சங்கீதம்-44
அத்தியாயம் -44 பூமியினை மெல்ல இருள் அணைத்து, அந்நாளைய இரவினை அறிவித்துவிட்டிருக்க! ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் முழுவதும் மெல்லிய இசையாலும், செயற்கை விளக்குகளாலும், பல்வேறு சுகந்தமான நறுமணங்களினாலும் நிறைந்து சொர்க்கமாக மாறிவிட்டு இருந்தது. சீராக வெட்டப்பட்ட பச்சை புல்வெளியில், இளம் ரோஜா, ஊதா, பீச், நீலம், வெள்ளை போன்ற – பல இள வண்ண மலர்கள் கொண்டு மிகப்பெரிய ஆர்ச் வடிவ நுழைவு வாயில், “Aurora Bloom Gate” என்ற நியான் விளக்குகளால் ஆன பெயர் பலகையை தாங்கிக்கொண்டு, நீளமாக அமைக்கப்பட்டு இருக்க… அதனை பார்த்து, “ஓ மை காட்! பேபிஇஇஇ, லவ் யூ சோ மச்! அம்மாஆஆ லவ் யூ சோ மச்!” என்று குதித்த ஈஷா, வானை முட்டும் மகிழ்ச்சியுடன் தன் வெண்ணிற பார்ட்டி கவுனை, இரண்டு பக்கமும் லேசாக பற்றியப்படி, தேவதையாக அந்த நுழைவுவாயிலினுள் நுழைந்து நடந்துச்செல்ல… அவள் உடைக்கு ஏற்ப, வெண்ணிற ஷிஃபான் பார்ட்டி வியர் புடவையில் தயாராகியிருந்த குறிஞ்சியும், வெண்ணிற ஃபார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட்டில் இருந்த ஈத்தனும் மென் புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தனர். ஈஷா பிறந்தது முதல், இப்பொழுது வரை எடுத்த புகைப்படங்களில்...