சங்கீத வானில் ஓர் அந்திப்போர் (அத்தியாயம் -43)
அத்தியாயம் -43
ஈத்தனின் வீட்டில் இருந்து கிளம்பிய கார், ஒருசில நிமிடங்களிலேயே அவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த சிறிய தேவாலயத்தின் முன்பு சென்று நின்றது.
முன் பக்க சீட்டில் இருந்து இறங்கிய ஈத்தன், ஏற்கனவே அங்கு வந்துவிட்ட அவனுடைய பாதுகாவலர்களிடம், ஏற்பாடுகள் குறித்து பேசி, பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து, குறிஞ்சி பக்க கார் கதவை திறக்க…
உடனே இறங்கப்பார்த்தாள் குறிஞ்சி.
அதில், “ஒன் செக்” என்று அவளை இறங்கவிடாது நிறுத்திய ஈத்தன், “உனக்கு கம்ஃபர்ட்னா மட்டும் சர்ச் உள்ளே வா கேர்ள். இல்லை நீ கார்லயே இருக்கலாம்”, என்றவன், “உன்கூட செக்யூரிட்டீஸ் இருப்பாங்க. ஜஸ்ட் டென் மினிட்ஸ். நானும், பேபியும் போயிட்டு வந்துடறோம். பிரச்சனை கிடையாது கேர்ள்” என்றான், அவள் மீது தப்பி தவறிக்கூட தான் பின்பற்றுவதை திணித்துவிட கூடாது என்று வெகு கவனமாக.
அதை உணர்ந்து பெருமிதம் கொண்டவள், “சர்ச் போறது, எனக்கு காலேஜ் அப்ப இருந்தே பழக்கம் தான்ங்க. கடவுள் எங்க இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் எனக்கு ஒன்னுதான், நான் கும்பிடுவேன்” என்று தன் எண்ணத்தை கூறிய குறிஞ்சி, “நானும் வரேன்”, என்றாள் அவன் நீல விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அதில், “கூல்! வா போகலாம்” என்று அவள் கன்னம் தட்டிய ஈத்தன், அவள் கைப்பிடித்து இறக்கிவிட்டு…
“பேபி, நீங்களும் இந்த பக்கமே வாங்க டா” என்று ஈஷாவையும் இறங்க வைத்து, இருவரையும் தன் கைப்பிடியிலேயே உள்ளே அழைத்துச்சென்றான்.
நகரத்தை விட்டு தள்ளி அமைந்திருந்த தேவாலயம் என்பதாலும், வார நாள் என்பதாலும், பெரிதாக மக்கள் நடமாட்டம் அச்சமயம் அங்கு இல்லை.
அதில், எவ்வித ஆர்பாட்டமும் இல்லாது அந்த காலை நேரத்தை, அமைதியாக அந்த தேவாலயத்தில் அனுபவித்தவர்கள், மார்னிங் ப்ரேயரை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள்.
அடுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணித்த கார், குறிஞ்சி கர்ப்பமாக இருந்த சமயம், அவளை ஈத்தன் அழைத்துச் சென்றிருந்த, சிவன் கோவில் முன்பு சென்று நின்று இருந்தது.
பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, செல்லும் இடத்தை சரியாக குறிஞ்சி அனுமானித்துவிட்டு இருக்க, அவள் கணிப்பு சிறிதும் தவறாகவில்லை.
____________________________
காரில் இருந்து இறங்கிய ஈஷா, “ஓ பேபி! இந்த இடம் எவ்ளோ பசுமையா, லவ்லியா இருக்கு. வாவ்!” என்றப்படியே சுற்றி பார்த்தவள், நெற்பயிரை தீண்டிவிட்டு, அவளை வந்து தீண்டிய தென்றலின் மணத்தினையும், குளுமையினையும், தன்னிரு கன்னத்திலும் கைகளை பதித்து, ஆழ்ந்து சுவாசித்து அனுபவிக்க.
“எஸ் பேபி! சோ ஃபிரஷ்” என்ற ஈத்தன்… அவனும், குறிஞ்சியும் முதல்முறை இங்கு வந்த தருணத்தினையும், குறிஞ்சியின் ஆசைகளையும் ஈஷாவிடம் கூற…
“இன்ட்ரெஸ்டிங்க் பேபி…”, என்று ஆர்வமான ஈஷா, அதைக்குறித்து குறிஞ்சியிடம் விசாரித்தாள்.
அதில் அவளுக்கு பதிலளித்தப்படியே, காற்றில் அலைப்பாயும் ஈஷாவின் கூந்தலை குறிஞ்சி சரி செய்துவிட.
“ஹேப்பி பர்த்டே ஈஷா பாப்பா!” என்றப்படியே, அங்கு வந்து சேர்ந்தான் சக்தி.
“ஹே! நீங்களும் இங்கதான் இருக்கீங்களா” என்ற ஈஷாவிடம், “ஆமாம் பாப்பா” என்ற சக்தி, மிகப்பெரிய பரிசுப்பெட்டியை பிறந்தநாளுக்காக அவளுக்கு தந்தான்.
அதில், ஈத்தனை ஒருகணம் திரும்பி பார்த்த ஈஷா, அவன் கண் அசைவில், “தேங்க் யூ சோ மச், ப்ரோ!” என்று புன்னகையுடன் சக்தி தந்த பரிசினை வாங்கிக்கொண்டாள்.
“நீங்க சொன்னப்படி எல்லாமே பக்காவா ரெடி தலைவரே. நீங்க வந்தீங்கனா பூஜையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று ஈத்தனிடம் கூறிய சக்தி, அங்கு நின்றிருந்த குறிஞ்சியிடம், “எப்படி இருக்கீங்க மேம்” என்று அவளுக்கான மரியாதையை தந்து விசாரிக்க தவறவில்லை.
செக்யூரிட்டி வந்து ஈஷா கையில் இருந்த பரிசு பெட்டியை வாங்கிக்கொண்டு செல்ல, அனைவரும் வயல் வரப்பின் மூலம் கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
____________________________
சிறிய கோவிலாக இருந்தாலும், ஊர் பொது கோவில் என்பதால், ஊர் தலைவரிடம் முறைப்படி அனுமதி வாங்கி தான், ஈத்தன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தான்.
கோவிலின் பழமை தன்மையை சிறிதும் குலைக்கா வண்ணம், கோவிலை சுத்தம் செய்து, சுற்றி வாழை, மாங்கொத்து, பூ தோரணங்கள் என்று கட்டி, கோலம் போட்டு கிராமத்திற்கே உரிய மரபு வழியில் அக்கோவிலை தயார் செய்திருந்தனர்.
அப்பகுதி விவசாய மக்கள் சிலர், முன்தினமே இதனை கவனித்து, சலசலக்க தொடங்கியிருக்க…
காலையே, ‘யார் என்னவென்று பார்க்கவே’ கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்து மொத்தமாக கூடிவிட்டு இருந்தனர்.
அதை அறிந்த ஈத்தன், அவர்கள் அனைவருக்கும் பூஜைக்கு அழைப்பு விடுக்க கூறிவிட்டு இருந்தான்.
உடன் அங்கு அருகிலேயே உணவு உண்ணும் பந்தல் போட்டு, அவர்கள் அனைவருக்கும், கேட்டரிங் மூலம் சைவ விருந்தும் கொண்டு வந்து பரிமாற கூறியிருக்க…
ஈஷாவின் பிறந்தநாள், ஒவ்வொரு வினாடியும் அவ்வளவு அழகாக நகர்ந்து கொண்டு இருந்தது.
ஈத்தனை பார்த்ததும் அடையாளம் கண்டுவிட்டவர்கள், ஓடிவந்து அவனை சூழ்ந்துக்கொள்ள…
வினாடிகளில் குறிஞ்சியையும், ஈஷாவையும் பாதுகாவலர்களின் பாதுகாப்பு வட்டத்திற்குள் நிற்க வைத்துவிட்டு இருந்தான் ஈத்தன்.
மொத்தமாகவே 100 பேர் உள் தான் இருப்பார்கள் என்பதால்… சமாளிப்பது ஒன்றும் பெரிதாக கடினமாக இல்லை…
முடிந்தளவு அனைவரிடமும் பேசிய ஈத்தன், அவர்களின் ஃபோனில் செல்ஃபியும் எடுத்துக்கொடுத்து, ‘பூஜை முடிந்த பிறகு மீண்டும் பேசலாம்’, என்றவன், ‘தற்போதைக்கு யாரும் எடுத்த இந்த புகைப்படங்களையோ, காணொளிகளையோ எங்கும் பகிர வேண்டாம். தேவையில்லாமல் கூட்டம் கூடி, பிரச்சனை ஆகிடுவிடும்’ என்ற கோரிக்கையை வைத்துவிட்டு… ஈஷாவையும், குறிஞ்சியையும் அழைத்துக்கொண்டு கோவில் உள் செல்ல…
அதன் பின்னர், யாரும் சிறு தொந்தரவு கூட அவர்களுக்கு தரவில்லை…
பூசாரி அபிஷேகம் செய்து, அர்ச்சனையை முடித்து, ஓங்கிய மணி ஓசையுடன் தீபாராதனையை தொடங்கவும்…
கற்பூரத்தின் ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்த சிவனை, கண் சிமிட்டாமல் பார்த்த குறிஞ்சியின் மனம் முழுவதும் அப்படி ஒரு அமைதி பரவி நிறைத்தது!
ஈத்தனும், ஈஷாவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்று எப்பொழுதும் போல் வேண்டிக்கொண்டவளிடம்…
பூசாரி முதலில் தீபாராதனையை கொண்டுவந்து வணங்க காட்டினார்.
அதைத்தொட்டு அருகில் இருந்த ஈஷாவிற்கு முதலில் வைத்த குறிஞ்சி… ஈத்தனை பார்க்கவும்…
தானாக அவளின் உயரத்திற்கு குனிந்து இருந்தான் ஈத்தன்…
அதில் அவனுக்கும் தீபாராதனையை தொட்டு வைத்தவள்… தானும் தொட்டு வணங்கி முடிக்க…
பூசாரி, ஈஷாவிற்கு விபூதி வைத்து, கையில் சாமி கயிறு கட்டிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்…
ஈத்தனுக்கும் அதையே செய்துவிட்டு, “ஐயா உங்க சம்சாரத்துக்கு பூவும், பொட்டும் நீங்க வச்சி விடுங்க”, என்று சிவனிடம் இருந்து எடுத்துவந்து தர.
குறிஞ்சியின் மனம் முழுவதும் அப்படியொரு நெகிழ்ச்சியான உணர்வு…
அது, அவள் நெற்றியில் குங்குமம் வைக்கும் ஈத்தனுக்குள்ளும் பெரும் இதத்தை கடத்திவிட்டது.
அதில் அவளை பார்த்து தன் கண்களை சிமிட்டியவன், அவள் கூந்தலில் பூவை வைத்துவிட்டான்.
திருமணத்தின் போதும் கூட இதையெல்லாம் அவன் அவளுக்கு செய்திருந்தான் தான். ஆனால் அன்று, இருவருக்குமே இந்த உறவு ஒரு முடிவில்லா தொடர்கதை என்ற நினைப்பு சிறிதும் இல்லாததால்… மனதில் எதுவும் நிற்கவில்லை…
சாங்கியம், சடங்குகள் கூட இருமனம் ஒன்று சேர்ந்து செய்தால் தானே உயிர் பெரும்!
____________________________
பூசாரி, மற்றவர்களுக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் கொடுக்க என்று சென்றுவிட, இவர்கள் மூவரும் அங்கேயே அமர்ந்துவிட்டு இருந்தனர்.
அப்பொழுது, “பேபி கொஞ்சம் ஜூஸ் குடிக்கறீங்களா. பசிக்கலையா உங்களுக்கு. டைம் ஆகிடுச்சே” என்று ஈஷாவிடம் பேசிக்கொண்டிருந்த ஈத்தனையே, குறிஞ்சி கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க…
பழரசத்தை கொண்டு வர செய்து, ஈஷாவிற்கு கொடுத்த ஈத்தன், அவள் குடிக்க ஆரம்பிக்கவும்…
குறிஞ்சி பக்கம் திரும்பி, “கோவில்ல இதெல்லாம் மட்டும் பண்ணலாமா குறிஞ்சி மலர்?!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க.
“என்ன பண்ணலாமா?” என்றவளுக்கு, அவனின் கண்களின் சிரிப்பே அது என்னவென்று உணர்த்திவிட்டது.
அதில், “கடவுளே… நான் உங்களை அப்படியெல்லாம் பார்க்கலை…” என்று பதறியடித்துக்கொண்டு குறிஞ்சி கூற...
மேலும் அவள் பக்கம் சாய்ந்தவன், “எப்படி கேர்ள் பார்க்கலை, ம்…?” என்று கிசுகிசுக்க…
அதற்கே, “அச்சோ கோவில்!” என்று அரண்டு சற்று தள்ளி அமர்ந்த குறிஞ்சி, யாரும் இதை கவனித்துவிட போகிறார்கள் என்று பயந்து தன் முகத்தை பெரும் பாடுப்பட்டு அமைதியாக வைத்துக்கொள்ள பார்க்க…
ஈத்தன் வந்த சிரிப்பை அடக்க தவித்துப்போனான்…
‘You are too baby’ என்று மனதிலுள் அவளை ஈத்தன் கொஞ்சிக்கொண்டிருக்க…
வேறுவழியின்றி ஈத்தனை மீண்டும் பார்த்த குறிஞ்சி, “பாப்பாவுக்கு நீங்க எப்ப பரிசு கொடுப்பீங்கன்னு? அவளுக்கு தெரியாம எப்படி உங்கக்கிட்ட கேட்கிறதுன்னு தான், நான் பார்த்துட்டு இருந்தேன்”, என்றவள், “வேறொன்னும் இல்லை” என்று உள்ளே சென்ற சிறு சிணுங்கல் கலந்த குரலில் கூற.
“ஓகே… ஓகே…” என்றவனின் குறும்பும், புத்துணர்ச்சியும் நிறைந்த குரலே குறிஞ்சியை எங்கோ அழைத்துச் செல்லப்பார்த்தது!
____________________________
ஈஷாவிற்கு பிறந்தநாளுக்கு என்று இதுவரை எந்த தனி பொருளையும் வாங்கி வந்து, அவள் கையில் பரிசாக தராது, புது புது அனுபவங்களாகவே அவளுக்கு தந்து பழகிய ஈத்தன்.
“நான் கிஃப்ட் எதுவும் வாங்கலை கேர்ள். எதுவும் வாங்கனும்னா நீ சொல்லு வாங்கிடலாம்”, என்றான் அவளிடம்.
அதில், “என்ன…” என்று அவனை ஆச்சரியமாக பார்த்த குறிஞ்சி, தன் கைப்பையினுள் இருந்த இரண்டு பெட்டிகளை வெளியே எடுத்து அவனிடம் தந்தாள்.
ஒன்றில் ஈஷாவிற்கு தங்க பிரேஸ்லெட்டும், மற்றொன்றில் ஈத்தனுக்கு தங்க காப்பும் இருந்தது.
