7.3- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!

குறிஞ்சியின் முகத்தை பார்த்தப்படியே, கப்பில் மீதியிருந்த லெமன் ஹனி டீயினை சொட்டு விடாமல் குடித்துவிட்டு, கப்பினை டேபிள் மீது வைத்தான். அச்சிறு இடைவெளியிலேயே ஈத்தன் கேட்காமல் விட்டதை எல்லாம், அவனின் பார்வை அவளிடம் தேடி முடித்திருந்தது. கோவிலில் இருந்து கிளம்பும் போது வாங்கியிருந்த மல்லிகை மொட்டு சரங்கள் அவளின் தோள் வழியாக பளிச்சென்று பூத்து எட்டிப்பார்க்க, அதற்கு போட்டியாக, அவளின் சிரிக்கும் கண்கள் இரண்டும் வைர மகுடங்களாக மின்ன… உடன் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம் என அனைத்தும், அவளின் வெளிர் மஞ்சள் நிற நெற்றியில் அழகாக வரிசையாக இடம் பெற்று அமர்ந்திருக்க.. அவளின் முகம், அவ்விரவு நேரத்திலும் பரிபூரண பொலிவுடன் மங்களகரமாக காணப்பட்டது... அதில் அவள் நிறைவாக வாழ்வதாக நினைத்த ஈத்தன்… மேலும் அவளிடம் எந்த தனிப்பட்ட கேள்விகளும் கேட்காது… நிறுத்திக்கொண்டு… “அப்புறம் குறிஞ்சி…” என்றான். அதில் குறிஞ்சி ‘ஹப்பாடா’ என்று அவனை கிளப்பும் விதமாக “நீங்க உள்ளே படுத்துக்கோங்க சமர் சார். நான் இங்க இருக்கேன்” என்றாள். ஈத்தனோ அவள் மறந்துவிட்டதை மறக்காமல் ஞாபகத்தி...