3.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘
மகளை முதலில் இங்கிருந்து அழைத்துச்சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிவந்திருந்த ஈத்தன்…
“பேபி…” என்று அவள் தோளில் கை வைக்க.
தந்தையின் குரலில் முகம் முழுவதும் மத்தாப்புகள் பூக்க திரும்பி அவனைப்பார்த்த ஈஷா, தொகுப்பாளினியிடம், “எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி…” என்றுவிட்டு, ஈத்தனிடம், “பேபி! நீங்க வரும் வரை நான் ஆன்ட்டி கூட பேசிட்டு இருந்தேன். ரொம்ப ஸ்வீட் இவங்க. இருங்க பேபி நான் கான்வர்சேஷனை முடிச்சிட்டு வரேன். அதானே சரியான மேனர்ஸ்” என்று அவன் கற்றுக்கொடுத்தவற்றை அவனிடமே கூறியவள்.
திரும்பி, “என்ன ஆன்ட்டி கேட்டீங்க. என் அம்மாவ எனக்கு பிடிக்காதான்னு தானே கேட்டீங்க?” என்று கேட்டு அக்கேள்வியை உறுதிப்படுத்திக்கொண்டவள், “யாருக்காச்சும் அவங்க அம்மாவ பிடிக்காமல் போகுமா என்ன? எனக்கு என் அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. ஆனால் அவங்க நீங்க தரும் எந்த நம்பர் உள்ளேயும் அடங்க மாட்டாங்க. She is infinite(எல்லையற்றவள்). அதனால் தான் நான் சொல்லலை” என்றுப்பதில் கூறிவிட…
அப்பதிலில் லைவ் ஷோ பார்த்துக்கொண்டிருந்த மொத்த மக்களின் புருவமுமே உயர்ந்து இருந்தது.
தாய்மையை இதற்குமேல் வார்த்தைகளால் மரியாதை படுத்த முடியுமா என்ன?
அதைவிட ஈத்தன் தன் மனைவியுடன் தொடர்பில் இல்லை என்று பெரும்பாலானவர்கள் நினைத்திருக்க, இப்பதில் அனைவரையும் சீட் நுனிக்கு கொண்டு வந்திருந்தது.
ஈத்தனுக்கோ சற்று முன்னர் அவன் கொண்ட பதட்டம் துணிக்கொண்டு துடைத்ததுப்போல் காணாமல் போய்விட்டது. எவ்வளவு அழகாக தன் மகள் பதில் கூறியிருக்கின்றாள் என்று அகம் மகிழ்ந்து போனான். தன்னையும் தாண்டிய இடத்தில் அவள் தன் அன்னையை வைத்திருப்பதில் அவனுக்கு சிறு துளியும் பொறாமை இல்லை. ஏனென்றால் அவனுமே தன் மனதில் அவள் அன்னையை அத்தகைய உயர்வான இடத்தில் தான் வைத்திருக்கின்றான்.
அதற்குள் அவனின் சந்தோஷத்தை நிறுத்தும் விதமாக, “வாவ் அமேசிங் ஆன்சர்” என்ற தொகுப்பாளினி பெண், “அப்படி என்ன ஈஷா பேபிக்கு அவங்க அம்மா மட்டும் ஸ்பெஷல்? எங்களுக்கும் சொல்லுங்களேன். கேட்க ஆசையா இருக்கோம்” என்று தேனில் தோய்த்தெடுத்த ஈட்டி ஒன்றை குழந்தை மீது செலுத்த.
அதில் வஞ்சம் என்ற ஒன்றை, வார்த்தை வழியாக கூட அறியாத குழந்தை சிறிதும் காயப்படவில்லை.
மாறாக “இந்த அழகான உலகத்தை என் பேபிக்கூட பார்க்க.. எனக்கு உயிர் கொடுத்து இருக்காங்க.. அது போதாதா ஆன்ட்டி?!” என்று அசராது பதில் கூறி, “தேங்க் யூ சோ மச் மாம்” என்று நிமிர்ந்து வானை பார்த்து கூறியவள், திரும்பி அருகிலிருந்த ஈத்தனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அதில் மகளை ஒருக்கையால் தன் மார்புடன் சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டவன், நிமிர்ந்து தொகுப்பாளினியை பார்த்த ஒருப்பார்வையில், அவளின் உடலில் இருந்த மொத்த செல்களும் ஜில்லிட்டு போனது.
அது தன் குஞ்சினை காக்கும் தாய்பறவையின் வேட்கை நிறைந்த பார்வை. மீறி நெருங்கினால் ஆக்ரோஷமாக தாக்கப்படுவாய் என்ற எச்சரிக்கை நிறைந்த பார்வை.
அதில் இத்தனை நேரம் அவளிடம் இருந்த மொத்த தைரியமும் நொடியில் இருந்த இடம் தெரியாது காணாமல் போய்விட்டது.
அவள் கையிலிருந்த மைக்கை கைநீட்டி வாங்கிய ஈத்தன். “நோ மோர் பர்சனல் கொஸ்டின்ஸ், மிஸ்.சௌந்தர்யா” என்று நேரடியாக அனைவரின் முன்பே கூறிவிட்டு மைக்கை அவளிடம் கொடுக்க.
கைகள் நடுங்க மைக்கை வாங்கியவள் வேறுவழியின்றி செயற்கை புன்னகையுடன், “ஷோர் சார். ஷோர்”, என்றுவிட்டு, குழந்தையிடம், “வாவ் ஈஷா பேபி. உங்களை மாதிரியே உங்க பதில்களும் ரொம்ப அழகா இருக்கு” என்றுவிட்டு, “உங்களுக்கு எதிர்காலத்தில் என்னவாக ஆகனும்னு ஆசை. உங்களோட ஃபியூட்சர் ட்ரீம் என்ன? உங்க அப்பா மாதிரி சிங்கரா?” என்று சூசகமாக தனிப்பட்ட உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பொதுவான கேள்விக்கு மாறிவிட்டாள்.
அதில் தந்தையின் கைக்கோர்த்து நின்ற ஈஷா, “ஐ லைக் மியூசிக். பட் ஐ லவ் ஆர்ட்ஸ் அண்ட் டிசைனிங்” என்றாள்.
“இன்ட்ரெஸ்டிங் ஈஷா… எதிர்காலத்தை பற்றிய நல்ல தெளிவு உங்கக்கிட்ட” என்ற தொகுப்பாளினிக்கு அதற்கு மேல் என்ன கேட்பது என்று பயத்தில் உடனே தோன்றவில்லை. ஈத்தனின் ஒற்றை பார்வையிலேயே அவளுக்கு பேசும் மொழியே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போவது போல் இருந்தது.
அந்த இடைவெளியில், கீழே இருந்து பலர் ஈஷாவை பாடச்சொல்லி கேட்க.
அப்பாடா என்று அதைப் பிடித்துக்கொண்ட தொகுப்பாளினி, “உங்க பேபிய பார்க்க வந்திருக்கும் எங்களுக்காக ஒரு பாட்டு உங்களால் பாட முடியுமா ஈஷா?” என்று கேட்டாள்.
இதுவரை அவள் வெளியில் எங்கும் பாடியது இல்லை. ஏன் முறையாக சங்கீதம் கற்றதும் இல்லை. ஈத்தனுடன் சேர்ந்து வீட்டில் அரிதாக பாடும் எண்ணம் தோன்றினால் ஏதாவது பாடுவாள். அவ்வளவு தான். ஈத்தனுக்கு ஈஷாவுடைய குரலின் வலிமை புரிந்து இருந்தாலும், அவளுக்கு இசைமீது பெரிதாக நாட்டம் இல்லாதிருந்ததால், அவள் விருப்பத்தை மாற்றி, அவன் விருப்பம் எதையும் அவள் மீது திணித்ததில்லை. அதில் திடீரென்று பாடக் கேட்டதும் திரும்பி அவள் தன் தந்தை முகத்தை பார்த்தாள்.
“உன்னோட முடிவு தான் பேபி. உனக்கு விருப்பம் இருந்தால் பாடு. இல்லைனா நோ சொல்லிடு பேபி” என்றான் ஈத்தன்.
அதில் தலையசைத்தவளுக்கு, ரசிகர்கள் மேலும் பாடச்சொல்லி ஈத்தனிடம் கேட்டப்பொழுது ஈத்தன், ‘இதற்குமேல் முடியாது. தொண்டை வலிக்கிறது’ என்று சொன்னது ஞாபகத்திற்கு வர.
“நான் உங்களுக்காக பாடுறேன் படீஸ். பட் அதுக்கு அப்புறம் நீங்க என் பேபிக்கு ரெஸ்ட் கொடுத்துடனும்”, என்று அழகாக மக்களிடம் டீல் பேசி முடித்தவள்…
“அழகே அழகே
எதுவும் அழகே!
அன்பின் விழியில்
எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு!
மலர் மட்டுமா அழகு?
விழும் இலை கூட ஒரு அழகு!
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு!
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு!
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு!
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு!
அழகே அழகே
எதுவும் அழகே!”
என்று எங்கும் சிறு பிசிறும், நிறுத்தமும், பதட்டமும் இல்லாது, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற வாக்கியத்திற்கு இணங்க, பாடலின் வரிகளை அனுபவித்து, அதற்கேற்ற முகபாவனைகளுடன், அவள் மூச்சடக்கி பாடி முடிக்கவும், அரங்கம் மொத்தமும் கரகோஷத்தில் நிறைந்துவிட்டது.
குழந்தைகளின் உலகமும், ரசனைகளும் தான் எத்தனை அழகானது!?
“அறிவுக்குட்டி”, என்று அங்கு குறிஞ்சி ஈஷாவிற்கு ஆயிரமாவது முறையாக நெட்டு முறித்து விட்டுக்கொண்டு இருந்தாள்.
“அருமையான மயக்கும் குரல் ஈஷா உங்களுக்கு” என்ற தொகுப்பாளினி. “உங்க அப்பா நிறைய ரொமான்டிக் ஹிட்ஸ் சாங்ஸ் கொடுத்து இருக்கிறாரே. அதில் இருந்து ஒரு பாட்டு எங்களுக்காக நீங்க பாடி காட்டலாமே. உங்க குரலில் உங்க அப்பாவோட பாட்டை கேட்க ஆசையா இருக்கு” என்று ஐஸ் வைத்து…
“என்ன மக்களே?! இந்த வாய்ப்பை நாம விட்டா அவ்வளவு தான். கேளுங்க கேளுங்க” என்று அவர்களையும் தூண்டி விட.
சிலர் கேட்கவும் செய்தனர்.
அதில் உடனே ஈஷாவிடம் இருந்த மைக்கை வாங்கிய ஈத்தன், “சாரி டார்லிங்ஸ். எனக்கு என் மகள் அவளுடைய வயதுக்கு மீறிய பாடல்களை பாடுவதில் விருப்பமில்லை. குழந்தைகளை குழந்தைகளாக வளர விடலாமே!” என்று, பல தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும், சிறுவர்களுக்கான முறையற்ற பாடல் நிகழ்ச்சிகளுக்கு நொடியில் மூடுவிழா நடத்தி, மகளிற்கு வந்த தவறான விண்ணப்பத்தை நல் தந்தையாக நிராகரித்துவிட்டான்.
மேலும் தொடர்ந்து “நமக்கு புரோக்கிராம் நடத்த கொடுத்திருந்த நேரம் முடிஞ்சிடுச்சு டார்லிங்ஸ். சீக்கிரம் திரும்ப பார்க்கலாம். உங்களை எல்லாரையும் நேரில் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்காக நேரம் ஒதுக்கி வந்த ஒவ்வொருத்தருக்கும் என் நன்றியும் அன்புகளும். எல்லாரும் ஒரே நேரத்தில் கிளம்ப அவசரப்படாமல், பார்த்து நிதானமா போயிட்டு வாங்க” என்றவன், தொடர்ந்து, “வீட்டில் இருந்தப்படி லைவ்ல பார்த்துட்டு இருக்கும் டார்லிங்ஸ்க்கும் நன்றி! லவ் யூ ஆல்! சீ யூ சூன்” என்று பறக்கும் முத்தம் ஒன்றை மக்களுக்கு காற்றில் அனுப்பிவிட்டவன், தன் மார்புவரை வளர்ந்து நிற்கும் மகளின் வாய் அருகே மைக்கை லேசாக குனிந்து காட்ட, “குட் நைட் படீஸ்! பாய்!” என்று அவளும் அழகாக விடைக்கொடுக்க.
அரங்கில் இருந்த அனைத்து விளக்குகளும் போடப்பட்டன.
தொலைக்காட்சியிலும் விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டனர்.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/41.html
Very intersting ud sis, super
பதிலளிநீக்குAdi loose ponne kurimji enna venduthal vekkanum nu kanakke illama poite iruku, nee eduku ivlo venduthal veekkira unakum avanukum enna connect, eesha kutty nalla teliva pesita ma
பதிலளிநீக்குEgarly waiting for next..
பதிலளிநீக்குSuper sis
பதிலளிநீக்குWow super
பதிலளிநீக்குGood starting 👏
பதிலளிநீக்குVery nice
பதிலளிநீக்குவார்த்தைகளில் தெரியும்
பதிலளிநீக்குவளர்ப்பின் அருமை
காயப்படுத்தாத பதில்
கனிவான பார்வை
கவரும் குரலில் பாடல்
காண்போர் மனதை
களவாடிய ஈஷா....