41.2
ஜிகு ஜிகுவென்று ஒருயிடம் விடாது, டிசைன்களை அள்ளிக்கொட்டி நிரப்பி, பார்த்ததும் திகட்ட வைப்பது போல் இல்லாமல், சிறு சிறு தங்க நிற கற்களை, கைகளின் முடிவிலும், கழுத்தின் ஓரத்திலும் மட்டும் வைத்து, நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த அந்த தாமரை நிற பேபி பிங்க் ஜாக்கெட், குறிஞ்சியின் உடலை அவ்வளவு பாந்தமாக தழுவிக்கொண்டது. தாலி கயிற்றை உள்ளே போட்டு மறைத்துவிட்டு, ‘எதுவும் தெரிகிறதா’ என்று அங்கு ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த கண்ணாடியில் சரிப்பார்த்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் கச்சிதமாக தைக்கப்பட்ட அந்த ஜாக்கெட் கருத்தில் பதிந்து, அவள் அளவு எதுவும் தரவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது. சரியாக அந்நேரம் பார்த்து ஈஷா உள்ளே நுழையவும்… உடைமாற்றும் திரைக்கு அந்தப்பக்கம் நின்றப்படியே, “குட்டிம்மா… அம்மாவோட ட்ரஸ் அளவு நீங்க தான் அப்பாக்கு எடுத்து கொடுத்தீங்களா…” என்று விசாரித்தாள் குறிஞ்சி. அதற்கு, “நோ அம்மா…” என்ற ஈஷா, ஆங்கில பாடல் ஒன்றை பாடியப்படியே தன்னுடைய மேக்கப்பை தொடரவும். புடவையை ஓரிரு நிமிடங்களிலேயே கட்டிமுடித்து வெளிவந்த குறிஞ்சி… ஈஷா அவளுக்கு அவளே அவ்வளவு அழகாக போட்டு...