இடுகைகள்

30.5 அந்திப்போர் 🪻

உமையாள் சொன்னப்பொழுதெல்லாம், அப்படி என்ன பெரியதொரு மாற்றத்தை ஒரு குழந்தையால் ஏற்படுத்திவிட முடியும் என்று பல தடவை ஈத்தன் யோசித்து இருக்கின்றான்… ஆனால் இப்பொழுதோ அந்த பெரிய மாற்றத்தை நேரிலேயே அனுபவித்துக்கொண்டு இருந்தான்… எண்ணற்ற கவுன்சிலிங்கள்… பயிற்சிகள்… மன கட்டுப்பாடுகள்… என்று அத்தனை அனுபவமானவர்களின் மூலம்… தன் குரலினை பழையப்படி மேம்படுத்தும் சிகிச்சைகளை எடுத்தும்… இறுதிவரை வெற்றியடைய முடியாமல்… கோடிக்கணக்கான பணத்தையும்… வாய்ப்புகளையும்… அவனை நம்பியவர்களின் நம்பிக்கையையும்… சிறுக சிறுக கடந்த ஒரு வருடாமாக இழந்துக்கொண்டிருந்த ஈத்தனின் குரல்… எப்பொழுதும் இல்லாத அளவிற்கு… மந்திரம் போட்டது போல்… அதுவும் ஈத்தனே பிரம்மிக்கும் வகையில்… அவ்வளவு அற்புதமாக மாறிவிட்டு இருந்தது… அன்று அவனின் உள்ளங்கை உணர்ந்த, அவனின் உயிர் அணுக்களில் உண்டான, அந்த சிறு ஜீவனின் அசைவு, அத்தகைய அதிசயத்தை அவனில் ஏற்படுத்திவிட்டிருக்க… கால் வைத்த இடமெல்லாம் ஈத்தனுக்கு வெற்றி தான்… குறிஞ்சிக்கு பிரசவ நாள் நெருங்குவதற்குள், நிலுவையில் இருக்கும் படங்கள் அனைத்திற்குமான பாடல்களை, முடித்து கொடுத்து விட வேண்டும் என்று மு...

30.4 அந்திப்போர் 🪻

ஜெல்லி மீன் போல் அங்கும் இங்கும் நீந்தும் அவன் பிள்ளையின் அசைவை… அவனுடைய கரம்… குறிஞ்சியின் ஆடைக்கு மேலேயே உணர… “ஓ மை காட்….” என்று தன் கரத்தினை தூக்கி உள்ளங்கையினை பார்த்த ஈத்தன், “மை பேபி…” என்று அழுத்தமாக தன் இதழ்களை குழந்தையை உணர்ந்த அந்த உள்ளங்கையில் பதித்தவன்… சிறு தயக்கமுமின்றி, மீண்டும் தன் கரத்தினை எடுத்துச்சென்று குறிஞ்சியின் வயிற்றில் பதித்து இருந்தான்… அதை அனுமதித்த குறிஞ்சியும், அவனின் கரத்தினை பற்றி, “இப்ப இங்க இருக்காங்க சார் உங்க பேபி…” என்று நகர்த்தி சரியான இடத்தில் வைக்க… ஈத்தனின் நாடி நரம்பெல்லாம் அப்படியொரு மென் உணர்வு… உடல் முழுவதும் லேசாகி பறப்பது போல் சொர்க்கமாய் இருந்தது… அதனை தன் கண்களை மூடி அவன் மேலும் மேலும் உள்வாங்கி ரசிக்க… குறிஞ்சியின் கண்கள் அவனை கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தன… ஈத்தன் மீதான குறிஞ்சியின் அந்நேர உணர்வுகளை எல்லாம்… காதல் என்ற சிறிய வார்த்தைக்குள் எல்லாம் அடைக்கவே முடியாது… அது அனைத்தையும் கடந்துவிட்டு இருந்தது… மீண்டும் மீண்டும் தன்னை அவனிடம் தொலைத்தாள்… குழந்தையின் அசைவு சிறிது நேரத்தில் சுத்தமாக நின்றுவிட… நிமிர்ந்து குறிஞ்சியின...

30.3 அந்திப்போர்

 நின்று நின்று எப்படியோ ஏறி மேல் மாடியை தொட்டுவிட்டவளுக்கு… அப்படி மூச்சு வாங்கியது… ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், ஈத்தன் எங்கே தேட… அவனோ வெறும் தரையில், ரோஜா தொட்டிகளுக்கு மத்தியில் கண்களை மூடி அமைதியாக படுத்துக் கிடந்தான்… அவனை கண்டுபிடித்ததும்… வேக எட்டுக்களை வைத்து அவனை குறிஞ்சி நெருங்க… அவளின் கொலுசுகளின் மெல்லிய ஒலி ஈத்தனின் அமைதியை கலைத்தது.. அதில் சட்டென்று தன் கண்களை திறந்தவன்… தலையை திருப்பி பார்க்கவும்… முகம் கொள்ளாத புன்னகையுடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் அவனை பார்த்தப்படியே நடந்து வந்துக்கொண்டிருந்த குறிஞ்சி… அவன் தன் வரவை உணர்ந்ததும்… “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். எப்பவும் நீங்க மகிழ்ச்சியா, நீண்ட ஆயுளோட வாழனும்….”, என்றப்படியே… அவன் அருகே வந்துவிட்டவள்… ஈத்தனின் இரண்டு கண்களில் இருந்தும் வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை பார்த்து… அப்படியே அசையாமல் நின்றுவிட்டாள்… “சார்…”, என்று அதிர்ந்து கூறியவளின் கண்களில் இருந்தும் நீர் முத்துக்கள் உற்பத்தியாகி, தரையில் சிதறியிருந்தன… குறிஞ்சியின் அந்த அதிர்ந்த முகத்தை பார்த்த ஈத்தன், பட்டென்று தன் முகத்...

30.2 அந்திப்போர் 🪻😘

அன்று இரவு, வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த குறிஞ்சிக்கு…  காலையில் அவள் சொன்னது பொய் என்று கூட தெரியாமல்… அவள் கூறுவதை அப்படியே நம்பி… ஈத்தன் அழைத்துச்சென்று சாந்தினியை பார்க்க வைத்ததில்… அவ்வளவு குற்ற உணர்வு… அவனின் நம்பிக்கையை ஆரம்பம் முதலே தவறாக அல்லவா பயன்படுத்திக்கொண்டு வருகின்றாள்.. அதில், இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் ஈத்தனிடம் எந்த பொய்யும் கூற கூடாது… அவனுக்கு தொந்தரவும் எதுவும் தரக்கூடாது… சொன்னதுப்போல் குழந்தையை பெற்று அவன் கையில் தந்துவிட்டு கிளம்பிவிட வேண்டும்… ஏற்கனவே முடிவு செய்தது போல், அம்மாவுடன் எங்காவது புது ஊருக்கு சென்று, மீதி வாழ்க்கையை வாழ்ந்துக்கொள்ளலாம்… என்று முடிவெடுத்துக்கொண்டவள்… ஒருமாதிரி மனதை திடப்படுத்திக்கொண்டு… அவனுடனான பொழுதுகளை அனுபவித்து… தன்னுடைய மீதி வாழ்க்கைக்காக அதனையெல்லாம் நினைவில் சேமித்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள்… ஏமாற்றங்களும்… நிராசைகளும்… ஏக்கங்களும்… ஒன்றும் புதிதில்லையே அவளுக்கு… ஏற்கனவே பக்குவப்பட்டவள்… மேலும் பக்குவமாகி போனாள்… ________________________________ கடந்த ஒருவாரமாகவே குறிஞ்சிக்கு ஈத்தனை பார்ப்பதே பெரும...

30.1 அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -30 நேரம் போவது தெரியாமல், இரவு முழுவதும், உடலில் உண்டான புதிய வேதியியல் மாற்றம் கொடுத்த குறுகுறுப்பில்… பால்கனியில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படியே விழித்து கிடந்த குறிஞ்சி… காலை 6 மணிக்கு ஈத்தன் வந்து கதவை தட்டிய பிறகு தான், காணும் நீண்ட சொப்பனத்தில் இருந்து மீண்டு இருந்தாள்… “அச்சோ விடிஞ்சே போயிடுச்சா…”, என்று வெளுக்க ஆரம்பித்த வானத்தை பார்த்து பதறியவள்… ஈத்தன் மீண்டும் கதவை தட்டவும்… இவ்வளவு நேரமும் செய்துக்கொண்டிருந்த செயலை நினைத்து… “ஐயோ எனக்கு ஏன் திடீர்னு இப்படியெல்லாம் தோனுது… சாருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்…”, என்று நினைத்து பயந்துப்போனவள்… தன் வயிற்றை பற்றியப்படி எழுந்துச்சென்று கதவை திறந்தாள்… “ஹேப்பி மார்னிங், குறிஞ்சி” என்ற ஈத்தன். அவளின் சிவந்த விழிகளை பார்த்து, “என்ன ஆச்சு கேர்ள்… நேத்து ட்ராவல் பண்ணதில் ரொம்ப டயர்ட் ஆகிட்டயா…” என்றப்படியே அவளை நெருங்கி… தன் கரத்தினை அவளின் நெற்றியில் பதிக்க… குறிஞ்சிக்கு உடலெங்கும் மெல்லிய நடுக்கம் பரவியது… அதிலும் பர்ஃபியூம் மணத்துடன் கலந்து வரும் அவனின் ஆண்வாசம்… சடுதியில் அவளின் நாசியை மொத்தமாக நிறைத்துவிட… குள...

29.5 அந்திப்போர் 🪻😘📽️

குறிஞ்சிக்கு, மாதம் கூடக்கூட, குழந்தையின் அளவிற்கு ஏற்ப கர்ப்பப்பை விரிவடைந்துக்கொண்டே செல்வதில்… இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப்பை சுருங்கிவிட…கொஞ்சம் சாப்பிட்டாலே கழுத்துவரை உணவு இருப்பது போல் இருந்தது… அதில் அசதியாக இருந்தாலும்… சாப்பிட்டதும் உடனே படுக்க முடிவதில்லை… அதிலும் வீட்டிலும் ஒரு வேலையும் அவளுக்கு இல்லையே…. அதில் இரவு உணவிற்கு பிறகு கையுடன் மாடிக்கு ஈத்தனுடன் சென்றுவிடுவாள்…  இன்றும் அவ்வாறே சென்று… நிலாவையும், நக்ஷத்திரங்களையும், தூரத்தில் தெரியும் கடற்கரையையும் பார்த்தப்படியே ஒரு அரைமணி நேரம் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டு இருக்க… ஈத்தன் அங்கிருந்த ரோஜா செடிகளில் இருந்த காய்ந்த இலைகளை அப்புறப்படுத்திக்கொண்டும்… ட்ரிம் செய்துக்கொண்டும் இருந்தான்… ஒருவழியாக குறிஞ்சி, அங்கிருந்த நீச்சல் குளத்திற்கு அருகே போட்டிருந்த சாய்வு நாற்காலியில்… நடந்தது போதும் என்று அப்படியே மூச்சுவாங்க ஓய்வாக அமர்ந்துவிட… “குறிஞ்சி மலருக்கு இந்த ஈத்தனோட கடைசி பரிசு…” என்று ஈத்தன் தன் பாக்கெட்டில் இருந்த கொலுகளை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்… குறிஞ்சி கேட்டது போலவே அதிக சலங்கை வைத...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates