4.1-சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️

அத்தியாயம்-4 சகல வசதிகளுடன் வீடு போலிருந்த உயர்ரக கேரவனின் உள் அறைக்குள் இருந்த சொகுசு படுக்கையில், ஈத்தன் கொடுத்த இரவு உணவை சமத்தாக உண்டுவிட்டு, இலகுவான இரவு உடைக்கு மாறியிருந்த ஈஷா, நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளருகேயிருந்த ஈத்தன் ஈஷாவின் உறக்கம் கலையாத வண்ணம், தொலைபேசியில் சன்னக்குரலில் பேசிக்கொண்டு இருந்தான். அவன் அன்னை சித்ரலேகா ஏதோ கூற, “நோ மாம். நான் விசாரிக்க சொல்லி இருக்கேன். நீங்க எதுவும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்” என்றான் உறுதியுடன். அதில் சித்ரலேகா, “இதெல்லாம் நம்ம ஸ்டேட்டஸுக்கு தேவையா ஈத்தன்? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு வெளியே சொல்லக்கூடாதுன்னு” என்றவர், எப்பொழுதும் ஆரம்பிக்கும் பல்லவியை ஆரம்பித்துவிட… ஈத்தன் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை. அழைப்பை துண்டிக்கவுமில்லை. இறுதியில் அவருக்கே வாய் ஓய்ந்து, “இவ்வளவு அழுத்தம் உனக்கு இருக்கக்கூடாது ஈத்தன்” என்றுவிட்டு மூச்சு வாங்க… “சாரி மாம்… ப்ளீஸ் டேக் கேர்…” என்றுவிட்டு ஈத்தன் தொலைபேசியை வைத்துவிட்டான். அதில் கைக்கு அடக்கமாக இருந்த மகனை தொடர்ந்து அப்படியே வைத்துக்கொள்ளாது விட்டுவிட்ட சித்ரலேகாவினால், இப்பொழு...