15.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
நேரம் வேண்டும் என்று கேட்டிருந்த ஈத்தன் ‘இன்று பதில் கூறுவான், நாளை பதில் கூறுவான்…’ என்று தினம் தினம் எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்க்கும் உமையாளிற்கு அவர் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவேயில்லை…
அதில் சற்று பௌர்ணமி போல் முழு மகிழ்வுடன் காணப்பட்ட அவரின் முகம்… மெல்ல தேய்பிறையாக தேய்ந்து பழையப்படி கவலையில் மூழ்கி இருண்டுவிட…
ஈத்தனின் கண்களில் இருந்து அது தப்பவில்லை…
அன்று காலை அவருடன் அமர்ந்து உணவு உண்டவன்… கேஷ்வல் உடையில் தயாராகி கீழேயிறங்கி வர…
உமையாள் அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்…
அதில், “நீங்க கேட்ட விஷயமா தான் வெளியே போறேன் பாட்டி… நீங்க சொன்ன லட்டு பொண்ண நினைச்சாலே எனக்கும் ஆசையா இருக்கு…” என்றுவிட்டு அவன் கிளம்ப…
பாவம் அவன் குட்டி லட்டுவை குறித்து கூறியதை அறியாது, பெரிய லட்டுவை தான் பார்க்க போகிறான் என்று நினைத்த உமையாளுக்கு, மகிழ்ச்சியில் ஒன்றும் பிடிப்படவில்லை…
உடல், மனம் அனைத்தும் அவ்வளவு லேசாகிவிட்டது…
“சந்தோஷம் சமரா… நல்லதே நடக்கும்… போயிட்டு வா…” என்று அவனை அனுப்பிவிட்டவர்…
நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் தோட்டத்திலேயே அமைந்திருக்கும் கோவிலுக்கு சென்று அமர்ந்துவிட…
ஈத்தனின் கார் சென்று சென்னையிலேயே பிரபலமான மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் நின்று இருந்தது…
இன்று அவனே செல்ஃப் ட்ரைவிங் செய்து வந்து இருந்தான்…
முன்பே அப்பாயிண்மெண்ட் அனைத்தும் வாங்கிவிட்டும் இருந்தான்…
அவனுடைய நேரம் வரவும், முகத்தில் பாதியை மூடும் வகையில் முக கவசம் ஒன்றை எடுத்து அணிந்த ஈத்தன்… கண்களையும் கூலர்ஸ் மூலம் மறைத்துக்கொண்டு, இறங்கி… மருத்துவமனைக்குள் நுழைந்தான்…
பதட்டமான மனநிலையில் இருந்தவனை, வெள்ளை வெளேரென்று தூய்மையாக இருந்த மருத்துவமனை சற்று அமைதிப்படுத்த, ஆங்காங்கே கையில் குழந்தையுடன் மகிழ்வாக சென்றுக்கொண்டிருந்த தம்பதிகள் ரசிக்க வைத்தனர்.
விஐபிகளுக்கான மூன்றாம் தளத்திற்கு லிஃப்ட் மூலம் சென்றவனிடம்… அங்கிருந்த ரிசப்ஷன் பெண்… அப்பாயிண்மெண்டை சரிபார்த்துவிட்டு… அங்கிருந்த 333 அறையை காட்ட…
கதவை தட்டிவிட்டு உள் நுழைந்து இருந்தான் ஈத்தன்…
அங்கு சித்ரலேகாவின் வயதையொத்த மருத்துவர் அமர்ந்து இருந்தார்…
“குட் மார்னிங் டாக்டர்” என்றவனை வரவேற்ற மருத்துவர்…
முகக்கவசம் மற்றும் கண்ணாடியினை அகற்றிவிட்டு, அமர்ந்தவனை பார்த்து, “சொல்லுங்க ஈத்தன். What brings you here today?” என்று நிதானமாக கேட்க.
“எனக்கு பேபி வேண்டும் டாக்டர். அதைப்பற்றி தான் டிஸ்கஸ் பண்ண வந்தேன்”, என்றவனை குழப்பமாக பார்த்த மருத்துவர், அவனை தடுக்கவில்லை. அவன் பேசட்டும் என்று எல்லாம் கேட்டுக்கொண்டவர்…
இறுதியாக, “சோ! உங்களுக்கு ஒரு பேபி தேவை. அதுவும் பெத்து தர ஒரு தமிழ் பொண்ணு தான் வேண்டும் இல்ல ஈத்தன்” என்றவர் தொடர்ந்து, “அது மட்டுமில்லை அந்த பொண்ணு உங்களுக்கு தன்னோட கருமுட்டையை தானமாக தந்து, ஆத்மார்த்தமாவும் அந்த குழந்தையை பெத்து தந்துட்டு போயிடனும்! ரைட்” என்று கேட்டார்.
“எஸ் எஸ்…” என்றவன், “எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை” என்று சேர்த்துக்கொள்ள… மருத்துவரின் இதழோரம் புன்னகை…
‘எனக்கு இந்த பொம்மை தான் வேண்டும்’ என்று கேட்கும் சிறு பிள்ளையாக தான் அவருக்கு அவன் தெரிந்தான்…
அதில், “நீங்க கேட்ட எதுவும் உங்களுக்கு இங்க கிடைக்காது ஈத்தன். அதுவும் ஆத்மார்த்தமா எல்லாம் வாய்ப்பே இல்லை” என்று அவன் முகம் பார்த்தவர்…
“Go man, find a girl who deserves you and marry her. She’ll give you everything you want” என்றார்.
அதில் ஆர்வமாக வந்து அமர்ந்திருந்தவனின் முகம் மெல்ல சுருங்கிவிட்டது…
“சாரி டாக்டர். எனக்கு மேரேஜில் நம்பிக்கை இல்லை. பேபி மட்டும் தான் வேண்டும். அதுக்கு என்ன பண்றது சொல்லுங்க” என்றான்.
“அது தான் முடியாதுன்னு சொன்னேனே ஈத்தன். உங்களுக்கு வேண்டும்னா ஜெயில் போக விருப்பம் இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை…” என்றவர் அவனுக்கு சட்ட திட்டங்கள் அனைத்தையும் விளக்க ஆரம்பித்தார்…
“உங்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை வேண்டும்னா… உங்களுக்கு முதலில் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகியிருக்கனும்… அடுத்து உங்கள் மனைவியால் கண்டிப்பா குழந்தை பெத்துக்க முடியாதுன்ற நிலையில் தான் உங்களுக்கு வாடகை தாய் அரேன்ஜ் பண்ண முடியும் ஈத்தன்… என்றவர்…
“நீங்க எந்த விதத்திலுமே இந்திய சட்டப்படி எலிஜிபில் இல்லை… சிங்கிள் ஆண்மகன், அதுவும் 26 வயசுக்குள்ளே வாய்ப்பில்லை ஈத்தன்… சாரி” என்றவர்…
“நீங்க ஏதோ கொஞ்சம் கன்ஃபியூஷன்ல இருக்கீங்க நினைக்கிறேன் ஈத்தன்… கவுன்சிலிங் போனால் நல்லது… உங்களுக்காக தான் சொல்றேன்…”, என்றவர்…
மேலும் தொடர்ந்து, “நீங்க கேட்ட மாதிரி யாரும் ஆத்மார்த்தமா எல்லாம், தான் பெத்த குழந்தையை தரது இல்லை ஈத்தன்… ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை பெத்த பெண்கள் தான் வாடகை தாயாகவும் இருக்க முடியும்… தங்களோட குடும்ப கஷ்டத்துக்கு வேற வழியே இல்லைன்ற நினையில் தான் பணத்துக்காக பெத்து தருவாங்க…” என்றார் அவனுடைய மனதை மாற்ற…
ஆனால் அவனோ, “அப்ப நான் எனக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிறேன் டாக்டர்” என்றான்…
அதற்கும் இல்லையென்று தலையாட்டிய மருத்துவர், “அதுக்கும் மேலே இருக்க கண்டிஷன்ஸ் தான் ஈத்தன். சிங்கிள் ஆண்மகனான உங்களால் தத்தெடுக்க முடியாது. தர மாட்டாங்க” என்று, ஈத்தனின் கனவில் மொத்தமாக அவர் மண்ணை அள்ளி போட்டுவிட… ஈத்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
“ஓகே டாக்டர். நான் யூ.எஸ்ல ட்ரை பண்றேன்” என்றுவிட்டு அவன் எழுந்துக்கொள்ள…
“குழந்தை ஈசி இல்லை ஈத்தன். அதுவும் சிங்கிள் பேரண்ட்டா வளர்க்கிறது. ரொம்ப கஷ்டம். நல்லா யோசிச்சு முடிவெடுங்க…” என்றவர், “நீங்க கேட்ட தமிழ் பொண்ணும் அங்க கிடைக்காது…” என்றுக்கூற…
“தேங்க் யூ டாக்டர்” என்றுவிட்டு ஈத்தன் கிளம்பிவிட்டான்…
ரிசப்ஷனில் பணம் கட்டி முடித்தவன் மனம் முழுக்க, கிளம்பும் முன்னர் பார்த்த உமையாளின் சந்தோஷம் நிரம்பிய முகம் தான் நிறைந்து இருந்தது…
அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன்… லிஃப்ட்டில் இறங்கியவன்… விடுவிடுவென்று வெளியேறி… பார்க்கிங்கில் தன் காரை நோக்கி நடக்க…
“சார்… சார்…” என்று அவன் பின்புறமிருந்து மெதுவாக கேட்க ஆரம்பித்த குரல்… கொஞ்சம் கொஞ்சமாக சத்தமாக கேட்க ஆரம்பித்தது…
அதில் சட்டென்று நின்ற ஈத்தன்… திரும்பி பார்க்க…
அவனை நோக்கி ஒரு நர்ஸ் பெண் மூச்சிரைக்க ஓடிவந்துக்கொண்டு இருந்தாள்…
எதையாவது விட்டுவிட்டு வந்துவிட்டோமோ என்று ஈத்தன், தன் ஷார்ட்ஸ் பேக்கெட்டில் கைவைத்து வேலட் இருக்கிறதா என்று பார்க்க…
அவன் முன்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து நின்றவள்…
முதலில் அவன் மீது இருந்த வரும் பர்ஃபியூம் மணத்தை நுகர்ந்து உறுதிப்படுத்திக்கொண்டு…
“சார்… நான் குறிஞ்சி மலர்… இங்க தான் நர்ஸா இருக்கேன்…” என்றுக்கூற…
ஈத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை…
“ஓகே… தென்…” என்றான்…
உள்ளுக்குள் தன்னை கண்டுபிடித்துவிட்டு வந்து இருக்கின்றாளோ… ஆட்டோகிராஃப் எதுவும் வேண்டுமோ என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க…
“உங்களுக்கு பேபி வேண்டும்னு கேட்டிங்க இல்ல… நான் தரேன் சார்…” என்று இருந்தாள் அவள்…
அதில், “வாட்…” என்று அதிர்ந்த ஈத்தன்… பட்டென்று தன் கூலர்ஸை எடுத்துவிட்டு அவள் முகத்தை உற்றுப்பார்க்க…
தன் நெஞ்சில் கைவைத்த குறிஞ்சி… பின்னோக்கி ஒரு அடியெடுத்து வைத்திருந்தாள்…
ஒருசில விநாடிகள் அவளுக்கு உலகமே உறைந்துவிட்டு இருந்தது…
இதுவரை அவள் பார்த்திராத நீல விழிகள்… அதுவும் பளிச்சென்று… மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது அவளுக்கு…
ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டவளை ‘என்ன ஆனது இவளுக்கு’ என்று பார்த்த ஈத்தன்… சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு…
தன் முகக்கவசத்தை நீக்க…
குறிஞ்சியின் விழிகள் இரண்டும், இரண்டு மடங்கு மேலும் பெரிதாக விரிந்து இருந்தன…
“ஹலோ…” என்றவன் அவள் கண்களின் முன் தன் கரத்தினை ஆட்டி… “கேர்ள்…” என்று காதோரம் சொடுக்கிட…
இவ்வளவு நேரமும் தாறுமாறாக துடித்த அவள் இதயம், இப்பொழுது எகிறி குதிக்க ஆரம்பித்து இருந்தது…
“ஐயயோ வெள்ளைக்காரங்க போலயே…” என்று நினைத்தவள்… பிறகு யாராக இருந்தால் என்ன என்ற முடிவுடன்…
மீண்டும், “உங்களுக்கு பேபி வேண்டுமில்ல… நான் பெத்து தரேன்…” என்று ஈத்தனையே ஆட்டிப்படைத்தாள்…
‘என்னடா இது’ என்று அவளை மேலிருந்து கீழ் ஒரு முறை பார்த்த ஈத்தன்… “அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்றுக்கூற…
கண்ணிமைக்கும் நேரத்தில் குறிஞ்சியின் கண்கள் கலங்கி நீரை கொட்ட, “ஏன் சார் வேண்டாம்…” என்று மூக்கை உறிஞ்சியப்படி கேட்டவள்…
“நான் என் ஸ்கூல் மார்க் ஷீட்ஸ்… காலேஜ் மார்க் ஷீட்ஸ்… எல்லாமே எடுத்து வந்து உங்கக்கிட்ட காட்டுறேன் சார்… நான் எல்லாத்துலயுமே 90% மேல வாங்கி இருக்கேன் சார்… அதுமட்டுமில்ல சார்… Good Conduct certificate கூட நான் வச்சி இருக்கேன் சார்…” என்றவள்… “அப்புறம் நான் தமிழ் பொண்ணு தான் சார்” கூற…
“காட்…” என்று தலைக்கோதியவனுக்கு, மருத்துவருடன் அவன் பேசியதை அவள் கேட்டுவிட்டாள் என்பது புரிந்தது…
அதற்குள் அவனிடம் வேலையை பிடித்துவிடும் நோக்கில் குறிஞ்சி, “என் ஆயுசு இருக்கும் வரை, வருஷத்துக்கு ஒன்னுன்னு எத்தனை குழந்தை வேண்டும்னாலும் உங்களுக்கு பெத்து தரேன் சார்… பிராமிஸ்” என்றாள் படபடவென்று…
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Super very nice and much interesting sis, very very eagerly waiting for your upcoming episodes sis ❤️💗💕💕💖💖💖
பதிலளிநீக்குSuper sis
பதிலளிநீக்குSemma ..... Eadhir pakkatha twist.... Good story... Unga hero's epothumae so sweet
பதிலளிநீக்குEthan kalyanam pannamale kuzhandai Venum nu kekuriye da, un paatti ku terimja rumba kashtam paduvamga, kurimji enna ithu otru keriya avan pesardu, eduku iva ippadi pesitu iruka enna kashtamo
பதிலளிநீக்குAdada enapa ithu ipdi poitan samar paiyan... Paavam Avan kastam avanuku. Aari kurinji yen apdi sonna..🤔 mandai kaayuthe.. kurinji ku nama samar yarunu Koda theriyama than baby ku ok sonala
பதிலளிநீக்கு👌
பதிலளிநீக்குKurinji entry super, I am waiting NXT Ud.
பதிலளிநீக்குMam, eagerly waiting for next episode
பதிலளிநீக்குSuper but kurunjiku enna thevainu therila..y she accepted.. very nice eppidi❤️❤️
பதிலளிநீக்கு