17.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
அத்தியாயம் -17 குறிஞ்சி மலர், குமாருக்கும் சாந்தினிக்கும் திருமணமாகி, பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு தேவையில்லாது பிறந்தவள். ஆம்! தேவையான நேரத்தில் பிறக்காது… இலக்கணம் மாற்றப்பட்டு… தேவைகள் தீர்ந்து… அனைத்தும் அடங்கிய பிறகு மலர்ந்தவள்… திருமணமான அடுத்த மாதத்தில் இருந்து, “ஏதாவது விஷேசம் உண்டா?” என்று தொடங்கி, “இன்னுமா ஒன்னும் இல்லை…” என்று மாறுபட்டு, இறுதியில், “அவ்ளோ தான் போல…” என்று திருமணமான ஒரே வருடத்தில் குமார் வீட்டிலிருந்து சாந்தினியியை திருப்பி அனுப்பிவிட… சாந்தினியின் அண்ணன், யார் அவரை காலம் முழுக்க வீட்டில் வைத்து சோறு போடுவது என்று பதறி, மீண்டும் அங்கேயே இழுத்துவந்து தள்ள பார்க்க… உட்கார சொந்த வீடுக்கூட இல்லாத நிலையில், குமாரின் பெற்றோர் தங்களின் வீட்டிற்கு வாரிசு வேண்டும் என்று உறுதியாக மறுத்துவிட… குமாரும், புது மாப்பிள்ளையாகும் குஷியில் சாந்தினியை கைக்கழுவி விட்டார்… ஏற்கனவே செலவு செய்து, கழித்துவிட்ட சாந்தினியை, அவரின் அண்ணனுக்கும் அண்ணிக்கும், மீண்டும் வீட்டில் திரும்ப வைத்துக்கொள்ள, சுத்தமாக விருப்பம் இல்லை. பெற்றோரையும் ஏற்றிவிட்டு மீண்டும் மீண்டும் குமாரின் வீட்ட...