


அன்னபூரணி, அவரால் முடிந்த வரை விரைவாக, கால் வலியை பொறுத்துக்கொண்டு மாடி ஏறினார்.


பத்து படிக்கே, அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தொடங்கியது.


அவருக்கு சுத்தமாக முடியவில்லை, இருந்தும் எப்படியோ கடைசி படிகளை தாண்டி, மேலே ஏறி வந்துவிட்டவர், ஹரியின் அறை கதவை தட்டினார்.


அவர் கதவை, பலமுறை பலமாக தட்டிய பிறகே, நல்ல தூக்கத்தில் இருந்த ஹரி, எழுந்து வந்து கதவை திறந்தான்.


ஹரியின் கண்கள், ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாததால், நன்கு சிவந்து களையிழந்து இருந்தது.


அதில் அன்னபூரணி பதறி, "என்ன கண்ணா உடம்பு முடியலையா, ராத்திரி சீக்கிரமே தூங்க வந்துட்ட இல்ல, என்ன ஆச்சு, ஃபோன் பண்ணா கூட எடுக்கலை", என்றப்படி, ஹரியை தொட்டுப் பார்த்தார், நேற்றை விட இன்று உடம்பு அதிக சூடாக இருந்தது.


ஹரி அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் தெளிந்து அன்னபூரணியையே ஒழுங்காக பார்த்தான்.


அவரின் பரிதவிப்பை பார்த்தவுடன் ஹரி, "எனக்கு ஒன்றும் இல்லை மாம், நேத்து கொஞ்சம் ட்ரக்கிங் தூரம் அதிகம், அதுதான் அசந்து தூங்கிட்டேன்,

நீங்க ஏன் கஷ்டப்பட்டு மாடி ஏறி வந்திங்க, வாங்க உட்காருங்க", என்று மாடியிலேயே லிவ்விங் ஹாலில் இருந்த சோபாவில் பொறுமையாக அழைத்துச் சென்று உட்கார வைத்தான்.


அதற்குள்ளேயே அன்னபூரணியின் கால் பெரிதாக வீங்கி விட்டு இருந்தது.


அதை பார்த்த ஹரி, அவரின் காலை சிறு ஸ்டூலின் மீது தூக்கி வைத்து விட்டு, உள்ளே சென்றவன், 


உடனடியாக ஹாட் பேகில், வெந்நீர் ஊற்றி, எடுத்து வந்து, அவர் காலிற்கு ஒத்தடம் கொடுத்து, கொஞ்சம் மருந்தும் வீக்கம் வாங்க தடவிவிட்டு, சென்றவன்..


நிமிடத்தில் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு, கீழே இறங்கி சென்று, காபி போட்டு, மேலே அன்னபூரணிக்கு எடுத்து வந்தான்.


அன்னபூரணியோ அதற்குள்ளே முழுதும் சோர்ந்து விட்டு இருந்தார்.


ஹரிக்கோ மிகவும் வேதனையாகி போனது.


அன்னபூரணி காஃபி குடித்து முடித்ததும், சோபாவிலேயே படுக்க வைத்தவன்..


விரைவாக இட்லி ஊற்றி, சட்னியும் அரைத்து, அன்னபூரணிக்கு தட்டில் எடுத்து வந்தவன்,  


மாடியிலேயே அவருக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்டு, மாத்திரையும் கொடுக்க..


உணவு உண்ட பிறகு ஓரளவிற்கு அன்னபூரணி தெளிந்தார், அவரின் மாற்றத்தை உணர்ந்த ஹரி, மெதுவாக அன்னபூரணியை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு, மாடியிலிருந்து கீழே வந்து, அவர் அறைக்குச் சென்று படுக்க வைத்தவன்..


அவர் சற்று தூங்கி எழுந்து, தெளிவான பிறகு தான் மருத்துவமனைக்கு கிளம்பினான்.


வீட்டில் காலையில் நடந்த கலவரத்திலும், மருத்துவ மனைக்கு தாமதமாக கிளம்பியதிலும், ஹரி மிதிலாவை பற்றி அன்னபூரணியிடம் விசாரிக்கவே மறந்துவிட்டான்.


மேலும் அன்று, மிக முக்கியமான சிசேரியன் கேஸ் ஒன்றுக்கு வேறு ஏற்பாடு செய்து இருந்தான்.


அந்த வேலைகள் அவனை முழுவதுமாக இழுத்துக்கொண்டது.


ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்து, தாய் சேயை முற்றிலும் மீட்ட பிறகு தான் அவனுக்கு மூச்சே நிம்மதியாக வந்தது‌.


ஓய்வு அறைக்குள் வந்தவன், அங்கிருந்த சாய்வு நாற்காலியில் தளர்வாக, அமர்ந்தப்படி, அன்னப்பூரணிக்கு அழைத்து அவர் உடல்நிலையை விசாரித்தான்.


அவர் "ஒன்னும் பிரச்சனையில்லை, நான் நல்லா இருக்கேன்.. அங்க ஆப்ரேஷன் என்ன ஆச்சு..", என்று அவர் விசாரிக்க.


ஒரிரு நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு ஃபோனை அணைத்த ஹரியை, மறுநிமிடமே, மிதிலாவின் நினைவுகள் வந்து அணைத்துக் கொண்டது.


ஹரியின் முக சோர்வையும், அப்பொழுது அப்பொழுது தனக்குள்ளேயே சிரிக்கும் அவன் முகத்தையும், முகச் சிவப்பையும், 


அந்த அறைக்குள் இருந்த, வேறு சில மருத்துவர்கள் பார்த்துவிட்டு,


ஹரியிடம் "ஹேய் ஹரி, நேத்து நைட், டேட்டிங் எதுவும் போனையா மேன்.. கண்ணெல்லாம் ரெட்டிஷா இருக்கு.. கூடவே இரண்டு கன்னமும்", என்று ஆங்கிலத்தில் கேட்டு, அவனை கலாயிக்க..


"ஓ.. நோ.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.. ஜஸ்ட் டயர்ட்", என்றவன், மீண்டும் டியூட்டிக்கு கிளம்பிவிட்டான்.


மதியத்திற்கு மேல் அன்னபூரணியோ, மிதிலாவிற்கு அழைத்து, 

காலையில் நடந்ததை கூறி, 


உடல் சுத்தமாக முடியவில்லை என்றும், நாளை தீபாவளிக்கு பூஜை வேலைகள் உள்ளது என்றும் கூறி, இன்று மாலை அவளை வீட்டிற்கு உதவிக்கு வருமாறு கூப்பிட்டவரிடம்,

மிதிலாவால் சுத்தமாக மறுக்க முடியாமல் போனது.


ஹரிக்கும் வேறு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றது வேறு அவள் மனதை அழுத்த, "சரி ஆன்ட்டி வரேன்", என்றுவிட்டு வைத்தாள்.


மிதிலா, முன் மாலை பொழுதிலேயே, குழந்தையை தூக்கிக்கொண்டு மனம் முழுவதும் பதட்டத்தை சுமந்துக்கொண்டு ஹரியின் வீட்டிற்கு சென்றாள்.


போனதும் அன்னபூரணியை நலம் விசாரித்துவிட்டு, விரைவாக பணிகளை செய்யவும் தொடங்கினாள்.


நேரம் ஆறு மணியை கடக்க,

 

மிதிலா கிச்சனில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தாள்.


அன்னபூரணி சாமி வீட்டில், சேரில் அமர்ந்தப்படி, விளக்குகளுக்கு பொட்டு வைத்து கொண்டு இருந்தார்.


குழந்தை ஹாலில், கார்ட்டூன் பார்த்துக்கொண்டும், ஹஸ்கியுடன் விளையாடிக் கொண்டும் இருந்தது.


அப்பொழுது தான் ஹரி பணியில் இருந்து வீட்டிற்கு வந்தான். 


ஹரி கதவை திறந்துக்கொண்டு உள்ளே வர, ஹஸ்கி அவனை நோக்கி ஓடியது. 


சத்தம் கேட்டு திரும்பி பார்த்த குழந்தையும், ஹரியை நோக்கி தவழ்ந்து செல்லத் தொடங்கிவிட்டது.


"யாரு அது, நம்ம வீட்டில கார்ட்டூன் பார்க்கிறாங்க, ", என்று உள்ளே ஹாலின் புறம் பார்த்த ஹரி,


அப்பொழுதுதான் கீழே அவனை நோக்கி, கலகலவென சிரித்துக்கொண்டு, வேக வேகமாக தவழ்ந்து வரும் குழந்தையை பார்த்தான். 


சட்டென்று குழந்தையை நெருங்கிய ஹரி, கீழே மண்டியிட்டு அமர்ந்து, "ஹாய் லிட்டில் பிரின்ஸஸ்!!! வெல்கம் டு அவர் ஹோம்!! ப்ளீஸ் வெயிட் ஃபார் 5 மினிட்ஸ் கியூட்டி, ஐ வில் சேஞ்ச் மை ஹாஸ்பிடல் டிரஸ் அண்ட் கம் பாக் சூன், சோ சாரி பேபி ப்ளீஸ் வெயிட் எ மினிட்..", என்று விட்டு, "மாம் ஐயம் பேக்", என்று உரக்க சொல்லிவிட்டு, ஹரி உற்சாகத்துடன் மாடி ஏறி ஓடினான்.


எப்பொழுதாவது அன்னபூரணியின் நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள்.


அவர்கள் குழந்தை என்றே ஹரி நினைத்தான்.


மிதிலாவின் குழந்தை என்று தெரிந்தால் என்ன ஆகும்..??


ஒருவனிற்கு ஒருத்தி என்ற கருத்து கொண்டவன், 


தன்னுடைய பொருட்களை யாரும் பார்ப்பதைக் கூட விரும்பாதவன், 


உண்மை அறிந்தால் மிதிலாவின் புறம் சாய்வானா..??


பார்ப்போம்…!!

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