☄️45.5 அந்திப்போர் 🪻🫰🎶
அவள் மடியில் லேப்டாப்பை வைத்திருந்த ஈத்தன், அவளின் ஒரு தோள்பட்டையில், தன் நாடியை பதித்து…
“இந்த ஃபைல்ஸ் பாரு கேர்ள்… இது நீ இங்க வரதுக்கு முன்னாடி நம்ம குடும்பத்துக்கு என்னோட சம்பளம் மூலம் வந்த வருமானம்…” என்று தொழில்கள் மூலம் இல்லாது… அவன் குரல் மூலம் மட்டும் அவனுக்கு வந்த வருமானங்களை காட்டியவன்…
அவள் வந்த பிறகு அவனுக்கு வர ஆரம்பித்ததையும் எடுத்துக்காட்ட…
‘ஏன் இப்பொழுது போய் இதையெல்லாம் காட்டுகிறார்’ என்று நினைத்த குறிஞ்சி… இருந்தும் அவன் காட்டுவதை எல்லாம் பார்க்க…
ஏற்கனவே பல கோடிகளில் இருந்த அவன் மாத வருமானம்… மேலும் 20 சதவீதம் அளவிற்கு மெல்ல உயர்ந்து வந்திருப்பதை, அவளால் தெளிவாக காண முடிந்தது…
“இங்க நீ எதுவும் செய்யாமல் எல்லாம் இல்லை கேர்ள்… இங்க உன்னோட பிரசென்ஸோட வேல்யூவே ரொம்ப அதிகம்…” என்று அந்த கூடுதலான வருமானத்தை மட்டும் ஈத்தன் பிரித்தெடுத்து, தனியாக போட்டு காட்டவும்…
அதுமட்டுமே எங்கோ சென்று நின்றது…
திரும்பி அவன் முகத்தை குறிஞ்சி பார்க்கவும்…
“எஸ் கேர்ள்… இது நீ இங்க வந்து நம்ம பேபியை பார்த்துக்கும் பொறுப்பை என்னோட பகிர்ந்துகிட்டதில், எனக்கு கூடுதலாக கிடைச்ச நேர்த்தில் வந்த வருமானம். இந்த இடத்தில் நீ இல்லைனா கண்டிப்பா இதுவும் இன்னைக்கு நம்மகிட்ட இல்லை” என்று பொருளாதார ரீதியாக அவள் பங்கினை விளக்கியவன்…
“இதுமட்டுமில்லை கேர்ள்… நீ வந்த பிறகு பேபி முகத்தில் நான் பார்க்கும் கூடுதலான நம்பிக்கையும், சந்தோஷமும், நிறைவும்… சாதாரணமான விஷயம் கிடையாது… அவகிட்ட தினம் தினம் அவ்வளவு மாற்றங்கள்… உன்னை கவனிச்சு நிறைய கத்துக்கிறா…” என்று குழந்தை விஷயத்திலும் அவள் பங்குகளை கோடிட்டு காட்டியவன்…
“விடியலே இல்லாமல், இருண்டிருந்த என் வானத்திற்கு ஒரு சூரியனை கொடுத்து, என்னை உயிர்பிச்சு ஓட வச்சதும் நீதான்…
இன்னைக்கு அதே வானத்தில், மழை மேகமா வந்து, பல வானவில்களை உருவாக்கி, என்னை ரசிக்க வைக்கிறதும் நீதான்…” என்று அவன் வாழ்வில், அவள் எத்தகையவள் என்பதை ஒரே வாக்கியத்தில் கூறிவிட்டவன்…
“நீ வந்து தான் இந்த வீட்டை ஒரு குடும்பமா மாத்தியிருக்க குறிஞ்சி மலர்” என்று அவளின் இருப்பின் மதிப்பை உள்ளதை உள்ளபடி கூறி, அவளின் பெரும் மன சஞ்சலத்தினை இருந்த தடமே தெரியாத அளவிற்கு, அவன் சுத்தமாக துடைத்து எறிந்துவிட…
குறிஞ்சி மலரின் முகம் மீண்டும் மலர ஆரம்பித்துவிட்டு இருந்தது…
___________________________
“உன்னோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நான் எடுத்து வைக்க சொல்லி இருந்தேன் இல்ல. ஏன்னு தெரியுமா கேர்ள்” என்று அவளிடம் ஈத்தன் கேட்டான்.
குறிஞ்சி தெரியாது என்னும் விதமாக தலையாட்ட…
“பேபிக்காக, இங்க நாம கட்டும் ஸ்கூலுக்கு கவர்மென்ட் அப்ரூவல் உன் பேரில் வாங்க தான். அதுக்கான ரெஜிஸ்டர் வொர்க் இன்னைக்கு இருக்கு” என்றான்…
முன்பாக இருந்து இருந்தால், ‘ஏன் என் பெயரில்’ என்று அவனிடம் மறுத்தும், மனதினுள் ‘தனக்கு அதெற்கெல்லாம் தகுதி இருக்கிறதா, நாம் என்ன அதற்காக செய்தோம்’ என்று வருந்தியும் இருப்பாள் குறிஞ்சி.
ஆனால் இப்பொழுது, ஈத்தன் அவளை ‘நீ, நான்’ என்று எண்ண விடாமல், ‘நாம்’ என்று எண்ண வைத்திருக்க…
குறிஞ்சி அவனிடம் இதற்கு மறுக்கவில்லை.
“உனக்கு அந்த ஸ்கூல் வொர்க் ஓகேவா கேர்ள்… இல்லை மெடிக்கல் ஃபீல்டு தான் உன் ஆசைனாலும் சொல்லு, நாம ஒரு ஹாஸ்பிடல் தனியா கட்டிடலாம்…” என்று அவன் கேட்க.
‘என்ன, நான் பார்க்க போகும் ஒரு நர்ஸ் வேலைக்காக, புது மருத்துவமனையா’ என்று திகைத்த குறிஞ்சி…
“புதுசா எல்லாம் வேண்டாம்ங்க… நான் முன்னாடி மாதிரி ஸ்கூலுக்கே போயிட்டு வரேன்… ஈஷாவையும் கூட இருந்து பார்த்துக்கலாம்…” என்றாள் குறிஞ்சி.
“ஆர் யூ ஷோர்” என்று அதை உறுதிப்படுத்திக்கொண்ட ஈத்தன்…
“நீ அங்க நர்ஸா மட்டும் இருக்க போறது இல்லை குறிஞ்சி... நீதான் ஸ்கூல்ல மேனேஜ் பண்ணனும்… ஃபிரி டைம்ல நம்மளோட மத்த பிஸ்னஸையும் இனி நீ கொஞ்சம் கவனிக்க ஆரம்பிக்கனும்” என்று தன் வேலைகளை அவளுக்கும் அவன் பகிர்ந்து கொடுக்க…
“மேனேஜ்மென்ட் பத்தி எனக்கு எதுவுமே தெரியாதுங்க… நான் அதை பத்தி எதுவும் படிச்சது கூட இல்லை… எப்படி நான் பார்க்கிறது… எதுவும் தப்பாகிட்டா…” என்று அவள் தயங்க…
“அதெல்லாம் உன்னால் முடியும் கேர்ள். தனியா எவ்வளவு மேனேஜ் செய்திருக்க நீ” என்று அவளை உந்திய ஈத்தன்…
“நீ படிச்ச அளவுக்கு கூட நான் படிக்கலை… முதல் வருஷம் காலேஜ் போனதோட சரி… நான் பிஸ்னஸ் பார்க்கலையா… அனுபவம் எல்லாம் கத்துக்கொடுக்கும்… உன் கூட நானும் இருக்கேனே…” என்ற ஈத்தன்… பேசி பேசியே அவளை அனைத்திற்கும் முழுமனதுடன் சம்மதிக்க வைத்து… உடை மாற்றும் அறைக்கு அவளை மீண்டும் அனுப்பி வைத்து இருந்தான்…
அவன், அவளுடைய எண்ணங்களை காதுக்கொடுத்து கேட்டது மட்டுமில்லை… அவளின் கவலைகளுக்கு மதிப்பளித்து… அவளின் இடத்தில் இருந்து அவளின் மனவோட்டத்தை அறிந்து… அதை நடுநிலையாக நின்று தீர்த்தும், மீண்டும் அது திரும்பிடாதவாறு, அடுத்த கட்டத்திற்கு அவளுக்கு வழியையும் அமைத்து கொடுத்துவிட்டு இருந்தான்…
இந்த ஒரு விஷயமே, மனதில் தோன்றும் சஞ்சலம் எதுவாக இருந்தாலும், கணவனிடம் பகிரலாம் என்ற நம்பிக்கையை குறிஞ்சிக்கு கொடுத்துவிட்டு இருந்தது…
___________________________
உற்சாகமாக, ஈத்தன் புதிதாக வாங்கி வைத்திருந்த புடவைகளில் இருந்து, பிஸ்தா பச்சையில் பேபி பிங்க் வேலைப்பாடுகள் கொண்ட புடவையை எடுத்து கட்டியவள்…
அதற்கேற்ற அணிகலன்களையும் எடுத்து அணிந்துக்கொண்டு… முழுதாக தயாராகி… அன்னையை வணங்கிவிட்டு வெளியே வர…
இம்முறை அவளின் பர்ஃபியூம் மணத்தை வைத்து ஈத்தன் திரும்பி பார்த்து இருந்தான்…
“டிவைன் பியூட்டி” என்று ஆர்பாட்டம் இல்லாத அமைதியான அழகில் மிளிர்ந்தவளை, அவளின் புடவை கசங்காத வண்ணம் லேசாக அணைத்து விடுவித்த ஈத்தன்…
“இன்னைக்கு நான் வீட்டில் இருந்து பேபியை பார்த்துக்கறேன் கேர்ள்… நீ சக்தி கூட போயிட்டு வொர்க் முடிச்சிட்டு வா…” என்று அவளை கார் வரை அழைத்துச்சென்று அனுப்பிவைத்தவன்…
அலுவலக அறையில், வீடியோ கான்ஃபரென்சில் அவனின் கார்ப்பரேட் சீனியர் மேனேஜரிடம்… நாளையில் இருந்து தினமும் குறிஞ்சியை அழைத்துச்சென்று, அவளுக்கு அவர்களுடைய தொழில்கள் அனைத்தையும் பழக்கிவிட கூறியவன்…
தன் பி.ஏ விடம் அதற்கேற்றப்படி தன்னுடைய அட்டவணைகளையும் மாற்றி அமைக்க கூறி, அனைத்தையும் சரிபார்த்து கொண்டிருந்தான்…
சூழ்நிலையின் பேரில் எப்படியோ ஆரம்பித்த பயணம், மெல்ல முழு உருவம் பெற்று வாழ்க்கையாக மாற ஆரம்பித்தது.
___________________________
குறிஞ்சி சென்ற வேலை முடிய மாலை மணி ஐந்தாகிவிட்டது.
மதியம் அவளை, பாதுகாவலர்கள் அருகிலிருந்த நட்சத்திர உணவு விடுதிக்கு உணவுண்ண அழைத்து சென்றிருந்த நேரம், ஈத்தனிடமும், ஈஷாவிடமும் அவள் பேசியதோடு சரி…
சில மணி நேர பிரிவிற்கே, அவர்களை சீக்கிரம் காண வேண்டும் என்ற நினைப்பு வந்துவிட…
வீட்டு நுழைவுவாயினுள் கார் நுழைந்ததுமே, இறங்கிக்கொள்ள தயாராக இருந்தவள்…
கார் நின்றதும், உடன் வந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, உடனே இறங்கி உள்ளே விரைய…
அங்கு சித்ரலேகா, அவரின் கணவர் ஆப்ரஹாம் மற்றும் மகன், மகளுடன் குடும்பமாக அமர்ந்து ஈத்தனுடனும், ஈஷாவுடனும் பேசிக்கொண்டு இருந்தார்…
“பூக்குட்டி…” என்று அழைத்தப்படியே உள்ளே நுழைந்த குறிஞ்சியின் கால்கள்… சித்ரலேகா திரும்பி அவளை பார்த்த ஒரு பார்வையில் அப்படியே நின்றுவிட்டு இருந்தன…
____________________________
Inda lady en Inga vandu iruka kurimji ah edavathu sollida poguthu, ethan super da nee Ava manasu ku etha madiri ellame panra
பதிலளிநீக்கு𝙽𝚒𝚌𝚎
பதிலளிநீக்குMukkiyamana idathula stop pannittinga
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குஅடுத்தடுத்து கதை தொடர்ந்தால் ரொம்ம்ம்ப மகிழ்ச்சியாகயிருக்கும்.
பதிலளிநீக்கு