உண்மை காதல் -9
அத்தியாயம் -9
அன்று மாலை, வேலை முடிய, மிதிலா குழந்தையை பிக்கப் செய்துகொண்டு, அன்னபூரணியை காண ஹரியின் இல்லம் நோக்கிச்சென்றாள்.
அவள் மனமோ ஒரு நிலையில் இல்லை.
அவளின் செவி மடல்களின் ஓரம் இன்னும், ஹரியின் உதட்டின் ஸ்பரிசம் இருப்பது போல் தோன்றி தோன்றி கூச செய்தது.
அதிலும் அவளின் நெஞ்சின் மீது ஹரியின் ஒற்றை விரல் கொடுத்த அழுத்தம், இன்னும் அவ்விடத்தில் குறுகுறுக்க வைத்தது. அதுவும் அதே அழுத்தத்துடன்.
அதன் பலனாக, அவள் விரல்கள் பத்து வினாடிக்கு ஒருமுறை, அவளின், செவி மடல்களையும், நெஞ்சையும், அவளை மீறி நீவிக்கொண்டே இருந்தது.
மதியத்தில் இருந்தே அவள் மனம், உடல் முழுக்க ஏற்ப்பட்ட ஹார்மோன் மாற்றங்களால், ஒருநிலையில் இல்லாமல், தத்தளித்துக் கொண்டே தான் இருந்தது.
எப்படியோ ஒருவழியாக, இரவு 7 மணி அளவில், ஹரியின் வீட்டை மிதிலா அடைந்து விட்டாள்.
காரை பார்க் செய்து, குழந்தையை தூக்கிக்கொண்டவள், செர்று டோர் பெல்லை அடிக்க..
மறு நிமிடமே, ஹரி வந்து கதவை திறந்து விட்டான்.
"ஹேய்.. வாங்க வாங்க, ஏன் இவ்வளோ லேட்..??", என்றவன்,
மகிழ்மதியிடம், "வெல்கம் லிட்டில் பிரின்சஸ், உங்க மாம் வெரி பேட், உங்களை என்க்கிட்ட காட்டவே இல்லை", என்று கேலியாக கூறிக்கொண்டே, ஹரி மிதிலாவின் கையில் இருந்த குழந்தையை தூக்கிக்கொள்ள..
அவளும் எட்டிப்பார்க்க துவங்கிய, இரண்டு அரிசி பற்களை காட்டி கலகலவென்று சிரித்தப்படி, ஹரியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
வெண்ணிற நிற கவுன் முழுக்க, பிங்க் நிறத்தில் சிறு சிறு ஹார்டின் டிசைன் போட்ட உடையில், கொள்ளை அழகுடன் இருந்த மகிழ்மதி, போன முறை ஹரி பார்த்ததை விட, இம்முறை கூட வளர்ந்துவிட்டு இருந்தாள்.
பால் கன்னங்கள் இரண்டும், ஆடும் வண்ணம் சிரிக்கும் குழந்தையை, யாருக்கு தான் பிடிக்காது இருக்கும்.
"டிவைன் பியூட்டி…" என்றவன்.. தன் இதழ்களை பட்டும் படாமல், அவளின் மென்மையான கன்னத்தில், ஹரி பதிக்க.
அவன் கொஞ்சும் அழகில் மயங்கி நின்று இருந்த மிதிலா, பிறகே ஹரியின் உடையை கவனித்தாள்.
மிதிலா அணிந்து இருந்த உடையின் அதே நிறத்தில் ஹரி, பீச் நிற ஷார்ட்ஸ் மற்றும் ஜீன் கலர் ஷர்ட் அணிந்து இருந்தான்.
இது எதிர்ச்சையாக நடந்ததா..??, இல்லை வேண்டும் என்றா..??, என்று சிந்தித்தப்படி அவள், அவன் முகத்தை பார்க்க..
அவளின் விழிமொழிகளையும், புருவங்களுக்கு இடையேயான சுருக்கத்தையும், கண்டிருந்த ஹரி,
மெல்லிய புன்னகையுடன், தன் புருவத்தை உயர்த்தி என்ன என்பதுப்போல் சைகை செய்து, அவளிடம் கேட்க..
அவள் அவசர அவசரமாக ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
அதில் செல்லமாக அவளை பார்த்து முறைத்த ஹரி, தன் கண்களாலேயே, அவள் உடையையும், தன் உடையையும், காண்பித்து, கண்ணை அடித்து, நீ நினைத்தது தான் சரி என்று கூறிவிட..
மிதிலாவின் கண்கள் இரண்டும் அகல விரிந்துக்கொண்டது.
கூடவே மிதிலாவிற்கு பயங்கர சிரிப்பு வேறு, அவனின் இந்த சிறுப்பிள்ளை தனமான மேட்சிங் மேட்சிங் டிரஸில்..
அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்துக்கொண்டு இருக்கும் தானே..
மிதிலாவின், புன்னகை முகத்தையே, இப்பொழுதுதான் ஹரி முதல்முறை பார்க்கின்றான்.
அச்சிறு புன்னகைக்கே, மிதிலாவின் முகம் முழுமதியாக ஜொலித்தது.
அதிலும் அவளின் சிரிப்பில் தோன்றிய அவளின் கன்னக்குழியை பார்த்தவன், அதன் அழகில், அக்குழியிலேயே ஆயுள் கைதியாக விழவும் தயாராகிவிட்டு இருந்தான்.
"Cute dimples" என்றவன், பட்டென்று தன் ஆள் காட்டி விரலால், அவளின் கன்னக்குழியை தொட..
புன்னகைத்து கொண்டு இருந்தவள், ஹரியின் திடீரென்ற ஸ்பரிசத்தில், அப்படியே அசையாது நின்றுவிட்டாள்.
"சோ சாஃப்ட்", என்றவன் மேலும் அவ்வொற்றை விரலால், அவளின் கன்னத்தில் அழுத்தம் கொடுக்க..
மிதிலாவின் கரம், ஓடிச்சென்று ஹரியின் அந்த விரலை பிடித்துக்கொள்ள..
இருவரின் உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்துக்கொண்டது.
நொடியில் மிதிலாவின் முகம் மொத்தமும், அதிக ரத்த ஓட்டத்தில் சூடாகி, சிவந்துவிட்டது.
அதில் ஹரியின் காந்தக் கண்களோ, அவளை இன்னும் அதிகரித்த ரசனையுடன், வருடத்தொடங்கிவிட..
பெண்ணவள் படப்படத்துப் போனாள்.
அதற்குள், போதும் உங்கள் இருவரின் கண்ஜாடைகளும், என்று முடிவு செய்த மகிழ்மதி,
தன் பிஞ்சு கைகளால், ஹரியின் கழுத்தை அணைத்து, தன்னை நோக்கி அவனை இழுத்தவள், அவன் கன்னத்தில் எச்சில் தெறிக்க முத்தமொன்றை வைத்து, அவன் கன்னத்தை அப்படியே கடிக்க..
"அவுச்…", என்று கத்திய ஹரி, நிகழ் உலகிற்கு திரும்பி, "ஓ.. பேபி.. என்ன இது, ரொம்ப பொசஸிவ்வா இருக்கீங்க.. உங்களை தான் நான் கொஞ்சனுமா..??", என்று குழந்தையிடம் கேட்க..
அவளோ, மீண்டும் ஹரியின் கன்னத்தில் முத்தம் வைத்து, எச்சில் செய்துவிட்டு.. தன் பொக்கை வாயைத்திறந்து சிரிக்க..
ஹரியின் இதயம் அப்படியே பாகாய் கரைந்துப்போனது.
தன் கண்களை மூடி அப்படியே ஒருநொடி அந்த இதத்தை ரசித்தான்.
மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளை ஸ்பரித்ததுடன் சரி அவன்.
இவ்வாறு வளர்ந்த குழந்தைகளின் அன்பை பெறுவது இதுவே முதல்முறை.
குழந்தைகளின் முத்தம் எப்பொழுதும், எவ்வித கலப்படமும் அற்ற தூய அன்பின் உச்சகட்டம் அல்லவா..??
தன் மற்ற உணர்வுகள் அனைத்தையும், பின்நோக்கி தள்ளி வைத்தவன், குழந்தையை தூக்கி தன் முகத்திற்கு நேராக கொண்டுவந்து, மார்புடன் சேர்த்து அணைத்து, "தேங்க்யூ சோ மச் டா கியூட்டி, ஐயம் வெரி வெரி ஹேப்பி செல்லம், feeling blessed", என்றவன்,
சில முத்தங்களை அவளுக்கு வாரி கொடுத்துவிட்டு,
"ஸ்கூல்ல இருந்து மாம்மி(Mommy) கூட கிரான்னிய(Granny) பார்க்க அப்படியே வந்துட்டீங்களா செல்லம்…??, வயிறு பசிக்குதா..??, வயித்துல ஒன்னும் இல்ல போல..??", என்று அவள் வயிற்றை தொட்டுப் பார்த்துவிட்டு,
மிதிலாவை பார்த்த ஹரி, "உள்ளே வா பேபி, ஹால்ல உட்கார், ஒரு டூ மினிட்ஸ் வந்துடறேன்", என்று விட்டு கிச்சன் நோக்கி விரைந்து சென்றான்.
"ஆன்ட்டி என்ன பண்றாங்கனு, தெரியலையே..??", என்று நினைத்த மிதிலா, ஹரி காட்டியை இருக்கையில் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள்.
உரிமையாக அன்னபூரணியின், அறைக்குள் செல்லும் அளவுக்கு எல்லாம் அவளுக்கு தைரியமும், உரிமை உணர்வும் இல்லை.
ஹரி, ஒரு ட்ரேவில், ஒரு கப்பில் டீயும், மற்றொரு கப்பில் குழந்தைக்கு பாலும் வைத்து எடுத்துவந்து இருத்தான்.
மிதிலாவிடம் டீ கப்பை கொடுத்துவிட்டு, ட்ரேவை டேபிள் மீது வைத்தவன்,
சோபாவில் மிதிலாவின் அருகிலேயே உட்கார்ந்து, குழந்தையை அவள் மடியில் இருந்து தூக்கி, தன் மடியில் உட்கார வைத்தவன்.. எட்டி ட்ரேவில் இருந்த பால் கப்பினுள் ஸ்ட்ரா போட்டு குழந்தையின் வாயருகே வைத்துப் பிடித்துக்கொள்ள..
குழந்தையோ பசியில், பால் பாட்டிலில் குடிப்பது போல் இழுத்து, முதல்வாய் குடித்துப்பார்த்து, அதன் வித்யாசத்தை உணர்ந்து, நாக்கை தட்டி சப்புக்கொட்டியப்படி, ஹரி முகத்தை பார்த்து சிரிக்க..
உடனே குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட ஹரி, "Is it yummy? Looks like, you love it so much baby doll", என்றுக்கூற.
மிதிலா, "பாப்பாவுக்கு இதுவரை மாட்டு பால் கொடுத்தது இல்லை, டாக்டர் ஒன் இயருக்கு அப்புறம்தான் கொடுக்க சொன்னாங்க.. ஆனா நீங்க கொடுக்கறீங்க.. எதுவும் ஆகாதா", என்றாள், குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற, பயத்துடன்.
ஹரி சிரித்துக்கொண்டே, "நானும் டாக்டர் தான் பேபி, மறந்துட்டயா, எனக்கும் தெரியும் குழந்தைக்கு cow milk ஒரு வயசு வரை தரக்கூடாதுன்னு,
பயப்படாத, இது மாட்டுப்பால் இல்லை, கொஞ்சம் நட்ஸ் கூட ஒரே ஒரு டேட்ஸ் மட்டும் போட்டு தண்ணிவிட்டு வேகவச்சு, அரைச்சு, வடிக்கட்டி எடுத்த மில்க் தான் இது, ஒன்னும் ஆகாது, பேபிக்கு நல்லா எனர்ஜியா இருக்கும், நட்ஸ் அலர்ஜி எதுவும் இருந்தாலும், ஒரு அரைமணி நேரத்தில் தெரிஞ்சிடும், don't வொரி ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்", என்றான் நிதானமாக,
மிதிலாவிற்கு, ஹரி தெளிவாக விளக்கம் கொடுத்ததும் தான் நிம்மதியானது.
அதிலும் அவன், யாரோ ஒரு குழந்தைக்காக, இவ்வளவு செய்து இருப்பதில் ஆச்சரியம் அடைந்தவளுக்கு.. ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட, இப்படி தானே யாரோ ஒரு தெரியாத பெண்ணான தனக்கு, பார்த்து பார்த்து ஹரி உதவி செய்தான் என்பது தோன்றி மனம் அந்நினைவில் நெகிழ...
அதற்குள் ஹரி, "டீ ஆறிட போகுது பேபி, சீக்கிரம் குடி, எவ்வளவு நேரம் தான், என் முகத்தையே பார்த்துகிட்டு இருப்ப, டீ குடிச்சுட்டு, அதுக்கப்புறம் கூட பொறுமையா பாரு, ", என்றான்.
அதில் திடுக்கிட்டு, தன் பார்வையை விலக்கிக்கொண்ட மிதிலா, பட்டென்று குனிந்து, டீ-யை அருந்த தொடங்கிவிட..
லேசாக சிரித்த ஹரி, "டீ நல்லா இருக்கா பேபி, ஷுகரெல்லாம் போதுமா உனக்கு", என்று விசாரித்தான்.
மிதிலா, "ரொம்ப சூப்பராயிருக்கு டாக்டர், எங்க அம்மாவோட டீ குடிச்ச போல இருக்கு..", என்று சொல்லும்பொழுது பாதியிலேயே அவள் குரல் நெகிழ்ந்தும், உடைந்தும் இருந்தது.
அவளின் மனதை உணர்ந்து கொண்டு, உடனே ஹரி, "அப்ப மிதிலாவுக்கு டெய்லி, அவங்க அம்மா மாதிரியே, சூப்பரான டீ போட்டு கொடுக்க, நான் ரெடி, மிதிலாவுக்கு ஓகேனா", என்று தன் மனதில் இருந்ததை, இலைமறை காய்மறையாக, ஹரி பட்டென்று சொல்லிவிட்டான்.
