இடுகைகள்

சங்கீதம்-44

அத்தியாயம் -44 பூமியினை மெல்ல இருள் அணைத்து, அந்நாளைய இரவினை அறிவித்துவிட்டிருக்க! ஈத்தனின் கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் முழுவதும் மெல்லிய இசையாலும், செயற்கை விளக்குகளாலும், பல்வேறு சுகந்தமான நறுமணங்களினாலும் நிறைந்து சொர்க்கமாக மாறிவிட்டு இருந்தது. சீராக வெட்டப்பட்ட பச்சை புல்வெளியில், இளம் ரோஜா, ஊதா, பீச், நீலம், வெள்ளை போன்ற – பல இள வண்ண மலர்கள் கொண்டு மிகப்பெரிய ஆர்ச் வடிவ நுழைவு வாயில்,  “Aurora Bloom Gate” என்ற நியான் விளக்குகளால் ஆன பெயர் பலகையை தாங்கிக்கொண்டு, நீளமாக அமைக்கப்பட்டு இருக்க… அதனை பார்த்து, “ஓ மை காட்! பேபிஇஇஇ, லவ் யூ சோ மச்! அம்மாஆஆ லவ் யூ சோ மச்!” என்று குதித்த ஈஷா,  வானை முட்டும் மகிழ்ச்சியுடன் தன் வெண்ணிற பார்ட்டி கவுனை, இரண்டு பக்கமும் லேசாக பற்றியப்படி, தேவதையாக அந்த நுழைவுவாயிலினுள் நுழைந்து நடந்துச்செல்ல… அவள் உடைக்கு ஏற்ப, வெண்ணிற ஷிஃபான் பார்ட்டி வியர் புடவையில் தயாராகியிருந்த குறிஞ்சியும், வெண்ணிற ஃபார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு பேண்ட்டில் இருந்த ஈத்தனும் மென் புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தனர். ஈஷா பிறந்தது முதல், இப்பொழுது வரை எடுத்த புகைப்படங்களில்...

சங்கீத வானில் ஓர் அந்திப்போர் (அத்தியாயம் -43)

அத்தியாயம் -43 ஈத்தனின் வீட்டில் இருந்து கிளம்பிய கார், ஒருசில நிமிடங்களிலேயே அவர்கள் வீட்டின் அருகிலேயே இருந்த சிறிய தேவாலயத்தின் முன்பு சென்று நின்றது. முன் பக்க சீட்டில் இருந்து இறங்கிய ஈத்தன், ஏற்கனவே அங்கு வந்துவிட்ட அவனுடைய பாதுகாவலர்களிடம், ஏற்பாடுகள் குறித்து பேசி, பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து, குறிஞ்சி பக்க கார் கதவை திறக்க… உடனே இறங்கப்பார்த்தாள் குறிஞ்சி. அதில், “ஒன் செக்” என்று அவளை இறங்கவிடாது நிறுத்திய ஈத்தன், “உனக்கு கம்ஃபர்ட்னா மட்டும் சர்ச் உள்ளே வா கேர்ள். இல்லை நீ கார்லயே இருக்கலாம்”, என்றவன், “உன்கூட செக்யூரிட்டீஸ் இருப்பாங்க. ஜஸ்ட் டென் மினிட்ஸ். நானும், பேபியும் போயிட்டு வந்துடறோம். பிரச்சனை கிடையாது கேர்ள்” என்றான், அவள் மீது தப்பி தவறிக்கூட தான் பின்பற்றுவதை திணித்துவிட கூடாது என்று வெகு கவனமாக. அதை உணர்ந்து பெருமிதம் கொண்டவள், “சர்ச் போறது, எனக்கு காலேஜ் அப்ப இருந்தே பழக்கம் தான்ங்க. கடவுள் எங்க இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் எனக்கு ஒன்னுதான், நான் கும்பிடுவேன்” என்று தன் எண்ணத்தை கூறிய குறிஞ்சி, “நானும் வரேன்”, என்றாள் அவன் நீல விழி...

Chapter 42

Chapter -42 அங்கு அடுத்து என்ன என்று யோசிக்க, சிறு அவகாசம் கூட குறிஞ்சிக்கு தரப்படவில்லை! தந்தையும், மகளும் பெரும் அராஜக காரர்களாக இருந்தனர். அவள் கைகளில் இருந்த தினப்படி வளையல்களை, புது வளையல்களை போட என்று ஈஷா உருவிக்கொண்டு செல்லவும்… அதை என்னவென்று குறிஞ்சி பார்ப்பதற்குள்ளே, ஈத்தனின் கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பயணிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தன…  அதில் அதிர்ந்தவள், அவள் பின்புறம் நின்றிருந்தவனை திரும்பிப்பார்க்க… ஈத்தன் வந்த சிரிப்பை, தன் இதழ்களுக்குள் அடக்க பெரும்பாடுபட்டு போனான். எப்படியோ அவளறியாது அதை அடக்கியவன், அவளின் கூந்தல் மொத்தத்தையும் அள்ளி, அவளின் தோள் வழியே முன்புறம் போட… குறிஞ்சியின் பின் கழுத்தை மொத்தமாக ஈத்தனின் மூச்சுக்காற்று ஓடிவந்து தழுவிக்கொண்டு இருந்தது. அதில், அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக வெளிவர ஆரம்பித்த வியர்வை துளிகளையும், அவளின் விரிந்த விழிகளையும் பார்த்தப்படியே ஈத்தன், “இந்த செயினை ரிமூவ் பண்ணிடவா. இல்லை, நீ உள்ளே செக்யூர் பண்ணிடறியா குறிஞ்சி மலர்?” என்று, அவள் கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருக்கும் செயினை, தன் விரல்களால் பற்றி இழுத்தப்படியே கேட்கவ...

சங்கீதம்- 41.1

📍ஹாய் டியர்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க. இங்க நாங்க எல்லாரும் இப்ப நல்லா இருக்கோம். கோவிட் டெஸ்ட் லாஸ்ட் வீக் எல்லாருக்கும் நெகட்டிவ் ஆகிடுச்சு. இனி எந்த பயமும் இல்லை.  உங்க எல்லாரோட  பிராத்தனைக்கும், அன்புக்கும், மெஸேஜ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ். Feeling blessed. சாரி நிறைய பேர் மெஸேஜ் அனுப்பி இருக்கீங்க. உடனே என்னால் ரிப்ளே செய்ய முடியலை. பழையப்படி வேலை செய்ய உடம்பு இன்னும் முழு ஒத்துழைப்பு தர மாட்டுது. ஃபோன் தூக்கி டைப் செய்தாலே. கைவலி... விரல்கள் மரத்து போறதுன்னு... போஸ்ட் கோவிட் எஃபெக்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... இந்த போஸ்ட்டே வாய்ஸ் டைப்பிங்ல போடுறேன்... அதுக்கான பிசியோதெரபி போயிட்டு வரேன். சீக்கிரம் சரியாகிடும் ☺️ 😘 முக்கியமான விஷயம். ஈத்தன் குறிஞ்சி கதைக்கு அடுத்த பதிவு தயார் டியர்ஸ். இப்ப போஸ்ட் பண்றேன் வாசிங்க.  முதல் இருக்கும் அத்தியாயமும் வாசிச்சுட்டு வாசிங்க. அப்ப தான் கனெக்டிவிட்டி புரியும். காத்திருந்து வாசிக்கும் தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்புகள் 🤗🪻 அத்தியாயம் -41 ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. எல்லாம் ஈஷாக்குட்டிய...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates