34.3 அந்திப்போர் 🪻😘📽️
வீட்டின் வாசலில் இருக்கும், இரும்பு கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
அதைத்தொடர்ந்து மதர் மற்றும் ஈஷாவின் குரலும் கேட்க…
பரப்பரப்பாகி போனாள் குறிஞ்சி.
அதை உணர்ந்து அவளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்த ஈத்தன்…
“பேபி முன்னாடி எதுவும் காட்டிக்க வேண்டாம் குறிஞ்சி. நாம பிறகு பேசலாம். ஓகே” என்றுவிட்டு வெளியே சென்று அவன் பார்க்க.
பிறகு வருவதாக ஈத்தனிடம் கூறிய மதர், ஈஷாவை மட்டும் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
ஈத்தனை பார்த்த பொழுது நெஞ்செல்லாம் குறிஞ்சிக்கு பூ பூத்தது என்றால்… ஈஷாவின் அண்மையை உணர தொடங்கியதற்கே அவளின் உடல் முழுவதுமே பூ பூத்துவிட்டிருந்தது…
அவளின் ஒரு பகுதி.
அவளின் உதிரம்.
அவளின் உயிர்.
அவளே நினைத்தாலுமே மறுக்க முடியாதே!
பீச்(Pinkish Orange) வண்ணத்தில் அடுக்கடுக்காக தைக்கப்பட்ட முட்டி வரையிலான ஸ்கர்ட் அணிந்து. அதன் மீது ஈத்தன் போலவே க்ரீம் வண்ணத்தில் ஸ்வெட் ஷர்ட் அணிந்திருந்த ஈஷா. தன் நீண்ட இரட்டை ஜடைகள் முன்னும் பின்னும் ஆட, ஈத்தனுடன் பேசியப்படியே… கையில் மிகப்பெரிய சிகப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் அவ்வீட்டினுள் நுழைய…
குறிஞ்சியின் அடிவயிற்றில் மிகப்பெரிய பூகம்பம். அதில் அவளின் நெஞ்சம் வேக வேகமாக மேலெழும்பி தணிந்துக்கொண்டு இருந்தது.
உள்ளே சிரித்தப்படியே வந்திருந்த ஈஷா… குறிஞ்சியை ஒருப்பார்வை பார்த்துவிட்டு… ஈத்தனை திரும்பிப்பார்க்க…
‘போங்க பேபி’ என்றான் கண்களால் அவளிடம்.
அவளோ குறிஞ்சியை திரும்பிப்பார்த்துவிட்டு… மீண்டும் ஈத்தனிடமே அவனின் இடையை கட்டிக்கொண்டு, அவனுடனே ஒட்டிக்கொள்ள…
“அம்மா டா பேபி. போங்க. ஒன்னுமில்லை” என்று அவளிடம் ஈத்தன் ரகசியம் பேச.
“நீங்களும் என் கூட வாங்க பேபி. எனக்கு ரொம்ப ஷையா இருக்கு” என்று அவளும் அவனிடம் ரகசியமாக செல்லம் கொஞ்ச.
அதில், இருவரும் ஒன்றாகவே குறிஞ்சியின் முன்பு சென்று நின்று இருந்தனர்..
ஈத்தனின் மகளாக ஈஷா இருந்தப் பொழுது அவளிடம் அவ்வளவு பேசியிருந்த குறிஞ்சியோ, இன்று தன்னுடைய மகளாக அவள் வந்து கண்முன் வந்து நின்றுவிட்ட இத்தருணத்தில்... தொண்டையெல்லாம் அடைத்து போய் பேச முடியாது நின்று இருக்க…
“எப்படி இருக்கீங்க அம்மா?” என்று ஆசை, வெட்கம், அன்பு, உரிமை, மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளும் கலந்து, குறிஞ்சியை பார்த்து கேட்ட ஈஷா…
“ஐ லவ் யூ சோ மச். அண்ட் சாரி டூ சே திஸ் லேட்” என்று ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்தினை புன்னகையுடன் அவளுக்கு தர…
குறிஞ்சியின் உலகமே, ஈஷாவின் ‘அம்மா’ என்ற அழைப்புடனே நின்றுவிட்டு இருந்தது…
நடக்கும் என்று அவள் கனவு கூட காணாத நிகழ்வு.
இந்த நொடி மரணம் தழுவினால் கூட சுகமாக மடிந்துப்போவாள்.
அப்படி இருந்தது குறிஞ்சிக்கு.
அவளின் நிலையை அவள் அசைவின்றி நிற்கும் விதத்திலேயே உணர்ந்த ஈத்தன்…
குறிஞ்சியின் தோளை சுற்றி தன் கையைப்போட்டு, அவளை தன்னுடன் சேர்த்து இழுத்து நிற்க வைத்தவன்… அதேப்போல் மகளையும் மற்றொரு கையில் பிடித்துவைத்துக்கொண்டு…
“ப்ளீஸ் குறிஞ்சி. எமோஷன்ஸ கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா… பேபி உனக்காக வெயிட் பண்றா பாரு…” என்று அவளை உந்த…
‘என்னால் முடியவில்லை’ என்று உதடுகள் துடிக்க, கண்கள் எல்லாம் குளம் கட்ட, ஈத்தனை நிமிர்ந்து பார்த்தாள் குறிஞ்சி…
ஒருபக்கம் மகள். மனைவி மறுபக்கம் என்று நின்றிருந்த ஈத்தன்.
‘அழக்கூடாது’ என்று கண்களாலேயே குறிஞ்சியை, ‘ஈஷா பயந்துவிடுவாள்’ என்று கட்டுப்படுத்த…
சரியென்று தன் உணர்வுகளை எல்லாம் எச்சில் கூட்டி விழுங்கிய குறிஞ்சி…
கண்முன் பூங்கொத்துடன் நின்றிருந்த தன்னுடைய பூங்கொத்தினை…
“பூக்குட்டி….” என்று அப்படியே மொத்தமாக தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
அவளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும், தன்னுடைய குழந்தையின் ஸ்பரிசத்தை உள்வாங்கி கொண்டாட…
“அம்மாவாடா செல்லமா நான் உங்களுக்கு” என்றவள்…
“நீங்க தான் எனக்கு அம்மா டா…” என்று முதல் முறை உரிமையாக அவளின் முகம் முழுவதும் தன் இதழ்களை ஒற்றியெடுக்க…
தானாக ஈஷாவின் கண்களில் இருந்து நீர் முத்துக்கள் உற்பத்தியாகி கொட்ட ஆரம்பித்துவிட்டு இருந்தன…
அதில் மகளை ஈத்தனும் அணைத்துக்கொண்டான்…
“என் பூக்குட்டி சரியா சாப்பிடலையா என்ன? கன்னமெல்லாம் வத்தி போயிடுச்சே என் கண்ணம்மாக்கு…” என்று அவளின் உடல் முழுவதையும் வருடியப்படி விசாரித்த குறிஞ்சி… மீண்டும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்…
உணர்வுகளின் பிரவாகத்தில் என்றோ வத்திப்போன மார்பில் எல்லாம், இன்று மீண்டும் பால் சுரப்பது போல் இருந்தது அவளுக்கு…
அவளின் மொத்த தவிப்பினையும் கண்முன் பார்த்துக்கொண்டிருந்த ஈத்தனுக்கு… எப்பேர்ப்பட்ட தியாகத்தை தனக்காக குறிஞ்சி செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்டாள் என்பது புரிய…
குறிஞ்சி வாழ்க்கையில் இழந்தவைகளை எல்லாம், அவளுக்கு பல மடங்கு திருப்பி நிச்சயம் தந்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்தான் ஈத்தன்.
பாவம் அவனுக்கு தெரியாதே… அவள் இழந்தவைகளாக அவன் நினைப்பது வெறும் கடுகளவு தான் என்று.
இதுவரை அவள் பெற்றது என்று இவ்வுலகில் ஒன்றுமில்லையே.
அனைத்துமே இழந்தவைகள் தானே.
தன் பிறப்பிற்கான அங்கிகாரத்தையே பிறக்கும் முன்பே இழந்தவள் ஆயிற்றே அவள்…
________________________________
📍அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Super! Sema
பதிலளிநீக்குகண்கள் கலங்க வைக்கும் பதிவு டியர்… ரொம்ப நெழ்ச்சியான பதிவு.. குறிஞ்சி செய்த தாயகம் அளப்பரியது.. ஈஷா குறிஞ்சியை அம்மா னு கூப்பிட்டது கண்ணீர் வந்துட்டு டியர்.. u have some magic in ur writing ❤️❤️❤️❤️
பதிலளிநீக்குNice dear
பதிலளிநீக்குஅருமையான வார்த்தைகளால்...
பதிலளிநீக்குJuice is complete with flavours and essence under perfect preparation. Keep going. Take care of your health also
பதிலளிநீக்குசெம செம....
பதிலளிநீக்குI started crying
பதிலளிநீக்குWow epadi sola ethan evlo alaga solitan really fantastic epadiyum expose pana mudoyumanu eruku appa sema,and the biggest one isha ammanu kupitadhu appa goosebumps vandhuduchu enaku apdi oru feel 12 year kalichu andha vaarthai andhu than ponnu vaaila erundhu epadi erukum ayooo ennala sola mudiyalaye ava epadi emotion control panuva swathi dear really really fantastic enga nerula nikara madri erundhadhu nan aludhutan,ennu. Kirinchi fb eruka ,and one morwe ethan oda love feeling was awesome adha kuda arumaiya panran love dear for the superb ud adhu eppa than padicha morninga oru fresh vibe kidacha madri eruku❤❤❤❤❤❤❤❤❤❤❤
பதிலளிநீக்குSuper a irunthuchu ka🫶🫶🫶could relate every line and felt it so real😘
பதிலளிநீக்குSupera irunthuchu mam emotional
பதிலளிநீக்குI feel it mam
பதிலளிநீக்குSome magic are there in your words dear
பதிலளிநீக்குYou make us cry with your emotional
பதிலளிநீக்குYou nailed it ❤️
பதிலளிநீக்குVery nice. Your all stories are super .
பதிலளிநீக்குNo words to describe sago what a relationship Again u made a milestone sago
பதிலளிநீக்குMagical writing ♥️
பதிலளிநீக்குReally super! The way Ethan explained about Kurinji to Esha was really nice, because pre-teen girls are like glass—if we handle them properly, they reflect beauty; if we mishandle them, we can’t recreate what’s lost. The bond between a father and daughter is truly awesome.
பதிலளிநீக்குSuperb eppi
பதிலளிநீக்குகண்முன்னே நடப்பது போலுள்ளது. என்தொணடை அடைத்தாற்போல் ஒரு ஃபீலிங்
பதிலளிநீக்குசூப்பர்.
Mam super 👌👌💖,no words
பதிலளிநீக்குSuper 👍 waiting for next update 😄
பதிலளிநீக்குSOO emotional. அழுகை வந்துவிட்டது. இனியாவது அனைவரும் அன்பை பெறட்டும்.
பதிலளிநீக்குWaiting for next ud.... seekiram upload pannunga...
பதிலளிநீக்குவருமா வராதா காத்திருக்கிறேன் ஆவலாக
பதிலளிநீக்குEnnum yevlo naal kenja vaipinga mam.....we are waiting for next uds...pls seekiram podunga.... depression aagudhu...
பதிலளிநீக்கு