4.3 -சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎼🪻😘📽️
நாளை ஈஷாவிடம் பேச வேண்டியதை நினைத்தப் படியே குளித்துமுடித்து இரவு உடைக்கு மாறிய ஈத்தன், அறைக்குள் நுழைந்து ஈஷாவின் அருகில் சென்று படுக்க, எப்பொழுதும் போல் அருகில் அவனின் இருப்பை தூக்கத்திலேயே உணர்ந்தவள், மறுகணம் இடம்பெயர்ந்து ஈத்தனின் கை வளைவிற்குள் தலை வைத்து, அவன் மார்புக்குள் அடங்கிவிட…
உலகமே மறந்துப்போனது ஈத்தனுக்கு!
மகளின் அருகாமையும், ஸ்பரிசமும், வாசமும் தாயாய் மாறி அவனை தாலாட்ட, மகளின் தலையை கோதி கலைந்த முடிகளை காதோரம் ஒதுக்கி அவளை உச்சி முகர்ந்தவனை, உறக்கம் சுகமாய் வந்து அணைத்துக்கொள்ள,
அவனுடைய பிரபஞ்ச விதி கூற்றின் படியே, அவன் தெரிந்தே சரியாக செய்த பிழை ஒன்று, அவனை விழுங்க விருட்சமாக வளர்ந்து வந்துக்கொண்டு இருப்பதை அறியாது, அமைதியான நித்திரைக்கு சென்றுவிட்டான்.
"For every action, there is an equal and opposite reaction” - Newton’s 3rd Law.
____________________________
மெல்லிய சத்தத்தில் ஈத்தனின் குரலில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, அதில் லயித்தப்படியே இணையத்தில் இன்றைய அவனுடைய இசை நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த படங்களையும், தொலைக்காட்சியில் தான் எடுத்த படங்களையும், அது பத்தாது என்று யூ.டியூப்பில் ஓடும் லைவ் வீடியோவில் இருந்தும் எடுத்த படங்களையும், பிரிண்ட் செய்து எடுத்திருந்த குறிஞ்சி, ஒவ்வொரு படத்தினையும் பொறுமையாக ரசித்து ருசித்து, அறையின் சுவர்களில் சிறு சிறு அலங்கார பல்புகளுக்கு அடியில் இடம் தேடிப்பிடித்து பதித்துக்கொண்டு இருந்தாள்.
அறை முழுவதும் அவர்களின் ஆட்சி தான்.
அதுப்பத்தாது என்று தூக்க முடியாத அளவிற்கு பல புகைப்பட ஆல்பங்களும் அவளே தன் கையால் செய்து வைத்திருக்கின்றாள்.
நிழல்களை பார்க்கவே இரண்டு கண்கள் போதவில்லை அவளுக்கு!
தன் கண் மையினை
எடுத்து வந்து, ஈஷாவின் புகைப்படங்கள் அனைத்திலும், தன் கண்ணே குழந்தைக்கு பட்டுவிட போகின்றது என்று சிறியதாக திருஷ்டி பொட்டு வைத்து வேலையினை முடித்தவள். மீண்டும் ஒரு சுற்று ஈத்தனின் புகைப்படங்களை அருகில் நின்று ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள்.
“சமர் சாருக்கு மட்டும் எப்படின்னு தெரியலை வயசு குறைஞ்சுட்டே போகுது! சும்மா மனுஷன் அப்படியே கொல்றாரு” என்று அவனை நுனி முதல் அடி வரை யார் பார்க்க போகிறார்கள் என்ற தைரியத்துடன், எந்த லட்ஜையும் இல்லாது கண்களால் கபளீகரம் செய்தவளுக்கு, சைட் அடிக்கும் வேலை கொஞ்சமும் சலிக்கவில்லை…
சில மணி நேரங்களுக்கு அங்கேயே பட்டா போட்டுவிட்டாள்!
பிறகு தான் நாளை வேலைக்கு செல்ல வேண்டுமே என்று மனமே இல்லாமல் அறைவிட்டு வெளியேறியவள்…
முறுகலான நெய் தோசை மூன்றும், அதற்கு தோதாக தனக்கு மிகவும் பிடித்த தண்ணீர் பதத்திலான காரசாரமான பச்சை மிளகாய் போட்ட பாசிப்பயிறு சாம்பாரும் என்று செய்து எடுத்துக்கொண்டு வந்து…
நடுக்கூடம் முழுவதும் பரவி இருந்த விதவிதமான சிவப்பு நிற ரோஜா பூந்தொட்டிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த, சிறிய கூடை வடிவிலான மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து,
குளிருக்கு இதமாக சூடாக இருந்த உணவை ரசித்து உண்ண ஆரம்பித்தாள். தொண்டைக்குள் அமிர்தமாக இறங்கியது.
காதலிப்பவர்களுக்கு என்றுமே தனிமை என்பது கிடையாது என்று தெரியாமலா சொன்னார்கள்!
சிறுவயதிலான அவளின் பல ஆசைகளில் அடக்கமான சூடான நெய் தோசையையும், ஊஞ்சலையும், குளிர்பிரதேசத்தையும், அவசரம் இல்லாத வாழ்க்கையையும், அப்படி அனுபவித்தாள்.
உடன் மகுடமாக காதில் அவளுக்கு பிடித்த ஈத்தனின் குரலும், சுவாசத்தில் அவனுக்கு பிடித்த ரோஜாக்களின் வாசமும் அவளுள் நிறைய, வாழ்க்கையே அவளுக்கு சொர்க்கமாக தெரிந்தது!
அந்நாளின் இறுதியாக தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற ஈத்தனின் ஆட்டோகிராஃப் நிறைந்த ஒரு தாளினை எடுத்து அப்பேனா மையினில் இருந்த வாசத்தை பிடித்தவள், “ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர்” என்ற அவனின் எழுத்துக்களின் மீது தன் இதழ்களை பட்டும் படாமல் ஒற்றியெடுத்துவிட்டு சுகமாக நித்தரைக் கொண்டுவிட்டவள்…
மறுநாள் காலை பக்கத்து கோர்டசில் ஒலிக்கும்,
ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரியவேல் போற்றி
என்ற குறிஞ்சி நிலக்கடவுளான வேலவனின் 108 போற்றியில் துயில் கலைந்தவள்.
அதில்,
ஓம் கொற்றவேல் போற்றி
ஓம் சமர்வேல் போற்றி
என்ற வரி வர….
காலையிலேயே இதழ்களின் ஓரம் புன்னகையில் துடிக்க… முகம் முழுவதும் மகிழ்ச்சியில் பிரகாசிக்க… எழுந்து அமர்ந்தாள்.
குறிஞ்சி நிலங்களுக்கு வேண்டும் என்றால் தலைவன் முருகன் சமர்வேலாக இருக்கலாம்… ஆனால் இக்குறிஞ்சியின் தலைவன் ஈத்தன் சமர்வேல் ஒருவன் தானே!
என்ன குறிஞ்சிக்கு ஈத்தன் ஒருவனே!
ஆனால் ஈத்தனுக்கோ குறிஞ்சி அவனின் பல லட்ச ரசிகைகளுக்குள் ஒருத்தியே!
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/51.html
Nice
பதிலளிநீக்குSuper sis ❤️❤️❤️
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குKurimji Avana unaku terium Ethan ku unnai teriadu eppadi ivlo love panra, rendu perum eppo meet panna poramgalo
பதிலளிநீக்குSuper Ethan and Esha. Cekerem Kurinji and Ethan meeting vainga sis
பதிலளிநீக்குSemma maa
பதிலளிநீக்குVery nice 👌
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSikrm update panuga.. can't wait
பதிலளிநீக்குUpdate super n awaiting next ud
பதிலளிநீக்குகண்ணுக்கு தெரியாது
பதிலளிநீக்குகடவுள் போல
குறிஞ்சியின் நினைவில்
காட்சியில் வைத்து
காற்றை போல
காதலை சுவாசித்து
காதலுனுக்கே தெரியாத
காதலி இவள்....
குறிஞ்சித் தலைவன்
கண்டுக் கொள்ளும்
காலம் எப்போது???