36.1 அந்திப்போர்
அத்தியாயம் -36 குறிஞ்சியை சந்தோஷமாக வரவேற்று, அவளுடன் பேசிக்கொண்டிருந்த மதர்… ‘இனி எப்பொழுதும், ஈத்தன் மற்றும் ஈஷாவுடன் தான் அவள் இருக்க வேண்டும்…’ என்று உரிமையாக அவளுக்கு அன்பு கட்டளையிட. “கண்டிப்பா மதர்” என்று உறுதியளித்தாள் குறிஞ்சி. அதைத்தொடர்ந்து, அன்று ஈத்தன் வந்து, அவரிடம் திருமண காணொளியை காண்பித்து, பேசிய அனைத்தையும் அவளுடன் பகிர்ந்துகொண்டவர், அவளின் அன்னையின் உடல்நலம் மற்றும் அவள் பணம் இல்லாது பட்ட கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவிக்க. “இருக்கட்டும் மதர். பரவாயில்லை” என்றாள். என்றோ நடந்து முடிந்துவிட்டதை யாரால் இனி என்ன செய்ய முடியும். அதைத்தொடர்ந்து அன்று, சென்னை கான்வென்ட்டில் இருக்கும் மதருடன், அவரும் ஈத்தனும் பேசியதை கூறியவர். ஈத்தன் முதலில் அவளுக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்ததையும்… பிறகு அன்றே அவன் தன் முடிவை கடவுளின் கிருபையால் மாற்றிக்கொண்டதையும் கூற… ‘என்ன எனக்கு வேறொரு திருமணமா!’ என்று முதலில் அதிர்ந்த குறிஞ்சி, இறுதியாக அவர் கூறியதை கேட்டப்பிறகு தான் ஆசுவாசம் அடைந்தாள். பின்னே! அப்படியெல்லாம் ஈத்தன் வந்து அவளை வற்புறுத்தியிருந்தால். நிலைமையை நினைத்து...