39.4
இருவரையும், தன் இரண்டு பக்க இடையிலும் கரத்தினை பதித்து மாறி மாறி, தூக்க கண்களுடன் பார்த்த ஈஷா…
“என்னோட அலாரத்தை ஏன் பேபி இந்த வருஷமும் ஆஃப் பண்ணிங்க” என்று ஈத்தனிடம் கேட்டவள்.
குறிஞ்சியின் புறம் திரும்பி, “என்னை ஏன் அம்மா நீங்களும் எழுப்பலை” என்று கேட்கவும்…
மொத்தமாக வியர்த்துப்போய் நின்றிருந்த குறிஞ்சி.
பதில் கூறும் அளவிற்கெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு, சற்று முன்னர் நடந்த நிகழ்வில், வேலை நிறுத்தம் செய்துவிட்ட தன்னுடைய மூளையை வைத்துக்கொண்டு… திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தாள்…
அதனை வெளியில் காட்டாத புன்னகையுடன் பார்த்த ஈத்தன்,
“நான் தான் பேபி, உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அம்மா கிட்ட சொன்னேன். சாரி”, என்றான்.
அதில், “போங்க பேபி…” என்று தன் ஒரு காலினை தூக்கி தரையில் மெல்ல உதைத்த ஈஷா…
அறைக்குள் ஓடி, மிகப்பெரிய புத்தகம் ஒன்றுடன் வெளிவந்து, “ஹேப்பி பர்த்டே பேபி…” என்று அவன் கையில் அதனை பரிசாக தந்தவள்.
ஈத்தனை குனிய செய்து, “லவ் யூ பேபி” என்று அவனின் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி தன் இதழ்களை பதித்தெடுக்க…
“மீ டு… லவ் யூ சோ மச் பேபி…” என்று, அவளை அணைத்து அவளின் நெற்றியில் தன் இதழ்களை பதித்தெடுத்த ஈத்தன்.
அவளுடன் சென்று, அங்கிருந்த சோஃபாவில் அமரவும், குறிஞ்சி ஈஷாவிற்கு மறுபக்கம் அமர்ந்து இருந்தாள்.
ஈத்தன், ஈஷா பரிசாக அவனுக்கு தந்த, புத்தகத்தின் முதல் பக்கத்தை திருப்பவும்…
அங்கு ஈத்தன், ஒரு மொட்டை மாடியில் தனியாக படுத்தப்படி நிலவினை பார்த்துக்கொண்டிருப்பது போல், கார்டூனாக வரைந்திருந்த ஈஷா…
அதன் மறுபக்கத்தில், அந்த நிலவில் குறிஞ்சியின் முகம் தெரிவது போல் வரைந்து…
அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து அவள் தேவதையாக தரையிறங்கி, ஈத்தனிடம் வந்து சேர்வது போல் வரைந்திருந்தவள்…
அதற்கடுத்து ஈத்தன் அவளிடம் கூறியிருந்த கதைப்படி, குறிஞ்சி அவளை ஈத்தனின் கையில் குழந்தையாக தந்துவிட்டு சென்றுவிடுவதாக வரைந்திருந்தாள்.
அதன் பிறகு, குறிஞ்சியின் கொடைக்கானல் வீட்டை வரைந்து… அதில் குறிஞ்சி அவர்களுக்காக காத்திருப்பது போல் வரைந்து…
இவர்கள் அங்கு சென்று அவளை அழைத்து வருவது போல், அனைத்தையும், அவ்வளவு அழகாக கார்ட்டூன் மூலமே கதை கூறும் வகையில் கொண்டு வந்திருந்தவள்…
இங்கு அவள், குறிஞ்சி, ஈத்தன் மூவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை அழகாக காட்டிமுடித்து…
அதற்கடுத்து குறிஞ்சி மீண்டும் ஈத்தனுக்கு குழந்தை கொடுப்பது போல் வரைய ஆரம்பித்து… பக்கத்திற்கு ஒரு குழந்தையை ஈஷா இணைத்துக்கொண்டே சென்றிருக்க…
ஈத்தனின் விழிகளும், குறிஞ்சியின் விழிகளும் ஒருசேர விரிந்து இருந்தன…
ஈஷாவுடன் அந்த குழந்தைகள் எல்லாம் சேர்ந்து வரைவது, விளையாடுவது, நீந்துவது, உண்பது, உறங்குவது என்று பலவற்றை செய்வது போல், அவ்வளவு அழகாக ஈஷா வரைந்து வைத்து…
இறுதியில் அவர்கள் அனைவரும், ரோஜா தோட்டத்தில் ஒன்றாக நிற்கும் படியான, ஒரு குடும்ப படத்துடன் அந்த புத்தகத்தை அவள் நிறைவு செய்திருக்க.
“வொண்டர்ஃபுல் பேபி” என்று அவளை பாராட்டிய ஈத்தன்…
மகளின் ஆசையை பார்த்து, “இந்த பேபீஸ் போதுமா பேபி” என்றான் புன்னகையுடன்…
பின்னே ஈஷா, பத்து குழந்தைகளுக்கு மேல், அவர்களுடன் இருப்பது போல் அல்லவா வரைந்து வைத்து இருக்கிறாள்.
ஈத்தனின் கிண்டலை உணராத ஈஷாவோ, “நோ பேபி… இன்னும் நிறைய பேபிஸ் வேண்டும்…” என்றவள்.
“மீதியை வரையரதுக்குள்ளே நோட்டில் பேப்பர் முடிஞ்சு போச்சு…” என்று வருத்தமாகக்கூற…
ஈத்தனால் அவள் வருத்தத்தை தாங்க முடியாமா என்ன!?
“டோன்ட் வொர்ரி பேபி… பேப்பர் முடிஞ்சால் என்ன?” என்றவன். “உன் அம்மா, வருஷத்துக்கு ஒரு பேபி கண்டிப்பா தரேன்னு, என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்காங்க. எவ்வளவு வேண்டுமானாலும் நாம கேட்டு வாங்கிக்கலாம், சரியா…” என்றுக்கூறி, அவளை சமாதானம் செய்துவிட்டு… குறிஞ்சியை பார்க்கவும்…
அவளோ, ஏற்கனவே ஈஷாவின் படங்களை பார்த்தே சிவக்க ஆரம்பித்து, இறுதியில் ஈத்தனின் பேச்சில், “அச்சோ! எப்படி பேசறார் இவர்” என்று முழுவதுமாக சிவந்து, தக்காளி போல் பளபளவென்று அமர்ந்திருந்தாள்.
ஈஷா வேறு “அப்படியா அம்மா?” என்று ஈத்தன் கூறியதை கேட்டு, அவளை ஒருவழிசெய்ய ஆரம்பித்து இருந்தாள்.
________________________________
ஒருவழியாக ஈஷா இரவில் முழித்திருக்க முடியாது, “ஹேப்பி பர்த்டே பேபி” , “குட் நைட் அம்மா” என்றவாறே, அவர்கள் இடையே மீண்டும் படுத்து, விரைந்து உறங்கிவிட…
அன்றுப்போலவே ஈத்தனின் கரம், ஈஷாவின் மீதிருந்த குறிஞ்சியின் கரத்தினை எடுத்து, தன் விரல்களுடன் சேர்த்து பிணைக்க ஆரம்பித்து இருந்தது.
அதில் நாணம் மீதூற, அவனை பார்த்த குறிஞ்சி…
அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக, அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறவும்…
“தேங்க் யூ” என்ற ஈத்தன் தன் இதழ்களை பிடித்து வைத்திருந்த அவளுடைய கரத்தின் உள்ளங்கையினுள் புதைத்து இருந்தான்…
அதில் அவன் மீசை முடிகள் மொத்தமாக குத்தி சிலிர்த்த குறிஞ்சி…
“அச்சோ…” என்று மெல்ல முனகியப்படி, அந்த கையை இழுத்துக் கொள்ள பார்க்க.
ஈத்தன் விடவே இல்லை.
அதில் குறிஞ்சிக்கு, அவள் உடலில் ஒருயிடம் விடாது முழுவதுமாக கூச ஆரம்பித்து, நெலிய வைக்க, அவள் கொலுசுகள் அந்த நிசப்தமான அறைக்குள் அவ்வளவு சத்தமாக ஒலியெழுப்ப ஆரம்பித்துவிட்டு இருந்தன…
அதில், பட்டென்று தன் இதழ்களை, அவள் கரத்தினுள் இருந்து பிரித்தெடுத்துவிட்ட ஈத்தன்…
“ஷ் கேர்ள்… பேபி…” என்று ஈஷாவை காட்டி அவளை அடக்கியவன்…
குறிஞ்சியின் உணர்வுகளின் பரிமாணத்தின் மூலம், அவள் எவ்வளவு மென்மையான பெண் என்பதை உணர்ந்து, வியந்தவன்…
அதையும் ரசித்தவாறே, அவள் கரத்தினை தன்னுடைய நெஞ்சோடு அணைவாக பிடித்து வைத்துக்கொண்டு, உறங்க ஆரம்பித்து இருந்தான்.
அதில், குறிஞ்சியும் அவனின் மார்பு தரும் கதகதப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி உறங்க ஆரம்பித்து இருந்தாள்…
________________________________
மறுநாள் காலை ஈத்தன், ஈஷாவுடன் யோகா செய்ய கீழிறங்கி வரும் பொழுதே…
அங்கு, சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய மிகப்பெரிய பேஸ்கட்டுடன் நின்றிருந்த சக்தி…
“ஹேப்பி ஹேப்பி பிறந்தநாள் தலைவரே” என்று ஓடிவந்து ஈத்தனை அணைத்துக்கொள்ள…
“ஹேய்… தேங்க் யூ மச் டா…” என்று அவனை அணைத்துக்கொண்ட ஈத்தன், அவன் முதுகில் தட்டிக்கொடுக்க…
“இந்தாங்க தலைவரே” என்று, ரோஜாக்கள் நிறைந்த பூக்கூடையை ஈத்தன் கையில் கொடுத்த சக்தி…
“எப்பவும் போல இந்த வருஷமும் எங்களுக்கு நிறைய போதை மருந்துகளை(பாடல்களை) இறக்குமதி செய்து, அந்த போதை தெளியாமலே எங்களை நீங்க வச்சிருக்கனும் தலைவரே. love you. உம் உம் உம்மா….” என்று அவனின் கன்னத்தில் தொடர்ந்து அழுத்தி முத்தம் கொடுக்க ஆரம்பிக்கவும்…
குறிஞ்சி, குளித்து முடித்து தயாராகி, வெளிவரவும் சரியாக இருந்தது.
அவர்களை பார்த்தப்படியே, மேலிருந்து கீழ் இறங்கிவந்தவள், அமைதியாக அவர்களை கடந்துச்செல்ல…
“டேய் டேய் போதும் டா… நான் இன்னும் பாத்(bath) கூட எடுக்கலை…”, என்று சக்தியிடம் கதறிக்கொண்டிருந்த ஈத்தன்.
குறிஞ்சியின் இருப்பை உணர்ந்து, பட்டென்று திரும்பி பார்க்கவும்.
குறிஞ்சி அவனையும், சக்தியையும் மென் புன்னகையுடன் பார்த்த வண்ணம் தள்ளி நின்றிருந்தாள்.
பொறாமை எல்லாம் துளி அளவும் அவளிடம் இல்லை.
நாம் காதலிப்பவருக்கு நிறைய காதல்(அன்பு) கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி தானே.
ஈத்தனின் பார்வை தன்மீதே தொடர்ந்து இருப்பதில், குறிஞ்சி மெல்ல தன் தலையை குனிந்துக்கொண்டாள்.
அதில் ஈத்தனின் இதழ்களின் ஓரம் மெல்லிய ரகசிய புன்னகை பூக்க தொடங்கவும்.
ஈத்தனின் கவனம் தன்மீது இல்லாததை உணர்ந்து, அவனை தொடர்ந்து சக்தியும், திரும்பி குறிஞ்சியை பார்த்துவிட்டு இருந்தான்.
அப்பொழுது ஈஷா, குறிஞ்சியின் இடையை சுற்றி கைப்போட்டு, அவளிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்…
அதை தன் புருவங்களை சுருக்கி பார்த்த சக்தி…
குறிஞ்சியை பார்த்து முறைக்க ஆரம்பிக்கவும்…
அவன் புறம் மீண்டும் திரும்பியிருந்த ஈத்தன்…
அவனின் பார்வையை உணர்ந்து…
“டேய் அங்க என்னடா பார்க்கிற” என்று அவன் தோளில் தட்டி இருந்தான்.
அதற்கு, “ஒன்னும் இல்லை தலைவரே” என்ற சக்தி, “எப்படி சீக்கிரம் நர்ஸூக்கு படிச்சு முடிக்கிறது. தாய்லாந்து போய் பொண்ணா மாறிட்டு வரதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான், இப்பொழுது ஈத்தனை முறைத்து பார்த்தவண்ணம்.
ஒருசில வினாடிகளுக்கு பிறகே அவன் எதற்காக அப்படி சொல்கிறான் என்று புரிந்து, “டேய்…” என்று அவனை அதட்டிய ஈத்தன்.
திரும்பி, “பேபி நீங்க போயிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க. டாடி பேசிட்டு வரேன்” என்று ஈஷாவிடம் கூறவும்…
“ஓகே பேபி” என்றவள், “பாய், சக்தி ப்ரோ” என்றுவிட்டு குறிஞ்சியுடன் சிட்டாக பறந்துவிட்டு இருந்தாள்.
________________________________
அலுவலக அறைக்குள் சக்தியுடன் நுழைந்திருந்த ஈத்தன்.
“ஸ்கூல் வொர்க் எந்த அளவில் இருக்கு சக்தி. கம்மிங் இயர் நாம ஓப்பன் செய்தே ஆகனும்”, என்று வேலை தொடர்பாக அவனுடன் பேச ஆரம்பித்து இருந்தான்.
ஈஷாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, தன்னாலும் நிம்மதியாக இருக்க முடியாது, அவளாலும் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த பிளானே இனி வேண்டாம் என்று, எப்பொழுதோ முடிவெடுத்துவிட்டு இருந்தவன்…
குறிஞ்சி வந்த பிறகு, அம்முடிவில் மேலும் உறுதியாகி…
சொந்தமாகவே ஒரு பள்ளியை ஈஷாவிற்காக என்று கட்ட ஆரம்பித்துவிட்டு இருந்தான்.
இன்டர்நேஷனல் போர்ட் முறைப்படி, வகுப்பிற்கு இருபது மாணவர்கள் மட்டுமே இருக்கும் படியான சிறிய பள்ளியை, அனைத்து விதமான வசதிகளுடனும், பாதுகாப்புகளுடனும் கட்டும் பணிகளை துவங்கிவிட்டு இருந்தவன். அதற்கான வேலைகள் மொத்தத்தினையும் சக்தியின் பொறுப்பில் விட்டு இருந்தான்.
அதுத்தொடர்பாக சக்தியிடம் பேசி முடித்த ஈத்தன், அவன் கிளம்பியப்பிறகு, தன் வேலைகளை முடித்துக்கொண்டு, உடனே வெளியே கிளம்பிவிட்டு இருந்தான்.
ஐஸ்வர்யா, பிரபு விஷயத்தால், முடிக்க முடியாத வேலைகள் அவனுக்காக அவ்வளவு காத்திருந்தன.
அன்று மாலை அவன் வீடு திரும்பிய போது, ஈஷாவும், குறிஞ்சியும் அவனுக்காக வீட்டிலேயே கேக் செய்து வைத்து காத்திருக்க…
உமையாள் அம்மாவின் ஆசைப்படியே, ஈத்தனின் சிதைந்த கூடு மீண்டும் அவனைச் சுற்றி உருவாக ஆரம்பித்துவிட்டு இருந்தது. அதுவும் மிகுந்த உறுதியுடன்.
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக