Chapter 42
Chapter -42 அங்கு அடுத்து என்ன என்று யோசிக்க, சிறு அவகாசம் கூட குறிஞ்சிக்கு தரப்படவில்லை! தந்தையும், மகளும் பெரும் அராஜக காரர்களாக இருந்தனர். அவள் கைகளில் இருந்த தினப்படி வளையல்களை, புது வளையல்களை போட என்று ஈஷா உருவிக்கொண்டு செல்லவும்… அதை என்னவென்று குறிஞ்சி பார்ப்பதற்குள்ளே, ஈத்தனின் கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பயணிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தன… அதில் அதிர்ந்தவள், அவள் பின்புறம் நின்றிருந்தவனை திரும்பிப்பார்க்க… ஈத்தன் வந்த சிரிப்பை, தன் இதழ்களுக்குள் அடக்க பெரும்பாடுபட்டு போனான். எப்படியோ அவளறியாது அதை அடக்கியவன், அவளின் கூந்தல் மொத்தத்தையும் அள்ளி, அவளின் தோள் வழியே முன்புறம் போட… குறிஞ்சியின் பின் கழுத்தை மொத்தமாக ஈத்தனின் மூச்சுக்காற்று ஓடிவந்து தழுவிக்கொண்டு இருந்தது. அதில், அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக வெளிவர ஆரம்பித்த வியர்வை துளிகளையும், அவளின் விரிந்த விழிகளையும் பார்த்தப்படியே ஈத்தன், “இந்த செயினை ரிமூவ் பண்ணிடவா. இல்லை, நீ உள்ளே செக்யூர் பண்ணிடறியா குறிஞ்சி மலர்?” என்று, அவள் கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருக்கும் செயினை, தன் விரல்களால் பற்றி இழுத்தப்படியே கேட்கவ...