இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

41.2

 ஜிகு ஜிகுவென்று ஒருயிடம் விடாது, டிசைன்களை அள்ளிக்கொட்டி நிரப்பி, பார்த்ததும் திகட்ட வைப்பது போல் இல்லாமல், சிறு சிறு தங்க நிற கற்களை, கைகளின் முடிவிலும், கழுத்தின் ஓரத்திலும் மட்டும் வைத்து, நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த அந்த தாமரை நிற பேபி பிங்க் ஜாக்கெட், குறிஞ்சியின் உடலை அவ்வளவு பாந்தமாக தழுவிக்கொண்டது. தாலி கயிற்றை உள்ளே போட்டு மறைத்துவிட்டு, ‘எதுவும் தெரிகிறதா’ என்று அங்கு ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த கண்ணாடியில் சரிப்பார்த்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் கச்சிதமாக தைக்கப்பட்ட அந்த ஜாக்கெட் கருத்தில் பதிந்து, அவள் அளவு எதுவும் தரவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது. சரியாக அந்நேரம் பார்த்து ஈஷா உள்ளே நுழையவும்… உடைமாற்றும் திரைக்கு அந்தப்பக்கம் நின்றப்படியே, “குட்டிம்மா… அம்மாவோட ட்ரஸ் அளவு நீங்க தான் அப்பாக்கு எடுத்து கொடுத்தீங்களா…” என்று விசாரித்தாள் குறிஞ்சி. அதற்கு, “நோ அம்மா…” என்ற ஈஷா, ஆங்கில பாடல் ஒன்றை பாடியப்படியே தன்னுடைய மேக்கப்பை தொடரவும். புடவையை ஓரிரு நிமிடங்களிலேயே கட்டிமுடித்து வெளிவந்த குறிஞ்சி… ஈஷா அவளுக்கு அவளே அவ்வளவு அழகாக போட்டு...

41.1

அத்தியாயம் -41 ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. எல்லாம் ஈஷாக்குட்டியின் அமர்க்களத்தினால் தான். தினமும் காலை எழும் பொழுதே, “பேபி, இன்னும் 7 டேஸ் தான்… அம்மா இன்னும் 6 டேஸ் தான்… ஹேய் இன்னும் 5 டேஸ் தான்…”, என்று ஒவ்வொரு நாளாக குறைத்தப்படியே எழுபவள், இரவு உறங்குவதற்கு முன்பும் அதையே தான் செய்துவிட்டு உறங்குவாள். ஈத்தனுக்கு இது பழக்கம் என்பதால் சிரித்தப்படியே, அவனும் அவளுடன் சேர்ந்து அதையே கூறி, அவளை மேலும் உற்சாகம் செய்துக்கொண்டிருக்க… ஆச்சரியப்பட்டு போனாள் குறிஞ்சி. இதையே தான் அவளும், வருடா வருடம் கொடைக்கானலில் அமர்ந்து செய்துக்கொண்டு இருந்தாள். அந்த மாதம் வந்தாலே போதும். தினம் தினம் ஆவலாக கேலண்டரில் தேதியை பார்த்துப்பார்த்து எண்ணியப்படியே, “இதோ வரப்போகிறது… வரப்போகிறது…” என்று முடிந்த தேதியை கிழிப்பாள். ஈத்தன் பிறந்தநாள் வரும் மாதம், அவளுக்கு ஒருவகையான உணர்வுகளை இதயத்தில் தரும் என்றால், இது அவளின் உடல் முழுவதும் உள்ள நரம்புகளை ஒருமாதிரி மீட்டுக்கொண்டே இருக்கும். பின்னே, இந்த உலகிற்கு ஒரு அரும்பினை, அவள் தன் மலர் தேகம் உருக்கி, கொண்டு வந்த மாதம் ஆயிற்றே அது. அப்...

40.3

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஈத்தனுக்காக, எப்பொழுதும் போல் சக்தி வந்து மற்ற மேனேஜர்களுடன் காத்திருக்க… எதுவுமே நடக்காதது போல் வந்து, அவர்களுடன் கிளம்பி இருந்தான் ஈத்தன்… விமான நிலைய வாசலில் அவனை மறித்து பிடிக்க பார்த்த சினிமா செய்தியாளர்களிடம், நேரடியாக, ‘நோ பெர்சனல் குவொஸ்டின்ஸ். கேட்டா கிளம்பிடுவேன்’ என்றிருந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் முடித்து தந்துவிட்டு வந்த புதிய பாடல்களை பற்றி மட்டும் பேசிவிட்டு கிளம்பியிருக்க… அவனிடம் அதைக்குறித்து பேச நினைத்த, அனைத்து மேனேஜர்களின் வாய்களும் தானாக ஜிப் போட்டு மூடப்பட்டுவிட்டு இருந்தது. ஈத்தனின் ஒவ்வொரு அசைவும், நான் எவ்வளவு மென்மையோ, அதே அளவு அழுத்தமும் கூட என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்க… அனைவருக்கும் சில வினாடிகளிலேயே மூச்சு முட்டும் உணர்வு… ஈத்தன், அவன் இல்லாத நேரத்தில் நடந்த அலுவலக சம்பந்தப்பட்ட விஷயங்களை குறித்து கலந்தாலோசித்தப்படியே காரில் வர… அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் மட்டும் அங்கு பரிமாறப்பட்டன… _______________________________ வீட்டு வாசலில் ஈத்தனின் கார் சென்று நின்ற மறுகணமே, “ஏ… பேபி…” என்று ஓடிவந...

40.2

ஈத்தன், முதல் நாள் நீண்ட நேரம் குறிஞ்சியுடன் பேசியதோடு சரி.  மறுநாள் முதல், ரெக்கார்டிங் வேலை, புது படங்களுக்கான ஒப்பந்த கலந்துரையாடல்கள், விளம்பரங்களுக்கான படப்பிடிப்பு என்று போட்டு வைத்த அட்டவணைப்படி ஓட ஆரம்பித்துவிட்டவனுக்கு, நேர வித்தியாசம் வேறு குறுக்கே நிற்க. ஈஷாவிடமும், குறிஞ்சியிடமும் இந்திய நேரப்படி காலை மட்டும் ஒருசில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்துவிடுவான். குறிஞ்சிக்கும், ஈஷாவுடன் நேரம் சரியாக இருந்தது. அவளின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவே 24 மணி நேரம் போதாமல் இருந்தவளுக்கு, அந்த மூன்று வாரம் எப்படி போனது என்றே தெரியாத அளவிற்கு போய்விட்டிருக்க… ஈத்தனுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தது, இந்தியாவிற்கு செல்லும் விமானத்திற்கு. குறிஞ்சியிடமும், ஈஷாவிடமும் வீடியோ காலில் அழைத்து பேசியவன்… ‘இந்தியாவில் பார்க்கலாம்’ என்றுவிட்டு வைத்து இருக்க… ஈஷா, “பேபி… பேபி…” என்று அப்பொழுதில் இருந்தே கடிகார முள்ளை பிடித்து தள்ள ஆரம்பித்துவிட்டு இருந்தாள். குறிஞ்சி எப்பொழுதும் போல் வெளியே அமைதியாகவும், உள்ளுக்குள் ஆவலோடும், தொலைப்பேசியில் ஈத்தன் வரும் விமானத்தை கவனித்தப்படியே இர...

40.1

அத்தியாயம் -40 ஈத்தன் மறுநாள் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டும். அவனுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யபட்ட, ஆங்கில பாடல்கள் ரெக்கார்டிங்கள் இருந்தன.  இந்தியா திரும்ப குறைந்தது இரண்டிலிருந்து மூன்று வாரங்களாவது ஆகும் என்று இருந்தான். குறிஞ்சிக்கு விசா கைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அவனால் அவளை உடன் அழைத்து போக முடியாத சூழல். அதில் குறிஞ்சி ஈத்தனிடம் எடுத்ததுமே, ஈஷாவையும் அவனையும் ஒன்றாக சென்றுவிட்டு வருமாறு கூறிவிட்டு இருந்தாள்.      சென்ற முறையே தான் பார்த்தாளே, பிள்ளையின் அவனுக்கான ஏக்கத்தை. ஆனால் ஈத்தன் தான் ‘வேண்டாம்’ என்று மறுத்து, ஈஷாவை அவளுடனே விட்டுச் செல்ல போவதாக கூறி இருந்தான். இனி ஈஷா, ஆரோக்கியமான முறையில், தன் பிரிவுகளை ஏற்று பழக வேண்டும். அதுதான் அவளின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று முடிவெடுத்து வாய்ப்பு கிடைத்ததும் செயல்படுத்தவும் பார்த்தான். அதில் குறிஞ்சிக்கு தான் மனமே கேட்கவில்லை. இருந்தும், மருந்து கசந்தாலும் ‘நல்லதுக்கு தான்’ என்று குடிப்பது போல், ஈத்தனின் எண்ணங்களை புரிந்து, அவன் முடிவை ஏற்றுக்கொண்டு இருந்தாள்.  ஈத்தனின்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates