37.3
ஈஷா, ஈத்தனுக்கு வழிவிட்டு தன் நாற்காலியை வேறு பின்புறம் சற்று தள்ளிக்கொள்ள…
வேறுவழியின்றி தன் கையில் இருந்த ஸ்பூனை தட்டில் வைத்து ஈத்தன்…
‘குறிஞ்சிக்கு எத்தனை முறை நாம் ஊட்டிவிட்டு இருக்கிறோம். அதுபோல தானே இது’ என்று அவள் குழந்தை உண்டாகி இருந்த சமயங்களிலும், அவள் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்த நாட்களையும், நினைத்தவாறே குறிஞ்சியின் கையருகே செல்ல…
குறிஞ்சிக்கும் வேறுவழியில்லாமல் போனது.
அதில் குறிஞ்சியின் விரல்கள், மெல்ல ஈத்தனின் இதழ்களை ஸ்பரிசிக்க தொடங்கி இருந்தன.
அதன் பலனாக அவனின் இதழ்களும் அவளின் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்து, உணவை தனக்குள் எடுத்துக்கொள்ள…
ஈத்தனின் உமிழ்நீர் குறிஞ்சியின் விரல்களை நனைத்து இருந்தது.
அதில், குறிஞ்சி தன் கால் விரல்களை அழுந்த நிலத்தில் பதித்து தன்னை கட்டுப்படுத்த முயன்றுக்கொண்டு இருந்தாள்.
ஈத்தனுக்கும், ஸ்பூனால் அவன் அவளுக்கு ஊட்டிவிட்டதற்கும், இன்று அவள் கையால் ஊட்டிவிட்டதற்கும் இருக்கும் வித்யாசம் புரிந்திருக்க… அமைதியாக விலகிக்கொண்டு இருந்தான். அவனுக்கும் உணர்வுகள் உண்டு தானே. அவளின் விரல்களில் கதகதப்பு இன்னும் அவன் வாயில் நீங்காது இருக்கிறதே.
ஈத்தன் ஏதாவது சொல்லுவான் என்று காத்திருந்துப்பார்த்த ஈஷா, அவன் எதுவும் சொல்லாது போனதில், “எப்படி இருக்கு பேபி… யம்மியா இருக்கு தானே” என்று அவளே அவனிடம் கேட்க.
“ஆமாம் டா. It tastes amazing…” என்றவன். “உன் அம்மா சுடும் தோசை கூட ரொம்ப நல்லா இருக்கும்” என்றான், பல ஆயிரம் இரவுகளுக்கு முன்பு உண்டதை இன்னும் நினைவில் வைத்து.
அதில் குறிஞ்சியின் கண்கள், அவன் மீதான நேசத்தை சுமந்தப்படி, முதல் முறை நேருக்கு நேர் அவனுடைய நீல விழிகளை தைரியமாக பார்க்க…
ஈத்தனின் விழிகளிலும், அவள் மீதான அன்பு, அக்கறை, மரியாதை எல்லாம் கடந்து, ‘அவள் வேண்டும்’ என்ற தேடலை சுமந்து அவளை பார்த்து இருந்தன.
அதில் அன்று இரவு ஈஷா உறங்கிய பிறகு… அவள் மீது குறிஞ்சி போட்டிருந்த கரத்தினை பிரித்தெடுத்த ஈத்தன். அவள் கரத்துடன் தன் கரத்தினை சேர்த்து, அவளின் விரல்களின் இடைவெளிக்கு மத்தியில் தன் விரல்களை கோர்த்து பிடித்துக்கொள்ள.
ஈத்தனின் செயலில் இன்பமாய் அதிர்ந்த குறிஞ்சி, தன் தலையை லேசாக தூக்கி ஈத்தனை பார்க்க… அவனோ தன் செயலில் உண்டான சிறு வெட்கம் கலந்த மென் புன்னகையுடன் அவளை பார்த்து வைக்க... குறிஞ்சியின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?
அந்த இரவு விளக்கு ஒளியில் கூட அவனை எதிர்க்கொள்ள முடியாது, உடனே தன் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு படுத்திருந்தாள் குறிஞ்சி…
அதில் ஈத்தனின் கரம், குறிஞ்சியின் கரத்தை மேலும் தனக்குள் இறுக்கிப்பிடித்துக்கொள்ள.
மொத்தமாக சிவந்துப்போய் இருந்த குறிஞ்சியிடம் இருந்து அதன்பிறகு சிறு அசைவு கூட இல்லை… ஆனால் இரவு முழுவதும் பல கனவுகள் அவளின் காதல் கொண்ட நெஞ்சிற்குள்!
ஈத்தனுக்குள்ளும் ‘தானா இது’ என்ற வியப்புடன் பல கனவுகள்.
அவன் கரத்தினுள் இருக்கும் கரத்தின் சொந்தக்காரி, தன் வாழ்க்கையை இன்னும் எப்படியெல்லாம் அழகாக்க போகின்றாள் என்று பல எதிர்பார்ப்புகள்.
_______________________________
இரு இதயமும் மெல்ல இணைந்து, ஒரே தாளத்தில் அழகாய் இசைக்க முற்பட்ட நேரம், விதியோ ஈத்தனை குறிஞ்சியிடம் இருந்து பிரித்துவைத்துவிட்டு இருந்தது.
மறுநாள் காலை விடிந்த மறுகணமே அடிக்க ஆரம்பித்துவிட்ட தன் தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு, அறையைவிட்டு வெளியே சென்று பேசிவிட்டு வந்த ஈத்தன்…
உடனேயே தயாராகி, ‘அவசர வேலை. சீக்கிரம் வந்துவிடுகிறேன்’, என்று ஈஷாவிடமும், குறிஞ்சியிடமும் கூறிவிட்டு கிளம்பி இருந்தவன்.
‘இதோ வருகிறேன்’ ‘அதோ வருகிறேன்’ ‘அவசர ரெக்கார்டிங் வந்துவிட்டது’ என்று தொலைப்பேசியில் கூறியப்படியே தான் இருந்தானே தவிர, நான்கு நாட்கள் கடந்தும் வீட்டிற்கு திரும்பி வந்தப்பாடில்லை.
அதில் இதுநாள் வரை அவனை பிரிந்திருந்து பழக்கப்படாத ஈஷா முற்றிலும் சோர்ந்துப்போக. குறிஞ்சிக்கு அவளை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.
ஈஷாவிற்கு அவள் அறிந்த முதல் சொந்தம் ஈத்தன் தானே. உறக்கத்தில் கூட அவள் “பேபி… பேபி…” என்று ஈத்தனை அருகில் காணாது தேட. குறிஞ்சிக்கு ஈத்தன் மேல் முதல் முறையாக ‘அப்படி என்ன முக்கியமான வேலை’ என்று கோபமே வந்துவிட்டு இருந்தது. பிறகு, ‘ஈத்தனுக்கும் இப்படி தானே ஈஷா உடன் இல்லாதது கஷ்டமாக இருக்கும். என்ன அவசர வேலையோ அவருக்கு. பாவம்’ என்று அவன் பக்கம் இருந்தும் யோசித்தவளின் இதயமும் கூட, ஈத்தனை தேடிக்கொண்டே தான் இருந்தது.
அதிலும் அவன் கிளம்பும் முன்தினம், அவளிடம் காட்டிய அந்த சிறு நெருக்கமே, அவளை அது இன்னும் வேண்டும் என்று கேட்க வைக்க. பிரிவு வலித்தது. யாரிடம் சென்று அவள் அதை கூறுவது. எப்பொழுதும் போல் பொறுத்துக்கொண்டவள், ஈஷாவின் மீது தன்னுடைய முழு கவனைத்தையும் செலுத்திக்கொண்டு இருந்தாள்.
ஈஷாவிற்கு பிடித்தவற்றை எல்லாம் அவளே சமைத்து, அவளுக்கு ஊட்டிவிடுவதில் ஆரம்பித்து, அனைத்திலும் அவளை தன் கண்ணின் மணிப்போல் பத்திரமாக குறிஞ்சி பார்த்துக்கொள்ள, ஈஷாவும் சற்று தெளிந்து சூழ்நிலையை அனுசரித்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள்.
டிக்-டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த வயதுக்கு மீறிய சோஷியல் மீடியாவையும், தேவையில்லாமல் ஈஷா கையில் மொபைலை கொடுத்து ஈத்தன் பழக விட்டதில்லை.
அதற்காக அவளுக்கு டெக்னாலஜி எதையும் சுத்தமாக அறிமுகப்படுத்தாமலும் ஈத்தன் இருந்தது இல்லை. அவளுக்கு என்று தனியாக பொழுதுப்போக்கிற்கான iPad(tab) உண்டு. ஆனால் அது அவளின் பன்னிரண்டு வயதுக்கு தக்க செயலிகளுடன், ஈத்தனின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் படி இருக்கும். அதில், ஈஷா அவளின் வயதிற்கு தக்க pre-teen அனிமேஷன் படங்களை பார்ப்பது, கதைகளை படிப்பது, ஆன்லைன் ஆர்ட் வொர்க் ஷாப்பில் கலந்துக்கொள்வது என்று, ஒருக்குறிப்பிட்ட எல்லைக்குள் அதற்கு அடிமையாகாத வகையில் உபயோகப்படுத்த, ஈத்தனால் பழகிவிட பட்டு இருந்தாள்.
அதில், இப்பொழுது ஈத்தன் உடன் இல்லாத நேரத்திலும், யாரும் சொல்லாமலே, ஈஷா அதையெல்லாம் சரியாக கடைப்பிடிக்க. ‘என் சமத்துக்குட்டி’ என்று அவளை குறிஞ்சி மெச்சியப்படியே அவளுடன் அமர்ந்திருக்க.
“அம்மா…” என்று அவளிடம் வந்த ஈஷா, அவளின் ஆயில் பெயிண்ட் கலரில் சிலது தீர போவதாக கூறி, அதனை வாங்க வேண்டும் என்றவள். குறிஞ்சியை ஆன்லைனில் அதை ஆர்டர் செய்ய கூறிவிட்டு, தன்னுடைய பணியை மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
ஈத்தன் முதல் முறை, குறிஞ்சியிடம் ஈஷாவை விட்டுவிட்டு, ரெக்கார்டிங் வேலையாக செல்ல முடிவெடுத்த பொழுதே. குறிஞ்சியிடம் அவனுடைய அதிக மதிப்புமிக்க பிளாக் கார்டுகளில் ஒன்றை கொடுத்து, அதன் மூலம் அவள் என்ன வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ளலாம் என்றிருந்த ஈத்தன். வீட்டில் இருக்கும் அனைத்திற்குமான பாஸ்வேர்டுகளையும் குறிஞ்சியிடம் பகிர்ந்து, அவளுக்கு அந்த வீட்டில் முழு உரிமையை தந்து இருந்தான்.
உடன் ஈஷாவையும் குறிஞ்சியிடம் வேண்டியதை கேட்க கூறியிருக்க. ஈஷாவும் கேட்க ஆரம்பித்து இருந்தாள்.
அதில் ஈஷா கேட்ட பெயிண்ட்டை, தன் தொலைபேசியில் ஆன்லைனில் தேடி எடுத்த குறிஞ்சி, அறைக்குள் சென்று தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வந்து, அதை ஆர்டர் செய்ய அமர்ந்தவள்…
ஈத்தன் கொடுத்திருந்த கார்டை எடுக்காமல், அவளுடைய சேமிப்புகள் அடங்கிய கார்டை எடுத்து, ஆர்டர் செய்து முடித்து இருந்தாள்….
எவ்வளவு காலத்திற்கு அவளின் சில லட்ச சேமிப்பு பணம் வருமென்று அவளுக்கு தெரியாது. ஆனால் பண விஷயத்தில் யாரையும் சாராது, பல ஆண்டுகள் வாழ்ந்து பழகியவள் என்பதால் உடனே அவளால் அதை கைவிட முடியவில்லை.
_______________________________
அன்று இரவு குறிஞ்சிக்கு அலைப்பேசி வாயிலாக அழைத்த ஈத்தன், எப்பொழுதும் போல் அவர்களை நலம் விசாரித்து முடித்தவன், அவளை மறுநாள் தாமஸூடன் அமெரிக்க தூதரகத்திற்கு, அவளுக்கான விசா வேலைக்காக சென்று வரக்கூறியவன். அங்கு என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள். அவள் எப்படி பதில் கூற வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு சொல்லிக்கொடுக்க…
மறுநாள் தூதரகத்திற்கு ஈஷாவை உடன் அழைத்துக்கொண்டு சென்றிருந்த குறிஞ்சி, அந்த இன்டர்வியூயை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பி இருந்தாள்.
அதில், அன்று இரவு மீண்டும் அவளுக்கு அழைத்த ஈத்தன், ஈஷாவுடம் சிறிது நேரம் வீடியோ காலில் பேசிவிட்டு, குறிஞ்சியிடம் வந்தவன் ‘தூதரகத்தில் இன்டர்வியூவில் என்ன கேட்டார்கள்’ என்று விசாரிக்க. அனைத்தையும் அவனிடம் கூறியவள். ஈஷாவை விட்டு சற்று தள்ளிச்சென்று, “இன்னைக்கு வருவேன்னு சொன்னீங்களே” என்று கேட்க.
“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு குறிஞ்சி. மோஸ்ட்லி நாளைக்கு வந்துடுவேன் மா” என்றான் ஈத்தன்.
அதில் ‘தினமும் இதையே தான் சொல்கிறாய்’ என்று அவனை ஒரு பார்வை பார்த்த குறிஞ்சி.
“பாப்பா உங்கக்கிட்ட எதுவும் சொல்லலைனாலும், உங்களை ரொம்ப தேடுறா. என்ன வேலையா இருந்தாலும் நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுங்க” என்றவள். என்ன முயன்றும் தன்னை கட்டுப்படுத்த முடியாது இறுதியாக, “எனக்கும் உங்களை பார்க்கனும். வாங்க” என்றுவிட்டு பட்டென்று ஃபோனை வைத்துவிட.
வெகுநேரம் அந்த அணைந்த ஃபோனையே பார்த்தப்படி அமர்ந்திருந்தான் ஈத்தன், எரிமலைச் போல் கொதித்துக்கொண்டு இருக்கும் இதயத்துடன்.
“குறிஞ்சி மலர்…” என்றவன் விழியோரங்கள் ஈரத்தில் நனைந்து இருந்தன.
________________________________
🪻யூடி எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட் பண்ணுங்க டார்லிங்ஸ் ❤️ ஈத்தன் குறிஞ்சி சீன்ஸ்... அவங்களோட மூவ்ஸ்... எப்படி இருக்கு. முதல் தடவை இந்த பேஸ் எடுத்து எழுதறேன். அவுட் புட் ஓகேவா... And இப்ப பேக் டூ ஃபார்ம் வீட்டில் செட்டில் ஆகிட்டேன். அடுத்த யூடி இரண்டு நாளில் வந்திடும்🥰 -Swathi Lakshmi 💕
Nice. Slow steady moves with love and expectations 👍
பதிலளிநீக்குEthan ku kurimji ah pathi unmai terimjidicha adan kovam ah irukano
பதிலளிநீக்குLate ud so comment kidaiyathu
பதிலளிநீக்குSupersupersuper.
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குVery nice . Keep posting uds often . Please don't be too late
பதிலளிநீக்குSamar paiyan kurinji oda past ah therinjuka than poirukana.. therinjukatum. Paavam kurinji chinna vayasula evlo kasta patta nu therinju avala inimel inum bathrama happy ah pathukattum. Neenga ok thana.. operation lam mudinchula. Health sari agum varai story typa Panama irukalam la. Marupadiyum pain agidama pathukonga
பதிலளிநீக்குKurinji n samar love feel super mam n samar kurinji yoda sithi family pathi therinji avala innum nalla parthukkanum n awaiting next ud
பதிலளிநீக்குVery nice y ethan azhanum...any problem waiting for next eppi...
பதிலளிநீக்கு