39.3
‘ஈத்தன் உள்ளே இருக்கின்றானா? இல்லையா? இதையெல்லாம் அவன் பார்ப்பானா? இல்லை மாட்டானா?’ என்று எதுவும் தெரியாமல்… கடவுளுக்கு செய்வது போல்…
அவன் பிறந்தநாளை அங்கு அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி, ஒருவருக்கு மற்றொருவர் ஊட்டிவிட்டு என்று மகிழ்வாக இருந்தவர்கள்…
ஈத்தனை எதிர்பாராது அங்கு பார்த்ததும்… வானுக்கும், பூமிக்கும் ஒரே ஆட்டம் தான்…
அதிலும் ஈஷா பிறந்த பிறகில் இருந்து, அவன் எந்த இசை நிகழ்ச்சியும் நடத்தாமலும், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களுக்கும் செல்லாமல் இருந்ததில்… அவனை அதிகளவில் தேடியவர்களுக்கு, இந்த நேரடி தரிசனம் தரும் சந்தோஷத்தை குறித்து சொல்லவும் வேண்டுமா என்ன…
ஓடிவந்து அவனை சூழ்ந்துக்கொண்டவர்கள்… அவன் கையில் இருந்த அவனின் சிறிய பொம்முக்குட்டியை பார்த்து சத்தத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு…
அவனை கட்டிப்பிடித்து… ஆசையாக முத்தம் கொடுத்து என்று… அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி… அவனுடன் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளவும்…
ஈத்தனின் பிறந்தநாள் அவ்வளவு அழகாக பிறந்து, மகிழ்வுடன் நகர்ந்துக்கொண்டு இருந்தது.
அனைவருக்கும், இனிப்புகளை வாங்கி வரச்செய்து தந்து அனுப்பி இருந்தான்.
அதையெல்லாம், மறுநாள் இணையத்தில் வெளியான வீடியோக்களின் மூலம், கண்டிருந்த குறிஞ்சியின் சந்தோஷத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா என்ன…
அதிலும், அவன் கையில் புசுபுசுவென்று நன்கு வளர்ந்துவிட்டிருந்த ஈஷாவை, நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தவளின் கண்கள் இரண்டும் குளம் கட்டிவிட்டு இருந்தன!
அவளின் ஒருபகுதியல்லவா!
எத்தனை முறைதான் அதையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்து இருப்பாளோ தெரியாது… கணக்கே கிடையாது…
அதன் பிறகு தான், அவளின் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்க கூடாதவை எல்லாம் நடந்து… சற்றும் எதிர்பாராத இடமான கொடைக்கானலில் தஞ்சம் ஆகியிருந்தவள்…
மறுவருடம் முதலே, ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் அந்த ரோஜாவினை முன்பதிவு செய்து, அனுப்ப ஆரம்பித்து இருந்தாள்.
அவள் தன் வாழ்வில் முதன் முதலாக பரிசு என்று வாங்கிக்கொடுக்க நினைத்ததே ஈத்தனுக்கு தான் என்னும் போது… எதை வாங்குவது என்று தெரியாமல்… தன் மூளையை போட்டு கசக்கி பிழிந்து… இணையத்தில் தேடி… அந்த Forever Rose யை கண்டுப்பிடித்து இருந்தவள்…
வருடம் தவறாமல், அவர்கள் இருவருக்கும் தன் கைப்பட வாழ்த்து மடலை எழுதி… அந்த நிறுவனத்திற்கு முன்கூட்டியே பல மாதங்களுக்கு முன்பே அனுப்பி… அந்த நிறுவனம் அதனை அந்த ரோஜாவுடன் வைத்து ஈத்தனுக்கு அனுப்பி என்று…
ஈத்தனின் நினைவில் மட்டுமில்லாது, அவன் வாசத்திலும் குறிஞ்சி மலர் நீங்காமல் நிறைந்து இருந்தாள்…
அதுவும் இவ்வருடம் அவனுக்கும், அவளுக்கும் இடையில், அவள் கழுத்தில் அவன் தாலியை பார்த்தபிறகு அவ்வளவு நடந்தும்…
அவள் அவனுக்காக பாரத்துப்பார்த்து செய்திருந்தது…
ஈத்தனின் மீது மென் சாரலாய் பொழிய ஆரம்பித்து இருந்தது.
ரசிகர்கள் அனுப்பும் ரோஜாக்களை எப்பொழுதுமே ஈத்தன் வீணாக்கியதில்லை. அனைத்தையுமே வீடு முழுவதும் மணமாக இருக்க பயன்படுத்தும், வாசனை ஸ்ப்ரே, வாசனை எண்ணை, வாசனை மெழுகு வர்த்தி என்று அவைகளை இயற்கையான முறையில் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து, பெற்றுக் கொள்வான். அதனுடன் இந்த ஃபார்எவர் ரோஜாவை அனுப்ப முடியாது என்பதால், தனியாக பிரித்து சேமித்து வைத்துக்கொண்டு வந்து இருந்தான் ஈத்தன்.
குறிஞ்சியின் அவன் மீதான பற்றை, மற்றவைகளுடன் கலந்துவிட முடியுமா என்ன?!
________________________________
மணி பன்னிரண்டை இன்னும் சில நிமிடங்களில் நெருங்கிவிடும் எனவும், “இன்னும் இவர் ரூமுக்கு வராம, வெளியே என்ன தான் செய்யறாரோ?” என்ற எண்ணத்தில், தன் சுடிதார் துப்பட்டாவின் நுனியை போட்டு விரலில் சுத்தி, கழட்டி என்று ஒருவழி செய்துக் கொண்டிருந்த குறிஞ்சி…
“நாமாக சென்றால் எதுவும் திட்டுவாரோ… தூங்க வேறு சொல்லிவிட்டு சென்றாரே… பாப்பாவை எப்படி தனியாக விட்டு செல்வது”, என்று பல குழப்பத்தில் இருந்தவள்…
சின்ன முள்ளும், பெரிய முள்ளும் இன்னும் சில வினாடிகளில் ஒன்றாக பன்னிரண்டை தொட்டுவிட போகிறது எனவும்…
வெளியே பாதுகாவலர்கள் யாரும் இருந்தால் அழைத்து கேட்போம் என்று…
அறைக்கதவை திறக்கவும்…
அங்கு ஈத்தன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அதுவும் அவன் கையில், அவள் அனுப்பிய ரோஜாக்கள் அனைத்தும் இருக்கவும்…
‘ஐயோ இதை எப்படி கண்டுப்பிடித்தார்’ என்று குறிஞ்சி தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு இருந்தாள்.
அதில் வந்த சிரிப்பை தன் பற்களுக்கு இடையேவே மறைத்துக்கொண்ட ஈத்தன், அவள் கண்களை ஆழமாக பார்த்த வண்ணம்…
“எனக்கு இந்த ரோஜாக்கள் எதுவும் வேண்டாம்…” என்று அவளிடம் அந்த ரோஜாக்கள் மொத்தமும் அடங்கிய ட்ரேவை நீட்டி இருந்தான்…
அதில், ‘அச்சோ! நான் இதைப் பத்தி சொல்லலைன்னு கோச்சிக்கிட்டாரா…’, என்று திகைத்துப்போன குறிஞ்சி…
அவனிடம் மறுப்பு தெரிவிப்பதற்குள்…
“பிடி கேர்ள்” என்று அவள் கைகளில், அந்த ட்ரேவினை வலுக்கட்டாயமாக தந்துவிட்ட ஈத்தன்…
அவள் சற்றும் எதிர்பாராத விதமாக, "I don't want a Forever Rose. I want Kurunji forever” என்று இருந்தான் ஈத்தன்.
அதில் குறிஞ்சியின் விழிகள் இரண்டும் தெரித்துக்கொண்டு வெளியே குதிக்க பார்க்க…
“என்ன… என்ன சொன்னீங்க” என்று அவள் தான் கேட்டது சரிதானா என்று சந்தேகமாகி அவனிடம் கேட்கவும்…
அவளுக்கும், அவனுக்கும் இடையில் இருந்த இடைவெளியினை, ஒரு மில்லி மீட்டராக குறைத்து, அவளை நெருங்கி நின்ற ஈத்தன்…
அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து….
“எனக்கு இந்த Forever Rose வேண்டாம். இந்த ‘குறிஞ்சி மலர்’ தான் எப்பொழுதும் வேண்டும்னு சொன்னேன்” என்று ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக கூற…
குறிஞ்சியின் கண்கள் இரண்டிலும் இருந்து, நீர் முத்துக்கள் படபடவென்று கொட்ட ஆரம்பித்து அவன் மீது தெரித்து இருந்தன…
அதைப்பார்த்த ஈத்தனின் கண்களிலும் ஈரத்தின் பளபளப்பு…
அவளின் ஒரே ஆசை,
அவளின் ஒரே காதல்,
அவளின் வாழ்நாள் முழுவதிற்குமான ஒரே தவம்.
அனைத்துமாகிய அவன்.
அவள் வாய்விட்டு கேட்காமலேயே, மொத்தமாக அவளுக்கு தந்துவிட முடிவு செய்து…
அவளை கேட்டு நின்று இருந்தான்.
வாழ்வில் முதல்முறை இருவரின் கண்களும் கலங்கியிருந்த தருணத்தில்… இருவரின் இதழ்களும் புன்னகையில் விரிந்து இருந்தன…
அதில் ஈத்தன், அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில், “ஈத்தனுக்கு குறிஞ்சி மலர் கிடைக்குமா…” என்று தன் கண்களை சிமிட்டி அவளிடம் கேட்க.
என்ன சொல்வாள் குறிஞ்சி.
நெஞ்சம் முழுவதும் வேக வேகமாக மேலெழுந்து தணிய, ஈத்தனை நிமிர்ந்து பார்த்தவள்…
ஈத்தன் சற்றும் எதிர்பாராத விதமாக, தன் கையில் இருந்த ட்ரேவை அப்படியே கீழே தரையில் வைத்துவிட்டு, அங்கு வரவேற்பறையில் இருந்த குளியலறைக்குள் ஓடி மறைந்து இருந்தாள்…
அதில், “வாட்…” என்று ஈத்தன் முழுவதுமாக அதிர்ந்து நின்றுவிட்டிருந்தான்…
உள்ளே மூடிய கதவின் மீது, மூச்சுவாங்க நெஞ்சினை பிடித்த வண்ணம், சாய்ந்து நின்றிருந்த குறிஞ்சியின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்!
சத்தியமாக அந்த நொடிகளை எப்படி சுமப்பது என்று அவளுக்கு தெரியவில்லை… அவ்வளவு சுகத்தினை அவைகள் கொண்டிருந்தன…
அனைத்தும் பற்களையும் காட்டி சிரித்த வண்ணம் இருந்தாள்.
கிடைக்கவே கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும், அவள் நொடிக்கு நொடி ஆசைப்பட்டவன்…
திடீரென்று வந்து அவளை கேட்டால் என்ன செய்வாள் அவள்…
இருக்கரத்தினாலும் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே சில வினாடிகள் நின்றுவிட்டு இருந்தவள்…
கதவை திறந்துக்கொண்டு வெளிவந்து மீண்டும் ஈத்தன் முன்பு நின்று இருந்தாள்.
அவளின் செய்கைகளை எல்லாம் ஈத்தன் பொறுமையாக உள்வாங்கிக்கொண்டு மென் புன்னகையுடன் நின்றிருக்க…
அவன் முகத்தை பார்த்து, “உண்மையா வேண்டுமா குறிஞ்சியை…” என்று கேட்டிருந்தாள் குறிஞ்சி.
அதில் ஈத்தனின் இதழ்களும், கண்களும், “இப்படியும் பேசுவாளா குறிஞ்சி” என்று ரசனை மிகுந்து மின்ன…
தன் தலையினை மேலும் கீழும் ஆட்டி, “எஸ்… ஐ வான்ட்” என்றான் ஈத்தன்.
அதில் “ம்…” என்று பார்த்த குறிஞ்சிக்கு, அவளின் பன்னிரண்டு ஆண்டு காத்திருப்பிற்கு, ஈத்தனின் அந்த எண்ணிய வார்த்தைகள் அடங்கிய பதில்கள் பற்றவே இல்லை…
அவன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தது.
அதில், “ஏன் வேண்டும்?” என்று அவனிடம் காரணம் கேட்டு, அவனை மேலும் பேச வைத்தாள்.
அதில், ஈத்தனுக்கு புன்னகை மேலும் விரிந்து இருந்தது.
என்னவென்று காரணம் சொல்வது அவன்.
வேண்டும் என்றால் வேண்டும் தானே.
‘சோதிக்கின்றாளே…’ என்று தன் தலையை கோதியப்படி, வலப்பக்கம் திரும்பி ஒருசில வினாடிகள் பார்த்துக்கொண்டிருந்தவன்…
மீண்டும் திரும்பி குறிஞ்சியை பார்க்கும் போது… ஈத்தனின் கன்னங்கள், காதுகள் வரை சிவந்து இருந்தது…
ஆனால், குறிஞ்சியோ விடா கண்டியாக பதில் வேண்டி நின்றிருக்க….
“Because you belong to me girl, I want what's mine” என்றான் ஈத்தன்.
‘நீ எனக்கானவள். எனவே என்னுடையது எனக்கு வேண்டும்’ என்று, அவளுக்கான பட்டா பத்திரத்தை கையில் வைத்திருப்பவன் போல், அவ்வளவு உரிமையாக அவன் கூறவும்.
குறிஞ்சியின் காதல் கொண்ட நெஞ்சம் முழுவதும் தேன்மழை அடைமழையாக பொழிய ஆரம்பித்து இருந்தது.
அவனுக்காக தானே அவள்!
உடல் முழுவதும் மகிழ்ச்சியும், நாணமும் பாய்ந்தோட…
தன் சுடிதார் துப்பட்டாவை போட்டு ஒருவழி செய்த வண்ணம், அங்கும் இங்கும் தன் பார்வையை ஓட்டியவள்…
ஒருவழியாக ஈத்தன் மீது தன் பார்வையை நிறுத்தி…
“என்னை எப்படி பேக் பண்ணி உங்க கையில் கொடுக்கிறது. எவ்வளவு யோசிச்சாலும் தெரியலையே” என்று அவன் கேட்டதற்கு அவள் பதில் கூறி முடிப்பதற்குள்… அவளை அப்படியே நின்ற நிலையிலேயே, தன் இரு கைகளுக்குள் அள்ளி, பூச்செண்டு போல் தூக்கி, ஏந்தியிருந்தான் ஈத்தன்…
அதில், “அச்சோ…” என்ற குறிஞ்சியின் விழிகள் இரண்டும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் விரிந்துக்கொள்ள… அவனின் கழுத்தை தன் இருக்கரம் கொண்டு அணைத்து, அவள் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பார்க்க…
அவனின் முகத்திற்கு நேராக இருந்த அவளின் முகத்தை பார்த்து, “இனி இந்த குறிஞ்சி மலர், ஒன்லி மைன்” என்று அவளின் நெற்றியில், தன் நெற்றியை வைத்து கூறிய ஈத்தன், அவளை மேலும் இறுக்கமாக தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, அப்படியே ஒரு சுற்று சுற்றி நிறுத்த….
குறிஞ்சி, ஈத்தனை மேலும் இறுக்கமாக அணைத்து பிடித்து இருந்தாள்.
அதில், இரண்டு பேரின் நெஞ்சமும் ஒன்றுடன் ஒன்று அவ்வளவு நெருக்கமாக இணைந்து, படபடவென்று துடிக்க தொடங்கவும்,
குறிஞ்சியின் சுவாசம் முழுவதையும் ஈத்தனின் வாசமும்… ஈத்தனின் சுவாசம் முழுவதையும் குறிஞ்சியின் வாசமும் நிறைத்து…
இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வசத்தை இழக்க செய்ய…
மூச்சு வாங்கிய வண்ணம் நடுங்கிக்கொண்டிருந்த குறிஞ்சியின் சற்று பிரிந்த இதழ்களுடன், ஈத்தனின் இதழ்கள் மெல்ல இணைந்து இருந்தன!
அதனை சற்றும் எதிர்பார்த்திராது விரிந்த குறிஞ்சியின் விழிகள், மெல்ல ஈத்தனின் இதழ்களின் மென்மையை, தன் இதழ்களின் மூலம் உணர்ந்து மூடிக்கொண்டன…
எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல், தன் இதழ்களுக்குள் அடங்கிவிட்ட அவளுடைய இதழ்களை மேலும் அறியும் வண்ணம் அதில் சற்று அழுத்தம் கூட்டியவன்…
அவளின் மூடிய விடிகளை பார்த்தப்படியே, அவளின் கீழ் இதழை, மெல்ல தன் இதழ்களுக்கு இடையில் எடுத்து மிழுங்க பார்க்க…
சைவ முத்தம், அசைவமாக மாறுவதில்… அதிர்ந்துப்போய் தன் கண்களை திறந்த குறிஞ்சி…
ஈத்தனின் நீல விழிகள் அவ்வளவு நெருக்கத்தில் காட்டிய உணர்வுகளில்… படபடத்துப்போய்… முன்பை விட இறுக்கமாக தன் கண்களை மூடிக்கொள்ள…
ஈத்தனின் கண்களும், மெல்ல அவளின் இதழ்களின் மென்மையை முழுதாக உணர்வதற்காக மூட ஆரம்பிக்கவும்…
“பேபிஇஇஇஇ! வேர் ஆர் யூ” என்று அறைக்குள் இருந்து வந்த ஈஷாவின் சத்தத்தை தொடர்ந்து, அவள் வெளியே ஓடிவரும் சத்தமும் கேட்க ஆரம்பித்து இருந்தது.
அதில், “அச்சோ! பாப்பா வரா…” என்ற குறிஞ்சி.
ஈத்தன், “ஹே! பார்த்து… பார்த்து…” என்றதை சற்றும் பொருட்படுத்தாமல்… அவன் கரத்தினுள் இருந்து வேகமாக துள்ளி இறங்கி, விலகி நின்றுக்கொள்ளவும்…
ஈஷா வந்து சேரவும் சரியாக இருந்தது.
________________________________
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக