இடுகைகள்

39.4

இருவரையும், தன் இரண்டு பக்க இடையிலும் கரத்தினை பதித்து மாறி மாறி, தூக்க கண்களுடன் பார்த்த ஈஷா… “என்னோட அலாரத்தை ஏன் பேபி இந்த வருஷமும் ஆஃப் பண்ணிங்க” என்று ஈத்தனிடம் கேட்டவள். குறிஞ்சியின் புறம் திரும்பி, “என்னை ஏன் அம்மா நீங்களும் எழுப்பலை” என்று கேட்கவும்… மொத்தமாக வியர்த்துப்போய் நின்றிருந்த குறிஞ்சி. பதில் கூறும் அளவிற்கெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு, சற்று முன்னர் நடந்த நிகழ்வில், வேலை நிறுத்தம் செய்துவிட்ட தன்னுடைய மூளையை வைத்துக்கொண்டு… திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தாள்… அதனை வெளியில் காட்டாத புன்னகையுடன் பார்த்த ஈத்தன், “நான் தான் பேபி, உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அம்மா கிட்ட சொன்னேன். சாரி”, என்றான். அதில், “போங்க பேபி…” என்று தன் ஒரு காலினை தூக்கி தரையில் மெல்ல உதைத்த ஈஷா… அறைக்குள் ஓடி, மிகப்பெரிய புத்தகம் ஒன்றுடன் வெளிவந்து, “ஹேப்பி பர்த்டே பேபி…” என்று அவன் கையில் அதனை பரிசாக தந்தவள். ஈத்தனை குனிய செய்து, “லவ் யூ பேபி” என்று அவனின் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி தன் இதழ்களை பதித்தெடுக்க… “மீ டு… லவ் யூ சோ மச் பேபி…” என்று, அவளை அணைத்து அவளின் நெற்...

39.3

‘ஈத்தன் உள்ளே இருக்கின்றானா? இல்லையா? இதையெல்லாம் அவன் பார்ப்பானா? இல்லை மாட்டானா?’ என்று எதுவும் தெரியாமல்… கடவுளுக்கு செய்வது போல்… அவன் பிறந்தநாளை அங்கு அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி, ஒருவருக்கு மற்றொருவர் ஊட்டிவிட்டு என்று மகிழ்வாக இருந்தவர்கள்… ஈத்தனை எதிர்பாராது அங்கு பார்த்ததும்… வானுக்கும், பூமிக்கும் ஒரே ஆட்டம் தான்… அதிலும் ஈஷா பிறந்த பிறகில் இருந்து, அவன் எந்த இசை நிகழ்ச்சியும் நடத்தாமலும், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களுக்கும் செல்லாமல் இருந்ததில்… அவனை அதிகளவில் தேடியவர்களுக்கு, இந்த நேரடி தரிசனம் தரும் சந்தோஷத்தை குறித்து சொல்லவும் வேண்டுமா என்ன… ஓடிவந்து அவனை சூழ்ந்துக்கொண்டவர்கள்… அவன் கையில் இருந்த அவனின் சிறிய பொம்முக்குட்டியை பார்த்து சத்தத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு… அவனை கட்டிப்பிடித்து… ஆசையாக முத்தம் கொடுத்து என்று… அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி… அவனுடன் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளவும்… ஈத்தனின் பிறந்தநாள் அவ்வளவு அழகாக பிறந்து, மகிழ்வுடன் நகர்ந்துக்கொண்டு இருந்தது. அனைவருக்கும், இனிப்புகளை வாங்கி வரச்செய்து தந்து அனுப்பி இருந்தான். அத...

39.2

நாளைய அவனின் பிறந்தநாளுக்கு என்று வந்து குவிந்திருந்த, ஒவ்வொரு ரோஜாவினையும் வருடிக்கொடுத்துக்கொண்டே வந்த ஈத்தனின் கரம், சட்டென்று ஒரு இடத்தில் நின்று இருந்தது! அத்தனை ஆயிரம் ரோஜாக்களுக்கு மத்தியிலும், எப்பொழுதும் போல் தங்க நிறத்தில் Forever Rose என்று அச்சடிக்கப்பட்டிருந்த,  அந்த கருப்பு நிற இதய வடிவிலான வெல்வெட் பெட்டி மட்டும் தனித்து நின்று, அவனின் கவனத்தில் விழுந்து அவனை கவர்ந்திருக்க… “ஹேய்! உன்னை கண்டுபிடிச்சிட்டேன்.” என்று, அதனை கண்டுபிடித்த மகிழ்வில், கையில் எடுத்து திறந்துப்பார்த்தான் ஈத்தன். உள்ளே‌ உண்மையான இதயம் போலவே, அவ்வளவு அழகாக பளிச்சென்று அமர்ந்திருந்தது சிகப்பு ரோஜா மலர் ஒன்று. அதன் அமைப்பே ஈத்தனை, “Beauty from the Divine” என்று கூறவும் வைத்து இருந்தது. அடுத்த வருடம் அவனுக்கு மீண்டும் பிறந்தநாள் வரும் வரைக்குமே, அப்படியே சற்றும் வாடாமல் இருக்கும், சிறப்பு அம்சம் கொண்ட ரோஜா அது. மலர்ந்த ரோஜாவை அப்படியே ஒருவருடத்திற்கு வாடாதப்படி பதப்படுத்தி, Forever Rose/Eternal Rose என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களால் விற்கப்படும் அந்த வகை ரோஜாக்கள், வெளிநாடுகளில் மிகவும் பி...

39.1

அத்தியாயம்-39 ரோஜா தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்த அந்த நீச்சல் குளத்தில், மெல்லிய செயற்கை வெளிச்சத்திற்கு மத்தியில், அமைதியாக நீந்திக்கொண்டு இருந்தான் ஈத்தன். வந்து ஒருமணி நேரம் மேல் ஆகி இருந்தது. ஒருப்புறம், குறிஞ்சியிடம் விஷயத்தை பகிர்ந்துவிட்டதில், மனதிற்கு எதிலிருந்தோ விடுபட்ட ஒரு சுதந்திர உணர்வு‌ என்றாலும்… மறுப்புறம், அவள் வாயாலேயே அவள் பட்ட வேதனைகளை கேட்டு, ஒருமாதிரி வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகள், அவனுக்குள் நொடிக்கு நொடி மேலெழுந்துக்கொண்டே இருந்தன… எப்படி தான், அந்த பிஞ்சு இதயம் அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவ்வீட்டில் வளர்ந்து வந்ததோ. ஈத்தனின் கன்னங்கள் இரண்டும், அவனுடைய கண்களில் இருந்து உற்பத்தியான நீரினால் சுட்டன! அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வலிகள் அவைகள் அனைத்தும். டைம் டிராவல் மெஷின் எதுவும் தனக்கு கிடைக்காதா? எடுத்துக்கொண்டு பின்னோக்கி பயணித்து, பிறந்த உடனே குறிஞ்சியை தூக்கிக்கொண்டு வந்துவிடலாமே, என்றெல்லாம் பல்வேறு எண்ணங்கள் அவனுக்குள் ஆற்றாமையில் தோன்றிக் கொண்டிருக்க… அதற்கெல்லாம் சாத்தியம் எதுவுமே இல்லை என்பது புரிந்து, நிதர்சனத்தை ஏற்ற...

38.5

குறிஞ்சி கூறியதில் முற்பகுதி எந்தளவிற்கு ஈத்தனுக்கு வருத்தத்தை கொடுத்ததோ. அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பிற்பகுதி அவனுக்கு கோபத்தை கொடுத்து இருந்தது. அது தீக்குழி என்று நன்றாக தெரிந்தப்பிறகும், அதில் இறங்கி இருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம். சரி அதுக்கூட, அவளின் அம்மாவிற்காக பயந்துக்கொண்டு போனாள் என்று தள்ளுபடி செய்தாலும், அவர் மறைந்த பிறகும் அவனிடம் அவள் வரவில்லையே. அவன் குத்துக்கல் போல் இருக்கும் பொழுது, எதற்கு அவள் அந்தளவிற்கு யோசித்து, பதறி, பயந்து, யார் யாரின் உதவியையோ நாடி, ஓடி, ஒளிந்து ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். அதிலும் அவளால், அவன் செய்து வைத்தவைகளின் விளைவுகள், Butterfly Effect எனப்படும் பட்டாம்பூச்சி விளைவினை போல், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, இன்று வரை அதன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க.  குறிஞ்சியை வெளிப்படையாகவே கோபமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஈத்தன். அதில், “எல்லாம் தான் சொல்லிட்டோமே. இப்ப என்ன!” என்று ஒன்றும் புரியாமல் அதிர்ந்த குறிஞ்சி. மீண்டும் அவனருகில் இருந்து எழுந்துக்கொள்ள பார்க்க. அவளின் மடிமீது தன் கரத்தினை போட்டு. அவளை எழ விடாமல்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates