6.2- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼 🪻😘
இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று சட்டென்று இஸ்திரி பெட்டியின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு ஓடிவந்து அலைப்பேசியை எடுத்து பார்த்தாள்.
அதில் "Mother Superior” என்ற பெயரை பார்த்ததும்…
பள்ளி விடுதியில் ஏதோ அவசரம் போல் என்று உடனே அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க மதர்…” என்று கேட்க.
“கொஞ்சம் அவசரம் குறிஞ்சி… நம்ம வி.ஐ.பி சூட்ஸ் இருக்கும் பிளாக்-க்கு போமா…” என்றவர், என்ன பிரச்சனை என்பதையும், அறை எண்ணையும் கூறிவிட்டு வைக்க…
ஸ்வெட்டரை எடுத்து சுடிதாரின் மீது மின்னல் வேகத்தில் அணிந்துக்கொண்டவள்… வீட்டை பூட்டிவிட்டு… சூட்டை நோக்கி வேக நடையிட தொடங்கினாள்...
அங்கு வி.ஐ.பி சூட்டில்,
“ஸ்கேரியா(scary) இருக்கு பேபி… ரொம்ப வலிக்குது…” என்று தொடர்ந்து ஈஷா அழ…
“இங்கப்பாரு பேபி… அழக்கூடாது… டாடி சொல்றேன் இல்ல… இது நார்மல் தான் பேபி… உனக்கு ஒன்னும் கிடையாது… ரிலாக்ஸ் பேபி… டாடி கூட இருக்கும் போது உனக்கு என்ன பயம்… சரியாகிடும் பேபி” என்று ஈத்தன் அவளை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான்.
அன்று காலையே ஈஷாவுடன் ஈத்தன் அப்பள்ளிக்கு வந்துவிட்டிருந்தான்.
ஏற்கனவே மதர் சுப்பீரியரிடம் அவன் ஈஷா தொடர்பான அனைத்து விஷயங்களையும், தன்னுடைய எதிர்பார்ப்புகளையும் கூறியிருக்க, “குழந்தையை என்கிட்ட ஒரு வருஷம் மட்டும் விடு ஈத்தன். நீ எதிர்ப்பார்த்த மாதிரி அவளை ஆளாக்கி உன்கிட்ட பத்திரமா ஒப்படைக்கறேன். நீ எப்ப வேண்டுமானாலும் வந்து அவக்கூட தங்கலாம். இங்க எல்லா வசதியும் இருக்கு” என்று இருந்தார்.
ஈத்தனுக்கும் அப்பள்ளியில் படிப்பு முதல் பாதுகாப்பு வரை அனைத்துமே திருப்திகரமாக இருந்தன.
உள்நாடு மட்டும் இல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பிள்ளைகளை அங்கு கொண்டுவந்து பல பெற்றோர்கள் சேர்த்து இருந்தனர்.
மதரே உடனிருந்து பள்ளியை மொத்தமாக ஈத்தனுக்கும், ஈஷாவிற்கும் சுற்றிக்காட்டி, அங்கு பணியிலிருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்க…
ஈத்தனின் கை வளைவுக்குள்ளே, அழுகையை அடக்கிக்கொண்டு ஈஷா பதுங்கிக்கொண்டு சுற்றி வந்தாள்.
பிறந்த கணம் தொட்டே தந்தையின் மடியிலேயே வளர்ந்திருந்தவளுக்கு… அவனை பிரிவது என்ன லேசான விஷயமா…?
இருந்தும் தந்தை தன்னிடம் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக மறுக்காது இப்பிரிவினை ஏற்றுக்கொண்டவளால்… நேரமாக ஆக… தாங்கவே முடியவில்லை.
ஈத்தனாலுமே மகளின் அம்முகத்தினை பார்க்கவே முடியவில்லை…
எதுவும் வேண்டாம் என்று ஈஷாவுடன் திரும்பி சென்றுவிட கூறி மனம் ஒருப்புறம் அடித்துக்கொண்டாலும், ஈஷாவின் எதிர்காலத்தினை மனதில் வைத்துக்கொண்டு தன்னுணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு, மகளுடனான வினாடிகளை சேர்த்துக் கொண்டிருந்தான்.
இரவு உணவை மதருடன் முடித்துக்கொண்டு, அங்கு பெற்றோர்கள் வந்தால் தங்க என்று ஏற்பாடு செய்திருந்த சூட்டிற்கு மகளுடன் வந்திருந்தவன்…
அவளுக்கான அறிவுரைகளை கூறிக்கொண்டிருந்தான்..
“இங்க நிறைய கிட்ஸ்(kids) இருக்காங்க பேபி. எல்லாரோடும் நீங்க நல்லா பழகனும் சரியா. என்ன சந்தேகம் இருந்தாலும் டீச்சர் கிட்ட கேளுங்க. மதர் கிட்டேயும் கேளுங்க. சொல்லிக்கொடுக்க தான் எல்லாரும் இருக்காங்க. நெக்ஸ்ட் வீக் ஃபிரைடே(Friday) ஈவ்னிங்கே டாடி வந்துடுவேன் பேபி. மண்டே மார்னிங் வரை உன் கூட தான் இருப்பேன். ஃபீல் பண்ணக்கூடாது. டெய்லி நைட் நான் பேசுறேன் பேபி…” என்றவனிடம், அனைத்திற்கும் தலையாட்டியப்படியே இருந்த ஈஷா தன்னை மீறி உறங்கிவிட…
மகளை சரியாக படுக்க வைத்த ஈத்தனுக்கு யாரோ தன் நெஞ்சையே பிளப்பது போல் வலித்தது.
ஈஷாவை விடுதியில் சேர்க்க முடிவெடுத்த நாள் தொட்டே அவனுக்கு சரியான தூக்கம் கிடையாது.
எப்படியாவது இந்த ஒருவருடத்தினை கடந்துவிட வேண்டும் என்று நினைத்தவன்… இறுக்கம் தாளாது எழுந்துச்சென்று கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த நிலவினை வெறித்தப்படியே நின்றிருந்தான்.
பழைய நினைவுகள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மேலெழுந்துக்கொண்டே இருந்தன.
அவன் தேவையில்லை என்று நினைத்தவையெல்லாம் இப்பொழுது தன் தேவையை உணர்த்திக் கொண்டே இருந்தன.
‘என் ஆயுசு இருக்கும் வரை, வருஷத்துக்கு ஒன்னுன்னு எத்தனை குழந்தை வேண்டும்னாலும் உங்களுக்கு பெத்து தரேன்…’ என்றாள் ஒருத்தி நினைவுகளாக அவனுள்ளிருந்து.
அதில், “அப்பவே சரின்னு சொல்லி, ஒரு பத்து குழந்தையாச்சும் கேட்டு இருந்திருக்கனும் போல… ஈஷாவை ஹாஸ்டலில் விட வேண்டிய அவசியமே வந்து இருக்காது…” என்று நினைத்த ஈத்தனின் இதழோரங்கள், இந்நேரம் இருந்ததற்கு மாறாக லேசாக புன்னகையில் விரிந்துக்கொண்டன.
அப்பொழுது “பேபி…” என்று படுக்கையில் இருந்த ஈஷா முனங்கத்தொடங்க…
“ஒன்னும் இல்லை பேபி… டாடி இங்க தான் இருக்கேன்… தூங்குங்க..” என்றப்படியே ஓடிச்சென்றவன் அவளருகே படுத்துக்கொள்ள…
“பேபி வயிறு வலிக்குது” என்றப்படியே எழுந்தமர்ந்துவிட்டாள் ஈஷா.
