16.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
அத்தியாயம் -16.1
இரவு பதினோரு மணிக்கு, மருத்துவமனையில், தன் ஐடி கார்டினை ஸ்கேன் செய்துவிட்டு, உடை மாற்றும் அறைக்குள் சென்ற குறிஞ்சி, காலையில் தான் அணிந்து வந்த உடைக்கு மாறிக்கொண்டு, மருத்துவமனை உடையை அங்கிருந்த கூடையில் துவைக்க போட்டவள், ஷூவையும் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, முகத்தில் போட்டிருந்த மேக்-அப்-களையும் கழுவிவிட்டு, தன் பையுடன் வெளிவந்தாள்.
அங்கு ஹாஸ்பிடல் வேன் நின்று இருந்தது.
இரவு நேரத்தில் பணி முடிந்து செல்பவர்களை அழைத்து செல்வதற்கு.
அதில் சென்று அமர்ந்துக்கொண்ட குறிஞ்சிக்கு… அப்பாடா என்று இருந்தது…
வண்டியை எடுத்தால் அடுத்த கால் மணி நேரத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்… உடலை நன்றாக தளர்த்தி அமர்ந்து, அருகில் இருந்த ஜன்னல் மீது தலையை சாய்த்து கொண்டாள்…
காலையில் இருந்து நடந்துக்கொண்டே இருந்ததில், உடல் தூக்கத்திற்கு கெஞ்சியது…
தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் அவள் வேலை இரவு 11 மணிக்கு தான் முடியும். தினமும் இரண்டு ஷிஃப்ட் பார்க்கின்றாள்… இரண்டிற்கும் சேர்த்து பதினெட்டாயிரம் சம்பளம்…
மூட துடிக்கும் இமைகளை சிமிட்டி சிமிட்டி மூட விடாது தடுத்து கொண்டிருந்தவளுக்கு, வண்டி அப்படியே போய்கொண்டே இருக்காதா என்று தோன்றாத நாள் இல்லை… அன்றும் தோன்ற… அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது….
இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்…
மனம் முழுவதும் நாளை ஈத்தனை சென்று பார்ப்பதற்கு என்னனென்ன ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என்பதிலேயே சுழன்றது… முன்னேற்பாடாக நாளை காலை ஷிப்ட்-டிற்கு விடுமுறை சொல்லிவிட்டு வந்து இருந்தாள்…
எப்பொழுதும் அவர்கள் வீட்டின் வெளிகேட் திறந்தே தான் கிடக்கும்…
இவள் பார்த்து பூட்டி வைத்தாள் தான் உண்டு…
இன்றும் அப்படி தான்…
இரவு மணி 12-யை நெருங்கிய சமயத்திலும், அவள் வீடு அவ்வளவு ஜகஜோதியாக இருந்தது…
டீவியில் புதிதாக வெளியாகியிருந்த திரைப்படம், திருட்டு சைட்டில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்க…
அங்கு பாயில் படுத்தப்படி அதைப்பார்த்துக் கொண்டிருந்த லோகேஸ்வரி, “பொம்பள பொண்ணு வூட்டுக்கு வர நேரத்தை பாரு… நாலு பேர் பார்த்தா என்ன நினைப்பாங்க… அதுவும் நல்லா மினிக்கிக்கிட்டு…” என்று அவளை பார்த்து சத்தமாக கத்த…
குறிஞ்சிக்கு உள்ளுக்குள் கிடுகிடுவென்று நடுங்கியது…
கடந்த ஒரு வருடமாக தினமும் வாங்கும் திட்டு தான்… இருந்தும் பழக்கபடவில்லை… கண்கள் குளமாகிவிட்டது…
“இப்ப தான் சித்தி விட்டாங்க…” என்றாள் மெல்ல.
அதற்குள் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த, ஐஸ்வர்யாவின் மடியில் படுத்திருந்த அவள் கணவன் பிரபு, ஏதோ அவளிடம் கூற…
திரும்பிய ஐஸ்வர்யா, “ஏய்… இப்ப எதுக்கு நீ இப்படி கத்துற… ஏற்கனவே அவனுங்க என்ன பேசுறானுங்கன்னு புரிய மாட்டுது… கத்துறதா இருந்தா வெளியே போய் கத்தும்மா… ப்பே” என்று அவள் அன்னை லோகேஸ்வரியை திட்டியவள்…
திரும்பி குறிஞ்சியிடம், “இப்ப எதுக்குடி நீ அங்கயே நின்னுட்டு ஷோ காட்டுற… போ போயிட்டு வேலையை பாரு… அப்படியே அந்த ஹோம் வொர்க்கையும் முடிச்சு வை…” என்றுவிட்டு மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
ஐஸ்வர்யா விட்ட டோசில் லோகேஸ்வரி திரும்பிக் கொள்ள…
அங்கிருந்த அறைக்குள் குறிஞ்சி ஓடினாள்…
அங்கு, வாயில் கொத்தாக துணியை வைத்து கடித்து, வலியை பொறுத்தப்படி படுக்கையில் கிடந்தார் அவள் அன்னை சாந்தினி…
காற்று வசதி எதுவும் இல்லாத அந்த அறையே ஒருமாதிரி நாற்றம் அடிக்க…
“ராத்திரி சாப்பிட்டீங்களா மா” என்ற குறிஞ்சி, அவர் வாயில் இருந்த அந்த துணியை எடுத்துவிட…
“நான் சாப்பிட்டேன் ம்மா… நீ சாப்டியா…” என்றவர்… வலியில் வெளிவர பார்த்த கேவலை பட்டென்று தன் கையை கடித்து பொறுக்க….
குறிஞ்சியின் கண்கள் குளமாகிவிட்டது…
“வேண்டாம் ம்மா…”, என்றவள் அவர் கையை பிடித்து இழுக்க…
“ஆ….” என்று அவர் வலியில் போட்ட சத்தத்தில்… கொண்டையை முடிந்துக்கொண்டு வந்த லோகேஸ்வரி… ஆடி தீர்த்துவிட்டார்…
“ஏன்டி இப்ப இப்படி கத்துற… என்னை என்ன தூக்கிட்டா போறாங்க… ஏற்கனவே என் குடும்பத்தை நீ கெடுத்தது பத்தாதா…” என்றவர், அடுத்து சாந்தினியை பார்த்து பேசிய வார்த்தைகள் எல்லாம் காதில் கேட்க முடியாத வார்த்தைகள்… “நீ பண்ண பாவத்துக்கு தான்டி இப்படி நாத்தம் எடுத்து கெடக்கிற… இன்னும் அனுபவிப்ப பாரு…” என்றுவிட்டு அவர் சென்றுவிட…
மகள் முன்பு வாங்கிய பேச்சுக்களில் சாந்தினி குறுகிப்போக…
தன் முன்பே தன் தாய் வாங்கும் பேச்சுகளில் குறிஞ்சி மரித்துப்போனாள்…
என்ன செய்வது…. ஜான் ஏறினால் முழம் சறுக்குவது போல்… விடிவுகாலமே இல்லாது அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது…
சாந்தினியின் யூரின் பேக்கை எடுத்துச்சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த குறிஞ்சி, அவருக்கு உடல் துடைத்து, துணிமாற்றி, தலைசீவி விட்டவள்… அவர் சாப்பிட்டு வைத்த பாத்திரங்களுடன் வெளிவந்து மணியை பார்க்க… மணி 1…
நல்ல வேளையாக லோகேஸ்வரி தூங்கிவிட்டு இருந்தார்…
கிட்சன் சென்று ஒரு கப்பில் நீரை எடுத்து வந்தவள்… அன்று மருத்துவ மனையில் அவளுக்கு ஸ்நேக்ஸாக கொடுத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து… அதை நீரில் தொய்த்து சாந்தினிக்கு அவர் மறுக்க மறுக்க ஊட்டி விட்டவள்… சிறிய கப்பில் இருந்த ஆப்பிள் துண்டுகளையும் ஊட்டி முடித்து… இரவு போடும் மருந்துகளை கொடுத்து… தூங்குவதற்கான ஊசியையும் போட்டு முடிக்க…
மெல்ல வலி குறைந்து சாந்தினி தூங்க ஆரம்பித்தார்…
பிறகென்ன, ‘கடவுளே நாளைக்கு மட்டும் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிட்டா போதும்… அந்த சாருக்கு நான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுவேன்…’ என்ற வேண்டுதலுடன் வெளிவந்த குறிஞ்சி, அவ்வை சண்முகி போல் பறந்துக்கொண்டு இருந்தாள்…
அனைவரின் துணிமணிகளையும் தேடி பொறுக்கி ஊற வைத்துவிட்டு…
காலை, மதியம், இரவு, இடை இடையே சாப்பிட்டு என்று விழுந்திருந்த பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துப் போட்டு கழுவி முடித்து… துணிகளையும் அலசி போட்டுவிட்டு அவள் உள்ளே நுழைய…
ஹாலில் படம் முடிந்திருந்தது…
சோஃபாவில் இருந்து பிரபு எழுந்துக்கொள்ள…
அவனுடனே எழுந்துக்கொண்ட ஐஸ்வர்யா, “மாமாக்கு ஹாஃப் பாயில் போட்டு எடுத்துட்டு வா குறிஞ்சி… ஒன்னு கூட உடையக்கூடாது…” என்றுவிட்டு தங்களின் அறையை நோக்கி செல்ல…
“லவ் யூ டி பொண்டாட்டி” என்ற பிரபு, அவளை அப்படியே தன்னிரு கைகளில் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்துக்கொண்டான்…
அவள் சொன்னப்படியே அங்கிருந்த கவரில் இருந்த ஐந்து முட்டைகளையும் போட்டு எடுத்துச்சென்று, குறிஞ்சி கதவை தட்ட…
“ஏய் உள்ளே வந்து வச்சிட்டு போ…” என்றாள் ஐஸ்வர்யா…
அங்கு பாதி போதையில் இருந்த பிரபு… ஐஸ்வர்யாவை கொஞ்சிக் கொண்டு இருந்தான்… அதில் குடிக்காமலேயே அவளுக்கு போதையேறிக்கொண்டு இருந்தது…
அங்கிருந்த மேஜையில் தட்டினை வைத்த குறிஞ்சி, மேஜை மீதிருந்த சில கவர்களை பார்த்து பதறி வெளியே ஓடிவந்துவிட்டாள்…
தாம்பத்யமும் அதில் உள்ள விஷயங்களும், சம்பந்தப்பட்ட இருவருக்கும் தானே அழகு. இப்படி ஊர் பார்க்க நடந்தால் பார்ப்பவர்களுக்கு அது அருவருப்பை தானே தரும்.
வெளிவந்த குறிஞ்சி… வீட்டினை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு… நாளைக்கு சமைக்க தேவையான அனைத்தையும் தனித்தனியாக பிரித்து, நறுக்கி என்று வைத்தவள்…
இறுதியாக அமர்ந்து ஐஸ்வர்யாவின் மகள், பூஜாவுடைய ஹோம் வொர்க்-கை செய்துக்கொண்டு இருந்தாள்…
மணி மூன்றாகி இருந்தது…
தூக்கத்தில் எழுத்துக்களே அவளுக்கு சரியாக தெரியவில்லை… தன் தலையில் தானே கொட்டிக்கொண்டு எப்படியோ செய்து முடித்தவள்…
தலையணை, பெட்ஷிட், பாய் எதையும் எடுக்காது… அப்படியே சாந்தினி இருந்த கட்டிலுக்கு கீழே சுருண்டு படுத்து உறங்கி விட்டாள்…
ஈத்தன் பெற்றது ஒரு அனுபவம் என்றால், குறிஞ்சி பெற்றது, பெற்றுக்கொண்டிருப்பது என ஓராயிரம் அனுபவங்களை தாண்டி சென்றுக்கொண்டு இருந்தது!
தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அமர்ந்து யோசிக்க கூட குறிஞ்சியை அவள் வாழ்க்கை இதுவரை விட்டதில்லை. அடுத்து அடுத்து என்று விரட்டிக்கொண்டே இருந்தது.
ஒருவகையில் யோசித்து பார்த்தால் அதுக்கூட நன்மைக்கு தான் போல். ஈத்தன் அளவுக்கு அவள் துவண்டுப்போகவில்லை. ஒவ்வொரு முறை அவள் சந்திக்கும் புதுபுது போராட்டங்கள், அவளை திடப்படுத்தி, அடுத்ததை எதிர்க்கொள்ள அனுப்பி வைத்தது.
விட்டாள் இரண்டு நாட்களுக்கு கூட எழாது தூங்குவாள்…
ஆனால் விட்டால் தானே…
அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே, காலை ஐந்து மணி அலாரம் அடித்து அவளை எழுப்பிவிட்டது…
சரியான தூக்கம் இல்லாது, நடு மண்டையில் யாரோ ஆணியால் அடிப்பது போல் இருந்தது…
எங்கு அலாரம் சத்தத்தில் சாந்தினி எழுந்துவிட போகிறார் என்று விரைந்து ஃபோனை எடுத்து அணைத்தவள்…
எரிந்த கண்களை தேய்த்துவிட்டப்படியே, அந்த வீட்டு ஜீவன்களுக்கு காலைக்கு, மதியத்துக்கு என்று சமைக்க ஆரம்பித்தாள்…
மனம் பால் கார அண்ணாவின் ஹாரன் சத்தத்திற்காக ஏங்கியது…
அந்த வீட்டில் அவள் உணவு என்று எடுத்துக்கொள்வது அந்த காலை காஃபி தான்…
அதை குடித்தால் தான் சற்று அவளுக்கு இந்த தலைவலி மட்டுப்படும்…
விடுவிடுவென்று பழக்கப்பட்ட வேலையை அவள் கைகள் பார்க்க… பால் காரர் வரும் நேரம், கிட்டத்தட்ட சமையல் முடிந்திருந்தது…
சாந்தினியை எழுப்பி பல் துலக்கிவிட்டு, படுக்கையிலேயே காலை கடன்களுக்கு உதவியவள், சென்று தனக்கும், சாந்தினிக்கும் காஃபியை போட்டு எடுத்துச் சென்று, முதலில் அவர் குடிக்க உதவிவிட்டு… அடுத்து வெளியே கேட்ட “சித்தி…” என்ற சத்தத்தில் தன்னதை நாலு மடக்கில் குடித்து முடித்துவிட்டாள்…
அதற்குள் மீண்டும் சித்தி என்ற சத்தம் கேட்க…
“வந்துட்டேன் பாப்பா” என்று குறிஞ்சி ஓடினாள்.
ஐஸ்வர்யாவின் மகள் பூஜா தான் அழைத்தது. 9 வயது இருக்கும்.
அவளுக்கு பிரஷில் பேஸ்ட் வைத்து கொடுப்பது தொடங்கி அனைத்தும் குறிஞ்சி தான் செய்வாள்… இன்று நேற்று இல்லை பிறந்ததில் இருந்தே…
அவளுக்கு பூஸ்ட் போட்டு கொடுத்து… குளிக்க வைத்து… தலைசீவி… லன்ச் பேக் கட்டி… என்று 6.30 மணிக்கு அவள் கிளம்புவதற்கு முன்பு பூஜாவை தயாராக்கிவிட்டுவிட வேண்டும்…
ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்து… சாந்தினிக்கு காலை மதிய உணவினை அருகில் டப்பாவில் ஸ்பூன் போட்டு சாப்பிடும் வகையில் வைத்துவிட்டு…
ரோபோ குளியல் ஒன்றை போட்டு… இருப்பதிலேயே சற்று பார்ப்பது போல் இருக்கும் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டு…
நேற்று ஈத்தன் கேட்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் எடுத்துக்கொண்டு, தனக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கப்போகும் எதிர்ப்பார்ப்புடன் குறிஞ்சி ஈத்தன் வீட்டிற்கு கிளம்பினாள்…
அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்🦋
Achacho.. samar ku panam irunthum kasta pattan nama kurinji Panam ilama kasta padara.. paavam pa kurinji.. samar epdiyum help pannuvan than.. ana aprm mrg epdi nadanthuchu
பதிலளிநீக்குYar inda chiththi ivalai en ivlo kodumai panramga pavam kurimji ninaichadu nadantha Inga irunthu kilambi poita nallathu ethan avaluku oru nallathu pannitu po rasa
பதிலளிநீக்குஏன் மா குறிஞ்சி அந்த விசிட்டிங் கார்டை பத்திரமா எடுத்துட்டு வந்தியா 🧐🧐
பதிலளிநீக்குVery nice ippidium kastapadum jeevanga irrukangala...y sis kurunjiku ivlo kastam kudukurenga...paavanla
பதிலளிநீக்குகாலில் சக்கரம் கட்டி கடமையாய் ஓடும்
பதிலளிநீக்குகாத்திருக்காத நேரம்
காபியில் கொஞ்சம்
கட்டுப்படுகிறது மனம்....
காலை விடிந்தாலும்
கன்னியின் விடியாத வாழ்க்கை.....
வசைகள் பாடும் பாட்டி விரட்டி அடிக்கும் சகோதரி வாடி நிற்கும் தாய்
வலி நிறைந்த வாழ்க்கைக்குத்தான்
வழி என்னவோ???
கன்னித்தாய் ஆக
கஷ்டம் நிர்பந்திக்க...
காக்கும் கடவுளாய் உதவி
கரம் நீட்டும் சமர்வேலா.....
Different story....
பதிலளிநீக்கு