38.1
💌👩❤️💋👨 ஹாய் டார்லிங்ஸ் ❤️ அப்டேட் எப்படி இருந்தது. Flashback மொத்தமும் இந்த அப்டேட்ல முடிச்சிடனும்னு முடிச்சிட்டேன். ஈத்தன், குறிஞ்சி கேரக்டருக்கு ஒத்து வரும் போல் எழுதி இருக்கேன். ஓகே வா? எதுவும் நான் மிஸ் பண்ணி இருந்தால் கமெண்ட்டில் பண்ணுங்க❤️
-சுவாதி லக்ஷ்மி 💕 🪻
கண்ணா என்
கூந்தலில் சூடும் பொன்
பூக்களும் உன்னை
உன்னை அழைக்க…
கண்ணே உன் கைவளை மீட்டும்
சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க
கண்களைத்
திறந்து கொண்டு நான்
கனவுகள் காணுகிறேன்…
என்று காதில், திருமதி சித்ராவின் குரல் தேனாக பாய்ந்தோட.
அதில் தன் மனதை ஒன்ற வைக்க முடியாமல், பல்வேறு சிந்தனைகளுடன், ஒரு மரத்தின் கீழே புல்வெளியில் அமர்ந்திருந்தாள் குறிஞ்சி.
அவளிடம் இருந்து சில அடிகள் இடைவெளிவிட்டு நின்று இருந்த ஈஷா. அவளின் வெளிநாட்டு ஓவிய ஆசிரியர், ஆன்லைன் வகுப்பு மூலம், வீடியோ காலில் அவளுக்கு சொல்லிக்கொடுக்க கொடுக்க…
அங்கு தோட்டத்தில், முழுதாய் மலர்ந்திருந்த ஒரு புத்தம் புதிய ரோஜாவை, பெரிய பெயிண்ட்டிங் கேன்வாஸில், அதற்கேற்ற நிற கலவைகளை துல்லியமாக கொண்டு, அவ்வளவு தத்ரூபமாக மதியத்தில் இருந்து வரைந்துக்கொண்டு இருந்தாள்.
ஈத்தன் நிச்சயம் இன்று வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்த குறிஞ்சிக்கு, மாலை நேரம் 5.30 ஆனபிறகும் அவன் வராது போனதில் முகமே சுண்டிவிட்டு இருந்தது. அதிலும் அவள் வாய்விட்டு அழைத்தும், அவன் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? அதுவும் இன்றைய நாள் எவ்வளவு முக்கியமானது. அவளுடனும், குழந்தையுடனும் அவன் இருக்க வேண்டும் அல்லவா!?
‘மீண்டும் அவனுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லி அழைப்போமா’ என்ற எண்ணம் வர. உடனே ‘அச்சோ! வேண்டாம். என்ன நினைப்பாங்க. ரொம்ப உரிமை எடுக்கிற போல இருக்கும். தொந்தரவு பண்ற போலவும் இருக்கும்’ என்று அந்த எண்ணத்திற்கு தடை விதித்தவள்…
வேறுவழியின்றி, பழையப்படி அவனை அவனின் குரல் மூலம் தனக்குள் நிரப்பலாம் என்று முடிவு செய்து. சித்ராவின் குரலில் இருந்து ஈத்தனின் குரலுக்கு தாவி இருந்தாள்.
அவளுக்கு ஈத்தன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஏற்றி கொடுத்திருந்த பாடல்களின் வரிசையை எடுத்தவள். அதில் அவள் அதிகமாய் விரும்பி கேட்கும், ஈத்தன் அவனின் பதினெட்டு வயதில், அவனுடைய கல்லூரி விழாவில் பாடிய, முதல் பாடலை எடுத்து கேட்க ஆரம்பித்தாள்.
காற்றே இளம் காற்றே!
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல!
பூவே வெண் பூவே!
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல!
என்று அவளை மெல்ல தன் இளம் மென் குரல் மூலம் உருக்க ஆரம்பித்தவன்…
கொஞ்சம் கொஞ்சமாக தன் குரலில் தாபம் ஏற்றிக்கொண்டே வந்து…
பகல் இரவாய் கண் விழித்திடவா…?
உனதருகே நான் பிழைத்திட வா…!
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே…
இதயமெல்லாம் நீ நிறைந்திட வா…!
உனதுயிராய் இருந்திடவா…
உடை கலைவாய் என்னை அடைவாய்…!
என்று அழைக்க… குறிஞ்சியின் கன்னங்கள் இரண்டும் சூடேறி சிவந்து இருந்தன… அன்று இரவு ஈத்தன் அவளின் விரல்களுடன், தன் விரல்களை கோர்த்து இறுக்கியது ஞாபகத்திற்கு வந்து விரைவில் இதெல்லாம் நடக்கும் என்று அவளை இம்சிக்க…
மேலும் சிவந்தவள்…
எங்கு ஈஷா தன்னை கவனித்துவிட போகிறாள் என்று சுதாரித்து பாடல் கேட்பதையே நிறுத்திவிட்டு, ஈஷா வரைவதை பார்க்க ஆரம்பிக்க…
பின்புறம் இருந்து அவ்வளவு சத்தமாக கார் சத்தம் கேட்டு அவளை திசை திருப்பி இருந்தது.
‘என்ன இது இவ்வளவு சத்தம்’ என்று திரும்பி பார்த்த குறிஞ்சி, அங்கு மிதந்து வந்துக்கொண்டிருந்த சிகப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரை பார்த்து, கண்கள் மின்ன எழுந்துக்கொள்ள பார்க்க…
அதற்குள் ஈஷா, தன் கையில் இருந்த பெயிண்ட் பிரஷை, “எக்ஸ்கியூஸ் மீ” என்று வைத்துவிட்டு அப்படியே புயல் வேகத்தில் ஓட ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
குறிஞ்சி “பாப்பா மெல்ல” என்று கூறியதை எல்லாம் கேட்காமல்,
கார், வீட்டு நுழைவாயிலை அடைவதற்கு முன்னர் அங்கு சென்று நின்று இருந்த ஈஷா.
கார் கதவை ஈத்தன் திறப்பதற்கு முன்பாகவே ஓடிச்சென்று திறந்தவள், “பேபி…” என்று ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஈத்தனை அணைத்துக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு இணையாக, “பேபி…” என்று அவளை தன்னுடன் சேர்த்து வாரி அணைத்துக்கொண்டிருந்தது ஈத்தனின் கரமும்.
“டாடி உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டா, பேபி…” என்று, முயல் குட்டி போல் தன் கைகளுக்குள் அடங்கிவிட்டிருந்த ஈஷாவின் உச்சந்தலையில், தன் இதழ்களை அழுத்தமாக பதித்த ஈத்தன், அங்கேயே தன் முகத்தை புதைத்துக்கொள்ள…
“மீ டூ பேபி”, என்ற ஈஷாவின் கண்ணீர் துளிகள் ஈத்தனின் சட்டையை நனைக்க ஆரம்பித்து இருந்தன.
ஈத்தனின் வரவை பார்த்து வந்திருந்த செக்யூரிட்டி.
ஈத்தன், ஈஷாவிற்கு தனிமை கொடுத்து தள்ளி நின்றுக்கொண்டிருக்க…
அங்கு வந்து சேர்ந்த குறிஞ்சியும், அவ்வாறே நின்றுவிட்டு இருந்தாள்.
________________________________
தந்தை, மகள் சம்பாஷணைகள் அனைத்தும் ஒருவழியாக முடிய…
ஈஷாவின் கண்களை துடைத்து. அவளின் முடிகளை காதோரம் ஒதுக்கி சரிசெய்த ஈத்தன். அவளுடன் காரை விட்டு இறங்கி வெளிவர…
ஈத்தனை முழுதாக விழுங்கிய குறிஞ்சியின் விழிகள் இரண்டும் அதிர்ந்து இருந்தன!
ஈத்தனின் முகத்தில் இதுவரை அவள் பார்த்திராத அளவிற்கு அவ்வளவு களைப்பு. அப்படியே அப்பட்டமாக தெரிந்தது. அதில், ‘என்ன இது’ என்று அவள் அவனை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே…
“ஓ மை காட்!” என்றிருந்த ஈஷா, ஓவிய ஆசிரியரிடம் கூறி வீடியோ வகுப்பை முடித்துவிட்டு, தன்னுடைய பெயிண்டிங்கை எடுத்துக்கொண்டு வருவதாக ஈத்தனிடம் கூறியவள், மீண்டும் ஒருமுறை அவனை அணைத்து விடுவித்து, பாதியில் விட்ட வேலையை முடிக்க மீண்டும் தோட்டத்திற்கு ஓட ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
செக்யூரிட்டி, ஈத்தன் வந்த காரை ஷெட்டிற்கு எடுத்துச்செல்ல…
அங்கு ஈத்தனும், குறிஞ்சியும் மட்டுமே.
அதில் எவ்வித தயக்கமும் இல்லாது ஈத்தனை நெருங்கி இருந்த குறிஞ்சி, “எப்படி இருக்கீங்க?” என்று அவனை விசாரித்தவள். “வேலை ரொம்ப அதிகமா?” என்றுக்கேட்க.
“ம். குட் குறிஞ்சி. வேலை ஓகே தான்” என்றான் ஈத்தன் சற்று கரகரப்பான குரலில்.
அதில், “குரல் எல்லாம் மாறி இருக்கு. இதோடவா ரெக்கார்டிங் முடிச்சீங்க” என்று அதிர்ந்து விசாரித்த குறிஞ்சி. ஈத்தனின் இமைகள் கூட தடித்து சிவந்து இருப்பதை பார்த்து சந்தேகமாகி, “உடம்புக்கு எதுவுமா”, என்று சற்றும் தயங்காமல் அவனை மேலும் நெருங்கி, அவனுடைய நெற்றியில் தன் கரத்தினை பதித்து இருந்தாள்.
அவளின் கண்கள் இரண்டும் ஈத்தனை உச்சி முதல் உள்ளங்கால் வரை, ஸ்கேன் செய்துக்கொண்டே வேறு இருக்க…
“ஒன்னும் இல்லை கேர்ள்”, என்று அவளின் கையை தன் நெற்றியில் இருந்து விலக்கிய ஈத்தன். “கொஞ்சம் சோகமான பாடல் ரெக்கார்டிங். அதுக்கு ஏத்தப்போல் எமோஷன்ஸ் எல்லாம் குரலில் வர வைக்கனும் இல்ல. அதான் இந்த சேன்ஜஸ் எல்லாம். கோல்ட் ஃபுட் நிறைய எடுத்தேன். சரியாகிடும்” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு, வீட்டினுள் நுழைந்து, உடனே தங்களின் அறைக்கு செல்லப்போக…
ஈத்தனின் குரலில் மட்டும் இல்லை. பேசும் விதத்தில் கூட மாறுதல் வந்து இருப்பது போல் இருந்தது குறிஞ்சிக்கு.
அவளை குறித்து கூட அவன் ஒன்றுமே விசாரிக்கவில்லையே.
“வேலை டென்ஷனா இருக்கும்”, என்று சட்டென்று அதை ஒதுக்கியவள். ‘கொடுக்கிற பணத்துக்கு மனுஷனை சக்கையா பிழிஞ்சிட்டு இருக்காங்க. ஒரு பாட்டுக்கு பின்னாடி எவ்ளோ இருக்கு’, என்று அவன் கூறியதை நம்பிய குறிஞ்சி, அதைப்பற்றி நினைத்தப்படியே சமையல் அறைக்கு சென்று, ஈத்தனுக்கு பிடித்த டீயினை தயாரிக்கும் பணியில் இறங்கி இருந்தாள்.
அங்கு ஈத்தனோ, குறிஞ்சியிடம் வெடிக்க துடிக்கும் உணர்வுகளை ஷவரின் அடியில் நின்று கரைக்கப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“ஈத்தன் ப்ளீஸ் கன்ட்ரோல். அவ பாவம். வேண்டாம் மேன். மறந்திடு” என்று மீண்டும் மீண்டும் தனக்கு தானே கூறிக்கொண்டு இருந்தான்.
________________________________
🐥🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக