Chapter 42

Chapter -42

அங்கு அடுத்து என்ன என்று யோசிக்க, சிறு அவகாசம் கூட குறிஞ்சிக்கு தரப்படவில்லை!


தந்தையும், மகளும் பெரும் அராஜக காரர்களாக இருந்தனர்.


அவள் கைகளில் இருந்த தினப்படி வளையல்களை, புது வளையல்களை போட என்று ஈஷா உருவிக்கொண்டு செல்லவும்…


அதை என்னவென்று குறிஞ்சி பார்ப்பதற்குள்ளே, ஈத்தனின் கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பயணிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தன… 


அதில் அதிர்ந்தவள், அவள் பின்புறம் நின்றிருந்தவனை திரும்பிப்பார்க்க…


ஈத்தன் வந்த சிரிப்பை, தன் இதழ்களுக்குள் அடக்க பெரும்பாடுபட்டு போனான்.


எப்படியோ அவளறியாது அதை அடக்கியவன், அவளின் கூந்தல் மொத்தத்தையும் அள்ளி, அவளின் தோள் வழியே முன்புறம் போட…


குறிஞ்சியின் பின் கழுத்தை மொத்தமாக ஈத்தனின் மூச்சுக்காற்று ஓடிவந்து தழுவிக்கொண்டு இருந்தது.


அதில், அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக வெளிவர ஆரம்பித்த வியர்வை துளிகளையும், அவளின் விரிந்த விழிகளையும் பார்த்தப்படியே ஈத்தன், “இந்த செயினை ரிமூவ் பண்ணிடவா. இல்லை, நீ உள்ளே செக்யூர் பண்ணிடறியா குறிஞ்சி மலர்?” என்று, அவள் கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருக்கும் செயினை, தன் விரல்களால் பற்றி இழுத்தப்படியே கேட்கவும்…


அவ்வளவு தான் குறிஞ்சி, தன் இடது காதோரம் ஊர்ந்த ஈத்தனின் கரத்தின் மேலேயே, தலைசாய்த்து படுத்துவிட்டு இருந்தாள்…


அவனின் அச்சிறு நெருக்கத்தையே அவளால் தாக்குபிடிக்க முடியவில்லை.


அதில், ‘ஓ குறிஞ்சி மலர்! யூ ஆர் டூ ஸ்வீட்’ என்று சத்தம் இல்லாமல் கூறிய ஈத்தன், அப்பொழுதும் அவளை விட்டு விலகிய பாடு இல்லை.


பாவம் பார்த்தால், தாம்பத்திய படியில் அவன் ஏறுவது எப்பொழுது!


“என்ன ஆச்சு கேர்ள். இன்னும் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கா?” என்று அவளின் காதோரம் அக்கறையாக அவன் குரல் கேட்க.


‘அச்சோ’ என்று பதறி தன் தலையை நிமிர்த்தியவள்.


“ஆமாம்… ஆமாம்…” என்று தன் தலையை அனைத்து பக்கமும் ஆட்டினாள்.


அதற்கு, “ம்… சீக்கிரம் சரியாகிடும்… சரி பண்ணிடலாம்…” என்ற ஈத்தன்.


சொன்னப்படியே, மூன்றடுக்கு மாலையை அவள் கழுத்தில் விரைந்து அணிவித்துவிட்டு, மீண்டும் கூந்தலை மொத்தமாக பின்புறம் கொண்டுவந்து சரிசெய்துவிடவும்…


குறிஞ்சிக்கு போன உயிர் அப்பொழுது தான் கொஞ்சம் மீண்டு வந்தது.


ஆனால் அது பொறுக்காது, அவள் கரத்தில் புது வளையல்களை வரிசையாக போட்டு முடித்து இருந்த ஈஷா, குறிஞ்சியை மீண்டும் சோதிக்கவென்றே, அங்கிருந்த ஜிமிக்கிகளை கையில் எடுத்து இருந்தவள், “பேபி…”, என்று ஒன்றை குறிஞ்சிக்கு போடுமாறு ஈத்தனிடம் நீட்டி இருந்தாள்.


அதில் சத்தமின்றி உள்ளுக்குள் அலறிய குறிஞ்சியாள், தன்னை விடாமல் சோதிக்கும் ஈஷாவை கடியவா முடியும். அவளின் செல்ல மகளாயிற்றே அவள்!


வேறுவழியின்றி, “கடவுளே! இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று அந்நாளை அவள் நொந்துக்கொள்ளவும்…


அவளை காப்பற்றவென்றே, ஈத்தனின் தொலைப்பேசி அடிக்க ஆரம்பித்து இருந்தது…

____________________________


அதில், “ப்ச்” என்ற ஈத்தன்…


குறிஞ்சியை பார்க்க…


அவள் இன்னுமே, அவன் தந்த குறுகுறுப்பில், திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் தான் நின்று இருந்தாள்.


அதில் ஈத்தனின் கண்கள் மீண்டும் குறும்பில் மலர, “ஒன் செக் கேர்ள். வந்து போட்டு விடறேன். சாரி.” என்று அவள் கன்னம் தட்டி கூறி.


அவள் கையில் ஜிமிக்கியை கொடுத்துவிட்டு சற்று விலகிச்செல்லவும்…


குறிஞ்சியின் கரங்கள் என்னென்ன போட வேண்டுமோ அனைத்தையும் விடுவிடுவென்று போட்டு முடித்து… முதல் வேலையாக அந்த நகை கடையை, ‘போங்கடா சாமி’ என்று இழுத்து மூடிவிட்டு இருந்தது…


அதையெல்லாம் புன்னகையுடன் பார்த்தும், பார்க்காதது போல், தொலைபேசியில் பேசி முடித்த ஈத்தன், தன் லேப்டாப்புடன் வந்து சோஃபாவில் அமரவும்.


“பேபி நாங்க ரெடி” என்றாள் ஈஷா.


அதற்கு, “10 மினிட்ஸ் டா பேபி… டாடி ஒரு மெயில் மட்டும் பண்ணிட்டு வந்துடறேன்… கிளம்பலாம்…” என்ற ஈத்தன்…


“கீழே உனக்கும், அம்மாக்கும் ஃபிளவர்ஸ் டெலிவரி ஆகிடுச்சு பாரு மா…” என்றுவிட்டு, லேப்டாப்பில் பார்வையை பதிக்கவும்.


பூ எடுத்துவர, ஈஷா கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

___________________________


பெரிய புயலும், குட்டி புயலும் ஒருவழியாக அடங்கிவிட்டதில், ‘ஹப்பாடா’ என்று நிம்மதி மூச்சுக்களை வெளியிட்டு, சமநிலை அடைந்த குறிஞ்சி, எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த ஈத்தனை மெல்ல தன் தலை உயர்த்தி பார்த்தாள்.


அவன், தீவிரமாக லேப்டாப்பில் எதையோ தட்டச்சு(டைப்) செய்த வண்ணம் இருக்க…


அவனையே பார்த்துக் கொண்டிருந்திருந்தவளுக்கு, அவன் விரல்களில் இருந்து வரும், அந்த தட்டச்சு செய்யும் சத்தம் கூட, சங்கீதம் போல் கேட்கவும்…


ஈத்தனின், நீண்ட விரல்களின் நேர்த்தியான அசைவுகளையே தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவள், அப்படியே அவன் விரல்களின் அமைப்பில் தன்னை மறந்து லயித்தும் விட…


சிறிது நேரத்தில், அவன் விரல்கள் அப்படியே அசையாமல் நின்றுவிட்டு இருந்தன.


அதை ஒருசில வினாடிகளுக்கு பிறகே உணர்ந்த குறிஞ்சி, நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவும்…


ஈத்தன், அவள் பார்ப்பதை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.


அதில், “போச்சு…” என்று அதிர்ந்த குறிஞ்சி, அப்படியே தன் கையில் இருந்த வளையலை சரிசெய்வதுப்போல் குனிந்துக்கொண்டாள்.


மனம் ஒருநிலையில் நிற்காமல் உள்ளே அடித்துக்கொண்டது.


‘நம்மை பற்றி என்ன நினைத்தாரோ’ என்று சங்கடம் கொண்டவள்… மெல்ல தன் தலையை உயர்த்தி மீண்டும் ஈத்தனை பார்க்கவும்…


இப்பொழுதும் ஈத்தன் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்…


அதுவும் லேப்டாப்பை எல்லாம் மூடிவைத்துவிட்டு, வசதியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்துக்கொண்டு, ஜம்பமாக அவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.


அதனை சற்றும் எதிர்பாராதவள், திகைத்துப்போய் அவனை பார்க்கவும்!


ஈத்தனின் புருவம், ‘என்ன…?’ என்று கேட்கும் விதமாக மேலேறியது அவளை பார்த்து…


அதற்கு, ‘ஒன்றுமில்லை’ என்று வேகமாக தலையாட்டிய குறிஞ்சிக்கு, அவன் செயலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை…


அவள் பார்த்தாலும் சரி…


அவன் பார்த்தாலும் சரி…


அவஸ்த்தை என்னவோ அவளுக்கு மட்டுமானதாக இருந்து படுத்தியது.


அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, அவள் அவனை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே, அவனின் வான் மிதக்கும் விழிகள் முழுவதிலும், அவளின் ஒவ்வொரு அங்கமும் அணு அணுவாக வரிசையாக அலையடித்தன…


அதில், “ஆ! என்ன இன்னைக்கு இப்படியெல்லாம் பார்க்கிறார்” என்று நினைத்தவளுக்கு, ஈத்தனின் பார்வை அவள் உடல் முழுவதும் நகரும் விதத்தில், நொடியில் இதயம் முழுவதும் மத்தளம் கொட்ட, உடலெங்கும் படர்ந்துவிட்டது இன்ப படப்படப்பு.


‘சென்ற மகள் எப்பொழுது வருவாளோ’ என்ற எண்ணத்துடன்…


அன்னிச்சையாக தன் இடுப்பு மடிப்பு சேலை, மாராப்பு என்று அனைத்தையும் அவள் சரிப்பார்க்கவும்…


அதையும் ஈத்தனின் கண்கள் ரசனையுடன் உள்வாங்கிக்கொண்டு இருந்தன…

___________________________


எப்பொழுதும், உடலின் வளைவு நெளிவுகளை, சிறிதும் வெளிகாட்டாத வகையில் காட்டன் புடவையை, அதுவும் பெரிய மடிப்பு வைத்து, இழுத்து மூடி கட்டியிருப்பவளையே, அவன் கண்கள் கவனித்து, ரசிக்க தவறியது இல்லை என்னும் போது…


இன்றோ, ஏற்கனவே விசிறிப்போல் சீராக சிறிய மடிப்பு வைத்து தந்திருந்த புடவையை அப்படியே கட்டி, தோகையென விரிந்த கூந்தலுடன், முழு அலங்காரத்தில் அமர்ந்திருந்தால் விடுமா என்ன?


அவளின் ஒவ்வொரு அசைவிலும், ஆணாக கவரப்பட்டுக்கொண்டிருந்தான்!


அதில், குறிஞ்சியின் நிலை தான் மோசமாகியது.


இருபத்தியொரு வயதில், இளமையின் உச்சத்தில் அவளிருந்த பொழுது, ஒரு கணம் கூட இவ்வாறான பார்வையை ஈத்தனிடம் அவள் பார்த்தது இல்லை.


இப்பொழுதோ, அவளின் மேனி முழுவதும் அவன் பார்வை நிறுத்தி நிதானமாக பயணித்துக்கொண்டு இருக்க.


அதற்கு மேலும் அங்கு அமர முடியாது தன்னைமீறி குறிஞ்சி உடனே எழுந்துக்கொள்ளவும்…


அவளின் உடல் அசைவுகளில் இருந்த அவசரத்தை உணர்ந்து, அவளுடனே எழுந்துவிட்ட ஈத்தனின் கண்கள், இப்பொழுது நேரடியாக அவளின் கண்களை நோக்கியது.


அந்த நீல கண்களின் விசையில், அவள் சட்டென்று அப்படியே அசையாது நிற்க…


“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க குறிஞ்சி மலர். You look so divine!” என்றான் ஈத்தன், ஒவ்வொரு வார்த்தைகளையும், அதன் அர்த்தத்தை உணர்த்தும் விதத்தில் உச்சரித்து.


அது சரியாக தன் வேலையை செய்ய, அவனின் அந்த நேரடியான பாராட்டில், குறிஞ்சியின் கன்னங்கள் இரண்டும் அவளை மீறி சூடாகி, குப்பென்று சிவந்து பளபளக்க ஆரம்பித்தன.


அவனுக்கு ‘என்ன பதிலுரைப்பது’ என்று சரியாக பிடிப்படாமல் நின்றவள், ஈத்தன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கவும் மரியாதைக்கு, “தேங்க்ஸ்” என்றாள், புதிதாக குழைந்துவிட்ட குரலில்.


அந்த குரல் மாற்றத்தில், தன் கண்களை ஒருகணம் மூடி திறந்த ஈத்தன். அவளுக்கும், தனக்கும் இடையிலான இடைவெளியினை குறைக்க ஆரம்பித்தப்படியே, “தேங்க்ஸ்… ம்?!” என்று, அவளை பார்த்து சிறு கண்டிப்புடன் புருவம் உயர்த்தினான்.


அதில், ‘அச்சோ தேங்க்ஸ் சொல்லக்கூடாது சொல்லி இருந்தாங்களே’ என்று தன் முந்தானை நுனியை போட்டு கசக்கிய குறிஞ்சி, இன்னும் அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பவனை, ‘வேறென்ன தான் நான் சொல்வது’ என்று பார்க்க…


அவளுக்கும், அவனுக்கும் இடையில் ஓரடி இடைவெளி விட்டு நின்றிருந்த ஈத்தன், “பார்ட்னருக்கு தேங்க்ஸ் இப்படி சொல்லனும் கேர்ள்”, என்றவன்…


‘எப்படி’ என்பதையும் சற்று குனிந்து, தன் இதழ்களால் அவள் கன்னத்தினை தீண்டியும் சொல்லிக்கொடுத்துவிட்டு விலக. 


‘என்ன’ என்று அதிர்ந்த குறிஞ்சிக்கு உடல் முழுவதும் படபடத்து சிலிர்க்க, ஈத்தன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.


அவன் எப்பொழுதும் போல் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.


அதில், தான் நடந்ததாக நினைப்பது உண்மைதானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது.


அதற்கு பதிலாக, கன்னத்தில் இருக்கும் ஜில்லென்ற உணர்வு அவளுக்கு உண்மை எதுவென்று உரைக்க… படபடப்பில் தன் கண்களை மூடி மூடி திறந்தாள்.


அந்த பாவனையில், “காட்! குறிஞ்சி மலர்” என்று மீண்டும் குனிந்த ஈத்தன்… அதே கன்னத்தில், அதே இடத்தில், மீண்டும் தன் இதழ்களை பதித்துவிட்டு நிமிர…


குறிஞ்சியிடம் பேச்சு மூச்சே இல்லை.


பார்ப்பது, தொடுவது, முத்தமிடுவது எல்லாம் ஆணின் அகராதியில் மட்டும் எளிதாக இருக்க…


பெண்ணோ அதையெல்லாம் பெற்றதற்கே, அசையா விழிகளுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.


அதில், “என்ன கேர்ள் இப்படி பார்க்கிற…”, என்று தன் தலைமுடியை கோதி உணர்வுகளை சமன் செய்ய பார்த்த ஈத்தன்.


அது முடியாது…


ஒரே இழுப்பில், குறிஞ்சியை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து இருந்தான்.


உடன், “இப்ப தேங்க்ஸ் எப்படி சொல்றதுன்னு தெரிஞ்சுப்போச்சு இல்ல கேர்ள். சொல்லேன் நீயும்” என்றானே பார்க்கலாம்.


ஏற்கனவே ஈத்தனின் கைகளுக்குள், அவ்வளவு நெருக்கத்தில் இருப்பதிலேயே நடுங்க ஆரம்பித்து இருந்தவள், அடுத்து அவன் கேட்டதில் வாய்விட்டே, “அச்சோ” என்றவள், “என்னங்க விடுங்க” என்று நெளிந்தப்படியே விலக பார்க்க.


“இப்ப என்ன ஆச்சு கேர்ள். ஏன் இவ்வளவு நர்வெஸ். நான் தானே. கூல்” என்ற ஈத்தன்.


அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தி, தன் முகம் பார்க்க செய்ய…


அது முடியாது, தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் குறிஞ்சி.


அதற்குள்ளே, அவள் முகம் முழுவதும் ஒருயிடம் விடாமல் அந்திவானமாய் சிவந்துவிட்டு இருக்க. 


அதிலிருந்த அவளின் ரோஜா நிற ஈர இதழ்கள் இரண்டும், அப்படி நடுங்கிக்கொண்டு இருந்தன…


அதைப்பார்த்து, “என்ன கேர்ள், நீ இவ்ளோ சென்சிடிவ்வா இருந்தால் என்ன அர்த்தம்”, என்ற ஈத்தன், “நான் பார்க்காத நேரம், கண்ணால் பார்த்துட்டே இருந்தா மட்டும் போதுமா உனக்கு?” என்று வேறு அவளிடம் கேட்க.


எப்பொழுதும் எண்ணி பேசும் ஈத்தன், தன்னிடம் நிறைய நிறைய பேச வேண்டும் என்று எதிர்பார்த்தவள், இன்று அவன் பேச பேச பேசும் மொழியை மறந்தப்படியே, அவன் கரத்தினுள் இன்னும் கண்களை மூடியே நின்று இருந்தாள்.


அதில் ஈத்தனின் கரம், வசதியாக அவனுக்கு மிகவும் பிடித்த, சற்றுமுன் அவன் இதழ் பதித்த, அவளின் கொழுகொழு கன்னத்தினை “சோ சாஃப்ட்” என்று மெல்ல வருடிவிட ஆரம்பிக்கவும்…


ஆணின் மென் தீண்டலில், பெண்ணவளுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாயும் உணர்வு‌.


அதுவும் அடிவயிற்றில் ஓராயிரம் உணர்வுகள் நொடியில் உருவாகி… தேகம் மொத்தத்தினையும் கூச செய்ய…


சட்டென்று வேகமாக திரும்பியவள், அவனிடம் இருந்து விலகி ஓடப்பார்த்தாள்…

___________________________


ஆனால், இத்தனை நாள் அவளை ஓடவிட்டு பார்த்தவன். இன்று அவளை கப்பென்று பிடித்து வைத்துக்கொண்டான்.


அதில், “அச்சோ… பாப்பா வந்திடுவாங்க…” என்று குறிஞ்சி பதறி, தன் மொத்த பலத்தினையும் உபயோகித்து ஓட துடிக்கவும்.


அவளை பின்புறமிருந்து இடையை சுற்றி அணைத்து பிடித்திருந்த ஈத்தன், அப்படியே அவளை தன் உயரத்திற்கு தூக்கிவிட்டு இருந்தான்.


அதில், “அம்மாடி…” என்று குறிஞ்சி மேலும் பதறவும்.


“ஷ் கேர்ள்! கொஞ்சம் அமைதியா இரு. பேபி இப்ப வர மாட்டா. என் வாட்சை பாரு…” என்று அவளை ஒற்றை கையிலேயே தூக்கி பிடித்தப்படி, மற்றொரு கையை அவன் அவளிடம் காட்ட.


அதில் ஈஷா, கீழே இருக்கும் மீன் தொட்டிகளில், ஒவ்வொரு மீன் தொட்டியாக சென்று, மீன்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியப்படியே, அதற்கான உணவுகளை போட்டுக்கொண்டிருப்பது, அதில் ஓடிய லைவ் சிசிடிவி காட்சியில் தெரிந்தது.


“என்ன கேர்ள் இப்ப ஓகே தானே நீ. உன் பாப்பா இப்ப வர மாட்டா” என்று அவளை மெல்ல இறக்கி, மீண்டும் தன் புறம் பழையப்படி திருப்பி நிறுத்தியவன்…


“உன்னோட கொஞ்ச நாள் முடிஞ்சு, மாசம் ஆகுது கேர்ள். அது உனக்கு தெரியுமா, தெரியாதா?” என்றப்படியே அவளை தன்னுடன் சேர்த்து அணைக்கவும்…


அக்கேள்வியில், பெண்ணின் மனதினுள் பல இடி முழக்கம்!


ஒருநாள் அதை கேட்பான் என்று தெரியும். ஆனால் அது இன்றாக இருக்கும் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.


“பதில் சொல்லு கேர்ள்” என்று அவளை உந்தினான் ஈத்தன்.


அதற்கு, “ம்…” என்றவளுக்கு அதற்கு மேல் எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. உதடுகள் இரண்டும் அந்தளவிற்கு தந்தியடித்தன. அதில் அதை மெல்ல கடித்து அடக்கியப்படி அவள் அவனை பார்க்கவும்.


ஈத்தனுக்கு, குறிஞ்சியின் இந்த பரிணாமங்கள் அனைத்தும் மிகவும் புதிதாக இருந்தன. எத்தனையோ பெண்களை தொழில் ரீதியாக கடந்து வந்து இருக்கின்றான். அதில் யாருமே இப்படி இருந்தது கிடையாது. ஏன் குறிஞ்சியுடனே கூட இருந்து இருக்கின்றானே. அப்பொழுதெல்லாம் அவள் இப்படி இல்லையே, என்று நினைத்தவனுக்கு, ‘நானும் தான் இப்படி அவளுடன் இருந்தது இல்லை’ என்பது தோன்ற…


மெல்லிய புன்னகை அவன் இதழ்களின் ஓரம்‌. 


குறிஞ்சியின் நாசி நுனியை பற்றி மெல்ல அசைத்தவன், “வருஷத்துக்கு, ஒரு குழந்தை பெத்து தரேன்னு எல்லாம் எந்த தைரியத்தில் சொன்ன கேர்ள் நீ”, என்று கேட்க.


அவன் குரலில் இருந்த கேலியை உணர்ந்து, அவளின் நாணம் மீதூறும் விழிகள், ‘அதுவும், இதுவும் ஒன்றா’ என்ற கேள்வியை சுமந்துகொண்டு அவனை பார்க்கவும்…


ஈத்தனின் இதழ்கள், நொடியும் தாமதிக்காமல் அந்த அஞ்சன விழிகளில் அழுத்தமாக விழுந்து எழுந்தன…


அதில் அவனின் இதழ்களின் மென்மையும், முள் போன்ற மீசை தாடி ரோமங்களின் அழுத்தமும், ஒருசேர தந்த வெவ்வேறு உணர்வுகள்…


சடுதியில் அவள் கண்களில் தொடங்கி உடல் முழுவதும் பரவி, தேகம் மொத்தத்தையும் குறுகுறுக்க செய்து, நிற்க கூட முடியாதவாறு அவளை பலமிழக்க செய்ய…


துவளும் கால்களை முடிந்தளவு அழுந்த நிலத்தில் ஊன்றி நின்று தன்னை நிலைப்படுத்தியவள்…


அதற்கு மேல் பொறுக்க முடியாது வாய் திறந்து, “உங்களுக்கு இன்னைக்கு என்னமோ ஆகிடுச்சு…” என்றுவிட்டிருந்தாள் ஈத்தனை பார்த்து.


அதற்கு, “ஆமாம்… எனக்கு என்னமோ ஆகிடுச்சு… எல்லாம் உன்னால் தான்…”, என்றவன், அவளை மேலும் நெருங்கி, “நான் உன்னை ஒன்னும் பண்ணாமலையே, நீ ஓவரா ரியாக்ட் செய்து, என்னை டிரிகர் பண்ணிட்ட…” என்று, காலை அவள் செய்த அலப்பறையை கூற…


‘அப்ப எல்லாம் தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்தாரா’ என்று ஈத்தனின் செயலில் அதிர்ந்த குறிஞ்சி…


கூச்சமும், சங்கடமும் போட்டிப்போட, அவன் முகம் பார்க்க முடியாது, “விடுங்க… ம்…”, என்று மீண்டும் விலக பார்த்தாள்.


ஈத்தனின் கரம் அவளை சுற்றி அழுத்தமாக அரண் அமைத்து, அவளை சிறிதும் விலக விடாது செய்தது.


அதன் பலனாக இருவரிடையே, சிறிய தள்ளு முள்ளு நடந்தேற…


அதில் குறிஞ்சி சற்றும் எதிர்பாராத விதமாக, அவளின் இடையை மறைத்த புடவை நெகிழ்ந்து, அவ்விடத்தை ஈத்தனின் கரம் அழுத்தமாக பிடித்து இருந்தது.


அதனை உணர்ந்த உடனே “என்னங்க” என்று திடுக்கிட்டவள். 


தன் இடுப்பு மடிப்பில் இருந்த ஈத்தனின் கரம் மீது தன் கரத்தினை அழுத்தமாக பதித்து…


“ம்ஹூம்…” என்று அவன் கரத்தை எடுத்துவிட முற்பட.


ஈத்தனின் கரமோ அங்கு சுகமாக குளிர் காய தொடங்கிவிட்டு இருந்தது…


அதில் அவன், “இப்பவும் நான் தொடக்கூடாதா குறிஞ்சி மலர்” என்று கேட்டான்.


நெஞ்சம் முழுவதும் அவன் இருந்தாலும்…


அவன் கைப்பட்டாலே, அவளின் கன்னி உடல் கன்னிவெடியை மிதித்தது போல் ஆகிவிடுவதில்.


அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.


அதற்குள் அவன், “எஸ் ஆர் நோ குறிஞ்சி?” என்று கேட்டு அவளை அவசரப்படுத்த.


அவஸ்தையோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு, அவன் கண்கள் காட்டிய உணர்வில், அப்பட்டமாய் அவன் பிடித்தம் புரிந்தது.


அதில், தன் கண்களை ஒருமுறை மூடி திறந்தவள்.


அவனின் ஆசைக்கு தன்னில் இடம் விட முடிவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்த அவன் கரத்தை, விடாமல் அழுத்தமாக பிடித்து அது இருந்த இடத்திலேயே வைத்து, காற்றிற்கு கூட கேட்காதப்படி அவனுக்கு அவள் அனுமதி வழங்க…


இருவருக்கும் இடையேயான காதல் ஆலாபனைக்கு தொடக்க புள்ளி இனிமையாக வைக்கப்பட்டது.

____________________________


இருவரின் இதயமும் அதிவேகமாக துடித்துக்கொண்டிருக்க…


ஈத்தனின் கரம், ஒரு கட்டத்திற்கு மேல், அவளின் இடையில் இருந்து மெல்ல மத்தியை நோக்கி மிதந்து சென்று, அவள் பிள்ளை சுமந்த இடத்தில் தேங்கி, மொத்தமாக கரைய தொடங்கிவிட…


அவ்வளவு தான் குறிஞ்சி, தன் மென் தேகம் முழுவதும் நடுங்க, தொண்டை குழி மேலும் கீழும் ஓடி திரும்ப, அடிவயிற்றில் உருவாகும் சுக வதைகளை தாங்க முடியாது, மொத்தமாக அவன் மீது சாய்ந்துவிட்டு இருந்தாள்.


இப்பொழுது, அவளின் இதயம் மட்டுமில்லை, அவளின் உடல் கூட அவள் வசமில்லாமல், அவன் வசம் சென்றுவிட்டு இருந்தது… 


“மார்ஷ்மெலோ மாதிரி இருக்க கேர்ள். சோ சாஃப்ட் அண்ட் ஃப்ளஃபி(fluffy). காட்…” என்றவன். 


அவள் உடலெங்கும் கமழும், மைசூர் மல்லி மற்றும் தினமும் அவள் தாலி கயிற்றில் பூசும் மஞ்சளின் நறுமணத்தை தாண்டி, பட்டு புடவை மணத்துடன் கலந்து வீசும் அவளுக்கான தனி சுகந்தத்தை ஆழ்ந்து நுகர்ந்து… 


“யூ ஸ்மெல் அமேசிங்” என்று அவள் உச்சியில் தன் இதழ்களை பதிக்க…


சிறு எதிர்ப்புமின்றி, மேலும் அவனிடம் சரண் அடைந்தாள் குறிஞ்சி.


அதில் அவளை பத்திரமாக தன்னுடன் சேர்த்து பிடித்துக்கொண்டவன்.


அவளின் முகம் முழுவதும் தன் இதழ்களால் தடம் பதிக்க ஆரம்பித்து, இறுதியில் அவளின் இதழ்களுடன் சென்று இணை சேர்ந்துக்கொண்டான்.


அதில், குறிஞ்சியின் தேகம் மொத்தமும் ஈத்தனின் கரத்தில் கூச்சம் தாங்காமல் குழைய.


அவளுக்கான நேரத்தை கொடுத்து பொறுத்தவன், மெல்ல அவள் இதழ்களின் சுவையை அறிய ஆரம்பிக்கவும், வினாடிகளில் மூச்சுவிட தெரியாமல் தடுமாறியவள்…


பிறகே சைவ முத்தம், அசைவ முத்தமாக மாறுவதை உணர்ந்து…


“அச்சோ…” என்று அவனிடம் இருந்து தன் இதழ்களை அவசரமாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்…


“வாட் கேர்ள்?” என்றான் ஈத்தன் அப்பட்டமான ஏமாற்றத்துடன், நல்ல இசை வெளிவரும் நேரம் தந்தி அறுந்த கதையாகிப்போனதில்.


அதில், “சாரி… சாரி… கோவில் போக போறோமே… அதான் நிறுத்தினேன்… மன்னிச்சிடுங்க…” என்றாள் குறிஞ்சி பயத்துடன் கெஞ்சும் குரலில்.


அவளின் அந்த குரலில் உடனே சுதாரித்து, “ஹே! இட்ஸ் நத்திங். நான் ஓகே தான். கூல்” என்ற ஈத்தன்.


அவளின் மனநிலையை மாற்ற…


“உனக்கு தான், உன்னோட கவிதையை முடிக்க ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்” என்றவன், “ம்… பரவாயில்லை. டெம்பிள் போயிட்டு வந்து ஹெல்ப் பண்றேன்” என்று தன் கண்களை சிமிட்டி கூற.


அவன் கூறுவது புரியாமல், ‘என்ன கவிதை? என்ன ஹெல்ப்?’ என்று குறிஞ்சி விழிக்க…


அதற்கு ஈத்தன் பதிலாக,


“ஒவ்வொரு வீண்மீனாக தேடிச்செல்கிறேன்…!

என்னவனின் கண்களின் ஒளியைத் தேடி…!


ஒவ்வொரு பறவையாக தேடிச் செல்கிறேன்…!

என்னவனின் மயக்கும் குரலைத் தேடி…!


ஒவ்வொரு இறகாக தேடிச்செல்கிறேன்…!

என்னவனின் மென்மையைத் தேடி…!


ஒவ்வொரு மலராக தேடிச்செல்கிறேன்…!

என்னவனின் வாசத்தைத் தேடி…!


இதில் எதை நான் தேடிச் செல்ல…?

என்னவனின் நான் அறியா இதழ்களின் சுவையை அறிய…!” 


என்று, அவள் எழுதி வைத்த கவிதையை, அவளுக்கு வார்த்தை மாறாமல் அவன் நினைவூட்ட…


‘ஹையோ! இவர் அதையெல்லாம் கூட எடுத்து வாசித்து விட்டாரா?’ என்று அதிர்ந்த குறிஞ்சி, தன் முகத்தை, தன் இருகரம் கொண்டு மூடி மறைத்துக்கொள்ள…


விட்டால் அவளையே மொத்தமாக வாசித்து விடும் எண்ணத்துடன் இருந்தவன்.


விரிந்த புன்னகையுடன் அவளை அப்படியே கட்டிக்கொண்டான்.


பிறகு ஒருசில வினாடிகளில், அவளை விடுவித்துவிட்டு அவன் அவசரமாக விலகிக்கொள்ள.


“ஐ யம் பேக்…”, என்று ஈஷா, மலர் பந்துகளுடன் அங்கு வந்து சேர்ந்து இருந்தாள்.

____________________________

Next chapter 📍

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/10/43.html

கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story