38.5
குறிஞ்சி கூறியதில் முற்பகுதி எந்தளவிற்கு ஈத்தனுக்கு வருத்தத்தை கொடுத்ததோ. அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பிற்பகுதி அவனுக்கு கோபத்தை கொடுத்து இருந்தது. அது தீக்குழி என்று நன்றாக தெரிந்தப்பிறகும், அதில் இறங்கி இருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம். சரி அதுக்கூட, அவளின் அம்மாவிற்காக பயந்துக்கொண்டு போனாள் என்று தள்ளுபடி செய்தாலும், அவர் மறைந்த பிறகும் அவனிடம் அவள் வரவில்லையே. அவன் குத்துக்கல் போல் இருக்கும் பொழுது, எதற்கு அவள் அந்தளவிற்கு யோசித்து, பதறி, பயந்து, யார் யாரின் உதவியையோ நாடி, ஓடி, ஒளிந்து ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். அதிலும் அவளால், அவன் செய்து வைத்தவைகளின் விளைவுகள், Butterfly Effect எனப்படும் பட்டாம்பூச்சி விளைவினை போல், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, இன்று வரை அதன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க. குறிஞ்சியை வெளிப்படையாகவே கோபமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஈத்தன். அதில், “எல்லாம் தான் சொல்லிட்டோமே. இப்ப என்ன!” என்று ஒன்றும் புரியாமல் அதிர்ந்த குறிஞ்சி. மீண்டும் அவனருகில் இருந்து எழுந்துக்கொள்ள பார்க்க. அவளின் மடிமீது தன் கரத்தினை போட்டு. அவளை எழ விடாமல்...