7.3- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
குறிஞ்சியின் முகத்தை பார்த்தப்படியே, கப்பில் மீதியிருந்த லெமன் ஹனி டீயினை சொட்டு விடாமல் குடித்துவிட்டு, கப்பினை டேபிள் மீது வைத்தான்.
அச்சிறு இடைவெளியிலேயே ஈத்தன் கேட்காமல் விட்டதை எல்லாம், அவனின் பார்வை அவளிடம் தேடி முடித்திருந்தது.
கோவிலில் இருந்து கிளம்பும் போது வாங்கியிருந்த மல்லிகை மொட்டு சரங்கள் அவளின் தோள் வழியாக பளிச்சென்று பூத்து எட்டிப்பார்க்க, அதற்கு போட்டியாக, அவளின் சிரிக்கும் கண்கள் இரண்டும் வைர மகுடங்களாக மின்ன…
உடன் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம் என அனைத்தும், அவளின் வெளிர் மஞ்சள் நிற நெற்றியில் அழகாக வரிசையாக இடம் பெற்று அமர்ந்திருக்க..
அவளின் முகம், அவ்விரவு நேரத்திலும் பரிபூரண பொலிவுடன் மங்களகரமாக காணப்பட்டது...
அதில் அவள் நிறைவாக வாழ்வதாக நினைத்த ஈத்தன்… மேலும் அவளிடம் எந்த தனிப்பட்ட கேள்விகளும் கேட்காது… நிறுத்திக்கொண்டு…
“அப்புறம் குறிஞ்சி…” என்றான்.
அதில் குறிஞ்சி ‘ஹப்பாடா’ என்று அவனை கிளப்பும் விதமாக “நீங்க உள்ளே படுத்துக்கோங்க சமர் சார். நான் இங்க இருக்கேன்” என்றாள்.
ஈத்தனோ அவள் மறந்துவிட்டதை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, “வீட்ல உன்னை கிட்ஸ்(kids) தேடுவாங்களே குறிஞ்சி… நீ கிளம்பு… நான் இங்க மேனேஜ் செஞ்சுப்பேன்..” என்றான்.
“இல்ல சார் நான் இருக்கேன். நைட் வர மாட்டேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். எப்பவும் நடக்கிறது தான் இது. பிரச்சனை எதுவும் இல்லை. அவங்க எல்லாம் எப்பவோ தூங்கியாச்சு. இங்க ஈஷா எழுந்தா என் ஹெல்ப் தேவைப்படும்” என்றாள் குறிஞ்சி.
மகளுக்காக என்றதும் உடனே, “ஓகே” என்ற ஈத்தன்…
“நீ உள்ளே பேபிக்கூட படுத்துக்கோ குறிஞ்சி. நான் இங்க இருக்கேன். எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று அவள் மறுக்க மறுக்க உள்ளே படுக்க அனுப்பியவன்… அங்கிருந்த பெரிய சோஃபாவில் படுத்து தன் உறக்கத்தை தொடங்கினான்...
உள்ளே சென்ற குறிஞ்சி முதல் வேலையாக, தன் மொபைல் டிஸ்ப்ளே முதற்கொண்டு ரிங்டோன் வரை அனைத்தையுமே பக்காவாக மாற்றிவிட்டு… அப்படியே நடப்பதை நம்ப முடியாது படுக்கையில் அமர்ந்திருந்தாள்…
அப்பொழுது ஈஷா தூக்கத்திலேயே இப்படியும் அப்படியும் புரண்டாள் அசௌகரியமாக.
அதில் விரைந்து ஈஷாவிடம் இருந்த ஹாட் வாட்டர் பேக்கை தள்ளி வைத்த குறிஞ்சி, அவளின் போர்வைவை சரியாக போர்த்திவிட்டு, அவளருகே சரிந்து படுத்தவள்…
மெல்ல முதுகில் தட்டிக்கொடுக்க..
தூக்கத்திலேயே “பேபி…” என்று முணுமுணுத்த ஈஷா, புரண்டு வந்து அப்படியே குறிஞ்சியின் நெஞ்சினுள் புதைந்துக்கொண்டாள்.
அதில் அதிர்ந்த குறிஞ்சிக்கு ஈத்தன் பார்த்தால் என்ன நினைப்பான் என்று ஒரு புறம் பயமாக இருக்க…
மறுபுறமோ குழந்தையின் ஸ்பரிசத்தில், சொர்க்கம்! சொர்க்கம்! சொர்க்கம் மட்டுமே!
என்னவொரு கதகதப்பு!
குறிஞ்சிக்கு ஏதோ அவளின் அன்னையே அவளுடன் இருப்பது போல் இருந்தது. கடைசி நாள் கூட அவரை இப்படி தான் அவள் அணைத்து தூங்கி இருந்தாள்.
அதன் பின்னர் யாருமே அவளை இப்படி அணைக்கவோ, ஸ்பரிசிக்கவோ இல்லவே இல்லை…
அதில் சூடான அருவி குறிஞ்சியின் கண்களில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டியது.
அன்னை மடி தேடும் சேயாக, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, குறிஞ்சியும் ஈஷாவை அணைத்துக்கொண்டாள்.
அவளின் வாசத்தை தன் நெஞ்சம் முழுவதும் நிரப்பிக்கொண்டவள்…
“பூக்குட்டிமா…” என்று மெல்ல கிசுகிசுத்த வண்ணம், தன் அன்பை மொத்தமாக இதழ்களில் கோர்த்து, ஈஷாவின் நெற்றியில் அதனை இறக்க…
அதற்கே தூக்கம் தடைப்பட்டுவிட்டது ஈஷாவிற்கு.
“ம்…” என்றவள்… மேலும் குறிஞ்சியின் மார்பினுள் ஒன்றி, தன் ஒற்றை காலை தூக்கி அவள் இடுப்பை சுற்றி போட்டு, இறுக்கி அணைத்துக்கொள்ள…
தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் குறிஞ்சி.
எத்தனை நாட்கள் ஈஷாவை ஸ்பரிசிக்க ஏங்கியிருப்பாள்.
பள்ளியில் அவள் வயதில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஸ்பரிசிக்கும் போதும் தேடுவாளே.
இன்று அது அள்ள அள்ள கிடைத்துவிட்டதில், அந்நாளை தன் வாழ்விலேயே பெரும் பாக்கியமாக கருதினாள்.
ஈத்தனுக்கு என்று பிரத்யேக நறுமணம் இருப்பது போலவே… ஈஷா மீதிருந்தும் தனி நறுமணம் வந்துக்கொண்டிருக்க…
அப்படியே அதை அனுபவித்தப்படியே விடிய விடிய முழித்துக்கொண்டு இருந்தவள், விடிந்த பிறகு தான் கண்ணயர்ந்து இருந்தாள்.
ஈத்தனும் நேரம் சென்ற தூக்கம், பயணம் என்று அசதியில் இன்னும் உறக்கத்தில் இருக்க.
முதலில் விழித்தது என்னவோ ஈஷா தான்.
அருகில் இருப்பது தந்தை இல்லை என்று உணர்ந்த மறுகணமே அவள் எழுந்துக்கொள்ள… தன் கையில் இருந்தவளின் விலகலில் குறிஞ்சிக்கும் முழிப்பு வந்துவிட்டது.
“குட் மார்னிங் ஈஷா” என்ற குறிஞ்சி, “மார்னிங் என்ன குடிப்பீங்க” என்று கேட்க…
“மில்க் தான் ஆன்ட்டி…” என்று கூச்சத்துடன் கூறியவள், தந்தையை தேட…
“அப்பா அங்க தான் இருக்காங்க ஈஷா. வாங்க நாம ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து பேசலாம்” என்ற குறிஞ்சி அவளுடன் சென்று வெளிவர…
அதற்குள் மதர் சுப்பீரியரே அங்கு நேராக வந்துவிட்டு இருந்தார்.
வரவேற்பறையில் ஈத்தன் அவருடன் பேசிக்கொண்டிருந்தான்.
அதைப்பார்த்த குறிஞ்சிக்கு, எங்கே தன்னை குறித்த பேச்சு அவர்களுக்கிடையே வந்துவிடுமோ என்ற பயம் பிடித்துக்கொள்ள பக்பக் என்றானது அவளுக்கு.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/81.html
Eppadi ellam feel panna kodathu Swathi story nalla irukumunu confidential nanga padikerom comment varalanu ethir parka kudathu, kadamai ye sey pallanai ethir parkathe, sapa mudiyala silent reader ennea pakkam pakkama comment poda vachitenga
பதிலளிநீக்குEsha va childhood la patha nurse kurunji uh??? Good emotions.. next update Tuesday uh too long.. apapo write Pani update panregla.. ohh I thought u done ur work nd update littelbit
பதிலளிநீக்குEthan ku kurimji oda family teriyuthu na appo iva enga velai partha, ivaloda family enga iruku, kurimji rumba kashta patta Pola iruke, ellorai um vittutu thaniya iruka, en poi solra
பதிலளிநீக்குSuper sister
பதிலளிநீக்குUnga stories Elam movie uh vantha semaya erukum.. romance thriller crime everything.. 😊
பதிலளிநீக்குDifferent story,super
பதிலளிநீக்குMam nice ud
பதிலளிநீக்குNice story mam
பதிலளிநீக்குI think kurinji tha esha oda amma va ikkumnu ninaikiren seragasi muraila nu thonuthu rite ta sis story going super ☺️
பதிலளிநீக்குWriter... Story super ah poitu Iruku. Athula ungaluku oru doubt um venam. Nama readera lam marakama nama ud ah padichute than irukom. Comment varalanu feel panitu iruka kodathu.. Aduthu ena agum nu oru tension la poda maranthu irupanga.. but super ah poitu Iruku Ela uds um
பதிலளிநீக்கு7.3
பதிலளிநீக்குஉறங்கும் உண்மைகள்
உள்ளங்கள் தடுமாற உயிரினும் மெல்ல
உறைந்த நொடிகள்
உள்ளுக்குள் இருக்கும் உன்னதமான பாசம் உயிர்த்தெழ....
உள்ளம் உருகுதையா என உருகி பாடத் தோணுது....