மிதிலாவோ, 'டெய்லி போட்டு கொடுக்கிறாரா, என்ன சொல்றார் இவர்', என்று யோசித்து, பட்டென்று அதன் அர்த்தத்தை உள்வாங்கி, அதிர்ந்து ஹரியை நிமிர்ந்து பார்க்க..
அவளின் முக உணர்வுகளை கொஞ்சமும் தப்பாது படித்த ஹரி, "ஐ மீன், டெய்லி ஈவன்னிங் இங்க வா மிதிலா, நான் உனக்கு டீ போட்டு தரேன், குடிச்சு மூடிச்சுட்டு நீ போகலாம்னு சொல்றேன், என்ன சொல்ற…?", என்று கேட்டான்.
அதில் மிதிலா 'என்னடா இது, நாம தான் தப்பா நினைச்சுட்டோமோ' என்று முழிக்க.
ஹரி சிரித்தே விட்டான், "ஏன் நீ என்ன நினைச்ச, இப்படி திருட்டு முழி முழிக்கிற..". என்று வேறு போட்டு வாங்க பார்க்க.
அப்பொழுது தான் ஹரியின் விளையாட்டே மிதிலாவிற்கு புரிந்தது.
நொடியில் அவளுக்கு மூச்சே அடைத்த உணர்வு. இப்பொழுது தான் நிம்மதி ஆனது.
அவனுடைய கலாட்டா புரிந்தாலும், அவளால் ஹரியை போல் உடைத்து சகஜமாக ஹரியிடம் உரையாட முடியவில்லை.
பழைய மிதிலாவாக இருந்து இருந்தால், இந்நேரம் ஹரியை தலையால் தண்ணீர் குடிக்க அல்லவா வைத்து இருந்து இருப்பாள்.
அவளுடைய கடந்தகாலம் அவளை அமைதியாக்கிவிட்டு இருந்தது.
மிதிலா, "நான் ஒன்னும் நினைக்கலை டாக்டர்", என்று விட்டு, மீண்டும் குனிந்து கொண்டாள், டீ குடிக்கும் பாவனையில்,
குழந்தை பாலை சொட்டுவிடாமல் குடித்துவிட்டது.
ஹரி மீண்டும் ட்ரேயில் கப்பை வைத்துவிட்டு, டேபிளில் இருந்த டிஷ்யூ பாக்சை எடுத்து, குழந்தையின் வாயை துடைத்து விட..
எந்த வேலை செய்தாலும், முழு ஈடுபாட்டோடு ரசித்து செய்யும் ஹரியை அவளுக்கு இன்னும் இன்னும் பிடித்தது.
அவள் ஏதோ தனக்குள் உண்டான நினைவில் மூழ்கி இருக்க..
ஹரி மிதிலா தோள் தொட்டு உலுக்கி, "என்ன நினைச்சுகிட்டு இருக்க பேபி,
நான் கேட்டது எதுவும் காதுல விழலையா உனக்கு", என்றான்.
மிதிலா நினைவில் இருந்து மீண்டு, "என்ன டாக்டர் கேட்டீங்க", என்று விழிக்க.
ஹரி, "கிழிஞ்சுது போ, உனக்கு என்ன வயசுன்னு கேட்டேன்", என்றான்.
மிதிலா உடனே மனதில் கணக்கிட்டு "இருபத்தி ஆறு முடிய போகுது டாக்டர், ஏன்", என்றாள் பீதியுடன்.
ஹரி, "is it..??", என்று அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, "நீ ஏன் குழந்தைக்கு ஃபீட் பண்ணலை, ரொம்ப ஏஜ்ட்டு இல்லைன்னா, ரொம்ப சின்ன வயசுனாதான் லாக்டேஷன் இருக்காது, என்ன பிராப்ளம் உனக்கு, உன்னை பார்க்கவும் வேற, டீன் ஏஜ் கேர்ள் மாதிரி சின்னதா இருக்க, ஆனால் 26 ஆகிடுச்சு சொல்ற..", என்றவன்,
மேலும் தொடர்ந்து, "குழந்தைக்கு ஃபீட் பண்ணனும்னா முதல்ல ஹெல்த் நல்லா இருக்கனும், பாடிய கொஞ்சம் கூட நீ கேர் பண்ணி மெயின்டேயின் பண்ற மாதிரியே தெரியலை.. வயசுக்கு ஏத்த மெட்சூரிட்டியும் உனக்கு இல்லை.. நீயே ஒரு பேபி மாதிரி இருக்க.. இதில் உனக்கு ஒரு பேபி.. சொல்லு டாக்டர் என்ன பிராப்ளம் சொன்னாங்க..??", என்றுக்கேட்க.
மிதிலாவிற்கு இதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தன்னை கண்டுபிடித்து விடுவானோ என்று வேறு, அப்படி ஒரு பயம் உள்ளுக்குள்.
"இல்ல.. அது வந்து.. டாக்டர்..", என்று அவள் தடுமாற..
அவள் முக பாவனையை பார்த்து, பால் கொடுக்காத காரணத்தை சொல்ல சங்கடத்தில் கூச்ச படுகிறாளோ, என்று நினைத்து, "சரி விடு.. இனி ஒழுங்கா சாப்பிடு..", என்ற ஹரி அந்த பேச்சை விட்டு விட்டு அடுத்த உரையாடலுக்கு மாறினான், "எனக்கு வயசு முப்பத்தி அஞ்சு இப்போ, உன்னை விட டென் இயர்ஸ் கிட்ட சீனியர் நான்",
என்றவன், மனதினுள் 'டூ லாங் கேப், பட் ஐ தின்க் இட்ஸ் ஓகே, இனி நோ ஆப்ஷன்', என்று மெதுவாக தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
அதே சமயம் மிதிலா, 'டாக்டருக்கு முப்பத்தஞ்சு வயசு ஆகுதா.. அப்ப என்னை விட 15 வயசு பெரியவங்களா" என்று மனதில் கணக்கு போட்டாள், அப்பொழுது கூட, ஹரிக்கு தன்னை விட, எத்தனை வயது, அதிகம் என்று தான் கணக்கு போட்டாளே தவிர, தப்பித்தவறிக்கூட அவன் தனக்கு பொருத்தம் இல்லை என்று அவள் நினைக்கவில்லை.
அதற்குள் மிதிலாவை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்துவிட்ட ஹரி, "உன்னை எந்த ஆங்கிள்ள பார்த்தாலும், ஹை ஸ்கூல் போற பொண்ணு மாதிரி தான் இருக்க, ஒரு குழந்தையை டெலிவரி பண்ண சிம்டம்ஸ் எங்கேயும் இல்லை", என்று மீண்டும் அவளை கலவரப்படுத்தியன், மேலும் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தப்படியே, "எப்பவும் யங்கா இருக்கிற, உன்னோட ரகசியம் என்ன சொல்லு பேபி, பாரு எனக்கு, அதுக்குள்ளே நாலு முடி வேற வொயிட்டா ஆகிடுச்சு", என்று.. முன்னெற்றியில் புரண்ட இரண்டு முடியை எடுத்து காட்ட..
'இதை முன்னாடியே நேரடியா கேட்டு இருக்கலாம் இல்ல, இந்த டாக்டர்.. எப்படி பயமுறுத்துறாங்க..', என்று மனதினுள் ஹரி மேல் குறைப் பட்டுக்கொண்டவள், "முப்பதைஞ்சு வயசுல முடி நரைக்காம என்ன செய்யும் டாக்டர், இனி ஒன்னும் பண்ண முடியாது.. நீங்க இப்ப அங்கிள் ஆகிட்டீங்க...", என்று தன்னை மீறி துடுக்குடன் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டவள், ஹரியை நிமிர்ந்து பார்த்து, "முடி நரைச்சாலும் நீங்க ரொம்ப நல்லா, மேன்லியா, பாலிவுட் ஹீரோஸ் போல இருக்கீங்க டாக்டர்..", என்றாள் படப்படவென்று,
ஹரி தன்னை தவறாக நினைத்துக் கொள்வானோ என்று பதறி.
மிதிலாவின் தோளை சுற்றி தன் கையை படர விட்ட ஹரி, அவளை தன் தோள்ப்பட்டையுடன் சேர்த்து லேசாக அணைத்தப்படி, "இப்ப எதுக்கு பேபி இப்படி பயப்படுற.. நீ சொன்னதில் என்ன தப்பு இருக்கு.. ப்ளீஸ் இதே மாதிரி ஃபிரியா பேசு என்க்கிட்ட..", என்றவன்..
மேலும் அவளை தன்னுடன் சேர்த்து நெருக்கி, "உன் கண்ணுக்கு, நான் அங்கிள் மாதிரியா தெரியறேன் பேபி, உனக்கு ஓகே நா சொல்லு, நான் அங்கிள் இல்லைன்னு புரூவ் பண்றேன்", என்றான் அவள் காதில் கிசுக்கிசுப்பாக.
அதில் மிதிலா அதிர்ந்து எழுந்தே நின்று விட்டாள்.
அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று அவளுக்கு புரியவில்லை என்றாலும், ஏதோ ஏடாகூடமாக பேசி இருக்கின்றான் என்று அவனின் குரல் மாறுதல்கள், அவளின் பெண்மைக்கு புரிந்து, அவள் மூளையில் மணி அடித்து இருந்தது.
மிதிலா ஹரியை நிமிர்ந்து கூட பார்க்காது, "ஆன்ட்டியை பார்க்கலாம் வாங்க, நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்",என்றாள் சினுங்கலாக,
ஹரி, "ஹே மிதுமா ஈஸி, ஒன்னுமில்லை, கொஞ்சம் மகி பேபியை பிடி, நான் மாம் எழுந்துட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்", என்று குழந்தையை கொடுத்துவிட்டு, அன்னபூரணியின் அறையை நோக்கி நடந்துவிட..
மிதிலாவோ, ஹரியின், "மிதுமா", என்ற புது அழைப்பில், சிக்கிக் கொண்டாள்.
அவளுள், பல நினைவுகள், மேலெழுந்தது. எரிமலையாக அவள் நெஞ்சை தகிக்க செய்தது.
அவளுக்கான ருத்ரனின் பிரத்யோகமான அழைப்பு ஆகிற்றே அது.
நொடியில் அவள் கண்கள் இரண்டிலும் நீர் நிரம்பிவிட்டது.
மதியம் முதல், ஹரியின் காதல் மந்திர வலைக்குள் சிக்கி, இதோ இங்கு அவனருகில் அமர்ந்து பேசும் வரை வந்துவிட்டு இருந்தவளுக்கு, இப்பொழுது தான் தான் செய்யும் காரியத்தின் நிதர்சனம் விளங்கியது.
ஹரியோ, இன்று மதியம் அவள் கண்களில் பார்த்திருந்த, தனக்கான தேடுதலை வைத்து, தன்னுடைய முழு உரிமையையும் மிதிலாவின் மீது, கொஞ்சம் கொஞ்சமாக நிலைநாட்ட தொடங்கிவிட்டு இருந்தான்.
பல வருடங்களாக ஹரி மீது, மிதிலா கொண்ட நேசமோ, அவளை அவன் பால் சாய்த்து, அவனின் அனைத்து அதிகப்படி உரிமைக்கும், தன்னிடம் வழி விட்டு இருந்தது.
இனியும் அப்படியே இருப்பாளா..??
தன் உள்ளம் தொட்ட கண்ணாளனுடன், கை கோர்ப்பாளா..??
மருந்துகளின் வீரியத்தினால், உறங்கி கொண்டு இருந்த அன்னபூரணி, ஹரி கதவை திறந்த உடனே பட்டென்று விழித்துக்கொண்டார்.
"கண்ணா..", என்றப்படி அவர் எழ முற்பட..
"நான் தான் மாம்.. இருங்க", என்றப்படி படுக்கையை விரைந்து நெருங்கிய ஹரி, அவர் எழுந்து அமர, உதவி செய்தப்படி.. மிதிலா குழந்தையுடன் வந்திருப்பதை கூற..
"சாப்பிட எதுவும் கொடுத்தயா கண்ணா.. பாவம் வேலை முடிச்சு வந்து இருப்பா..", என்று விசாரித்த அன்னப்பூரணி, "வர சொல்லுக்கண்ணா..", என்று அவனை வெளியே அனுப்பினார்.
அடுத்த நிமிடமே குழந்தையுடன் உள்ளே வந்த மிதிலா, படுக்கையில் சோர்வாக அமர்ந்து இருந்த அன்னப்பூரணியை பார்த்து அதிர்ந்து, "எப்படி இருக்கீங்க ஆன்ட்டி, உடம்பு என்ன இப்படி தளர்வாகிடுச்சு, ரொம்பவும் இளைச்சுட்டீங்க", என்று அன்னபூரணியின் கையைப் பற்றிக்கொண்டு, வருத்தத்துடன் விசாரிக்க..
அவளுக்கு பதிலளித்த அன்னப்பூரணி, "நீ இப்படி உட்கார்ந்து பேசு..", என்று அவளை அருகில் அமர்த்திக்கொண்டவர், "குட்டிப்பட்டு எப்படி இருக்கீங்க… பாட்டியை மறந்துட்டீங்களா..??", என்று குழந்தையை அவர் கொஞ்ச.
ஹரி அங்கு அருகில் இருந்த பிளாஸ்கில்(flask) , இருந்து, காய்கறி சூப்பை எடுத்து கப்பில் ஊற்றி, "இதை கொஞ்சம் கொஞ்சமா குடிச்சுட்டே பேசுங்க மாம்", என்று அன்னபூரணிக்கு குடிக்க கொடுத்தான்.
அன்னப்பூரணியும் இருந்த களைப்பில் வாங்கிக்கொண்டார்.
உடனே மகிழ்மதி, அன்னப்பூரணியிடம் கப்பை வாங்கத் தாவி, அதை தட்டிவிட பார்க்க என்று, மீண்டும் மீண்டும், அவரிடம் ஓட ஆரம்பிக்க..
மிதிலாவால் சுத்தமாக குழந்தையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைப்பார்த்த ஹரி, உடனே குழந்தையை மிதிலாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு, "நீங்க பேசுங்க, நான் வெளியே பேபி கூட இருக்கேன், சூடா மேலே கொட்டிக்க போறா..", என்றுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஹரி சென்றதும், அன்னபூரணி, "நம்ம ஊரு ஆளுன்னு, நீதான் இங்க வந்துட்டு இருந்த, கடைசில உனக்கும் வேலை வந்து நீயும் வரலை", என்று வருத்தப்பட்டவர், "குழந்தையை வச்சுட்டு, பாவம் நீ வேற என்ன கஷ்டபடுறேன்னு தெரியாம தான், நான் உன்னை திரும்ப தொந்தரவு பண்ணலை டா, ஹரி தான் எல்லா வேலையும் செய்து, என்னையும் பார்த்துகிறான், ஹாஸ்பிடல் கூட அவன் போகலை, என்னால படுக்கையை விட்டு எழுந்து நாலு அடிக்கூட தனியா வைக்க முடியல.. தலை சுத்துது எழுந்தாலே", என்றுக்கூற.
மிதிலா, "அச்சோ சாரி ஆன்ட்டி, கடைல கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை அதான் வரமுடியாம போயிடுச்சு.. உங்களுக்கு இந்தளவுக்கு இருக்கும்னு நினைக்கலை", என்றாள், குற்ற உணர்வுடன். ஹரியை பார்க்க பயந்து பதுங்கி, அன்னப்பூரணியை விட்டுவிட்டோமே என்று இருந்தது அவளுக்கு.
அன்னபூரணியோ அவள் மனம் அறியாது, "ரொம்ப வேலையா டா கடையில், பாவம் சாயங்காலம் கூட உனக்கு ஓய்வு இல்லை, இங்க வந்துட்ட, ஹரி தான் இன்னைக்கு உன்னை கடையில் பார்த்தேன்னும். சாயங்காலம் நீ வரேன்னு சொன்னனும் சொன்னான்", என்றார், மேலும் அவளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க.
மிதிலாவிற்கு அன்னபூரணியின் பேச்சில், அவரின் உடல் வேதனை விட, மன வேதனை தான் அதிகம் தெரிந்தது.
"இவங்க அப்பா போன இடத்துக்கே நிம்மதியா போலாம்னு பார்த்தா, இந்த ஹரி ஒரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறான், அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தராம, என் உயிர் போயிடுச்சுன்னா, அவங்க அப்பா என்ன மன்னிக்கவே மாட்டார், என்ன பண்ணப்போறேன்னு தெரியல", என்றார் மனவேதனையுடன்.
அதிலும் மிதிலாவிடம் பேசும் போதே அவர் கண்களில் இருந்து வருத்தத்தில் நீர் கூட இறங்கிவிட்டு இருந்தது.
அதில் பதறிய மிதிலா, "ஏன் ஆன்ட்டி, பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஒன்னும் ஆகாது, டாக்டர் எல்லாத்தையும் பார்த்துப்பார், பயப்படாதீங்க, இனி என்ன ஆனாலும் இப்படியெல்லாம் தயவு செஞ்சு பேசாதிங்க ஆன்ட்டி, எனக்கு ஒருமாதிரி பயமா இருக்கு, அவருக்கும் கேட்டா எப்படி இருக்கும்", என்று அவரை சமாதானப்படுத்தினாள்.
அன்னப்பூரணியும் அத்துடன் வேறு பேச்சிற்கு தாவிவிட்டார்.
இடையில் ஹரி, குழந்தையை ஹாலில் விட்டுவிட்டு, அன்னபூரணிக்கு, இரவு உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு, சென்றான்.
செல்லும் முன் ஹரி, மிதிலாவிடம், "மாம் கூட பேசிட்டு வந்து நீ சாப்பிடு.. பேபிக்கும் எல்லாம் ரெடியா இருக்கு", என்றுவிட்டு சென்றான்.
ஹரி, மிதிலாவிடம் பேசியது, அன்னபூரணிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
ஒருவேளை அன்று அவளின் குடும்ப கதையை கேட்டதினால், பரிவாக பேசுகிறானோ என்று நினைத்தவர், மிதிலாவிடம், பேசிக்கொண்டே, இரவு உணவை முடித்தார்.
மிதிலா அவருக்கு கை கழுவ மற்றும் பாத்ரூம் செல்ல உதவி விட்டு, இரவு வேளைக்கான மாத்திரைகளையும் பார்த்து பொறுமையாக கொடுத்துமுடித்து,
அவரை படுக்க வைத்தவள், "நான் இனி முடிஞ்சளவுக்கு ஹெல்ப்புக்கு வந்துடறேன் ஆன்ட்டி.. நீங்க படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க.. இருக்க வேலையை நான் பார்த்துட்டு கிளம்பறேன்", என்றுவிட்டு, இரவு விளக்கை மட்டும் ஒளிரசெய்துவிட்டு, உணவு தட்டுகளுடன் வெளியில் வந்தாள்.
ஹால் பயங்கர அமைதி, சின்ன லைட் மட்டுமே போட்டு, மெல்லிய வெளிச்சதுடன், இருந்தது,
எங்கே குழந்தை என்று தன் கண்களை மிதிலா சுழற்றினாள்.
சோபாவில் சாய்ந்தபடி, குழந்தையடன் உட்கார்ந்து இருந்த ஹரி அவள் கண்ணில் பட..
மெல்ல அவனை நோக்கி தன் அடிகளை அவள் வைக்க..
இவள் எப்பொழுது பார்ப்பாள், என்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஹரி, தன் உதட்டின் மீது கை வைத்து 'உஷ்' என்று சைகை செய்துவிட்டு, குழந்தையை காண்பித்தான்.
குழந்தை அவன் மீது தூங்கிக்கொண்டு இருந்தது.
உடனே மிதிலா கிட்சன் சென்று, சத்தம் எழுப்பாமல் பாத்திரங்களை வைத்துவிட்டு ஹரியிடம் விரைந்து வந்தாள்,
ஹரி மெல்ல, "பாப்பாக்கு இட்லி கொடுத்தேன்.. சாப்பிட்டு தூங்கிட்டா, மாம் ரூமில் படுக்க வச்சுட்டு, நாம சாப்பிடலாம் வெயிட் பண்ணு..", என்றவன்,
அவளின் பதிலுக்கு காத்திராமல், விடுவிடுவென்று அன்னபூரணியின் அறைக்குள் குழந்தையுடன் சென்றுவிட்டான்.
அன்னபூரணியிடம் சொல்லிவிட்டு, குழந்தையை அவர் அருகில் பாதுகாப்பாய் படுக்க வைத்த ஹரி, மெதுவாக கதவை சாத்திவிட்டு வெளியே வந்தான்.
வந்தவன், அப்பொழுதும் அவளை பேச விடாது, ஹாலின் விளக்கை ஆன் செய்துவிட்டு "வா பேபி சாப்பிடலாம், ரொம்ப பசிக்குது", என்றுவிட்டு டைனிங் டேபிள் நோக்கி சென்று விட்டான்.
மிதிலா ஹரியிடம் உணவை மறுக்கவே நினைத்து இருந்தாள்.
இறுதியில் அவனோ சோர்வாக பசி என்று சொல்லிவிட்டு சென்றதில், இப்பொழுது வேண்டாம் என்றால் வீண் விவாதம், என்ன செய்வது என்று தெரியாமல் அவனை பின்பற்றினாள்.
ஹரி மிதிலாவிற்கும் அவனிற்கும் தட்டு வைத்துவிட்டு, "வா உட்கார்", என்று நாற்காலியை நகர்த்தி போட்டு அவனும் அவளின் அருகில் உட்கார்ந்து,
இருவருக்கும் உணவை ஹாட் பாக்ஸில் இருந்து எடுத்து வைத்தான்.
உண்ண ஆரம்பித்த பிறகு தான் மிதிலாவிற்கு அவளின் பசியே தெரிந்தது.
அவள் தட்டில் இருந்த சப்பாத்திகள் காலி ஆகும் வேகத்தை பார்த்த ஹரி, ஹாட் பாக்ஸை திறந்து அவள் தட்டில் மேலும் இரண்டு சாப்பாத்தியை வைத்து, வெஜிடபிள் குருமாவை எடுத்து ஊற்றினான்.
வீடு முழுவதும், பரவியிருந்த, ரம்யமான லாவண்டர் பூ வாசனை, இருவரின் மனதுக்குமே இனிமையாக இருந்தது.
ஹரி சிறிது பசி அடங்கியதும், மிதிலாவிடம், "மாம் என்ன சொன்னாங்க உன்கிட்ட", என்றுக்கேட்டான்.
அன்னபூரணி சொன்னது அனைத்தையும் சொன்ன மிதிலா, ஹரியிடம், "ஆண்ட்டிக்கு ஏன் திடீர்னு உடம்பு இப்படி ஆகிடுச்சு டாக்டர்.. சீக்கிரம் சரிப்பண்ண முடியாதா..??", என்று கேள்வி எழுப்பினாள் வருத்தமாக.
ஹரி, "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, எல்லா லேடிஸ்கும் மெனோபாஸ் ஸ்டேஜ் கஷ்டமாதான் இருக்கும், மாம்க்கு கொஞ்சம் கூட வயசாகிட்டதால் ரொம்ப பிரச்சனை பண்ணுது", என்றவன்..
மேலும் தொடர்ந்து, "சிலருக்கு 5 இயர்ஸ் கூட, உடம்பு முடியாமல் இருக்கும், ஒவ்வொருத்தரோட உடல்நிலை, ஜீன், எவ்வளவு ஃபிட்டா(fitness), ஆக்டிவா இருக்காங்க, எத்தனை குழந்தைங்க டெலிவரி பண்ணாங்க, மன அளவில் சந்தோஷமா இருக்காங்களா, அது இதுன்னு, நிறைய விஷயம் இருக்கு, இதெல்லாம் பேஸ்(base) பண்ணிதான் எண்டிங் இருக்கும் பேபி", என்று மருத்துவனாக அவளுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்தவன், "ரொம்ப முடியலைன்னா யூட்ரஸ் ரிமூவ் பண்ணிடலாம், அதுகூட இப்பல்லாம் லேப்ரோஸ்க்கோப்பி, இல்லன்னா சின்ன சர்ஜரியில் முடிச்சுடறோம்..", என்றுவிட்டு தட்டில் கவனமாகிவிட்டான்.
சில நிமிட மௌனத்திற்கு பிறகு மிதிலா, "டாக்டர் நான் ஒன்னு கேட்பேன், நீங்க தப்பா நினைக்ககூடாது ", என்றாள் தயக்கமாக.
ஹரி ஆச்சரியமாக, "வித் மை பிளஷர் பேபி, நீ கேளு நான் சொல்றேன், உண்மையை சொல்லணும்னா, உனக்கு மட்டும்தான், கேட்கிற உரிமை இப்போதைக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன்", என்றான் குறும்பாக,
அவனுடைய பதிலில் மிதிலாவிற்கு ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.
அவனுடைய இவ்வாறான ஒவ்வொரு வார்த்தையும்,
மிதிலாவினுள் கலவரத்தை அல்லவா ஏற்படுத்துகிறது.
'இந்த டாக்டருக்கு கூச்சமாவே இருக்காதா..??', என்று நினைத்தவளுக்கு, உணவு உண்ணும் என்னமே இல்லாமல் போனது, வயிறு முழுக்க இன்ப அலைகள் அல்லவா நிறைந்து வழிந்தது.
ஹரி தனக்காக காத்திருப்பதை பார்த்தவள், வேறு வழி இல்லாது சங்கடத்துடன்,
"நீங்க ஏன் டாக்டர், இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை", என்றாள் மெல்ல தட்டு தடுமாறி..
ஹரி கண்களில் மின்னலுடன் மிதிலாவின் கேள்வியை எதிர் கொண்டான்.
அவனுடைய பாவனையை பார்த்ததும் மிதிலா உடனே, "இல்லை ஆண்ட்டி தான் சொன்னாங்க, உண்மையை சொல்லனும்னா, உங்க மேரேஜ் விஷயம் தான் அவங்களுக்கு இன்னும் மன அழுத்தத்தைக் கொடுக்குது, அதனால தான் கேட்டேன் டாக்டர், சாரி டாக்டர், உங்களை ஹர்ட் பண்ணனும்னு கேட்கலை, அண்ட் உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம் டாக்டர்,", என்றாள்,
ஹரி சம்பந்தம் இல்லாமல், மிதிலாவிடம், "நீ ஏன் என்னை, இத்தனை வாட்டி, டாக்டர் டாக்டர்னு கூப்பிடுற, நீ என்ன என்னோட பேஷன்டா, இனி பேர் சொல்லி கூப்பிடு, எனக்கு நீ டாக்டர் டாக்டர்னு, என்னை கூப்பிடுறது, எனக்கு கம்ஃப்பர்டபிலா இல்ல பேபி", என்றிட.
மிதிலா, "எனக்கு டாக்டர்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதான் உங்களை அப்படி கூப்பிட்டேன், ஏன் உங்களுக்கு பிடிக்கலையா", என்றாள் பட்டென்று.
அவளுடைய உடனடி பதிலில் வியப்படைந்த ஹரி, "ஓ மிதுமாக்கு டாக்டர்ன்னு கூப்பிட்டா மட்டும் பிடிக்குமா, இல்லை டாக்டரையே பிடிக்குமா..", என்று குறும்பு நிறைந்த ரகசிய குரலில் அவன் கேட்க.
உடனே தன் நாக்கை கடித்து, பதறிய மிதிலா, "அச்சோ அப்படி இல்லை டாக்டர், அது வந்து, டாக்டர் ஆகணும்னு எனக்கு சின்ன வயசுல ஆசை இருந்துச்சு, அதான், வேற ஒன்னும் இல்லை", என்றாள் குரல் படப்படவென்று தந்தியடிக்க.
ஒருப்பக்கம் உள்ளுக்குள் அவளுக்கு, பழைய ஞாபகங்களும், அவளுடைய டாக்டர் கனவும், அது கருகிய விதமும் வேறு மேல் எழும்பி, அவளை வெதும்ப செய்தது. அப்படியே அதை அடக்கிக் கொண்டாள்.
கலவரமான அவள் முகத்தை பார்த்த ஹரி, "ஏன் எதுக்கெடுத்தாலும், பயப்படுற, இப்படியே போச்சுன்னா உனக்கு ஹை பிபி வந்துடும், ரிலாக்ஸா இரு, உன்னை மீறி என்ன நடந்துட போகுது, சாப்பிட்டு முடிச்சுட்டனா வா. ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு பேசலாம்", என்றான், அவளை பற்றிய செய்திகளை அறியும் சமயம் தனக்கு இதயமே வெடித்துச்சிதறும் அளவிற்கு பிபி ஏறும் என்பதை அறியாது.
இருவரும் கைகளை கழுவிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தனர்.
மணி இரவு 10 ஆகிவிட்டது.
மிதிலா, "சரி டாக்டர், நாங்க கிளம்புறோம், ரொம்ப மணி ஆகிடுச்சு. பாப்பா வேற தூங்கிட்டா, எப்படி கார் சீட்டில் உட்கார வச்சு ட்ரைவ் பண்ண போறேன்னு தெரியல, நடுவில் வேற எழுந்து அழுவாளா தெரியலை..??, நாளைக்கு நான் வேலைக்கு போகணும், கிளம்புறேன்", என்றாள்.
"ஓ…", என்ற ஹரி, "ஒரு நிமிஷம் பேபி", என்றுவிட்டு,
அன்னபூரணியின் அறையை பொறுமையாக திறந்து பார்த்தான்.
குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தது.
அன்னபூரணியும், லேசாக குழந்தையை அணைத்தவாறே, நன்றாக தூங்கிவிட்டு இருந்தார்.
அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு அறையை மெதுவாக மூடிவிட்டு, மிதிலாவின் அருகே வந்த ஹரி, அவள் கையை பற்றி "நீ கேட்ட கேள்விக்கு, பதில் சொல்றேன் வா", என்று அழைக்க.
வேலையை பற்றிய சிந்தனையில் சுழன்ற மிதிலா, 'என்ன கேள்வி' என்பதுபோல் ஹரியைப் பார்த்தாள்.
ஹரி, "நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு, கேட்ட இல்ல பேபி, சொல்றேன் வா…", என்றான்.
மிதிலாவின் மனதிலும் காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனாலும் நேரம் ஆகிவிட்டதால், "இல்ல குழந்தை", என்று அவள் இழுக்க..
ஹரி, "பாப்பா நல்லா தூங்குறா, நீ வா என்கூட, ஒரு பத்து நிமிஷம்.." என்றவன், மிதிலாவின் கையை பற்றி அழைத்துக்கொண்டு போய், தெருக்கதவை திறந்து, தோட்டத்தில் போட்டு இருந்த, அவுட்டோர் பேட்டியோ பென்ச்சில் உட்கார வைத்துவிட்டான்.
ஹரியின் செய்கையில் மிதிலா அவன் முகத்தையே பார்த்தப்படி அமர்ந்து இருக்க..
ஒருசில வினாடிகள், தன் கண்களை தோட்டம் முழுக்க அலையவிட்ட ஹரி, தன் மனதை முடிந்தளவு நிலைப் படுத்திக்கொண்டு, மிதிலா புறம் திரும்பி, "ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு என்ன கேட்காதவங்களே இல்லை.. பட் இந்த கேள்விக்கு, நான் இதுவரை யாரிடமும் பதில் சொன்னதில்லை, ஏன் மாம், டாட், கேட்டப்ப கூட சொல்லலை, சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு தான் இதுவரைக்கும் நினைச்சேன்..",என்று நிறுத்த..
அவனுடைய ஒருவிதமா குரலில், மிதிலா நடுவில் எதுவுமே பேசவில்லை.
"என்னோட ஃபர்ஸ்ட் லவ்..", என்று ஆரம்பித்த ஹரி, தன் கரகர குரலை ஒருமுறை சரிசெய்தப்படி, "நவ் பாஸ்ட் லவ் ஆகிடுச்சு..", என்றான்.
அவன் குரல் மாற்றம் மிதிலாவின் மனதை அழுத்த உடனே, "அச்சோ கஷ்டமா இருந்தா கண்டிப்பா சொல்ல வேண்டாம் டாக்டர் ", என்றாள், அவன் வேதனையை தாங்க முடியாமல்.
ஹரி, "இல்லை யார்கிட்டயாவது சொன்னா எனக்கும் கொஞ்சம் ப்ரீயா தான் இருக்கும் நினைக்கிறேன், அதை விட இந்த பதிலை நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், தெரிஞ்சுக்க வேண்டிய ஆள் தான் நீ", என்றுவிட்டு, அவள் கையை இறுகப் பற்றி எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டான்.
ஹரியின் மடி மீது கையை வைத்திருக்க, மிதிலாவிற்கு கூச்சமாக இருந்தாலும், அவனிடம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. கன்னத்து தசைகளை, பற்களால் உள்புறம் இருந்து கடித்து, அடக்கிக் கொண்டாள்.
அனைத்தையும் விட மேடமிற்கு ஹரிக்கு நம் மேல் தான் லவ் இருந்து இருக்குமோ, என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டு இருத்தது.
திருச்சியில் பார்த்த பிறகு, தன்னை மறக்க முடியவில்லையோ, என்றெல்லாம் விடுவிடுவென்று கற்பனை கோட்டைக்கட்டி, அவன் பதிலிற்காக காத்து இருந்தாள்.
மறுவிநாடியே ஹரி அவளின் கற்பனை கோட்டைக்கு முற்று புள்ளி வைத்து விட்டான்.
அவன் போஸ்டனிற்கு MBBS படிக்க சென்றதிலிருந்து, ஆரம்பித்தவன்,
ஏஞ்சலினா உடனான சந்திப்பு, காதல், கருத்து வேறுபாடு, பிரேக்கப் என்று ஒரே மூச்சாக அனைத்தையுமே, மறைக்காது சொல்லி முடித்துவிட்டான்.
இப்பொழுது மிதலாவிடம் மறைக்க அவனிடம் எதுவும் இல்லை.
ஆரம்பத்தில் ஹரியின் காதல் கதையை கேட்ட ஆரம்பித்த மிதிலாவாலோ, ஹரி வேறொரு பெண்ணை விரும்பியதை சுத்தமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பிறகு, அவன் இருவருக்கும் இடையில் வந்த சண்டையை கூறக்கூற, நல்லவேளை பிரிந்து விட்டார்கள் என்று நினைத்து தன்னையே சாமாதானப்படுத்திக் கொண்டாள்.
இறுதியல் ஹரி, வருத்தமாக தன் லவ் பிரேக்கப் ஆன தினம் நடந்ததைக்கூற.. மிதிலா "ஹப்பாடா" என்று தன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை, வெளியில் காண்பிக்காது கட்டுப்படுத்திக்கொண்டு, அமர்ந்து இருந்தாள்.
அடுத்து ஹரி, அதைத்தொடர்ந்து தன் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடு, ஒரு முறைதான் காதல் வரும் என்ற எண்ணம், பொஸசிவ் குணம், யாரும் தனக்கு ஒத்து வரமாட்டார்கள், என்று நினைத்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தவன், தொடர்ந்து, "எனக்கே என்னை நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு பேபி, ஆல்ரெடி மேரேஜ் ஆகி, ஒரு குழந்தையையும் பெற்ற, பெண் மேல் எப்படி இப்படி, இவ்வளோ அட்ராக்ஷன் எனக்கு வந்துச்சு தெரியலை.. என்னை நானே இவ்வளவு நாள் தப்பா புரிஞ்சு வச்சு இருந்தேனா இல்லை எல்லாத்தையும் நீ மாத்திட்டயா தெரியலை.." என்று அவன் கூற.
மிதிலாவின் முகம் மொத்தமாக மாறத் தொடங்கியது,
அதை அறியாமல் ஹரி மேலும் தொடர்ந்து பேசினான்.
"உன்னோட குழந்தை தான் மகிழ்மதின்னு, அன்னைக்கு தெரிஞ்சதும், எனக்கு ரொம்ப ஷாக், எப்படி கல்யாணம் ஆன, வேறொருத்தரோட மனைவியை ரசித்தேன்னு எனக்கே ரொம்ப அசிங்கமா, கில்டியா ஆகிடுச்சு..", என்றவன் குரல் அவனை மீறி அன்றைய நிகழ்வில் கரக்கரக்க..
மிதிலா, தன்னால் பாவம் ஹரிக்கும் நிறைய வேதனை, தன்னால் யாருக்கு தான் நிம்மதியோ என்று நினைத்து மனம் வெதும்பிப்போனாள். அவள் நினைவுகள் எங்கோ பயணித்து விட்டது வினாடியில்.
ஹரி தன் கரக்கரத்த குரலை நொடியில் சரிசெய்தப்படி, "உனக்கு வேற ஏதாச்சும் தெரியனுமா..??", என்றான்.
மிதிலா எதுவும் பதில் பேசவில்லை, பாவம் அவள் அவளின் கடந்தகாலத்திற்குள் மூழ்கி விட்டு இருந்தாளே.
"ஓய்.. என்ன கதை கேட்டு தூங்கிட்டயா", என்ற ஹரி, மிதிலாவின் தோளின் மீது, தன் கையை சுற்றி போட்டு, அவளை தன்னுடன் சேர்த்து அணைக்க..
அதில் தன் நினைவுகளில் இருந்து பட்டென்று மீண்ட மிதிலா, லேசாக நெலிந்தப்படி, கேள்வியாக ஹரியின் முகத்தை பார்க்க..
ஹரி, அவளின் செய்கையில், மெல்ல சிரித்தப்படி, குனிந்து அவள் நெற்றியில் குட்டி முத்தம் ஒன்றை அழுத்தமாக தன்னை மீறி வைத்துவிட்டு, "சொல்லு உன்னோட பாஸ்ட் பத்தி", என்று கேட்க.
ஹரியின் இந்த நெருக்கமான அணைப்பும், இதழ் முத்தமும், மிதிலாவை அப்படியே நிலைக்குலைய செய்தது. அதுவும் முதல் தடவை போலவே.
இப்படி தானே அன்றும் திருச்சியில் செய்து அவளை வீழ்த்தி இருந்தான்.
திடீரென்ற உணர்ந்த ஆணவனின் உதட்டின் ஸ்பரிசத்தில், நுனி முதல் அடி வரை கூசி சிலிர்த்தாள்.
பெண்ணவள் உலகையே மறந்துவிட்டாள்.
அமெரிக்காவின், இரவு நேர குளிரிலும் கூட, அவளுக்கு, வியர்வை முத்துக்கள் உடலெங்கும் குப்பென்று பூத்து விட்டது.
அவனின் கேள்வியே அவளின் காதிற்குள், சென்று இருக்கவில்லை.
"நீயும் என்னை மாதிரியே சிங்கிள் child தானே பேபி..", என்றவன், "ஆனா நாம குறைஞ்சது, மூனு இல்ல நாலு பேபி ஆச்சு பிளான் பண்ணிக்கனும், ஓகேவா, ", என்றுக்கூறி கண்ணடிக்க.
மிதிலா, இதற்கு பதில் என்னக்கூறுவது என்று தெரியாது, அவன் கண்களையே தன் விழிகளை விரித்தப்படி பார்க்க..
ஹரி, "திருச்சி தெரியுமா உனக்கு, அதுதான் எங்க சொந்த ஊர், நான் இந்தியா வந்தப்ப, அங்க தான் ஒரு ஸ்கூல் கேர்ள்ல பார்த்தேன், அவ்வளவு அழகா புசுபுசுன்னு, க்யூட்டா இருந்தா, அப்படியே ஜிகிலி கேக் மாதிரி, யூ நோ நம்ம மகிழ்மதி கூட அதே மாதிரி தான் கியூட்டா பப்ளியா இருக்கா, எனக்கு அவளை மாதிரியே நிறைய குழந்தைங்க வேணும்", என்றுக்கூற..
மிதிலா வானில் சிறகில்லாமல் பறக்க தொடங்கினாள்,
ஹரி சுத்தமாக தன்னை மறந்துவிட்டான், நாம் தான் பைத்தியம் போல், இத்தனை ஆண்டுகளாக ஹரியை நினைத்துக் கொண்டும், தேடிக்கொண்டும் இருந்திருக்கிறோம், என்று ஹரியை அமெரிக்காவில் கண்ட நாள் முதல் நினைத்து, பல நாள் மனதில் வேதனைப்பட்டு இருக்கின்றாள்.
கொஞ்ச நேரம் முன்பு கூட நினைத்து வேதனையுற்றாளே..!!
ஆனால் ஹரி அவளை ஞாபகம் வைத்து, அதுவும் குழந்தைகள் கூட தன்னை போல் வேண்டும் என்று கேட்டதில், அவள் மனம் நிறைந்து விட்டது.
காதலிக்கின்றேன் என்ற வார்த்தையை இருவருமே சொல்லிக்கொள்ள வில்லை, தங்களின் ஒவ்வொரு செயலின் மூலமும் அதை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.
எதார்த்தமும் அதுதானே..!!
ஹரி அதைத் தொடர்ந்து, "நம்ம இரண்டு பேர் மாதிரி, மகி பேபி தனியா வளர வேண்டாம்.. பாவம் அவ..", என்றவன், "நீ என்ன நினைக்கிற பேபி.. உன்னோட விருப்பம் என்ன?, நான் மட்டுமே பேசுறேன்.. ஏன் எதுவும் பேச மாட்ற..", என்றுக்கேட்க.
மிதிலாவிற்கு பட்டென்று தொண்டையை அடைத்தது. அவள் ஒன்றும் அவனைப்போல் தனியாக வளர்ந்தவள் இல்லையே..
தாய்க்கு நிகரான அன்பை அவள் மீது மித்ரா பொழிந்து இருந்தாளே..!!
அனைத்தையும் தன் அவசர புத்தி தான் சாம்பலாக்கி விட்டது என்று நினைத்தவள் கலங்கியே போனாள்.
ஹரி, "உன்னோட பாஸ்ட் பத்தி, நீ எதுவும் என்கிட்ட சொல்லனும்னா சொல்லிடு பேபி, இன்னையோட எல்லாமே பேசி முடிச்சுடலாம்.. இரண்டு பேருக்கும் இடையில் இனி எந்த ரகசியமும் வேண்டாம்னு நினைக்கிறேன்", என்று, அவள் மனம் படும் பாட்டை அறியாது அவன் கேட்க.
மிதிலா அரண்டுப்போனாள்.
யாரிடமும் சொல்லக்கூடியது அல்லவே அவள் இறந்தக்காலம்.
ஹரியை பொருத்தவரை இரண்டாவது திருமணம் எல்லாம் அவனுக்கு மிகவும் சாதாரணமான விஷயம் தான்.
அவன் நண்பர்கள், தோழிகள் பலர் மூன்று திருமணங்களுக்கு மேல்கூட செய்து உள்ளனர்.
மிதிலாவை எந்த விதத்திலும் அவன் தன் தகுதிக்கு குறைவாகவோ, இரண்டாவதாக தன்னை நேசிக்கின்றாள் என்று தப்பாகவோ எல்லாம் எண்ணவே இல்லை.
தன்னுடன், அவளை இளகுவாக பழக வைக்கவே, தன்னை பற்றி அனைத்தையும் அவளிடம் கூறிவிட்டு, அவளுடையதையும் கேட்டான்.
புரிதல்கள் அப்பொழுது தானே வரும்.
சடுதியில் மாறிவிட்ட மிதிலாவின் முக மாற்றத்தை கண்ட ஹரி, தன் புருவத்தை சுருக்கினான், "ஏன் பேபி, என்ன ஆச்சு, உன் முகம் ஏன் பயந்த மாதிரி இருக்கு, என்ன ஆச்சு", என்று அவள் கன்னங்களை இரண்டு புறமும் பற்றி, அவள் கண்களை பார்த்து கேட்க.
அதில் மிதிலாவின் உடல் தூக்கிவாரிப் போட்டது.
"ஒன்னும் இல்லை.. நான் எதுவும் மறைக்கலை… நான் எதுக்கு பயப்படனும்..", என்று அவள், அவன் கண்களை காண முடியாது உளறிக்கொட்ட..
"ஹேய் மிதுமா என்ன ஆச்சு, நான் எதுவும் உன்னை தப்பா நினைக்கலை டா.. ஏன் பயப்படுற.. சில்", என்றவன், மிதிலாவின் வெளிறி கிடந்த முகத்தை மெல்ல தன் விரல்களை கொண்டு நீவி விட..
மிதிலாவின் கண்களில் இருந்து நீர் சரசரவென இறங்க ஆரம்பித்து விட்டது.
தன் கரத்தை நனைத்த அவள் விழி நீரை பார்த்தவன், "ஓ காட்.. பேபி இது என்ன அழற.. சாரி.. சாரி பேபி.. நீ இந்தளவுக்கு உன் ஃபர்ஸ்ட் மேரேஜை மனசில் வச்சு இருப்பன்னு நான் நினைக்கலை டா.. சோ சாரி.. நான் தான் ஸ்டுபிட் மாதிரி அவசரப்பட்டு தெரியாம கேட்டுட்டேன்... சாரி பேபி.. ப்ளீஸ்.. அழாத", என்று ஹரி அவளை சமாதானம் செய்ய..
'முதல் திருமணம்.. முதல் திருமணம்.. முதல் திருமணம்' இத்தனை நாட்களும் அவளை தொடர்ந்து கொன்ற வார்த்தை. அவள் மறக்க நினைப்பது. ஆனால் விடாது தொடர்வது.
இத்தனை நாட்களும் பல்லை கடித்து பொருத்துப்போனவளால், இன்று அது முடியவில்லை.
வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்..
ஹரி பதறி மிதிலாவை தன் நெஞ்சுடன் இறுக்கமாக அணைத்து, "அச்சோ, ப்ளீஸ் பேபி, சாரி, நீ எதுவும் சொல்ல வேண்டாம், ஈஸி ஈஸி,", என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
அவளுடைய திடீர் அழுகை அவனையும் நிலை குலைய செய்தது.
ஹரியின் அணைப்பில், மேலும் மிதிலா உடைந்து அழுதாள்.
அவளால் கொஞ்சமும் கட்டுபடுத்தவே முடியவில்லை, நேரம் ஆக ஆக அழுகை அதிகமானதே தவிர குறையவில்லை.
துக்கம் ஒருப்பக்கம் என்றால், ஹரியிடம் உண்மையை கூறமுடியாத நிலை ஒருப்புறம்.
அனைத்து பக்கமிருந்தும் குற்ற உணர்வுகள் மேலெழுந்து அவளை கொல்லாமல் கொன்றது.
ஆதிகேசவனின் வெறியும், அவனுடைய கடைசி வார்த்தைகளும், அவளை இன்னும் இன்னும் பயமுறுத்தியது.
நேரம் ஆக ஆக, பல நினைவுகளின், தாக்கம் மிதிலா மனதில்.
'அம்மா… அப்பா.. மித்துக்கா.. ஏன் என்னை விட்டு போனீங்க..' என்று மனதினுள் அவர்களிடம் கேட்டவள்.. ஹரியின் கழுத்தில் தன் முகத்தை ஆழ புதைத்து மேலும் வெடித்தாள்.
அவள் எவ்வளவு மன வேதனையில் இருக்கின்றாள் என்பது ஹரிக்கு அவளின் கதறலில் அன்று தான் புரிந்தது.
"சரி பேபி.. சரி பேபி.. போதும் டா.. கண்ட்ரோல் டா…", என்ற ஹரி, மிதிலாவின் முகத்தை, இடையிடையே நிமிர்த்தி, அவள் கண்களை தன் கைகளால் துடைத்து, முகத்தை நீவிவிட்டு, தலைமுடியை ஒதுக்கி, நெற்றியில் முத்தமிட்டு, அணைத்து, அவள் முதுகை தடவிவிட்டு, என்று சமாதானப்படுத்தினான்.
ஆனால் அவனின் எந்த வார்த்தையும், மிதிலாவின் அழுகையையும் வேதனையையும் குறைக்கவில்லை.
குறைக்கும் அளவில்லா இருக்கிறது, அவள் சந்தித்த, இழந்த நிகழ்வுகள்.
அவள் காதில், அவளின் ரத்தங்களின் வலித் தாங்க முடியாத கதறல் ஒலிகள் கேட்க.. மேலும் ஹரியை இறுக அணைத்துக்கொண்டாள்.
தன் உடலிலும், தன் மனதிலும், தீராத பல வலிகளை தாங்கி, தன் கனவுகள் அனைத்தையும் காவு கொடுத்தவள், இறுதியில் தன் கண் முன்னே தன் ரத்தங்களை மிச்சமின்றி வாரி கொடுத்துவிட்டு, பிறந்தக்குழந்தை மகிழ்மதியை, தூக்கிக்கொண்டு, அவள் உயிர் காக்க, தெருதெருவாய் ஓடினாளே..
ஏதோ அவள் பெற்றோர்கள் செய்த தர்மம், அவளின் உயிரையும், மகிழ்மதியின் உயிரையும் காக்க உதவிட, தப்பியவள்,
காலத்தின் சதியால், தன் பத்தொன்பது வயதில், கைம்பெண்ணாய், தனி மரமாய் நின்று விட்டு இருந்தாளே.
இதோ இன்று அவளுக்கு என்று ஒரு துணை, அதுவும் அவளின் மனம் கவர்ந்த கண்ணாளன், அவளின் தாயுமானவன், எல்லாமுமாகவும் வந்து அவளை அரவணைக்க, அவன் தோளில் இளைப்பாறி விட்டாள்.
மிதிலா தன் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வடியும் வரை அழுது தீர்த்தாள், குரல் முழுவதும் மாறி, தொண்டை கட்டி, சளி பிடித்தது போல் மாறி விட்டது.
இப்பொழுது அழுகை மெல்லிய விசும்பலாக மாறியிருந்தது.
கண்களில் இருந்து கொட்டிய அருவியும், இப்பொழுது மெல்லிய தூறலாகிவிட்டு இருந்தது.
ஹரியின் விரல்கள் மெல்லிய பூக்களை ஸ்பரிசிப்பது போல், அவளை மெல்ல ஸ்பரிசித்து, இதமாக வருடிக்கொண்டே இருந்தது.
அதில் மெல்ல மெல்ல அவளும் அடங்கிக்கொண்டு இருந்தாள்.
சில நேரங்களில், மனதில் அனைத்தையும் போட்டு அடக்கி வைக்காது, வாய்விட்டு கதறிவிடுவது கூட நல்லது தான். அனைத்தையும் கதறி வெளியேற்றியப்பின் மனம் மொத்தமும் நிர்மலமாகிவிடும். புதிய பாதையும் கண்ணுக்கு புலப்படும்.
அவள் சரி ஆகிவிட்டாள் என்பதை அவளின் உடல் மொழி மூலம் அறிந்த ஹரி, "இனி உன்னோட பாஸ்ட் லைஃப் பத்தி கண்டிப்பா நான் கேட்கவே மாட்டேன் பேபி, எனக்கு அது தெரியவே வேண்டாம், ஐயம் ப்ராமிஸிங் யு டா, எனக்கு நீ மட்டும் போதும்", என்றவன், அவளின் முகம் முழுக்க கலைந்துக்கிடந்த கூந்தல் கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டு, மீண்டும் கலங்கத்தொடங்கிய அவளது கண்களை அழுந்த துடைத்துவிட்டு,
"பிளீஸ் பேபி, போதும், இனி என் முன்னாடி அழாத, சத்தியமா என்னால் பார்க்க முடியலை, இவ்ளோ ஃபீலிங்க்ஸ் உனக்குள்ளே இருக்குன்றதயே என்னால் கொஞ்சமும் தாங்க முடியலை", என்றான், உண்மையிலேயே அவளின் வலிகளை பார்க்க முடியாது.
ஹரியின் குரலில் வெளிப்பட்ட வருத்தத்தை உணர்ந்த மிதிலா, தன் மூக்கை உறிஞ்சி அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, அவன் அணைப்பில் இருந்து விலகி அமர..
இனி விடுவானா, அவளின் கண்ணாளன்.
அவள் புறம் நகர்ந்து ஒட்டி அமர்ந்தவன், அவள் கரத்தைத்தூக்கி மீண்டும் தன் மீது வைத்துக்கொண்டு,
"உன்னை பார்த்த நாளிலிருந்தே, நான் என்னோட இயல்பையே மொத்தமா தொலைச்சிட்டேன் பேபி, நானா இதுன்னு எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு, வாழ்க்கையில் அதிகமான சந்தோஷம், அதிகமான கஷ்டம், ரெண்டையுமே உன்கிட்ட தான் நான் feel பண்ணேன், you are very very precious for me டா, இனி என்கூடவே இரு, உன்னை கண்டிப்பா, நான் பத்திரமா பார்த்துக்கறேன்", என்றான் மிதிலாவின் உயிரை உருக்கும் குரலில்.
அதில் பெண்ணவள் மொத்தமாக இரட்ஷிக்கப்பட்டாள்.
மீண்டும் ஹரி, "இன்னொரு விஷயம், அதையும் இன்னையோட பேசி முடிச்சுடறேன்..", என்று மேலும் தொடர்ந்தவன், "மகி பேபி தான், நம்ம இரண்டு பேருக்குமே கண்டிப்பா ஃபர்ஸ்ட் பேபி, அதில் எந்த மாற்றமும் இல்லை, பேச்சுக்காக சொல்லலை உண்மையா தான் சொல்றேன், நாளைக்கு நீயே மாறினாலும் நான் மாற மாட்டேன், எனக்கு நீ எப்படியோ அப்படி தான் அவளும், ஐ லைக் ஹெர் வெரி மச், கண்டிப்பா நல்ல அப்பாவா அவளுக்கு நான் கடைசி வரை இருப்பேன், பிராமிஸ்", என்றான். அவளின் கைப்பற்றி.
வேறு என்ன வேண்டும் பெண்ணவளுக்கு.
மறுகணமே மிதிலாவின், இறுக்கமான அணைப்பில், சிக்கி இருந்தான் ஹரி.
அவளின் மன சஞ்சலங்கள் அனைத்தையும், எதையுமே கேட்காமலேயே தீர்த்து வைத்துவிட்டு இருந்தானே ஹரி.
முதல் முறை மிதிலா, தன்னுடைய கூச்சம் அனைத்தையும் விட்டு வெளிவந்து, ஹரியை நெருங்கி இருக்கின்றாள்.
அதில் இன்பமாய் அதிர்ந்த ஹரி, "ஓய் பேபி..", என்று மிதிலாவை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.
மிதிலாவிற்கும், அவனின் அணைப்பு, உனக்கு நான் இருக்கின்றேன் என்பது போல் ஆறுதலாக இருக்க, அவளும் அவனுக்குள்ளே ஒடுங்கினாள்.
வினாடிக்கு வினாடி, இருவரின் அணைப்பும் மேலும் இறுகியதே தவிர சற்றும் குறையவில்லை.
இருவரின் அதீத நெருக்கம், அவளுக்கும் சரி, அவனுக்கும் சரி, தன் துணையின், வேதனையை குறைக்கவும், பகிரவுமே மட்டுமே நெருங்கி இருந்தது.
அதில் துளிக்கூட காமமோ, இச்சையோ இல்லை.
தாயின் இறுகிய அணைப்பில், சிறு சிசு காணும் சுகம் போன்றே மிதிலாவிற்கு ஆணவனின் வலிய கரம் கொடுக்கும் அழுத்தம் இனித்தது.
ஹரிக்கு தன் இணை, தன் வலிகளை, இவ்வணைப்பின் மூலம் தன்னிடம் பகிர்கின்றாள் போல் தான் இருந்தது.
தன்னை மீறி, சற்று இறங்கி, அவன் மடியில் தன் தலையை சாய்த்த மிதிலா, அப்படியே தன் கண்களை மூடிக்கொண்டாள்.
அவளை அப்படியே தன் இடையுடன் சேர்த்து அணைத்துக்கொண்ட ஹரி, "பிளீஸ் பேபி முடிஞ்ச அளவு என்கிட்ட சீக்கிரம் வந்துட பாரு, போதும் நான் தனியா இருந்தது, நீயும் தான்", என்றவன்..
ஏதேதோ தங்கள் இருவரை பற்றியும் பேச ஆரம்பித்தான்.
மிதிலா அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
"உன்னை இப்ப தான் பார்த்தேனு சொன்னா, என்னால் நம்பவே முடியல, ரொம்ப வருஷம் உன்கூட வாழ்ந்த ஒரு ஃபீல், மிராக்கிள் இல்ல" என்றவன்..
மீண்டும் திருமணம் விஷயத்திற்கே வந்து நின்றான், "ப்ளீஸ் பேபி, நாம இரண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாம், அதுக்கு பிறகுக்கூட, உனக்கு எப்போ ஓ.கேன்னு தோனுதோ, அப்போ நெஸ்ட் ஸ்டேஜூக்கு நம்ம வாழ்க்கையை கொண்டு போகலாம், எனக்கு நீயும், மகியும் கூட இருந்தாலே போதும், வேற எதுவும் வேண்டாம், நான் என்ன மீன் பண்றேன்னு உனக்கு புரியும் நம்பறேன், என்ன சொல்ற, மேரேஜ் செய்துக்கலாமா..??", என்று அவன் நேரடியாக கிடுக்கு பிடி போட.
மிதிலா, "அது வந்து டாக்டர்.. நான்.. எனக்கு.. கல்யாணம்.. இப்போ வேண்டாம்", என்று அவள் வார்த்தைகள் கோர்க்க முடியாது தடுமாற.
"ஷ் பேபி.." என்று அவளை தடுத்த ஹரி, "எனக்கு தெரியும் பேபி, உனக்கு என்னை பிடிக்கும்னு, எனக்கான உன்னோட தேடல், நான் நிறைய முறை உன்னோட கண்ணில் பார்த்துட்டேன், சோ பிளீஸ், உன்னை நீயே ஏமாத்திக்காதே பேபி, என்னையும் ஏமாத்த பார்க்காதே, இந்த ஹரிக்கு நீ வேண்டும், நீ மட்டும் தான் வேண்டும், இந்த வாழ்க்கை முழுக்க, இதில் எந்த மாற்றமும் இல்லை", என்று அத்துடன் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
அதன் பிறகு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
மதிலாவின் மனம், வேண்டும் என்றும், வேண்டாம் என்றும், திரிசங்கு நிலையில் நின்று தடுமாறியது.
ஹரிக்கு மனதில் இருந்ததை அவளிடம் சொல்லிவிட்டதே போதும், என்று நிம்மதி ஆகிவிட்டது.
நிமிடங்கள் பலக்கடக்க..
அந்தகார குளிர் காற்றில், மிதிலாவின் தேகம் ஜில்லிடத்தொடங்கி இருந்தது.
அதை உணர்ந்த ஹரி, மெல்ல அவளை அசைத்து, "பேபி Temperature ரொம்ப drop ஆகுது டா.. வா உள்ளே போகலாம்.. இல்லை உடம்புக்கு முடியாமல் போகிடும்..", என்றவன், மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தி, தன் அணைப்பிலேயே அவளை நடத்தி, வீட்டிற்குள் அழைத்து வந்தான்.
ஹரியிடம் இருந்து விலகவோ, திருப்பி பதில் பேசவோ, மிதிலாவின் நளிந்த உடலில் தெம்பில்லை.
எதையுமே வெளியே சொல்ல முடியாது, மனதிலும், மிகுந்த வலியே மிஞ்சி இருந்தது.
கீழே இருந்த கெஸ்ட் ரூமிற்குள் இருந்த, பாத்ரூமிற்குள் மிதிலாவை அழைத்துச் சென்ற ஹரி, அவளை அங்கிருந்த சிங்கின் முன்பு நிறுத்தி.
தானே பைப்பை திறந்து, மெதுவாக மிதிலாவின் முகத்தை, நீரைக் கொண்டு கழுவிவிட்டவன், டவலை எடுத்து அவள் முகத்தை மென்மையாக துடைத்துவிட்டு,
தலையில் இருந்த பேண்டை அவிழ்த்து, மீண்டும் அனைத்து முடிகளையும் சேர்த்து, போட்டும் விட்டவன்.
மிதிலாவின் காதில், "ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணு பேபி, ரொம்ப டைம் ஆகிடுச்சு, நான் வெளியில் இருக்கிறேன்,", என்றுவிட்டு கதவை சாத்தி விட்டு வெளிவந்து விட்டான்.
வந்தவன் நேராக கிச்சன் சென்று தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு, உடன் சளி மற்றும் தலைவலிக்கான மாத்திரையும், தைலமும் எடுத்துக்கொண்டு வந்தான்.
மிதிலா, கொஞ்சம் நிதானம் அடைந்து ரெஸ்ட் ரூம் சென்று விட்டு, வெளியில் வரவும், ஹரி வரவும் சரியாக இருந்தது.
பொருட்கள் அனைத்தையும் நைட் லாம்ப் மேஜை மீது வைத்த ஹரி,
மிதிலாவை அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்து, அவனே மிதிலாவின் கால்களையும் தூக்கி, பெட்டின் மீது வைத்து விட்டு,
அவளுக்கு இடுப்பு வரை பிளான்க்கெட்டை எடுத்து போர்த்திவிட்டவன்,
அவளின் ஜீன் கோட்டை கவுனின் மீது இருந்து கழற்ற தொடங்க,
அதில், வேறு ஏதோ சிந்தனையில் சுழன்றுக்கொண்டிருந்த மிதிலாவின் பெண்மை பட்டென்று விழித்துக்கொள்ள, சட்டென்று பயந்துப்போனவள், தன் கோட்டை இறுகப் பற்றிக்கொண்டு ஹரியை பார்க்க..
ஹரி "Uncomfortable-ஆ, இருக்கும் பேபி, கொஞ்சம் ஈரமா வேற ஆகிடுச்சு பாரு, ரிமூவ் பண்ணிடலாம்", என்று மீண்டும் கழட்டப்பார்க்க.
மிதிலா, 'இல்லை வேண்டாம்', என்பதுபோல் தன் உதட்டை அசைத்து மறுக்க.
ஹரி, "ஏன் பேபி, சொன்னா கேளு, ஈரத்தோட இருந்தா சளி பிடிச்சுடும்", என்று வற்புறுத்த.
மிதிலா , "இல்ல டாக்டர், பிளீஸ் வேண்டாம், இது ஸ்லீவ்லெஸ் ஃபிராக், அதான் மேல கோட் போட்டு இருக்கேன்", என்று சங்கடமாக கூற,
ஹரிக்கு, என்ன இது, கையில்லாத கவுனில் இருப்பதை, ஏன் இவ்வாறு சங்கடமாக எண்ணுகிறாள், என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சாதாரணமாக, டூ பீஸ் நீச்சல் உடைகளில், உலா வரும் பெண்கள் இருக்கும் நாட்டில் வாழ்பவனுக்கு, இவளின் செயல்கள் ஆச்சரியத்தை தானே தரும்.
அவளுடைய மெல்லிய உணர்வுகள், மேலும் மேலும் அவனை ஈர்த்தது.
யாரின் ஆடை சுதந்திரத்திலும் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்பதை பின்பற்றுபவன், "இன்ட்ரஸ்டிங்", என்று சிரித்துவிட்டு,
"ஓகே பேபி, எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, உன்னோட comfortable-க்கு தான் சொன்னேன்", என்று அவளை அத்துடன் தொந்தரவு செய்யாது விட்டுவிட்டு,
கட்டிலின் தலைமாட்டில் அமர்ந்து, அவளுக்கு அங்கிருந்த நீரை எடுத்து பருகக்கொடுத்தான்.
அவளின் வறண்ட தொண்டைக்கு அது மிகவும் தேவையாக தான் இருந்தது.
மிதிலா நீரை வாங்கி அருந்த தொடங்கியதும், மாத்திரையை எடுத்து பிரித்து அவளிடம் கொடுத்தான்,
மிதிலா கேள்வியாக பார்க்க, "ரொம்ப அழுதுட்ட, சோ கோல்ட் கண்டிப்பா வரும், அதனால் தான், போட்டுக்கோ", என்று அவனே அவள் வாயில் மாத்திரையை போட்டு, தண்ணீரை குடிக்க வைத்தான்.
அடுத்து நைட் லேம்பை ஆன் செய்துவிட்டு,
மெதுவாக மிதிலாவை தன் மடியிலேயே படுக்கவைத்து, தைலத்தை எடுத்து, அவள் நெற்றியில் மெதுவாக தடவி, அப்படியே இதமாக பிடித்து விட..
கூச்சத்தில் நெளிந்த மிதிலா, அவன் கைப்பற்றி தடுத்து, வேண்டாம் என்பது போல் ஹரியை பார்க்க, "கொஞ்ச நேரம் தான், பிறகு நான் போயிடுவேன், நீ படுத்துக்கோ", என்று பிடித்துவிட.
மிதிலா அந்த மெல்லிய ஒளியில், ஹரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஹரியின் குண இயல்பிற்கு இவ்வாறெல்லாம் அவன் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஹரி உதவி செய்வான்.
அதிலும் மிதிலாவை, தன்னவளாக அவன் எண்ணும் பொழுது, எவ்வாறு அவளை அவன் கொண்டாடாமல் இருப்பான்.
அடுத்த ஐந்து நிமிடத்திலேயே, ஹரியின் விரல்கள் செய்த மாயத்தில், மிதிலா
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டு இருந்தாள்.
அவளின் சீராக ஏறி இறங்கும் மார்பும், சீராக வெளிவரும் மூச்சும், அவள் நல்ல உறக்கத்தில் இருப்பதை ஹரிக்கு உணர்த்த, அவன் இதழோரம் மெல்லிய புன்னகை ஆதாரமாக.
மேலும் இதமாக அவளின் புருவ முடிச்சுக்களை ஹரியின் விரல்கள் நீவிவிட்டது.
அதில் மிதிலா இன்னும் சுகமாக தூக்கத்தை தொடர்ந்ததாள்.
இத்தனை நாட்கள் தன் தோளில் சுமந்த, அனைத்தையும் அவள் மறந்துவிட்டாள், மகிழ்மதி உட்பட.
ஹரி, எவ்வளவு நேரம், தூங்கும் மிதிலாவையே, பார்த்துக்கொண்டு இருந்தான் என்பது தெரியாது.
தங்களுடைய எதிர் காலம் பற்றிய சிந்தனை தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
அப்பொழுது சன்னமாக குழந்தையின் அழுகை சத்தம் ஹரியின் காதை எட்டியது.
அதில் ஹரி, "ஓ காட், ஃபேபிய பத்தியே மறந்து போயிட்டேனே..!!", என்றப்படி, பட்டென்று மிதிலாவை, தன் மடியில் இருந்து, தலையணைக்கு மாற்றிவிட்டு, எழுந்து, அன்னபூரணியின் அறைக்கு, ஓடினான்,
அன்னபூரணி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்,
ஹரி சினுங்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு, ஹாலை நோக்கி விரைய.
அதற்குள் குழந்தை, பசியில் கண்ணைக் கூட திறக்காது, வீர் வீர் என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
குழந்தையை சமாதானம் செய்துக்கொண்டே ஹரி, ஹாலில் இருந்த மிதிலாவின் குழந்தைக்கான பேகை திறந்து,
அதில் இருந்த பாட்டில் மற்றும் பால் பவுடரை எடுத்துக் கொண்டு கிட்சன் சென்றவன், நீரை ஓவனில் வைத்து எடுத்து, விரைவாக அதில் பால் பவுடரை கலந்து, பாட்டிலில் ஊற்றியவன், குழந்தையின் வாயில் வைக்க,
பட்டென்று தன் அழுகையே நிறுத்திய குழந்தை, விறுவிறுவென்று பாலை உறிய, புரையேறாமல் இருக்க ஹரி குழந்தையின் மார்பை நீவி விட்டான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில், பாட்டில் காலி ஆகிவிட, அத்துடன் குழந்தையின் கண்களும் மீண்டும் தூக்கத்திற்கு சொக்க தொடங்கிவிட்டது.
"ஸ்வீட் பேபி", என்ற ஹரி, குழந்தையின் வாயை மெல்லிய டிஷ்ஷூவினால் துடைத்துவிட்டு, தூக்கிச் சென்று, மிதிலாவின் அருகில் படுக்க வைத்தவன், அப்பொழுது தான் குழந்தையின் டயாப்பர் நிரம்பி விட்டதை பார்த்தான்.
உடனே மிதிலாவின் பையில் இருந்து புதியதை எடுத்து வந்தவன், பழைய டயாப்பரை விரைவாக கழட்டி, சுற்றம் செய்து, புதியதை மாற்றிவிட்டான்.
அதற்குள் குழந்தை, மிதிலாவின் உடையை பற்றிக்கொண்டு, அவள் உடல் தரும் கதகதப்பில், சுகமாக தூங்க ஆரம்பித்துவிட்டு இருக்க..
"அம்மாக்கும் பொண்ணுக்கும் நல்லா தூக்கம்" என்றப்படி, மிதிலாவின் போர்வையை இழுத்து, குழந்தைக்கும் சேர்த்து போர்த்திவிட்டவன். குழந்தை கீழே விழாதபடி இரண்டு தலையணையை எடுத்து, பக்கத்தில் அடைவதாக வைத்துவிட்டு, வெளிவந்தவன்,
அறைக்கதவை பாதி திறந்தவாறே விட்டுவிட்டு,
ஒரு தலையணையையும், பிளான்கெட்டும், எடுத்துக்கொண்டு வந்து,
ஹாலில் இருந்த சோபாவில் போர்த்திக்கொண்டு படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டான்.
மணி அப்பொழுதே காலை 5, விடிந்து விட்டு இருந்தது.
இதற்கு மேல் ஒருநிமிடம் முழித்து இருந்தாலும் ஹரியே மயங்கி விழுந்துவிட்டு இருப்பான்.
காலை மணி 8:00.
ஹரி நல்ல ஆழ்ந்த நித்திரையில் இருக்க, மெல்லிய அழுகை சத்தம் அவன் செவிகளை தீண்டியது.
அதில் லேசாக அவன் தூக்கம் கலைய, இப்பொழுது அழுகை சத்தம் கொஞ்சம் அருகில் கேட்பது போல் இருந்தது..
அதில் பட்டென்று தன் கண்களை திறந்து விட்டான்.
குழந்தையின் அழுகை சத்தம் என்று புரிந்து கொண்டவன், உடனே சோஃபாவில் இருந்து எழுந்து குழந்தையை காணச் செல்ல நடக்க, தூக்க கலக்கத்தில் அவன் நடை நன்கு தடுமாறியது.
அப்படியே நின்றவன், கண்களை மூடி மூடி திறந்து, முகத்தை இரு உள்ளங்கையினால் நன்கு தேயித்து, நிதானமடைய முயல.
அதற்குள்ளே மகிழ்மதியின் சத்தம் குக்கர் விசில் போல் அதிகரித்து, வீட்டை நிறைக்க..
ஹரியின் தூக்கம் அறக்க பறக்க பறந்துவிட்டது.
அறைக்குள் ஓடிச்சென்றவன் பார்த்தது, மிதிலாவின் மேல் கோட்டை பற்றி சப்பியபடி, அழுது கொண்டிருந்த மகிழ்மதியை தான்.
குழந்தை லேசாக சினுங்கினாலே எழுந்து விடும் மிதிலாவோ, இன்று முகத்தில் எந்த சலனமும் இல்லாது நல்ல, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், மாத்திரைகளின் விலைவாள்.
"ஈசி.. ஈசி.. குட்டி பேபிக்கு மில்க் வேண்டுமா..??", என்று கேட்டப்படியே, குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு வந்த ஹரி, நேற்றைய இரவை போலவே இப்பொழுதும், பால் கலக்கி கொடுக்க..
வயிறு நிரம்ப பால் குடித்து முடித்த குழந்தை, தன் கண்களை நன்கு மலர்த்தி, ஹரியை பார்த்து, கலகலவென்று சிரிக்க..
"கூல்.. மகி பேபி ஈஸ் பேக் டூ ஃபார்ம்" என்று அவள் கன்னத்தை பற்றி லேசாக தடவி விட்டவன்.
"வாங்க உங்க மாம்ம எழுப்பலாம்", என்று அறைக்குள், குழந்தையுடன் சென்ற ஹரி, மெதுவாக மிதிலாவை எழுப்ப தொடங்கினான்.
அன்னபூரணியை வேறு காணச் செல்ல வேண்டுமே, என்ற எண்ணத்துடன் அவளை அவன் எழுப்ப.
நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மிதிலா, எழவே இல்லை.
கும்பகரணியாக அசையாது கிடந்தாள்.
"பேபி… பிளீஸ்.. எழுந்திரு", என்று ஹரி அவள் கையை பிடித்து அசைக்க.
மிதிலாவோ, "ப்ளீஸ்பா எல்லாம் நேத்தே படிச்சுட்டேன், ஃபைவ் மினிட்ஸ் பா ", என்று இதையே மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டு, போர்வைக்குள் மறைந்துக்கொள்ள.
அவளின் ஒவ்வொரு செய்கையும், அசைவும், ஹரியை அவள் மேல் ரசனையை கூட்டிக்கொண்டு இருந்தது.
ஹரி, "அப்பாவா… அடிப்பாவி ஸ்கூல் டேஸ்க்கு போய், கனவு காண போயிட்டியா,", என்று சிரித்துவிட்டு, இது வேலைக்கு ஆகாது எனப் புரிந்து, குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு வந்தவன், ஹாலில் கீழே மேட் போட்டு குழந்தையை உட்கார வைத்துவிட்டு,
மிதிலாவின் பேக்கில் இருந்த, சில சின்னச்சின்ன விளையாட்டு பொருட்களை எடுத்து விளையாட கொடுத்தவன்,
ஹஸ்கியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, அன்னபூரணியின் அறைக்கதவை திறந்தான்.
அவரும் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்.
ஹரி , "ம்.. என்னை பார்த்தா மட்டும் பாவமா தெரியலை. எல்லாரும் ஜாலியா தூங்குறாங்க", என்று நினைத்து விட்டு, மறுபடியும் கதவை அடைத்து விட்டு வெளிவந்தான்.
தூக்கம் அவனை வா வா என்று அழைத்தது.
ஆனால் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டுமே..!!
வேறுவழியின்றி மீண்டும் மிதிலாவை எழுப்ப படையெடுத்தான்.
ஹரி,"பேபி, ப்ளீஸ் பேபி எழுந்திரு, என்னால சுத்தமா முடியல வாமிட் வர்ற மாதிரி இருக்கு தூங்காமா, ப்ளீஸ் எழுந்திரு", என்று கெஞ்சிப் பார்த்தான்.
மிதிலாவோ, ' ஃபைவ் மினிட்ஸ்', பல்லவியையே திரும்பத் திரும்ப பாடினாள்.
கூடவே, "அம்மா காஃபி போட்டதும், எனக்கும் கொஞ்சம் கொடுங்க அப்பா ப்ளீஸ்", என்று வேறு கேட்டு கொண்டு இருந்தாள்.
அவளின் வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களை, அவளுடைய முதல் காதல் உணர்வுகள் மேலெழுந்து அடக்கி, அவளை மீண்டும் பழைய நிலைக்கே எடுத்துச் சென்று இருந்தது.
அவளின் இத்தனை க்யூட்டான செய்கையில் விழுந்த ஹரி, "அடியே பேபி, கல்யாணம் ஆகி, உனக்கு ஒரு குழந்தையே பொறந்துடுச்சு, நீ இன்னும் அப்பாகிட்ட கெஞ்சுற, செம செல்லம் , அம்முகுட்டி டி நீ", என்றவன், தன்னை மீறி குனிந்து, அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, "ஹை ஸ்கூல் போற கேர்ல் மாதிரி இருக்க பார்க்க.." என்றான் அவளின் நிர்மலமான ரோஜா நிற முகத்தை பார்த்து.
பிறகு, இனி இவளை எழுப்புவது ஒன்றும் வேலைக்கு ஆகாது, என்ற முடிவுக்கு வந்த ஹரி, தன் தூக்கத்தை விரட்ட, கிச்சன் சென்று, எக்ஸ்பிரசோ மெஷினில் காபித்தூள் மற்றும் பாலை ஊற்றி ஆன் செய்தவன்,
அடுப்பில் ஒரு பக்கம் காலை உணவு மற்றும் மதிய உணவினை விடுவிடுவென தயாரிக்க ஆரம்பித்தான்.
காஃபி மேக்கரில் இருந்து சத்தம் வர ஆரம்பித்தது,
உடனே ஹரி, ஒரு ட்ரேயை எடுத்து, ஒரு கப் காப்பியை மட்டும் ஊற்றி எடுத்துக்கொண்டு, அன்னபூரணி அறைக்கு சென்று அவரை எழுப்பி, அவர் எழுந்ததும், ரெஸ்ட் ரூம் செல்ல உதவினான்.
அவர் மிதிலா மற்றும் குழந்தையை குறித்து ஹரியிடம் விசாரிக்க,
ஹரி, குழந்தை தூங்கி விட்டதால், கெஸ்ட் ரூமில் மிதிலா குழந்தையுடன் தங்கிக்கொண்டாள், என்று மட்டும் கூறிவிட்டு,
"காஃபி குடிங்க மாம், நான் 10 மினிட்ஸ்ல உங்களுக்கு டிபன் எடுத்துட்டு வரேன்", என்றுவிட்டு அவசரமாக வெளிவந்து விட்டான்.
ஹரியின் முகம், பேச்சின் தடுமாற்றம் மற்றும் கண்ணை பார்த்து அவன் பேசாதது என்று, அன்னபூரணிக்கு அவனின் செயல்கள் வேறுபாடாக தெரிந்தது.
ஒருவேளை மிதிலா, இங்கேயே தங்கியது, பிடிக்கவில்லையோ, என்று நினைத்தார்.
ஹரி, குழந்தையை, தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டு விடுவிடுவென்று அனைத்தையும் செய்தான்.
அன்னபூரணிக்கு டிஃபன் மற்றும் மாத்திரையை கொடுத்து விட்டு, ஹாலிற்கு வந்து குழந்தைக்கு இட்லியைக் குழைத்து ஊட்டி விட்டான்.
அடுத்து மிதிலாவை மீண்டும் சென்று எழுப்பினான் 'நோ யூஸ்',
சரியென்று குழந்தையை அன்னபூரணியின் அறையில் விட்டுவிட்டு, மாடிக்குச் சென்று அவன் அறையில் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்தான்.
அன்னபூரணி மிதிலா வீட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறாள் போல் என்று நினைத்தார்.
பாவம் அவள் இன்னும் தூங்குவதும், தன் மகன் தலையால் தண்ணீர் குடிப்பதும் தெரிந்தால்..??
ஹரி தனக்கு, ஒருக்கப்பில் காஃபியை ஊற்றி, எடுத்துக்கொண்டு, குடித்து கொண்டே மீண்டும் மிதிலாவின் அறைக்குள் சென்றவன், அவளை பார்த்துக்கொண்டே, டேபிளின் மீது காஃபி கப்பை வைத்துவிட்டு சென்று, ஜன்னலின் திரை சீலையை சூரிய ஒளி உள்ளே வருமாறு விளக்கி விட்டான்.
அதில் உள்ளே நுழைந்த, திடீர் சூரிய வெளிச்சத்தில், மிதிலாவிற்கு கண்கள் கூசியது.
தன் கண்களை சுருக்கியவளின், நாசியை காஃபியின் மணம் தீண்டிச்செல்ல.. சுகமாக இருந்தது.
உடனே கண்களை திறந்து விட்டாள்.
இத்தனை நேரம் தூங்கி இருந்தவளின் தொண்டை வறண்டு வேறு இருக்க..
படுக்கையில் இருந்து பட்டென்று எழுந்து அமர்ந்தவள், முதல் வேலையாக அவளை சுண்டி இழுத்த, காஃபி கப்பை கையில் எடுத்துக்கொண்டாள்.
'ச்சே இவ்வளவு நேரம் இத பண்ணாம விட்டுட்டியே டா ஹரி நீ..', என்று தன்னை தானே திட்டிக்கெண்டிருந்த ஹரி,
'அது என்னோடது பேபி.. நான் குடிச்சது', என்று மிதிலாவிடம் சொல்ல வாய் எடுப்பதற்குள்.
ஒருமுறை காஃபியை ஆழ முகர்ந்து பார்த்திருந்த மிதிலா, மறுகணமே ஒரே ஷாட்டில், அதை தன் தொண்டையில் கவிழ்த்து, குடித்து முடித்தே விட்டு இருந்தாள்.
ஹரி எப்பொழுதும் காபியை மிதமான சூட்டில் இருக்கும்போது தான் அருந்துவான், அதிக சூடு உடலிற்கு நல்லது அல்ல என்று, ஆனால் இன்று காபி வேறு கொஞ்சம் சூடாக இருந்தது.
அதனால் தான் டேபில் மீது வைத்து இருந்தான்.
ஒரே மூச்சாக, அவள் குடித்ததை பார்த்து, பதறியவன் "ஐயோ பேபி என்ன இப்படி ஒரேடியா குடிச்சிட்ட, சூடு டா", என்று கத்த.
அப்பொழுதுதான் மிதிலா நிகழ் உலகிற்கே வந்தாள்.
"டாக்டர் நீங்களா..??", என்றப்படி ஒன்றும் புரியாது தன்னை சுற்றி ஒருகணம் பார்த்தவள், உடனே "ஐயையோ என்ன ஆச்சு?, என் பாப்பா எங்க?, மணி என்ன..?", என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்ப.
"நீ நிஜமாவே பேபி தான்", என்று அவள் அருகே சிரித்துக்கொண்டே வந்த ஹரி, அவளின் நுனி மூக்கை பற்றி மெல்ல ஆட்டியப்படி, "ஃபர்ஸ்ட் போயிட்டு ஃபிரஷ் ஆகிட்டு வா, பாப்பா மாம்கிட்ட இருக்கா, நோ டென்ஷன்", என்று விட்டு வெளியேறினான்.
ஹரி வந்து பார்க்கும் பொழுது அடுப்பில் அனைத்தும் ரெடி.
அவனுடைய காபியை மிதிலா குடித்து விட்டதால், ஹரி மீண்டும் ஒரு கப் காஃபியை போட்டு எடுத்துக்கொண்டு, ஹாலில் வந்து உட்கார்ந்தான்.
அப்பொழுது, அறக்க பறக்க ரூமிலிருந்து ஓடிவந்த மிதிலா, ஹரி ஹாலில் இருப்பதை பார்த்துவிட்டு, அன்னபூரணியின் அறைக்குள் ஓடினாள்.
அங்கு மகிழ்மதி சமத்தாக அன்னப்பூரணியின் அருகில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அன்னபூரணியின் உடல் நிலையை விசாரித்துவிட்டு, பணிக்கு செல்ல மணி ஆகிவிட்டதாக சொல்லிவிட்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு, ஹாலிற்கு வந்தவளுக்கு ஹரியின் முகத்தை பார்க்கவே உடல் முழுக்க கூச்சத்தில் கூசியது.
இருந்தும் மணி ஆவதை உணர்ந்தவள், ஹரியிடம் வந்து, "டாக்டர் எனக்கு வேலைக்கு நேரமாகிடுச்சு, நான் கிளம்பறேன், பாப்பாவ ஸ்கூல்ல வேற விடனும், அப்புறம் வரேன்", என்று எங்கோ பார்த்து, பல்லைக்கடித்தப்படி கூறி முடிக்க.
தன் முகத்தை கூட பார்க்காது, பேசியவளின் சிவந்த முகத்தை, பார்த்த ஹரி, "ம்…", என்றான், காஃபியை மிழுங்கியப்படி மையலாக.
அதில் பட்டென்று அவன் முகம் பார்த்த மிதிலா, அவன் பிரௌன் நிற கண்கள் காட்டிய உணர்வில், அப்படியே தள்ளாடிப் போனாள்.
நேற்று அவனுடன் நெருக்கமாக இருந்த தருணங்கள் நினைவில் வர வெட்கிப்போனாள்.
அதில் ஏற்கனவே சிவந்திருந்த அவளின் முகமோ, மேலும் சிவந்து செந்நிறமாகத் தொடங்கியது.
அதை பார்த்த ஹரி அவளை சகஜமாக்கும் பொருட்டு, "ஏன் பேபி ரொம்ப டயர்டா இருக்கும் இல்ல உனக்கு, இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேன், பேபியும் ஸ்கூல் போக வேண்டாம், நான் அவளை பார்த்துக்கறேன், நீ ரெஸ்ட் எடு, நான் ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு லீவ் எடுத்து இருக்கேன், சோ எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல", என்றான்.
அவன் எதிர்பார்த்த போலவே ஓரளவிற்கு மீண்ட மிதிலா, "இல்லை டாக்டர், இப்போ லீவ் எடுக்க முடியாது, திடீர்னு கேட்டா கஷ்டம், நான் கண்டிப்பா போயே ஆகணும், நான் கண்டிப்பா திரும்ப வரேன்", என்றுவிட்டு, கீழே கிடந்த குழந்தையின் பொருட்களை சேகரிக்க தொடங்கினாள்.
"சரி ஓகே, யுவர் விஷ் ", என்ற ஹரி, எழுந்து கிச்சன் நோக்கி சென்றான்.
யூஸ் அண்ட் த்ரோ டிஃபன் பாக்ஸ் ஒன்றை கையில் எடுத்த ஹரி, தயாராக இருந்த, சாதம், சாம்பார், மற்றும் பொரியல் எடுத்து மிதிலாவிற்கு மதியத்திற்கு வைத்துவிட்டு,
இன்னொரு பாக்ஸில் காலைக்கு இட்லியும் அதன் மேலேயே சாம்பாரும் போட்டு, பேக் செய்தவன்,
அனைத்தையும் ஒரு பையில் வைத்து, உடன் தேவையான டிஷ்யு மற்றும் ஸ்பூன் வைத்து மூடி, எடுத்து வந்தான்.
ஹரி வரவும், மிதிலா கிளம்பவும் சரியாக இருந்தது.
"போயிட்டு வரேன் டாக்டர்", என்றவள், குழந்தையிடம், "அங்கிளுக்கு பாய் சொல்லு டா மகி ", என்று, அவள் கையை பிடித்து ஆட்ட, குழந்தையும் ஹரியை பார்த்து சிரித்தாள்.
அதில் ஒருகணம் ஹரியின் முகம் மாறி, மீண்டும் பழையப்படி ஆனது.
அவன் முகத்தை பார்த்து பேசாத மிதிலா அவன் மாற்றத்தை பார்க்கவே இல்லை.
மிதிலாவின் கையில் உணவு பையை கொடுத்த ஹரி, "உனக்கு தான் இதில் Breakfast and lunch இருக்கு. மறக்காமல் சாப்பிடு. முடிஞ்சா மதியானம் பர்மிஷன் போட்டுட்டு, ரெஸ்ட் எடு", என்றவன்.
அவள் இடையில் இருந்த குழந்தையின் அருகில் குனிந்து, குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, "நான் உனக்கு அங்கிள் இல்ல பேபி, dad டா, எப்பவுமே சரியா குட்டிமா,", என்றான்.
அதில் மிதிலா உடனே ஹரியின் முகத்தை பார்த்தாள்.
அவன் முகத்தில் அப்படி ஒரு உறுதி தெரிந்தது.
அதே உறுதியுடன் நிமிர்ந்தவன், கண்டன பார்வை ஒன்றை மிதிலாவை நோக்கி வீசினான்.
இது தான் இனி, என்பது போல் இருந்தது அவன் பார்வை.
அவனின் முதல் கோப விழிகளின் வீச்சில், ஒருகணம் மிதிலா திடுக்கிட்டு இருந்தாலும், அதன் பின் இருந்த காரணம் புரிந்ததும், ஹரியின் மீது எழுந்த பயம் மறைந்து, மையலை கூடியது.
அவள் விழிகளில் கோடி மாற்றங்கள். தன்னை மீறி, சுற்றம் மறந்து, தன்னவனை, ரசிக்க ஆரம்பித்தாள்.
இரவு உடையில், கலைந்த தலையுடன், சரியான தூக்கம் இல்லாது முகம் முழுக்க ஆங்காங்கே சிவந்து, சிறிது வளர்ந்து இருந்த ஷேவ் செய்யப்படாத மீசை தாடியுடன், இருந்த ஹரியின், நன்கு சிவந்த பன்னீர் ரோஜா நிற பெரிய உதடுகளும், நன்றாக முறுக்கேறிய, இளமையுடன் கூடிய உடல் கட்டும், இத்தனை நாட்கள் கண்ணில் படாது, மொத்தமாக இன்று மிதிலாவின் கண்ணில் பட..
சுற்றுப்புறம் யாவையும் மறந்துவிட்டாள்.
இன்ச் இன்ச் ஆக தன்னவனை அவள் பார்க்க..
மிதிலாவின் பார்வை மாற்றத்தை, சில வினாடிகளுக்கு பிறகே, ஹரி கவனித்தான்.
'அடிப்பாவி.., என்ன இப்படி வெளிப்படையா பார்த்து சைட் அடிக்கிறா..', என்று நினைத்தவனுள், அவளுடைய பிரத்தியோகமான பார்வை, தீயை மூட்டி, அவன் கோபத்தை தடம் தெரியாமல் அழித்து விட்டது.
அவளுடைய தொடர் ரசனையான பார்வையில் ஹரிக்கே, கூச்சமாக இருந்தது,
ஹரி, "ஓ பேபி, யூ ஆர் டெம்டிங் மீ, வெரி பேட்லி, காலையில இருந்து ரொம்ப டார்ச்சர் பண்ற நீ…", என்றவன்,
"சாரி பேபி", என்று, தன்னை அடக்க முடியாது, குனிந்து மிதிலாவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட.
அதில் மிதிலாவின் செல்கள் அனைத்தும் ஒருகணம் செயலிழந்து விட்டது.
ஒன்றே ஒன்று என்று ஆரம்பித்தவனுக்கு, அது சுத்தமாக பத்தவில்லை,
மீண்டும் மீண்டும் அழுந்த, அவளின் கன்னக்குழியில், முத்தமிட்டவன், எதுவும் பற்றாது, அவளுடைய கன்னத் தசைகளை தன் பற்களால் லேசாக பற்றி இழுக்க..
முதலில் கொடுத்த முத்தத்திற்கே மயக்க நிலைக்கு சென்றுவிட்டிருந்த மிதிலா, அவனின் இந்த இன்ப கடியில், உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் உணர.
அதில் அவளின் கால்கள் தன் வலுவினை சுத்தமாக இழந்துவிட்டது.
அதில் குழந்தையுடன், ஹரியின் மீதே சரிந்தாள்.
அவளின் பக்கவாட்டில் நின்றிருந்த ஹரி, தன் மீது சாயிந்தவளை, அப்படியே பற்றி, தன் மார்புடன் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவள் முகம் பார்க்க.
மிதிலாவோ தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இருந்தாள்.
அவளின் உதடுகள் இரண்டும் படப்படக்க, ஆணவனின் தொடுகை, தரும் பல உணர்ச்சிகளை அவள் முகம் காட்ட, என்று ஜொலித்து கொண்டு இருந்தாள்.
அவளின் அழகிய உணர்வு குவியலான முகத்தை பார்த்து, மீண்டும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், அவளை நெருங்கிய ஹரி, இம்முறை அவளின் துடிக்கும் உதடுகளை, தன் உதடுகளைக் கொண்டு மூடி, அதன் துடிப்பை நிறுத்தி இருந்தான்.
தன் மீது, தானாக வந்து, விழுந்திருந்த மலர் மாலையை எப்படி அவனால் ஆராதிக்காது விட முடியும்.
ஹரியின் இளம் சூடான அதரங்களும், அவன் அதரங்களை சூழ்ந்திருந்த ரோமங்களும் தந்த அழுத்ததில், பதறிய மிதிலா, மறுகணம் ஹரியிடம் இருந்து துள்ளி விலகினாள்.
இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை.
நொடியில் நடந்துவிட்டு இருந்ததே.
தன் தலை முடியை அழுந்த கோதி, தன்னை நிதானப்படுத்தினான் ஹரி.
மிதிலாவின் நிலைமையை, சொல்லவே வேண்டாம். கையில் இருந்த குழந்தையை இறுக பற்றிக்கொண்டாள் பற்றுக்கோளாக.
ஹரி, சிறிது நிதானம் அடைந்ததும், மீண்டும் மிதிலாவை நெருங்கி, அவளின் கன்னத்தை மெதுவாக துடைத்து விட்டவன், "வேலைக்கு போக, மணி ஆகிடுச்சு சொன்ன இல்லை மிதுமா, போயிட்டு வா டா ", என்றான்.
ஹரியின், முதல் முத்தக்கடி (love bite), மிதிலாவின் கன்னத்தில் அழகாய் பதிந்துவிட்டு இருந்தது.
அவன் துடைத்துவிட்டும் போகவில்லை.
ஹரி மிதிலாவின் காதருகே குனிந்து, "யாராவது கேட்டால், பேபி கடிச்சுட்டான்னு சொல்லு சரியா", என்றான்.
அதில் மிதிலாவோ, ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழித்தப்படி, ஹரியை நிமிர்ந்து பார்த்தாள்.
"சோ ஸ்வீட் டா பேபி நீ..", என்று அவளிடம் மொத்தமாக மயங்கிய ஹரி, மீண்டும் மிதிலாவின் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தான். அதுவும் இம்முறை இருக்கன்னத்திலும்.
அப்பொழுது சட்டென்று, ஹரியின் தலை முடியை பிடித்து இழுத்த மகிழ்மதி, அவன் கன்னத்தில் தன் புதிய பால் பற்களை வைத்து முத்தம் கொடுக்க.
'ஹையோ பேபிய மறந்துட்டு.. என்ன பண்ணிட்டு இருக்கேன்', என்று நினைத்து தன்னிலை மீண்ட ஹரி.
"ஓ மகி டால், தேங்க்ஸ் டா", என்று மகிழ்மதியிடம், தன் மறு கன்னத்தையும் காட்டியப் படி, நீங்க மட்டும் தான் எனக்கு கிஸ் தரீங்க, பட் உங்க மாம் தான் ஒன்னும் தர மாட்றா, எவ்ளோ கொடுத்தாலும், வாங்கிக்க மட்டும் செய்றா, செல்ஃப் ஃபிஷ் ஃபெல்லோ", என்றுக்கூற.
ஹரி பேசப்பேச அய்யோ என்றாகி விட்டது மிதிலாவிற்கு.
அவனை கிஞ்சிற்றும் ஏறிட்டு பார்க்காது, "பாய் டாக்டர்", என்றுவிட்டு வெளிக்கதவை நோக்கி ஓடிவிட்டாள்.
அவளை புன்னகையுடன் பின் தொடர்ந்த ஹரி, அவள் காரை எடுத்துக்கொண்டு செல்லும்வரை, வெளியிலேயே தான் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனுக்கும் அவனுடைய செயல்கள் புதிதாக தான் இருந்தது.
நினைத்து பார்த்தால் வெட்கமாக கூட தான் இருந்தது.
ஆனாலும் செய்துகொண்டே இருந்தான்.
மிதிலாவோ, எப்படியோ தன்னை சமாளித்து, காரை ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கினாள்.
இன்னும் ஹரி தன் கன்னத்தை கடிப்பது போலவே இருந்தது மிதிலாவிற்கு.
அதைவிட அவனின் உதடுகளின் மென்மையும், மீசை முடியின், தாக்கமும், அவளை விட்டு துளி கூட நீங்கவில்லை.
உதடுகளை மெல்ல தொட்டு பார்த்தாள்.
அதுக்கொடுத்த உணர்வுகள், அவளுக்கு புதிதாக பிறந்தது போல் இருந்தது.
ஏதோ புதிய மாய லோகத்திற்குள் அடி எடுத்து வைத்துவிட்டது போல் மிதந்தாள்.
அவள் மனதில் இருந்த பாரங்கல் அனைத்தும் கரைந்துவிட்டது போல், மனம் லேசாகிவிட்டு இருந்தது.
போதும் போராட்டம் என்று ஹரியிடம் சரணடைய தயாராகிவிட்டு இருந்தாள் மிதிலா.
கடையில் காலை பதினோரு மணி அளவில், கொஞ்சம் கூட்டம் குறைய, மிதிலாவிற்கு ஃப்ரீ டைம் பத்து நிமிடம் கொடுத்தனர்.
ஓய்வு அறைக்குள் வந்தவள், ஹரி கொடுத்த உணவு பையை திறந்து, அவன் வைத்திருந்த இட்லியை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
நான்கு வாய் தான் உண்டு இருப்பாள், அதற்குள்ளே கண்களை கரித்துக்கொண்டு அழுகை வந்தது.
ஸ்கூலில், துளசி கொடுக்கும் உணவை, இவ்வாறு தானே இன்டர்வல் டைமில் சாப்பிடுவாள்.
மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு, தன் வாழ்நாளில் நிகழாது என்று நினைத்தவளுக்கு, வேதனை தொண்டையை அடைத்தது.
அருகில் இருந்த நீரை எடுத்து பருகியவள், கடவுள் தனக்கு துளசிக்கு பதிலாக ஹரியை தந்து இருக்கிறார் என்று மனதை தேற்றிக்கொண்டு, அவன் அன்புடன் கொடுத்த உணவை உண்டு முடித்து, எழுந்து வேலையை பார்க்க கிளம்பினாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக