5.1- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻❤️🎶
அத்தியாயம்-5
ஒரு தொலைக்காட்சி மற்றும் ஒரு யூடியூப் சேனல் விடாது அனைத்திலும், ஈஷா பாடிய பாடலும், தன் அன்னை குறித்து அவள் பேசியதும், ஈத்தனுடன் அவளிருந்த நிமிடங்களும் தான், சிறு சிறு வீடியோ துணுக்குகளாக விதவிதமாக சுற்றிக்கொண்டு இருந்தன…
விடிய விடிய சினிமா நியூஸ் சேனல்ஸ் மக்கள் உட்கார்ந்து, வேலைப்பார்த்துவிட்டு இருந்தனர்...
ஈத்தன் காலை கண்விழித்ததும் முதலில் பார்த்தவை இவைதான்...
அதில் எங்காவது அவனை குறித்தோ, ஈஷா குறித்தோ எதிர்மறையான பகிர்வுகள் உள்ளதா என்று ஆராய்ந்தான்…
எதுவும் இல்லை.
அவனின் IT Wing தீயாக இருந்தனர்…
அதில் சிறிது ஆசுவாசம் ஆன ஈத்தனை… வழக்கமான தினசரி வேலைகள் இழுத்துக்கொள்ள…
அனைத்தையும் முடித்து ஈஷாவுடன் சேர்ந்து காலை உணவை முடித்தவன், அவளை கையுடன் அழைத்துச்சென்று ரோஜா தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டான்…
“என்ன ஆச்சு பேபி... உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு… நான் எதுவும் தப்பு செய்துட்டனா பேபி.… ஏன் கார்டன் வந்து இருக்கோம்…?” என்று ஈத்தனின் முக மாறுதலை உள்வாங்கிய ஈஷா கேட்டாள்.
முக்கியமான விஷயம் எது பேசுவதாக இருந்தாலும் ஈத்தன் அவளுடன் அங்கு தான் வந்து அமர்ந்துவிடுவான்.
மகள் தன் முக மாறுதல்களை கவனிக்கின்றாள் என்ற உடனே மெல்லிய புன்னகை ஒன்றை தன் இதழ்களில் தவழவிட்ட ஈத்தன், “ச்சே ச்சே… என் பேபி எந்த தப்பும் செய்யலை… ஜஸ்ட் டேடி வேற யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவன்… சிறிது நேரம் ஈஷாவிடம் வேறுப்பேசிவிட்டு பதமாக விஷயத்திற்கு வந்தான்.
“நேத்து மியூசிக் கன்சர்டில், சக்தி போக வேண்டாம் சொல்லியும், ஏன் பேபி கேட்காமல் ஸ்டேஜ் போனீங்க…?” என்று ஈத்தன் கேட்க.
“அந்த ஆன்ட்டி ரொம்ப பாவம் பேபி. நான் உங்களை பார்க்க போறது தெரியாமல், நான் மேலே ஏறியதும் பேச வரேன்னு நினைச்சு, அப்படி பேசிட்டாங்க. சக்தி ப்ரோ வேற அவங்களை திட்டவும், எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு… அதனால் தான் போனேன் பேபி…” என்று விளக்கம் தந்தவள், “ஏன் பேபி… நான் அப்படி செய்திருக்க கூடாதா?” என்று சந்தேகமாக கேட்க.
“எஸ் பேபி…” என்று ஓர் ஆழ் மூச்சினை உள்ளிழுத்து வெளியிட்ட ஈத்தன், “அவங்க தெரியாம தான் பேசினாங்கன்னு எப்படி பேபி சொல்ற? தெரிஞ்சுக்கூட பேசி இருக்கலாம் இல்லமா?” என்றான்.
அதில் குழப்பமான ஈஷா, “வேண்டும்னு எல்லாம் யார் பேபி பண்ணுவாங்க? அதனால் அவங்களுக்கு என்ன கிடைக்க போகுது?” என்று எதிர் கேள்வி கேட்டாள்…
இப்பிரப்பஞ்சத்தில் மிக கொடிய ஜந்துக்களின் பட்டியலில், முதல் இடம் பிடிக்க சில மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது அவளுக்கு தெரியாதே!
அதுமட்டுமின்றி இந்நாள் வரையுமே, நல்லவையை மட்டுமே அவளை நெருங்கவிட்டு, நல்லதொரு சூழலில் மட்டுமே அவளை வைத்து, ஈத்தன் வளர்த்திருக்க, உலகம் மொத்தமுமே அழகானது என்ற எண்ணத்துடன் அவள் வளர்ந்திருந்தாள்.
அதை உணர்ந்த ஈத்தன், “வேண்டும்னு பண்றவங்களும் இருக்காங்க பேபி…” என்று, இயக்குனர் நாராயணனுக்கும், அவனுக்கும் இடையில் நடந்தவைகளையும், அவர் சௌந்தர்யாவை விட்டு அவனை அவமானப்படுத்த முயன்றதையும், அவளுக்கு புரியும் வகையில் மிக பொறுமையாக எடுத்துக்கூறி முடிக்க.
“ஓ நோ!” என்ற ஈஷா உடனே, “நாம இரண்டு பேரும் அந்த அங்கிள் வீட்டுக்கு போகலாமா பேபி? அவர்கிட்ட உண்மை என்னன்னு சொல்லி, எல்லாம் புரிய வச்சு, நாம அவர்கூட ஃபிரண்ட்ஸ் ஆகிடலாமே பேபி. அதே மாதிரி அந்த ஆன்ட்டிக்கும் ஹீரோயின் ஆக நீங்க ஹெல்ப் பண்ணுங்களேன். அவங்களும் பாவம் யார்கிட்டேயும் இனி ஏமாற மாட்டாங்க இல்ல” என்றாளே பார்க்கலாம்.
ஈத்தனுக்கு இதயத்தில் மெல்லிய நிலநடுக்கம் வந்து சென்று இருந்தது…
இவ்வளவு கூறிய பிறகும், பிரச்சனை என்னவென்று ஆராயாத, மகளின் வெகுளிதனமான பதில் அவனுக்கு சற்றும் திருப்திகரமாக இல்லை…
அதில், “நான் இவ்வளவு நேரம் சொன்னதை சரியா கவனிச்சயா இல்லையா பேபி? நாம ஃபிரண்ட்ஷிப் வச்சிக்கிற அளவிற்கு நாராயணன் தகுதியானவர் இல்லை” என்றவன், “அந்த ஆன்ட்டிக்கிட்டேயும் நான் ‘உங்க நடிப்பு திறமையை வளர்த்துட்டு வாங்க, கண்டிப்பா வாய்ப்பு தரேன்’னு தான் சொல்லி இருந்தேன். ஆனால் அவங்களுக்கு தன் திறமையை வளர்ப்பதில் கவனம் இல்லை. குறுக்கு வழியில் இடம் பிடிக்க தான் பார்த்தாங்க. அதுவும் நம்மகிட்ட வேலைப்பார்க்கும் விசுவாசம் கொஞ்சமும் இல்லாமல்” என்றவன்…
அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளை தன் மடிக்கு மாற்றி, அவளின் இருகரத்தினையும் பற்றிக்கொண்டு, “நேத்து அவங்க உன்னை ஹர்ட்(வலிக்க) செய்து, அதுமூலம் எனக்கு கஷ்டம் கொடுக்க பார்த்தாங்க பேபி. அவங்க இரண்டு பேருமே இன்ஹியூமென்ஸ். நீ என்னனா அவங்க இரண்டு பேருக்கிட்டேயும் போய் திரும்ப பேசலாம்னு சொல்றியே. யோசி பேபி. அவங்க ஃபிரண்ட் ஷிப் நமக்கு வேண்டுமா?” என்று கேட்க.
தன் கண்களை அகல விரித்த ஈஷா, “ஓ மை காட் பேபி! நீங்க சொல்லும் வரை எனக்கு இப்படி எதுவுமே தோணலையே. நமக்கு அவங்க வேண்டவே வேண்டாம்” என்றவள், “ஆனா நேத்து நான் எங்கேயும் ஹர்ட் ஆகலை பேபி… அவங்க தோற்று போயிட்டாங்க…” என்றாள் புன்னகையுடன்.
“ஆமாம் பேபி! That's God's Grace!” என்றவன் தொடர்ந்து, “இனி நீ தனியா எது செய்றதா இருந்தாலும் பலத்தடவை யோசிச்சு தான் செய்யனும்” என்று அவளுக்கு சில அறிவுரைகளை கூறி முடித்த ஈத்தனுக்கு, அடுத்து பேச நினைத்திருந்ததை பேச, தடுமாற்றமாக இருந்தது.
தடுமாற்றம் என்பதை விட பயமாக என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
இருந்தும் கேட்டு சரிசெய்ய வேண்டும் என்ற நிலையில் அவன் இருக்க… தன்னை திடப்படுத்திக்கொண்டவன்…
“நேத்து அம்மாவ ரொம்ப பிடிக்கும்னு சொன்னயே பேபி! அம்மா வேண்டும்னு நினைக்கறியா பேபி…” என்று மிக சாதாரணமாக கேட்பது போலவே கேட்டான்… ஆனால் உள்ளே அவனின் உயிர் போய் போய் வந்துக்கொண்டு இருந்தது…
தந்தையின் நிலையை அறியாது போனாலும், ஈஷா அவனை நிறைய நேரம் சோதிக்காது, “நீங்க என்கூட இருக்கும் போது, எனக்கு வேண்டும்னு நினைக்க, இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை பேபி. எனக்கு நீங்க போதும் பேபி” என்றாள் பட்டென்று.
அதில் இத்தனை நேரம் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டிருந்த ஈத்தனின் முகம் அப்படியே பூவாய் மலர்ந்து விட்டது!
நேற்று மாலையில் இருந்தே அவனை குடைந்துக்கொண்டிருந்த இன்னல் போயே போயிற்று…
தந்தையின் பூரித்த முகத்தை கண்டதும் ஈஷாவின் முகமும் தானாக மலர்ந்துவிட, “லவ் யூ பேபி” என்று அவன் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தாள்…
“மீ டூ! லவ் யூ பேபி…” என்று அவனும் அவளின் சிரிக்கும் கண்களில் தன் இதழ்களை பதித்து, அவள் முகத்தை அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்…
மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது…
இதே மகள் எண்ணி சில மாதங்களிலேயே, தன் அன்னையை தேட போகின்றாள் என்பதை இக்கணம் அறியாது போன ஈத்தன், தந்தையாக ஜெயித்து விட்டதாக நினைத்தான்…
அப்பொழுது தந்தையையும் மகளையும் நிகழ்காலத்திற்கு திருப்ப, ஈத்தனின் தொலைப்பேசி சத்தம் எழுப்ப ஆரம்பித்தது.
அவர்களின் ப்ரைவசி பாதிக்காத வகையில் சில அடி தூரத்தில் நின்று இருந்த, ஈத்தனின் முக்கிய பாதுகாவலர் தாமஸ் தான் அழைத்து இருந்தார்.
ஈஷாவிற்கு இங்கு இந்தியாவில் இருக்கும்போது, பாடம் சொல்லிக்கொடுக்க வரும் ஆசிரியர் வந்துவிட்ட தகவலை கூறிவிட்டு அவர் வைக்க…
“ஓ பேபி… டைம் போனதே தெரியலை பாரு… இன்னைக்கு Math கிளாஸ்… டீச்சர் வந்துட்டாங்க…” என்ற ஈத்தன், அவளை அழைத்து சென்று ஹோம் ஸ்கூலிங்கிற்கு என்று தரை தளத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறையில் காத்திருந்த ஆசிரியரிடம் விட்டுவிட்டு… பாதுகாவலரை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு வெளிவர…
அவனுக்காக ரவியும், சக்தியும் வந்து காத்திருந்தனர்.
அலுவலக அறையில் அமர்ந்து, அவர்களுடன் புது பாடல்களுக்கான ஒப்பந்தம் குறித்த விஷயங்களை பற்றி பேசியவன்… அத்துடன் தன் பிராக்டீஸிங் அறைக்குள் சென்று விட்டான்…
அங்கு ஒருபக்கமிருந்த பெரிய திரையில், ஈஷா படித்துக்கொண்டிருக்கும் அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் லைவ் வீடியோ பதிவு ஓடிக்கொண்டு இருக்க…
ஈத்தனின் ஒருக்கண் வேலையிலும், மறுக்கண் ஈஷாவிலும் தன் கவனத்தை வைத்திருந்தது.
நேற்று நீண்ட நேரம் பாடியதால் குரலுக்கு விடுமுறை அளித்து இருந்தவன்… புது பாடலுக்கு இசையமைக்கும் பணியில் இறங்கிவிட்டான்…
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/52.html
பார்வையில் தெளிவாக
பதிலளிநீக்குபதமாக இதமாக
பிள்ளைக்கு தன் மனதை
பேசி புரிய வைக்க
பக்குவமாக பேசி
புரிந்து கொள்ளச் செய்யும்
பெற்றவனின்
பரிதவிப்பு
பிள்ளையின் பதில்
படிக்க படிக்க அருமை....