37.3
ஈஷா, ஈத்தனுக்கு வழிவிட்டு தன் நாற்காலியை வேறு பின்புறம் சற்று தள்ளிக்கொள்ள… வேறுவழியின்றி தன் கையில் இருந்த ஸ்பூனை தட்டில் வைத்து ஈத்தன்… ‘குறிஞ்சிக்கு எத்தனை முறை நாம் ஊட்டிவிட்டு இருக்கிறோம். அதுபோல தானே இது’ என்று அவள் குழந்தை உண்டாகி இருந்த சமயங்களிலும், அவள் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்த நாட்களையும், நினைத்தவாறே குறிஞ்சியின் கையருகே செல்ல… குறிஞ்சிக்கும் வேறுவழியில்லாமல் போனது. அதில் குறிஞ்சியின் விரல்கள், மெல்ல ஈத்தனின் இதழ்களை ஸ்பரிசிக்க தொடங்கி இருந்தன. அதன் பலனாக அவனின் இதழ்களும் அவளின் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்து, உணவை தனக்குள் எடுத்துக்கொள்ள… ஈத்தனின் உமிழ்நீர் குறிஞ்சியின் விரல்களை நனைத்து இருந்தது. அதில், குறிஞ்சி தன் கால் விரல்களை அழுந்த நிலத்தில் பதித்து தன்னை கட்டுப்படுத்த முயன்றுக்கொண்டு இருந்தாள். ஈத்தனுக்கும், ஸ்பூனால் அவன் அவளுக்கு ஊட்டிவிட்டதற்கும், இன்று அவள் கையால் ஊட்டிவிட்டதற்கும் இருக்கும் வித்யாசம் புரிந்திருக்க… அமைதியாக விலகிக்கொண்டு இருந்தான். அவனுக்கும் உணர்வுகள் உண்டு தானே. அவளின் விரல்களில் கதகதப்பு இன்னும் அவன் வாயில் நீங்காது இருக்...