சங்கீதம்-44
அத்தியாயம் -44
பூமியினை மெல்ல இருள் அணைத்து, அந்நாளைய இரவினை அறிவித்துவிட்டிருக்க!
ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் முழுவதும் மெல்லிய இசையாலும், செயற்கை விளக்குகளாலும், பல்வேறு சுகந்தமான நறுமணங்களினாலும் நிறைந்து சொர்க்கமாக மாறிவிட்டு இருந்தது.
சீராக வெட்டப்பட்ட பச்சை புல்வெளியில், இளம் ரோஜா, ஊதா, பீச், நீலம், வெள்ளை போன்ற – பல இள வண்ண மலர்கள் கொண்டு மிகப்பெரிய ஆர்ச் வடிவ நுழைவு வாயில்,
“Aurora Bloom Gate” என்ற நியான் விளக்குகளால் ஆன பெயர் பலகையை தாங்கிக்கொண்டு, நீளமாக அமைக்கப்பட்டு இருக்க…
அதனை பார்த்து, “ஓ மை காட்! பேபிஇஇஇ, லவ் யூ சோ மச்! அம்மாஆஆ லவ் யூ சோ மச்!” என்று குதித்த ஈஷா,
வானை முட்டும் மகிழ்ச்சியுடன் தன் வெண்ணிற பார்ட்டி கவுனை, இரண்டு பக்கமும் லேசாக பற்றியப்படி, தேவதையாக அந்த நுழைவுவாயிலினுள் நுழைந்து நடந்துச்செல்ல…
அவள் உடைக்கு ஏற்ப, வெண்ணிற ஷிஃபான் பார்ட்டி வியர் புடவையில் தயாராகியிருந்த குறிஞ்சியும், வெண்ணிற ஃபார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட்டில் இருந்த ஈத்தனும் மென் புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தனர்.
ஈஷா பிறந்தது முதல், இப்பொழுது வரை எடுத்த புகைப்படங்களில் பிரத்யேகமானவைகள் அனைத்தும்… வயது வாரியாக, ஒன்றன் பின் ஒன்றாக மெல்லிய நூல் போன்ற கயிற்றில் சிறிய பல்புகளுடன் பொருத்தப்பட்டு (Photo String Lights with Clips),
மலர்களால் ஆன அந்த நீண்ட ஆர்ச் வடிவ பாதை முழுவதும்,
அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்க…
கலையில்(Art) அதிக ஆர்வம் கொண்ட ஈஷாவின் கண்கள் அனைத்தையும், “ஓ சோ கியூட்!” என்று அவ்வளவு ஆசையாக உள்வாங்கிக்கொண்டன.
அந்த மலர் நுழைவு வாயிலின் முடிவில், ஒரு திறந்தவெளி உணவு மேஜை, அவர்களுக்கான இரவு விருந்திற்கான உணவுகளை தாங்கிக்கொண்டு காத்திருந்தது.
____________________________
அங்கிருந்த ஒவ்வொரு அலங்காரமும், ஏற்பாடுகளும் ஈத்தனாலும், குறிஞ்சியாலும் ஈஷாவிற்காக செய்யப்பட்டவைகள்.
பொருட்கள் அனைத்தும் மதியம் பக்கம் வந்திறங்கிவிட்டிருக்க…
குறிஞ்சியை அழைத்து என்னென்ன செய்ய போகிறோம் என்பதை கலந்தாலோசித்த ஈத்தன்…
ஈஷாவை வெளியே வரக்கூடாது என்றுவிட்டு, குறிஞ்சியுடன் சேர்ந்து அனைத்தையும் அவ்வளவு நேர்த்தியாக செய்து முடித்து இருந்தான்.
இத்தனை வருடங்கள் இதையெல்லாம் விட்டுவிட்டிருந்த குறிஞ்சி, மகளுக்காக ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆசையாக பார்த்துப் பார்த்து, இஷ்டத்துடன் செய்திருந்தாள்.
மேஜையின் நடுவே, ஈஷா அரோரா என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்ட தாங்கியுடன், குறிஞ்சியால் செய்யப்பட்ட சிறிய வட்ட வடிவ ரெட் வெல்வெட் கேக் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருக்க, அதன் முன்பு போட்டிருந்த நாற்காலியில் ஈஷா சென்று அமர்ந்துக்கொண்டாள்.
அவளுக்கு இரண்டு பக்கங்களிலும் ஈத்தனும், குறிஞ்சியும் அமரவும்.
அங்கிருந்த ஸ்பூனை எடுத்து கேக்கினை எடுத்த ஈஷா, அதனை சுவைப்பார்த்து, “சூப்பர் அம்மா, மெல்ட்டிங்” என்று அந்த தித்திப்பில் கரைந்தவள்… அடுத்து ஈத்தனுக்கும், குறிஞ்சிக்கும் அதனை எடுத்து ஊட்டிவிட…
அழுத்தமாய் அவளின் கன்னங்கள் இரண்டிலும், ஈத்தன், குறிஞ்சியின் இதழ்கள் முத்தம் வைத்தன.
பிறகு, அந்த ஸ்பூனை வாங்கிய ஈத்தன், ஈஷாவிற்கும் குறிஞ்சிக்கும் கேக்கினை எடுத்து ஊட்டிவிட…
அடுத்து குறிஞ்சியும் அதேப்போல் அவர்களுக்கு ஆசையாக ஊட்டிவிட… என்று ஒவ்வொரு உணவாக எடுத்து அவர்கள் மூவரும் பகிர்ந்துண்ண…
அந்த தோட்டம் முழுவதும், மெல்ல அவர்களின் அன்பின் அலைகளில் நிரம்பி ததும்பியது!
____________________________
ஈத்தன், அவர்கள் மூவரும் சேர்ந்து படம் பார்க்கும் வண்ணம், மூவி நைட்டிற்கு அந்த தோட்டத்திலேயே நீச்சல் குளத்திற்கு அருகில் ஸ்கீரின், ப்ரொஜெக்டர், சவுண்ட் சிஸ்டம் என்று அனைத்தையும் எடுத்துவந்து செட் செய்துவிட்டு… படுக்கையையும் போட்டுவிட்டு வந்தவன்…
இரவு நேர கடற்காற்றின் குளிருக்கு இதமாக, கட்டைகள் வைத்து அவன் மூட்டிவிட்டிருந்த நெருப்பின் அருகே அமர்ந்திருந்த ஈஷாவின் பக்கத்தில் தரையிலேயே அமர்ந்து, “அம்மா எங்கே டா பேபி” என்று கேட்கவும்.
அங்கிருந்த உணவு பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று உள்ளே வைத்திருந்த குறிஞ்சி,
உடைமாற்றிக்கொண்டு வீட்டிற்குள் இருந்து வெளிவரவும் சரியாக இருந்தது.
“இதோ பேபி, அம்மா வந்துட்டாங்க” என்று காட்டிய ஈஷா, “மார்ஷ்மெல்லோஸ் இருந்தா இந்த செட்டப்க்கு நல்லா இருக்கும் இல்ல பேபி” என்றாள் ஈத்தனிடம்…
அதற்கு, “கூலர் பாக்ஸ்ல பாருங்க பேபி. மார்ஷ்மெல்லோஸ், சாக்லேட் பார்ஸ், குக்கீஸ் எல்லாமே இருக்கு” என்று ஈத்தன் கூற…
மறுகணமே, “ஹே சூப்பர்” என்று எழுந்துக்கொண்ட ஈஷா…
அப்பொழுது தான் அங்கு வந்து சேர்ந்த குறிஞ்சியிடம், “அம்மா… நான் மார்ஷ்மெல்லோஸ் எடுத்துட்டு வரேன். நீங்க பேபிக்கூட உட்காருங்க” என்றுவிட்டு, வீட்டை நோக்கி ஓடி விடவும்…
‘மார்ஷ்மெல்லோவா?’ என்று அந்த வார்த்தைகளில் உடனே கவனமான குறிஞ்சி…
‘காலையில் கூட இவர் அந்த பெயரை சொன்னார் தானே’, என்று ஈத்தன் அவள் இடையை பற்றிய தருணத்தை ரகசியமாக மீட்டு பார்த்தவள்…
‘மார்ஷ்மெல்லோ என்றால் என்ன? ஏதேனும் பொருளா? ஃபோனில் பார்க்க வேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டோமே’ என்று எண்ணியப்படியே ஈத்தன் அருகில் அமர்ந்துக்கொள்ள.
“திங்க்ஸ் எடுத்துட்டு போக நான் ஹெல்ப் பண்றேன் சொன்னேன் இல்ல குறிஞ்சி” என்ற ஈத்தன்…
“ஏன் எல்லாத்தையும் நீயே தனியா செய்த” என்று அவளிடம் கேட்க…
அவளிடம் பதில் எதுவும் இல்லை. பிறகு தான் அவளின் அசையாத விழிகளை ஈத்தன் கவனித்தான்.
அதில், “ஹேய் கேர்ள்” என்று, தன் கரத்தினை அவளின் விழிகள் முன்பு ஆட்ட.
சட்டென்று தன் கண்களை சிமிட்டி, நிகழ்காலம் வந்த குறிஞ்சி, ஈத்தனை என்னவென்று பார்க்கவும்.
அவளின் ஒரு கன்னத்தை மொத்தமாக பிடித்து தன்னருகே இழுத்த ஈத்தன், “குறிஞ்சி மலருக்கு என்ன யோசனை?” என்று கேட்க.
“அச்சோ! என் கன்னம்…” என்று தன் கன்னத்தினை பிடித்திருந்தவன் கரம் மீது, தன் கரத்தினை குறிஞ்சி வைத்துக்கொள்ளவும்…
அப்படியே அவள் கன்னத்தினை பிடித்து “நல்லா மார்ஷ்மெல்லோ மாதிரி இருக்கு” என்று ஒரு அழுத்து
அழுத்திவிட்ட ஈத்தன், அவளை நெருங்கி அமர்ந்து, “என்ன யோசனைன்னு கேட்டேன் கேர்ள்” என்றுக்கேட்க.
“ம்… மார்ஷ்மெல்லோனா என்னவா இருக்கும்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்ற குறிஞ்சி,
அதே வேகத்தில் “காலையில நீங்க என்னை” என்று அதனை அப்படியே சொல்ல வந்து, ‘ஸ்… என்ன பேசுகிறோம்’ என்று உடனே சுதாரித்து அதை அப்படியே நிறுத்திவிட்டு, “இப்பக்கூட சொன்னீங்களே” என்று சமாளிக்க…
அவனுக்கு தெரியாமல் போகுமா என்ன அது.
“You are too baby குறிஞ்சி மலர்” என்ற ஈத்தன், தன் முன்னெற்றி சிகையை கோதியவண்ணம் திரும்பி பின்புறம் பார்த்துவிட்டு…
மீண்டும் அவளின் கன்னத்தினை பிடித்து தன்னருகே இழுத்து அழுத்தியவன், “மார்ஷ்மெல்லோக்கு மார்ஷ்மெல்லோவ தெரியலையா” என்று மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுத்தப்படியே, மேலும் அவளை நெருங்கி அவளின் நாசி நுனியில் முத்தம் வைக்க…
ஈத்தனின் இதழ்கள் பட்ட இடம் ஜில்லென்று குறிஞ்சியை தகிக்க செய்ய, “ம்…” என்றவளுக்கு, ஏறி இறங்கும் தொண்டைக்குழிக்குள் இருந்து, அதற்கு மேல் பேச்சே வெளி வரவில்லை.
அவனின் பர்ஃபியூம் மணத்தில், தானாக அவள் கண்களும் வேறு மூடிக்கொண்டுவிட…
ஈத்தனின் இதழ் ஓரங்கள் புன்னகையில் தவழ்ந்தன!
“மை ஸ்வீட் மார்ஷ்மெல்லோ” என்றவன், அவளின் நல்ல சதைப்பற்றான கன்னங்களை மீண்டும் பிடித்து அழுத்தி, சிவக்க வைத்து,
“பேபி தூங்கின பிறகு, மீதி கவிதையை எழுதி முடிச்சீடலாமா கேர்ள்” என்று சிறு கூச்சமுமின்றி அவளிடம் கேட்டுவைக்க…
அதற்கு மேல் ஏன் குறிஞ்சி அங்கிருக்க போகிறாள்.
உடல் முழுவதும் ஒருயிடம் விடாமல் அவன் குரலுக்கே நடக்கும் ரசாயன மற்றாத்தை தாங்க முடியாது…
எழுந்து ஓடிவிட பார்க்க…
ஈஷா மார்ஷ்மெல்லோக்கலுடன் வந்து சேர்ந்து அவளை போகவிடாமல் செய்து இருந்தாள்.
____________________________
வெண்ணிறத்தில் பெரிய பெரிய பந்துப்போல் இருந்ததை வெளியே எடுத்த ஈஷா…
“ஓ குண்டு மார்ஷ்மெல்லோஸ்!” என்று சாக்லேட்டுடன் சேர்த்து கிரில் கம்பியில் சூடுப்படுத்த அதனை சொருகி எடுத்துச்செல்லவும்…
‘இதுதானா மார்ஷ்மெல்லோ! சாப்பிடும் பொருளா! இதுப்போலவா நாம் இருக்கிறோம். என்ன சம்மந்தம் இதுக்கும் நமக்கும்.’ என்று ஆர்வமாக அதனை பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சி…
ஈஷாவின் ‘குண்டு மார்ஷ்மெல்லோஸ்’ என்ற வார்த்தையில், தன் கண்கள் இரண்டினையும் சுருக்கியவள், அப்படியே திரும்பி, “நான் குண்டா இருக்கேன்னு சொல்றீங்களா” என்று ஈத்தனிடம் நேரடியாக கேட்டு இருந்தாள்.
அதில், “வாட்…!” என்று அதிர்ந்த ஈத்தன், பிறகே ஈஷா அப்படி சொன்னதால் தான் கேட்கின்றாள் என்பதை புரிந்துக்கொண்டு…
“ஹேய் க்ரேசி! நீ அழகா, இதமா, லவ்லியா இருக்கேன்னு சொல்றேன் கேர்ள்” என்று அவளின் நெஞ்சில் மழைச்சாரலை மொத்தமாக பொழிந்தவன், மெல்ல தன் பார்வையை அவளில் சென்று நிறுத்திய இடம், குறிஞ்சியின் உள்ளே ஆயிரம் மத்தாப்புகளை சடுதியில் கொளுத்தி போட்டு இருந்தன…
அவளின் கரம் ஓடிச்சென்று இடையில் புடவை சரியாக அதன் பணியை செய்கிறதா என்று தொட்டுப் பார்த்து பரிசோதனை செய்தது…
அதில், அப்பொழுது தான் அவள் புடவையை மாற்றிவிட்டு, நைட் ட்ரஸ் அணிந்து இருப்பதே அவளுக்கு உரைத்தது.
தன்னை மீறி, நிம்மதியாக ஒரு பெரு மூச்சினை அவள் விடவும்…
“நான் ஒன்னும் பார்க்கலைன்னதும், குறிஞ்சி மலருக்கு ரொம்ப ஹேப்பி போலவே” என்று லேசாக அவளை முறைத்துப்பார்த்து கூறிய ஈத்தன்…
“ஆனால்…” என்றப்படியே அவளின் காதோரம் சரிந்து…
“பார்க்கலைனாலும் என்னால் அதை ஃபீல் பண்ண முடியுதே கேர்ள். இப்ப என்ன பண்றது. ப்ச்…” என்று வருத்தப்பட…
அவன் வருத்தத்தில், மொத்தமாக செங்கொழுந்தாகி, மூச்சு வாங்க அமர்ந்து இருந்தாள் குறிஞ்சி…
“ஐயோ… இவரா இது” என்று அதிர்ந்தவள்…
“எப்படியெல்லாம் பேசுகிறார்” என்று கூச்சத்தில் தன் கண்களை மூடி மூடி திறக்க…
ஈத்தனின் பளபளக்கும் விழிகளோ, ‘இன்னும் கூட எனக்கு பேச வரும்’ என்றன அவளிடம்…
அதில் உச்சி முதல் உள்ளங்கால் வரை குறிஞ்சிக்கு அப்படியொரு சிலிர்ப்பு…
எத்தனை ஆயிரம் இரவுகள் ‘தான் ஈத்தனின் கண்களை கவரவில்லையே… அவனை கவரும் வண்ணம் தான் இல்லையோ?’ என்று நினைத்து வருந்தி இருப்பாள்…
இன்றோ அவனின் கண்கள் அவளிடம் மையலில் குலைந்து குழைந்து ஒட்டிக்கொண்டுவிட…
‘இப்பொழுது நான் சந்தோஷப்படுவதா? இல்லை வெட்கப்படுவதா?’ என்று புரியாமல்… இரண்டுக்கும் இடையில் மாறி மாறி அவள் ஓடிக்கொண்டிருக்க…
அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் ஈஷா அவர்கள் இருவருக்கும்… இரண்டு பெரிய சைஸ் மார்ஷ்மெல்லோவை சுட்டு எடுத்து வந்து உண்ண தந்து இருந்தாள்.
உடன் குறிஞ்சிக்கு அதை எப்படி உண்ண வேண்டும் என்றும் ஈஷா கற்று தந்தாள்.
“ஆ காட்டுங்க அம்மா” என்று குறிஞ்சியின் வாயில் மொத்தமாக அந்த மார்ஷ்மெல்லோவை வைத்துவிட்ட ஈஷா…
“அப்படியே பொறுமையா சாப்பிடுங்க ம்மா… செம ஃபீல்லா இருக்கும்”, என்றுக்கூற…
அதன் படியே குறிஞ்சி அதை உண்ண…
பஞ்சு தான் மென்மை என்று இத்தனை நாள் நினைத்திருந்தவளின் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது.
அதைவிட மென்மையாக இந்த மார்ஷ்மெல்லோ இருந்தது. மேலும் தொடும் இடமெல்லாம் அமிழ்ந்து உள்வாங்கிக்கொண்டு இனிப்பினை வாரி வழங்க…
குறிஞ்சியின் காதினுள் ஈத்தன் கூறிய, “அழகா, இதமா, லவ்லியா” ஒலித்து அவளை குழைத்தெடுத்தது…
அதில் அவள் அன்னிச்சையாக ஈத்தனையும், அவன் கையில் இருக்கும் மார்ஷ்மெல்லோவையும் திரும்பி பார்க்க…
ரசனைக்காரன் அவனும், அவளை தான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
குறிஞ்சி பார்ப்பதை ஈத்தனை பார்த்து, ஈஷாவும் திரும்பி ஈத்தனை பார்த்தாள்.
“பேபி நீங்க என்ன இன்னும் சாப்பிடாமல் இருக்கீங்க? சூடு போயிடும். சீக்கிரம் சாப்பிடுங்க” என்று உந்த…
வேறுவழியின்றி, குறிஞ்சியை பார்த்தப்படியே தன் வாயிற்குள் அந்த மார்ஷ்மெல்லோவை போட்ட ஈத்தன்…
ஈஷா அங்கு இருப்பதால்…
“காட்… ஐ ஹேட் மை மைண்ட்”, என்று மெல்ல முனங்கியப்படியே உடனே எழுந்துக்கொள்ள…
குறிஞ்சிக்கு அவனின் மன வோட்டம் புரிந்து… பயங்கரமாக புரையேறி இருந்தது…
____________________________
அடுத்த அத்தியாயம்:
Super sis
பதிலளிநீக்குWow, amazing expression of feelings.
பதிலளிநீக்குWriter epovum pola ipovum story super... Neenga and unga family ku Elam ok thana. Health issue lam sari agiruchu thana... Nalla irukengala.. epovum pola samar ah inum rasika vechu irukenga and kurinji ah inum alagha mathitenga.. eesha baby ah nan enoda imagination la romba rasikiren.. she is soo cute.. thanks for these episodes
பதிலளிநீக்குWhat about further updates?? When can we expect next updates. Pls inform
பதிலளிநீக்குWaiting for the next update sis .... please konjam seekirama upload pannunga....
பதிலளிநீக்கு