“புது ஃபுட் எதுவும் ஒத்துக்கலையா பேபி… கொஞ்சம் தண்ணி குடி” என்று ஈத்தன் ஊற்றிக் கொடுக்க… குடித்தவளுக்கு அடி வயிற்றில் பல மாறுதல்கள் ஏற்பட… எழுந்து குளியலறைக்குள் சென்றவள்…
அவ்வளவு தான் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து ஈத்தனுடன் ஒன்றிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.
அதில், என்ன ஏது என்று பதறிய ஈத்தனுக்கு மகளின் வெண்ணிற இரவு ஆடையின் பின்புறம் முழுவதும் பரவியிருந்த உதிரம், மகளின் நிலையை அவனுக்கு உணர்த்திவிட்டு இருந்தது.
உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் பார்த்துவிட்டு, அவளை அவன் சமாதானம் செய்ய…
சில நிமிடங்களிலேயே, வெளிப்புற கதவு இரண்டுமுறை சீரான இடைவெளியில் தட்டப்பட்டது…
“ஒன் மினிட்…” என்று சத்தமாக கூறிய ஈத்தன், தன் அணைப்பில் இருந்த ஈஷாவிடம், “ஒன்னும் இல்லை பேபி… எல்லா கேர்ள்ஸ்-கும் நடக்கும் நேச்சுரல் உடல் மாற்றம் தான் இது… மதர், லேடி நர்ஸ ஹெல்ப்க்கு அனுப்பறேன் சொன்னாங்கமா… வந்துட்டாங்க போல… நான் பார்த்து கூட்டிட்டு வரேன் பேபி… நீ உட்காரு” என்று அவளை படுக்கைக்கு அழைத்து சென்றவன்… “நத்திங் பேபி உட்காரு… வேற பெட்ஷீட் மாத்திக்கலாம்” என்று அவளை அமர வைத்துவிட்டு… சென்று அவன் கதவை திறக்க…
வேகமாக வீசும் பனிகாற்றுடன் கலந்து தன் முகத்தில் ஓடிவந்து மோதிய வாசனை திரவியத்தின் மணத்தில் தன் உடல் மொத்தமும் தூக்கிப்போட, தன் கழுத்தை மொத்தமாக நிமிர்த்தி, தன் முன் நின்றவனின் முகத்தை பார்த்த குறிஞ்சி, மொத்தமாக அதிர்ந்து, தன் கைகளில் ஏந்தியிருந்த பொருட்கள் அனைத்தையும் பொத்தென்று கீழே போட்டிருந்தாள்.
அவள் இதயம் தன் பலம் மொத்தத்தினையும் திரட்டி படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்க… அவளின் உடல் வெளிப்படையாகவே அதன் அதிர்வினை காட்ட தொடங்கியது…
சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! - விரைவில்.
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/71.html
Super da thagam
பதிலளிநீக்குSuperb 💖
பதிலளிநீக்குSuperrrrrrttt........
பதிலளிநீக்குSema twist kurnji ku call vanthathu.. timing was awesome.. waiting for more update ..it's not enough 😉
பதிலளிநீக்குSuper sis
பதிலளிநீக்குWow meet panniyacha super kurimji shock ana eppadi sikiram ah telimjitu poi paru, ini kutty ah nee dan patthukura velai varumo, Ethan oda wife eranthutala
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSuper,I like very much mam
பதிலளிநீக்குStill no update.. how long we wait
பதிலளிநீக்குWhy today?
நீக்குSuper
பதிலளிநீக்குமன வருத்தம் இருந்தாலும் மகளை பிரிந்து இருக்க
பதிலளிநீக்குமுடிவெடுத்த தந்தை மகளும் தந்தைக்காக மனம் இல்லாமல்
ஒத்துக் கொள்ள....
வந்த இடத்தில்
வயதிற்கு வந்த மகளை தாயாக தாங்கும் தந்தை....
புரியாத உறவு
பிரிந்த உறவு
பார்த்துக் கொள்ளும் போது
பதட்டத்தை தவிர
வேறு என்ன நடந்து விடும்???