1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻
Hi Honeys!🍯💌
Happy Morning 🌤️ எல்லாரும் எப்படி இருக்கீங்க?
Valentine's Month Special - New Ongoing💘
ஆரம்பிக்கலாமா😎
தலைப்பு🎬: சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🌆💋
Love in twilight💏
நாயகன்: ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர் 🎼 ♂️🕺
நாயகி: குறிஞ்சி மலர்🪻♀️💃
Theme: Singer Weds Fan Girl💜
Love and Love Only🫰😘
🔴Suspense குறையாமல் இருக்க இந்தமுறை டீசர் இல்லை டார்லிங்ஸ். வாங்க நேரடியா கதைக்கு போகலாம்🔴
சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
அத்தியாயம்-1
தன் இளங்கட்டு மேனி முழுவதையும், பல வண்ண கண்கவர் மலர்களாலான பச்சை பட்டையுடுத்தி மறைத்து வைத்திருந்த மலைகளின் ராணியவள், என்ன மந்திரம் போட்டாளோ தெரியாது, மறுகணமே ஆதவன் அவளின் மந்திரத்திற்கு கட்டுண்டு, அவள் பின்னோடே நில்லாது செல்ல ஆரம்பித்துவிட்டு இருந்தான்.
சென்றவன் அத்தோடு நின்றானா என்ன?
இருக்கும் இடம் மறந்து, உலகம் மறந்து, ராணியினுள் அஸ்தமிக்க வேறு தொடங்கிவிட, காதலர்கள் இருவரின் இச்செயலில் திகைத்து வெட்கிப்போன கீழ்வானமோ, ‘அச்சோவென்று’ தன் தேகம் முழுவதும் செம்மஞ்சள் பூசிக்கொண்டு அந்திசாய்ந்துவிட்டது.
இடம்: கொடைக்கானல், நேரம் மாலை 5.45.
இவையனைத்தும் தினமும் அங்கு நடக்கும் சங்கதி தான். இருந்தும் ஆதவன் போலவே, மலைராணியின் அழகில் கட்டுண்டு கிடந்த அக்கொடைக்கானல் பகுதி வாசிகளும், முதல் முறை பார்ப்பது போலவே, அவர்களின் அந்திப்போர் அழகையும், அதில் வெட்கி அந்திசாயும் வானின் நிலையையும் மெய்மறந்துப் பார்த்துக்கொண்டு நின்று இருக்க, குறிஞ்சி மட்டும் வேறொரு மந்திரனிடம் கட்டுண்டு கிடந்தாள்!
அவனை காணச் செல்லவே வேகவேகமாக தன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு காத்துக்கொண்டும் இருந்தாள்.
ஆனால் அம்மந்திரனோ, இப்படி ஒருத்தி தன்னை மட்டுமே, தன் எண்ணங்கள் முழுவதிலும் சுமந்துகொண்டு சொப்பனத்தில் இருக்கின்றாள் என்பதையும், விரைவில் தன்னில் ஓர் அந்திப்போரை ஏற்படுத்த போகின்றாள் என்பதையும் கிஞ்சித்தும் அறியாது, தன் கண்முன் செயற்கை ஒளிவெள்ளத்திற்குள், வெள்ளமென திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அவனின் தீவிர விசிறிகளை பார்த்தப்படியே, அவ்வரங்கிற்குள் தன் கால்களைப்பதித்து இருந்தான்.
அவன் தமிழ் திரையுலகில் பெரிய பட்ஜெட் ஹிட் படங்களை மட்டுமே தயாரிக்கும், ‘ஓம் ப்ரொடெக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் மயில்வாகனத்தின் ஒரே மகளான, புகழ்பெற்ற தமிழ் பாடகி ‘சித்ரலேகாவிற்கும்’, புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ‘டிம் ஹன்டருக்கும்’ பிறந்தவன்(indo-american).
தன் விரல் நுனியின் கட்டுப்பாட்டில், மொத்த மேற்கத்திய மக்களையும், நம் தமிழ் மக்களையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவனும்.
அவன் ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர்.
உலகப்புகழ் பெற்ற முப்பத்தாறு வயது ஆங்கில மற்றும் தமிழ் மொழி பாடகன், மற்றும் இசை அமைப்பாளன். உலகில் அதிக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் செலிபிரிட்டிகளில் அனைவரையும் தாண்டிச் சென்று முதலில் நிற்பவன். முதன்மையானவன்.
ஒவ்வொரு விடியலுமே, பெரும்பாலான தமிழ் மக்களுக்கு, ஈத்தனின் குரலில் தான் ஆரம்பிக்கும். காரணம் ஐந்து மணிக்கு தொலைக்காட்சி பெட்டிகளில் முதலில் ஒலிப்பரப்பப்படும் அனைத்து மத இறை பாடல்களுமே, அவன் பாடியதாகவே இருக்கும்.
ஆம்! மாதா கோவிலோ, மாரியம்மன் கோவிலோ விடிந்தால் போதும், எங்கெங்கும் ஈத்தன் சமரவேலின் குரலாட்சி தான்.
கடவுளே இல்லை என்பவன் கூட, அதிகாலையில் ஒலிக்கும் அவனின் இறைவழி பாடல்களின் வழியே, அமைதியை உணர்வான்.
காலை தான் இப்படி என்றால் இரவு அதற்கு மேல். எந்த பாட்டு சேனலை வைத்தாலும் சரி, எஃப்.எம்-ஐ வைத்தாலும் சரி, எவன் காதிலாவது இருக்கும் ஹெட்ஃபோனை உருவினாலும் சரி, இவன் தான் அங்கும் இருப்பான்.
ஏகாந்தம் நிறைந்த இரவின் நிசப்தத்தில், காற்றில் மிதந்து வரும் ஈத்தனின் இளமை சொட்டும் மென் காதல் பாடல்களின் ஒவ்வொரு வரியும், காதலிக்காதவர்களையும், காதலை மெய்மறந்து ரசிக்க வைத்துவிடும்!
காதலர்களையோ சொல்லவும் வேண்டுமா! நிகழ்காலத்திலேயே பைசா செலவின்றி தேனிலவிற்கு அழைத்து சென்றுவிடும்!
தன் குரலில் அத்தனை வசியம் வைத்திருக்கும் வசியக்காரன்!
இதில் பாவம் யாரென்றால்? முரட்டு சிங்கிளாக ஊருக்குள் கெத்தாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தான். ஆம் அவனின் காதல் தோல்வி பாடல்களை கேட்டு, ஏன் அழுகின்றோம் என்று தெரியாமலேயே, நெஞ்சில் வலிக்கூடி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிடுவார்கள். அழுது வீட்டில் பூசையும் வாங்கிக்கொள்வார்கள். பிறகு தான், ‘நாம் சிங்கிள் தானே? எதற்கு அழுதோம்?’ என்றே யோசிப்பார்கள்!
அந்தளவிற்கு மனித உணர்வுகளை, ஒருசில நிமிடங்களிலேயே தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் மந்திரக்காரன் அவன்.
மக்கள் அவனின் பதினெட்டு வயதில், அவனை கண்டெடுத்து குண்டுக்கட்டாக தூக்கிவந்து சினிமா உலகிற்குள் சிறையெடுத்துவிட, விரும்பியே சிறைப்பட்டவனும், அனைவரையும் தன்னுடனே கடந்த பதினெட்டு வருடங்களாக சிறையிலேயே வைத்திருக்கின்றான்.
இருவருக்குமே விடுதலைப் பெற வேண்டும் என்ற எண்ணமே இல்லை!
ஆங்கிலம் மற்றும் தமிழில் சேர்த்து, அவன் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, சமீபத்தில் ஆயிரத்தை கடந்துவிட்டு இருந்தன.
Drug supplier, Healer, Mr.Seductive, Romantic Ranger, King of Melody, Emperor of Emotions, The Voice of Heart, Music Magician, The Vocal Wizard இப்படி பல பெயர்களை அவனின் ரசிகர்களிடம் பட்டமாக பெற்றவன்.
இம்முறை ஐந்து ஆஸ்கார் விருதுகளை அவன் மட்டுமே ஹாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பல பிரிவுகளில் பெற்றிருக்க, விடுவார்களா மக்கள்?
தங்களுக்கு உடனே ஒரு லைவ் மியூசிக் ஷோ, ட்ரீட்-ஆக வேண்டும் என்று Hashtag மூலம் சமூக வலைத்தளங்களில் ஒன்றுத்திரண்டு கேட்க, இதோ ஏற்பாடு செய்துவிட்டான். அவர்கள் இல்லை என்றால் அவன் இல்லையே! அதுவும் இம்முறை அனைத்தும் அவன் செலவே. அவனை பார்க்கத் துடிக்கும், பணம் படைக்காத ரசிகர்களுக்கு இது பெரும் வாய்ப்பாகிப்போனது.
கீழே அடர் கருப்பு நிறத்திலான ஃபார்மல் பேன்ட், மேலே சிறு சுருக்கம் இல்லாது இன் செய்யப்பட்ட தூய வெண்ணிற ஸ்லிம் ஃபிட் காட்டன் ஷர்ட், கழுத்தில் கருப்பு நிற டை என்று பார்க்க மிக எளிமையாக, அதே சமயம் அதீத நேர்த்தியையும் கொடுக்கும் வகையில், ஹாலிவுட்டின் டாப் டிசைனரால் வடிவமைக்கப்பட்ட உடையில் வந்திருந்தவன், தன் இடது கையில் சில கோடிகளை விழுங்கிவிட்டு அமர்ந்திருந்த ‘ரிச்சர்ட் மில்’ கடிகாரத்தில் பார்வையை பதித்து இருந்தான்.
அதில் சிறிய முள் 6-ல் வந்து நின்ற மறுகணம், அவனின் இரண்டுப்பக்கமும் அடர் கருநீலநிற உடையில், கையில் துப்பாக்கியை ஏந்தியபடி அரணாக நின்றிருந்த மேலைநாட்டு பவுன்சர்களை பார்த்து, “இட்’ஸ் டைம். லெட்ஸ் மூவ்” என்றவன், நுழைவு வாயிலிருந்து நேராக, மேடையின் உயரத்திற்கு தூக்கி போடப்பட்டிருந்த சிறப்பு நடைப்பாதையில், தன் நீண்ட திடக்காத்திரமான கால்களை பதித்து நடக்க ஆரம்பித்தான்…
அதில் திடீரென்று கேட்க ஆரம்பித்த பூட்ஸ் கால்களின் சத்தத்தில், திரும்பிப்பார்த்தவர்களின் சலசலப்பு அப்படியே ஒருகணம் உறைந்துவிட்டது.
அரங்கம் முழுவதும் பொறுத்தப்பட்டிருந்த பெரியப்பெரிய தொலைக்காட்சி பெட்டிகளிலும் அவனே நிறைந்துவிட…
மறுகணம், “லவ் யூ ஈத்தன்…” என்ற வானை முட்டும் வகையிலான ஆர்ப்பரிக்கும் தொடர் கோஷம், அரங்கம் முழுக்க அனைத்து திசைகளில் இருந்தும் கிளம்பி அவனை நோக்கிப் பாய!
அனைவரின் அன்பையும் உள்வாங்கிய ஈத்தனும், “லவ் யூ டார்லிங்ஸ்!” “லவ் யூ சோ மச்!” என்று அனைத்து பக்கமும் பார்த்து பதில் கொடுத்தவன், நடை மேடைக்கு அருகில் இருப்பவர்களுக்கு பொறுமையாக குனிந்து கைக்கொடுத்துக்கொண்டே வர… நிமிடத்திற்கு நிமிடம் நீட்டப்பட்ட அவனின் கையிற்கு பல்லாயிரம் முத்தங்கள் வைக்கப்பட்டன…
அவனின் குரலுக்கே மயங்குபவர்கள், அவனின் ஸ்பரிசத்திற்கு சொல்லவும் வேண்டுமா என்ன? அதிலும் மிக அருகில் மின்னும் அவனின் நீல நிற கண்களை கண்ட கணம் உறைந்தேவிட்டனர். அத்தனை வெளிச்சம் அவனின் உணர்ச்சிகள் கொப்பளிக்கும் நீல கண்களில் இருந்து.
அவனின் குரலுக்கு ஈடான மயக்கும் சக்தி அவனின் கண்ணின் மணிகளுக்கும் இருந்ததில், அனைவரின் ஹிருதயமும் வினாடியில் தாளம் தப்பி துடித்தது.
ஆண் பெண் வித்தியாசங்கள் எதுவுமே அங்கு இல்லை!
கடவுளை கண்ட பக்தர்களின் பரவச நிலை மட்டுமே!
செவிவழி அனைவரின் ஹிருதயத்திற்குள்ளும் நுழைந்து அமர்ந்துவிட்டு இருந்தான்.
அப்பொழுது, “தலைவரே! லைவ் ஆரம்பிக்க இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு…” என்ற வண்ணம் அங்கு வந்து நின்றான். ஈத்தனின் தனிப்பட்ட உதவியாளர்களில்(PA) ஒருவனான சக்தி.
அதில் ஈத்தன் அவன் புறம் திரும்ப…
சக்தி, “விட்டா உங்க டார்லிங்க்ஸ் எல்லாரும், உங்க கையையே பிச்சிக்கிட்டு போயிடுவாங்க போல” என்றான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு முணுமுணுப்பாக…
அதில் ஈத்தனின் இதழ்கள் லேசாக விரிந்துக்கொண்டது, “என் கூடவே தானேடா எப்பவும் இருக்க. இவங்க எல்லாம் எப்பவோ ஒருநாள் தானே என்னை பார்க்கிறாங்க. பாவம் சக்தி.” என்று மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காத குரலில் ஈத்தன் அவனிடம் கூற.
அவனோ “அதெல்லாம் எனக்கு தெரியாது போங்க தலைவரே” என்று முறுக்கியவன், “நீங்க எனக்கு மட்டும் தான்!” என்று உறுதியாக கூற.
அதில், “டேய்!” என்று அவனை அதட்டிய ஈத்தன், “இதெல்லாம் நாளைக்கு வரும் உன் வொயிஃப் கிட்ட சொல்லு டா. இன்னும் சின்னப்பிள்ளையாட்டம். ஒழுங்கா பேபிக்கூட போய் இரு சக்தி. நான் வரேன்” என்று அவனை அனுப்பிவிட பார்க்க.
அவனோ, “அப்ப வர மாட்டீங்க…” என்று முகத்தை மேலும் தூக்கி வைத்துக்கொண்டு, “இருங்க என் நண்பிக்கிட்ட போயிட்டு உங்களை போட்டுக்கொடுக்கிறேன். லவ் யூ டார்லிங்ஸாம் டார்லிங்ஸ். நாங்க இரண்டு பேர் மட்டும் தான் உங்க டார்லிங்ஸ்” என்றான் பொறாமையில் வெந்து.
அதற்கு, “போடா போடா, என் பேபிக்கு என்னை தெரியும்” என்ற ஈத்தன் மறுப்பக்கம் இருந்த ரசிகர்களை பார்க்க போக…
ஈத்தனை போகவிடாது அப்படியே அவனை இறுக அணைத்து தடுத்த சக்தி, ஈத்தன் கத்துவதற்குள், “கொல்றீங்க தலைவரே!” என்று அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்துவிட்டு ஓடிவிட்டான்.
அதில், ‘இவனை..’ என்று பல்லை கடித்த ஈத்தன் முகம் புன்னகை நிறைந்து தளும்பியது.
ஆனால் அங்கு கொடைக்கானலில், அவனுக்கு நேர்மாறாக சோகத்தில், “அச்சோ! எத்தனை தடவை இந்த மல்லிகா கிட்ட சொன்னேன். ‘இன்னைக்கு மட்டும் சீக்கிரம் வந்திடுன்னு’ இன்னும் வரலையே? கடவுளே சீக்கிரம் அனுப்பிவிடுங்க. பிளீஸ், பிளீஸ்…” என்று மனதினுள் புலம்பு புலம்பு என்று புலம்பியப்படியே, பதட்டத்தில் தன் முந்தானையின் நுனியை விரலில் சுற்றுவதும், பிறகு அதை கழற்றுவதுமாக, இருந்தாள் குறிஞ்சி.
கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற ஒரு போர்டிங் பள்ளியில், விடுதியில் தங்கிப்படிக்கும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பள்ளிக்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில், செவிலியராக பணியில் இருக்கின்றாள்.
காலையும் மாலையும் மட்டும் மருத்துவர் வந்து செல்வார்.
இன்றும் மாலை வந்த மருத்துவர், அனைத்து குழந்தைகளின் உடல் நலத்தையும் பரிசோதித்துவிட்டு, ஏதேனும் எமர்ஜென்சி என்றால் அழைக்க கூறிவிட்டு சென்றுவிட…
அறையில் தனியாக குறிஞ்சி மட்டுமே இருந்தாள்.
அவளுக்குண்டான பணிநேரம் முடிந்து, மேலும் இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. இருந்தும் போகாமல் அடுத்த டியூட்டி பார்க்கும் மல்லிகா வரும் வரை, அங்கேயே காத்துக்கொண்டு இருந்தாள்.
திடீரென்று எங்காவது கீழே விழுந்துவாறி அழுதுக்கொண்டு பிள்ளைகள் வந்து சேர்வார்கள். அதிலும் தாய் தகப்பன் அருகில் இல்லாது வளரும் சிறுப்பிள்ளைகள் வலிக்க ஆரம்பித்த உடனே ‘மம்மி… டாடி…’ என்று பெற்றோர்களை தேடி அழ ஆரம்பித்துவிடுவார்கள்.
செவிலியர் இருந்தால் தான் உடனே என்னவென்று பார்த்து, மருத்துவருடன் பேசி அவர்களுக்கு முதலுதவி செய்ய முடியும்.
வேறெதுவும் பெரிதாக இருந்தாலும், தாமதிக்காது மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓட முடியும்.
அதையெல்லாம் நினைத்தப்படியே போக மனமில்லாது இருந்துவிட்டவளின் உடல் மட்டுமே இங்கு. மனம் முழுவதும் ஈத்தனிடம் தான்.
விட்டால் கடிகாரத்திற்குள் சென்று ஓடும் முள்ளை பிடித்து நிறுத்திவிடுபவளை போல், தன் கையில் இருந்த கடிகாரத்தையே அவள் முறைத்து பார்த்துக்கொண்டிருக்க...
“சாரி குறிஞ்சி க்கா, இன்னைக்கு ரொம்பவே லேட் ஆகிடுச்சு…” என்ற வண்ணம் மல்லிகா வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தாள்.
அதில் நொடியும் தாமதிக்காது உடனே எழுந்துக்கொண்ட குறிஞ்சி, “இருக்கட்டும் மல்லி பரவாயில்லை” என்றவள், கடகடவென்று அன்றைய தகவல்களை கூறிவிட்டு, “எல்லாத்தையும் இந்த நோட்லையும் எழுதி வச்சு இருக்கேன் மல்லி. பார்த்துக்கோ. எதுவும் எமர்ஜென்சினா உடனே எனக்கு கால் பண்ணு. நான் உதவிக்கு வரேன். சரியா” என்றப்படியே, தன் கை பையை எடுத்து மாட்ட.
அவளின் செயல்களில் இருந்த அவசரத்தில், மல்லிகாவிற்கு பயங்கர குற்ற உணர்ச்சியாகிவிட்டது.
அதில் மீண்டும், “சாரி குறிஞ்சி க்கா, ஒரு நாளைக்கு கூட என்னால் சரியான நேரத்துக்கு வர முடியலை. அதுவும் இன்னைக்கு நீங்க சீக்கிரம் வர சொல்லியும் நான் வரலை. கடைசி நேரத்தில் என் மாமனார் மீன் வாங்கிட்டு வந்துட்டார். என் மாமியார் அதை சுத்தம் பண்ணி குழம்பு கூட்டிட்டு தான் போகனும்னு பிடிச்சு வச்சிக்கிட்டாங்க. மணியாகிடுச்சு வேலைக்கு போகனும்னு சொன்னா ‘வேலையை விடு’-ன்னு ஒரே சண்டை” என்றவள் கண்கலங்க…
“ஐயோ மல்லி. எனக்கு உன்னை தெரியாதா? சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். இதையே நினைச்சுட்டு இருக்காத சரியா. நாம நாளைக்கு பார்க்கலாம்” என்றுவிட்டு வெளிவந்த குறிஞ்சி, ஓடாத குறையாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்த ஒருசில நிமிடங்களில் பள்ளியை ஒட்டியுள்ள தன் குவார்ட்டஸை அடைந்துவிட்ட குறிஞ்சி, பூட்டை வேகவேகமாக திறந்துக்கொண்டு உள் நுழைந்தவள், மறக்காது திரும்பி கதவை பூட்டிவிட்டு, வீட்டினுள் ஓடி தொலைக்காட்சி பெட்டியின் முன்பு நின்று இருந்தாள்.
அதில் இத்தனை நேரம் இருந்த பரபரப்பு போய், இப்பொழுது அவளுக்கு படபடப்பு வந்துவிட்டது.
விரல்கள் நடுங்க, தொலைக்காட்சியின் ஸ்விட்ச்சை தட்டிவிட்டாள்.
அதற்குள்ளே அடிவயிற்றில் இருந்து சொல்லெண்ணா உணர்வுகள் மேலேழுந்து உடலை ஜில்லிட செய்ய ஆரம்பித்துவிட்டன.
உடனே தொலைக்காட்சியின் திரைக்கு உயிர் வந்துவிட்டது. இதற்கு தானே இத்தனை ஓட்டமும்!
அப்படியே மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு திரையையே அவள் உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்க…
“மலரே நின்னை காணாதிருந்தால்
என் விழியேறிய நிறமெல்லாம் மாறும் கண்ணே…!
அன்போடு என் அருகே நீ அணையாதிருந்தால்
அழகூறிய கனவெல்லாம் அழியும் பெண்ணே...!
நான் எந்தன் உயிர்கூட்டின் ஆழத்தினுள்ளே ஊரேதும் உறவேதும் அறியாது வைத்திட்ட
இராகங்கள் தாளங்கள் பாடல்கள்…”
என்று ஈத்தனின் குரலில் ஒலிக்கும் பாடல் அவ்வீட்டை முழுவதுமாக நிறைக்க… திரையில் தெரியும் அவனின் பிம்பமோ குறிஞ்சியின் இதயம் முழுவதும் நிரம்பி தளும்பியது…!
இதயம் படப்படக்க, இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, கலங்கிய விழிகளுடன், இமைக்காது அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
மீண்டும் அவன், “மலரே நின்னை காணாதிருந்தால்” என்று ஆரம்பிக்க, குறிஞ்சியின் கன்னங்கள் இரண்டும் செந்நிறம் பூசிக்கொண்டது. எச்சில் கூட்டி விழுங்கியவள், தன் உதடுகளை கடித்து எழும் உணர்வுகளை அடக்கினாள்.
எத்தனை ஆயிரம் முறை அப்பாடலை கேட்டு இருக்கின்றாள். முதல் முறை கேட்பது போலவே நின்று இருந்தாள். அவன் என்னவோ அவளுக்காகவே அப்பாடலை பாடுவது போன்ற மாயையில்.
ஆசைகள் அற்று கிடந்தவளின் முதல் ஆசை அவன்!
ஏன் இந்த வாழ்க்கை என்று அர்த்தம் தெரியாது இருந்தவளின் வாழ்க்கைக்கு அர்த்தமானவன் அவன்!
காதல் என்னும் மந்திரத்தை, அவளறியாது அவளுள் விதைத்தவன் அவன்!
இசையை ரசிப்பதா? இல்லை இசைப்பவனை ரசிப்பதா? என்று புரியாது அவள் இரண்டிலும் மாறிமாறி கவனத்தை செலுத்தியப்படியே தத்தளித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
‘இசைப்பவனை மட்டும் ரசி’ என்றுக்கூறி அவளின் தத்தளிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவளை சிறையெடுத்துச்செல்ல, வசியக்காரன் விரைவில் வருவான் என்பதை அறியாது போனாள் மலரவள்!
அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/2a.html
very nice starting.. miss u darling
பதிலளிநீக்குNice story...
பதிலளிநீக்குWelcome back ma nalla arambam enna hero ku age adigam ah iruke, heroin nerla parkamale love ah
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்கு👌
பதிலளிநீக்குWelcome back sis, nice starting superrrr sis👌
பதிலளிநீக்குNice starting sis, superrrr 👌
பதிலளிநீக்குNice start sis.. மலரே குறிஞ்சி மலரே 😄❤️
பதிலளிநீக்குNice starting dear.
பதிலளிநீக்குLong long ago so long ago nu ayiduchu en nilamai... Embuttu naala nanum neenga story poduvenga nu unga blog ah pathute iruken. Yappa inaiku vanthuchu paarunga. I m so happy. Romba miss pannen. Evlo time Nana 3 stories um padichu irupen theriyuma... Again and again padichutu irunthen. Books ah publish anathuku avlo happy enaku.. ok ok. Mokka poda virumbala... Romba nalaiku aprm puthu story varuthu... Frst epo pakka... Aduthu inum neriya ethirpakaren.. adutha adutha uds seekirama podunga.
பதிலளிநீக்குநன்றி தங்கம். சாரி லேட் ஆகிடுச்சு மன்னிச்சு 💕💕
நீக்குஅருமை
பதிலளிநீக்குSuper introduction,wow nice
பதிலளிநீக்குWow super sis rompa nal kalichu Unga story ya parthathum avlo santhosam
பதிலளிநீக்குநன்றி டியர் 😍
நீக்கு-சுவாதி லக்ஷ்மி.
Nice start, super, eagerly waiting for next epi sis
பதிலளிநீக்குVerry nice starting
பதிலளிநீக்குNice starting
பதிலளிநீக்குநன்றி டியர் 😍
நீக்கு-சுவாதி லக்ஷ்மி.
படிக்கும் போதே
பதிலளிநீக்குபிரமாண்டம்
பிரமிப்பு
பணக்கார தன்மையில்
பதட்டமும்
பாட்டின் மென்மையும்
பாவையின் தவிப்பும்
ப்பா..... பின்னிட்டிங்க போங்க.... 🤩🤩🤩💐❤️😘💐👏🏻🤩🙏🏻