இரண்டிலும் முருகனுடைய வேலும், மயிலும் சிறியதாக பதித்து, இக்கால முறைக்கு ஏற்ப மார்டனாக செய்திருக்க.
“வாவ் கேர்ள்! வெரி எலிகண்ட் அண்ட் டிவைன் டிசைன்” என்ற ஈத்தனிடம்…
“கோவில்ல வச்சி பாப்பாவுக்கு போட்டுவிடறீங்களா?” என்று குறிஞ்சி கேட்க.
“கண்டிப்பா கேர்ள்”, என்ற ஈத்தன், அவள் ஆசைப்படியே ஈஷாவிற்கு அந்த பிரேஸ்லெட்டை கட்டிவிட்டுவிட…
“ரொம்ப அழகா இருக்கு ம்மா. நான் இதை எப்பவும் கழட்டாமல் போட்டுட்டே இருக்க போறேன்”, என்று தன் கையில் இருந்த பிரேஸ்லெட் டிசைனை முழுவதுமாக பார்த்த ஈஷா, “லவ் யூ ம்மா” என்று குறிஞ்சியின் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தெடுக்க…
“லவ் யூ டூ குட்டிம்மா” என்ற குறிஞ்சி, ஈஷாவை கொஞ்சி முடிக்கும் வரை காத்திருந்த ஈத்தன்,
தன் வலது கரத்தை அவள் முன்பு நீட்டி இருந்தான்.
அதில் அவன் கையை என்னவென்று பார்த்த குறிஞ்சிக்கு, ஏற்கனவே அவன் அணிந்திருந்த பிளாட்டினம் பிரேஸ்லெட் அங்கிருந்து காணாமல் போய் இருந்தது தெரிய… காரணமும் புரிந்து போனது…
பலன் குறிஞ்சியின் முகம் அவளை மீறி விகசிக்க ஆரம்பித்துவிட்டது.
அவன் கைப்பற்றி, அவனுக்காக அவள் வாங்கிய தங்க காப்பை, மென்மையாக அவன் கரத்தினுள் நுழைத்து அணிவித்துவிட்டவள்…
நிமிர்ந்து அவனை ஒருப்பார்வை பார்க்க…
இருவரின் விழிகளும் உறுதியாக சங்கமிக்க தொடங்கி இருந்தன…
____________________________
எவ்வித இடைஞ்சலும் இல்லாமல், கோவிலில் அனைத்தும் திருப்தியாக அமைந்துவிட… ஊர் தலைவருக்கும், அங்கு உதவியாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறி அவர்களுடன் சிறிது நேரம் பேசிய ஈத்தன்,
சக்தியை அழைத்து, அவ்வூரில் அனைத்து வீட்டிற்கும் செல்லும் வகையில் பொது குடிநீர் டேங்கும் அதற்குண்டான பைப் வசதியும் மற்றும் அரசு பள்ளிக்கு புதிதாக கழிப்பறைகளையும் கட்டித்தர தேவையான ஏற்பாடுகளை இன்றே பார்த்து ஆரம்பிக்க கூறிவிட்டு, ஊர் தலைவரிடம் ‘வேறெதுவும் தேவையா என்று நன்கு யோசித்து பிறகு கூட தயங்காமல் கூறுங்கள்’ என்றுவிட்டு விடைப் பெற்றுக்கொண்டவன்…
குறிஞ்சியையும், ஈஷாவையும் அழைத்துக்கொண்டு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு செல்ல…
அங்கு சிகப்பு நிறத்தில், புத்தம் புதிய வெளிநாட்டு கார் ஒன்று நின்று இருந்தது.
அதனை தூரம் இருந்தே கவனித்துவிட்ட ஈஷா, “வாவ் பேபி! நம்மளோடதா” என்று ஆர்வமாக விசாரிக்க…
“ஆமாம் டா பேபி” என்ற ஈத்தன், செக்யூரிட்டி கொண்டுவந்து தந்த சாவியை வாங்கி அவள் கையில் தந்துவிட, சிட்டாக பறந்துவிட்டு இருந்தாள் ஈஷா.
‘முன்பும் இதேப்போன்ற காரை தானே வைத்து இருந்தார்’ என்று மனதினுள் நினைத்தப்படியே, அமைதியாக குறிஞ்சி நடக்க…
அவள் இடையை சுற்றி, தன் ஒற்றை கரத்தை பின்புறம் இருந்து பட்டும் படாமல் படரவிட்ட ஈத்தன், தன் தோளுடன் அவளை சேர்த்தணைத்து…
“காரோட இன்டிரியர் எப்படி இருக்கு பார்த்துட்டு சொல்லு கேர்ள்” என்று இயல்பாக அவளுடன் காரை நோக்கி நடக்க…
சடுதியில் அப்படியொரு குளிர்ச்சி, அந்த கடும் வெயிலிலும் குறிஞ்சிக்குள் பரவியது…
அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், வெயிலின் உபயத்தால் ஈத்தனின் பர்ஃபியூம் வாசத்துடன் கலந்து வீசிய அவனின் ஆண் வாசம் வேறு அவள் நாசியை ஓடிவந்து நிறைக்க… ரகசியமாக சுற்றம் மறக்க தொடங்கி இருந்தாள்.
____________________________
முன்பு ஈத்தனின் தனி உபயோகத்திற்கு மட்டும் என்றிருந்த கார், முன்புறம் டிரைவருடன் ஒருவர் அமரும் படியும், பின்புறம் இருவர் அமரும் படியும் இருக்கும்.
அதில் இவர்கள் மூவர் மட்டும் குடும்பமாக பயணிக்க வேண்டும் என்றால், ஒன்று ஈஷா பின்புறம் தனியாக அமர வேண்டும். இல்லை குறிஞ்சி பின்புறம் தனியாக அமர வேண்டும்.
அதுவும் இல்லை என்றால் அவர்கள் இருவருமே பின்புறம் அமர்ந்து, ஈத்தன் தனியாக முன்புறம் அமர்ந்து காரினை செலுத்த வேண்டும்…
ஈஷாவின் பிறந்தநாளுக்கான அட்டவணையை தயார் செய்யும் பொழுதே, இதைக்குறித்த சிந்தனை ஈத்தனுக்குள் வந்துவிட...
அவர்கள் மூவருக்குமான முதல் தனி பயணம் அப்படி அமையக்கூடாது என்று நினைத்தவன்.
மூவரும் ஒன்றாக அமர்ந்து செல்லும் வகையில், முன்புறமே மூன்று இருக்கைகள் கொண்ட, அரிதான 3-Seater காரினை பதிவு செய்து, வெளிநாட்டில் இருந்து இறக்கிவிட்டு இருந்தான்.
மிகவும் சின்ன விஷயம் தான்.
ஈத்தனோ, குறிஞ்சியோ விட்டுக்கொடுத்தால் எளிதில் முடிந்துவிட்டும் இருக்கும் தான்…
இருந்தாலும், ஏற்கனவே 12 வருடத்தை அவர்கள் விட்டுக்கொடுத்துவிட்டிருக்க…
வரும் ஒவ்வொரு விஷயமும் பெரிதாக தெரிந்து, ஈத்தனை எதையும் விட்டுக்கொடுக்க விடவில்லை…
விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற பொருளாதார நிலையிலும் அவன் இல்லையே!
____________________________
மத்தியில் இருந்த ஓட்டுனர் இருக்கையில் ஈத்தன் அமர்ந்திருக்க, அவனுக்கு இரண்டு புறமும் இருந்த இருக்கையில் ஈஷாவும், குறிஞ்சியும் அமர்ந்து இருந்தனர்.
முதலில் காரின் உள்ளமைப்பை பார்த்ததும், “என்ன இது... இப்படி எல்லாம் கூட கார் இருக்கிறதா…” என்று நடுவில் அமைந்திருந்த ட்ரைவர் சீட்டை பார்த்து வியந்த குறிஞ்சிக்கு… அமர்ந்த பிறகே அந்த கார் வாங்கியதின் நோக்கம் புரிந்து இருந்தது.
அதில், ‘எப்படிதான் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட இந்த மனுஷன் கருத்தில் விழுகிறதோ…’ என்ற ஆச்சரியம் அவளுக்குள் எழ,
உடனே, ‘அப்படியிருந்தால் தான் தானே அது ஈத்தன்’ என்ற பதிலை அவள் மனசாட்சியே கூறி, அவளை அடக்கிவிட்டு இருந்தது.
ஈத்தனின் கரத்தில் கார், காற்றில் பறப்பது போல் சிறு அதிர்வும் காட்டாது சாலையில் வழுக்கிக்கொண்டுச்செல்ல…
ஊரை தாண்டியதுமே ஈத்தன், காரின் மேற்கூரையை முழுவதுமாக திறந்து விட்டுவிட்டான்…
அதில் இருந்து ஈஷா, ஒரே அமர்க்களம் தான்…
காரில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டவள்… உடன் சேர்ந்து பாடியப்படியே “ஆ… ஊ…”, என்று கத்திக்கொண்டும்… ஆடிக் கொண்டும் வர…
அவர்கள் மூவரின் இடைவிடாத சிரிப்பில் நிறைந்து வழிந்த கார், ஒருவழியாக ஈத்தனின் பீச் ஹவுஸில் நின்று ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.
அங்கும் ஈஷா, ஈத்தன் மற்றும் குறிஞ்சி மட்டுமே. அவர்கள் தவிர வேறு மனித நடமாட்டம் அங்கு இல்லை.
எப்பொழுதும் ஈஷாவுடன் அவளின் பிறந்தநாளுக்கு வெளிநாடுகளில் இருக்கும் அரிதான இடங்களுக்கு சுற்றுலா செல்லும் ஈத்தன், இந்த வருடம் குறிஞ்சிக்கு விசா வர தாமதம் ஆவதால், இங்கேயே அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு இருந்தான்.
____________________________
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குறிஞ்சி அவ்வீட்டில் தங்கியிருந்தப்பொழுது அவ்வீடு எப்படி இருந்ததோ, அதேப்போல் தான் இன்றும் சிறு மாற்றமும் இல்லாது இருந்தது.
அதையெல்லாம் கவனித்தப்படியே, ஒவ்வொரு படிகளாக தன் கால்களை பதித்து ஏறிக்கொண்டிருக்க குறிஞ்சிக்கு, நெஞ்சமெல்லாம் ஏதேதோ எண்ணங்கள்…
அவளின் எத்தனை நினைவுகள் இங்குள்ள ஒவ்வொரு செங்கற்களிலும்…
அவளின் முதல் ஆசை… முதல் காதல்… முதல் தேடல்…
தொண்டையை ஏதோ வந்து அடைப்பதுப்போல் இருந்தது குறிஞ்சிக்கு.
திரும்பி வரவே முடியாது…
திரும்பி பார்க்கவே முடியாது…
திரும்பி கிடைக்கவே கிடைக்காது… என்று கனத்த மனதுடன் இங்கிருந்து அவள் சென்ற கொடுமையான அந்த கணங்கள்… இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சையே பிளப்பது போன்ற வலியை கொடுக்க…
அவளை மீறி அவள் கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்துவிட்டன…
அதில் சட்டென்று பார்வை முற்றிலும் மங்க, கால்களில் புடவை தட்டி தடுமாறிய குறிஞ்சி, படியில் இருந்து கீழ்புறம் சாய…
“குறிஞ்சி மலர்…” என்று கத்தியப்படி ஈத்தனும்…
“அம்மா…” என்று கத்தியப்படி ஈஷாவும்…
ஒருசேர விரைந்து இருப்பக்கமும் அவளை விழவிடாமல் தாங்கி பிடித்துக்கொள்ளவும்… பிறகு தான் குறிஞ்சிக்கு நிதர்சனமே புரிந்தது…
அவளின் கலங்கிய விழிகளையும், வியர்த்த முகத்தையும் பார்த்த ஈத்தன், “பேபி, அம்மாக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று ஈஷாவை அனுப்பிவிட்டு…
“என்ன ஆச்சு டா குறிஞ்சி… ” என்று அவளிடம் விசாரிக்க…
தன் உதடுகளை அழுந்த கடித்தவள், அவ்வீட்டினை ஒருமுறை பார்த்துவிட்டு அவனை பார்க்க…
“ஷ்… ஒன்னுமில்லை கேர்ள். அதெல்லாம் முடிஞ்சுப்போச்சு. திரும்ப நினைக்காதே” என்ற ஈத்தன், “நாங்க எப்பவும் உன் கூடவே தான் இருப்போம்” என்று அவளின் கலங்கிய விழிகள் இரண்டிலும், தன் இதழ்களை அழுத்தமாக பதித்து எடுத்து, அவளை அப்படியே தன் கரங்களில் ஏந்திக்கொண்டு மீதி படிகளை கடந்தவன்…
வீட்டினுள் நுழையவும்…
ஈஷா நீருடன் வந்துவிட்டாள்.
“அம்மா, ஆர் யூ ஓகே” என்று சோஃபாவில் அமர்ந்திருந்த குறிஞ்சியின் முகத்தை, ஈஷா ஈர டிஷ்ஷூ கொண்டு துடைத்துவிட…
‘குழந்தையின் பிறந்தநாள் அதுவுமாக என்ன இது…’ என்று தன்னையே கடிந்தப்படியே…
“அம்மாக்கு ஒன்னும் இல்லை குட்டிம்மா. ஜஸ்ட் புடவை தடுக்கிடுச்சு. அவ்ளோ தான் டா” என்று, மொத்தமாக தன் மடி சேர்ந்துவிட்டு இருந்த, தன் பொக்கிஷங்களை மட்டும் மனதில் நிறுத்தி, தன்னை சமாதானம் செய்துக்கொண்ட குறிஞ்சி… ஈஷாவை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொள்ளவும்…
ஈஷா குறிஞ்சியிடம், அடுத்து கூறியதை கேட்டு…
அப்பொழுது தான் ஒருமிடறு நீரை அருந்தியிருந்த ஈத்தன், மொத்தமாக அதை வெளியே துப்பிவிட்டு இருந்தான்!
குறிஞ்சியோ, நொடியில் குப்பென்று மொத்தமாக மலர்ந்துவிட்டு இருந்தாள்!
பார்த்திருந்த ஓரிரண்டு படங்களின் தாக்கத்தில், ‘ஓ நோ அம்மா! நீங்க பிரக்னன்ட் நினைச்சுட்டேன் நான்!’ என்று அங்கிருந்த மொத்த சூழலையும் மாற்றிவிட்ட ஈஷா, ‘நான் வளர்கிறேன் மம்மி’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு எழுந்து அறைக்குள் சென்றுவிட…
உடனே வந்த ஈத்தனின், “குறிஞ்சி மலர்” அழைப்பில், குறிஞ்சியும் ஓடி அந்த அறைக்குள் மறைந்துவிட்டு இருந்தாள்.
____________________________
Next chapter 📍
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/10/44.html
EPI 42 கொடுக்கவில்லையே!!!
பதிலளிநீக்குhttps://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/my-complete-novel-list-ongoing-and.html
நீக்குVery nice sis, Ethan and Kurinji both are expressing their love in lovely manner 👌👌👌👌👌
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குLovely
பதிலளிநீக்கு