35.4 அந்திப் போர்

மறுநாள் அதிகாலை மணி 5.30…

எங்கோ ரேடியோவில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பழக்கமற்ற சாமி பாட்டில்… தூக்கம் கலைந்து கண்களை திறந்த ஈத்தன்…

இருக்கும் இடம் உணர்ந்து… ஈஷாவை பார்த்துவிட்டு… கீழே பார்க்க… அங்கு குறிஞ்சியும் இல்லை, அவளின் படுக்கையும் இல்லை…

அதில் பதறிப்போனவன்…

அப்படியே எழுந்து அறையில் இருந்து வெளிவந்து… திறந்திருக்கும் வாசல் கதவை பார்த்து மேலும் பதறி… வெளிப்பக்கம் ஓடிச்சென்று பார்க்க…

அங்கு…

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?!

எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

இசையின் ஸ்வரங்கள் தேனாய்
இசைக்கும் குயில் நீ தானா?!

பனியில் நனையும் மார்கழிப் பூவே!
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே.

உனக்கென பிறந்தவள் நானா?
நிலவுக்கு துணை இந்த வானா.

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்!
வந்தாயே உறவாகா இன்னாள்.

என்று குறிஞ்சியின் காதில் ப்ளூடூத் வழியாக ஜானகி அம்மா பாடிக் கொண்டிருக்க… உடன் சேர்ந்து அவளும் பாடியப்படியே…

இன்னும் இருள் பிரியாத பொழுதில், அடிக்கும் வெண் பனி காற்றில், தேகம் மொத்தமும் ஜில் ஜில்லென்று இருப்பதை சற்றும் பொருட்படுத்தாமல்… 

தண்ணீர் தெளித்து சுத்தமாக இருந்த வாசலில்… 

அரிசி மாவு கொண்டு, அழகாய் பட்டையாக ரோஜா இதழ்களை வரைந்துக்கொண்டு இருந்தாள்…

“உஃப்…” என்ற ஈத்தனுக்கு அவளை பார்த்தப்பிறகு தான் மூச்சே வந்தது…

சில வினாடிகள் அப்படியே நின்று விட்டான்…

பிறகு தான் குறிஞ்சியின் பாடல் அவனின் செவியை எட்டியது…

ஸ்வரம், ராகம், தாளம் என்று எதுவும் இல்லாமல்… அவள் பாட்டுக்கும் பாடலை அனுபவித்து பாடிக்கொண்டிருந்ததில்…

ஈத்தனின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிய…

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…
________________________________

நொடியில், காற்றில் கலந்து வந்த ஈத்தனின் பர்ஃபியூம் மணத்தை உணர்ந்து குறிஞ்சி நிமிர்ந்து பார்க்கவும்… ஈத்தன் அவளிடம் வந்து சேரவும் சரியாக இருந்தது…

இரவிற்கு ஏற்ற வகையில் இலகுவாக அணிந்திருந்த வெண்ணிற பேன்ட் மற்றும் ஷர்ட்… உறங்கியதில் ஆங்காங்கே கசங்கி காணப்பட… 

முற்றிலும் களைந்த தலை…

சிவந்த விழிகள்…

முகத்தில் பாதி இடத்தை அடைத்துக்கொண்ட தாடி… மீசை…

என்று, எப்பொழுதும் இருக்கும் பர்ஃபெக்ட் தோற்றத்திற்கு முற்றிலும் மாறாக வந்து நின்ற ஈத்தனை…

அந்நிலையிலும், குறிஞ்சியின் கண்கள் வஞ்சனை இல்லாமல் விழுங்க பார்க்க…

“ஹேப்பி மார்னிங் கேர்ள்!” என்ற ஈத்தன்…

குளித்து முடித்ததற்கு சாட்சியாக, தலையில் ஈரத்துண்டுடன் அவள் இருந்ததை பார்த்து, “தூங்கவே இல்லையா கேர்ள் நீ?” என்றவன்…

“சொல்லிட்டு வெளியே வந்து இருக்கலாம் இல்ல…

ஒரு செக்கெண்ட்ல என்னை பயமுறுத்திட்ட…” என்றான்…

அதில், “அச்சோ சாரி சார்…” என்றவள். அவனின் பார்வையில் சட்டென்று திருத்தி, “சாரிங்க…” என்றுவிட்டு, “நீங்க இரண்டு பேரும், நல்லா தூங்கிட்டு இருந்தீங்க அதான் எழுப்பலை…

இனி கண்டிப்பா உங்கக்கிட்ட சொல்லாமல், கொள்ளாமல் எங்கேயும் போக மாட்டேன். ப்ராமிஸ். நீங்க பயப்பட வேண்டாம். நிம்மதியா இருங்க…” என்றாள், தன்னால் ஈத்தன் பதட்டமடைகிறானோ என்று வருந்தி.

அதில் திருப்தியாக புன்னகைத்த ஈத்தன், “கூல்…” என்றப்படியே சுற்றி பார்த்தான்…

வாழ்க்கையில் முதல் முறை… இப்படியான தெரு அமைப்பு கொண்ட குடியிருப்பில்‌… தங்கி இருக்கின்றான்…

‘இதுவும் நன்றாக தான் இருக்கிறது’ என்று நினைத்தவன்…

மீண்டும் குறிஞ்சியை பார்க்க…

அவள் அழகாக ஒற்றை ரோஜாவை வரைந்து முடித்து இருந்தாள்.

‘ஹோ கேர்ள்… கோலத்தில் கூட ரோஸ் தானா…’ என்று நினைத்த ஈத்தன் இதழ்களில் காலையிலேயே புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது…

அவள் முன்பு மட்டும் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை… 

இல்லையென்றால் இப்படியே முகத்தை மூடிக்கொண்டு ஓடிவிடுவாளே…

ஈத்தன் சென்று ஃபிரஷ் ஆகி 5 நிமிடங்களில் வெளிவர…

குறிஞ்சி அதற்குள் அவனுக்கு டீயும்… அவளுக்கு காஃபியும் போட்டு வைத்திருந்தாள்…

‘இன்னும் அதே மின்னல் வேகம் தான்’ என்று நினைத்த ஈத்தன்…

“உன்னோட ரூம்ல இருக்கிற திங்க்ஸ் மட்டும் நாமளே பேக் பண்ணிடலாம் குறிஞ்சி. நான் ஹெல்ப் பண்றேன். பேபி எழுந்தப்பிறகு ஸ்டார்ட் பண்ணலாம்… மத்ததை எல்லாம் மூவர்ஸ்(movers) பார்த்துப்பாங்க…” என்றவன்…

‘காலை நாம் கிளம்ப வேண்டும்’ என்று அடுத்தடுத்த பிளான்களை டீ குடித்தப்படியே குறிஞ்சியிடம் பகிர்ந்துக்கொள்ள…

குறிஞ்சி மறுத்து எதுவும் பேசவில்லை.

அவன் நேற்று சொன்னது போல், இனி இதில் இருந்து பின்வாங்க முடியாது என்பது புரிந்து, அமைதியாக இருந்துக்கொண்டாள்.
________________________________

நேரம் சென்று உறங்கியதால், சற்று தாமதமாக தான் ஈஷா எழுந்திருந்தாள்…

“குட் மார்னிங் பேபி!” என்று ஈத்தனும்…

“குட் மார்னிங் கண்ணம்மா” என்று குறிஞ்சியும்… அவளுக்கு காலை வாழ்த்து கூற…

“Baby so happy” என்று வந்த ஈஷா…

ஈத்தனின் கன்னத்திலும்… குறிஞ்சியின் கன்னத்திலும்… தன் இதழ்களை அழுத்தமாக பதித்து விலக்க…

குறிஞ்சிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
________________________________

நேற்று இரவு போலவே, காலை உணவும், ஹோட்டலில் இருந்தே வந்துவிட்டது…

சமைக்க சென்ற குறிஞ்சியை ஈத்தன், “இப்ப பேக்கிங் வொர்க் பார்க்கலாம் குறிஞ்சி…” என்று தடுத்துவிட்டு இருந்தான்…

அவள் பொக்கிஷமாக வைத்திருந்ததில் ஒரு நியூஸ் பேப்பர் கட்டிங்கை கூட விடாது, பத்திரமாக எடுத்து அவளுக்காக ட்ராலிகளில் பேக் செய்து வைத்த ஈத்தன்…

உடை மாற்றி தயாராக…

குறிஞ்சி மற்றொரு அறையில் சுடிதாரில் இருந்து புடவைக்கு மாறிக்கொண்டாள்…

முன்பே தயாராகிவிட்ட ஈஷா, ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிய நோட்டில் பென்சிலால் எதையோ வரைந்துக்கொண்டிருக்க…

மணியை பார்த்த குறிஞ்சி…

ஈத்தனிடம்… மதரை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுவதாக கூறிவிட்டு கான்வென்ட் நோக்கி சென்றாள்…
________________________________
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

  1. Excellent semma 🔥 .. unga stories movie uh vantha ultimate

    பதிலளிநீக்கு
  2. Kurinjiyoda sister and avunga chitthi enna aananga? Avungala pathi samaravelanku theriuma? Andha flashback yepo reveal panuvinga?

    பதிலளிநீக்கு
  3. அப்பப்பா செம்ம ரொம்ப இயல்பான, சரளமான நடை.

    பதிலளிநீக்கு
  4. You are amazing, lovely 😍🌹

    பதிலளிநீக்கு
  5. காத்திருக்கிறேன் நாளை vidiyalukakavum உங்களின் ud kakavum 🙏

    பதிலளிநீக்கு
  6. Awesome store dear akka.waiting for next ud

    பதிலளிநீக்கு
  7. Please.... please...kenja vaikadhinga sis....next ud podunga ... please...

    பதிலளிநீக்கு
  8. Sis next ud yeppodhaa varum...we are waiting....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story