38.4
அன்று, ஈஷா பிறந்து ஆறுமாதம் கடந்த நிலையில், பேசி வைத்தது போலவே, ஈத்தனின் வீட்டில் இருந்து குறிஞ்சியை பிரபுவும், ஐஸ்வர்யாவும் வந்து அழைத்து சென்றுவிட்டு இருந்தனர். குறிஞ்சி, ஈத்தன் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, பிரபுவிடம் கூறிவிட்டு தான் வந்து இருந்தாள். “அவர் கொடுத்த பணம் எதுவும் எனக்கு வேண்டாம் மாமா. இவ்வளவு தூரம் நீங்களும், அக்காவும் எனக்காக வந்ததே பெருசு. நீங்களே அந்த பணத்தை வச்சிக்கோங்க”, என்று எப்படியும் அவன் அந்த பணத்தை தரமாட்டான் என்பது தெரிந்து, அவளே கூறுவது போல் கூறிவிட்டவள். “அதுக்கு உபகாரமா, இந்த விஷயத்தை யார்கிட்டேயும் முக்கியமா அம்மாக்கும், சித்திக்கும் தெரியாமல் பார்த்துக்கோங்க. நான் ஈத்தன் சாருக்கு குழந்தையை பெத்து கொடுத்துட்டு வந்ததும், அம்மா கூட வேற ஊருக்கு போயிடறேன். ப்ளீஸ்” என்று இருந்தாள். அனைத்திற்கும் பிரபு, பலமாக தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து, அவளை ஈத்தனுடன் விட்டுவிட்டு வந்து இருந்தான். அவனெல்லாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தாலே, அவள் கூறியதை எல்லாம் செய்து தந்து இருப்பான். இங்கோ இரண்டு கோடி ரூபாய். அவன் கனவிலும் கூட காணாத பணம். ‘இனி ராஜா தான் நான...