6.1- சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘
அத்தியாயம் -6
எப்பொழுதுமே சனி மற்றும் ஞாயிறு குறிஞ்சிக்கு ஓய்வு தான். ஏதேனும் அவசரம் அல்ல அந்த தினங்களில் டியூட்டிக்கு வருபவர்கள் தவிர்க்க முடியாது விடுமுறை எடுத்தால் மட்டுமே இரவுகளில் அவளை அழைப்பார்கள்.
வேலைபளூ என்பது அவளுக்கு சிறிதும் கிடையாது. அதற்கு ஏற்றப்போல் சம்பளமும் பெரிதாக ஆஹோ ஓஹோ என்று இல்லையென்றாலும் அவள் ஒருத்திக்கு என்று வரும் பொழுது அது அதிகமே. அதுவும் தங்கும் வீடு வேறு இலவசம். வரும் வருமானத்தில் பாதிக்கு மேலே சேமிப்பிற்கு தான் செல்லும்.
நிம்மதியான தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையே!
வாராவாரம் சனிக்கிழமையில் பள்ளியில் இருக்கும் இளம் கன்னியாஸ்திரிகள் அருகில் உள்ள மலை கிராமங்களுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது வழக்கம்.
அவர்களுடன் எப்பொழுதும் குறிஞ்சி இணைந்துக்கொள்வாள்.
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், தன் பிறப்பிற்கு அவளால் முடிந்த ஒரு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியே!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடிப்படை உடல்நல மருத்துவ பரிசோதனைகளை முகாம் போட்டு செய்வது, அனைத்து வயதினருக்குமே எழுத படிக்க கற்று தருவது, பெண்களுக்கு கைவேலைகளுக்கான முதலீடு பொருட்களை வாங்கி தருவது, குழந்தைகளுக்கு தேவையான ஸ்வெட்டர் முதல் நோட் பென்சில் வரை அனைத்தையுமே இருக்கின்றதா என்று பார்த்து ஏற்பாடு செய்வது, அரசாங்க சலுகைகளை மனு மூலம் பெற்று தர உதவுவது, அவர்களின் உழைப்புகளை சந்தைப்படுத்த ஏற்பாடு செய்வது என்று பலவற்றை செய்வார்கள்.
எப்பொழுதும் போல் அந்த வார சனிக்கிழமையையும் மற்றவர்களுக்காக அர்பணித்துவிட்டவள், மீதமிருந்த ஞாயிற்று கிழமையை தனக்கே தனக்காக எடுத்துக்கொண்டாள்.
அதிகாலையிலேயே வழக்கம் போல் முழிப்பு வந்துவிட எழுந்தவள், நேற்று மலைப்பெண் ஒருவரிடம் வாங்கிவந்து கைகளிலும் கால்களிலும் வைத்துக்கொண்டு படுத்திருந்த மருதாணியை நீரில் கழுவிவிட்டு வந்து டியூப்லைட் வெளிச்சத்தில் பார்த்தாள்.
நன்கு சிவந்திருந்தது.
அதில் தோன்றிய மகிழ்ச்சியுடன், வீட்டினையும், வீட்டினை சுற்றியும் அமைக்கப்பட்ட, சிறிய பூ மற்றும் காய்கறி தோட்டத்தினை சுத்தம் செய்துவிட்டு, தலைக்கு குளித்து முடித்து வீட்டில் பூத்த சாமந்தி பூக்களை மட்டும் பறித்து எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பூம்பாறை முருகன் கோவிலுக்கு பேருந்தில் கிளம்பிவிட்டாள்.
எல்லா ஞாயிறும் அங்கு தான் செல்வாள்.
போக வரவே நான்கு மணிநேரம் ஆகும்.
இருந்தும் சென்று வரும் வழி முழுவதுமே அத்தனை ரம்மியமாக பச்சை பசேலென்று செழுமையாக இருப்பதால், எப்போதுமே அப்பயணம் அவளின் கண்களுக்கும், மனதிற்கும் பெரும் விருந்தாக தான் இருக்கும்.
எப்படியாவது ஜன்னலோரம் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்து விடுவாள்.
இந்தியாவிலேயே பழனிக்கு அடுத்து பலவித பாஷாணங்கள்(விஷம்) கொண்டு செய்த முருகன் சிலை பூம்பாறையில் மட்டுமே உள்ளதால் மிகவும் சிறப்பு பெற்ற தளம் அது. அதிலும் அம்முருகன் மனம் வைத்தால் தான் அங்கு போகும் பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்க… குறிஞ்சிக்கு வாரா வாரம் அந்த பாக்கியம் கிட்டி இருந்தது…
அங்கு செல்பவள், கேட்கும் வரம் யாவையும் அள்ளி தரும் குழந்தை வேலப்பன் சந்நிதி முன்பு அமைதியாக அமர்ந்து, பொழுது சாயும் வரை வரங்களை கேட்பதை மட்டுமே தான் வேலையாக வைத்து இருப்பாள்…
ஈத்தனும் ஈஷாவும் எப்பொழுதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்தையும் பெற்று வாழ வேண்டும் என்ற வேண்டுதலை தான் விதவிதமாக மாற்றி மாற்றி சலிக்காமல் வைப்பாள்.
அதில் இன்றுவரை பொறுமையாக அவளின் வேண்டுதல்களுக்கு செவிசாய்த்த முருகனுக்கு இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்ற நிலமையாகிவிட்டது. பின்னே அவளுக்காக ஏதேனும் கேட்பாள் என்ற எதிர்பார்ப்புடன் அவரும் தான் எத்தனை வருடங்களாக பொறுமையாக இருப்பது. ஏற்கனவே அவர் ஒரு டென்ஷன் பார்ட்டி என்பது தான் நாம் அனைவருக்கும் மாம்பழ விஷயத்திலேயே தெரியுமே!
பொறுத்தது போதும் என்று ‘இந்தா பிடித்துக்கொள்…’ என்று இன்று அவரே அவளுக்கான வரங்களை, அவளுக்கே தெரியாது அள்ளி வழங்கி அனுப்ப…
அது தெரியாது, இரவு நெருங்கும் வேளையில் கோவிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், பிரசாத பொருட்களை சாமிக்கு முன்பு வைத்து வணங்கிவிட்டு…
பசித்த வயிற்றுக்கு எப்பொழுதும் போல் அவளுக்கு பிடித்த தோசையை தந்து இரவு வேலையை முடித்தவள்….
அறைக்குள் அடைந்துக்கொண்டாள்.
தொலைப்பேசியில் மெல்லிய சத்தத்தில்,
அவனை அவனை ரசித்த விழிகள் வேறாரையும் ரசிக்காதே
ஹே… அவனை அவனை ரசித்த விழிகள் வேறாரையும் ரசிக்காதே
அவனை அவனை பழகி தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
என்ற பாடல் ஓட…
அதனை ரசித்தப்படியே, நாளை பணிக்கு அணிந்துச்செல்ல வேண்டிய காட்டன் புடவைக்கு குறிஞ்சி இஸ்திரி போட்டுக்கொண்டிந்தாள்.
கோவிலுக்கு சென்று வந்ததில், அவளுக்கு மனமும் உடலும் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருந்தன.
அப்பொழுது தொலைபேசியில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்று…
“அழகே அழகே
எதுவும் அழகே
அன்பின் விழியில்
எல்லாம் அழகே”
என்று ரிங்டோனாக அவள் பதிவு செய்திருந்த ஈஷாவின் குரலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது…
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/62.html
மனதிற்குப் பிடித்த வேலை மனம் நிறைந்த வாழ்க்கை
பதிலளிநீக்குமற்றவருக்காக வாழ்வது..
மங்கையின்
மனதைப் போலவே
முருகன் அருளால் மன்னவன் கிடைக்கட்டும்
மகளுடன்....