☄️45.4 அந்திப்போர் 🪻🫰🎶
குறிஞ்சியை அமைதியாக ஒரு பார்வை பார்த்த ஈத்தன், ‘வர தாமதம் ஆகும்’ என்று குறுந்தகவல் ஒன்றை மட்டும் சக்திக்கு அனுப்பிவிட்டு, தன் கைப்பேசியை பழையப்படி பாக்கெட்டில் வைத்தவன்.
குறிஞ்சியின் கையை பிடித்து, ஊஞ்சல் மாட்டியிருந்த இடத்திற்கு அழைத்துச்சென்று, அவளை தன் மடியில் வைத்தப்படி ஊஞ்சலில் அமரவும்.
தான் விட்ட பிழையை இன்னும் உணராத குறிஞ்சி, “அச்சோ கிளம்ப சொல்லிட்டு… என்னங்க இது…” என்றப்படியே, உடனே அவன் மடியில் இருந்து நெளிந்து, நழுவி எழுந்து நின்று விட்டாள்.
ஈத்தன் தடுக்கவில்லை.
மாறாக, ‘காலையில் நன்றாக தானே இருந்தாள். இந்த சின்ன இடைவெளியில், என்னிடம் மறைக்கும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்’ என்ற யோசனையுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவும்.
ஈத்தனின் தீவிரமான முகபாவனையில், “என்னாச்சுங்க?” என்றாள் சந்தேகமான குறிஞ்சி உடனே.
அதற்கு, “என்னாச்சுன்னு நீ தான் கேர்ள் சொல்லனும்?” என்றிருந்தான் ஈத்தனும் நேரடியாக.
அதில், ஏற்கனவே ஒருமாதிரி திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வில் இருந்த குறிஞ்சிக்கு திக்கென்று ஆனாது.
இருந்தும், “ஆ… என்ன சொல்லனும்? ஒன்னுமில்லையேங்க…” என்று சமாளிக்க… அவள் முகமோ பதட்டத்தை அப்படியே மொத்தமாக வெளியே காட்டி, ஈத்தனிடம் அவளை மேலும் காட்டிக்கொடுத்து இருந்தது…
ஈத்தன் எதுவும் பதில் பேசவில்லை…
அமைதியாக அவளின் முகத்தை பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க…
குறிஞ்சியால், ஒருக்கட்டத்திற்கு மேல் அந்த பார்வையை சுத்தமாக எதிர்க்கொள்ள முடியவில்லை…
இதழ்களை அழுத்தமாக கடித்தவள், கலங்க துடிக்கும் விழிகளை மெல்ல அங்கும் இங்கும் அலைப்பாய விட்டு கட்டுபடுத்தப்பார்க்க…
“என்கிட்ட பொய் சொல்ற பழக்கம், இன்னும் இருக்கில்ல கேர்ள் உனக்கு. ரொம்ப தப்பு…” என்று கண்டிப்புடன் கூறிய ஈத்தன், அப்படியே அக்கண்டிப்பிற்கு மருந்தாக அவளை இழுத்து தன் மடியில் மீண்டும் அமர்த்திக்கொண்டு இருந்தான்…
____________________________
ஈத்தன் குற்றம் சாட்டியதில் ஒருபக்கம், எங்கு தன்னுடைய எண்ணங்களால், இன்று தங்களுக்கிடையில் பிரச்சனை எதுவும் வந்துவிடுமோ என்ற பயம் குறிஞ்சியை பிடித்துக்கொள்ள.
மறுபக்கம் அதற்கு எதிராக, அவள் உணர ஆரம்பித்த அவன் மார்பின் கதகதப்பு, அவளை அப்படியே உடைக்க பார்த்தது.
அதில், “நான் நிக்கிறேன்ங்க” என்று உடனே ஈத்தனிடம் இருந்து விலக பார்த்தாள்.
21 வயதிலேயே தாயாய் அவனை தன் மடிதாங்கி, அவன் துயர் போக்கியவளை… அவ்வளவு எளிதில் விலக விட்டுவிடுவானா ஈத்தன்.
“ஷ்… அமைதியா உட்காரு கேரள்…” என்று வலுக்கட்டாயமாக அவளை தன் பிடிக்குள்ளே பிடித்து வைத்துக்கொண்டான்.
____________________________
நிமிடங்கள் பல கடந்துவிட்டன…
சத்தமோ, கூச்சலோ, தேவையற்று யூகத்தின் பேரில் வார்த்தைகளை கொட்டுதலோ, எமோஷனல் பிளாக்மெயில் நெருக்குதலோ… எதுவும் அங்கு இல்லை.
குறிஞ்சிக்கு தேவையான நேரத்தினை தந்து காத்திருந்த ஈத்தன், அதே சமயம் அவளை தனியாக விடவும் இல்லை…
வயதும், அனுபவமும் தந்திருந்த மன முதிர்ச்சி, அவனை சூழ்நிலையை சரியாக கையாள வைத்து இருந்தது.
மெல்ல திரும்பிய குறிஞ்சி, ஈத்தன் முகத்தை பார்த்தாள்…
அவனுடைய நீல விழிகள் அப்படியே அவளை தனக்குள் அரவணைத்துக்கொள்ள பார்த்தன…
அதில் நடுங்க பார்த்த தன் இதழ்களை, அழுத்தமாக அவள் கடித்து கட்டுப்படுத்தப்பார்க்க…
“கமான் குறிஞ்சி! சரியோ, தப்போ… கஷ்டமோ, நஷ்டமோ… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடு… நாம சேர்ந்து அதை எதிர்கொள்ளலாம்…” என்று அவளுக்கு தைரியம் கொடுத்த ஈத்தன்…
அவள் உச்சந்தலையில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்து, “என்னோட மார்ஷ்மெல்லோவோட ஸ்வீட்னெஸ், இந்த ஈத்தன் கிட்ட எப்பவும் குறையாது. பிராமிஸ்” என்று, எந்நிலையிலும் அவள் மீதான தன் பிடித்தம் மாறாது என்ற உறுதியையும் அவளுக்கு அவன் தர…
வேறென்ன வேண்டும் குறிஞ்சிக்கு.
ஆழமான மூச்சு ஒன்றை உள்ளிழுத்து வெளியிட்டவள், மறுகணமே மொத்தமாக ஈத்தனின் வசம் சென்றுவிட்டாள்.
முதல்முறை, உரிமையாக அவன் மார்பில் தன் தலையை அவளாக சாய்த்தவள், தன் மனதில் இருந்ததை எல்லாம் அப்படியே அவனிடம் கொட்ட ஆரம்பித்துவிட்டாள்.
ஈத்தன் குறிஞ்சியை எங்கும் தடுக்கவில்லை… அவளுடைய மனதில் இருப்பது மொத்தமாக வெளியே வரட்டும் என்று அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான்…
பெரும்பாலான இல்லத்தரசிகளை போல், தினசரி வேலைகளையும், வீட்டு பொறுப்புகளையும், குழந்தை வளர்ப்பினையும் பார்த்துக்கொள்ளும் மனைவியாக, இங்கு குறிஞ்சி இருந்து இருந்தால் கூட பரவாயில்லை. “ஹோம் மேக்கர்” என்று தன்னை திருப்திப்படுத்திக்கொண்டு இருப்பாள்.
ஆனால், இங்கு அவளுக்கு ஒரே ஒரு வேலைக்கூட இல்லையே.
அவளுடைய துணிமணிகளை துவைக்கும் வேலைகள் கூட அவளுக்கு இன்றுவரை இருந்தது இல்லை.
அனைத்திற்குமே தனிதனியாக ஆட்கள் இருந்தனர்.
ஏதோ, காலையில் ஒரு ஐந்து நிமிடங்கள் நின்று அவர்களுக்கான காலை பானத்தை தயாரிப்பாள். அவ்வளவு தான். அதற்கே சமையல் கூடத்தில், ‘எங்கு இவளால் தங்களது வேலை போய்விடுமோ’ என்று பயந்துப்போய், சமையல் ஆட்கள் இவளை முதல்நாளே பார்த்து வைத்திருக்க… அடிமட்டத்தில் இருந்து வந்தவளுக்கு அவர்களின் உணர்வுகள் புரியாது போகுமா…
அடுத்த நாளில் இருந்து, அவர்களின் உதவியுடனே எந்த சமையல் வேலையாக இருந்தாலும் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
இதில் ஈஷாவும், அவள் தூக்கி வளர்க்கும் வயதில் இல்லை. குழந்தை வளர்ப்பை மொத்தமாக ஈத்தன் முடித்துவைத்துவிட்டு இருக்க…
ஓட வேண்டிய வயதில், ஓய்வெடுத்து ஓய்வெடுத்து ஓய்ந்துப்போனவளுக்கு, ‘நான் யார்… என் அடையாளம் என்ன… என் வாழ்க்கைக்கான குறிக்கோள் என்ன…’ போன்ற கேள்விகள் அவளுக்குள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்ததன் விளைவே… இன்று அவளிடம் பெரிய தாக்கத்தை தந்துவிட்டு இருந்தது…
அதிலும் அவர்கள் மூவர் மட்டுமிருந்த கடந்த ஒருமாதம், அவளுக்கு மன அளவிலும், உடல் அளவிலும் அவ்வளவு உற்சாகத்தை தந்து, திருப்தியாக கழிந்திருக்க… இங்கு வந்ததுமே மீண்டும் தங்க கூட்டுக்குள் அடைப்பட்ட உணர்வு.
மொத்தத்தில், அவளால் கால்களை சும்மாவாகவே ஆட்டிக்கொண்டு, வேறு ஒருவரின் உழைப்பில் மொத்தமாக வாழ முடியவில்லை. அது அவளின் மனம் கவர்ந்த கணவனாக இருக்கும் பட்சத்தில் கூட!
குறிஞ்சி கூற கூற அவளின் பிரச்சனையை ஈத்தனால் துல்லியமாக உணர முடிந்தது.
அதில் ஈத்தனுக்கு மனக்கசப்பு எதுவுமில்லை.
அவளுக்கு அவனுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவனை சார்ந்து வாழ்வதில் தான் பிரச்சனை என்பதை சரியாக புரிந்து கொண்டு இருந்தான்.
____________________________
தன் மனதில் இருந்த மொத்தத்தையும் அவனிடம் கூறிவிட்ட குறிஞ்சி,
“எனக்கு புரியுது. நீங்க எனக்கு செய்றது எல்லாம் ஈஷாக்கு செய்றது போல தான் செய்யறீங்கன்னு. அதுக்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. எனக்கும் அதெல்லாம் ரொம்ப பிடிச்சும் இருக்குங்க.” என்று, எங்கு ஈத்தன் தான் கூறுவதை தவறாக எண்ணி விடுவானோ என்று கூறிய குறிஞ்சி…
“எப்பவுமே என்னோட தேவை எதுனாலும் நானே பார்த்து நிறைவேத்திக்கினா தான் உண்டு. அம்மாக்கு எனக்கு செய்ய நிறைய ஆசை இருந்தாலும், பாவம் அவங்களால் எதுவும் செய்ய முடிஞ்சது இல்லை” என்றவள்…
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா. ஈஷா வயித்தில் இருந்தப்ப நீங்க எனக்கு ஸ்வீட், ட்ரஸ், பூ, கொலுசுன்னு எல்லாம் வாங்கி கொடுத்தப்ப தான், நான் முதல் தடவை, நமக்காக மத்தவங்க செய்யும் போது கிடைக்கும் அந்த புதுவித சந்தோஷத்தை எல்லாம் அனுபவிச்சேனே! அதுக்கப்புறம் இப்ப நீங்க அமெரிக்கா போயிட்டு வந்தப்ப தான், திரும்ப எனக்கு அந்த சந்தோஷம் கிடைச்சுது…” என்றவள், “ஆனா இன்னைக்கு அது எனக்கு கிடைக்கலை… எப்படி கிடைக்க வைக்கிறதுன்னு தெரியலை…” என்றவளின் உணர்வு போராட்டம் ஈத்தனுக்குள்ளும் இறங்கிவிட… அப்படியே நெருக்கமாக அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்…
சில வினாடிகளுக்கு பிறகு மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்த குறிஞ்சி, “எனக்காக பார்த்து பார்த்து நிறைய செய்யும் உங்களை, ஏதேதோ பேசி நான் கஷ்டப்படுத்தறேன் இல்ல. சாரி. சீக்கிரம் இது எல்லாத்துக்கும் நான் பழகிக்கறேன்”, என்றாள்.
அதை கேட்டு, “ஹேய்! உன்னால் எனக்கு கஷ்டம் எப்பவும் வந்தது இல்லை மா…” என்று உடனே மறுத்த ஈத்தன், “நீ இதையெல்லாம் என்கிட்ட முன்னாடியே ஷேர் செய்திருந்தா இவ்வளோ தூரம் இது வந்து இருக்காதுன்ற வருத்தம் மட்டும் தான். நானும் உன்னை கவனிச்சு விசாரிச்சு இருக்கனும். இட்ஸ் ஓகே. இப்பவாச்சும் ஷேர் செய்திட்டயே. அது போதும்…” என்று அவளின் நெற்றியில் தன் இதழ்களை பதித்து எடுத்தவன்.
“கடைசியா என்ன சொன்ன இதையெல்லாம் பழகிக்கறேன்னா” என்று அவளின் மூக்கின் நுனியை பிடித்து அழுத்த…
“ஸ்…” என்ற குறிஞ்சி, அவன் கரத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டாள்.
“ஒழுங்கா உனக்கு பிடிச்சப்போல மட்டும் இரு கேர்ள். எனக்கு அது தான் வேண்டும்” என்று அழுத்தமாக கூறியவன்.
“ஓகே கேர்ள்… உன்னோட கேரியர் அண்ட் நெக்ஸ்ட் ஸ்டெப் பத்தி நாம டிஸ்கஸ் பண்ணலாம்… ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட நான் ஒரு சிலதை காட்டனும்… இரு மா, என் மேக்புக்(லேப்டாப்) எடுத்திட்டு வரேன்…” என்று அவளை தன் மடியில் இருந்து ஈத்தன் எழுப்பப்பார்க்க.
அப்பொழுது தான் குறிஞ்சிக்கு அவ்வளவு நேரமும் அவன் மடியிலேயே ஜம்பமாக அமர்ந்திருந்தது உரைத்தது.
அதில், ‘அச்சோ’ என்று உள்ளுக்குள் கத்தியவள்…
உடனே எழுந்துக்கொண்டாள்…
சென்று மடிக்கணினியுடன் திரும்பி வந்த ஈத்தன்…
ஊஞ்சலில் அமர்ந்து, அதிலிருந்த ஒருசில எக்ஸெல் தொகுப்பை திறந்து வரிசையாக வைத்துவிட்டு…
“பர்ஃபெக்ட்” என்றவன்.
அதைக்காண குறிஞ்சியை மீண்டும் தன் மடியில் வந்து அமர கூறவும்.
தன் மனதில் இருந்ததை எல்லாம், ஈத்தனிடம் மறைக்காது கூறிவிட்டதில், மனம் தெளிந்துவிட்ட குறிஞ்சிக்கு… ஈத்தனை நெருங்க மீண்டும் பழையப்படி கூச்சமாக இருந்தது…
அதில் லேசாக நெளிந்தவள், “நான் நிக்கிறேன்ங்க…” என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் முணங்க..
மறுகணமே, “எதை பழகனுமோ அதையெல்லாம் பழகிடாத கேர்ள் நீ” என்றிருந்த ஈத்தன், அவளை இழுத்து முன்பு போல் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு இருந்தான்.
அதில், “அச்சோ… என்னங்க…” என்று கத்திய குறிஞ்சி, எங்கு பிடிப்பது என்று தெரியாமல், அவன் மடியில் இரண்டு பக்கமும் கைவைத்து பிடித்துக்கொண்டு திணற…
“இதை நீ பழகலாம் கேர்ள்… தப்பில்லை… பழகு…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறிய ஈத்தன், அவளை மேலும் நெருக்கமாக தன் பக்கம் இழுத்து வைத்துக்கொள்ள…
ஈத்தனை முழுதாக உணர ஆரம்பித்த குறிஞ்சிக்கு…
அப்பொழுது தான், தான் உடைமாற்றும் பொருட்டு… தன் துப்பட்டாவினை கழட்டி வைத்ததும்… மீண்டும் அதனை எடுத்து போடாது விட்டதும் உரைத்தது…
அதனை வெளியே கூற முடியாது மேலும் சிவந்தவள், தன் இடையை சுற்றியிருந்த ஈத்தனின் கரத்தினை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்…
ஒரே நாளில், எந்த அரும்பும் தென்றலின் அருகே மலராவதில்லையே!
___________________________
🍄 அடுத்த அத்தியாயம்
கருத்துகள்
கருத்துரையிடுக