இடுகைகள்

Chapter 42

Chapter -42 அங்கு அடுத்து என்ன என்று யோசிக்க, சிறு அவகாசம் கூட குறிஞ்சிக்கு தரப்படவில்லை! தந்தையும், மகளும் பெரும் அராஜக காரர்களாக இருந்தனர். அவள் கைகளில் இருந்த தினப்படி வளையல்களை, புது வளையல்களை போட என்று ஈஷா உருவிக்கொண்டு செல்லவும்… அதை என்னவென்று குறிஞ்சி பார்ப்பதற்குள்ளே, ஈத்தனின் கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பயணிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தன…  அதில் அதிர்ந்தவள், அவள் பின்புறம் நின்றிருந்தவனை திரும்பிப்பார்க்க… ஈத்தன் வந்த சிரிப்பை, தன் இதழ்களுக்குள் அடக்க பெரும்பாடுபட்டு போனான். எப்படியோ அவளறியாது அதை அடக்கியவன், அவளின் கூந்தல் மொத்தத்தையும் அள்ளி, அவளின் தோள் வழியே முன்புறம் போட… குறிஞ்சியின் பின் கழுத்தை மொத்தமாக ஈத்தனின் மூச்சுக்காற்று ஓடிவந்து தழுவிக்கொண்டு இருந்தது. அதில், அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக வெளிவர ஆரம்பித்த வியர்வை துளிகளையும், அவளின் விரிந்த விழிகளையும் பார்த்தப்படியே ஈத்தன், “இந்த செயினை ரிமூவ் பண்ணிடவா. இல்லை, நீ உள்ளே செக்யூர் பண்ணிடறியா குறிஞ்சி மலர்?” என்று, அவள் கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருக்கும் செயினை, தன் விரல்களால் பற்றி இழுத்தப்படியே கேட்கவ...

சங்கீதம்- 41.1

📍ஹாய் டியர்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க. இங்க நாங்க எல்லாரும் இப்ப நல்லா இருக்கோம். கோவிட் டெஸ்ட் லாஸ்ட் வீக் எல்லாருக்கும் நெகட்டிவ் ஆகிடுச்சு. இனி எந்த பயமும் இல்லை.  உங்க எல்லாரோட  பிராத்தனைக்கும், அன்புக்கும், மெஸேஜ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ். Feeling blessed. சாரி நிறைய பேர் மெஸேஜ் அனுப்பி இருக்கீங்க. உடனே என்னால் ரிப்ளே செய்ய முடியலை. பழையப்படி வேலை செய்ய உடம்பு இன்னும் முழு ஒத்துழைப்பு தர மாட்டுது. ஃபோன் தூக்கி டைப் செய்தாலே. கைவலி... விரல்கள் மரத்து போறதுன்னு... போஸ்ட் கோவிட் எஃபெக்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... இந்த போஸ்ட்டே வாய்ஸ் டைப்பிங்ல போடுறேன்... அதுக்கான பிசியோதெரபி போயிட்டு வரேன். சீக்கிரம் சரியாகிடும் ☺️ 😘 முக்கியமான விஷயம். ஈத்தன் குறிஞ்சி கதைக்கு அடுத்த பதிவு தயார் டியர்ஸ். இப்ப போஸ்ட் பண்றேன் வாசிங்க.  முதல் இருக்கும் அத்தியாயமும் வாசிச்சுட்டு வாசிங்க. அப்ப தான் கனெக்டிவிட்டி புரியும். காத்திருந்து வாசிக்கும் தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்புகள் 🤗🪻 அத்தியாயம் -41 ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. எல்லாம் ஈஷாக்குட்டிய...

41.2

 ஜிகு ஜிகுவென்று ஒருயிடம் விடாது, டிசைன்களை அள்ளிக்கொட்டி நிரப்பி, பார்த்ததும் திகட்ட வைப்பது போல் இல்லாமல், சிறு சிறு தங்க நிற கற்களை, கைகளின் முடிவிலும், கழுத்தின் ஓரத்திலும் மட்டும் வைத்து, நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த அந்த தாமரை நிற பேபி பிங்க் ஜாக்கெட், குறிஞ்சியின் உடலை அவ்வளவு பாந்தமாக தழுவிக்கொண்டது. தாலி கயிற்றை உள்ளே போட்டு மறைத்துவிட்டு, ‘எதுவும் தெரிகிறதா’ என்று அங்கு ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த கண்ணாடியில் சரிப்பார்த்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் கச்சிதமாக தைக்கப்பட்ட அந்த ஜாக்கெட் கருத்தில் பதிந்து, அவள் அளவு எதுவும் தரவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது. சரியாக அந்நேரம் பார்த்து ஈஷா உள்ளே நுழையவும்… உடைமாற்றும் திரைக்கு அந்தப்பக்கம் நின்றப்படியே, “குட்டிம்மா… அம்மாவோட ட்ரஸ் அளவு நீங்க தான் அப்பாக்கு எடுத்து கொடுத்தீங்களா…” என்று விசாரித்தாள் குறிஞ்சி. அதற்கு, “நோ அம்மா…” என்ற ஈஷா, ஆங்கில பாடல் ஒன்றை பாடியப்படியே தன்னுடைய மேக்கப்பை தொடரவும். புடவையை ஓரிரு நிமிடங்களிலேயே கட்டிமுடித்து வெளிவந்த குறிஞ்சி… ஈஷா அவளுக்கு அவளே அவ்வளவு அழகாக போட்டு...

41.1

அத்தியாயம் -41 ஒருவாரமாகவே ஈத்தனின் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. எல்லாம் ஈஷாக்குட்டியின் அமர்க்களத்தினால் தான். தினமும் காலை எழும் பொழுதே, “பேபி, இன்னும் 7 டேஸ் தான்… அம்மா இன்னும் 6 டேஸ் தான்… ஹேய் இன்னும் 5 டேஸ் தான்…”, என்று ஒவ்வொரு நாளாக குறைத்தப்படியே எழுபவள், இரவு உறங்குவதற்கு முன்பும் அதையே தான் செய்துவிட்டு உறங்குவாள். ஈத்தனுக்கு இது பழக்கம் என்பதால் சிரித்தப்படியே, அவனும் அவளுடன் சேர்ந்து அதையே கூறி, அவளை மேலும் உற்சாகம் செய்துக்கொண்டிருக்க… ஆச்சரியப்பட்டு போனாள் குறிஞ்சி. இதையே தான் அவளும், வருடா வருடம் கொடைக்கானலில் அமர்ந்து செய்துக்கொண்டு இருந்தாள். அந்த மாதம் வந்தாலே போதும். தினம் தினம் ஆவலாக கேலண்டரில் தேதியை பார்த்துப்பார்த்து எண்ணியப்படியே, “இதோ வரப்போகிறது… வரப்போகிறது…” என்று முடிந்த தேதியை கிழிப்பாள். ஈத்தன் பிறந்தநாள் வரும் மாதம், அவளுக்கு ஒருவகையான உணர்வுகளை இதயத்தில் தரும் என்றால், இது அவளின் உடல் முழுவதும் உள்ள நரம்புகளை ஒருமாதிரி மீட்டுக்கொண்டே இருக்கும். பின்னே, இந்த உலகிற்கு ஒரு அரும்பினை, அவள் தன் மலர் தேகம் உருக்கி, கொண்டு வந்த மாதம் ஆயிற்றே அது. அப்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates